• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஹாய் டியர்ஸ்...

சென்ற udக்கு லைக்ஸ் அண்ட்
கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி!!!

மேலும் என்னை ஊக்கமளித்து
வழிநடத்த வேண்டுகிறேன்.

அடுத்த பதிவு இதோ...


images (2).jpeg
ஷாலி...

ஷாலினி, தன் முன்னே மைக்கை நீட்டியபடி நிற்கும் நிருபர்களைக் கண்டு ஒரு நிமிடம் நிதானித்தாள்.
காமெராக்கள் படம் பிடித்தபடி இருக்க,நிமிர்வுடன் பேசத் தயாரானாள் அவள்.

"மேடம், நீங்க தான் அந்த ஃபோட்டோல ராகவ் சர் கூட இருக்கற பொண்ணா?"

அறிவுப்பூர்வமான கேள்வியை ஒரு நிருபர் கேட்க ,

"அது தெரியாமத்தான் பேட்டி எடுக்க வந்தீங்களா?" அவளும் அதே தொனியில் பதில் அளித்தாள்.

"சரி அப்ப ராகவ் சர் கூட உங்களுக்கு என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப் இருக்குன்னு சொல்ல முடியுமா?"

அதே நிருபர் சளைக்காமல் கேட்க
,ஷாலினி ஒரு முறை மூச்சைப் பொறுமையாக உள்ளிழுத்து விட்டாள்.

"நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்.அப்பறமா நீங்க உங்கக் கேள்வியைக் கேட்கலாம்.
ஷாலினி கூற , அனைவரும் குறிப்பெடுக்கத் தயாராகினர்.

"நான் ஆக்சுவல்லி ராகவ ஒரு பிசினஸ்மேனா கேள்விப்பட்டிருக்கேன். பட் பார்த்ததில்லை. அவர் எவ்ளோ பெரிய பிசினஸ்மேன்னு இப்ப எனக்கு கிடைக்கற இந்த ரெஸ்பான்ஸ வெச்சே தெரிஞ்சுக்க முடியுது.

ஒன்னுமே இல்லாத விஷயம் பெருசாகறது நேச்சுரல் தான் பிக் ஷாட்ஸ் லைஃப்ல. சில விஷயம் தானா பெருசாகும். சிலது சென்சேஷனல் ஆக்கப்படும்.

ஐ திங்க் இது கண்டிப்பா சென்சேஷனல் ஆக்கப்பட்டிருக்கு. அதுவும் அந்த ராகவ் வேலைதான் .

நேத்து நடந்தது ஜஸ்ட் ஒரு எதிர்பாக்காத நிகழ்வு. நான் கவனிக்காம வந்து மோதுனதுல கீழ விழுந்துட்டோம்.

ஆனா அப்பவே அந்த ராகவ் என்னை பயங்கரமா லுக் விட்டு இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணான்.நான் சாரி கேட்டப்பக் கூட ரொமான்டிக்கா தான் பேசுனான்.

எனக்கு அது சுத்தமா பிடிக்கல.நான் அதுனால கொஞ்சம் ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டேன். சோ, என்னை டேமேஜ் பண்ண நினைச்சிருக்கான்.

இதெல்லாம் பணக்காரங்களுக்கு சகஜம் தான. இப்ப கண்டிப்பா பிரஸ் மீட் குடுத்து, ஆமா, ஐ அம் இன் ரிலேஷன்ஷிப் வித் ஹெர்
அப்படின்னு ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்தா போதுமே !

ஆப்வியஸ்லி என்னோட கிளியர் ஃபோட்டோ வெச்சிருப்பான் .பேப்பர்ல வராத என் ஃபேஸ் , ஃபேஸ்புக்ல வரும். டிவில காட்டாதது , ட்விட்டர்ல வரும்.

சோ , நானே முன்னாடி வந்து நடந்ததை சொல்றேன். பங்களால இருந்து பகட்டா வாழவறவனை நம்பவே கூடாது. பத்தடி வீட்டுல வாழறவனுக்கு இருக்கற பரந்த மனசு அவனுக்கு இருக்குமா!

என்னை மாதிரி நார்மல் பொண்ணு லேட்டா வந்து சொல்றதை யாரு நம்புவா. சமாளிப்புக்குகுத்தான் சொல்றேன்னு பேச்சு வந்திடும். அதான் முன்னாடியே வந்து ஸ்டேமெண்ட் தரேன். இது மாதிரி வேற எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாதுன்னு நினைக்கறேன்."

நீளமாகப் பேசி அவள் முடிக்க , அங்கே பெருத்த அமைதி நிலவியது. இது வரையிலும் ராகவிற்கு இப்படி ஒரு அவப்பெயர் கிடைத்ததில்லை.

யாரோ எடுத்த ஒரு புகைப்படம் அவன் வாழ்வில் விளையாடுகிறது.
அவன் தன்னுடைய முயற்சி , கடின உழைப்பு , நேர்மை ஆகியவற்றிற்கே பெயர் போனவன். பெண்களிடம் கண்ணியம் காப்பவன் என்பது தொழிலுலகம் அறிந்த உண்மை.

ஆகையால் இந்தக் கோணத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை.

ஆயினும் ஆர்வம் யாரை விட்டது.

"நீங்க சொல்றதைப் பார்த்தா ராகவ் சர் பெண்கள் கிட்ட நல்ல விதமா பழகாத இமேஜ் வருதே ?"

வேண்டுமென்றே ஒரு பெண் நிருபர் கேள்வி எழுப்பினார்.

"எனக்கு என்ன மாதிரியான ஃபீல் வருதுன்னு உங்ககிட்ட சொல்லிட்டேன். ஹீ மே பீ அ பிளேபாய். எல்லாருக்கிட்டயும் எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க."

என்று ஷாலினி அலட்சியமாக பதிலுரைத்தாள்.

"நீங்க சொல்றதைப் பார்க்கறப்போ உங்களுக்குள்ள எந்த உறவும் இல்ல அப்படித்தான? அப்போ எந்தப் பிரச்னையும் இல்லைன்னு சொல்லறீங்களா?"

உண்மையில் நல்ல உள்ளம் ஒன்று வினவியது.

"ஆமா. ஆனா அந்த நியூஸ்பேப்பர்ல வந்த நியூஸ் அதை நிரூபிக்கற மாதிரி இல்லையே. அதுனாலதான் இந்த ஒரு பேட்டி தர நினைச்சேன்."

"நீங்க இதைப் போட்டவங்க மேல ஆக்ஷன் எடுப்பீங்களா?"

" ஃபோட்டோ எடுத்ததே ராகவோட பிளான்னு நான் சொல்றேன்"

ஷாலினி அன்று ராகவை ஒரு வழி பண்ண முடிவு கட்டித்தான் வந்திருந்தாள்.

" ஓகே மேடம். அப்போ ராகவ் மேல கேஸ் போடுவீங்களா?"

சுற்றிவளைத்து அங்கேயே நின்றனர் அவர்கள்.

"கண்டிப்பா. எனக்கு எந்த பயமும் யாரைப் பார்த்தும் இல்ல. ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கற இந்த மாதிரி ஆளுங்களுக்குத் தண்டனை தந்தே ஆகணும்"

இன்னும் சில கேள்விகளுக்கு அவள் பதிலளிக்கும் விதமாக ராகவை சாட , அவன் அதையெல்லாம் கேட்கும் நிலைமையை எப்பொழுதோ கடந்திருந்தான்.

அவன் கண்கள் மட்டும் ஷாலினியையே பார்த்திருக்க , மனமோ ரணத்தில் சினந்தது.

"எவ்ளோ கொழுப்பு இவளுக்கு? என் மனசுல இருக்கறது இவளுக்குத் தெரியுமா.இவளைக் காப்பாத்த நான் நினைச்சா இவ என்னையே கேவலமா பேசறாளே!! "

"லீவ் இட் ராகவ் . ஏதோ தெரியாம பேசிட்டா. இதைப் பெருசு பண்ணாத. கேஸ் போட்டா பார்த்துக்கலாம். நம்ம பக்கம் தப்பே இல்லடா."

என்ற சூர்யா அவனின் கோப மனநிலையை மட்டுப்பட வைக்க முயன்றான்.

"டேய் கேஸ் பத்தி நான் நினைக்கல . அதுல லாஜிக்கே இல்லை. தெரியாம விழுந்தோம்னு தான சொல்லறா. அப்பறம் எப்படிடா அவளைப் பழி வாங்க ஃபோட்டோ எடுக்க மட்டும் முன்னாடியே பிளான் பண்ணிருப்பேன்! நல்ல காமெடி போ"

"ஆமா ராகவ். இதை நான் யோசிக்கலை. அந்த பார்க்ல சிசிடிவி இருக்குன்னு சொல்லுவாளோ? அதை நம்ம மிரட்டி வாங்கிப் போட்டுட்டோம்னு சொன்னா என்ன பண்ணுவ?"

"என்ன பண்ணுவேன்னா கேட்கற? உன்னை முதல்ல உலகத்தை விட்டு அனுப்புவேன். வந்துட்டான் எனக்குன்னு"

ராகவ் உச்சகட்ட எரிச்சல் அடைய, சூர்யாவோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான்.

"என்ன ராகவ் நீ! எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்னு தான கேட்டேன்"

அவனைக் கண்டதும் சிரிப்பு சின்னதாய் ராகவினுள் எட்டிப் பார்த்தது.

"சரி கேளு. வ.உ.சி பார்க்ல சிசிடிவி இல்லை. இது ஏதோ ரிப்போர்ட்டர் வேலை தான். அவனைப் புடிச்சா போதும்."

" ஹ்ம்ம். அப்போ ஓகே டா. நம்ம நல்ல இமேஜ் தானாவே இம்ப்ரூவ் ஆகுதே."
"எனக்கு அப்படிப்பட்ட இமேஜ் வேணாம் சூர்யா.நானா கிரியேட் பண்ற இமேஜ் போதும்.

அப்படி நினைச்சிருந்தா என்னைப் பெத்தவனையே தொங்கிட்டு அவரோட கம்பெனிலயே ஒரு அட்டெண்டெர் வேலைல இருந்திருப்பேன்."

என்ற ராகவின் முகம் கடுகடுத்தது. மேலும் இதைக் குறித்துப் பேச விரும்பாமல் சூர்யா பேச்சை மாற்றினான்.

" சரிடா நீ ரெஸ்ட் எடு. நான் கீழ போய் அங்க வெயிட் பண்ற பிரஸ்ஸ பார்த்துக்கறேன்"

" அதை விட முக்கியமான வேலை ஒன்னு இருக்கே சூர்யா. "
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
அவனின் பார்வை டிவியில் தெரிந்த ஷாலியையே கழுகைப் போல் வட்டமடித்தது.

வீட்டிற்குச் சென்று சோஃபாவில் அமர்ந்த ஷாலினியை அவளின் அன்னை பிடித்துக்கொண்டார்.

"உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்காடி."

"இதென்ன ஸ்டாண்டர்ட் டயலாக்கா? எல்லா அம்மாக்களும் இதையே சொல்லி திட்டறீங்க"

என்று சிரித்தாள் ஷாலினி.

" பேச்சை மாத்தாதடி . உங்க அப்பனோட அறிவு அப்படியே அருவி மாதிரி கொட்டுது."

"ஸ்டாப் ஸ்டாப். இப்ப எனக்கு அறிவு இருக்கா இல்லயா? மாத்தி மாத்திப் பேசாதம்மா. எனக்கே டவுட் வருது"

ஷாலினி வாய்விட்டு சிரிக்க, அதிலே கடுப்பான சத்யவதி ,

"உன் வியாக்கியானத்த நிறுத்து ஷாலினி.என்ன தைரியம் இருந்தா இப்படி ஒரு வேலை பண்ணுவ.

பப்ளிக்கா போய் நீயே உன்னோட மானத்தை வாங்கி கட்டிக்கிட்டு வந்திருக்க"

என்று திட்டினார்.

"ம்மா , என்னோட மானத்தைக் காப்பாத்திட்டு வரேன். இல்லன்னா அவன் இன்னும் இந்த மேட்டர சீரியஸ்ஸா கொண்டு போயிருப்பான்."

"இங்க பாருடி . எனக்குத் தெரிஞ்சு அந்த பையன் இந்த வேலைய பண்ணிருக்க மாட்டான். இதுல அவனோட மானமும் சேர்ந்து தான இருக்கு.

யாராச்சும் அவங்களோட இமேஜ் ஸ்பாயில் ஆகற மாதிரி ஃபோட்டோ பப்லிஷ் ஆகணும்னு நினைப்பாங்களாடி"

"அச்சோ! உனக்குப் புரிலம்மா. பழி வாங்கன்னு வந்துட்டா என்ன வேணும்னாலும் பண்ணலாம். அது தான் நம்ம ஹியூமன் லாஜிக்."

" நீ யாருடி அவனுக்கு. உன்னை எதுக்குப் பழி வாங்கணும் ? லூசுத்தனமா பேசாத ஷாலினி."

" நேத்து அவன்கூட ஒரு பொண்ணு இருந்தா. அவனோட தங்கையா இருக்கலாம். என்னைப் போய் அண்ணின்னு கூப்பிடறா அவ.
அதுனால நான் கடுப்பாகி ரெண்டு பேரையும் நல்லா திட்டிட்டேன். அதுக்குத்தான் இந்த வேலை பண்ணிருக்கான்."

" நீ இப்படி எல்லாம் திட்டுவன்னு கனவு கண்டு முன்னாடியே ஃபோட்டோ எடுத்தானாக்கும்"

அவரது கிண்டலில் கொஞ்சம் கலங்கினாள் ஷாலி.

' ஆமா ...இதை யோசிக்கலையே.'

இருப்பினும் சமாளித்தாள் ஷாலினி.

"கொஞ்ச நாளாவே என்னை வாட்ச் பண்ணிருக்கலாம். யாரு கண்டா. கலி காலம்மா."

அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தே இருந்தார் சத்யவதி.

"ஆனது ஆயிடுச்சு. இனிமே நம்ம வெளில போனாலே கேள்வி பறக்கும். கேஸ் அது இதுன்னு"

அவர் எழுந்து செல்லப் பார்க்க, அங்கே வந்தார் ராஜஷேகர்.

"சத்யா , கேஸ்ல கண்டிப்பா ஜெயிக்கறோம். என் பொண்ணு எவ்ளோ தைரியமா இதைத் தனியா ஹேண்டில் பண்ணிருக்கா? அதை எதுக்குத் தப்பா பேசற?"

"அவளே போய் பிரஸ் கிட்ட டமாரம் அடிச்சு யாருக்கும் தெரியாத விஷயத்தைப் போட்டு உடைச்சுட்டு வந்திருக்கா. இவ சும்மா இருந்திருந்தா நம்ம கௌரவம் போயிருக்காது."

" சத்யா , இனிமேலும் இது மாதிரி அவன் பண்ண கூடாதுன்னு தான் நம்ம பொண்ணு உண்மைய சொன்னா. இதுல நம்ம பெருமை தான் படணும்."

"அந்தப் பையனைப் பழி வாங்க நினைச்சு உண்மையாவே இவ சிக்கிட்டாளோன்னு எனக்குத் தோணுதுங்க. பெரிய இடம் வேற."

ஷாலினி இதையெல்லாம் கேட்டு அம்மாவை என்ன சொல்லித் தேற்ற என்பதுபோல் கவலையுடன் இருந்தாள்.

அன்று மாலை ஷாலினி அவர்கள் வீட்டுக் கார்டனில் அமர்ந்து , அன்று நடந்ததை எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

' ஒரு வேளை நூத்துல ஒரு பெர்ஸன்ட் அவன் நல்லவனா இருப்பானோ?'

என்று நூறாவது முறையாக யோசித்தாள்.

அப்பொழுது, வாசலில் ஏதோ கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. யாரது என்று ஷாலினி திரும்பிப் பார்க்க , ஒன்றும் தெரியவில்லை.

ஆகையால் எழுந்து கேட்டின் அருகே சென்றாள். அங்கே பார்த்தால் , யாரோ ஒருவன் அவர்களின் பக்கத்து வீட்டின் முன்பு நின்று, இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

' மீடியா செய்யும் மாயம் போல '

என்று இவளும் விட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

ஆனால், திரும்பவும் ராகவின் நினைவு பாடாய்ப் படுத்த, பக்கத்து வீட்டிற்கு சென்று அரட்டை அடிக்கலாமென்று முடிவு செய்தாள் ஷாலினி.
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஒரே துள்ளலாய் பக்கத்து வீட்டினுள் நுழைந்த ஷாலி , அங்கே சோபாவில் அமர்ந்திருந்தவனைக் கண்டு ஒரு நிமிடம் நின்றாள்.

சற்று நேரத்துக்கு முன்பு , அவர்களின் வீட்டு வாயிலில் நின்றிருந்தவன் ஆயிற்றே!!!

இங்கு என்ன செய்கிறான். வந்த வழியே செல்லலாம் என்று பார்த்தால், அவள் பின்னோடு வீட்டினுள் நுழைந்தவனைக் கண்டு சுற்றுப்புறம் மறந்தாள்.

"ஹே ஜக்கு ! என்னடா இப்பவே வந்துட்ட "

" அப்படி கூப்பிடாதன்னு சொன்னா கேட்க மாட்ட ?"

வேகமாய் வந்து ஷாலினியின் மண்டையை நங்கென்று கொட்டியவன் , வீட்டினுள் புதியவன் இருப்பதை அப்பொழுதே கண்டான்.

கொஞ்சம் அசடு வழிந்து ,உடனே வரவேற்கும் விதமாகப் புன்னகைத்து ,ஓரக்கண்ணால் 'யாரிவன்' என்பது போல அவளிடம் வினவ , 'தெரியாது' என்பது போல் தோளைக் குலுக்கினாள் ஷாலினி.

அதற்குள் வெளியே கையில் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்த சிவசங்கரி , இவர்களைப் பார்த்துவிட்டு ,

"ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா ?உங்களுக்கும் ஜூஸ் எடுத்துட்டு வரேன் "

என்றவாறே வந்தவனிடம் கோப்பையைத் தந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

அவனை வெளியே இழுத்துக் கொண்டு சென்றாள் ஷாலினி.
"யாருடி அவன் , சட்டமா நம்ம வீட்ல வந்து ஜூஸ் குடிக்கறான்."

"தெரிலடா. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னையே குறுகுறுன்னு பார்த்தான்."

இதைக் கேட்டதும் கோபம் கொண்ட ஜக்கு பல்லைக் கடித்துக் கொண்டே ,

" அவனை... நீயும் சும்மா விட்டுட்டியா " என்று சீறினான்.

"விடுடா. மீடியால இப்ப மேடம் ஃபேமஸ். அதான் ஆச்சரியத்தில 'ஆ'ன்னு பார்த்திருப்பான்"

"கிழிச்சான். இங்க பாரு ஷாலினி , இனிமே நீ கூட அவசரப்பட்டு இந்த மாதிரி எல்லாம் பண்ணாத. "

"மார்னிங் நான் போன் பண்ணப்போ நீ ஒன்னுமே சொல்லல. இப்ப அட்வைஸ் பண்ற"

"அப்ப பிரஸ் மீட் முடிஞ்சதும் சொன்ன , அதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும்.அல்ரெடி உனக்கு வீட்ல தீபாவளின்னு மம்மி சொல்லிட்டாங்க. நாம வேற உடனே ரியாக்ட் பண்ண வேணாம்னு தான் விட்டுட்டேன்.

பட் , இப்ப சொல்றதைக் கேளு , பெரிய இடத்துப் பஞ்சாயத்து நமக்கு ஒத்து வராது . நீ கமிஷனர் பொண்ணா இருக்கலாம். அதுக்காக அதிகப்ரசங்கி மாதிரி பண்ணாத"

"ஹலோ, யாரு அதிகப்ரசங்கி, என்னைப் பத்திக் கேவலமா நியூஸ் வருது. பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா ?"

"அது உன்னை பத்தின்னு உனக்கு மட்டும் தான் தெரியும் அப்போ. ஆனா , இப்ப ஊருக்கே அதை சொல்லிட்ட. "

"லீவ் இட் ஜக்கு , எவ்ளோ பேருக்கு தான் எக்ஸ்பிளேயின் பண்ண முடியும். ஐ அம் டயர்ட்"

"இப்பவே அலுத்துக்கற? இன்னும் எவ்வளவோ சமாளிக்க இருக்கு "
இதைக் குறித்தே காலையில் இருந்து சிந்தித்து ஷாலினி குழம்பிப் போயிருந்தாள்.

' நம்ம அவசரப்பட்டோமோ '

"ஷாலினி , ஆனா உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்ணுவேன். அதை எப்பவும் மறக்காத."

"அதான் எனக்குத் தெரியுமே ஜக்கு. யூ ஆர் மை பெஸ்ட் ஃப்ரெண்ட் "

அவள் சிரிக்க , ஜக்குவும் சேர்ந்தே சிரித்தான். ஆனால் அவன் புன்னகையில் நட்பைத் தாண்டி ஏதோ இருந்ததோ!!

"கண்டிப்பா ஷாலினி. இந்த உலகத்துல நம்ம என்னைக்கும் ஒன்னாவே தான் இருப்போம்."

"ஆமா எனக்கு கல்யாணம் ஆனாலும் , உன்னைக் கூடவே கூட்டிட்டு போயிடுவேன். ஜக்கு தான் எனக்கு ஹெல்பர்ன்னு சொல்லிடுவேன். அல்ரெடி நீ ரியல் ஜக்கு மாதிரி தான் எனக்கு வேலை செய்யற"

சொல்லிவிட்டு ஷாலினி வாய் விட்டு சிரிக்க , அவள் மண்டையில் நங்கென்று மறுபடியும் கொட்டினான் ஜக்கு.

"பப்ளிக் ப்ளேஸ்ல என்னை ஜக்குன்னு கூப்பிட்டுப் பாரு. மண்டைய உடைப்பேன்."

அவன் கொஞ்சம் சீரியஸாகவே சொன்னான். சோட்டா பீமில் வரும் ஜக்குவைப் பார்த்தே அவனுக்கு இந்தப் பெயர் அமைந்திருந்தது. ஷாலினியை அவன் சுக்கி என்று அழைப்பான்.

ஆரம்பத்தில் அவர்களின் நட்பின் காரணமாக வைத்த இந்தப் பெயர் அவனின் உண்மையான பெயரின் சுருக்கமாக அமைய, காலப்போக்கில் அனைவருக்கும் அவன் பெயரை மறக்குமளவு சென்றது.

விவரம் தெரிய ஆரம்பித்ததும் , ஷாலினியை அவ்வாறு கூப்பிடாமல் இருக்கச் சொல்லி அவன் கெஞ்சினான், கதறினான்.

அவன் என்னமோ சுக்கி என்று இவளை அழைப்பதே இல்லை. சிறு வயதோடு அதையெல்லாம் விட்டுவிட்டான்.

ஆனால் அவளுக்கு அவன் ஜக்குதான்.

பொது இடத்திலும் , எங்கே பார்த்தாலும் இவ்வாறே கூப்பிட்டு அவனைத் தலையில் அடித்துக் கொள்ள வைப்பாள்.

ஒரு நாள் , அவளின் தோழிகளோடு ஹோட்டல் வந்திருந்தாள் ஷாலினி.

இவனும் அலுவலக நண்பர்களோடு வந்திருந்தான். இவனின் நல்ல நேரம், ஷாலினி அவனைப் பார்த்து விட்டாள்.

அவனோ மிகவும் சுவாரசியமாக ஏதோ பேசி, சிரித்துக் கொண்டிருந்தான். தனக்கு இரு டேபிளின் முன்னால் எதிர்புறம் அமர்ந்திருந்தவனைக் கண்டு இவள் கையை ஆட்ட , அவன் பார்க்கவே இல்லை.

கடைசியில் , " ஜக்கு" என்று சத்தமாக அழைத்துவிட்டாள்.

அவளின் ஆர்வம் ஆப்படித்தது ஜக்குவிற்கு.

அன்று அவளின் தோழிகள் , அவனின் நண்பர்கள் மட்டுமில்லாமல், அந்த ஹோட்டல் சர்வர் முதற்கொண்டு அவனைப் பார்த்து சிரிக்க, அவளுடன் பேசாமலே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டான்.

கூடவே வந்த நண்பர்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு.
இருப்பினும் சில குசும்பர்கள் செய்த வேலையால் , அலுவலகமே அவனை 'ஜக்கு' என்று அழைத்தது.

அவனை வெறுப்பேற்ற இதுவே ஆயுதம் அவர்களுக்கு.

அன்று இரவு அவனும் அவளிடம் பேசவில்லை, அவளும் சமாதானம் பேச வரவில்லை. ஒரு வாரம் சென்றுவிட , ஷாலினி இல்லாமல் அவனால் நிம்மதியாக ஒரு வேலையும் செய்ய இயவில்லை.

எதிலும் பிடித்தம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான். பிறகே , மனம் அவனின் நிலைக்குண்டான காரணத்தை அவனுக்கு உணர்த்தியது.

தனக்குக் காதல்! அதுவும் ஷாலினியின் மேல்.

அவளிடம் அன்றே போய் சமாதானம் பேசினான். ஆனால் காதலைக் கூற தைரியம் வரவில்லை. எங்கே சென்றுவிடப் போகிறாள் என்ற உறுதியாகக் கூட இருக்கலாம்.

ஆனால் , ஷாலினி அவனை இன்றளவும் நண்பனாகவே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் ஜக்கு என்ற அழைப்பும் மாறவே இல்லை.

அது மாறினால் அவள் ஷாலினி அல்லவே!! அவளைத் திருத்த முயன்று அவன் தோற்ற முதல் விஷயம் இதுவே.

மற்றபடி அவன் என்ன கூறினாலும் கேட்டுக் கொள்வாள். பிறகு , இன்றுதான் அவனிடம் கேட்காமல் ஒரு பெரிய புயலை நோக்கி சென்றுவிட்டாள்.

அதிலிருந்து அவளை, அவன் காப்பானா?? இல்லைக் காணாமல் போவானா??

அப்பொழுது வீட்டினுள் இருந்து சிவசங்கரியுடன் அந்த கார்க்காரன் வெளியே வந்தான்.

"அப்போ ரெண்டு நாள்ல நீங்க ரிப்ளை பண்ணனும்.ஓகே தான"
" சரிப்பா , வீட்ல அவரு வந்ததும் கண்டிப்பா கேட்டு சொல்றேன். "

அவன் தலையசைத்து சென்றுவிட்டான்.

"சங்ஸ், யாரு இவன்? என்ன சொல்லிட்டுப் போறான்"

"ஒண்ணுமில்ல ஷாலினி , இந்த வீட்டை நல்ல விலைக்கு எடுத்துக்கறாங்களாம். அதுக்குப் பதிலா வடவள்ளில பெரிய வீடு ஒன்னு சொந்தமா வாங்க ஏற்பாடு பண்ணிக்கலாம்னு சொல்றாங்க."

"எதுக்கு ஆன்ட்டி நீங்க வேற வீட்டுக்கு போகணும். இது வசதியா தான இருக்கு"

"இருக்கு தான். ஆனா உன் அங்கிளுக்கு அங்க வீடு பார்த்தா ஆபீஸ் போயிட்டு வர ஈஸியா இருக்கும்ன்னு யோசிச்சேன்.

அவருக்கு அலைய முடியறதில்லை. இவன் கம்பனியும் ஓரளவு கிட்டதான்."

அவர் கூறியதைக் கேட்ட ஜக்கு அதிர்ந்து விழிக்க , இதைக் கேட்ட ஷாலினிக்கு கோபமாக வந்தது.

"யாரை கேட்டு இந்த முடிவு பண்ணீங்க ஆன்ட்டி? உங்களை எல்லாம் விட்டுட்டு நான் எப்படி இருப்பேன்.

என்கிட்ட சொல்லாம வீடு பார்க்க ஆளைக் கூட ரெடி பண்ணிட்டீங்கல்ல"
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஷாலினி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கத் தொடங்கியது.

"அதில்லை செல்லம். இப்படி ஒரு ஐடியா எங்களுக்கு இருந்துச்சு தான்.ஆனா வீடு பார்க்க யாரையும் கூப்பிடல.

இப்ப வந்த பையன் அவனாவே தான் விசாரிச்சுட்டு போறான். நிஜமா இது அங்கிளுக்குக் கூடத் தெரியாது. இதோ நிக்கறானே இவனுக்கும் தெரியாது. வேணும்னா கேட்டுப் பாரு"

"இவனுக்குத் தெரியாதுன்னு எனக்கும் தெரியும். ஜக்கு என்கிட்ட எதையும் மறைக்க மாட்டான். இங்க இருந்து போக அவன் ஓகே கூட சொல்லமாட்டான்."

கரகரத்த குரலில் அவள் சொன்னாலும், அதில் சற்றே பெருமிதம் பொங்கியது.

இது ஜக்குவிற்கும் கர்வம் கொடுத்தது.

"ஆனா கரெக்டா எப்படி வந்து உங்க கிட்ட விசாரிக்கறான்"

"எனக்கும் அது தான புரியலை ஷாலினி. எதுக்கும் அங்கிள் வரட்டும்னுதான் வெயிட் பண்றேன்."

ஷாலினிக்கு எங்கோ உதைத்தது.
அங்கே ராஜஷேகர் தன் மனைவியை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

"நானே என் கண்ணால அந்தப் பார்க்ல ஷாலினிய அவன் பார்த்த பார்வைய நோட்டீஸ் பண்ணேன் சத்யா.

அப்பவே எனக்கு டவுட் தான். நீ இதைப் பத்தி ரொம்ப யோசிக்காத"

"அவன் தப்பு பண்ணாம இருந்து , இவ இந்த மாதிரி எல்லாம் சொல்லி இருந்தா நிச்சயமா அவன் இவளை டார்கெட் பண்ணுவான்.

இவ பிரஸ்ல சொன்ன ரீசன் உண்மையாவே நடந்திடுமோன்னு நான் கவலப்படறேன். ஒரு அம்மாவா என்னை உங்களால புரிஞ்சுக்க முடியாதுங்க."

சத்யவதி சொன்ன வாக்கு சத்திய வாக்கு!!!

பொதுவாக நாம் கூறும் வார்த்தைளுக்கு மேலே இருந்து தேவதைகள் 'ததாஸ்து ' என்று கூறுவார்களாம். 'அப்படியே ஆகட்டும்' என்பது அதன் பொருள்.

அதனாலேயே நல்லதை மட்டும் பேச வேண்டும் என்பர்.

திடீரென வரிசையாகக் கார்கள் அந்த வீதியில் நுழைய , என்னவோ ஏதோவென்று அனைவரும் வெளியே பார்த்தனர். நடுவே வந்த கருப்பு நிற பென்ஸ் காரில் வந்தவன் ராகவ்.

உள்ளே இருந்து ராகவ் இறங்க , அவனைக் கண்டு அதிராத உள்ளமே அங்கில்லை. உச்சகட்ட அதிர்ச்சி ஷாலினிக்குதான்.

சத்யவதி, ராஜஷேகர், ஜக்கு, சிவசங்கரி அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அக்கம் பக்கத்திலிருந்த வீட்டில் இருந்து அனைவரும் வெளியே வந்து பார்க்க, அந்தத் தெருவே திடீரென பரபரப்பாகியது.

யாரும் எதிர்பாரா தருணம், ராகவ் வேகமாக ஷாலினி அருகே வந்தான். வந்தவன் சும்மா இருந்தானா என்றால் இல்லை.

சும்மா வேடிக்கை பார்க்கவா அவன் வந்தான்? வேடிக்கை காண்பிக்க அல்லவோ வந்தான்.

நொடியில் அவளின் தோள் மேலே கை போட்டு ,

"ஹாய் டார்லிங். ஹௌ ஆர் யூ"

என்று கண்ணடித்தான்.

எங்கிருந்தோ பளிச் பளிச் என்று ஃபிளாஷ் அடித்தது. பார்த்தால் , மீடியா மொத்தமும் குவிந்து இருந்தது அங்கே. எப்படி வந்தார்கள் , எப்பொழுது வந்தார்கள் என்று யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

" என்ன பண்ணற, மரியாதையா கைய எடு"

ஷாலினி அடிக்குரலில் சீற ,

"டார்லிங்! நீ என்ன பண்ணியோ அதையே தான் பண்ணறேன். யூ நோ, ஆக்ஷனுக்கு ரியாக்ஷன் இருந்தா தான இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்."

என்று ராகவ் சிரித்தான்.

"ஸீ, நான் தைரியமா எதையும் ஃபேஸ் பண்ணுவேன். முடிஞ்சதைப் பண்ணிக்கோ"

தன் மேல் இருந்த அவன் கையை எடுக்க அவள் முயல , முடிந்தால் தானே.

அங்கே வந்த ராஜஷேகர் ,

"டேய் என் பொண்ணு மேலயே கைய வச்சியா.நான் யாருன்னு காட்டவா"
என்க ,

"அந்தக் கஷ்டமே உங்களுக்கு வேண்டாம் கமிஷனர். எல்லாம் தெரிஞ்சு தான் வந்தேன்."

அசால்டாய் உரைத்த ராகவைக் கண்டு அவர் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவர் நின்றார்.

சத்யவதியின் கைகளை சிவசங்கரி பிடித்துக்கொள்ள , ஷாலினியோ என்ன செய்வது என்றே தெரியாமல் நின்றாள்.

"தென், வாட்சப் டார்லிங். இப்ப ஒரே ஸ்ட்ரெஸ்சா இருக்குல்ல, ஷால் வீ கோ ஃபோர் அ டேட் ?"

தலையைக் கோதிக் கொண்டே அவன் வினவ, இதையெல்லாம் காண முடியாமல் பொங்கிவிட்டான் ஜக்கு .

"ஹலோ மிஸ்டர் , யாருக்கிட்ட பேசறோம்னு தெரிஞ்சு பேசுங்க. ஷீ இஸ் மைன்"

ஜக்குவைக் கண்ட ஷாலினி இன்னும் அதிர்ந்தாள்.

' ஜக்கு ' கேள்வியாய் அவனை நோக்கினாள். ஆச்சரியமாக ஒற்றைப் புருவத்தைத் தூக்கிய
ராகவ் ,

"இஸ் இட்? ஷாலி கிட்டயே கேட்கலாமே"

என்றவன் , ஷாலினியிடம் திரும்பி ,
" சொல்லு ஷாலி , இவன் சொல்றது உண்மையா" என்று கேட்டான்.

அதில் தெரிந்த அதிகாரத்தை உணர்ந்து ஷாலினி விழித்தாள்.

"கமான் ஷாலினி, சொல்லு"

ஜக்குவும் அவன் பங்கிற்கு கூற, அவளால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.

மீடியா முன்பு எப்பேற்பட்ட நிலையில் நிற்கிறோம்!!

இருவரையுமே இப்படி யோசித்ததில்லையே.தலை சுற்றியது அவளுக்கு.

"நோ டென்ஷன் டார்லிங். இதை அப்பறமா கூட பேசிக்கலாம். இப்ப பிரஸ் மீட்ட பார்ப்போம் வா."

அவளின் தோள் மேலே போட்ட கையை எடுக்காமலேயே அவளை முன்னே அழைத்துச் சென்றான்.

இதைப் பொறுக்க முடியாத
கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜக்கு என்னும் ஜகதீஷ்.

images (3).jpeg
ராகவ்...

சொக்கட்டான் பார்வை தொடரும்...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top