• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai - 25(final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆ?.... எனக்கும் மட்டைப்பந்துக்கும் ரொம்ப தூரம்.... ஆனால் இந்த முறை ஐபிஎல் நானும் பார்க்கிறேன்.....வேறு வழியின்றி.....
???.. அடிச்சிக்கோ டா.. எனக்கும் ரொம்ப தூரம் தான்.. ???
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
" ஸ்டாப் கேஷு . கொஞ்ச நேரம் ஓடாம இரு . மம்மி ரெடி ஆகணும்ல "

தங்களின் அறையினுள்ளே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஐந்து வயது மகனிடம் வைஷாலி கெஞ்சிக் கொண்டிருந்தாள் .

ஆனால் , அவனோ கேட்டால் தானே ! மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவனிடம் அமைதியாக இருக்க சொன்னால் நடக்குமா என்ன ?

" மம்மி , நான் டாடியைப் போய் கூட்டிட்டு வரேன் "

என்று அவன் ஒரே ஓட்டமாக ஓட ,

" என் நேரம் , இன்னிக்கு கிளம்புன மாதிரி தான் . அப்பாவும் பையனும் என்னை அலற விடறதுலையே குறியா இருப்பாங்களே !! "

வைஷாலி வேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தது அவளது மகனின் பள்ளி ஆண்டு விழாவிற்கே. இன்று ஒரு டான்ஸ் கூட ஆடப் போகின்றான்.

எல். கே. ஜியை நல்லபடியாக முடித்துவிட்டதற்கு அவன் செய்த அட்டகாசங்கள் இருக்கே , அதை நினைத்து அவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

" ஷாலு பேபி , இன்னுமா கிளம்பாம இருக்க ! இட்ஸ் கெட்டிங் லேட் . ஹெல்ப் பண்ணவா!!"

கதவை சாத்தியபடி கிருஷ் உள்ளே வர ,

" நீங்க பேசாம வெளிய நில்லுங்க . நானே வரேன் . அப்பறம் , கேஷு கூடவே இருங்க கிருஷ் . லாஸ்ட் மினிட்ல டயலாக் மறந்து போயிட் போகுது அவனுக்கு . இவ்ளோ ஆட்டம் போட்டா என்ன பண்ணறது ?? "

வைஷாலி ஒரு காதில் கம்மல் மாட்டிக் கொண்டே கொஞ்சம் பதட்டமுடன் கூறினாள்.

" ஹ்ம்ம் , அவன் என் பையன் ஷாலு . எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட் . நீ கூலா இரு "

என்றவாறே அவளின் இன்னொரு காதில் கம்மல் மாட்டி விட முனைந்தான் .

அப்பொழுது கதவை யாரோ படபடவென தட்ட , கிருஷ் கடுப்பானான்.

" டேய் , என்னை ரொமான்ஸ் பண்ண விடுங்கடா இப்பவாச்சும் "

ஆனால் , காரியத்தில் கண்ணாக இருக்கும் கரடி சிவ பூஜையைக் கருத்தில் கொள்ளுமா என்ன !!

" ராகவ் , அல்ரெடி லேட் ஆயிடுச்சு. நீ இந்த வாயிலையே வடை சுடறது , கண்ணுலயே கடலை போடறது எல்லாம் அப்பறமா வெச்சுக்கோ "

என்ற கரடி வேறு யாராக இருக்க முடியும் ? எல்லாம் சூர்யா தான் .

சிரித்தபடியே கதவைத் திறந்த வைஷாலி ,

" வீ ஆர் ரெடி . போகலாமா ?? "

என்க , இரண்டு கார்களில் பள்ளியை இரண்டாக்கும் கும்பல் கிளம்பியது.

ஒரு காரில் கிருஷ் , வைஷாலி , சூர்யா , தர்ஷினி ஆகியோர் தத்தம் மகன்களுடன் பயணிக்க , பிரகாஷ் , சிவசங்கரி , மஹேந்திரன் , சத்யவதி ஆகியோர் இன்னொரு காரிலும் வந்தனர்.

" என்னடா உன் தம்பியை என்கூட பயப்படாம பேச சொல்லு . உண்மையை மறைச்சீங்க தான் ரெண்டு பேரும் . அதுக்காக , என்ன செய்யறது ? ஷாலுவைத் தள்ளி விட்ட ஜகதீஷையே மன்னிச்சு விட்டாச்சு . இவனுக்கென்ன டா ! "

என்று கிருஷ் சூர்யாவிடம் எடுத்து சொல்ல ,

" நானும் சொல்லிட்டேன் ராகவ் . அவன் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணறான் . கொஞ்ச நாள்ல சரி ஆயிடும் . உன் PA தான ? எங்க போயிட போறான் சொல்லு "

சூர்யாவும் பிரகாஷின் மனநிலையை எடுத்துக் கூறினான். இவர்கள் பேசியபடியே வர , பள்ளி வளாகம் வந்துவிட்டது.
MSD matriculation பள்ளியின் நுழைவு வாயிலில் கார் நின்றதுமே இறங்கி ஓடி சென்ற தர்ஷினியின் ஐந்து வயது மகன் ரக்ஷித் அங்கிருந்த அவன் வயதையொத்த சிறுமியிடம் , சிரித்தபடி பேசத் துவங்க , மற்றவர்கள் வந்து கிளம்பும்படி கூறவும் மனமே இல்லாமல் கிளம்பினான் .


பின்னர், மெல்ல கேஷுவிடம்
" ஷிவானி இன்னும் வரலையாமா கேஷு "
என்று வருத்தத்துடன் கூறினான்.


" ஷீ வில் கம் "
என்று உறுதியுடன் பெரிய மனுஷத் தோரணையில் கேஷு அதற்குப் பதில் கூறினான்.


அந்த ஷிவானி என்பவள் கேஷுவிற்கு ஜோடியாக அன்றைய டான்ஸ்ஸில் ஆடப் போகும் சிறுமி .

நேற்று கேஷுவிற்கும் அவளுக்கும் சிறு உள்நாட்டுப் பூசல் . இவன் எதேச்சையாக டைரி மில்க் தந்திருக்க , அவளோ

" இதெல்லாம் லவ் பண்ணா தான தரணும்? . நீ பேட் பாய் . இரு மிஸ் கிட்ட சொல்லித் தரேன்"

என்று பொங்கிவிட்டு முறைத்துக் கொண்டே வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தாள்.

ஒரே வகுப்பில் படிக்கும் ரக்ஷித்தும் , கேஷுவும் இதைக் குறித்தே நேற்று முழுவதும் அலசி , காதலர்கள் தான் டைரி மில்க் தந்து கொள்வார்கள் என்று கண்டுபிடித்தனர் .

ஆனால் , ரக்ஷித்திற்கு ஷிவானி வரப் போவதில்லை என்று தோன்ற , கேஷுவோ அவள் நிச்சயம் வருவாள் என்று நம்பினான் .

சிறு குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்னை தான் எவ்வளவு பெரிது !!!

விழா ஆரம்பித்து இனிதே நடந்து கொண்டிருக்க , பேக் ஸ்டேஜில் இந்த இரண்டு வாண்டுகளும் கண்களை அலைபாய விட்டுக் கொண்டே இருந்தனர்.

அப்பொழுது அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி என்ற சிறுமி தேவதையென வந்தாள் .

வந்தவள் கைகளைப் பார்த்தால் !! டைரி மில்க் .

" இந்தா , நீ தந்ததுக்கு நானும் திருப்பி தந்தா லவ் வாபஸ் தான "

என்று லாஜிக் வேறு பேசினாள் . உடனே இருவரும் கள்ளமில்லாமல் சிரித்தவாறே கையைக் குலுக்கிக் கொண்டனர்.

அப்பொழுது ,
" லெட்ஸ் வெல்கம் கேஷவ் கிருஷ்ணா அண்ட் ஷிவானி ராஜகோபால் நவ் டு பெர்ஃபார்ம் அ லவ்லி டான்ஸ் "


என்று ஒரு மாணவி அறிவிக்க , பலத்த கைதட்டலுடன் இருவரும் அரங்கினுள் நுழைந்தனர்.

" அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா"


என்ற பாடல் ஒலிக்க , இரு குழந்தைகளும் ரசிக்கும்படியான சுட்டித்தனத்துடன் ஆடினர். வைஷாலியும் ஆவலுடன் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் .

அப்பொழுது , ஷிவானி கால் தடுக்கி கீழே விழ , அதை எதிர்பாராத அவளின் கையைப் பிடித்திருந்த கேஷுவும் அவள் மேலே விழுந்தான் .

பார்வையாளர்கள் அனைவரும் ஒரு வித சலசலப்புடன் இருக்க , குழந்தைகளை மேடையிலிருந்து ஆசிரியை அழைத்து சென்றுவிட்டார்.
உடனே அடுத்த நிகழ்வு ஆரம்பிக்க , வைஷாலி தான் முந்தைய நிகழ்வுகளுக்கு சென்றிருந்தாள்.


Voc பார்க்கில் அவர்களின் முதல் சந்திப்பில் ராகவ் அவள் மீது விழுந்தது அவளுக்கு அப்படியே கண்முன் காட்சியாய் விரிந்தது.

கண்களில் கனவு மிதக்க , அவ்வாறே நின்றிருந்த வைஷாலியை கிருஷ் உலுக்கி என்னவென்று கேட்க , அவள் திரும்பி அவனைப் பார்த்த பார்வையில் அவளுக்கு நினைவு திரும்பியதை உணர்ந்து அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான்.

" ஷாலு !!!!"

என்று ஆச்சரியத்தில் அவன் கூவ , மெல்ல அவன் கைகளைக் காதலுடன் பற்றிக் கொண்டாள் வைஷாலி.

விஷயம் தெரிந்ததும் அருகில் இருந்த சூர்யா முதலானோரும் பூரிப்படைய , அந்த இடமே ஆனந்தத்தில் அமிழ்ந்தது .

விழா முடிந்ததும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு உற்சாகத்துடன் சென்றனர் .

" ஆமா , ஸ்டார்டிங்ல என்னை ரொம்ப இரிட்டேட் பண்ணிட்டே இருந்திருக்க நீ ?? ஆனா அதையெல்லாம் பெருசா சொல்லாம , நம்ம ரொமான்ஸ் அப்பிடிங்கற பேருல பண்ணதை மட்டும் அடிஷனல் ஷீட் வாங்கி கதை அடிச்சிருக்க . இதுக்கெல்லாம் உன்னை ! "

என்று காரில் அவனை வைஷாலி மொத்த ,
" நீயே அதை மறந்துட்ட ஷாலு . அப்பறம் அதை நியாபகப் படுத்தி , உன்னை மறுபடி தாஜா பண்ணறதுக்கு ஒரு கஜா புயலையே சமளிச்சுடலாம் தெரியுமா !.அதான் நம்ம ரொமான்டிக் சைட மட்டும் பெரிய சைஸ்ல சொல்லி உன்னை கவுக்கலாம்னு நினைச்சேன் "


அவளின் மொத்தல்களையும் , பின்னோடு கலாய்த்துக் கொண்டே வந்தவர்களையும் ஒற்றை சிரிப்பால் சமாளித்தான் கிருஷ் .

கூடவே நம்மையும் தான் .

இவர்களின் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்து நிற்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நாமும் விடை பெறுவோம்.

சொக்கட்டான் ஆடும்போது யார் யாரைக் குறி வைக்கின்றனர் என்று எளிதில் கணிக்க இயலாது . நம் வாழ்வும் சொக்கட்டானை ஒத்ததே. எதை நோக்கி ஓடுகிறோம் என்றோ , எதிலிருந்து தப்பி ஓடுகிறோம் என்றோ புரியாமல் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க இயலாது .

சொக்கட்டானின் பார்வையைப் பொறுத்த மட்டில் , திருப்பங்கள் நிறைந்த தருணங்களைத் திறமையுடன் கையாண்டால் வாழ்வு தித்திக்கும் !

சொக்கட்டான் பார்வை முற்றும்...


Nice story superb ending
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
????wow semmad ....first unku congrats d darling ......
Startingla irunthu ragav ...krish ...nu rendu per irukkanganu kulapivittu avaluku maranthuduchinu enga bp ah ethi ...heroine ah renda kaamicha paravala nee herovoda pa nu surya ,prqkash rendu per kaamichi egapatta kalatta panna ??athum nmba surya hahaha ivana pathi slanumna siripu than varuthu .....

Rajasekar ...ranjith ....na ninaichamaari thandana kuduthuta thappu panra evana oruthanuku ellarmunnadiyum thandana kuduththa pothum aduthu antha thappa panna mathavan bayapaduvan ....ana athu nmba naatla kastam rajasekar ladt ah slra maathiri karunai nra perla niraya per escape aaguraanga ....

Aduthu rajasekar kana thandana athu ranjith ah vida mosam ...petha ponney aruvaruppa irukkunu slaratha vida oru appaku kevalamana thandana ethuva irukum ...????semma lines ellam .....

Ama harini darling ithulam neya ezhuthuna ??thidirnu imbuttu thathuvatha allividra ...enga d vachirntha ithalam ithana naalla ...

Kadasiya ennoda chlooo ragav???krishna .....shalu??baby .....ivan kedinrathu enku eppavo terium avaluku niyabagam illanavudaney sir love story ah alli vitrukaaru pola ???ne embuttu kadi vaangunanu engluku terium chloo??...


வாழ்த்துக்கள் harini ma rmba azhaga unnoda sokkattan paarvaiyai engaluku kuduthuta ....unnoda aduththa story eppo ....ithulaey part two edukka poriya darli?????
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
வெற்றிகரமாக முடுச்சுட்டா ஹரிமா ....(y)(y)(y)
lovely அண்ட் ஆக்ஷன் திரில்லர் மா ..:eek::eek:
ரஞ்சித் யூ deserve it ...:alien::alien::alien:
இப்படி பண்ணித்தான் திருத்துவாங்க னு கேவலமான சொசைட்டி ல இருக்கோம்...
அப்படி ஒரு சூழ்நிலையை உருவாய்க்கி வெச்சுருக்கோம் ..
தப்பு பண்ண தண்டிக்க யாரும் இல்லை னு இப்படி பன்றாங்க ..அதிகாரிங்க ஒழுங்கா அவங்க வேலைய செஞ்சுருந்த இவ்வோளோ பிரச்சனைகள் இருந்தருக்காது......:sneaky::sneaky:
ராஜசேகர் உங்களுக்கு இதுக்கு மேல வேற அசிங்கம் இல்லை ...
ஐய் ஷாலுமா நியாபகம் வந்துருச்சு....:love::love:
குட்டி க்ரிஷ் awesome ...:whistle::whistle:
ஹபிப்ப்ய எண்டிங் சொக்கட்டான் பார்வையில் சொக்கி போய் நிக்கிறோம் டியர் ....:giggle::giggle:
 




Vijaya RS

அமைச்சர்
Joined
Mar 13, 2018
Messages
2,327
Reaction score
4,894
Location
Singapore
Congratulations for completing your first story. Well written with lots of twists and turns. All the best to you. Take care Harini.
 




Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
First kathai arumaiya mudicha Harini chellathukku vaalthukal ????.
Ranjith, Rajasekar Oda mudivu sariyana ondru...... Krish, Shalu lovely characters..........
Super and very nice novel laddu kutty.???????????.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகா முடிச்சிட்ட ஹரிணிம்மா.... வார்த்தைகளில் எதுகை மோனையெல்லாம் சும்மா துள்ளி விளையாடுது ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top