• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Sugi's Oru Adangaapidaari Mela Asaipatten - Episode 25

sweetsugi123

Author
Author
Messages
270
Likes
1,208
Points
102
Location
Coimbatore
#1
உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தோழமைகளே..............இன்னும் 2 அல்லது 3 அத்தியாயங்களில் கதை முடிவுற போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் பிரண்ட்ஸ்........

பெரும்பாலானோர் விருப்பப்படி எனது அடுத்த கதை காலேஜ் ஜூனியர் சீனியர் கதைதான் மக்களே....மேலும் சிலர் IT கம்பெனி கதையும் கேட்டிருந்தார்கள்..........மூன்றாவது கதையாக அதனை எழுதுகிறேன் பிரண்ட்ஸ்......

எனது இரண்டாவது கதைக்கான அறிமுகம் முதலில் உங்களுக்காக.....

கதையின் பெயர்: மாசிலா இன்பக்காதல் கொண்டேன்

வழக்கம் போல படு ஜாலியா கல்லூரி கலாட்டா கதைக்கருவைதான் தேர்ந்தெடுத்து உள்ளேன்.............பாலாவை எப்படி மறக்க முடியாதோ அதுபோல தான் இக்கதை நாயகியும் உங்களை கவர்வாள் என்பதில் ஐயமில்லை....

படு ஜாலியான கலாட்டாவான நாயகி, மனக்காயத்தால் தன் இயல்பை தொலைத்து நடமாடும் நாயகன்...எவ்வாறு தன் குறும்புத்தனத்தாலும், விவேகத்தாலும் நாயகனை மீட்டெடுத்து வெற்றி பெற செய்கிறாள் என்பதை இனிவரும் அத்தியாயங்களில் காணப்போகிறோம்..........

ஹீரோயின் - மஹானிகா - முதலாம் வருட கல்லூரி மாணவி
ஹீரோ - சக்தி சரவணன் மூன்றாம் வருட கல்லூரி மாணவன்

ஒரு அட்டகாசமான கலாட்டா எபிசோடு 26 உடன் விரைவில் சந்திக்கிறேன்..

அத்தியாயம் 25:-

தன்னால் தான் பியாவின் திருமணமும் நின்றுவிட்டது என குற்றஉணர்வில் தவித்த பாலா, தன் மனக்குழப்பங்களை அவளிடம் கொட்டி வருத்தப்படுத்தாமல் அனைவரின் முன்பும் சந்தோசமாக உள்ளதை போல காட்டிக்கொண்டாள்.... தன்னால் திருவிழா மகிழ்ச்சி சிறிதும் குறையக்கூடாது என்பதில் கவனத்துடன் உற்சாகமாக சுற்றி வந்தாள்.....

திருவிழா தேதி அறிவுப்பு ஆனதிலிருந்து, வெளியூரிலிருக்கும் சொந்த பந்தங்களுக்கு தகவல் பறக்கும். வேலை தேடி தொலைதூரம் சென்ற மகன்களுக்கும், பக்கத்து ஊர்களிலும் தொலைதூர ஊர்களிலும் கட்டிக் கொடுக்கப்பட்ட மகள், மருமகன்களுக்கும், அண்ணன் தம்பிகளுக்கும், அக்கா தங்கைகளுக்கும், மாமா மச்சான்களுக்கும், சம்பந்திகளுக்கும் திருவிழா தேதிக்கு இரண்டு நாள் முன்னதாகவே வரச் சொல்லி தகவல்கள் அனுப்பப்படும்.

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். இதன் முக்கிய கோட்பாடே ஒன்று கூடுதல், கூடி உண்ணுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் ஆகியவை ஆகும். பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஊருக்கு செல்வதே இதுபோன்ற திருவிழாக்களுக்குத்தான். சொந்த பந்தம், நட்புகளுடன் கொண்டாட்டமாய் கழியும் அந்த பத்து நாட்களும் உற்சாகம்தான். ஒரு வருடம் வேலை செய்த களைப்பினை போக்கி புத்துணர்ச்சி தருவது இதுபோன்ற திருவிழாக்கள்தான்.

சுற்றியுள்ள பதினெட்டு பட்டி கிராமத்திற்கும் காவல் தெய்வமான அம்மனை விழாவெடுத்து சிறப்பிக்க அனைவரும் தன்னால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுப்பர்........ஊரிலுள்ள அனைத்து வீட்டிலும் வெள்ளையடித்து, புத்தாடை அணிந்து விருந்தினர்கள் வருகையுடன் அட்டகாசமாக இருக்கும்.......தங்கள் வருடம் முழுவதும் உழைத்த பணத்தை இத்திருவிழாவின் போது செலவிடுவர்......பங்குனி மாதத்தில் விழா தொடங்குவதால், முழுஆண்டு தேர்வு முடித்த பள்ளிக்குழந்தைகளும், அம்மனை குலதெய்வங்களாக கொண்ட குடும்பங்களும் வந்து விழாவை சிறப்பித்து செல்வர்.

விழா தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன் அம்மனுக்கு பூச்சொரிதல் முடித்து, கோவில் தர்மகர்த்தாவான ராமசாமி தாத்தாவும், ஊர் பெரியவர்களும் ஒன்று கூடி கம்பம் நட்டு, அம்மனை வேண்டிகிட்டு மஞ்சள் தோய்த்த துணியினை காசுடன் சேர்த்து கம்பத்தில் கட்டுவார்கள். இதனை திருவிழா முடியும் வரை அவிழ்க்க கூடாது, காப்பு கட்டுன அப்பறம் சுத்த பத்தமாக இருக்கணும். இறைச்சி சாப்பிடக் கூடாது. ஊர் மக்கள் வெளியே எங்கயும் போக கூடாது...அப்படியே போனாலும் இரவுக்குள் வீடு திரும்பிடணும்....

நேற்றே காப்பு கட்டு முடிந்திருக்க, பாலாவும் பியாவும் குடத்தை எடுத்துக் கொண்டு கம்பத்திற்கு தண்ணீர் விட சென்றனர்....ஊரில் உள்ள வயது பெண்கள் அனைவரும் மீதி எட்டு நாட்களுக்கு மாறி மாறி தண்ணீர் விடுவர்...புத்தாடை அணிந்து, வானவில் கூட்டமாக காட்சியளிக்கும் இப்பெண்களை பார்க்கவே சுற்றும் காளையர் கூட்டமும் அதிகம் அவ்விடத்தில்.........பாலா, பியாவுடன் சேர்த்து அதிகமான பெண்கள் தாவணி பாவாடையும், சிலர் சேலையும் உடுத்தியிருந்தனர்....

"ஏம் புள்ள சுந்தரி, என்னலே மாமனை கண்டுக்காம போறே....சித்த நேரம் நின்னு பேசிட்டு போறது" என ஒன்றுவிட்ட அத்தையின் பையன் பாலாவை வம்புக்கிழுக்க....

"நின்னு பேச நேரம் இல்ல மாமா (மாமானு பாலா மரியாதை கொடுக்கும் போதே யோசிக்கணும்டா மாங்கா), பாட்டி இருபத்தியொரு குடம் ஊற்ற சொல்லுச்சு.....இப்பத்தான் பத்துகுடம் எடுத்திருக்கேன்....வெயில் வேற ஏறிட்டே போகுது.....எனக்கு மட்டும் உன்கூட பேச ஆசையில்லயா என்ன....தண்ணி எடுத்து முடிச்சுட்டு வாரேன்...சித்தநேரம் வெயிட் பண்ணு" என்றவள் யோசித்தபடி அருகில் வந்து, " நீங்கள் எல்லாரும் எங்களுக்கு உதவி பண்ணுனா சீக்கிரமா கம்பத்துக்கு தண்ணி ஊத்திட்டு...புள்ளையார் கோவில் மரத்தடியில் உட்கார்ந்து பேசலாம் என வலை வீச அப்பெருச்சாளிகளும் நன்றாக வலையில் வந்து மாட்டிக் கொண்டன.....

பெண்கள் அனைவரும் கம்பத்தின் அருகே நின்றிருக்க, காளையர் அனைவரும் தண்ணீர் பைப்பிலிருந்து வரிசையாக நின்று ஒவ்வொருவராக தண்ணீர் குடத்தை கைமாற்றி பெண்களிடம் ஒப்படைத்தனர்....அனைவரும், தண்ணீர் ஊற்றி முடிந்ததும், "ரொம்ப தேங்க்ஸ் மாமா, உங்களால தான் வெரசா முடிச்சோம்....நாளைக்கும் ஹெல்ப் பண்ணறீங்களா....பாட்டி வேற நேரமே வரசொல்லுச்சு நீங்க இல்லனா கஷ்டம் இல்லடி பியா..." என்றபடி அனைத்து காளையருக்கும் கிலோ கணக்கில் அல்வா கொடுத்து சென்றனர்......

வீடே நெய் மற்றும் ஏலக்காய் மணத்தால் கமகமத்தது.....அனைத்து மக்களும், தங்கள் வசதிக்கேற்ப பலகாரங்கள் செய்து, விருந்தினருக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் பகிர்ந்து கொடுப்பர்....... சொந்த பந்தங்கள் அனைவரும் வந்திருக்க வீடே கலகலவென விழாக்கோலம் பூண்டது..........

அம்மனுக்குறிய நாளான செவ்வாய்கிழமை தான் பண்டிகை தொடங்கும்....அதிகாலையில் மாவிளக்கேற்றி ஊர் மக்கள் (முக்கியமாக பெண்கள்) அனைவரும் அம்மனுக்கு படைத்துவிட்டு தங்கள் விரதத்தை ஆரம்பிப்பர்...மாலையில் வீடு வீடாக சென்று, தன் முந்தானையில் அல்லது துப்பட்டாவில்/ துண்டில் வேப்பிலை ஏந்திய கையுடன் சென்று நவதானியங்களை பிச்சையாக பெற்று வந்து, கம்பத்தை சுற்றிப்போட்டு வணங்குவர்...இதனை அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கும் பகிர்ந்து கொடுப்பர்.........

பின்னர், பூஜை செய்யும் பூசாரி முன்னால் நடக்க, ஊர் பெரியவர்களுடன் தாரை தப்பட்டை முழங்க விநாயகரும், அம்மனும் உற்சவராக ஊரைச்சுற்றி ஊர்வலம் வருவர்......அனைத்து வீட்டு வாசலிலும் சாணம் மொழுகி, வண்ணக்கோலம் போட்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, நிறைகுடமான பித்தளை குடத்தில் வேப்பிலை போட்டு, தத்தம் வாசலில் சாமி வந்ததும் குடத்தில் உள்ள நீரை ஊற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவர்.....

விடிய விடிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும், மைக் செட்டில் பக்தி பாடல்களும் மற்றும் வானவேடிக்கைகளும் ஒருபுறமிருக்க.....மறுபுறம் ராட்டன் தூரிகளும்,தீனிக் கடைகளும், பெண்களுக்கான பேன்சி கடைகளும், விளையாட்டு சாமான் கடைகளும் இருக்க........கூட்டமோ அலைமோதியது.........கூட்டம் கூட்டமாக பெட்ஷீட்டையும் டார்ச் லைட்டையும் தூக்கிக் கொண்டு குடும்பம் குடும்பமாக நடந்து சென்றனர்..........

மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாலாவை அழைத்தது அவளின் கைபேசி....
ஹாய் செல்லம், என்ன மாமா இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்கே போல, போன் கூட பண்ணமாட்டேங்கற....."

"ஹ்ம்ம்ம், அது ஒண்ணுதான் குறைச்சல் இப்ப, நானே தாத்தாவை எப்படி கரெக்ட் பண்ணி வழிக்கு கொண்டுவரதுனு தெரியாம இருக்கேன் நீ வேற கடுப்ப கிளப்பாதே" என்றாள் சலிப்பாக....

குரலை வைத்தே அவள் சரியில்லை என கண்டு கொண்டவன்,"என்னடா, என்னாச்சு என கேட்டது தான் தாமதம் தன் மனதில் இருந்த அனைத்தையும் ஆரனிடம் புலம்பி தள்ளிவிட்டாள்"

மற்றவர்களை புலம்ப வைத்த தன் பாலாவா இப்படி குழம்புவது என தவித்த ஆரன்," நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் பாலா.....நீ எப்பவும் போல சந்தோசமா இரு...மத்ததெல்லாம் நான் பார்த்துகிறேன்" என்றவன்...மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவன் உடனே சிவாவிற்கு அழைத்தான்...

"டேய் சிவா, பாலா ரொம்ப உடைஞ்சி போய் இருக்கா.....இதுக்கு மேல, தாத்தா சம்மதம் வேண்டி பொறுத்திருக்க முடியாது.....நீ எதாவது பண்ணு இல்லனா....திருவிழா முடிஞ்சதும், அவளை தூக்கிட்டு போய் மேரேஜ் பண்ணிப்பேன்....பிறகு என்னை குறை சொல்லி பயனில்லை...."என திட்டவட்டமாக கூறினான்....

"டேய் பொறுடா, அப்படிகிப்படி பண்ணிடாதே...நம்ம ரெண்டு குடும்பதிற்கும் தான் அசிங்கம்...நான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்.....கொஞ்சம் டைம் கொடுடா...."

"நைட் புல்லா நல்லா யோசி, விடியக்காலைல நான் அங்கே இருப்பேன்...இனிமேல் பாலாவை விட்டுட்டு நான் இருக்கமாட்டேன்...."

போனை வைத்த சிவா மண்டை குழம்பிப்போய், அர்த்தராத்திரியில் ரகசிய கூட்டமொன்றை கூட்டினான்.......

பிரச்சனைக்கு காரணமான பாலாவும் தாத்தாவும் நன்கு உறங்கிக் கொண்டிருக்க..... அனைத்து குடும்ப உறுப்பினர்களும், ரகசிய கூட்டம் போட்டு, பல மணிநேரம் விவாதித்து ஒரு மனதாக முடிவு எடுத்து..... அதன்படி, ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலையை பகிர்ந்து கொண்டனர்......செல்லாண்டி அம்மனின் மீது, மனதின் பாரத்தை ஏற்றி வைத்து தங்கள் வேலையை பார்க்கச் சென்றனர்..........

சிவா அந்நேரத்திலும் ஆரனுக்கு தாங்கள் எடுத்த முடிவினைக் கூறி, அவன்புறம் சில வேலைகளை ஒதுக்கினான்..........

இவர்கள் அனைவரும் ஒரு திட்டம் போட்டு செயல்பட தாத்தாவோ வேறு திட்டம் போட்டிருந்தார்...........

அடங்காப்பிடாரி தொடருவாள்......
 
Last edited:

Advertisement

Latest Episodes

Advertisements

Top