• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai- 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
சென்ற ud க்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!!

நன்றியோ நன்றி தோழமைகளே!!!
அடுத்த சொக்கட்டான் பார்வையின்
பதிவு இதோ!!!


IMG_20180821_073522_369.jpg
கிருஷ்!!!

உள்ளே வந்தவளைப் பார்த்து நின்றவன்தான். எதிர்பாரா சந்திப்பு!!
அவளா இவள்! எவ்வளவு மாற்றம்.

"ஷாலு" மென்மையாய் ஒலித்தது அவன் குரல். அவனுக்கே அது கேட்கவில்லை என்றால் எவ்வளவு சத்தமாகக் கூப்பிட்டிருப்பான்!

அவளை, அவனே அறியாமல் ரசிக்கத் துவங்கினான்.

சிவப்பு நிற டாப்ஸ், கருப்பு ஜீன்ஸ் அணிந்திருந்தாள். வலது கையில் மெல்லிய பிரேஸ்லெட், இடது கையில் சொனாட்டா வாட்ச் போட்டிருந்தாள். பின்னர் கழுத்தில் ஒரு மெல்லிய செயின்.

முகம் சாதாரண ஒப்பனையுடன் அவளுக்கு ஒத்திருந்தது.
கண்ணில் வைத்திருந்த காஜல் அவனைக் காந்தமெனக் கவர்ந்தது.
நீண்ட கூந்தலை ஒரு போனியில் அடக்கிவிட்டிருந்தாள்.

முன் நெற்றியில் புரண்ட கூந்தல் அவள் வேகமாக வந்ததைக் கூறியதோ??

அடேய்ய் அது தான் ஸ்டைல் !! என்று மனசாட்சி அதட்ட , உனக்கெப்படித் தெரியும் என்று கிருஷ் அதனை அடக்கி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

சின்னதாய் ஒரு பொட்டு நேர்த்தியாய் பொருந்தியிருக்க, ஏதோ சொல்லத் துடித்த அவள் இதழைக் கண்டு தடம் புரளப் போன கிருஷ் மனதை,

"சர்" என்ற குரல் தடத்திலேயே நிறுத்தியது.

'ஐயோ, இவளின் குரலில் எப்பொழுது மயிலானாள்?'

"சர்" என்று திரும்பவும் அதே குரல் அவனை லேசாக உலுக்கியது.பார்த்தால் அவனின் பி.ஏ .

"அட இப்பிடியே எவ்ளோ நேரம் இவளைப் பார்த்துத் தொலைச்சோமோ" என்று நினைத்த பொழுதே இவள் நிச்சயம் இன்னமும் குயில் குரல்காரியாகத்தான் இருப்பாள் என்று மானம் கெட்ட மனது நிம்மதி அடைந்தது.

தன் எண்ணப்போக்கை எண்ணி ஒருமுறை நன்றாக அவனையே உலுக்கிக் கொண்டான் கிருஷ்.

கிருஷ் அணிந்திருந்த கூலர்ஸ் அவன் பார்வையை இவளுக்கு உணர்த்தவில்லை.

இல்லையெனில் சொக்கட்டான் பார்வை பார்க்க வந்து சொக்கிப் போன அவன் பார்வையை உணர்ந்திருப்பாளோ என்னவோ!

"சாரி சர். லேட்டா வந்திட்டேனோ ??"
என்று ஷாலு பேச்சைத் துவங்க,
"யெஸ் நீங்க 5 மினிட்ஸ் லேட்.

10.03க்கு வந்திருந்தா கூட கிரேஸ் டைம்னு விட்டிருப்பேன்.பட் எக்ஸ்ட்ரா 2 மினிட்ஸ் டிலே பண்ணிட்டீங்க" என்று சொல்ல,

"டேய் அப்போ நீ 5 நிமிஷமா அவளை சைட் அடிச்சியே அது என்ன கணக்கு" என்று கேட்ட மைண்ட்வாய்சை மெரினாவிற்கு வண்டி ஏற்றி விட்டான் கிருஷ்.

"சாரி அகயின், மார்னிங் ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு. அதான் லேட். இப்ப நம்ம ஸ்டார்ட் பண்ணலாமே" என்று அவள் புன்னகைக்க , அதில் விழப் போனாலும்,

"நெவர். இந்த டீல் கேன்சல்ட் நவ். எனக்கு நேரம் ரொம்ப முக்கியம்"
என்று கூறிவிட்டு அவன் பாட்டிற்குப் போய்விட்டான்.

ஷாலு ஒரு நிமிடம் திகைத்துப் பின் மீண்டாள்.

'பெரிய பங்க்சுவல் பரமானந்தம், போடா'

என்று நினைத்த அடுத்த நொடியே,
"இந்த டீல் நமக்கு எவ்ளோ முக்கியம். போய்ப் பிடி ஷாலு அவனை" என்று ஓடினாள்.

"மிஸ்டர், நில்லுங்க. சொல்றேன்ல நில்லுங்க ப்ளீஸ்."என்று கத்திக்கொண்டே அவன் கார் வரைக்கும் ஓடினாள்.

சரியாக அவன் கதவைத் திறக்கப் போகும்பொழுது குறுக்கே சென்று நின்றாள்.

"வாட் நவ்" என்று கூலர்சைக் கழற்றிவிட்டு சட்டையில் சொருகியபடியே சீறலாய் அவன் வினவினான்.

அவன் பார்வையின் ஆழத்தில் நின்று துடித்த இதயத்தை உணர்ந்து தடுமாறி,

"கிவ் மீ சம் டைம் சர். எனக்கு இது ரொம்ப முக்கியமான டீல். " என்றாள் அவள்.

பின்னந்தலையைக் கோதிக்கொண்டே,

"ஓஹோ. அவ்ளோ முக்கியம்னா நீங்க எப்பவோ என்கிட்ட வந்திருப்பீங்க. இட்ஸ் டூ லேட். மை டைம் ஸ்டார்ட்ஸ் ஹியர்"

என்று உதடை வளைத்து மொழிந்துவிட்டு, அவளை விலக்கி விட்டுக் காரில் பறந்துவிட்டான் கிருஷ்.

'டேய் நில்லு' மனதில் கத்தியவள் ,
"இவன் பேசறதுக்கு நான் தான் கெடச்சேனா?இன்னிக்கு யாரு மூஞ்சில முழிச்சேனோ.எல்லாம் நேரம்" என்று புலம்பியபடியே திரும்பினால் அந்த பி.ஏ நின்றிருந்தான்.

"நீங்க கவலைப்படாதீங்க. இதை நான் ப்ரொசீட் பண்ண வைக்கறேன். பட் அப்பவாச்சும் கரெக்ட் டைமுக்கு வாங்க" என்று கூறி அவனும் வேறு காரில் போய்விட்டான்.

'என்னங்கடா ஆளாளுக்கு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்ததுக்கு அரை மணிநேரம் லெக்சர் அடிக்கிறீங்க. நான் இதுக்கெல்லாம் பழி வாங்கியே தீருவேன்'

என்று அவள் மனதாரக் கருவினாள்.
ஆனால் அவள் மனதில் நின்றதோ நம் கிருஷ்ஷின் ஆளுமை, வசீகரம்!
'கோபப்பட்டாலும் ஒருத்தன் இவ்ளோ அழகா?'

அவனின் கேசத்தில் கையை விட்டு விளையாட வந்த எண்ணத்தை ஒதுக்கித் தள்ளி, அவனை வெறுக்க சபதம் பூண்டு வீரமங்கையாய் நடந்தாள்.

காரில் சென்று கொண்டிருந்த கிருஷ்ஷின் மனநிலைமை அவன் காரைப் போலவே தறிகெட்டு ஓடியது.

"என்னாச்சு எனக்கு? அவளைப் பார்க்க தான வந்தோம்.அப்பறம் என்னத்துக்கு கோபப்படணும்"

இப்படி தனக்குத் தானே புலம்பிக் கொண்டு காரை முறுக்கினான்.
விளைவு, வழியில் போலீஸ் ஒருவர் வண்டியை நிறுத்தி விசாரிக்க வேண்டி ஜன்னல் கதவைத் தட்ட,
கிருஷ், கண்ணாடியை இறக்கி ஒற்றைப் புருவத்தைத் தூக்கினான்.

அதிலேயே அவரின் சப்த நாடியும் ஒடுங்க,
"சர், நீங்க போங்க .தெரியாம நிறுத்திட்டேன். சாரி சாரி " என்று அந்தப் போலீஸ் பதறிப்போனார்.

லேசாக சிரித்துக் கொண்டான் கிருஷ்.
"அட என்ன உங்க மூஞ்சில பயத்தையும் தாண்டி சோகம் தெரியுதே. வீட்ல அப்போ வளையல் சாப்பாடு கட் போல. எதுவும் இன்னிக்கு தேறலயோ"

"சர். அப்படி எல்லாம் இல்ல சர். ஸ்டேஷன் ஆர்டர தான்"என்று அவர் இழுத்தார்.

"ஓஹோ,இப்ப எனக்கு என்ன தண்டனை?"

"ஐயோ சர், நீங்க இப்ப போங்க. நீங்கன்னு தெரியாது. சாரி சர்"

இவனைப் பகைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ முடியுமா?

"உங்களை மாதிரி சில பேரு பண்றதுக்கு ஒட்டுமொத்த காவல் துறையையும் ஒழுங்கா வேலை செய்யறதில்லை, லஞ்சம் வாங்கிட்டு தப்பு பண்றவங்களை விட்டுட்டு நியாயத்தை வித்துடுவாங்கன்னு பேசிக்கறாங்க.

இந்த சமூகம் சாதாரண ஆளுங்களைக் கேவலமா பாக்கறதே உங்கள மாதிரி போலீசோட இந்த லஞ்ச புத்தினால தான்.

உண்மையான குற்றவாளிகளைத் தண்டிங்க. அதைப் பார்த்து வேற எவனும் தப்பு பண்ண நினைக்கவே கூடாது. இப்ப போவோம் ஸ்டேஷனுக்கு" என்று உறுதியாகக் கூறி முடித்தான்.

கிருஷ் கூறியதனைத்தும் அவர் காதில் விழுந்தாலும் மூளையை எட்டவில்லை, மனமோ ஏற்கவில்லை.
அப்படியே நின்றார் அவர்.

'ஸ்டேஷனுக்குப் போவோம்னு பொதுவா நம்ம தான சொல்லணும்!'
"என்ன போகலாமா " என்று மறுபடியும் கிருஷ் கேட்க அரைமனதாய் தலை ஆட்டினார் அந்த போலீஸ்.

எத்தனையோ தொழில்களை அசராமல் எடுத்துத் தனி ஆளாய் தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆளும் ஒருவன், வேகமாக வாகனத்தை செலுத்தியதற்குப் போய் என்னை தண்டித்துக்கொள் என்று கூறுவான் என்று அவர் என்ன கனா கண்டாரா?

பி4 போலீஸ் ஸ்டேஷன் - ரேஸ் கோர்ஸ்.

கிருஷ் உள்ளே நுழைய, தன்னையறியாமல் அனைவரும் எழுந்து நின்றனர். சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டவன் கடைசியாக ஒரு இடத்தில் ஏளனமாகப் பார்வையை வீசிவிட்டு, அங்கே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

"எங்கடா வந்த??" என்ற கமிஷனரின் ஓங்கி ஒலித்த குரலுக்குப் பதிலாய்,
"ஹ்ம்ம், மாமனார் வீட்டுக்கு வந்திருக்கேன்"

என்று சொல்லிவிட்டு அழகாய்த் தன் தலையைக் கோதிவிட்டுக் கொண்டுப் புன்னகைத்தான்.

அவனை நெருங்கிக் கழுத்தை நெறிக்க வந்த கமிஷனர் ராஜஷேகரின்
கைகளை, அமர்ந்த வாக்கிலேயே இடது கையால் பிடித்தான் கிருஷ்.

உடும்புப் பிடியை வாழ்நாளில் அன்று உணர்ந்தார் ராஜஷேகர். கைகளை விடுவிக்க அவர் போராட பிடி இன்னும் இறுக்கமானது.

"டேய் மரியாதையா விடு. இல்லன்னா நடக்கறதே வேற"

"மிஸ்டர் ராஜசேகர், நான் நேரடி மோதலுக்கு வந்திருக்கேன். உண்மை எல்லாத்தையும் இங்கேயே சொல்லட்டா"

அவர் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை போலும்.
கிருஷ் பார்த்த பார்வையில் நடுநடுங்கிப் போனார்.

சொக்கட்டான் பார்வை தொடரும்...
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Excellent writing skill
Story script matm nala iruntha nichayam mass hit than po
Ipove konjam bayama iruku
intha competition idayala namalum stand panrathunu oru manasatchi kkeka atha bus yethi malaysia ku anupita:cool:
வாழ்க வளமுடன்:cry:
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Excellent writing skill
Story script matm nala iruntha nichayam mass hit than po
Ipove konjam bayama iruku
intha competition idayala namalum stand panrathunu oru manasatchi kkeka atha bus yethi malaysia ku anupita:cool:
வாழ்க வளமுடன்:cry:
Thank u so much moni ka..??
Feeling blessed. So happy to here from you??
Aama naan competition la ellam illa ka..it's purely on fun basis dhan????????????
....nellai mama ku munnadi naanga oru sundeli...
Unga ud ya padikka naanga podara potti ya pathi ungalukku theriyadha enna.
Mind voice ah again malaysia la ye irukattum???
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
@Kavyajaya adiye yaarum ippidi comments potrukkeve mattanga...namma nelamaiya paaru....seekrama error ah rectify pannu.

Yaaru shalini...krish ku avala theriyudhu
Avanukku ivala therilaya..
Suspense...
Police shalu appa va..
Nalla kondu pora...seekram theliya vei???
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
@Kavyajaya unnoda comment idho....
Sema harini...
Krish mind voice??
@Kavyajaya adiye yaarum ippidi comments potrukkeve mattanga...namma nelamaiya paaru....seekrama error ah rectify pannu.

Yaaru shalini...krish ku avala theriyudhu
Avanukku ivala therilaya..
Suspense...
Police shalu appa va..
Nalla kondu pora...seekram theliya vei???
Thank u kavya???
Naane oru maargama dhan sutharen...thelinja solren di.???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top