• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Latest Episode Sokkattan paarvai - 20

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
12,640
Likes
33,498
Points
589
Location
Tamilnadu
#1
ஹாய் மக்களே ...எல்லாரும் நலமா !! என்னடா இவ திடீன்னு காணாம போயிட்டு ஆடி அசைஞ்சு வந்து நலமான்னு கேட்டு நக்கல் பண்ணறான்னு தப்பா நினைக்காதீங்க பா . நடுல என்னோட அலைபேசி கொலை மோடுக்கு போயிடுச்சு . அதான் , ஃபோன் டெட் ஆகிடுச்சு . அதுனால என்ன லேப்டாப் நல்லா தான இருந்திருக்கும்னு கேக்கலாம் ..தப்பில்லை .. அது நலமா என்னோட வீட்ல இருந்துச்சு . நான் தான் கொஞ்சம் வெளியூர் போயிட்டேன் ஆடிட் வேலையா ...

இதெல்லாம் காரணமா சொல்லி ud போடாம இருந்தது தப்பு தான் . மன்னிச்சூ ...எனக்குமே விட்டு விட்டு போடறதுல உடன்பாடு இல்லை . இதுவே கடைசி முறையா இருக்கும் நான் இப்படி மன்னிப்பு கேட்கறதுல . தொடர்ச்சியா வாரத்துக்கு இனிமே 2 ud போட்டு சீக்கிரமே கதையை முடிப்போம் ...

கத்தை கத்தையா கதை படிக்கணும் . 2 வாரமா வரவே இல்லை . உள்பெட்டியில் , வெட்டவெளியில் தேடிய அனைவரின் அன்புக்கும் நன்றி . கோச்சுக்காம இந்த தடவை மட்டும் ரீ- கால் பண்ணி படிங்க தோழமைகளே .. இனிமே மிஸ் பண்ணாம மிஸ். Perfect மாதிரி வருவேன் .

அடுத்த ud இதோ... இது வராக நதிக்கரையோரம் ஒரு சொக்கட்டான் பார்வையின் தொடர்ச்சி .. அதுக்கு ரிப்ளை பண்ண முடியல . ஆனா , கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன் . காவ்யாவும் சொன்னா என்ன நடந்துச்சு கமெண்ட்லன்னு ... கமெண்ட் , லைக்ஸ் போட்ட அனைவர்க்கும் நன்றிகள் பல பல ... தனியா இது நாள் வரைக்கும் எல்லாரையும் சமாளிச்ச என் டார்லிங் காவ்யாவிற்கு தனி லவ்???...
 
Last edited:

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
12,640
Likes
33,498
Points
589
Location
Tamilnadu
#2
காரில் மெல்லிசை மயக்க , அருகில் அமர்ந்திருந்தவள் அதற்கும் மேல் கிருஷ்ஷை சோதித்தாள்.

மறந்தும் அவனின் புறம் திரும்பாமல் வெளியே ஏதோ வேடிக்கை பார்த்தபடியே வந்தாள் வைஷாலி .

கார்த்தியின் திருமணத்தில் அனைவருக்கும் முன்பு, வைஷாலியை மனைவி என்று சொல்லி பல்பு வாங்கியிருந்தான் கிருஷ்.

அதன்பின்னர், இவளைத்தான் மணப்பேன் என்று தைரியமாகக் கூறியவனை அதற்குப் பின்னர் தைரியமாக எதிர்கொள்ள அவளால் இயலவில்லை .

அவளின் நிலை உணர்ந்த கிருஷ்ஷும் அவளின் போக்கிலேயே விட்டான்.

ஆனால், மனம் முழுவதும் மகிழ்ச்சியே நிரம்பியிருந்தது. வைஷாலியோ, அவன் கூறியது உண்மையா இல்லை சமாளிப்பா என்று புரியாமல் இருந்தாள் .

அதைக் குறித்து அவனிடம் வெளிப்படையாக கேட்கவா முடியும்? கேட்டால் தான் சாதகமான பதில் கூறிவிடுவானா??

ஆக மொத்தம், வைஷாலி அவனின் எண்ணத்தை உணர்ந்து கொள்ளத் துடித்தாள் .

"மிஸ்.வைஷாலி , உங்க வீடு எந்த ஏரியா ? சொன்னா ட்ராப் பண்ணிடறேன் "

குறும்புடன் சொன்ன கிருஷ்ஷை திரும்பி முறைத்தாள் வைஷாலி .

கிருஷ் இப்பொழுது வாய் விட்டு சிரிக்க , அப்பொழுதே அவனின் புறம் திரும்பியதை உணர்ந்தவள் படக்கென மறுபடியும் கழுத்தைத் திருப்பினாள் .


"சரி, அப்போ நம்ம வீட்டுக்கே போகலாமா ? " அவனின் கேள்விக்கு பதில் சொல்ல அவளால் இயலவில்லை .

நம்ம வீடு என்று அவன் சொன்னதிலேயே அவள் மனம் நின்றது .

"பேசாமலே இருந்தா என்ன அர்த்தம் ?"

"என் வீடு உங்களுக்குத் தெரியும்னு அர்த்தம் "

வைஷாலி கூறிய தொனியில் அவன் மேலும் சிரித்தான் .

"பார்த்து, பல்லு சுளுக்கிக்கப் போகுது "

என்று அவள் கூற ,

"நீ திரும்பு, கழுத்து சுளுக்கிக்கப் போகுது"

என்ற கிருஷ் அதன் பின்னர் அவள் புறம் திரும்பவே இல்லை.

எதுக்கு அனலடிக்கும்போது புனலை எடுத்து ஊதணும் ?

சற்று நேரம் கழித்து , "நான் ஒன்னு கேட்டா உண்மையான பதில் சொல்லுவீங்களா ? " என்று வைஷாலி தயங்கி தயங்கிக் கேட்டாள் .

அதிலேயே அவளின் கேள்வி என்னவாக இருக்குமென்று அவன் ஊகித்தான் .

"ஊருக்கே சொன்னதை உன்கிட்டயும் உரிமையா சொல்வேன். ஆனா, அதுக்கான நேரம் இன்னும் வரலை ஷாலு . அதுக்குள்ள உன் மனசையும் நீ புரிஞ்சுக்கோ "

ஒரு முறை அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் , அவள் பதிலுக்குப் புன்னகைக்கவும் கவனத்தை சாலையில் திருப்பினான் .

வீடு வரும் வரையில் அமைதியாக அவரவர் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தனர் இருவரும் .

இறங்கும்போது , சின்ன தலையசைப்புடன் அவள் விடைபெற கிருஷ்ஷோ அதைக் கூட சரிவர கவனிக்காமல் வண்டியைக் கிளப்பினான் .

காரணம் , அங்கே வாயிலில் நின்றுகொண்டிருந்த மஹேந்திரன்.

சும்மாவே பழைய நினைவுகளின் தாக்கம் இருக்கும் .

பிரகாஷ் வேறு அவன்தான் கிருஷ் என்பதுபோல் சொதப்பி வைத்திருந்தானே...

"என்னம்மா இது? கிருஷ் எதுக்கு இப்படி வேகமா போறாரு "

யோசனையுடன் மஹேந்திரன் கேட்க ,

"தெரியலையே பா. சரி, வாங்க உள்ள போகலாம் " என்ற வைஷாலியும் அவனின் திடீர் வேகத்தைக் கண்டு முழித்தாள் .

மறுநாள் காலையில் அலுவலகம் வந்த கிருஷ் , தனக்கு முன்பாகவே வந்து காத்திருந்த ரஞ்சித்தைக் கண்டு மனதில் புன்னகைத்துக் கொண்டான் .

ரிசப்ஷனிலேயே அமர வைக்கப்பட்டிருந்த ரஞ்சித் , இவனைக் கண்டதும் வேகமாக எழுந்து அருகில் வர , வேண்டுமென்றே அலட்சியப் படுத்தி அவனைக் கடந்து சென்றான் கிருஷ் .

போயும் போயும் இவனிடமா வந்து கை கட்டி நிற்க வேண்டும் என்ற எண்ணமே ரஞ்சித்தை எரிச்சலுற வைத்தது .

போதாக்குறைக்கு ரிசப்ஷனில் இருந்த பெண் இவனை ஏளனப் பார்வை பார்க்க , அதிலே இன்னும் பற்றி எரிந்தது ரஞ்சித்தின் மனம் .

அப்பொழுது அவனின் ஃபோன் ஒலிக்க , அதே வேகத்துடன் அழைப்பை எடுத்தான் ரஞ்சித் .
 
Last edited:

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
12,640
Likes
33,498
Points
589
Location
Tamilnadu
#3
"இன்னும் ஒரு நிமிஷத்துக்குள்ள என் கேபினுக்கு வா"

என்று அவனின் பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்துவிட்டான் கிருஷ் .

ஒட்டுமொத்தக் குரோதமும் கும்மியடிக்க , ரஞ்சித் வேகமாக சென்றான் .

கதவைக் கூடத் தட்டாமல் உள்ளே வந்த ரஞ்சித்தைக் கண்ட கிருஷ் ,

"இப்ப ஒன் மினிட் அண்ட் டூ செகண்டஸ். வெளிய போ.நான் சொல்றப்போ கரெக்ட்டா திரும்ப வா . வரும்போது கதவைத் தட்டிட்டு வா.


இல்லன்னா திரும்ப வெளிய போக வேண்டி இருக்கும் "

என்று சொல்லிவிட்டுத் தன் வேலையை கவனிக்கத் துவங்கினான் .

" டேய் , சாவடிச்சிடுவேன் பாத்துக்கோ . என்னடா ஆட்டிட்யூட் காட்டறியா ?"

" நீ லேட் பண்ணற ஒவ்வொரு செகண்டும் உனக்குத்தான் தம்பி லாஸ் "

அவனைப் பாராமலேயே கூறிய கிருஷ்ஷை இயலாமையுடன் நோக்கியவன் இறுக்கத்துடன் வெளியேறினான் .

அடுத்த நொடியே ரஞ்சித்தை அழைத்த கிருஷ் ,

"த்ரீ செகண்டஸ்." என்று சொல்லிவிட்டு ரஞ்சித்தை சோதித்தான் .

இம்முறை சரியாக உள்ளே வந்துவிட்டான்
ரஞ்சித் .


மெலிதாகப் புன்னகைத்த கிருஷ் , கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் .

ரஞ்சித் உட்கார ஒரு நாற்காலி கூட போடப்படவில்லை . சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த ரஞ்சித்திடம் ,

"எதுக்கு என்னைப் பார்க்க வந்த?"

டேபிளின் மேல் கையை ஊன்றியபடி நேராக கிருஷ்ஷை முறைத்த ரஞ்சித் ,

"ரொம்ப அவமானப்படுத்த நினைக்கற டா நீ . என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாதா?"

உறுமலாய் வினவ , அவனின் செய்கையை ரசித்தபடியே பின்னால் நன்கு சாய்ந்து அமர்ந்த கிருஷ் .

"ரொம்ப சூடா இருக்க போல . ஒரு சோடா சொல்லவா ! " என்று சிரித்தான் .

கண்களை இறுக மூடி , கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தான் ரஞ்சித் .

ஆனால் முடிந்தால் தானே. அவனை மேலும் படுத்தி எடுக்காமல் , ஒருவன் நாற்காலி போட வேண்டா வெறுப்பாக அதில் அமர்ந்தான் ரஞ்சித்.

"சரி , இப்ப நம்ம ஒரு கேம் ஆடலாம் . நீ வின் பண்ணிட்டா இனிமே உன் வழில நான் வர மாட்டேன் .

நான் வின் பண்ணிட்டா உனக்கு வேற வழியே இல்லாம பண்ணிடுவேன் . டீலா !!"

கூர்மையான பார்வையை வீசிய கிருஷ்ஷின் எண்ணப்போக்கை உணர முடியாமல் தானாகத் தலையை ஆட்டினான் ரஞ்சித் .

அருகே இருந்த பெல்லை கிருஷ் அழுத்தியதும் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து ஒருவன் வைத்துவிட்டு சென்றான் .

"ஓபன் பண்ணு" என்று சொல்லிவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்.

ரஞ்சித் அதைத் திறந்து உள்ளே இருந்து அவர்கள் விளையாடப் போகும் ஆட்டத்தை எடுத்தான் .

"லூடோ வா ?"

ரஞ்சித் கேட்க ,

"லூடோ தான். ஆனா கொஞ்சம் வேற மாதிரி ஆடப் போறோம் "

என்று கிருஷ் புன்னகைத்தான் .

"இப்ப இது ரொம்ப முக்கியமா உனக்கு ? நான் எவ்ளோ பெரிய பிரச்சனைல இருக்கேன் .

நீ என்ன காமெடி பண்ணிட்டு இருக்க . வெட்டியா விளையாடவா நான் இங்க வந்தேன் ?"

என்று ரஞ்சித் பொங்கினான் .

" லிசன் ரஞ்சித் . உன் பிரச்சனைய சரி பண்ணத்தான் இந்த கேம் . சொல்றபடி பண்ணு . இல்லன்னா உனக்குத்தான் கஷ்டம் "

பின்னந்தலையைக் கோதியபடியே கிருஷ் கூறினான்.

" சரி , இப்ப என்னதான் பண்ணனும் . சொல்லித்தொலை"

எரிச்சலுடன் மொழிந்த ரஞ்சித்தை ஏளனப் புன்னகையுடன் நோக்கிய
கிருஷ் ,


" கேட்டுக்கோ ... எப்பவும் போல தான் இந்த லூடோவோட ரூல்ஸ் . ஆனா ,அதுல ஒரு செக் இருக்கு .

உன்னோட ஒரு காய நான் வெட்டுனா , அடுத்த பத்து நிமிஷத்துல உன்னோட பேங்க் அக்கௌன்ட்ல பல லட்சம் பிளாக் மணி டெபாசிட் ஆகும் .

அடுத்த காய வெட்டுனா , உன் வீட்ல மூட்டை மூட்டையா தங்கம் , வைரம் எல்லாம் கூரையை பிச்சிட்டு கொட்டும் .

அடுத்த காய்க்கு உன் ஆளுங்க எல்லாம் தானாவே வந்து நீ பக்கா கேடின்னு பேட்டி தருவாங்க .

நாலாவது காய்க்கு நீ மொத்தமா காலி . கேம் ஓவர் "

என்று கூற , அவனை நம்பாத பார்வை பார்த்தான் ரஞ்சித் .

ஆனாலும் , உண்மையாகவும் இருக்குமோ என்று மனதின் ஓரத்தில் பயந்தான் .

காரணம் , ஏற்கனவே கிருஷ் அவனை பந்தாடிக் கொண்டு தான் இருந்தான் .

வைஷாலியால் முன்பே நடுத்தெருவுக்கு வந்திருந்த ரஞ்சித் , இப்பொழுது தான் மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருந்தான் .

ஆனால் , இப்பொழுதெல்லாம் அவன் யாரிடம் டீலிங் பேசினாலும் சில நாட்களுக்குள் அவனை ஏமாற்றி நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் சென்றுவிடுகின்றனர் .

எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருந்தாலும் , அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை .

ஆதாரம் இல்லாத சேதாரம் அவனுக்கு ஏற்பட்டது .

கருப்பு ஆடு அவனுடனே இருக்கின்றது . ஆனால் , யார் அது என்று தான் அவனுக்குப் புரியவில்லை .

சமீபத்தில் தான் இதனைத்திற்கும் பின்னால் கிருஷ்ஷின் கைவண்ணம் இருப்பதைக் கண்டுபிடித்தான் .

ஆனால் சோதனையே அதன் பின்னர் தான். முன்பின் தெரியாத யாரோ அவனின் பிசினஸ் ரகசியங்களை வெளியிடத் துவங்கினர் .

தினமும் , குறிப்பிட்டத் தொகை அவனின் கணக்கிலிருந்து குறையத் துவங்கியது .

இதை ஆராயப் போனால் , போலி ஆவணங்கள் வைத்துப் பல கோடியில் சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்வதாக இவனைப் பற்றி வதந்திகள் உலவின .

திணறிப் போனான் ரஞ்சித்.

கடைசியில் , எந்தப் பக்கம் செல்வது என்றே புரியாமல் ரஞ்சித் கிருஷ்ஷிடமே வந்து சேர்ந்தான் .

இங்கே பார்த்தால் , மேலும் மேலும் கிருஷ் அவனை சோதிக்க, ரஞ்சித் மூளை மரத்துப் போனான் .

" எதுக்கு டா இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க ? நேருக்கு நேர் மோதி பாருடா . இப்படி யாரையோ விட்டு அடிக்கற ?? "

ரஞ்சித் ஆற்றாமையில் வெடித்தான் .

" ஆஹா பெரிய வீரன் இவரு , விழுப்புண் விழாம பார்த்துக்கறாரு .

அவ்ளோ தைரியம் இருந்தா எதுக்கு என் ஷாலுவை சாகடிக்கப் பார்த்துட்டு ஓடுன"

கிருஷ் எழுந்து நின்று டேபிளின் மேல் ஓங்கி குத்தினான் . அவன் கூறியதைக் கேட்டு ரஞ்சித் அதிர்ச்சியில் உறைந்தான் .

"உனக்கு .. எப்படி !! "

வார்த்தைகள் வராமல் சதி செய்ய, கோபத்தில் பளாரென ரஞ்சித்தை அறை விட்டான் கிருஷ் .

"உங்க சங்காத்தமே வேணாம்னு தான இருக்கோம் நாங்க . அப்பறமும் என்னத்துக்கு நீ விடாம தொல்லை பண்ணற .

சரி , உன் வெறி அடங்கணும்னா என்கூட மோது . பொண்ணுங்கக் கிட்ட கேவலமா நடந்துக்கறியே, அசிங்கமா இல்லையா உனக்கு ??"

" அது ஏதோ அவசரப்பட்டு பண்ணிட்டேன் . இனிமே இந்தப் பக்கமே வர மாட்டேன் ராகவ் . எல்லாத்தையும் செட்டில் பண்ணிடலாம் "

உத்தம வேடமிட்டான் ரஞ்சித் .

பக்கென சிரித்த கிருஷ் ,
"நீ ஷாலுவையும் என்னையும் பிரிக்கப் பார்த்தப்போவே உன்னை கிழிச்சு தொங்க விட்டிருக்கணும் . தப்பு பண்ணிட்டேன்டா "
என்க ,


"அதையெல்லாம் எதுக்கு இப்ப பேசற. நான் தான் இனிமே உன் பக்கமே வரலைன்னு சொல்றேனே."

எப்படி இருந்த ரஞ்சித் , இப்படிக் கெஞ்சுவதைப் பார்க்க கிருஷ்ஷிர்கே பாவமாகத் தான் இருந்தது.

ஆனால், இது உயிர் பிச்சை கேட்கும் மானாக இல்லாமல் , குட்டையை குழப்பும் குள்ளநரியாக இருந்தால் !!

" அடி வாங்குனா திருப்பி அடிக்கணும்டா. அதுதான் நம்ம பாலிசி.லெட்ஸ் பிளே ரஞ்சித் . நீ வின் பண்ணிடு , நான் விடறேன் உன்னை. "

இரு கைகளையும் பரபரவெனத் தேய்த்த கிருஷ் , ஒரு துள்ளலுடன் அமர்ந்தான் .

இது ஒன்றும் சகுனியின் சொக்கட்டான் அல்ல , தாயம் சொன்னபடி கேட்க .

விளையாட்டுத் தனமாக விளையாடுவதற்கும் , விளையாடிப் பார்க்க விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு .

காலத்தின் கயிற்றால் கட்டப்பட்ட எவரும் , அதைத் தானே அவிழ்க்க முயன்றால் , மேலும் சிக்கிக் கொள்வர் .

அதைப் போலவே தான் இதுவும் .

காலத்தின் போக்கில் செல்லாமல், சும்மா இருந்த கயிறைக் குறுக்கே இழுத்தால் ??

காலம் தான் பதிலையும் சொல்லும்.

சொக்கட்டான் பார்வை தொடரும் ...
 
Last edited:

Advertisements

Advertisement

Latest updates

Latest Episodes

Top