• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
என் பிரியமான தோழிகளே,

தாமதத்திற்கு மன்னிக்கவும்.....எனக்கு ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
சுகி....


அத்தியாயம் 17

View attachment 955

பிளைட்டில் பாலா விண்டோ சீட் தான் வேணும் என அமர, அவளருகே ஆரன் அமர்த்திருந்தான்....அதே வரிசையில் இருந்த மற்றொரு விண்டோ சீட்டில் லிண்டாவும், பக்கத்தில் ஹாரியும் அமர்ந்திருந்தனர்...........பிசினஸ் கிளாஸ் டிக்கெட் புக் பண்ணி இருந்ததால் காலை நீட்டி வசதியாக சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் பாலா வெளியே இருளில் மின்னிய வெளிச்சத்தை ரசித்தபடியே......

அடிக்கடி வந்து அவர்களின் தேவைகளை கவனித்து கொண்டிருந்தனர் அங்கிருந்த அழகான ஏர்ஹோஸ்டஸ்கள்.......அதில் ஒருத்தி, அடிக்கடி வந்து ஆரனிடம் சற்று அதிகநேரம் பேசி சிரித்தபடி, வழிந்து கொண்டிருந்தாள்.....முதலில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த பாலா, மறுபடியும் அவள் ஆரன் அருகில் வரவும், ஹெட்போனை மியூட்டில் வைத்து விட்டு காதை தீட்டினாள்....

"ஹாய் ஹாண்ட்சம்"

"ஹாய் பியூட்டிபுல் " என்றான் பாலாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.....

"வுட் யு லைக் டு ஹாவ் சம் ஹாட் ட்ரிங்க்ஸ்?"

"நோ, தேங்க்ஸ்" என்றான் சிரித்தபடி.....

" ஓஹ், யு ஆர் சோ ஹாட், தட்ஸ் வொய் யு டோன்ட் நீட் ஹாட் ட்ரிங்க்ஸ்?...கேன் ஐ கெட் யு சம் கோல்டு ட்ரிங்க்ஸ் கார்ஜியஸ்?"

அடிப்பாவி, என்னமா ஜொள்ளு விடறா, இந்த லூசும் சிரிச்சிட்டு வழியுது பாரு.....எங்கேயிருந்து தான் வர்றாங்களோ.....முன்னமே இவனுக்கு பெரிய அழகன்னு நினைப்பு...இதுல இவவேற ஏத்தி விடுறா என பாலா பொறுமித்தள்ளினாள்....

"வொய் நாட்? ப்ளீஸ் பிரிங் சம் ஆரஞ்சு ஜூஸ் யங் லேடி"

யங் லேடியாம்..லேடி, பார்த்தா சரியான கேடி மாதிரி இருக்கா என பாலா மைண்ட் வாய்ஸில் பதில் கொடுத்து கொண்டிருந்தாள்.....

ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தவாறு, "கேன் வீ டேக் எ செல்பி டாஷிங் பியூட்டி?" என்று ஆர்வமாக கேட்டாள்...

ஆவென வாயை பிளந்தபடி, ஆரன் என்ன பதில் சொல்கிறான் என பார்த்துக்கொண்டிருந்தாள் பாலா....

ஆரன் தாடையை தடவியபடி யோசனையாக பார்க்கவும்...."ஐ வாண்ட் டு ஷோ அவர் பிக்சர் டு சாண்டா... வாட் ஐ வாண்ட் பார் திஸ் கிறிஸ்துமஸ்"என்றவள்.... "ஷால் வீ கோ பார் எ டேட், வென் யு ஆர் பிரீ?" என பெருமூச்சு விட்டபடி கேட்டாள் கூலாக...

"சாரி, இட்ஸ் டூ லேட்...சம்ஒன் ஆல்ரெடி ஸ்டோல் மை ஹார்ட்..டெபநெட்லி இட்ஸ் நாட் யு" என்றான் அழுத்தமாக....

"கோன்னா மிஸ் யு ஹாட்டி" என்றபடி தன் வேலையை கவனிக்க சென்றாள் அந்தப்பெண்.....

ஏனோ, அந்தப் பெண்ணை பார்க்க எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது பாலாவுக்கு.......ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என எழுந்தவள்...ஆரனை விண்டோ பக்கம் போக சொல்லிவிட்டு, அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தாள்..............

அந்தப்பக்கமாக வந்த ஏர்ஹோஸ்டஸ் பெண்...ஆரனை தேட, அதை பார்த்த பாலா பல்லை கடித்தபடி, "ஹெல்லோ மிஸ் பியூட்டிபுல்" என கிண்டலாக விளிக்க....

"எஸ் மேடம்" என்றபடி அருகில் வந்தவளிடம்....." ஐ ஒன்டர் வொய் ஐ பீல் சோ ஹாட்...மை இயர்ஸ் ஆர் பர்னிங்....கேன் ஐ ஹாவ் எ சில் பீர்?" என்றாள் அவளையும் ஆரனையும் மாறி மாறி பார்த்தபடி அழுத்தத்துடன்....

ஓஹ் மை ஜீசஸ்...பக்கத்தில் இவளை கவனிக்காம விட்டுட்டோம் போலவே....அந்த அளவுக்கு இந்த ஹாண்ட்சம் கவர்ந்தா என்ன பண்ணறது என மானசீகமாக தலையில் கொட்டியபடி....கண்ணில் சாரி என்ற கெஞ்சல் பார்வையுடன் அவளுக்கு பீர் கொண்டு வந்து கொடுத்தாள்....

பீரை கையில் வைத்தபடி இருந்த பாலா, அப்பெண்ணை பார்க்க...என்னமுயன்றும் அந்த பெண்ணால் தன் பார்வை ஆரனை நோக்கி செல்வதை தடுக்க முடியவில்லை.......

இவளையே பார்த்துக்கொண்டிருந்த பாலா எரிச்சலுடன் பீர் அபிஷேகம் செய்திருந்தாள் அந்த ஏர்ஹோஸ்டஸ் பெண்ணிற்கு............(யார்கிட்ட பாலா கிட்டவா உன்வேலையை காட்டற)

தன் தவறை உணர்ந்தவள் பாலாவிடம் சாரி சொல்லிவிட்டு சங்கடத்துடன் நகர....பாலாவும் தான் செய்த செயலுக்கு சாரி என்றாள் பார்மலாக.....

தான் எதிர்பார்த்த ரியாக்க்ஷன் பாலாவிடம் வந்ததை பார்த்த ஆரன்... கட்டுப்படுத்த முயற்ன்றும் முடியாமல் பக்கென்று வாய்விட்டு சிரித்தான்......"ஹ்ம்ம்ம் பொறாமை" என்றான் பாலாவிடம் சிரித்தபடி............

"நான் எதுக்கு பாஸ் பொறாமைப்படணும்...அவ உன்கூட டேட்டிங் போகலாம்னு கேட்டதற்கா இல்லை உன்னை உலக அழகன்னு வர்ணிச்சதுக்கா " என்றாள் கடுப்பாக...மேலும் "பொறாமை படற அளவுக்கு நமக்குள்ள என்ன இருக்கு.....அந்த தக்காளி சாஸ் வந்து சும்மா வளவள கொளகொளன்னு பேசி என் காதை ஹீட் பண்ணறா.....பிசினஸ் கிளாஸ்ல டிக்கெட் வாங்கிட்டு நிம்மதியா ட்ராவல் பண்ண வேண்டாமா.....இவளவிட...ஏன் உன்னைவிடவே அழகான எத்தனையோ பேர் என்கிட்ட ப்ரோபோஸ் பண்ணி இருக்காங்க..." இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல தோளை குலுக்கினாள்.... (ஏம்மா..நீங்க பாட்டுக்கு ஹெட்போன் போட்டுக்கிட்டு உங்கவேலையை பார்க்க வேண்டியது தானே...எதுக்கு இங்க காதை நீட்டறீங்க...)

இருடி....உன்னை வைச்சு செய்யறேன்னு நினைத்தபடி மறுபுறம் திரும்பி ஹாரியிடம் பேசிக்கொண்டிருந்தாள்....லிண்டா ஹெட்போனில் பாட்டு கேட்டபடியே புக் படித்துக்கொண்டிருக்க......போரடித்து போயிருந்த ஹாரியும் ஆர்வமாக இந்தியன் கலாச்சாரம் பற்றி பேச ஆரம்பித்தான்.....

கடந்த மூன்று நாளாக பாலா லிண்டாவிடம் பேசியது போல் ஹாரியிடம் பேச முயலவில்லை.....பொதுவாக ஹாரி எதாவது கேட்டால் பதில் சொல்லுவாள்...மற்றபடி இவளாக போய் பேசியது மிகக்குறைவு.......

நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ணிருக்காங்கனு சொல்லறாளே ஒருவேலை ஏற்கனவே யாரையாச்சும் அக்ஸப்ட் பண்ணிட்டாளோ...ச்சே...ச்சே இருக்காது இருந்தா நாம வம்பிழுக்கும் போதே நேரிடையா சொல்லியிருப்பா என அதே யோசனையாக இருந்த ஆரன் திரும்பி இவர்களை பார்க்க, "ராட்ஸஷி, பழிக்கு பழி வாங்கறாளே....ஒரே முத்தத்துல ஹாரி ரசிகையாகிட்டேன்னு வேற பியாகிட்ட சொன்னாளே......"அந்த பொண்ணுகூட ரெண்டு வார்த்தை பேசுனத்துக்கு என்னை மண்டை காய வைக்கிறாளே என மனதுள் புலம்பியபடி அவர்கள் பேசுவதை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆனான் ......

வேறு டிரஸ் மாற்றிவந்த அப்பணிப்பெண், இவளும்தானே கடலை வறுக்கறா அதுவும் பாரினரிடம் ...நான் பேசுனா மட்டும் பீர் அபிஷேகம் பண்ணுவாளா என நினைத்து ...வேண்டுமென்றே பாலாவை வம்பிழுக்க எண்ணி, "ஹாய் பிரின்ஸ், டூ யு வாண்ட் மை கம்பெனி?" என்றாள் கவர்ச்சியான உடல்மொழியுடன்.........

போதுமடா சாமி.. எப்பம்மா நான் உன் கம்பெனி வேணும்னு சொன்னேன் என நினைத்தபடி....அவள் முகத்தை கூட பாராமல் ஒதுக்கி... "ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ?....ஐயம் ரிசர்வ்டு பார் மை ஸ்வீட்ஹார்ட்" என்றான் பாலாவை தன் விழிகளால் துளைத்தபடி.........

பாலா அவளை வெற்று பார்வை பார்க்க, தொங்கி போன முகத்துடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.....

ஹாரி சுவாரசியமாக கேட்க, பாலாவும் தங்கள் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்டிகைகள்....அது இதுவென விளக்கிக் கொண்டிருந்தாள்.....பாலா இந்தப்புறம் திரும்புவாள் பேசி சமாதானமாகி விடலாம் என நினைத்து காத்திருந்த ஆரன் மிகவும் வெறுத்துப் போனான்...

கொலைவெறியுடன், "ஹாய் ஹாரி, டுமாரோ வி ஹாவ் டு வேக்அப் எர்லி இன் தி மார்னிங்....ப்ளீஸ் ஹாவ் சம் ஸ்லீப்" என்றான் நயமாக சிரித்த முகத்துடன்.....

"ஓகே" என்றபடி ஹாரி தூங்க ஆயத்தமாக....பாலாவும் தன் காதில் ஹெட்போனை மாட்டியபடி....காலை வாகாக நீட்டியபடி சீட்டில் சாய்ந்தாள்....

பாலாவிடம் திரும்பிய ஆரன்,"ஏய் என்னடி நினைச்சுட்டு இருக்க....நான் இங்க ஒருத்தன் இருக்கறது உனக்கு கண்ணு தெரியுதா இல்லையா" என்றான் பொறுமலுடன்....

"உனக்குத்தான் கம்பெனி கொடுக்க உன்னோட ஆளு பியூட்டி அந்த டொமேடோ சாஸ் இருக்காளே...அப்பறம் நான் எதுக்குடா எக்ஸ்ட்ராவா " என்றாள் நக்கலாக....

"அவ ஒண்ணும் என்னோட பியூட்டி இல்லடி....தெரியாம உன்னை உசுப்பேத்த நினைத்து நானே ரணமாகிட்டேன்...மீ பாவம்....கொஞ்சம் கருணை காட்டு என் காளியாத்தா" என்றான் கெஞ்சலாக.....

இதுவரை யாரிடமும் கெஞ்சாதவன் தன்னிடம் கெஞ்சியதை பார்த்து, அந்த பயம் இருக்கனும் இந்த பாலாகிட்ட.....கோயம்முத்தூர்காரி கிட்டயே குசும்பு பண்ணுனா இப்படித்தான்........."ஹ்ம்ம்ம் இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாதே....வேற எதாவது புதுசா ட்ரை பண்ணு....ரொம்ப ஓல்ட் டெக்னிக்கா இருக்கு" என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்........

பயணம் தொடரும்....
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
(ஏம்மா..நீங்க பாட்டுக்கு ஹெட்போன் போட்டுக்கிட்டு உங்கவேலையை பார்க்க வேண்டியது தானே...எதுக்கு இங்க காதை நீட்டறீங்க..
athane why stomach burning:p:p:p:p:p:p:p
அவ ஒண்ணும் என்னோட பியூட்டி இல்லடி....தெரியாம உன்னை உசுப்பேத்த நினைத்து நானே ரணமாகிட்டேன்...மீ பாவம்....கொஞ்சம் கருணை காட்டு என் காளியாத்தா" என்றான் கெஞ்சலாக.....
pavam pilla self aapu vachukichu;);););););):love::love::love::love:
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Interesting update...
நன்றி தோழி, நீங்கள் ஆவலுடன் கேட்டதற்காகவே நாளையும் ஒரு எபிசொட் போட முயலுகிறேன்....
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நன்றி தோழி, நீங்கள் ஆவலுடன் கேட்டதற்காகவே நாளையும் ஒரு எபிசொட் போட முயலுகிறேன்....
Waiting.,,
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top