• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Aasaippatten - Episode 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
அத்தியாயம் - 2

பாலாவின் தாத்தா ராமசாமி - பாட்டி தனலட்சுமி தம்பதியினர்க்கு கிருஷ்ணசாமி மற்றும் விஜயலட்சுமி என இரு பிள்ளைகள். கிருஷ்ணசாமி - அனுராதா தம்பதியினர்க்கு நவநீத கிருஷ்ணன், திருஞானசம்பந்தன் மற்றும் பால திரிபுர சுந்தரி என மூன்று மக்கட்செல்வங்கள். முத்துசாமி - விஜயலட்சுமி தம்பதியினர்க்கு சிவகார்த்திகேயன் மற்றும் சண்முகப்ரியா என இரு செல்வங்கள்..

ராமசாமி திருப்பூரில் காமாட்சி என்னும் பெயரில் ஒரு பெரிய நிட்டிங் யூனிட்டும், நூல் மில் ஒன்றும், manufacturing யூனிட் ஒன்றையும் தனது தாய் பெயரில் நடத்தி வருகிறார். தனலட்சுமி சிறந்த குடும்ப தலைவி மற்றும் அவர்களுடைய பண்ணையை மேற்பார்வையிட்டு வரவு செலவுகளை பார்த்து கொள்வார்.

கிருஷ்ணசாமி பெரிய படிப்பாளி போதும் போதும் என்கிற அளவுக்கு படித்து இன்று மிகப்பெரிய இன்ஸ்டிடியூட்ல் HOD ஆக பணிபுரிந்து வருகிறார். அனுராதா அறம் என்னும் பெயரில் தொழில் முனைவோருக்கான டிரைனிங் சென்டர் வைச்சு ரன் பண்ணிட்டு இருக்காங்க. நவீன் (நவநீத கிருஷ்ணன்) MD இன் நியூரோ டெக்னாலஜி முடித்து KMCH ல் நியூரோ சர்ஜெனாக பணிபுரிகின்றான். திரு (திருஞானசம்பந்தன்) ஒரு பெரிய MNC கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயராக பெங்களூரில் பணி புரிகிறான்.

முத்துசாமி குன்னூரில் 100 acre எஸ்டேட்க்கு சொந்தக்காரர் மற்றும் டீ தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார். விஜயலட்சுமி +2 வரையிலான புகழ்பெற்ற கான்வென்ட் பள்ளி ஒன்றை குன்னூரிலிலேயே நடத்தி வருகிறார். சிவா (சிவகார்த்திகேயன்) M.Arch முடித்து construction கம்பெனி ஒன்றை கோவையில் நடத்தி வருகிறான். பியா (சண்முகப்ரியா) நமது பாலாவின் உயிர் தோழி. சிவாவும் ப்ரியாவும் கோவையில் தனது அத்தை மாமா வீட்டில் தொழில் காரணமாகவும் படிப்பு காரணமாகவும் வசித்து வருகின்றனர்.

அனுராதாவிற்கு காலை மற்றும் இரவு உணவினை எல்லோரும் சேர்ந்து தான் உண்ண வேண்டும் என்பது எழுதப்படாத ரூல். மதிய உணவினை அவரவர் விருப்பப்படி சாப்பிடுவர். ஆனால் வாரயிறுதியில் மதிய உணவு ஒரு விருந்து போலவே இருக்கும். சில சமயம் கோவையிலும், சில சமயம் திருப்பூரிலும் நடக்கும்.

காலை உணவை உண்ண எல்லாரும் டைனிங் ஹாலில் கூடியிருந்தனர். அனுராதா, " ஹேய் எருமை பாலா நேத்து ஈவினிங் ட்ரைனிங் சென்டர்ல என்ன பண்ணினாயடி" என்று கத்தி கொண்டு இருந்தார்.

இங்க பாருங்க மம்மி buffalo, நீங்க எதை பத்தி கேட்கறீங்கனு சொன்னா தானே தெரியும். டிரைனிங் சென்டர்ல பல விஷயம் பண்ணுனோம். அப்புறம் டெய்லி ஏன் என்கிட்டே கத்தி கத்தி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணறீங்க ராது. Be Happy and Be Cool Old Lady.

யாரை பார்த்து ஓல்டு லேடினு சொல்லற என்று வம்புயிழுத்தார் நம்ம HOD சார். "ஹ்ம்ம்கூம், இத்தனை நேரம் கத்திட்டு இருக்கேன் என்னனு ஒரு வார்த்தை கேக்கல, இப்ப என்னை ஓல்டு லேடி சொன்னது தான் பெரிய விஷயம்னு பஞ்சாயத்து பண்ண வந்துட்டார் நாட்டாமை என்று நொடித்தார் ராதா. பேச்சை மாத்தாதீங்க HOD என்ன பண்ணுனானு உங்க செல்ல பொண்ணு கிட்ட கேளுங்க.

தங்கம், அம்மா இவ்வளவு டென்ஷன் ஆகுற மாதிரி என்ன பண்ணுனடா. என்ன தப்பு பண்ணுனானு கேக்க சொன்ன கொஞ்சிகிட்டு இருக்கீங்க. நேத்து ட்ரைனிங் சென்டர்ல போய் அதகளம் பண்ணி இருக்கா உங்க பொண்ணு. நம்ம கண்ணன் கிளாஸ்க்கு போய், அம்மா உன்ன உடனே வரசொன்னாங்கனு சொல்லி அவன்
போன உடனே, பிரண்ட்ஸ் உங்களுக்கு எல்லாம் இன்னைக்கு நோ கிளாஸ்னு சொல்லி, தப்பாட்டம் மியூஸிக் போட்டு எல்லாரையும் ஆட வெச்சு இருக்கா. அதுவும் உங்க பொண்ண பாருங்க, தர லோக்கல் லெவெலுக்கு ஆடி ஆட்டம் போட்டு இருக்கா. கண்ணா வந்து எனக்கு போன் பண்ணி கேட்டுட்டு, இவ பண்ணுனதை வீடியோ எடுத்து அனுப்பி இருக்கான் பாருங்க என்று தனது மொபைலை காட்டினார்.

பியா, நவீ, சிவா & HOD அனைவரும் குத்து ஆட்டத்தை பார்த்து ரசித்தனர்.
பியா, உன்கூட தாண்டி இருக்கேன், எனக்கு தெரியாம இது எப்ப நடந்தது. அது காலேஜ்ல இருந்து நேரா அங்க போய்ட்டேன்டி. அடிப்பாவி, நல்ல சான்ஸ், மிஸ் பண்ணிட்டேன். மறக்காம நெக்ஸ்ட் டைம் போகும் போது என்னையும் கூப்பிட்டு போ என ராதாவின் பிபியை எகிற வைத்தாள்.

சுந்தரி, என்ன அருமையா குத்து டான்ஸ் ஆடற டா, எனக்கு கூட இந்த மாதிரி ஆட தெரியாது. டேய் நவீ, சிவா ரெண்டு பேரும் தங்கத்துக்கிட்ட டான்ஸ் கத்துக்கங்கடா, கோவில் திருவிழால கலக்கிடலாம் என்று எரியற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார் HOD.

சிவாவும், நவீனும் அவளுடைய குத்து டான்ஸசை பார்த்து பேய் அடித்தது போல பே என பார்த்துக்கொண்டு இருந்தனர்.

சிவா " முமைத் கான் எல்லாம் உன்கிட்ட பிச்சை வாங்கணும் போல இருக்குடி" என்னமா டான்ஸ் பண்ணற..
சினி பீல்ட்க்கு போனைனா சூப்பர் ஐட்டம் டான்சரா வருவடி என நக்கல் அடித்தான்.

நவீ, ஹே பாலா நீ எஞ்சினீரிங் தானே படிக்கற, உன்னோட மாடர்ன் லுக்குக்கும், இந்த தர லோக்கல் டான்ஸ்க்கும் லிங்க் பண்ணவே முடியலையே.

பாலா " டேய் நிறுத்துங்கடா, நான் ஏதோ நல்ல மூட்ல இருக்கேன்.. சோ, அமைதியா இருக்கேன்னு சந்துல சிந்து பாடாதீங்கடா, பொழச்சு போங்க" என்றதும் கப்சிப் ஆகினர். இல்ல ராதா டிரைனிங் சென்டர்ல பண்ணுன மாதிரி பெரிய ஆப்பு வைச்சுருவாளே அந்த பயம் தான். ராதா, இவளை பைக் ரைடிங் போக வேண்டாம்னு சொன்னதுக்கு தான் இந்த ஆப்பு.

ராதா இவர்கள் அனைவரையும் முறைத்து விட்டு எழுந்து சென்றார். கடைசியில், நெக்ஸ்ட் வீக் பைக் ரைடு போக பெர்மிசன் வாங்கினர் நம் பாலாவும் சிவாவும். ஆம், பைக் ரைடிங், இருவருக்கும் மிக பிடித்தமான ஹாபி. எப்பொழுதும், இருவரும் சேர்ந்தே தான் செல்வர். சில சமயம் தனியாகவும்,பல சமயம் கோவை பைக் ரைடர்ஸ் உடனும் சேர்ந்து செல்வர். பல இடங்களை சுற்றி உள்ளனர். பியாக்கு வேகம் என்றாலே பயம் அதனால் போக மாட்டாள்.

சிவா 350சிசி ராயல் என்பீல்ட் மோட்டார் பைக்கும், பாலா 550சிசி ஹார்லே டேவிட்சன் பைக்கும் வைத்து இருந்தனர். பாலாக்கு தனது பைக்கின் மீது மிகுந்த காதல். Black Horse என்று செல்ல பெயரிட்டு அழைப்பாள்.

350சிசி பைக்கை மாற்றி, 6 மாதம் முன்னர் தான் இந்த பைக்கை வாங்கி இருந்தாள் அதுவும் சிலபல எதிர்ப்புக்களிடையே. தனது அப்பாவை கெஞ்சி கொஞ்சி பர்த்டே கிப்ட்டாக வாங்கி இருந்தாள். அனுராதாவிற்கு பயம், தன் பெண்ணைப் பற்றி என்னதான் இவள் நன்றாக ஓட்டினாலும் எதிரில் வர்றவங்க ஒழுங்கா ஓட்டணுமே என்று. அதுவும் பாலாக்கு வேகம், மிக பிடித்த ஒன்று. காரானாலும், பைக்கானாலும் வேகமாகத்தான் ஓட்ட பிடிக்கும். இதற்கு பயந்தே சிவாவை துணைக்கு அனுப்ப, அவனும் இவளுடன் சேர்ந்து பைக் ரைடிங் என்ஜோய் பண்ண பழகி இருந்தான். ராதாவும், சிவா இருக்கும் தைரியத்தில் தான் பொண்ணை அனுப்புவது. எங்கு போவதானாலும், பக்கா பிளான் இல்லாமல் செல்ல அனுமதிக்க மாட்டான். சிவாவை தவிர்த்து யாரு கூடவும் அனுப்ப மாட்டான், பாலாவும் சிவா இல்லாமல் போக மாட்டாள்.

பியா காலேஜீக்கும், பாலா ஜோசப் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு சென்று, எப்ப ப்ராஜெக்ட் ஒர்க் ஸ்டார்ட் பண்ணுவது மற்றும் கம்பெனிய நேர்ல பார்த்து ஸ்டடி பண்ணவும் கிளம்பினாள் தனது BHல்(Black Horse).
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis.:):):)balavoda bike name black horsea:):):)acavadiyana balavai poi atangapidarini soli irukingale:unsure::unsure::unsure:hero engapa:unsure::unsure::unsure:
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
nice epi sis.:):):)balavoda bike name black horsea:):):)acavadiyana balavai poi atangapidarini soli irukingale:unsure::unsure::unsure:hero engapa:unsure::unsure::unsure:
என் கதைக்கு முதலில் கமெண்ட் போட்ட என் தோழிக்கு மனமார்ந்த நன்றிகள். ஹீரோவை சீக்கிரமா கதைக்குள் கொண்டு வருகிறேன். ப்ளீஸ் வெயிட் & read டியர்.
 




Last edited:

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
:rolleyes::rolleyes: niraiya name varuthe
கதையில் வரும் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து உள்ளேன் இந்த எபிஸோடில். பின்வரும்
அத்தியாயங்களில் இவர்களைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது அதற்காகத்தான் பிரண்ட். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top