• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
வணக்கம் தோழமைகளே !!!
தங்கள் கருத்துக்களால் என்னை
ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி!!!

இதோ அடுத்த பதிவு . படித்து விட்டு
வழக்கம் போல் கருத்தை குணமா சொல்லுங்க . நான் கேட்டுக்கறேன்.
அடிச்சு சொன்னா அழுதுருவேன்.
அடுத்த பதிவில் இருந்து கொஞ்சமே
கொஞ்சம் வேறு மாதிரியான கோணம்
இருக்கலாம் . லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட வாங்க !!!

images.jpeg
ஷாலி?ராகவ்...


ராகவ் தண்ணீரை நீட்ட , அவனையே பார்த்தபடி நின்றாள் ஷாலினி .

விக்கலும் நின்றபாடில்லை . ராகவே பாட்டிலைத் திறந்து அவளின் வாயருகே கொண்டு செல்ல,அவனின் நோக்கம் புரிந்து , வேகமாக வாங்கி நீரை ஒரே மிடறில் அருந்தினாள்.

விக்கல் மட்டுப்பட்டதும் , " வெரி குட் "
என்று ராகவ் அவள் தலையினை லேசாகத் தட்டினான்.

ஷாலினி அவனை முறைக்க, அந்நேரம் பார்த்து ஜக்கு உள்ளே வந்தான்.இருவரையும் ஒன்றாகக் கண்ட அவன் மனம் வெதும்பியது.

அவளைத் தேடி எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்தால், அவளோ இங்கே ராகவின் அருகில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் முறைக்கிறாள் என்று இவனுக்குப் புரியவில்லையே. அங்கே வெறுமனே நின்று கொண்டிருந்த அவன் பெற்றோர்களைக் கண்டு இன்னும் கடுப்பானான் அவன்.

"ஷாலினி, உன்னைத் தான் தேடிட்டு வரேன். சொல்லிட்டுப் போக
மாட்டியா ?"

அவன் அதிகாரமாக வினவினான். அதிலே சரேலெனப் பார்வையைத் திருப்பி அதே முறைப்பை ஜக்குவிற்கும் வழங்கினாள் ஷாலினி.

"வாடா, சீக்கரமா ரெடி ஆகு. நம்ம புது வீட்ல இதெல்லாம் போய் செட்டில் பண்ணனும் "

மஹேந்திரன் அவனிடம் கூற ,

"எதுக்கு நம்ம கிளம்பணும் ? நான் வர மாட்டேன் டாடி . நீங்க வேணா போய்க்கோங்க. நான் எது வந்தாலும் பார்த்துக்கறேன்"

ஜக்கு ராகவையே பார்த்தபடி கூறினான். சூழ்நிலை மோசமாவதை விரும்பாத சிவசங்கரி , ஜக்குவிடம் சென்று ,

"சொன்னா கேளுடா , ஏற்கனவே வீடு ஷிஃப்ட் பண்ண நம்ம யோசிச்சோம் தான.எப்ப போனா என்ன? உனக்கும் வசதியா இருக்கும் ஆஃபீஸ் போக"

என்று தன்மையாகக் கூறினார்.

"எனக்கு இங்க தான் வசதியா இருக்கு. முடிஞ்சா என்னை வீட்டை விட்டு அனுப்பிப் பார்க்கட்டும்.
ஷாலினிய இங்க விட்டுட்டு என்னால வர முடியாது."

இதைக் கேட்டதும் ஷாலினி ஆத்திரம் கொண்டாள். வேகமாக அவனிடம் சென்றவள் ,

"ஸீ , மிஸ்டர் ஜகதீஷ் , எனக்கு யாரோட ஹெல்பும் தேவை இல்லை. தட் டூ , உன்னோட ஹெல்ப் எனக்கு வேண்டவே வேண்டாம்.

நான் நம்புனேன் உன்னை, என்னோட நல்ல ஃப்ரெண்டா நீ இருப்பன்னு. பட் , நீ பொய்யா பழகிருக்க. என்னை லவ் பண்ணிட்டு , அதை நட்புன்னு ஏமாத்திருக்க.

முன்னாடி மாதிரி இருந்தா நீ இங்கயே இருக்க , நானும் ஆசைப்பட்டிருப்பேன். ஆனா , இப்ப இல்லை."

என்று கூறிவிட்டு , யாரையும் நோக்காமல் வேகமாக அவளின் வீட்டிற்குச் சென்று விட்டாள்.

எங்கிருந்துதான் கோபம் வந்ததோ அவளுக்கு. மனதினுள் புழுங்கிக் கொண்டிருக்க முடியாமல், ஜக்குவிடம் ஆத்திரத்தைக் கொட்டிவிட்டு, அவனைத் தன் வாழ்விலிருந்து வெட்டிவிட்டுச் சென்றாள்.

இது நீடிக்குமா! இல்லை அவள் மனம் மாறுமா?

முகத்தில் அறை வாங்கியது போல் நின்றிருந்தான் ஜக்கு. சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

மஹேந்திரனுக்கும், சிவசங்கரிக்குமே இதில் வருத்தமே. அவ்வளவு பேரின் மத்தியில் ஜக்கு இவ்வாறு சொல்வான் என்று அவர்கள் நினைக்கவில்லையே.

ஆனால், பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும் நன்கு வளர்ந்த பிள்ளையாகப் போய் விட்டான்.
அதட்டவும் இயலாதே தற்காலத்தில். அவனை என்ன சொல்லி அழைத்துச் செல்வது என்று குழம்பித்தான் போயிருந்தனர்.

"நீங்க கிளம்பிக்கோங்க சர் . நாளைக்கு நாங்க காலி பண்ணி, கீ தந்திடுவோம்."

ராகவிடம் மகேந்திரன் சென்று உரைக்க ,

"யாரு வீட்டுக் கீ , யாருக்கிட்டப் போகணும் ?என்னால ஒத்துக்கவே முடியாது டாடி "

ஜகதீஷ் அதிலேயே நின்றான்.
ராகவின் முன்பு ஷாலினி தன்னை உதாசீனப்படுத்தியது, அவனின் தன்மானத்தை மேலும் தூண்டியது.

வெறுமனே இத்தனை நேரம் வேடிக்கை பார்த்த ராகவ்,மெதுவாக ஜகதீஷிடம் சென்றான்.

" சோ, இங்க தான் இருப்ப !அப்படித்தான"

"யெஸ், நான் இங்க தான் இருப்பேன்."

ராகவை முடிந்த மட்டிலும் முறைத்தான் ஜகதீஷ்.

"அப்போ அந்த ஃபோட்டோ நியூஸ்பேப்பர்ல வந்ததுக்கு நீ தான் காரணம்னு நான் இப்பவே எல்லாருகிட்டயும் சொல்லவா??"

மெதுவாக, ஆனால் அழுத்தமாகக் கூறிய ராகவை அதிர்ந்து நோக்கினான்.

அவனின் கண்கள் வெளிப்படுத்தியது பயத்தையா , பதட்டத்தையா, கோபத்தையா, ஆத்திரத்தையா என்று பிரித்தறிய முடியவில்லை.

உடனே பின்னால் நிற்கும் பெற்றவர்களின் முகத்தைப் பார்த்தான்.

கவலையுடன் நிற்பவர்களைக் கண்டு, அவர்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்று சற்றே நிம்மதி கொண்டான்.

உடனே சுதாரித்து,

" என்ன உளறிட்டு இருக்க?"

என்று அடிக்குரலில் ராகவிடம் சீறினான் ஜக்கு.

"அப்படியா! நான் நடந்ததைத்தான் சொல்றேன். உன்னோட அதிர்ச்சியும் அதைத்தான் சொல்லுது. ஒரு நிமிஷம் தான்னாலும் என் கண்ணுக்கு அது தப்பாது"

அவனை சற்று தள்ளி அழைத்துச் சென்ற ஜக்கு ,

"எனக்கு எதுவும் தெரியாது ராகவ். நீ தப்பா நினைச்சிருக்க"
என்று கூறினான்.

ஏளனமாக அவனைப் பார்த்தான் ராகவ்.

"ஆஹான், அப்போ உன்னோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்திட வேண்டியதுதான்."

"என்ன பண்ண போற?"

சற்றே குரலில் அவனையும் மீறி தடுமாற்றம் தெரிந்தது.

"நாளைக்கு அதே நியூஸ்பேப்பர்ல உன்னோட நியூஸ் கவர் பேஜ்ல வரும் பார்க்கறியா"

"வேண்டாம் ராகவ். ரொம்ப சீண்டி பார்க்கற. நான் என்னோட சுயரூபத்தை காட்டல, என்னை அந்நியனா மாத்தாத "

"நாளைக்கு ஷாலினி இப்ப திட்டுனதை விடப் பல மடங்கு கேவலமா திட்டுவா, அவகிட்ட காட்டிக்கோ அந்நியன், ஆனியன் எல்லாம்."

ஜக்கு ஒன்றும் பேசாமல் ராகவை முறைத்தான்.வேறு வழி?

ஷாலினிக்காகத்தான் இவ்வளவு பொறுமையாக இருக்கின்றான் அவன்.

இல்லையெனில் எப்பொழுதோ அங்கே கலவரம் களை கட்டியிருக்கும்.

"சொல்லு ஜகதீஷ், நீ என்னைப் பழி வாங்கறேன்னு ஷாலினிய சேர்த்து அசிங்கப்படுத்திட்ட . இப்பவும் நான் அவளுக்காகத்தான் உன்னை சும்மா விடறேன்.

நீ அவளை விரும்பறேன்னு தெரிஞ்சதுக்கே இவ்ளோ வருத்தப்படறா , இன்னும் இதெல்லாம் தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவா. அதான், அமைதியா இருக்கேன்.

ஒழுங்கா இங்க இருந்து போயிடு. இல்லன்னா நான் கண்டிப்பா கதற விடுவேன் உன்னை"

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் , குரலிலேயே மரண உணர்வை ஜக்குவிற்குக் காட்டினான் ராகவ்.

அது ஷாலினி என்று தெரியாமல் ராகவைப் பழி வாங்க அவன் எடுத்து அனுப்பிய புகைப்படம், அவனுக்கே ஆப்படித்தது .

ஷாலினிக்கு மட்டும் இது தெரிந்தால், தன் காதலுக்கு , சாதல் தான் என்று உறுதியாக நம்பினான்.

ஷாலினி தன்னை வெறுத்து விடாமல் இருக்க ஒரே வழி இங்கிருந்து செல்வது தான் என்று நன்கு உணர்ந்து கொண்டான் ஜக்கு.

தொழில்முறை எதிரியாக ராகவிற்குப் பலர் உள்ளனர். இது சகஜம் தான். ஆனால் , குறிப்பிட்ட சிலர் அவனை அழிக்க வேண்டும் என்றே குறியாக நிற்பர்.

யாரின் மூளை எவ்வாறு வேலை செய்யும் என்று உணர்ந்து அதற்கேற்றாற் போல் தன் நிலையை வகுத்துக் கொள்வான் ராகவ்.

எதிரிகளை, உதிரிகளாக்க சில நொடிகளே அவனுக்குப் போதுமானது.

சிங்கத்தின் முன்னே செந்நாய் கூட்டம் என்ன செய்ய இயலும்!!

ஜக்கு இதில் அம்பு மட்டுமே. எய்தவன் எங்கோ இருக்க இங்கே அம்பு, வம்பில் சிக்கியது.

ராகவும் இதே போல் வேறொரு அம்பை எய்தே காரியத்தை முடிப்பான்.

தோல்வியே கண்டிராமல் ,வெற்றி இல்லை. ஆனால் நம் ராகவின் அகராதியில், தோல்வி கண்டால் வெற்றி என்பதே இல்லை.

இதுவரை அவன் தன்னுடைய தொழிலில் தோல்வியே கண்டதில்லை. சரிப்படாது என்று தோன்றினால் தொடங்கவே மறுப்பவன், வாழ்வினிலே ஷாலினிக்காக எதையும் பார்க்கலாம் என்ற நிலையை அடைந்திருந்தான்.

"சரி, நான் கிளம்புனா?"

கேள்வி எழுப்பிய ஜக்குவை மெச்சும் பார்வை பார்த்தான் ராகவ்.

"நானா ஷாலினி கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்"

"அப்ப ஆளை விட்டு சொல்லுவ அதான"

ஆச்சரியமாக அவனைப் பார்த்தான் ராகவ்.

"பரவால்லயே இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்க. இனிமே என் வழில நீ வராம இருந்தா நிச்சயமா சொல்ல மாட்டேன்."

"தென், இதை யாரு சொல்லி செஞ்சியோ, அவன் உன்னால நடுத் தெருவுக்கு வரணும். புரியுதா?"

கடுமையாகக் கூறிய ராகவைக் கண்டு ஜக்கு உண்மையிலேயே வாழ்வை வெறுத்தான்.

" சரி "என்பதைத் தவிர ஒன்றும் சொல்ல இயலவில்லை அவனால். எதையாவது செய்து இந்த ஒரு வேலையை மட்டும் முடித்துவிட்டால், ராகவ் விட்டுவிடுவான் என்று நம்பித் துணிந்தான்.

அதற்காக அவன் விசுவாசத்தையும் இழக்கத் தயாராகவே இருந்தான்.

எய்யப்பட்ட அம்பை , அதே வேகத்திலேயே திருப்பி விட்டுவிட்டான் ராகவ்.
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
பின்னே, அவன் உழைத்துப் பெயரை சம்பாதித்தால், இவர்கள் அதைக் கெடுத்து சம்பாதிப்பார்களா !!

இருவரும் ஏதோ தீவிரமாகப் பேசுவதைப் பார்த்த ஜக்குவின் பெற்றோர் , சற்று பதட்டத்துடன் இருந்தனர்.

"டாடி , நம்ம கிளம்பிப் போய் அங்க செட்டில் பண்ணலாம் . நான் ரெடி "

என்று ஜக்கு கூறியபின்னரே அவர்கள் நிம்மதி அடைந்தனர். கூடவே, ஏதோ சரியில்லை என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.

பிரஸ் மீட்டில் ராகவ் செய்த வேலையைப் பார்த்து இன்னமுமே ஆச்சரியத்தில் இருந்து அவர்கள் மீளவில்லையே.

அவர்கள் மட்டுமா? அதைக் கண்ட அனைவருமே தான்.
செய்திகள் யாவும் ராகவைக் குறித்தே பேசின.

"தொழிலதிபர் ராகவ்கிருஷ்ணா, இன்று வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் குறித்து இப்பொழுது காணலாம்."

கல்பனா கந்தசாமி செய்தியை வாசிக்க, அதைத் தொடர்ந்து அன்று நடந்த சம்பவம் முழுவதுமாக ஒளிபரப்பப்பட்டது.

நாமும் சற்று முன்னே சென்று அதை நேரில் காண்போம்.

ஷாலினியைத் தன்னோடு முன்னே அழைத்து வந்தான் ராகவ்.

"எல்லாரும் பார்த்திருப்பீங்க இன்னிக்கு நடந்த ஏகப்பட்ட எக்ஸ்க்லூஸிவ் மேட்டர்ஸ் எல்லாம்."

என்று சொல்லி ஷாலினியின் முகம் பார்த்தான் அவன். குனிந்த தலையோடு உதடைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தாள் ஷாலினி.

சிரிப்புதான் வந்தது ராகவிற்கு.

"இங்க என்கூட நிக்கற ஷாலினி தான் அந்த ஃபோட்டோலயும் இருக்காங்க. இவங்க சொன்னது எல்லாமே உண்மைதான். அது ஜஸ்ட் தெரியாம நடந்தது .

பட் , என்னோட இன்டென்ஷன் அதை ஃபோட்டோ எடுக்கறதில்லை .
என்னோட தொழில்முறை எதிரிகள் பண்ண வேலைதான். அது யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன். ஆனா, இப்ப சொல்ல விரும்பல "

என்று நிறுத்தி ஜக்குவைப் பார்த்தான்.

ஆனால், அப்பொழுது அவன் நினைத்திருக்கவில்லை ராகவ் நம்மைக் கண்டுகொண்டான் என்று. ராகவ் மேலே தொடர்ந்தான்.

"என்னை டார்கெட் பண்றாங்கன்னா, என்னைப் பார்த்துப் பயப்படறாங்கன்னு தான அர்த்தம். எனக்கு இதுவே பெரிய வெகுமதிதான்.

ஆனா, எனக்கு ஒன்னுதான் புரியல. நடுல இந்த ஷாலினி எதுக்கு வந்து என்னைப் பத்தி சொன்னா? முன்ன பின்ன தெரியாத ஒருத்தனை எதுக்கு மீடியா முன்னாடி சிக்க வைக்கணும்? தன்னை தானே அசிங்கப்படுத்திக்கணும் ?"

தோளைக் குலுக்கியபடி ஓரக்கண்ணால் ஷாலினியைப் பார்த்தான் ராகவ்.

ஆனால், அவள் இன்னமும் அதே நிலையில் தான் இருந்தாள்.

"யோசிச்சப்போதான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது. யாரும் தூண்டி விட்டு அவ வந்து சொல்லலை. நான் தப்பா எதுவும் சொல்லிடுவேனோ அப்படிங்கற பயத்தைத் தான் காரணமா சொன்னா.

ஆனா, எனக்கு அதுல இருந்த உண்மையான ரீசன் அப்பறம்தான் புரிஞ்சுது. அது என்னன்னா நான் இவளை லவ் பண்ணறேன்னு இவ உறுதியா நம்பறா.

ஒருவேளை நான் முதல்ல ஸ்டேட்மெண்ட் தந்தா இதைத்தான் சொல்லிருப்பேன்னு அவ உங்ககிட்ட எல்லாம் சொன்னா தான? அதைப் பார்த்ததும்தான் என் மனசே எனக்குப் புரிஞ்சுது.

என் டார்லிங் நம்பிக்கையை நான் பொய்யாக்கலாமா?அவளோட ஆசைய நிறைவேத்த வேணாமா? அதான் இப்ப சொல்லலாம்னு வந்தேன்"

அவன் பேசப் பேச விழிகள் தெரித்துவிடும் போல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஷாலினி.

'என்னடா சொல்ல வர நீ? தெளிவா குழப்பறன்னு மட்டும்தான் புரியுது.'

அவளைக் கண்டு கண்ணடித்தான் ராகவ். இன்னும் அவனை முறைத்தாள் ஷாலினி.

அதையெல்லாம் கண்டு கொள்வானா அவன். அசட்டையாக மறுபடியும் தொடர்ந்தான்.

"எனக்கு ஷாலினியோட பேரண்ட்ஸ் சம்மதம் வேணும், அப்பறமா தான் ஷாலிய கல்யாணம் பண்ணிப்பேன்."

அவன் போட்ட வெடியில் , அந்த இடமே அதிர்ந்தது. மீடியாக்காரர்களே மயங்கி விழாத குறை என்றால், அருகில் நின்றவர்களின் கதி.

முக்கியமாக ஷாலினி ! கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போல உணர்ந்தாள்.

ஜக்குவோ விட்டால் ராகவைக் கொன்று போடும் வெறியில் இருந்தான்.

சங்ஸ், என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்.

அப்பொழுதும் அவள் மேல் வைத்த கையை எடுக்காத ராகவ், மெல்ல அழுத்திக் கொடுத்தான். அது அவளுக்கு மேலும் திகிலையே கொடுத்தது.

பிறகு, ஷாலினியுடன் மெல்ல ராஜஷேகரிடம் சென்றான்.

"கமிஷனர் சர் , என்ன ஓகேவா "

அவன் ஊரைக் கூட்டி இவ்வாறேல்லாம் சொல்லுவான் என்று கொஞ்சமும் எதிர்பாராத ராஜஷேகர், தன் பெண்ணை நினைத்துப் பெருங்கவலையுற்றார்.

அதுவுமில்லாமல் அவளுக்கு வரனொன்றை ஏற்கனவே அவர் முடிவும் செய்து வைத்திருந்தார்.

"என் பொண்ணுக்கு நான் ஏற்கனவே நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துட்டேன் மிஸ்டர் ராகவ். அடுத்த வாரம் கல்யாணம் நடக்கப் போகுது. நீங்க லேட்"

தந்தையின் வார்தையைக் கேட்டு அன்றைய நாளின் அல்டிமேட் அதிர்ச்சியை அடைந்தாள் ஷாலினி.

அவளின் கால்கள் கீழே விழ சொல்லிக் கெஞ்சின!

"என்னப்பா சொல்றீங்க? எனக்குக் கூடத் தெரியாதே!"

"நான் சொல்றவனுக்கு நீ கழுத்தைக் காட்ட மாட்டியா ஷாலினி?"

இதைக் கேட்டபடியே அருகில் வந்த சத்யவதிக்கு ஆத்திரம் பல மடங்கு ஆர்ப்பரித்தது.

"வாழப் போறது என் பொண்ணு. அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுத்தான் ஆகணும். ஒரு வாரத்துல அவசரக் கல்யாணம் பண்ணற அளவுக்கு என்ன ஆயிடுச்சு இப்ப?"

மனைவியைக் கண்டு முறைத்தார் ராஜஷேகர்.

"சத்யா, நீ யாரு நடுவுல? எனக்குத் தெரியும் நான் என்ன பண்ணனும்னு."

"நான் அவ அம்மா "

"நான் தான் உனக்கு அந்த தகுதியைக் குடுத்தேன்"

இதைக் கேட்ட ராகவிற்கு ஆத்திரம் தலைக்கேறியது.

ஷாலினிக்கு மாப்பிள்ளை பார்த்தாயிற்று என்று ராஜஷேகர் கூறியதுமே அவன் குழப்பம் அடைந்திருந்தான்.

ஏனெனில், இங்கு வருமுன் அனைத்தையும் விசாரித்தே வந்திருந்தான்.

கல்யாணம் என்றெல்லாம் செய்தி வரவில்லையே என்று அவன் யோசித்த நேரம்தான் ஷாலினி மற்றும் சத்யவதியின் அதிர்ச்சியைக் கண்டான்.

எந்தத் தந்தையேனும் மகளின் திருமணத்தில் இவ்வளவு அவசரம் கொள்வாரா!?

அதிலும் ராஜஷேகர் மனைவியிடமே மமதையுடன் பேச, அவனுக்கு எரிச்சல் தான் எஞ்சியது.

"யாரு அந்த உத்தம மாப்பிளைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
ராகவ் வினவ,

"ரஞ்சித். இந்த ஊருல அவர் பெரிய பிசினஸ்மேன்"

என்று ராஜஷேகர் கூறினார்.

பிசினஸ்மேன் ரஞ்சித்' அந்தப் பெயரைக் கேட்டதும் ராகவின் மனம் குழப்பத்தை எல்லாம் கூட்டியது.

ராஜசேகர் ஏதோ பிரச்சனையில் சிக்கியுள்ளாரோ என்று ராகவ் சந்தேகித்தான்.

ரஞ்சித்தின் கைவண்ணத்தை ராகவைத் தவிர யாராலும் எளிதாகக் கணிக்க இயலுமா!

கணவனின் வார்தைகளைக் கேட்டுக் குன்றிப் போய் நின்றிருந்த சத்யவதியிடம் சென்றவன் ,

"நான் கண்டிப்பா உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பேன். கவலையை விடுங்க. உங்க ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் எனக்கு"

என்று தன்மையாகக் கூற , அதிலே சற்று நெகிழ்ந்து தான் போனார் சத்யவதி. ஆனாலும் கணவன் என்ன செய்கிறார் என்று ஓரக்கண்ணால் பார்த்தார்.

அதைக் கண்ட ராகவ்,

"அவரு சொன்ன மாப்பிள்ளை உங்கப் பொண்ணுக்கு வர வாய்ப்பில்லை."

என்று சிரித்தான்.

"நீ யாருடா அதை சொல்ல?" என்று ராஜஷேகர் கோபப்பட,

"நான் சொல்றதென்ன, நீங்களே சொல்லுவீங்க" என்று தலையைக் கோதியவன்,

சத்யவதியைப் பார்க்க,
'நம்ம நினைச்ச மாதிரியே நல்ல பையனா தான் இருக்கான்.

ஷாலினிக்கு ஏத்த ஜோடி தான்'

கண்கள் கலங்க , சம்மதமாகத் தலையாட்டினார்.

மீடியா முன்பு சண்டையிட வேண்டாம் என்று ராஜஷேகர் அந்த நொடி அமைதியாகப் பல்லைக் கடித்தார்.

ஷாலினி தான் பாவம்! ராகவ், ஜக்கு, ரஞ்சித் என மூன்று வகையான மந்திரத்தால் ஆட்டுவிக்கப்பட்டாள் அன்று.

மெல்ல அவளின் கரத்தைப் பிடித்துக்கொண்டு மீண்டும் காத்திருந்த மீடியா முன்பு வந்தான் ராகவ்.

"இப்ப எனக்கு ஷாலினியோட சம்மதம் மட்டும் தான் வேணும். ஆல் செட்."

என்று புன்னகைத்தான்.

நொடிக்கு நொடி பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது ஷாலினிக்கு. தாயும் சம்மதம் சொல்லிவிட்ட கடுப்பில் அவள் நின்றிருந்தாள்.

தந்தை வேறு புதுப் புரளியைக் கிளப்பி புளியைக் கரைக்க, அவளின் மூளை எதைக் குறித்துக் குறைப்பட என்றே புரியாமல் குத்துக்கல் போன்று மாறியது.

அப்பொழுது யாரும் எதிர்பாரா விதமாக அருகே இருந்த உதவியாளரிடம் இருந்து பூங்கொத்தை வரவழைத்தான் ராகவ்.

ஷாலினியின் முன்னே மண்டியிட்டுப் பூங்கொத்தை அவளிடம் நீட்டி ,

" ஐ லவ் யூ மை ஷாலி "

என்று காதலுடன் அவள் கண்களை நோக்கிக் கூறினான் ராகவ்.

அந்த நொடி, அவனது பார்வையின் ஈர்ப்பு விசையில் இழுக்கப்பட்டு அவனின் கண்கள் வழியே அவளின் பார்வை பயணப்பட, அதிலிருந்த காதலில் கரைந்து போய் ,மொத்தமாக விழி வழியே அவன் நெஞ்சிலே மஞ்சம் கொண்டாள் ஷாலி.

அவள் கண்களில் தெரிந்த காதலைக் கண்டு அதை உறவாடி உணர , அவளின் மைவிழியில் தன் நெஞ்சத்தைப் புகுத்தி , காதலின் கரை காணச் சென்று அதன் பிரவாகத்தில் தத்தளித்து அவளின் இதயத்தில் வீழ்ந்து ஒரு சுகமான உதயம் கொண்டான் ராகவ்.

ஆக , இருவரின் இதயங்களும் இடம்பெயர்ந்தன.

(பச்சைப் புள்ளை ரொமான்ஸ்யா இது. நமக்கு அனுபவம் இல்லீங்கோ. மன்னிச்சூ)

ஷாலினியின் கைகள் தாமாக வந்து அந்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டன .

அவன் மேல் கொண்டிருந்த கோபம், ஆத்திரம், வெறுப்பு எல்லாமே அந்த ஒற்றைப் பார்வையில் ஓடிப் போனதோ ?

அதையெல்லாம் அவள் மறந்தே போனாள். தன் முன்னே நிற்பவன் தன்னவன் என்ற எண்ணம் நங்கூரம் போட்டு நின்றது அவளது உள்ளத்தில்.

உலகை மறந்து , இருவரும் சற்று நேரம் பேசாமலேயே காதல் மொழி பேசினர்.

அத்தனை பேர் இருந்தும், இருவரின் மனதின் மொழியை ஒருவராலும் உணர முடியவில்லை.

அவர்களின் கண்கள் ஒன்றோடொன்று கலக்க , நெஞ்சம் காதல் கோட்டை கட்டி , அதிலே கள்ளத்தனமாகப் பேசின.

?பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே!

கண்பார்வை மெல்லத் தூண்டில் வீசுதே!!

ஹே பூக்கள் எங்கு பூக்கும் போதும் காற்றில் வாசம் வீசுமே!

நான் பேச வந்த வார்த்தை யாவும் கண்கள் இன்று பேசுமே!!!

?????

சொல்லாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே !

நில்லாமல் கண்கள் தூண்டில்
வீசுதே !!

ஹே காலம் வந்து மாயம் செய்து

நெஞ்சை மாற்றிப் போகுதே !

என்னுள்ளே இன்று காதல் வந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே !! ?

அப்பொழுது அங்கே எழுந்த பலத்த கைதட்டல் ஒலியில் இருவரும் நினைவுலகம் திரும்பினர்.

புகைப்படக்காரர்கள் , இருவரையும் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினர்.

அவள் தன் காதலை அங்கீகரித்த மகிழ்ச்சியில் ராகவ் கொஞ்சம் அதிகமாகவே புன்னகைத்தான்.

ஷாலினியின் நிலைமை தான் சொல்லத் தெரியவில்லை.கையில் இருந்த பூங்கொத்தை நம்ப இயலாமல் பார்த்தாள் .

' லூசுத்தனம் பண்ணிட்டியே ஷாலினி.'

அருகில் இருந்த ராகவைப் பார்த்து நொந்து கொள்ளவே முடிந்தது அவளால்.

' அத்தனை பேரின் முன்பு இவனுக்கு ஓகே சொல்ற மாதிரி பண்ணிட்டேன் .இன்னிக்கு எனக்கு நேரமே சரியில்ல. காலம் பூரா இவன் கூட எப்படி ?'

வெளியில் ஒப்புக்கு சிரித்து வைத்தாள். ஆனால் மனம் ஏனோ ஒப்பவில்லை .

அனைத்தும் கை மீறி நடந்ததாகவே நினைத்தாள் ஷாலினி. எவ்வளவு யோசித்தும் எது தன்னை ஈர்த்தது என்று அவளால் பிரித்தறிய இயலவில்லை.

இவள் மனதில் மலர்ந்த காதலை என்று தான் முழுதாக உணர்வாளோ!!
காரணம் இல்லாமல் காரியம் இல்லை!

ராகவ் செய்த , செய்யப்போகின்ற அனைத்திற்கும் பின்னால் ஒரு அழுத்தமான காரணம் இல்லாமல் இல்லை.

அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்!!

சொக்கட்டான் பார்வை தொடரும்...
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
காதலிக்கிற பொன்ணு இன்னொருத்தன கோவமா பார்க்கிறாளா இல்ல காதலா பார்க்கிறாளான்னே உனக்கு கண்டுபிடிக்க தெரியலை நீ என்னதான் காதலிச்சியோ!!!! ஜக்கு நீ ஒரு மக்கு!!!!
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
காதலிக்கிற பொன்ணு இன்னொருத்தன கோவமா பார்க்கிறாளா இல்ல காதலா பார்க்கிறாளான்னே உனக்கு கண்டுபிடிக்க தெரியலை நீ என்னதான் காதலிச்சியோ!!!! ஜக்கு நீ ஒரு மக்கு!!!!
Hahaha....kandippa makku dhan sangi ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top