• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews Sikki Sikki Tavikiren

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
சிக்கி சிக்கி தவிக்கிறேன்- வநிஷா

ஒரு பெண் எப்போது அழகாக தோற்றமளிக்கிறாள்??!! பலரும் பலவிதமாக பதில் தருவோம்..ஆனால் எனக்கு டக்குன்னு தோன்றியது ஒரு ராஜா கால கதை. அதன் முடிவில் ஒரு செய்தி வரும், ஒரு பெண் அவள், அவளாகவே இருக்கும் போது, அவள் அவளாகவே தன் முடிவுகளை எடுக்கும் போது அழகாக இருக்கிறாள் என்று. அந்த மாதிரி ஒரு அழகியை பற்றியும், அவளை அழகாக உணரவைத்த ஒரு அழகனை பற்றியுமான கதையை கொடுத்து நம் மனதை சிக்கி சிக்கி சிக்கலை அவிழ்க்க விரும்பாமல் சிக்க வைத்து இன்ப தவிப்பினை தந்துள்ளார் வநிஷா அவர்கள், அவர்களின் சிக்கி சிக்கி தவிக்கிறேன் கதையின் மூலம்...

அவரின் ஒவ்வொரு கதையும் ஒரு விதம் தான். இதில் அவர் எடுத்துள்ள கருவானது, பலர் சொல்ல தவிக்கும், கத்தி மேல் நடக்கும், ஆயினும் இச்சமூகத்துக்கு அத்தியாவசியமாக புரிந்து கொண்டு உணர வேண்டிய விஷயம்(!?) உருவ பேதம்‌ மற்றும் அதை சார்ந்த கேள்விகள், அதனால் அந்நபர்‌ அடையும் மனவெதும்பல்கள் பற்றி..

மிரு-குரு இவர்களுடனே ஒரு பயணம் நமக்கும் க்ராப் ஆஃப் மூலம் , மலேஷியாவுக்கு.

மலேஷியாவின் பெரிய தொழில்நுட்ப சேவைகள் செய்யும் அலுவலகத்தின் அதிபர் குரு.. மிரு என்கிற ஒரு கீழ் நடுத்தர வர்க்க பெண்ணை காண்கிறான் அவளின் கேப்பில்..காணும் நொடியிலிருந்து சிக்கல் தொடங்குகிறது..

முதலே மோதல்.. அது எவ்வாறு ஆனது காதல்???!!காதல் கூடியதா எளிதில்?! என வநிஷா பாணியில் நகரும் கதை..

‌‌மிருதுளா - தன்னம்பிக்கை, தன்மானம், அளவில்லா அன்பு என்று தன் சின்னக்கூட்டில் தம்பி, தாயுடன் வாழும் பாசப்பறவை.. கலப்பின பறவை.. வேடந்தாங்கலுக்கு வந்த ஒரு வெளிநாட்டு பறவையின்(ஆப்பிரிக்கா தந்தை) மூலம் புவியில் பூத்த சிறு பறவை.. தந்தை பறவையோ காலம் கடந்ததால் பறக்க நேரிட..தமிழ் தாய்‌ பறவையின் சிறகுகளுக்குள் வளர்ந்து இன்று நிழலாய் நிற்கும் அழகு மயிலவள், தந்தை பறவையின் மண்ணின் சாயலாக, சுருட்டை முடியினை தந்த கடவுள் தனங்கள்களை தருவதிலும் தான் தனவான் தான் கருமி அல்ல என காட்ட தவரவில்லை .விழைவோ..பெண்ணுக்கும் கண்ணுண்டு அதில் அவளுக்கென்று ஒரு உணர்வுண்டு அதை மதிக்க வேண்டும் என்பதை மறந்து , அகம் ஊடுருவி அவளை நோக்காமல், மார்பக அளவை வைத்து அவளை அளந்து நோகடிக்கும் ஈனப்பிறவிகளிடமிருந்து வெளிவர அவள் படும்பாடு...அதனால் அவள் சந்திக்கும் அவமானங்கள். ஒரு நடுத்தர வர்க்த்தின் வாழ்வாதாரம்.. அன்றாட நல்ல உணவுக்கு அவர்கள் படும் அல்லல்.. நல்ல துணியினை கூட, ட்ரெயல் ரூம்மில் மட்டும் போட்டு பார்க்கும் துயரம்.. படித்த படிப்புக்கு மதிப்பின்றி பிழைப்புக்காக, கரடியாய் கத்தி கரடி பொம்மையாய் மாறி மனம் குமுறும் வலி.. காமுகர்களின் காமயிச்சையை தாண்டி , மனதில் உதித்த நேசத்தை கூட இது நமக்கு தகுமா , முறையா என துடிக்கும் காதலை கொண்டு , மனம் அடக்கி தனக்கு தானே லஷ்மண கோடு போட்டு கொண்ட மிரு தான் மட்டுமல்ல நம்மையும் ஒரு கீழ் நடுத்தர வர்க்த்தின் வலினை உணர்த்தி, குருவுக்கான தன் காதலை மனதிலேயே ஒளித்து, சிக்கி சிக்கி தவித்து நம்மையும் தவிக்க வைக்கும் மிரு, கண்டிப்பாக ஒரு ஒண்டி குடுத்தனத்தில், நல்ல உணவு, உடை , உறைவிடமின்றி வாழும் மக்களின் பிரதிபிம்பம்..

குரு: அல்டரா மார்டன் ஸிக்ஸ் பேக் கட்டிளம் காளை, திருமணத்தில் ஒன்றாமல், ஆனால் பல கேர்ள் ஃப்ரண்ட்ஸ் உடைய கண்ணன். தகுதி பார்க்கும் தனவான்..தாயின் செல்ல குருப்பா.. மிருவை பார்த்த நொடி அவனும்‌ சராசரி ஆணே, ஆயினும் அவளுடன் சண்டையிட்டு, அவளை தன் அலுவலகத்தில் பணியமர்த்தி அவன் செய்யும்‌ லொள்ளுகளோ அலாதியானவை. அவளை தவிர்க்க எண்ணி அவனே பொறி கலங்கி காதலின் பொறியில் சிக்கி சிக்கி தவித்து நம்மையும் காதலால் தவிக்க வைக்கிறான் ...

இவர்களை சுற்றியே கதை நகர்ந்தாலும், பல சொல்ல படவேண்டிய கதாபாத்திரங்களும் உண்டு..

கணே- மிருவின் தம்பி பள்ளி இறுதியாண்டில் அடி வைக்கும் மாணவன். இவன் மிருவுக்கு தம்பியா/அண்ணனா??!! என்று யோசிக்க வைக்கும், குடும்ப சூழ்நிலை உணர்ந்து தமக்கைகாக வாழும் நல்லுயிர்..

ரதிதேவி- பெயருக்கேற்ற அழகே, பாவம் அவரின் மன்மதனை பாதியிலே பிரிந்து , இனிப்பில்லா தன் வாழ்வை இனிப்போட கழிப்பவர் அதாங்க சக்கரை நோயாளி.. எந்த ஒரு குடும்ப அரவணைப்பு இல்லாமல் தன் குஞ்சுகளை வளர்த்த இரும்புத் தாய் பறவை.

ஆனந்தி-குருவின் அம்மா.. சிறந்த தாய், வயது மறந்து உழைக்கு மகனுக்காக உருகும் உயர்ந்துள்ளம், ஆம் உயர்ந்த வைரத்தோட ஜொலிக்க , தகுதி பார்க்கும் தங்க மங்கை.. கணவன் இறப்பிற்குப் பின் குரு தாங்கிய‌ குடும்ப பாரத்தை நினைத்து அதனுடன் குருவினையும் மனதில் தாங்கிய தாய்.

ச்சேக்கோ- எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்.கணேவின் ஆசானாக வந்து மிருவிடம் மனம் தொலைத்து சிக்கித்தவிக்கும் சீன ஆசான்..அவளை அவளுக்காக விரும்பும் நல்லிதையம்...அவள் காதலியாய்/தோழியா?? யாராகினும் அவளை அவளாகவே ஏற்க விளையும் நல்லுயிர்

அருள்: நானும்‌ ரௌடி தான்‌ என‌‌ மிரு வாழ்வில் நுழையும் ஆஸ்திரேலியா அங்கிள்..

இக்கதையில் என்னை கவர்ந்தது

* மலேஷியா பற்றிய‌ பல தகவல்கள் மற்றும் சொற்கள் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது..

*குரு-மிரு கவுண்டர்கள்

*குரு-மிருக்குள் நடக்கும் ரீடிங் பிட்டின் லையன்ஸுடன் கூடிய அழகிய காதல்

* குருவுக்காக மிரு செய்யத்துணியும் ஒரு பெரிய காரியம்.. அதற்கு குருவின் பதில்

* ஆனந்தி - மிருவின் அனல் பறக்கும் வார்த்தைகள்..

* அங்க வேறுபாட்டின் அல்லல்களை மிரு கூறுவதும் . அந்த துயிரினை துகிலுரிக்க குரு தரும் புள்ளிவிவரங்கள்..

* ஆனந்தி - மிருவை குரு‌ கையாளும் முறை.. அவர்களை அழகிகளாக்குகிறான், அதாங்க அவங்க முடிவுகளை அவர்களிடம் விட்டு, அவர்களுக்கென்று ஒரு தனி இடம் கொடுத்து யோசிக்க விட்டு, ஒருவருக்காக ஒருவரை‌ வற்புறுத்தாமல் ஏற்றுக்கொள்ள செய்வது..

என‌ எப்படி இந்த கடாரம் கொண்டான் தன் காதல் ராஜியத்தினை வெற்றி கொண்டான் என எந்த ஒரு சிக்கலுமின்றி ஆயினும் நம்‌ மனங்களை காதலால் சிக்கி சிக்கி தவக்க வைக்க, வநிஷா அவர்கள் பின்னிய அருமையான காதல் வலை..

காதல் மனம் சார்ந்தது..இதயமும் மூளையையும் ஒரு சேர மூழ்கடித்து முத்தெடுப்பது.. உடலளவு பெரிதென்று கிண்டல் பண்ணுபவர் எவரும் விசால மனங்களை நோக்குவதில்லை.. சைஸ் ஸீரோ எல்லாம் இப்போ தானே.. சாமுத்திரிகா லட்சணப்படி செதுக்க பட்ட சிலைகள் பார்த்தாலே தெரியும் எது நிஜ அழகென்பது.. அழகோ, நிறமோ கூட வரப்போவதில்லை இறுதிவரை..நல்ல உடல்,மன ஆரோக்கியத்துடன், அன்பென்ற பார்வை கொண்டு பிறரை பார்த்தால் எல்லாம் அழகே ,எவரும் அழகே..

மஐமல்மயூ மமிமரு மகுமரு..

வாழ்த்துகள் வநிஷா ??



https://forum.smtamilnovels.com/index.php?forums/sikki-sikki-thavikiren.584/
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top