• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Siru Thaniyangal - Varagu/Samai/Thinai Pongal, Brinjal Gothsu

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
சிறு தானியங்கள் - வரகு/சாமை/தினை பொங்கல்

நம் தமிழர் பாரம்பரியத்தில் பண்டைய காலங்களில் சிறு தானியய்ங்கள் பெரும் பங்கு வகித்தன. ஆனால் நாளாவட்டத்தில் அவை மறைந்து வெறும் அரிசிச் சோற்றை மட்டுமே உண்ணும் நாகரீகம் மிக்கவர்களாக நாம் மாறி விட்டோம். அதிலும் அரிசியை இரு முறை பாலிஷ் செய்து அதன் சத்து முழுவதையும் நீக்கி உண்கிறோம். நமக்கு அப்படியே பழகி விட்டது. அதனால் ஒன்றும் பாதகம் இல்லை, நாம் சிறு தானியங்களையும் உணவில் சேர்க்கும் வரையில். வரகு, கம்பு, சாமை, தினை இவைகள் தான் மிகவும் முக்கியமான சிறு தானியங்கள். சத்தும் சுவையும் நிறைந்தவை. இவற்றைக் காலையில் டிஃபனாக உண்டால் நன்கு செரிமானம் ஆகி உடலுக்கு வலு சேர்க்கும். இரவில் இவற்றை உண்பதால் செரிமானக் கோளாறுகள் வரலாம். காலை டிஃபனுக்கு வரகு/தினை/சாமை பொங்கல், இட்லி தோசை போன்றவற்றை செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகளில் வலு, ரத்த விருத்தி ஆகியவை உண்டாகும். செய்வதும் எளிது தான்.

வரகு/சாமை/தினை பொங்கல்:

தேவையான பொருட்கள்

வரகு/சாமை/தினை - 2 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
நெய்/எண்ணெய் - 1/4 கப்
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

வரகு/சாமை/தினை இவற்றில் ஏதாவது ஒன்றை தேவையான அளவு எடுத்துக் கொண்டு நன்கு கழுவ வேண்டும். இந்த தானியங்கள் நிறைய தண்ணீர் தாங்கும் என்பதாலும் குழைய வேகவைத்தால் நல்லது என்பதாலும் தாராளமாக ஒரு கப் தானியத்துக்கு 21/2 முதல் 3 கப் வரை தண்ணீர் வைக்கலாம். குக்கரில் 6 விசில்கள் வைத்து அடுப்பை அணைத்து விடவும். மிளகையும் சீரகத்தையும் பொடி செய்து கொள்ளவும். குக்கர் திறந்த உடன் ஒரு வாணலியில் நெய்/எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காயம் போட்டு தாளித்து அதனை வரகு/சாமை/தினை வெந்து வைத்த சாதத்தின் மேல் ஊற்றி அதன் மேல் மிளகு சீரப் பொடியைத் தூவி உப்பு சேர்த்து நன்கு கிளறவும். ஹாட் பாக்சில் போட்டு வைத்து விட்டால் மாலை வரை மிகவும் சுவையாக இருக்கும் இந்தப் பொங்கல். இதற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு செய்தால் எளிதில் செரிக்கும் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

கத்தரிக்காய் கொத்சு

தேவையானபொருட்கள்:

கத்தரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 3 அல்லது 4 பல்
கடலைப் பருப்பு - 3 ஸ்பூன்
தனியா - 3 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4 அல்லது 5
பெருங்காயம் - சிறிது
புளி - சிறு எலுமிச்சை அளவு

செய்முறை:

புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயை பொடியாக நறுக்கொள்ளவும். வெறும் வாணலியில் கடலைப் பருப்பு+தனியா+மிளகாய்+ வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்துக்கொண்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் போட்டு வதக்கிக் கொள்ளவும். இவை நன்கு வதங்கிய உடன் நறுக்கிய கத்தரிக்காய்களைப் போட்டு நன்றாக கிளறவும். கத்தரிக்காய் சிறிது வதங்கிய உடன் புளிக் கரைசலை ஊற்றி மூடி வைக்கவும். 5 நிமிடங்களில் காய் வெந்து விடும். அதிகமான நீர் இல்லாமல் வதக்கவும், இப்போது அரைத்து வைத்த பொடியைப் போட்டு நன்கு கிளறவும். எண்ணெய் விட்டுக்கொண்டு ஒன்றாக வதங்கும் வரையில் கிளறவும். தேவை என்றால் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். வெங்காயம், பூண்டு கத்தரிக்காய் எல்லாம் நன்கு வெந்து ஒன்றாக வதங்கியவுடன் பெருங்காயம் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். சுவை பிடித்தவர்கள் இதில் சிறிது வெல்லம் சேர்க்கலாம். கத்தரிக்காய் கொத்சை நல்லண்ணெயில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

வரகு/சாமை/தினை பொங்கலோடு கத்தரிக்காய் கொத்சையும் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு என்ன? இனி அடிக்கடி வீட்டில் வரகு/சாமை/தினை பொங்கல் , கொத்சு தான்.
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
என்ன sis.... இதுக்கு அப்புறம் ஆளையே காணோம்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top