• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
சென்ற ud க்கு லைக்ஸ் அண்ட்
கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல!!!!

எனக்கும் author போஸ்ட் குடுத்து
Promote பண்ணிட்டாங்க.. அதுக்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.
சஷிஜிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்த வாய்ப்பு தந்து
ஊக்குவிக்கறதுக்கு.

இனிமே ஜாலியா
படிக்க வரவேற்கிறேன்...
எல்லா கேள்விகளுக்கும் விடை
குடுத்து இடையில் ஒரே ஒரு
கேள்வி மட்டும் வைத்து அனைவரும் பயணிக்கலாம்.

உங்க எல்லாருக்கும் இன்னும்
3 ud க்கு அப்பறம் சொல்ல
நினைத்த உண்மைகளை
இப்பவே பிரேக் பண்ணிட்டேன்.
உங்க டவுட் எல்லாம் பாத்து எனக்கே பல நேரம் ஆச்சரியமா
போகுது. மூளைக்கு வேலை
இல்லாம எப்படி??? அதான்
கொஞ்ச நாள் போக்கு காட்டுனேன்.

உங்களுக்கு எல்லாம் மூளை பயங்கரமா வேலை செய்யவும் ,
நானும் பிளான் மாத்திட்டேன்.

சோ , பீ ஹாப்பி ...நெக்ஸ்ட்
ud க்கு போலாம்.

images (2).jpegimages (1).jpeg
images.jpeg

வேகமாக வந்த ஷாலி , தன் முன்னே வந்த ராஜஷேகரைப் பார்த்ததும்
நின்றாள்.

"என்னம்மா பண்ற இங்க ? எதுக்கு இவ்ளோ கோவமா வர?"

" அப்பா " !!!!

அவளின் அந்த ஒற்றை அழைப்பிலே ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டார் அவர் .

" சொல்லுடா. யாரு என்ன சொன்னாங்க?"

அவள் ஏதும் சொல்லாமல் ,
" வாங்கப்பா. போகலாம்." என்று நடக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுதான் சற்று தொலைவில் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் ராகவைக் கண்டார். கூடவே ஒரு பெண்.

'யாராய் இருக்கும்'

யோசனையின் ஊடே ஷாலினியுடன் சென்றுவிட்டார் ராஜஷேகர்.

அன்று இரவு அவர்களின் வீட்டில் ,
"சாப்பிட வாடி. எவ்ளோ தடவை கூப்பிடணும். உனக்கு ஒரு வேலையும் இங்க இல்லை. எனக்கு எக்கச்சக்க வேலை மண்டை மேல இருக்கு. உங்க ரெண்டு பேரையும் ஆரத்தி எடுத்து வர வைக்கவே என் உசுரு போகுது."

ராஜஷேகரின் மனைவி சத்யவதி கிச்சனில் கத்திக் கொண்டிருந்தார்.

"சத்யா , கொஞ்ச நேரம் அமைதியா இரேன். ஸ்டேஷன்ல தான் எப்ப பாரு பிரச்சனை. வீட்ல கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விடறியா?"

ராஜஷேகர் ஹாலில் இருந்து கத்தினார்.

"சாப்பிட வர சொல்றது உங்களுக்குப் பிரச்சனையா அப்ப இனிமே வராதீங்க. எனக்கு ஒரு வேலை மிச்சம்"

"எனக்கு சாப்பிட போடறது உனக்குப் பெரிய வேலை கணக்குல வருதா? நல்ல பொண்டாட்டி."

" நீங்க நல்ல புருஷன்னா நான் நல்ல பொண்டாட்டிதான். உங்க போலீஸ் அதிகாரத்தை வீட்ல வெச்சுக்காதீங்க. வீட்ல கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க முடிலன்னு நினைச்சா தப்பு உங்க மேல தான்."

"என்னடி விட்டா எனக்கே கீதோபதேசம் பண்ற?"

"கீதோபதேசம் கேட்கக் கூட தகுதின்னு ஒன்னு இருக்கு. நீங்க மொதல்ல அர்ஜுனனா இருக்கணும் அதுக்கு. நீங்க தான் எல்லாரையும் ஆர்டர் போட்டு அதிகாரம் பண்ற ஆளாச்சே.பணிவுக்கு மீனிங் தெரியுமா உங்களுக்கு ?"

அவள் குரலில் தெறித்த ஏளனம் , அவரைச் சொரிந்து விட

" சத்யா..."

அதற்கு மேல் என்ன சொல்லிருப்பாரோ, ஷாலினி அங்கே வந்து அவரைத் தடுத்தாள்.

"அப்பா , சாப்பிட வாங்க. அப்பறம் நீங்க ரெஸ்ட் எடுப்பீங்களாம்"

உள்ளே இருந்து வந்த சத்யவதி ,

" இதை முன்னாடியே பண்ணிருக்கலாம்தான. இங்க ஒரு சண்டை வந்திருக்காது"

என்று ஷாலினியை முறைத்தார்.

"என்னம்மா நீ , நான் குளிச்சு ஃபிரெஷ் ஆயிட்டு வரதுக்குள்ள சின்ன பசங்க மாதிரி அடிச்சுக்கிறீங்க.பேசாம ரெண்டு பேரும் இப்ப வாங்க "

என்று அவள் சென்றுவிட , அதற்கு மேல் அங்கே பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

இதுதான் ஷாலினி. அவள் பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசமாட்டர் வீட்டில்.அவ்வளவு பாசம். திருமணம் முடிந்து ஐந்து வருடம் கழித்துப் பிறந்த செல்வ மகள் ஷாலினி.

அவளுக்காக என்ன வேண்டுமானாலும் (நோட் திஸ் பாயிண்ட்)செய்வார் நம்ம கமிஷனர். இந்தக் குணமே பிற்காலத்தில் மகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கப் போவதை அறியாமல் கண்மூடித்தனமான பாசம் வைத்தார்.

பெற்றோர்கள் கண்டிப்புடன் கூடிய பாசம் தான் தன் பிள்ளைகளுக்குத் தர வேண்டும்.ஓவர் கண்டிப்பும் சரி ,ஓவர் பாசமும் சரி , இன்றைய தலைமுறையினருக்கு ஒத்து வராது.

ஆனால் நம் ஷாலினி மிகவும் ஒழுக்கமாக வளர்ந்தாள். கண்டிப்பைக் காட்டி வளர்க்கவில்லை எனினும் , பிறவி குணம்போல் நல்ல பண்பாடு , ஒழுக்கம் அவளுள் இருந்தது.

தினமும் கோவில் சென்று , விநாயகரை வழிபட்டுத் தன் நாளைத் தொடங்கும் அவள், ஒரு சாப்ட்வேர் கம்பனியின் நிர்வாக அதிகாரி. பார்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள்.
வேலை என்று வந்துவிட்டால் வெங்காயம் மாதிரி இருப்பாள்!!!

பழமொழி மாத்துன ஃபீல் வருதோ!!

நம்ம கிட்டயே சரக்கு இருக்கறப்போ எதுக்கு வெளில போய் தேடனும்...அதான் நானே கெஜட்ல மாத்திட்டேன்.வேற எங்க போய் மாத்தணும்னு தெரியல , உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க.

சரி நம்ம வெங்காயத்துக்கு வருவோம் ...
வெங்காயம் எப்படி உரிக்க உரிக்க வந்துட்டே இருக்கோ , அதே போல ஷாலினியும் எவ்ளோ வேலை இருந்தாலும் பண்ணிட்டே இருப்பா , அதைத் தவிர அவளுக்குக் கீழ இருக்கறவங்களுக்குப் பிழிய பிழிய வேலை தந்து அழவும் விடுவா.
மேட்ச் ஆகுதா..!!

வீட்ல சுட்டிப்பொண்ணு.அம்மாக்கு நிறைய ஹெல்ப் பண்ணமாட்டா , சொல்லப் போனா ஏதோ கொஞ்சம் பேருக்கு செய்வா. அதுக்கே டைம் இருக்காது. அப்பா கிட்ட கொஞ்சம் இல்ல ரொம்ப வம்பு வளர்த்துட்டே இருப்பா.

யாராச்சும் சீண்டுனா சீறுவா , பம்முனா ரொம்ப சீறுவா.அத தான் ராகவ் மேட்டர்ல பார்த்தோமே.
இப்பத்திக்கு இது போதும். போகப் போக எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம்.

பார்க்கிலேயே அமர்ந்த ராகவ் அருகில் நின்று கொண்டிருந்தாள் தச்சு.

ராகவிற்கு அவன் மனநிலையைக் கணிக்க முடியவில்லை.தான் மகிழ்ச்சியில் இருக்கிறோமா , இல்லை குழப்பத்திலா ஒன்றும் புரியவில்லை.ஆனால் ஷாலி திட்டியதில் கோபம் மட்டும் இல்லை. தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

தச்சுவிற்கோ ஒன்றும் புரியவில்லை.
' இவன் கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கறான் , இவனாவும் சொல்ல மாட்டான். எவ்ளோ நேரம் தான் நிக்கமுடியும்'

ராகவ் அருகில் அமரக்கூட மாட்டாள் தச்சு.மரியாதை கலந்த பயம். அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள்.

கொஞ்சம் இருட்டத் தொடங்கவும் தான் தச்சுவே பொறுக்காமல்
" அண்ணா போகலாமா? இருட்டுது பாரு" என்று கேட்டாள்.

"ஹ்ம்ம்" ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன் நடக்கத் துவங்கினான்.

சட்டென்று நின்றவன் ,
"அம்மா கிட்ட இதெல்லாம் சொல்லாத" என்றான். தச்சுவிற்கு இது அதிசயம்.தன்னுடன் இது கூட பேசியதில்லை அவன்.

ஆதலால் சட்டென்று குறும்பு குட்டிக்கரணம் போட ,
"இல்ல நான் சொல்லுவேன். முடிஞ்சா ஸ்டாப் பண்ணிக்கோ" என்று சிரித்தாள்.

அவளைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ,
"உனக்கு பிடிச்ச ரசமலாய் சாப்பிட போவோமா?" என்று கேட்க,

"அண்ணா"

ஆனந்தத்தில் கூவிவிட்டாள் தர்ஷினி.

உலகின் பத்தாம் அதிசயம் அன்று நிகழ்ந்தது போல் உணர்ந்தாள்.

'எவ்ளோ பெரிய டயலாக் பேசிட்டான்!!'

வெளியில் அவ்வளவாக சாப்பிட்டு அறியாத அவள் , தனக்குப் பிடித்த ரசமலாய் சாப்பிடப் போகிறாள், அதுவும் தன் அண்ணனுடன்.

' எனக்கு ரசமலாய் பிடிக்கும்னு இவனுக்குத் தெரியுமா!!!'

" போகலாமா?"

மறுபடியும் கேட்ட ராகவிடம் முடியாது என்று சொல்ல அவள் என்ன முட்டாளா. வேகவேகமாகத் தலையை ஆட்டினாள்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உள்ளே அமர்ந்திருந்தனர் அண்ணனும் தங்கையும்.ஷாலியைப் பார்த்த முதல் இப்பொழுது வரை நடந்த அனைத்தையும் கூறிவிட்டான் ராகவ்.

"அப்போ அண்ணிக்காக தான் இந்த ஊருக்கே வந்தோமா?"

ஆச்சரியமாக வினவினாள் தச்சு.

ஆம் என்பதுபோல் தலை அசைத்த ராகவ் ,

"இன்னும் நானே அவகிட்ட ஒன்னும் சொல்லல. இப்ப அம்மாகிட்ட சொன்னா , இதைப் பெருசு பண்ணி நாளைக்கே அவகூட கல்யாணம் பண்ணிடுவாங்க " என்றான்.

" அண்ணா அது தான நமக்கு வேணும்"

என்று அவள் கண்ணடித்தாள்.
"அடிங்க , இன்னிக்குப் பார்த்த தான ,மேடம் சும்மாவே பொங்கறாங்க. இதுல இந்த மாதிரி அம்மா வேற அவசரப்பட்டு ஏதாச்சும் பண்ணா என் நிலைமை அவ்ளோதான் "

அவன் கூறியதும் கலகலவென சிரித்தாள் தச்சு.

" சரி. நீ முதல்ல அண்ணிய போய் கரெக்ட் பண்ணு. நான் அம்மாகிட்ட சொல்லல"

" பிராமிஸ்?? பேச்சு மாறக்கூடாது."

" இன்னொரு ரசமலாய் பார்சல் வாங்கித்தா.சொல்ல மாட்டேன்"

" அவ்ளோதான. வாங்கிட்டா போச்சு"

" ஹை நெஜமாவா"

'இன்னும் குழந்தைத்தனம் மாறாத பெண்.இவகிட்ட எல்லாத்தையும் சொன்னதுல என் மனசு லேசாய்டுச்சு .இத்தனை நாளா இதெல்லாம் மிஸ் பண்ணிட்டேன். இனிமே கொஞ்சம் மாறனும். அப்பதான் வாழ்க்கையோட அர்த்தம் புரியும்.'

மனதில் உருவேற்றிக் கொண்டான் ராகவ்.

" நிஜமா தான் தர்ஷு வாங்கி தரேன்."

"என்ன சொன்ன தர்ஷுவா" அவள் கண்களில் நீர் கோர்த்தது.

பதட்டமடைந்த ராகவ் , "என்னாச்சு என்னாச்சு " என்க ,

சிரித்துக்கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

"ஒண்ணுமில்ல . நீ என்கிட்ட பேசவே மாட்ட. ஆனா இன்னிக்கு என்கிட்டே இவ்ளோ நேரம் பேசுன. அதுவே பெருசு. ஆனா என்னை செல்லமா வேற கூப்பிட்டு எமோஷன்ஸ
ஏத்திவிட்ட.

அதான் லைட்டா கண்ணு கேரளா பக்கம் போயிட்டு வந்துடுச்சு"

என்று அழகாய் சிரித்தாள்.

" சாரி தர்ஷு. நான் இத்தனை நாளா பணம் பணம்னு அது பின்னாடியே போயிட்டேன். எனக்குள்ள நம்ம குடும்பத்த சமூகத்தில் பெரிய இடத்துல வைக்கணும்னு வெறியே இருந்துச்சு.

அந்தாளு மூஞ்சில கரிய பூச நெனச்சேன். அதெல்லாம் பண்ணியாச்சு. ஆனாலும் குடும்பத்தோட ஒட்ட நெனக்கல. ஏன்னு புரியல எனக்கும் . இன்னிக்கு என்ன ஆச்சுன்னே தெரியல, எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டேன்."

அவன் கண்களும் கலங்க , ஆதரவாய் அவன் கைகளைப் பிடித்துக் கொண்ட தர்ஷினி,

" அண்ணா, இனிமே எல்லாம் சரி ஆயிடும்.அண்ணி வந்த வேளை. நீ ஃபீல் பண்ணாத. இப்ப பார்சல் வாங்கு. இல்லனா மம்மி கிட்ட போட்டுக்குடுத்துடுவேன்" என்று கண்சிமிட்டினாள்.

" வாலு , வாங்கி தரேன்"

சிரித்துக்கொண்டே அவள் தலையைக் கலைத்து விட்டுச் சென்றான் ராகவ். அவன் சென்ற பிறகும் தர்ஷினி நம்ப முடியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒரு பெண் வருவதால் ஆணின் வாழ்வு இப்படியும் மாறுமா!!!

ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு வேண்டிய ஆரம்பகட்ட ஆலோசனை செய்வதற்கு ஷாலு , கிருஷ்ஷைப் பார்க்கச் சென்றாள் சஞ்சுவுடன்.
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
அனைவரும் அமர்ந்து அவரவர்கள் கருத்தைக் கூற , நேற்றைய நினைவில் ஷாலு அமைதியாக இருந்தாள்.ஆனால் ஒன்றுமே நடவாததுபோல் கிருஷ் நடந்துகொண்டது அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

" ஷாலு ,வாட் அபௌட் யுவர் ஒப்பீனியன்"

கிருஷ் கேட்க , இயலாமையின் உச்சத்தில் ,

" ஷாலுவா...ஹு ஆர் யூ டு கால் லைக் தட். "

என்று கத்திவிட்டாள்.

கிருஷ் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான்.
ஷாலி , ராகவிடம் முதலில் கேட்ட அதே கேள்வி!!!!

நினைவடுக்குகளில் தேடியபின் சுதாரித்து ,

"ஐ அம் யுவர் பார்ட்னர்" என்று தைரியமாகக் கூறிவிட்டான் கிருஷ்.

"மிஸ்டர். மைண்ட் யுவர் வோர்ட்ஸ்."

"ஐ மென்ட் தி பிசினஸ் பார்ட்னர். நீங்க என்ன நினைச்சீங்க மேடம்"

நக்கலாய் சிரித்தான் கிருஷ். சஞ்சு அவள் கையைப் பிடித்து அழுத்த,அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,

"தென் கால் மீ வைஷாலி. இட்ஸ் மை நேம். ஐ அம் நாட் தி டைப் யூ திங்க்" என்று அழுத்தமாய் கூறினாள்.

கிருஷ்ஷின் ஒற்றைப் புருவம் ஆச்சரியமாய் உயர்ந்தது.
அங்கிருந்த அனைவரும் பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கியிருக்க ,
கிருஷ்
ஒன்றும் செய்யாதது ஆச்சரியத்தை உருவாக்கியது.

" மிஸ்.வைஷாலி ,கேரி ஆன். நௌ எக்ஸ்பிரஸ் யுவர் வியூஸ்."

ஷாலுவிற்கு இப்பொழுது கொஞ்சம் குற்றவுணர்வாகப் போயிற்று.

' தேவை இல்லாம எதுக்கு இப்படி பேசுனடி ஷாலு. ஓவர் ரியாக்ட் பண்ணிட்ட'

" ஓகே சர்"

சிறிய குரலில் கூறியவள், அவளின் எண்ணங்கள் அனைத்தையும் கூறிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டாள்.

அன்றைய வேலை முடிந்ததும் அனைவரும் கிளம்பினர்.

" ஒன் மினிட் வெயிட் ஷா...வைஷாலி"

அவன் சமாளிப்பை அவள் உணர்ந்தும், காட்டிக்கொள்ளாமல் ,

" யெஸ் சர் " என்றாள்.

" நீங்க கொஞ்சம் ஸ்டே பண்ணனும்.ஈவினிங் கிளம்பிடலாம். "
அதுதான் முடிவு என்பது போல் அவன் சொல்ல,ஷாலு கொதித்துப்போனாள்.

" நோ சர். ஐ காண்ட்"

அனைவரும் அதிர்ச்சியுடனே அவளைப் பார்த்தனர்.

'என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு. வம்ப லம்பா வாங்குதே'

" யூ ஆர் ஸ்டேயிங்"

அவன் குரல் ஒலித்த விதத்தில் நிலைக்கு வந்தவள் , நொந்து போனாள்.

'நிதானம் இழந்து பேசும் ரகமல்லவே நான். என்ன வேண்டும் எனக்கு? இவன் பாசமா இல்லை த்வேஷமா'

ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தவள்,
திடீரென " ஓகே" என்று உரைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
சஞ்சுவும் அவள் பின்னாலேயே ஓடினாள்.

"ஷாலு , நில்லு டி"

எதுவும் நடவாதது போல் திரும்பிப்பார்த்த ஷாலு ,

" நீ வீட்டுக்கு கிளம்புடி. டைம் ஆச்சு"
என்று சொன்னாள்.

" இல்லடி . நான் இங்கயே இருக்கேன்.வீட்டுக்குப் போனா வெட்டி தான்"

"இங்க மட்டும் என்னத்த செய்வ. நீ போடி.நான் பாத்துக்கறேன். எனக்குத்தான் அவன்
வேலை வச்சுருக்கான்."

ஷாலு சலித்துக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த பிரகாஷ் ,

" சஞ்சு"

என்று அழைத்தான்.

"சொல்லுடா கொரங்கு. உனக்குப் போற வழில ரெண்டு சிப்ஸ் பாக்கெட் வாங்கி வீட்ல வைக்கணும்னு சொல்ல போற ,அதான? மாட்டேன் போடா"

அவள் கெத்தாகக் கூற ,

"செல்லக்குட்டி தான இன்னிக்கு மட்டும் தான் சஞ்சு . நான் கொஞ்சம் பிஸி இன்னிக்கு"

அவன் கெஞ்சினான்.

"என்னதான் நீ வெட்டியா இருந்தாலும் , உனக்கு நீயே ஃபோன் பண்ணா பிஸின்னு தான் வரும்.அந்த பிஸி தான நீ. ."

"ஹாஹாஹா செம்ம காமெடி சஞ்சு.எப்படி சஞ்சு...முடியல."

சிரிப்பு வராமல் சிரித்து , வராத கண்ணீரைத் துடைத்து , அவளைத் தாஜா
பண்ணிக்கொண்டிருந்தான் பிரகாஷ்.

மணிக்கூண்டை அங்கு பார்த்ததும் எரிச்சல் அடைந்த ஷாலு , சஞ்சு அவனுடன் சரளமாகப் பேசவும் குழம்பினாள்.

"சஞ்சு இவனை உனக்குத் தெரியுமா!"
"தெரியுமாவா?? ஷாலு இவன் என் உடன்பிறப்பு."

" என்னது உன்னோட தம்பியா..பாவி சொல்லவே இல்ல? நான் இவனை நல்லா முறைச்சு வெச்சிருக்கேன்டி"

சஞ்சுவின் காதை அவள் கடிக்க,
"தம்பியா " என்று சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள் சஞ்சு.

பட்டென்று அவள் கையை அடித்த ஷாலு,

"எதுக்குடி இப்ப சிரிக்கற?" என்று கோபமாகக் கேட்டாள்.

"அடியே அவனைப் பார்த்தா எனக்குத் தம்பி மாதிரியா இருக்கு.அவன் என் அண்ணாடி"

மறுபடியும் சிரித்தாள் சஞ்சு.

இதைப் பார்த்து கொலைவெறியில் இருந்தான் பிரகாஷ்.

' இவளுக்கு நான் தம்பியா?இவ பூசணிக்கா ரேஞ்சுல பொறந்தா அது என் தப்பா.'

" சஞ்சு. போதும் நிறுத்து. பேசாம கிளம்பி போ"

அவன் கடுப்பை மறைத்துக் கூற
"சரிங்க தம்பி. இதோ கிளம்பிட்டேன் தம்பி. சீக்கரமா வீட்டுக்கு வாங்க தம்பி. போயிட்டு வரட்டா தம்பி"

என்று ஆயிரம் தம்பி போட்டு அவன் அம்பியில் இருந்து மாறும்முன் கிளம்பினாள்.

அவள் சென்ற பிறகு,

"நீங்க சஞ்சுக்கு அண்ணான்னு எனக்குத் தெரியாது. அதுனால கொஞ்சம் மனசுல உங்களைத் திட்டிருக்கேன். சாரி ஃபார் தட்" ஷாலு தன்மையாகக் கூறினாள்.
" ஓஹ் தெரிஞ்சா நிறைய திட்டிருப்பீங்க."

அவன் சிரிக்க , இவளும் சேர்ந்து சிரித்தாள்.

அப்பொழுது அங்கு வந்தான் கிருஷ்.
" பிரகாஷ் , இன்னிக்கு கொஞ்சம் டிசைனிங் ஒர்க் இருக்கு. அதை ஸ்டார்ட் பண்ணுவோம். இவங்கள என்னோட கேபினுக்குக் கூட்டிட்டு போ. ஐ வில் பீ இன் டென் மினிட்ஸ்."

" ஷ்யூர் சர்"

இவளை நிமிர்ந்தும் பாராமல் சென்றுவிட்டான் கிருஷ்.
ஏமாற்றம் ஏற்பட்டதோ !!
ஆனால் ஏன் ??

அமைதியாக நின்று கொண்டிருந்த ஷாலுவிடம் ,

" போகலாமா மேம்"

என்று பிரகாஷ் கேட்க ,

"போகலாம் போகலாம். இந்த மேம் வேண்டாம்.அதை விட்டாப் போகலாம்"

அவள் புன்னகைத்துக் கொண்டே கூறினாள்.

"அப்போ நீங்களும் என்னை பேரு சொல்லியே கூப்பிடணும்"

பதிலுக்கு டீல் போட்டுவிட்டே அவன் ஒத்துக்கொண்டான்.

கிருஷ் வரும் வரை அவன் கேபினைக் கண்ணால் அளந்து கொண்டிருந்தாள்.

எங்கும் கலைநயத்துடன் கூடிய பகட்டே புலப்பட்டது. இதற்கெல்லாம் விலையைக் கணக்கிட்டால் !!

நினைக்கவே மலைத்தது ஷாலுவிற்கு.

சற்றுநேரம் அங்கே இருந்த ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஜன்னலின் பக்கவாட்டுக் கதவின் வழியாகக் கிருஷ் நுழைய, அவள் கவனிக்காமல் எதேச்சையாகத் திரும்பினாள். அதே வேகத்தில் அவன் மேல் மோதியும் நின்றாள்.

அவனும் இதை எதிர்பாராமல் தடுமாறித் தாங்கினான் அவளை.
ஒரு நிமிடம் உயர்த்திப் பார்த்த அவள் பார்வையைக் கட்டிப் போட்டன அவன் கண்கள்.

அதனுள் பல ஜென்மங்களாக அவனுடன் கழித்த நொடிகள் தெரிந்ததோ என்னமோ, அவள் நெகிழ்ந்து அவன் அணைப்பில் நின்றாள்.

ஆனால் கிருஷ் நினைத்த மாற்றம், அதை அவள் உணர்ந்தாளா என்று புரியவில்லை. பல ஜென்மங்கள் என்ன ,சில வருடங்கள் முன்பு நிகழ்ந்ததே அவளுக்குத் தெரியவில்லையே!!!

தன்னுடைய ஷாலு...

இப்படியே வாழ்க்கை முடிந்தால் தேவலை என்று பலர் எண்ணுவர். ஆனால் , இப்படியே தன் வாழ்வு தொடங்க வேண்டும், முடியா வாழ்வு இவளுடன் மலர வேண்டும் என்று எண்ணினான் கிருஷ்.

தன் கைவளைவில் நிற்கும் ஷாலுவைக்,காதலுடன் நோக்கினான். அவளோ மெய்மறந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'இவன் மேல் நான் வைத்திருப்பது காதல் தானா!!! நான் இவனிடம் எவ்வாறு விழுந்தேன். ஒன்றுமே விளங்கவில்லையே'

'என்னை எவ்வாறு மறந்தாய் ஷாலு?மறந்ததுபோல் நடிக்கிறாயா ? வந்துவிடு என்னிடம், என் ஷாலினியாக வந்துவிடு.'

அவன் மனம் அரற்றியது.

?ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் !

நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்!

உன்னை போலவே நான் இங்கே மயங்கி கிறங்கித்தான் போனேனே

போதையாகதான் ஆனேனே! தள்ளாடும் ஜீவனே

ஜன்னல் ஓரமாய் முன்னாலே மின்னல் போலவே வந்தாயே

விண்ணை தாண்டி ஒரு சொர்க்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே

விழியை நீங்கி நீ விலகாதே! நொடியும் என் மனம் தாங்காதே

என்ன நேருமோ தெரியாதே! என் ஜீவன் ஏங்குதே!?

ஷாலு கனவுலகில் மிதக்க , அவளையே காதலுடன் நோக்கினான் ராகவ்கிருஷ்ணா!!!

-சொக்கட்டான் பார்வை தொடரும்...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top