• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஹாய் டியர்ஸ்!!!

சென்ற udக்கு லைக்ஸ் அண்ட்
கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல தோழமைகளே !!!!!

என்னடா இது ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டு 3 நாள்ல
வந்துட்டான்னு நீங்க ஷாக் ஆகறது தெரியுது. அந்த ஷாக்ல இருந்த கரண்ட் வெச்சு கொஞ்ச நாள் ஈஸியா மாவாட்டிப்பேன்...நன்றி!

ஓகே இனிமே இந்த மாதிரி 2 ud எல்லாம் வராது . இப்ப கொஞ்சம்
வெட்டியா இருந்தேன்.அதான். சோ , நிம்மதியா போய் படிங்க ..அப்படியே கொஞ்சம் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்டுடுங்க....

அடுத்த ud இதோ!!!!

Anupama-Parameshwaran-at-A-Aa-Movie-Audio-Launch-9.jpg
ஷாலி!!!
?
ராகவ்!!!

dulquer-salmaan.jpg.image.784.410.jpg
கண்களை மூடிக்கொண்டு விநாயகர் முன்னே நின்றிருந்தாள் ஷாலினி.

அவளை அறியாமல் கண்கள் நீரைச் சொரிந்தன. அழுந்தக் கூப்பியிருந்த இரு கரங்களும், அவளது இறுக்கமான மனநிலையைக் காட்டியது. எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை.

கோவிலுக்கு வருவோர் அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர்.

எதையும் உணராமல் , கண்களைத் திறவாமல் சிலை போல நின்றிருந்தாள்.

அப்பொழுது வந்த ரூபா தோழியின் தோளை ஆறுதலுடன் பற்றினாள். அதிலே சுய உணர்வு பெற்ற ஷாலினி, வேகமாகப் பிரகாரத்தை சுற்றி வந்து அங்கே இருந்த தூணின் அருகில் அமர்ந்தாள்.

கூடவே வந்த ரூபா,

"நேரமாச்சு ஷாலினி. அப்பறம் இருட்டிடும். வீட்டுக்குப் போகலாமா?"
என்று மெதுவாகக் கேட்டாள்.

"நீ வேணும்னா போடி. எனக்கு யாரும் வேண்டாம்."

"என்னடி இப்படி சொல்லிட்ட . நான் கூட உனக்கு வேண்டாதவளா போயிட்டேனா"

சற்று இளகிய ஷாலினி ,

"இல்ல இல்லடி. நான் ஏதோ நினைப்புல சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு அப்பறமா போகலாம் . இரு" என்று அவசரமாகக் கூறினாள்.

லேசாக சிரித்துக் கொண்டாள் ரூபா.

அவளை சகஜமாக்கும் பொருட்டு,
"ஏதோ நினைப்பா இல்ல யாரோ நினைப்பா"

என்று மெல்லக் கேட்ட ரூபாவை , ரூபேரி போட்டு வெளுத்துவிட்டாள் ஷாலினி.

"என்னடி கொழுப்பா போச்சா ? ஓவரா பேசற.எனக்கு யாரு நினைப்பும் இல்ல . இப்ப நடந்ததை எப்படி சரி பண்ணறதுன்னு தான் பார்க்கறேன். மத்தப்படி நீ சொல்றமாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல "

"அப்படி ஒன்னும் இல்லன்னா எதுக்கு அழற ? சரி பண்ண பார்க்கறவ யோசிக்க தான செய்யணும். "

"யோசிப்பேன் ரூபா. இனிமே அழ மாட்டேன். அவனை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாம்னு யோசிப்பேன்." என்றாள் ஷாலினி.

இதைக் கேட்டதும் ரூபா பதறினாள்.
"அம்மா தாயே , அதுக்கு நீ அழுத்துட்டே இருக்கலாம்."

"எதுக்குடி அப்படி சொல்லற. என் மேல நம்பிக்கை இல்லையா?"

"உன் மேல அவ்ளோ நம்பிக்கை ஷாலினி. கண்டிப்பா அவனைப் பழி வாங்கறேன்னு போய், நீ தான் தேவை இல்லாம அவன் இமேஜ கெடுக்கப் போன அப்படிங்கற பழியை வாங்கிட்டு வருவ.

போதும்டி ஆத்தா. இனிமே நீ என்ன பண்ணாலும் யாரும் நம்ப மாட்டாங்க.பேசாம போய்த் தூங்கு வீட்ல. அவ்ளோதான்"

"ரொம்ப அசிங்கப்படுத்தற ரூபா"

ஷாலினியின் முகம் சுருங்கியது.

அதைக் கண்ட ரூபா, இவளை எவ்வாறேனும் வீட்டிற்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ,

" நீயே தாண்டி அசிங்கப்படுத்திக்கற. அப்பறமா மத்தவங்கள சொல்லி என்ன யூஸ்? இப்ப பேசாம கிளம்பு. எனக்கு லேட்டாகுது"

"நான் தான் சொன்னேன்ல , நீ கிளம்பிக்கோ. என்கூட வந்தா உனக்கும் அசிங்கம் தான்"

ஷாலினியின் கண்கள் மறுபடியும் நீரைச் சொரிய , ரூபாவிற்குத் தலையை சொறிந்தது.

"நான் அப்படி சொன்னேனா உன்கிட்ட ? சரி நம்ம இங்கயே இருப்போம். நான் போய் குடம் எடுத்துட்டு வரேன். நல்லா அழு, பிள்ளையாருக்குக் கண்ணீராபிஷேகம் பண்ணிடலாம்."

திரும்பி ரூபாவை நன்கு முறைத்த ஷாலினி, அங்கே உள்ளே வந்த ஜக்குவைப் பார்த்து வேகமாக எழுந்தாள்.

அப்படியே ரூபாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளை இழுக்காத குறையாகக் கூட்டிச் சென்றாள்.

"அடியே , நீ என்ன பண்ணாலும் சொல்லிட்டுப் பண்ணுடி. எதுக்கு இப்ப இவ்ளோ வேகமா கூட்டிட்டுப் போற?"

" சும்மா வா. வீட்டுக்குத்தான் போறோம்"

அவளின் நடவடிக்கையைப் புரிந்து கொள்ள முடியாமல் ரூபா அவள் பின்னே சென்றாள்.

ஜக்கு, ஷாலினியைத் தேடி கோவிலுக்கு வந்திருந்தான். அவன் மனம் உறுதியாகச் சொன்னது அவள் இங்கு தான் வந்திருப்பாள் என்று.

பரபரப்பாக அவளைத் தேடிக் கொண்டிருந்த ஜக்குவை உணர்வற்றுப் பார்த்த ஷாலினி , அவன் பார்வையில் சிக்காமல் ரூபாவுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

வீட்டு வாயிலை அடைந்ததும் , ரூபாவிடம், "நீ கிளம்பு. நாளைக்கு மீட் பண்ணலாம்"

என்று கூறினாள். ஆனால் அவளோ , "எனக்கு ஒரு வேலை இருக்கு. நான் இப்ப உன்கூடவே உள்ள வரேன்" என்றாள்.

"நான் வேற எங்கயும் போயிட மாட்டேன். பிரச்சனையைப் பார்த்து இன்னிக்கு ஓடலாம். ஆனா, என்னைக்கும் முடியாது"

ஒரு விரக்தியான புன்னகை அவள் அதரங்களில் தோன்ற, மேலும் எதுவும் பேசாமல் ரூபா அவளது கையை அழுத்திக் கொடுத்து அவ்விடம் விட்டு அகன்றாள்.

ஷாலினி உள்ளே நுழைய , அங்கே ஆள் நடமாட்டம் இருக்கும் அறிகுறியே இல்லை.

ராஜஷேகர், அவரது அறையின் மூலையில் அமர்ந்திருக்க , சத்யவதி சமையலறையின் மேடையில் சாய்ந்திருந்தார்.

அவர் அருகில் சிவசங்கரி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அனைத்தையும் ஒரு பார்வை பார்த்த ஷாலினி, தன் அறைக்குச் செல்ல விழைந்தாள்.

"ஒரு நிமிஷம் "

என்ற சத்யவதியின் குரல் அவளைத் தடுத்தது. திரும்பித் தன் தாயைப் பார்க்கக் கூடத் தோன்றாமல் அப்படியே நின்றாள் ஷாலினி.

அதற்குள் சிவசங்கரி ஷாலினியிடம் ஓடி வந்தார்.

"ஷாலினி, எங்க போயிருந்த? சொல்லிட்டுப் போயிருக்கலாம் தான."

பரிவுடன் வினவிய அவரைக் கண்டு , ஷாலினி கண்களில் நீர் கோர்த்தது.

"இல்ல சங்ஸ், நம்ம புலியகுளம் விநாயகர் கோவில் தான் போயிருந்தேன். மனசு சரியில்லை. சாரி சங்ஸ், சொல்லணும்னு அப்ப தோணல "

என்று கூறிய ஷாலினியிடம், ஜக்குவப் பார்த்தியா என்று கேட்க நினைத்து அதை மனதிலேயே மறைத்துக்கொண்டார்.

"சரி விடுமா, வா வந்து கொஞ்சம் டீ குடி"

"இல்ல சங்ஸ் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் " என்று சோர்ந்த குரலில் ஷாலினி கூறினாள்.

பின்னோடு வந்த சத்யவதி ,

" நல்லா இருக்கே, என்னத்த கிழிச்சன்னு ரெஸ்ட் எடுக்கப் போற? பேசாம டீ குடிக்க வா. வந்து உங்கப்பாக்கும் குடுத்துட்டு குடி"

"அம்மா , ப்ளீஸ் ஆளை விடு. அவரு டீ குடிக்கணும்னா நீயே போய் குடு. எதுக்கு இந்த இன்டர்மீடியேட் வேலை எனக்கு?"

"சரி போ. ரெண்டு பேரும் சேர்ந்து என்னைத்தான் பைத்தியம் ஆக்கறீங்க. மிச்சம் இருக்கற கொஞ்ச நாள ஏதோ ஓட்டிடலாம்னு தான் பார்க்கறேன். விட்டா தான "

"சரிமா. நீ வேற புலம்பாத. டீ போட்டு வை. வரேன்"

விடு விடுவென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் ஷாலினி.

படுக்கையில் சென்று அமர்ந்த அவள் மனம் கொதித்த கொதிப்பில் , அதனுள் வலுக்கட்டயமாகக் குடி வந்திருக்கும் ராகவ் வெந்து போயிருப்பான்.

நல்லவேளை, தண்ணீரை எடுத்து சொம்புடன் வாயில் கவிழ்த்துக் கொண்டாள் அவள்.

பின்னர் மெதுவாக எழுந்து, அறையில் இருந்த கண்ணாடி முன்னே நின்று தனக்குள்ளேயே தைரியம் சொல்லிக் கொண்டாள்.

' இனிமே அடிக்கடி அவனைப் பார்க்க வேண்டி இருக்கும் ஷாலினி. சோ, எப்பவும் கெத்தா இருக்கணும். அவன் முன்னாடி மட்டும் பிரேக் ஆகவே கூடாது'
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
வெளியே லாரி சத்தம் கேட்டு , ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் ஷாலினி.

அங்கே, சங்ஸ் வீட்டிலிருந்து சாமான்களை எல்லாம் எடுத்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

பார்த்தவுடன் கசப்பான முறுவல் தோன்றியது அவளுக்கு.

"வந்துட்டான், வெள்ளை மாளிகைய விட்டுட்டுக் குள்ள மாளிகைக்கு.

இவனோட ரோதனையா போச்சு. கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் தலை கீழா மாத்திட்டானே பாவி"

முகத்தைக் கழுவிக் கொண்டு, அன்றைய நிகழ்வுகளையும் சேர்த்தே துவாலையால் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் ஷாலினி.

" அம்மா, டீ ரெடியா?"

"இந்தா, அப்பாக்கு குடுத்துட்டு வா"

" ஹ்ம்ம். சங்ஸ் எங்க?"

" வீட்டைக் காலி பண்ணி பேக் பண்ணறதுக்கு வந்தவங்களைக் கவனிக்கப் போயிருக்காங்க"

வேதனையுடன் கூறிய தாயை ஷாலினி அணைத்துக் கொண்டாள்.

"விடு மா, நம்ம எப்ப வேணும்னாலும் வடவள்ளி போய் பார்த்துக்கலாம். இல்லன்னா அவங்க வரப் போறாங்க."

"என்னை விட நீ தான் வருத்தமா இருக்கன்னு எனக்குத் தெரியும். நீ கொஞ்ச நேரம் அவங்க கூட இருந்துட்டு வா"

"சரி மா."

என்றவள் வேகமாக டீ கப்பை எடுத்துச் சென்று தந்தையின் அறைக்குள் நுழைந்தாள்.

" டீ"

என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு, அவரின் அருகில் கூட செல்லாமல், மேஜை மேல் வைத்துவிட்டு வெளியேறினாள்.

மகளின் வரவை உணர்ந்து , அவளிடம் தனிமையில் பேச வேண்டும் என முயன்ற ராஜஷேகருக்கு சற்றே அதிர்ச்சி தான் அவளின் இந்த செய்கை .

'என்னை மன்னிக்கவே மாட்டாளா அவள்? என் மானத்திற்காக அவளை நான் அவமானப்படுத்தி விட்டேனா'

மனதினுள் புழுங்கினார் மங்கையவளின் தந்தை.

'தேவை இல்லாம பிரஸ் முன்னாடி என் பொண்ணுக்கு எதிரா பேசிட்டேனே.ஒரு நிமிஷம் அவ மனசைப் பத்தி நான் யோசிச்சிருக்கணும்'

எந்தக் கவலையும் இல்லாமல் சங்ஸ் வீட்டிற்குச் சென்றாள் ஷாலினி.

இல்லை இனிமேல் அது ராகவின் வீடு. அந்த நினைப்பே அவனை நிந்திக்க வைத்தது.

உள்ளே மகேந்திரன், வேலையாட்களுக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

" அங்கிள், நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா?"

" நீ எங்களை மறக்காம இருந்தா அதுவே பெரிய ஹெல்ப் தான்மா"

வாஞ்சையுடன் அவள் தலை கோதினார்.

"நீங்க தான் என்னை விட்டுட்டுப் போறீங்க. நான் இல்ல"

பிரிவின் வலி இருவரையும் அழுத்தியது. தனக்குத் தந்தையைப்போல் இருந்தவரைப் பிரிய வேண்டியிருக்கின்றதே என்று ஷாலினியின் மனம் வெம்பியது.

வருங்காலத்தில் தந்தையாகவே இவர் இருக்கப் போகிறார் என்று அவள் அப்பொழுது உணர்ந்தாளில்லை.

முகத்தை சிரித்தபடி வைத்து ,

"நான் போய் கடைசியா ஒரு டைம் நல்லா சுத்திப் பார்த்துட்டு வரேன்"

என்று சென்றுவிட்டாள் ஷாலினி.

"இருட்டுல போகாத" என்ற மஹேந்திரன் குரல் காற்றோடு கலந்தது.

அவளுக்கு அந்த வீட்டில் பிடித்ததே பின் பக்கத் தோட்டம் தான்.

பலவிதமான நறுமணம் தரும் மலர்கள் , ஆரோக்கியமான காய்வகைகள் மற்றும் பழவகைகள் பல இருக்கும் அந்தத் தோட்டம் , அவளின் தனிமையைப் போக்கும் ஓர் இனிமையான இடம்.

ஆங்காங்கே ஓடும் அணில்கள், பறந்து வரும் குருவி, கிளி, காக்கைகள் அனைத்தையும் நேரம் போவதே தெரியாமல் ரசிப்பாள்.

அவைகளும், இவளுக்குப் பொழுது போகும்படி அட்டகாசம் செய்து கொண்டிருக்கும்.

என்றும் அவளின் மனதை மயக்கும் மனோரஞ்சித மரத்தின் அருகே சென்றாள் ஷாலினி. மெதுவாக அதைத் தடவிக் கொடுத்து ,

"இனிமே இங்க என்னால வர முடியுமான்னு தெரியல. அப்படியே வந்தாலும் இந்தத் தோட்டம் இருக்குமான்னு டவுட்தான்."

என்று கூறியபடியே ஒரு மனோரஞ்சிதப் பூவைப் பறித்து முகர்ந்தாள்.

அதன் வாசனை , நாசியைத் துளைக்க , கூடவே ஏதோ வித்தியாசமான வாசனை ஒன்றை அவள் உணர்ந்தாள்.

சமீபத்தில் பழக்கப் பட்ட ஒரு வாசனை தான். மனம் திக்கென்று அடித்துக் கொள்ள, அந்த வாசனையை உணர்ந்து கொண்ட வேகத்தில் திரும்பிப் பார்த்தாள்.

எதிர்பார்த்த ஒன்றுதான், இல்லை இல்லை ஒருவன் தான்.

பேண்ட் பாக்கெட்டில் இரு கையையும் விட்டபடி அவளின் பின்னே நின்றிருந்தான் ராகவ்.

'வசந்த மாளிகைக்காரனோட வாசனை தானா. ஆமா இவன் யூஸ் பண்ணற சென்ட் என்னவா இருக்கும்??'

என்ற அதி தீவிரமான ஆராய்ச்சியில் அவளறியாமல் ஈடுபட ஆரம்பித்தாள் ஷாலினி.

அவனையே உத்துப் பார்த்தபடியே யோசனையில் இருக்கும் ஷாலினியைப் பார்த்த ராகவ் , மெதுவாக அவளருகே நெருங்கிச் சென்றான்.

அவன் மிக அருகில் வந்ததும் சுதாரித்தவள் பதறியபடி ,
"வாட் இஸ் ஹேப்பெனிங்?"

என்று கேட்க, ஒற்றைப் புருவத்தைத் தூக்கிப் புன்னகைத்த ராகவ்,

" இண்டியால இப்போ ஃபாக்(fogg) இஸ் ஹேப்பெனிங்"

என்று தலையைக் கோதினான்.

திடுக்கிட்டு விழித்தாள் ஷாலினி. பின்னே, அவள் மனதில் நினைத்த கேள்விக்கான பதிலை இவ்வாறு தருவான் என்று நினைத்தாளா என்ன!!

" எ.. என்..என்ன?"

அவள் தடுமாறி வினவ ,

"மைண்ட் ரீடிங் எனக்கு வராது டார்லிங். இருந்தாலும் சொல்றேன். இண்டியா'ஸ் நம்பர் ஒன் பெர்ஃபியூம்தான் நான் யூஸ் பண்ணறேன்" என்று அவன் வசீகரித்தான்.

அசடு வழிந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க அவள் பெரும்பாடுபட்டாள். அதைக் கண்டதும் ராகவிற்கு சிரிப்பு தாளவில்லை.

" என்னோட டைமிங் சென்ஸ் எப்படி? நீ நினைச்சதை எப்படி கனெக்ட் பண்ணேன் பார்த்தியா?"

அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் வினவ ,ஷாலினிக்கும் இலகுவான மனநிலை ஏற்பட்டது.

"சரியான நியூசென்ஸ்
நான்சென்ஸ்தான் நீங்க"

"நீ ஃபிராகிரன்ஸ் பத்தி யோசிச்சதுக்குத்தான் இத்தனை பேச்சும். நாங்களும் பஞ்ச் பேசுவோம்ல" என்று கூறி வாய் விட்டு சிரித்தான் ராகவ்.

" ஹாஹாஹா...கெட்ட காமெடி "

என்ற ஷாலினி அவனை முறைத்துவிட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

"ஓகே ஷாலி , இனிமே என்கிட்ட பார்த்து நடந்துக்கணும். பக்கத்து வீட்டுக்காரங்களா வேற ஆயிட்டோம்."

"ஆமா ஆமா , உன்னைப் பார்க்கவே கூடாதுன்னு நான் வேண்டிக்கறேன் "

"இப்படி காண்டுல வேண்டிக்கிட்டா கடவுள் கண்ணைக் குத்திடுவார் ஷாலி"

"ஆஹா, நிம்மதியா இருப்பேன். உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு நான் பண்ண வேண்டுதல் பலிச்சிடுமே அப்போ"

அவளின் பேச்சில் அதிசயித்தான் ராகவ். மெச்சும் பார்வையொன்றை வீசியவன்,

"இவ்ளோ அறிவை உங்க அப்பாகிட்ட இருந்து வாங்குனியா ஷாலி"

அவன் சாதாரணமாகத் தான் கேட்டான் என்றாலும், திடீரெனத் தந்தையைக் குறித்து அவன் பேசவும் ஷாலினி நிதானமிழந்தாள்.

" ஷட் அப் ராகவ். என் அப்பாவைப் பத்தியும் எனக்குத் தெரியும். உன் அப்பாவைப் பத்தியும் எனக்குத் தெரியும்"

சீற்றமாய் எழுந்த அவள் குரலில் தொனித்த ஏளனத்தைக் கண்டு கொண்டான் ராகவ்.

"ஷாலினி"

அவன் கர்ஜித்ததில் சர்வாங்கமும் பங்கமாக, மரத்தோடு ஒண்டிக் கொண்டு நின்றாள்.

முகம் சிவக்க, கண்கள் துடிக்க, கையை இறுக மூடிக் கொண்டான் ராகவ்.

அவனது மனம் கனன்றது. பெற்றவனை எண்ணிக் கேவலப்பட்டான். மனம் கவர்ந்தவளே தன்னைக் கழுவி ஊற்றும் நிலைதனை எண்ணி நொறுங்கிப்போனான்.

"இங்க பாரு. எனக்கு அப்பன்னு எவனும் இல்லை. இன்னொருவாட்டி இந்த மாதிரி பேசுன , அப்பறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை"

முகத்தின் அருகே வந்து உருமிவிட்டு அவளை எரித்து விடுவது போல் பார்த்த ராகவ் வேகமாகச் சென்று விட்டான்.

நடுங்கிய மனதை முடுக்கி விட்டுக்கொண்டாள் ஷாலினி .

'இதுக்கெல்லாம் அசரவே கூடாது ஷாலினி.'

சற்று நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள் கலவையான மனநிலையுடன்.

அவன் சிங்கம் போல் சீறினால், நாம் சிறுத்தையாக அவனை சிதறடிப்போம் என்று கடைசியாக உறுதிமொழி ஏற்றபின்னரே வீட்டினுள் சென்றாள் ஷாலினி.

அங்கே ராகவ் தோரணையாக சோபாவில் அமர்ந்திருந்தான்.

அவனருகில் மஹேந்திரனும் , சிவசங்கரியும் நின்று கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர் , ஏதேனும் சொல்லப் போகிறானோ என்று.

ஆனால் ஷாலினியோ, ராகவை நினைத்துக் கடுப்பில் இருந்தாள்.

'பெரிய மலேசியா மஹாராஜா! எப்படி உட்கார்ந்திருக்கான் பாரு'

முணுமுணுத்துக்கொண்டே அவனைக் குறித்த சிந்தனையில் யாரையும் கவனிக்காமல் ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டாள்.

திடீரென அந்தப் பாடல் ஒன்று ஒலித்து , அவள் சிந்தனையை சிதைத்தது.

?சோகமா சோகமா ஹே ஜாலி லிலோ ஜிம் காண தான்மா

ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாமா சோகமா..

ஹே சீன் ஆ ஒரு கானா பாடலாமா நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா

விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா

சிக்கலு சிக்கலு சிக்கலு வந்தா ஓரமா ஒத்திக்கோமா?

அந்த சமயம் பார்த்து அவளுக்கு எங்கிருந்தோ விக்கலே வந்துவிட்டது.

ஏனெனில் ஃபோனில் பாடல் போட்டபடி அவளையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ராகவ்.

'என்ன கோமானுக்குக் கோபம் போயிடுச்சா!'

மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஷாலினியை நோக்கி நிதானமாக வந்தான் ராகவ்.

"யாரோ உன்னையே நினைச்சிட்டு இருக்காங்க போல"

என்று அவன் புன்னகைக்க ,

விக்கியபடியே அவனை நோக்கி விழித்துக் கொண்டிருந்தாள் ஷாலினி.

சொக்கட்டான் பார்வை தொடரும்...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top