• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai- 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Keerthi suresh awesome maha ka???
Neenga konjame konjam late ah vandhadhu nala premi ka anupama va select panittanga...adha ellarum ok panittanga.dp kooda vekka solitanga ka????
...but I hv another idea maha ka..adhula keerthi ya potruvom homely face ku????nxt ud la keerthi dhan,???
Aiyo olarittoma????
No no no don’t change riha It’s nice ??premi selected na kandipa nalla irukum?. Na late comer veira illa? I dint notice before cmts da ??‍♀ first is the best ????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Kandippa ka...naane adha dhan sonnen.
Unmaiyana vimarsanam sollunga nu...
Illana chinna ponnu dhana nu icecream vaangi thandhu ice vechuttanganna???
Thank u so very maha ka.. love u too.???????
???
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
சென்ற ud க்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!!

நன்றியோ நன்றி தோழமைகளே!!!
அடுத்த சொக்கட்டான் பார்வையின்
பதிவு இதோ!!!


View attachment 3501
கிருஷ்!!!!

உள்ளே வந்தவளைப் பார்த்து நின்றவன் தான். எதிர்பாரா சந்திப்பு!!

அவளா இவள்!!!! எவ்வளவு மாற்றம்.

"ஷாலு" மென்மையாய் ஒலித்தது அவன் குரல். அவனுக்கே கேட்கவில்லை என்றால் எவ்வளவு சத்தமாகக் கூப்பிட்டிருப்பான் நம்ம கிருஷ்!!

அவளை, அவனே அறியாமல் ரசிக்கத் துவங்கினான்.

சிவப்பு நிற டாப்ஸ், கருப்பு ஜீன்ஸ் அணிந்து....வலது கையில் மெல்லிய பிரேஸ்லெட், இடது கையில்
சொனாட்டா வாட்ச் போட்டிருந்தாள்.
பின்னர் கழுத்தில் ஒரு செயின்.

முகத்தைப் பார்த்தால்... அடேயப்பா
Foundation என்ன, லோட்டஸ் கிரீம் என்ன , ponds பவுடர் என்ன, ரூஜ் என்ன, லிப்ஸ்டிக் என்ன....

இது எதுவுமே இல்லாமல் சாதாரண ஒப்பனையுடன் இருந்தாள்.!!

கண்ணில் வைத்திருந்த காஜல்
அவனை வா வா என்று அழைத்தது.

நீண்ட கூந்தலை ஒரு போனியில் அடக்கிவிட்டிருந்தாள்.

முன் நெற்றியில் புரண்ட கூந்தல் அவள் வேகமாக வந்ததைக் கூறியதோ??

அடேய்ய் அது தான் ஸ்டைல் !! என்று மனசாட்சி அதட்ட , உனக்கெப்படி தெரியும் என்று கிருஷ் அதனை அதட்டி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

சின்னதாய் ஒரு பொட்டு. ஏதோ சொல்லத் துடித்த அவள் இதழைக் கண்டு தடம் புரளப் போன
கிருஷ் மனதை,

"சர்" என்ற குரல் தடத்திலேயே நிறுத்தியது.

அடடடா இவள் குரலில் குயில் இல்லையா , மயில் தான் போல
என்று நொந்த வேளை ,

"சர்" என்று திரும்பவும் அதே குரல் அவனை லேசாக உலுக்கியது.பார்த்தால் அவனின் PA.

"அட இப்பிடியே எவ்ளோ நேரம் இவள பாத்து தொலைச்சோமோ" என்று நினைத்த பொழுதே இவள் நிச்சயம் குயில் குரல்காரியாகத்தான் இருப்பாள் என்று மானம் கெட்ட மனது
நிம்மதி அடைந்தது.

தன் எண்ணப் போக்கை எண்ணி ஒருமுறை நன்றாக அவனையே உலுக்கிக் கொண்டான் கிருஷ்.

கிருஷ் அணிந்திருந்த கூலர்ஸ் அவன் பார்வையை இவளுக்கு உணர்த்தவில்லை.

இல்லையெனில் சொக்கட்டான் பார்வை பார்க்க வந்து சொக்கிப் போன அவன் பார்வையை உணர்ந்திருப்பாளோ என்னவோ!!!


"சாரி சர். லேட்டா வந்திட்டேனோ ??"
என்று ஷாலு பேச்சைத் துவங்க,

"யெஸ் நீங்க 5 மினிட்ஸ் லேட்.
10.03 க்கு வந்துருந்தா கூட grace time னு விட்டுருப்பேன். பட் எக்ஸ்ட்ரா 2 மினிட்ஸ் டிலே பண்ணிட்டீங்க"
என்று சொல்ல

" டேய் அப்போ நீ 5 நிமிஷமா அவளை சைட் அடிச்சியே அது என்ன கணக்கு" என்று கேட்ட mindvoice ஐ மெரினாவிற்கு வண்டி ஏத்தி விட்டான்.

"சாரி அகயின், மார்னிங் ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு. அதான் லேட்.
இப்ப நம்ம ஸ்டார்ட் பண்ணலாமே" என்று புன்னகைக்க , அதில் விழப் போனாலும் ...

"நெவெர். இந்த டீல் கேன்சல்ட் நவ்.
எனக்கு punctuality ரொம்ப முக்கியம்"

என்று கூறிவிட்டு அவன் பாட்டுக்குப் போய்விட்டான்.

ஷாலு ஒரு நிமிடம் திகைத்துப் பின் மீண்டாள்.

பெரிய punctual பரமானந்தம்.போடா...
என்று நினைத்த அடுத்த நொடி,

"இந்த டீல் நமக்கு எவ்ளோ முக்கியம்.
போய் புடி ஷாலு அவன" என்று எண்ணிக்கொண்டே ஓடினாள்.

"மிஸ்டர்...நில்லுங்க. சொல்றேன் ல நில்லுங்க ப்ளீஸ்."என்று கத்திக்கொண்டே அவன் கார் வரைக்கும் ஓடினாள்.

சரியாக அவன் கதவைத் திறக்கப் போகும்பொழுது குறுக்கே சென்று நின்றாள்.

"வாட் நவ்" என்று coolers ஐ கழட்டிவிட்டு சட்டையில் சொருகியபடியே சீறலாய் அவன் வினவ,

அவன் பார்வையின் ஆழத்தில் நின்று துடித்த இதயத்தை உணர்ந்து தடுமாறி,

"கிவ் மீ சம் டைம் சர். எனக்கு இது ரொம்ப important டீல். "

பின்னந்தலையைக்
கோதிக்கொண்டே,
"ஓஹோ. அவ்ளோ important னா நீங்க எப்பவோ என்கிட்ட வந்துருப்பீங்க .
இட்ஸ் டூ லேட். மை டைம் ஸ்டார்ட்ஸ் here"

என்று உதடை வளைத்து, மொழிந்துவிட்டு அவளை விலக்கி விட்டு , காரில் பறந்துவிட்டான்.

"டேய் நில்லு..."
(மனசுல தான்)

என்ன சொல்றான். இதுக்கெல்லாம் dictionary தான் போடணும். இவன் பேசறதுக்கு நான் தான் கெடச்சேனா.???
இன்னிக்கு யாரு மூஞ்சில முழிச்சேனோ.எல்லாம் நேரம் என்று புலம்பியபடியே திரும்பினால் அந்த PA.

"Mam, நீங்க கவலை படாதீங்க. இதை நான் proceed பண்ண வெக்கறேன்.
பட் அப்போவாச்சும் கரெக்ட் டைம் க்கு
வாங்க" என்று கூறி அவனும் வேறு காரில் போய்விட்டான்.

என்னங்கடா ஆளாளுக்கு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்ததுக்கு அரை மணிநேரம் lecture அடிக்கிறீங்க.
நான் பழி வாங்கல உன்ன என் பேர
மாத்திக்கறேன் என்று மனசார கருவி விட்டுச் சென்றாள்.

அனால் அவள் மனதில் நின்றதோ நம்
கிருஷ்ஷின் ஆளுமை, வசீகரம்!!!
கோவப்பட்டாலும் ஒருத்தன் இவ்ளோ அழகா?? அவனின் கேசத்தில் கையை விட்டு விளையாட வந்த எண்ணத்தை ஒதுக்கித் தள்ளி, அவனை வெறுக்க சபதம் பூண்டு வீரமங்கையாய் நடந்தாள்.

ஏனெனில் அவள் வந்த காரியம் அப்படிப்பட்டது.

காரில் சென்று கொண்டிருந்த கிருஷ்ஷின் மனநிலைமை அவன் கார் போலவே தறிகெட்டு ஓடியது.

"என்னாச்சு எனக்கு? அவள இங்க போய்ப்பாத்துட்டோமே. ஒரு நல்ல காரியத்தை செய்ய விடாம பண்ணிட்டா... அவ இல்லனா என்ன
நானே தனியா பண்ணிருவேன்.
என்கிட்ட என்ன இல்ல."

இப்படி தனக்குத் தானே புலம்பிக் கொண்டு காரை முறுக்கினான்.

விளைவு... வழியில் போலீஸ், வண்டியை நிறுத்தி விசாரிக்க வேண்டி ஜன்னல் கதவைத் தட்ட,

கிருஷ், கண்ணாடியை இறக்கி ஒற்றைப் புருவத்தைத் தூக்க ....

அதிலேயே சப்த நாடியும் ஒடுங்க,
"சர்.. நீங்க போங்க .தெரியாம நிறுத்திட்டேன். சாரி சாரி " என்று அந்தப் போலீஸ் பதறிப்போய் விட ,

லேசாக சிரித்துக் கொண்டான் கிருஷ்.
"அட என்ன உங்க மூஞ்சில பயத்தையும் தாண்டி சோகம் தெரியுதே. வீட்ல அப்போ வளையல் சாப்பாடு கட் போல. எதுவும் இன்னிக்கு தேறலயோ"

"சர். அப்படி எல்லாம் இல்ல சர். ஸ்டேஷன் ஆர்டர தான்"என்று இழுக்க

"ஓஹோ அப்ப எனக்கு இப்ப நான் பண்ண தப்புக்கு punishment குடுங்க."

"ஐயோ சர்... நீங்க இப்ப போங்க. நீங்கன்னு தெரியாது. சாரி சர்"

இவனைப் பகைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ முடியுமா...எவ்வளவு பெரிய புள்ளி இவன்.

"உங்கள மாதிரி சில பேரு பண்றதுக்கு
ஒட்டுமொத்த காவல் துறையையும்
ஒழுங்கா வேலை செய்யறதில்லை,
லஞ்சம் வாங்கிட்டு தப்பு பண்றவங்களை விட்டுட்டு நியாயத்தை வித்துடுவாங்கன்னு
பேசிக்கறாங்க. பண பலம் இருந்தா,
பெரிய ஆளோட செல்வாக்கு இருந்தா, இந்த சமூகம் சாதாரண ஆளுங்களை கேவலமா பாக்கறதே உங்கள மாதிரி போலீசோட இந்த லஞ்ச புத்தினால தான். காவல் துறை உங்கள் நண்பன்னு பொதுவா எல்லாரையும் பாத்து தான் சொல்றீங்க. அப்படி நடந்துக்கோங்க.

இந்த சமூகத்து மேல மக்களுக்கு எவ்ளோ பொறுப்பு இருக்கோ அதே அளவு , இல்ல அத விட நிறைய உங்களுக்கும் இருக்கு.
உண்மையான குற்றவாளிகள தண்டிங்க. அத பாத்து வேற எவனும் தப்பு பண்ண நினைக்கவே கூடாது.
இப்ப போவோம் ஸ்டேஷன்க்கு" என்று கூறி முடித்தான்.

கிருஷ் கூறியதனைத்தும் அவன் காதில் விழுந்தாலும் மூளையை எட்டவில்லை, மனம் ஏற்கவில்லை.
அப்படியே நின்றான்.

'ஸ்டேஷன்க்கு போவோம் னு பொதுவா நம்ம தான சொல்லணும்..
இவரு என்ன என்னோட டயலாக பேசறாரு. இப்பிடியே போனா என்ன டம்மி ஆக்கிடுவாங்களே'

"என்ன போலாமா " என்று மறுபடியும்
கேட்க

அரைமனதாய் தலை ஆட்டினான் அந்த போலீஸ்.

கிருஷ்ஷைப் பற்றிய மறுபிம்பம்....இது அவனுக்குப் புதிய செய்தி.

எவ்வளவோ தொழில்களை அசராமல்
எடுத்துத் தனி ஆளாய் தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆளும் ஒருவன் என்னை தண்டித்துக்கொள்
என்று கூறுவான் என்று அவன் என்ன
கனா கண்டானா???

யாருக்கும் பணியாதவன் சட்டத்திற்குப் பணிவானா!!!

பி4 போலீஸ் ஸ்டேஷன் - ரேஸ் கோர்ஸ்.

கிருஷ் உள்ளே நுழைய அனைவரும்
தன்னையறியாமல் அனைவரும் எழுந்து நிற்க , சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டவன் கடைசியாக ஒரு இடத்தில் ஏளனமாகப் பார்வையை வீசிவிட்டு, அங்கே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

"எங்கடா வந்த??" என்ற கமிஷனர் குரலுக்கு ...

"ஹ்ம்ம் மாமனார் வீட்டுக்கு வந்திருக்கேன். "
என்று சொல்லிவிட்டு அழகாய்த் தன்
தலையைக் கோதிவிட்டுக் கொண்டு
புன்னகைத்தான்...

அவனை நெருங்கிக் கழுத்தைப் நெறிக்க வந்த கமிஷனர் ராஜஷேகரின்
கைகளை, அமர்ந்த வாக்கிலேயே இடது கையால் பிடித்தான்!!!

உடும்புப் பிடியை வாழ்நாளில் அன்று உணர்ந்தார் ராஜஷேகர். கைகளை விடுவிக்க அவர் போராட பிடி இன்னும்
இறுக்கமானது.

"டேய் மரியாதையா விடு. இல்லனா நடக்கறதே வேற"

"Mr. Rajasekar நான் நேரடி மோதலுக்கு
வந்திருக்கேன். உண்மை எல்லாத்தையும் இங்கயே சொல்லட்டா"

அவர் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை போலும்.
கிருஷ் பார்த்த பார்வையில்
நடுநடுங்கிப் போனார்.

சொக்கட்டான் பார்வை தொடரும்...

படிச்சுட்டு உங்கள் பார்வையையும்
தொடருங்கள்...

நம்ம ஷாலுக்கு யாரை போடலாம்னு
உங்க கற்பனைல வந்ததை ....வரலானாலும் வரவெச்சு சொல்லுங்க பாப்போம்..
Superb Hari..semma கலக்கல் writing... தாறு மாறு தக்காளி சோறு...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top