• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Sokkattan paarvai -19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஹலோ தோழமைகளே !!!

சென்ற ud கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள் பல !!!

அடுத்த ud இதோ ..படித்துவிட்டு கருத்துகளைப் பகிருங்கள் ..


images.jpeg
கிருஷ் ? ஷாலு
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஷாலுவை இட்லி உண்ண வைக்க இட்டுக்கட்டித் திருக்குறள் எல்லாம் சொன்ன கிருஷ்ஷை கடைசியில் திருதிருக்க தான் வைத்தாள் அவள்.

இட்லி சாப்பிட அடம் , மாத்திரை சாப்பிட அடம் , பின்னர் தூங்க மாட்டேன் என அடம் , பேச்சு தர சொல்லி அடம் .

இப்படி அனலைஸ் பண்ணி அடம் பிடித்தவளை அடக்கி ஒரு வழியாக இரவு 2 மணிக்குத் தூங்க சென்றான் கிருஷ் .

ஆனால் தூக்கமும் , வருவேனா பார் என்று அவனை ஒரு வழி செய்தது . இதனைத்தையும் மீறி அவன் உறக்கத்தைத் தழுவிய போது , அவனின் செல்பேசியில் அழைப்பு டேஞ்சர் அலாரம் போல் அடித்தது .

" ஹலோ "

தூக்கம் கலையாமல் பேசியவன் , அடுத்த நொடி அடித்துப் பிடித்து எழுந்தான்.

" என்ன அங்கிள் , இப்பவே வரீங்களா ? "

என்று அதிர்ந்தவன் , அடுத்த நொடி சுதாரித்து சாதாரணமாகப் பேசிவிட்டு வைத்தான் அழைப்பை .

மணி காலை 6.30 என காட்டியது .
அசுர வேகத்தில் ஷாலுவின் அறைக்குள் சென்றவன் , ஆழ்ந்து உறங்கும் அவளை ஆன மட்டும் எழுப்ப முயன்றான் .


அவளோ , மருந்தின் வீரியத்தில் வீழ்ந்திருக்க கிருஷ் செய்வதறியாது தவித்தான் .

இன்னும் சற்று நேரத்தில் மஹேந்திரனும் , சிவசங்கரியும் வந்துவிடுவர் .

கிருஷ்ஷாகத் தன்னைக் கண்டால் , என்ன செய்வரோ என்ற எண்ணம் வேறு அவனை நிம்மதி இழக்க செய்தது.

அவனுக்கொன்றும் அவர்களிடம் தன்னை வெளிப்படுத்த யோசனை இல்லை.

ஷாலுவின் நிம்மதி குறித்து தான் அவன் எண்ணம் இருந்தது . ஏதேனும் பழைய கதை பேசப் போய் நினைவு மறந்தவளுக்கு படக்கென அதிர்ச்சி தரும் நிகழ்வு நேரக் கூடாதே என்று நினைத்தான் .

அவளின் தற்போதைய நிலைமைக்கு அது சரிவராது.மஹேந்திரனும் பட பட என்று பேசுபவர் இல்லை தான் .

இருந்தாலும் , சந்தர்பங்கள் சறுக்கி விழ வைக்குமல்லவா?

ஆகையால் அவர் வருமுன் கிளம்ப எண்ணினான் கிருஷ். உறங்கும் ஷாலுவை எழுப்ப இயலாமல் , உடனே பிரகாஷிற்கு அழைப்பு விடுத்தான் .

அவன் எடுத்ததும் , விலாசம் கூறி உடனே வரும்படி கூறினான் .

சற்று நேரத்திற்கெல்லாம் பிரகாஷ் வந்துவிட , நிலவரத்தைக் கூறி தான் அவசர வேலையாக சென்றுவிட்டதாக மட்டும் அவர்களிடம் கூறும்படியும் மகேந்திரன் வரும்வரை காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டு சென்றுவிட்டான் கிருஷ் .

அவனும் ஹாலில் அமைதியாக அமர்ந்திருக்க , சரியாக அரை மணி நேரத்தில் சிவசங்கரியுடன் வந்துவிட்டார் மகேந்திரன் . பாதி தூக்கத்தில் எழுந்து வந்திருந்ததால் பிரகாஷ் சோபாவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் .

"தம்பி " என லேசாகத் தட்டி அவர் எழுப்ப , பதறிப் போய் எழுந்தான் பிரகாஷ் .

" வைஷாலி எப்படி இருக்கா ? மேல தூங்கிட்டு இருக்காளா ? ஒன்னும் பிரச்சனை
இல்லையே ? "


என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்ப , பிரகாஷின் தலை தானாக எல்லா பக்கமும்
ஆடியது .


சிவசங்கரி வேகமாக மேலே செல்ல ,

" ரொம்ப தேங்க்ஸ் பா . இவ்ளோ தூரம் நீங்க வந்து அவளைப் பார்த்துகிட்டதுக்கு "

என்று மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் கூறினார் .

" அதுனால என்ன சர் . இட்ஸ் மை ப்ளஷர் " என்றவன் நிச்சயம் குட்டையை தான் குழப்பிக் கொண்டிருந்தான் .

" நீங்க மட்டும் சரியான டைம்கு போயிருக்கலன்னா என்னவெல்லாம் நடந்திருக்குமோ . நினைக்கவே முடில பா "

மஹேந்திரன் இவ்வாறு கூறவும் தான் அவரிடம் தான் யாரென்று கூறவில்லை என்று உரைத்தது .

" அதில்லை அங்கிள் , நான்
வந்து .."


என்று தொடங்கியவனுக்கு ஒரு கால் வர ,

"அங்கிள் , எனக்கு முக்கியமான கால் வருது . நான் கிளம்பணும் . அப்பறம் பார்க்கலாம்"

என்றவன் அவர் முழுதாக சரி என்று கூறுவதற்குள் ஓடியே விட்டான்.

மஹேந்திரனும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் .

அங்கே லம்போகினியில் தனக்கே உரித்தான மிடுக்குடன் கிருஷ் சென்று கொண்டிருந்தான் .

அவன் மனமெல்லாம் யார் ஷாலுவை இந்தளவு தொல்லை செய்ய முயன்றது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தது .

ஷாலுவின் இருப்பிடம் குறித்து ரஞ்சித் அறிந்து கொண்டானா என்ற சந்தேகம் அவனை அரித்துக் கொண்டிருந்தது .

அவளின் இருப்பிடம் ஒன்றும் கன்னித்தீவு ரகசியம் அல்லவே .

தன்னைப் போலவே அவனுக்கும் தெரிந்திருக்கலாம் என்று அனுமானித்தான் . யாருக்கோ அழைப்பு விடுத்தவன் ,

"ஹலோ ஜீவா , நான் ஒருத்தனைப் பத்தி டீடைல்ஸ் அனுப்பறேன் . இன்னும் ஒன் ஹவர்ல அவனோட ஃபுல் மூவ்மெண்ட் பத்தி எனக்கு சொல்லணும் . ஜஸ்ட் ஒன் ஹவர் தான் உனக்கு டைம் . டூ இட் ஃபாஸ்ட் "

என்று முடித்தவன் காரை வேகமாக செலுத்த ஆரம்பித்தான், முந்தைய தினம் நடந்தவற்றை எண்ணியபடியே ...

RR எண்டர்பிரைசெஸ் வளாகத்தின் உள்ளே அவனின் கார் நுழைய , பார்க்கிங் பகுதியில் இருந்த காவலாளி உஷார் ஆனான் .

ஸல்யூட் அடித்து லம்போகினியின் பார்க்கிங் ஏரியாவை தயார் நிலையில் வைத்தவன் , கிருஷ் இறங்கியதும் பார்க்கிங் செய்ய ஏதுவாக சாவியை வாங்கிக் கொண்டான் .

அடுத்த நொடி கிருஷ் அங்கிருந்து சென்றுவிட்டான் . லிஃப்டினுள் அவன் நுழைய , பின்னோடு அழகான இளம் மங்கை நுழைந்தவள் இவனைக் கண்டதும் அப்படியே மயங்கிப் போனாள் .

" எந்த ஃபிளோர் சர் ? "

அவள் நன்றாக சிரித்தபடியே கேட்க , அவளின் புறம் திரும்பாமலே ஐந்தாம் தளத்திற்கான பொத்தானை அழுத்தினான்.

அப்பொழுதும் தளராமல் ,

" நானும் அங்க தான் போகணும் . இன்னிக்கு இன்டர்வியூ தான ? நீங்களும் அதுக்கு தான் வந்தீங்களா ? ''

அந்தப் பெண் கேட்க , எரிச்சல் கொண்டான் கிருஷ் . ஆனால் எதுவும் பேசாமல் , கூலர்ஸ்ஸை கழற்றி விட்டு , ஐந்தாம் தளம் வந்ததும் வேக எட்டுகள் வைத்து அவனின் கேபினுள்
நுழைந்தான் .


அப்பெண் , அவன் கூலர்ஸ் கழற்றியதும் 'பே' என்று முழித்தாள்.

ஆத்தாடி உனக்குத்தான் கண்ணாடி போடணும் இப்ப!

நூற்றுக்கணக்கானோர் மேனேஜ்மெண்ட் நிர்வாகத் துறைக்கான நேர்காணலுக்கு வந்திருந்தனர் .

கிருஷ் வந்ததும் , வேகமாக அவன் பின்னே வந்தவன் சதீஷ் .

"நீங்க தான கோ - ஆர்டினெட்டர்?"

சேரில் அமர்ந்தபடியே அவன் கேட்க ,

" யெஸ் சர் . எல்லாமே ரெடி . இப்ப இன்டெர்வியூ ஸ்டார்ட் பண்ணிடுவோம் . ஃபைனல் செட்ட உங்க கிட்ட கரெக்ட்டா ஒன் ஹவர்ல தந்திடுவோம் சர் "

என்றான் சதீஷ் ,கிருஷ்ஷின் மனமறிந்து .

" குட் , கேரி ஆன் " என்று அவனும் முடித்துக் கொண்டான் .

சதீஷ் வெளியே சென்றுவிட ,
பிரகாஷின் எண்ணிற்கு அழைத்தான் கிருஷ்.


"என்னாச்சு இன்னும் வரல ? "

" சாரி சர் , வந்துட்டே இருக்கேன் "

" ஹ்ம்ம் . கம் சூன் " என்றபடியே தன்னுடைய லேப்டாப்பை ஆன் செய்தான் .

தனக்கு வந்திருக்கும் பிசினஸ் மெயில் அனைத்தையும் செக் செய்தவன் , கடைசி மெயிலைக் கண்டு , யோசனையுடன் நெற்றியை சுருக்கினான் .

பின்னர் , இதழோரம் மெல்லிய புன்னகை உறைய மெல்ல எழுந்து சென்று ஜன்னலோரம் நின்று கொண்டான் கிருஷ் .

" மே ஐ கம் இன் சர் ? " பிரகாஷின் குரலை அடையாளம் கண்டவன் , திரும்பாமலேயே " ம்ம் " என்க , உள்ளே வந்தான் பிரகாஷ் .

"என்ன பிரகாஷ் , மார்னிங் மிஸ் . வைஷாலியோட பேரெண்ட்ஸ் வந்ததும் எனக்கு சொல்லவே இல்லை நீ ? அப்பறமும் இன்டிமேட் பண்ணல ? ஆஃபீஸ் வந்ததும் லேட் . வாட் இஸ் தி மேட்டர் ?"

என்று அவன் கேட்க , மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டான் பிரகாஷ் .

அவனைக் கண்டு பொறுமை
இழந்தான் கிருஷ் .


" உன்னை தான கேக்கறேன் . ஆன்ஸர் மீ மேன் " என்று பல்லைக் கடித்தான் .

"அது வந்து , வெரி சாரி சர், அவங்க அப்பா கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணதும் அர்ஜெண்ட் கால் வந்துச்சு . சோ , எதையும் சொல்லாமலே கிளம்பிட்டேன் . அவசரத்தில உங்களுக்கும் இன்டிமேட் பண்ணல . சாரி சர் "

" ஓஹ் காட் , அப்போ நீ கிருஷ் இல்லைன்னு சொல்லவே இல்லையா ? "

" ஹ்ம்ம் சொல்லப் போனப்போ தான் கால் வந்தது சர் "

தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது கிருஷிற்கு .

" அப்படி என்ன அவசரமோ ? ஷிட் "

என்றவன் பிரகாஷின் முகத்தில் எதைக் கண்டானோ , " ஓகே, நீ போ "

என்றுவிட்டுத் திரும்பி நின்று கொண்டான். மனம் திரும்பவும் அந்த மெயிலிடம் சென்றது.

முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது.

சில நொடிகளிலே ஜீவாவின் அழைப்பு அவனைக் கலைக்க , அதை எடுத்தவன் , ரஞ்சித் குறித்து அவன் கூறிய தகவல்களில் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டான்.

" பெர்ஃபெக்ட் ஜீவா . இன்னும் ஒரு வேலை இருக்கு . "

என்று அவனிடம் சில தகவல்களைக் கூறியபின் தன் வேலையை கவனிக்கத் தொடங்கினான் .
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
சரியாக ஒரு மணி நேரத்தில் அவனின் கேபினுள் புயலென ரஞ்சித் நுழைந்தான் .

" டேய் , என்ன லந்தா ? என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல "

ஆக்ரோஷமாக வந்ததும் வராததுமாக அவன் கத்த ,

லேப்டாப்பில் இருந்து லேசில் தலையை எடுப்பேனா பார் என்பது போல் கிருஷ் அமர்ந்திருந்தான் .

அவனின் செயல் ஆத்திரம் மூட்ட , ஓங்கி டேபிளின் மேல் குத்தினான் .

" கை பத்திரம் . பிச்சை எடுக்க அது தான் உனக்கு யூஸ் ஆகும் "

டன் டன்னாக நக்கல் தொனிக்க கிருஷ் சொல்ல , அடுத்த நொடி அவனை கொலை வெறியில் தாக்க வந்தான் ரஞ்சித் .

நிமிர்ந்து பாராமல் அவனின் இரு கைகளையும் ஒரே பிடியில் அமர்ந்த வாக்கிலேயே பிடித்தவன்,

" இப்ப பேசாம போய் உட்காரு. இந்த சேதாரம் எல்லாம் சாதாரணம் தான் . போடா "

என்று அவனைத் தள்ளி
விட்டவன், அருகே இருந்த மணியை அழுத்த உள்ளே பிரகாஷ் வந்தான் .


" யெஸ் சர் " என்ற குரலில் அன்றைய நாளின் அடுத்த இடியை உணர்ந்தான் ரஞ்சித் .

அவனின் தம்பி , எதிரியின் கூடாரத்தில் என்ன
செய்கிறான் !!!


அதிர்ச்சியில் நிமிர்ந்து பிரகாஷைப் பார்த்தவன் , தனக்கு நிகரான அதிர்ச்சியுடன் சிலையாக நின்று கொண்டிருக்கும் பிரகாஷைக் கண்டு என்ன செய்வது என்று புரியாமல் நின்றான் .

"பிரகாஷ் , இவரு நம்ம வி.ஐ. பி. அதாவது , வெரி இம்பார்டண்ட் பாய்சன். தீர்த்து கட்டணும் இவனை. அதுக்கு முன்னாடி ஜில்லுன்னு ஒரு ஜூஸ் சொல்லலாமா ? "

அங்கே நடந்து கொண்டிருந்த பார்வை பிணைப்பை உணராமல் கிருஷ் பாட்டிற்கு சொல்ல , அந்தப் பக்கம் பதிலே வராமல் போகவும் ,
மெல்லப் பார்வையை உயர்த்தினான் கிருஷ் .


கால்கள் வேரோடிப் போய் பிடிமானத்திற்கு சுவற்றைப் பிடித்தபடி பிரகாஷ் , ரஞ்சித்தையே வெறித்த படி நின்றிருந்தான்.

ரஞ்சித்தோ , வைத்த கண் வாங்காமல் பிரகாஷை வெறி கொண்டபடி பார்த்திருந்தான்.

இருவருக்கும் முன்பே அறிமுகம் இருக்கும் போல என்ற எண்ணம் கிருஷ் மனதில் உறுதியாக உதித்தது.

அழுத்தமான நடையுடன் எழுந்து சென்று பிரகாஷின் தோளை மெல்லத் தட்டினான் கிருஷ் .

ஷாக் அடித்தது போல் உடலைக் குலுக்கியவன் , உயிரை ஊடுருவும் பார்வையுடன் கிருஷ் நிற்பதைக் கண்டு பதறிப் போனான் .

சமீபத்தில் தான் தன்னுடைய தாயை எதேச்சையாக சூப்பர் மார்க்கெட்டில் கண்டவன் , அது நாள் வரை நடந்த சம்பவங்களை முழுமையாக அறிந்து கொண்டான் .

ஒரு குடும்பத்தை அநியாயமாகப் பிரித்த பாவம் சும்மா விடுமா ?
தீராத நோய் வந்து கோவிந்தன் அவதியுறுவதாகவும் , ரஞ்சித் மனம் போன போக்கில் போக்கிரித்தனம் செய்வதாகவும் , கேட்பாரின்றித் தான் நிலை குலைந்துள்ளதாகவும் அவர் கூற , மனம் இளகித் தான் போனது அவனுக்கு.


ஆயினும் சிறு வயதில் எடுத்த உறுதியான முடிவு , அவனைத் திரும்பவும் தன் குடும்பத்தில் சேர விடவில்லை .

குருவியின் வாரிசானாலும், காக்கையின் அடைக்காத்தலில் அடையாளம் மாற்றப்பட்டது போன்ற நிலையே அங்கு நிலவியது .

ஆறுதலாக இரண்டொரு வார்த்தையை சம்பிரதாயமாக உதிர்த்த பிரகாஷ் , அதன்பின்னர் அவனின் தாய் கூறிய செய்தியில் ஆடிப்போனான் .

யாரிடம் மன்னிப்பு வேண்ட இத்தனை நாள் தவம் இருந்தோமோ , அவனிடமே வேலை செய்வது அவனுக்கு ஆனந்தம் கலந்த அதிர்ச்சியளித்தது .

கண்முன்னே வெண்ணை இருந்தும் நெய் தேடி அலைந்த கதையாகிப் போனதே.

சூர்யாவிடம் இதைக் குறித்துத் தெளிவுபடுத்திக் கொண்டவன் , உண்மையைக் கூறாமல் இத்தனை நாளாக தவிக்க விட்டதற்கு அவனிடம் சண்டையும் போட்டிருந்தான் .

ஆனாலும் , கிருஷ்ஷிடம் என்னவென்று சொல்வது , எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சாக்ஷாத் எமனின் ரூபத்தில் வந்து சேர்ந்தான் ரஞ்சித் .

தாம் கூறவில்லையெனினும் அவனே பிள்ளையார் சுழி போட்டு புதை குழியில் தள்ளிடுவான் என்று நன்கு உணர்ந்தான் .

தான் சொல்வதற்கும் , ரஞ்சித் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று அறியாதவனா பிரகாஷ் ?
எவ்வளவோ வருடங்கள் கழித்து அண்ணனைக் காண்கிறான் .


ஆனால் , அதெல்லாம் இப்பொழுது பிரகாஷின் கருத்தில் பதியவில்லை .

அவனின் எண்ணமெல்லாம் கிருஷ் தன்னைத் தவறாக எண்ணிவிடுவானோ என்பது தான் .

"சர் ..."

என்று அவன் ஏதோ சொல்லப் போக , உள்ளே வந்த சதீஷ் ,

"சர் , ஃபைனல் செட் ரெடி . நீங்க பார்த்து ஓகே சொன்னா போதும் "

என்றதும் , "ஓகே , வில் கம் "
என்று சொல்லிவிட்டு , பிரகாஷையும் வர சொல்லிக் கண்ணசைத்து விட்டு சென்றான்.


இதைக் கண்டு பின்னோடு தொடர்ந்து வந்தான் ரஞ்சித் .

"டேய், நான் ஒருத்தன் பேசிட்டு இருக்கேன்ல , என்ன ஸீன் காட்டறியா ?"

என்று எரிச்சல் கொண்டு கேட்டான் .

"ஓஹ் , வி.ஐ. பி சர் , நீங்க பேசாம ரெண்டு நாளைக்கு அப்பறமா வாங்களேன் . இன்னிக்கு நான் கொஞ்சம் பிஸி "என்று சிரித்த கிருஷ் ,

ரஞ்சித்தை வெளியேற்றும்படி அங்கிருந்த காவலாளியிடம் உத்தரவிட்டு அகன்றான் .

குட்டி போட்ட பூனை போல் பிரகாஷும் அவனுடன் செல்ல , காலை வேகமாக உதைத்தபடியே இயலாமை கலந்த எரிச்சலுடன் தலையைப் பிடித்துக் கொண்டான் ரஞ்சித் .

தன்னை உதாசீனப்படுத்தியவனை ஒன்றும் செய்ய இயலவில்லை அவனால் .

ஏனெனில் கிருஷ் செய்திருந்த வேலை அப்படி அன்று.
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
இரண்டு நாட்கள் கழித்து RR எண்டர்ப்ரைசஸ் வந்தாள் வைஷாலி.

பார்ப்பதற்கு பிசினஸ் மீட் போல் இருந்தாலும் , அவள் வந்த நோக்கம் அவளுக்கு தான் தெரியும் .

அன்று வந்ததற்குப் பின் , கிருஷ் அவளிடம் பேசவும் இல்லை.

இவ்ளோ , அவனின் அழைப்பிற்காக ஏங்கி இருந்தாள்.

தானாக செய்யவும் அவளின் பெண்மை இடம் தரவில்லை .

அவனுடன் பேசவே கூடாது என்று முடிவு செய்திருந்தாள் . அதன் முடிவு தான் அவளின் வருகை .

அதாவது , அவள் மனம் கட்டவிழ்ந்து கள்வனிடம் வந்து சேர்த்தது .

'ஒரு வேளை தண்டமேன்னு தான் ஹெல்ப் பண்ணிருப்பனோ'

அவள் மனம் சுணங்கியது .
கிருஷ்ஷின் அறைக்குள் நுழைந்தாள் ஷாலு .


அவன் யாருடனோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தான் .

" நான் இல்லாமயா டா . கண்டிப்பா வரேன் . மெயில் பார்த்தேன் . பட் , அப்போ கால் பண்ண டைம் இல்லை "

'எனக்கு ஃபோன் பண்ண மட்டும் கசக்குதா இவனுக்கு'

மனதில் திட்டினாலும் , டேபிளின் மேல் சாய்ந்து , தலை கோதியபடி இருந்தவன் புறம் அவள் மனமும் சாய்ந்தது .

"என் வைஃப் கூடத் தான்டா. அவ கண்டிப்பா வருவா "

இதைக் கேட்டதும் , சாய்ந்த அவளது மனம் சரிந்தது பாதாளத்தில்.

அதிர்ச்சி தாங்காமல் அங்கிருந்து அவள் செல்லப் பார்க்க , எதேச்சையாக அவளைக் கண்டவன் ,

"ஹே, பொண்டாட்டி எப்ப வந்த நீ ? சொல்லவே இல்லை ?"

என்று ஒரு விதத் துள்ளலுடன் கேட்டு அவளை நகர விடாமல் செய்தான்.

படக்கெனத் திரும்பியவள் , ஆ என்று பார்க்க , அடுத்த நொடி ,

" மிஸ் . வைஷாலி , எப்படி இருக்கீங்க ? எப்ப வந்தீங்க ? இப்ப பெட்டரா உங்க ஹெல்த் "

என்று மிகவும் சாதாரணமாகப் பேசினான் கிருஷ். இதற்கு முன் பேசியது இவன்தானா என்று இருந்தது .

'இவன் அந்நியனோட அண்ணாவா , இல்லை அம்பியோட தம்பியா!!'

"என்ன யோசனை ? "அவனின் கேள்வியில் கலைந்தவள் ,

" இல்ல , ஏதோ பொண்டாட்டினு ..." என்று வார்த்தைகள் சிக்க , அவள் திக்கினாள் ..

" ஓஹ் அதுவா, என் ஃபிரெண்டோட மேரேஜ் வருது . நடுல டச் விட்டு போச்சு அவனோட.

நான் ரிசர்வ் டைப் . சோ , எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு அவன் சொல்லுவான்.அப்போ அவன்கிட்ட சவால் விட்டிருந்தேன், அவனோட கல்யாணத்துக்கு வைஃபோட தான் வருவேன்னு .

இப்ப சமாளிக்கணும்ல அதான் பிட் போட்டேன் . நீங்க வந்தீங்களா அப்போ , ஒரு ஃப்ளோல அப்படி கூப்பிட்டேன். "

என்று அதே ஃப்ளோவில் உண்மையைத் தான் சொன்னான் கிருஷ்.

'ஹப்பாடா .கல்யாணம் எல்லாம் ஆகலையா இவனுக்கு '

என்று அவள் பெருமூச்சு விட ,
"ரொம்ப நிம்மதியா இருக்கா ?"


குறும்பு கொப்பளிக்க அவன் கேட்க ,

"அதெல்லாம் இல்லையே . நான் வேற நினைச்சேன் " என்று முகம் திருப்பினாள்.

" ஓகே பேபி , அப்போ நாளைக்கு ரெடியா இரு , நீ தான் எனக்கு பொண்டாட்டி அவன் கல்யாணத்தில "

என்று அவளின் கன்னம் தட்டி அங்கிருந்து கிருஷ் சென்றுவிட ,
' பே ' என்று முழித்தாள் வைஷாலி.


'இவன் ஆர்டர் போட்டா நான் ஆடணுமா ? நெவர் "

மனதில் உறுதியாக நினைத்துக்கொண்டாள் பெண்ணவள்.

அவள் மனம் எப்பொழுதும் போல் கட்டவிழுமா இல்லை கட்டியிழுக்குமா என்று பார்க்கலாம்!

சொக்கட்டான் பார்வை
தொடரும் ...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top