Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 20

#1
தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும் தோழமைகளே...வேலைப்பளு காரணமாக என்னால் சொன்னபடி அப்டேட் கொடுக்க முடியவில்லை.....

என்னுடைய முந்தைய அத்தியாயங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..........

மறக்காமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே..........

தங்கள் லைக்ஸ் மற்றும் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கும்,
சுகி....


அத்தியாயம் 20

1526413798892.png

சுந்தரி போட்ட மொக்கையை தாங்க முடியாத ஆரன்......பயபுள்ள நல்லாத்தானே இருந்தாள் திடீருனு என்ன ஆச்சு ......ஒரு வேலை நம்மள வெச்சு காமெடி கீமடி பண்ணறாளோ என தனக்குத் தானே பேசிக்கொண்டான்....

10 பிகரை வெச்சு மெயின்டைன் பண்ணறவனெல்லாம் சந்தோசமா இருக்கான்....இந்த ஒரே ஒருத்தியை சமாளிக்கிறதுக்கு நான் படற பாடு இருக்கே....அய்யோ...அய்யய்யோ...போதுமடா சாமி....

"வேண்டாம் சுந்தரி, மீ பாவம்...என்னால மிடியல....காது வலிக்குது....அழுதுடுவேன்" என வடிவேல் சொல்வதை போல் சொல்ல....பாலா பக்கென்று சிரித்து விட்டாள்....

கொஞ்சம் ஓவரா மொக்கையை போட்டுட்டேனா....பயபுள்ள கதறுது....பாலானா சும்மாவா.... தெறிக்க விடுவோம்ல....பின்ன எந்த பாலை போட்டாலும் நமக்கே திரும்பி அடிச்சா சும்மா விட்டுடுவோமா...அதுதான் ஸ்டைலை மாத்தி மொக்கையை போட்டு அரள வைச்சுட்டோம்ல என மனதுள் குதூகலித்தவள்.....வெளியே முகத்தை அப்பாவி போல வைத்து கொண்டு...."சரி சரி அழுகாதீங்க....இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்க...யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சு சூதானமா இருங்க பாஸ்....சேதாரம் அதிகமாச்சுன்னா என்னை குறைசொல்லி பிரயோஜனமில்லை" என்றவள் வேறு எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பினாள்.....

கடுப்பான ஆரன் " ஒரு பிடாரி, பஜாரி, சண்டிராணி கிட்ட இப்படியெல்லாம் நான் மாட்டிகிட்டு முழிக்கணும்னு சாமி கிட்ட வேண்டியிருந்தேன்....அதுதான் இந்த பாடு படுத்துது....."

"ஓஹ், அப்படியா....கூடிய சீக்கிரமே நீங்க சொன்ன எல்லாத்தையும் மொத்தமா பார்ப்பீங்க" என்றாள் அப்பாவியாக கண்ணில் குறும்புடன்.......

"ஹாஹான் மாப்பு வெச்சுட்டியே செல்ப் ஆப்பு" என மைண்ட் வாய்ஸ் குரல் கொடுக்க அரண்டு போன AV...."ப்பூ எத்தனை அடிச்சாலும் தாங்குவான்டா இந்த ஆரன்" என பதில் கொடுத்தவன்..........எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா என தன்னை தானே தேற்றிக் கொண்டான்............

பைக்கை பார்க் செய்துவிட்டு வந்த பாலா, போன் அடிக்கவும் பான்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்தவள் பியா நம்பரை பார்த்ததும் உஷாராக AV யை கழட்டி விட்டவள்....குட் நைட் சொல்லிவிட்டு தன் ரூம் நோக்கி வேகநடை போட்டாள்.......

"பியா சொல்லுடி....இப்பதான் டின்னர் முடிச்சுட்டு வந்தேன்" என்றாள் ஏப்பம் விட்டபடி...........

"என்னடி, கல்யாண சமையல் சாதம் மாதிரி ஒரு வெட்டு வெட்டிருப்ப போல இருக்கு...ஏப்பம் எல்லாம் பயங்கிறமா இருக்கு"

"ச்சு, போடி...நீயும் கண்ணு போடாத...ஆல்ரெடி கடோத்கஜினு AV வேற என்னை கிண்டல் பண்ணறான்" என்றாள் சலித்தவாறு....

"ஹா ஹா, என்னது கடோத்கஜியா?...இத்தனை நாளா இந்த பேர் எனக்கு தோணாம போச்சே....பொருத்தமான பேர் வெச்ச அண்ணன் வாழ்க நீடுழி வாழ்க"

"என்னாது அண்ணனா, இது எப்ப இருந்து?"

"ஹி ஹி ஹி, நீ எப்ப அவரை உன் வண்டியில நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாயா அப்ப இருந்துடி என் செல்லாக்குட்டி"

"ஓஹ், அப்படியா...சரி இதையும் தெரிச்சுக்கோ...AV எனக்கு ப்ரொபோஸ் பண்ணி, பீச்ல பிரெஞ்சு கிஸ்ஸும் கொடுத்துட்டான்டி"

" அடிப்பாவி...கல்லுளிமங்கி....போற போக்கை பார்த்த ட்ரிப் முடிஞ்சு வரும்போது பிள்ளையோட தான் வருவே போலவே" என பியா அங்கலாய்த்தாள்....

"AV கூட இந்த ஐடியாயாவை சொன்னான்டி நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்க ...பியா வாய் மேல் விரலை வைத்து பேசாமடந்தையானாள்.....

"ஹலோ, ஹலோ பியா...இருக்கியா..."

"ஹ்ம்ம்ம்...நம்ம பாலாவா இப்படி ஒரேயடியா கவுந்துட்டானு நான் ஷாக் ஆகிட்டேன்" என வடிவேல் வாய்ஸில் கலாய்த்தாள்...

"ரொம்ப அன்பு டார்ச்சர் பண்ணறான்டி....எனக்கு வாய்த்த அடிமை போல எத்தனை அடிச்சாலும் தாங்கிக்கிறான்டி...இந்த மாதிரி ஒரு அடிமை எங்க தேடினாலும் கிடைக்காது.....தானே வந்து ஒரு பலியாடு மாட்டும் போது சும்மா விட முடியுமா சொல்லு"

"ஹ்ம்ம் பலியாடுன்னு சொல்லிட்ட...இனி நீ சூப் வெச்சு குடிக்காம விட மாட்டே...நடத்து நடத்து" என்றாள் பியா சிரிப்புடன்...

"சிவாகிட்ட சொல்லிட்டியா...."

"எப்பவும் போல அவன்கிட்ட தான் முதல்ல சொன்னேன்....பட் நான் சொல்லாமலே அவன் கண்டுபிடிச்சுட்டான்......AV பத்தி எல்லாம் விசாரிச்ச அப்புறம் தான்...என்னை ட்ரிப் போகவே அல்லோவ் பண்ணினான்" என்றாள் பாசமிகுதியில் கரகரப்பான குரலில்..........

"ஹய்யோ, உன் பாசமலர் பிலிமை ஓட்டாதேடி...அதை கேட்டு, கேட்டு ஒரு சைடு காதே பஞ்சர் ஆகிக்கிடக்கு"

"ஓஹ், என் பாசமலர ஓட்டல...நீ உன்னோட காதல் காவியத்தை ஓட்டு...நான் கேக்கிறேன்"

பம்மியபடி பியா "பாலா, ப்ளீஸ் கோவிச்சுக்காதேடி....அதை சொல்லத்தான் உனக்கு கூப்பிட்டேன்"
என்றவள்...."நீ இங்க வந்ததும், எனக்கும் அர்விந்துக்கும் உறுதி பண்ணிக்கலாம்னு நம்ம வீட்டுல முடிவு பண்ணியிருக்காங்க"

"என்னாது, உனக்கும் அர்விந்துக்கும் கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து ஸ்கூல் போகுதா?...ஒரு வாரம் ட்ரிப் போயிட்டு வர்றதுக்குள்ள இவ்வளவு ஸ்பீடா உலகம் தாங்காதுடா சாமி" என கடுப்படித்தாள்......

பியா அழுவது போன்ற குரலில் "என்னை தப்பா நினைச்சுகாதேடி பாலா, பேச ஆரம்பிச்ச ரெண்டு நாளில்...அர்விக்கு என்னை பிடித்து போக...மகேஷ் மூலமா அவங்க வீட்டுல பேசி, அப்பறம் நம்ம வீட்டுலயும் பேச...ஓகே சொல்லிட்டாங்க...அத்தை தான், ரெண்டு பேரும் ஒண்ணாவே சுத்திட்டு இருந்தாங்க...பாலாவுக்கும் அமைஞ்சா நல்லாயிருக்கும்னு மாமா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க"

"என்னை தள்ளி விடறதுலயே இந்த ராது குறியா இருக்கு...சரி சரி டேமை திறக்காதே...நீ என்கிட்டே இதை சொல்லாம விட்டதுக்கு எதாவது பண்ணணுமே" என யோசித்தபடி கூற...

இப்போதைக்கு அவள் சமாதானமானால் போதும் என பியா காத்திருக்க.....

"ஏய் பியா, எங்க அண்ணன் அப்பிராணி அம்பி அரவிந்தசாமிக்கு போனை போடுடி...நீ எதுவும் பேசாதே....பாலா நாளை மறுநாள் வருவாள்னு மட்டும் சொல்லு என்ன...நான் கான்பெரென்ஸ் காலில் இருப்பது தெரியக்கூடாது....உன் ஆளை காப்பாத்தணும்னு நெனச்ச...நீ காலி ஆகிடுவே..சொல்லிட்டேன்" என மிரட்ட

சரி என்றபடி அர்விந்துக்கு கால் பண்ண " என்னம்மா இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க" என வினவ....

"அது வந்துங்க, நம்ம பாலா நாளன்னைக்கு தான் வர்றாளாம்..அப்பவே உறுதி பண்ணிக்கலாம்னு மாமாவும் அப்பாவும் பேசிட்டிருந்தாங்க...."

"ஓஹ் சரிம்மா...வரட்டும் அந்த சண்டிராணி, உனக்கு என்னை பிடிச்சிருக்குனு தெரிஞ்சும்...உன்னை என்கூட பேச விடாம என்னை டெஸ்ட் எலி ஆக்கி....என்னை ஒரு வழியாக்கிட்டா உன் அத்தை பெத்த ரத்தினம்.....நம்ம மேரேஜ்க்கு அப்புறம் அந்த அம்மணி கூட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிக்கோ...அதுதான் உனக்கும் உன் மாமனுக்கும்(அரவிந்தை தான் மாமன்னு சொல்லறான்)நல்லது"

"வேண்டாங்க, இது மட்டும் பாலாவுக்கு தெரிஞ்சா...கல்யாணத்தையே நிறுத்திடுவா"

"தெரிஞ்சா தானே ....என்ன கல்யாணத்தை நிறுத்திடுவாளா...அதையும் பார்த்துடலாம்" என்க...

"வி வில் பீ வாட்சிங்...ஓடவும் முடியாது ...ஒழியவும் முடியாது" என பியா குறிப்புக் கொடுக்க....

"நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன்...நீ சின்னப்புள்ள மாதிரி பிக் பாஸ் டயலாக் பேசிட்டிருக்க....நீ இன்னும் வளரணும் பிரீ "

"அதுசரி.. எனக்கு இது தேவை தான்....வைக்கட்டுமா"

"எதுக்கு இவ்வளவு அவசரப்படறே....அதுதான் அந்த நந்தி பாலா கூட இல்லையே...இன்னைக்கு ஆபீஸ்ல என்ன கத்துகிட்ட என ஆரம்பிக்க"

ஹய்யோ, நைட் டைம்ல லவ்வர் கிட்ட பேசற மாதிரியா பேசறான்...நம்ம மானத்தை கப்பல் ஏத்தாம விடமாட்டான் போலவே என்று எண்ணியவள்...."போன்ல சார்ஜ் இல்லங்க...காலைல கூப்பிடுறேன்" என காலை கட் பண்ணினாள் பியா...

"ஹா ஹா ஹா, என்னடி பியா...உன் அம்பி தங்க கம்பி...உன்னை அம்மா அம்மாங்கறாரு......தாய்க்கு பின் தாரங்கிறதை தப்பா புரிஞ்சுகிட்டாரோ.....ஸ்ட்ரிக்ட் மிலிட்டரி ஆபீசர் மாதிரி....இன்னைக்கு என்ன கத்துக்கிட்டனு கேட்கிறார்....நல்லா யோசிச்சுக்கோ, இந்த அம்பி தான் உனக்கு வேணுமான்னு........." என நக்கலடிக்க....

"ஹ்ம்ம்ம்...எனக்கு இந்த அம்மாஞ்சியை தான் பிடிச்சுருக்கு"

"உன் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்..........இதே பெட்ரோமாஸ் லைட் தான் வேணுமா.......அந்த அம்பி என்னை பேசுனதுக்கு உனக்கு பர்ஸ்ட் நைட்டே இல்லடி.....க்கூம்.... அப்படியே இருந்தாலும் உன் அம்பி அங்கேயும் வந்து...இன்னைக்கு கல்யாணத்துல என்ன நடந்தது....அப்படி இப்படினு மொக்கை தான் போட போறார்" என கலாய்க்க..........

"அவர் மொக்கை போட்டா என்னடி....மத்தது எல்லாம் நான் பார்த்துக்குவேன்..நீ உன் வேலையை பார்த்துட்டு போடி" என பியா கடுப்பில் கூற.......

"ஹ்ம்ம்...நீ விழுந்து விழுந்து இங்கிலிஷ் படம் பார்க்கும் போதே நினைச்சேன்டி.... பியா நீ ரொம்பவே தேறிட்டேடி" என வில்லங்கமாக சிரிக்க....

"ச்ச்சீய், போடி...அசிங்கமா பேசாதே..."

"யாரு...நாங்க அசிங்கமா பேசறோம்......எல்லாம் காலக்கொடுமைடா சரவணா....பச்சப்புள்ள மாதிரி இருந்துட்டு பமீலா ரேஞ்சுக்கு பேசற.....உலகம் இன்னும் உன்னை நல்லவனு நம்பிட்டிருக்கு....ஓப்பனா பேசற என்னை மாதிரி ஆளுகள கூட நம்பிடலாம்....உன்னை மாதிரி அமுக்குணி அமைச்சரை நம்பவே முடியலடா சாமி" என பாலா புலம்ப...

"ஏய் பாலா...போதுமடி...வெட்க வெட்கமா வருது....விட்டுடி"

"யாரு உனக்கு வெட்கமா இருக்கு அத நாங்க நம்பணும்...உன் பேச்சைக் கேட்டு, எனக்குத் தான்டி அந்த கருமம் எல்லாம் வர்ற மாதிரி இருக்கு..." என்றபடி போனை வைத்தவள்.......கண்மூடி தூங்க ஆரம்பித்தாள்....

அனைவரும் காலை உணவை முடித்துவிட்டு ஊர் சுற்ற கிளம்பினர்....இன்று இரவு பிளைட் என்பதால், சில இடங்களை மட்டும் சுற்றி விட்டு ஷாப்பிங் செல்ல முடிவெடுத்து இருந்தனர்..........
 
#2
பாலா கிராண்ட் ஐலண்ட் ட்ரிப், அட்லாண்டிஸ் வாட்டர்ஸ்போர்ட்ஸ் மூலம் புக் செய்திருந்தாள்....ஹோட்டலின் பிரைவேட் பீச்சிலேயே வந்து பிக்கப் செய்து கொண்டனர்........கிட்டத்தட்ட 25 பேர் கொண்ட குழு பயணம் செய்தது....அனைவரையும் லைப் ஜாக்கெட் அணியச் செய்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்...கூடவே பயணிகளுக்கு, ஸ்னாக்ஸும், ஜூஸ் வகைகளும் வழங்கப்பட....பாலா ஹாப்பி மச்சி....

போட்டில் பயணிக்கும் போதே, லைட் ஹவுஸ், போர்ட், மற்றும் பேலஸ் அனைத்தையும்...கூடவே இயற்கை அழகையும் ரசித்தபடி சென்றனர்....நடுக்கடலில் ஓரிடத்தில் நிறுத்தி, டால்பின் சைட்டிங்கை கண்டு களித்தனர்... நன்றாக நீச்சல் தெறிந்த சிலர் டால்பின் ரைடு செல்லவும் அனுமதிக்கப் பட்டனர்....பின்னர் ஐலண்டில் உள்ள மங்க்கி பீச்சை அடைந்தனர்....அங்கு போட்டில் வந்த கொங்கணி செஃப்கள், பார்பிக்யூ அமைத்து கொங்கணி சமையலில் ஈடுபட.....பயணிகளை பாரம்பரிய முறையில் பிஷ்ஷிங் செய்ய அழைத்து சென்றனர்........

மேலும் ஸ்நோர்கெல்லிங், அவர்களை கடலின் ஆழத்தில் உள்ள அழகை ரசிக்க வைத்தது.........பெரிய கலர் கலரான மீன்களை துரத்தி சென்று தொட முயன்று விளையாடினர்....குட்டி மீன்கள், தேகத்தை தடவி செல்ல...ஆமைகளையும், பல கடல்வாழ் உயிரினங்களையும் பார்த்து ரசித்தனர்.........பாலாவும், AVயும் சிறுபிள்ளைகளாக மாறி, கைகளாலேயே மீன்பிடித்து, நீரில் விட்டு விளையாடினர்.........சில மணி நேரம் ஸ்விம் பண்ணியது...வயிற்றை கிள்ள, நீரில் இருந்து வெளியே வந்தவுடன் கொங்கணி உணவுகளின் மணம் சுவை நரம்புகளை தூண்ட....பாலா உடை மாற்றி விட்டு, நேராக உண்ணும் இடத்திற்கு சென்றாள்..............வரிசையாக, மீன், சிக்கன் உணவுகளுடன் சைவ உணவுகளும் இருக்க....நிழற்குடையின் கீழ் இருந்த சேரில் அமர்ந்து, நீலக்கடலை ரசித்தபடியே உணவை ஒரு பிடி பிடித்தாள் பாலா.........சிறிது நேரத்தில் அனைவரையும் ஏற்றி, கிளம்பிய இடத்திலேயே விட்டு சென்றது அந்த ஜெட்டி போட்...

அந்நால்வருக்கும், அது ஒரு நினைவில் நிற்க கூடிய பயணமாக அமைந்தது....ரூமிற்கு சென்று, ரெப்பிரெஷ் செய்து..ஷாப்பிங் பயணத்தை மேற்கொண்டனர்........பாலா, லிண்டாவிற்கு அழகிய வேலைப்பாடமைந்த சால்வையையும், அழகிய முத்து செட் ஒன்றையும் பரிசளித்தாள்....AV, அவர்களது தாஜ் பின்னணியில் ரிங் மாற்றிவிட்ட புகைப்படத்தை பிளாக் அண்ட் வைட் படமாக பிரேம் பண்ணி பரிசளித்தான்..... இந்தியாவின் நினைவாக சில பரிசுகளும், ஹோம்மேடு ஸ்பெஷல் சாக்லேட்களும் வாங்கி கொடுத்தனர்..........

அவர்களை ஏர்போர்ட்டில் விட்ட பொழுது, இருவரும் கட்டி அணைத்து தங்கள் நன்றியை, மகிழ்ச்சியை தெரிவித்தனர்.....இவர்கள் இருவரையும் ஜோடியாக ஹனிமூனிற்கு தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைத்து, உங்க லவ் மேட்டர் தங்களுக்கு தெரியும் என இன்ப ஷாக் கொடுத்து பிரியாவிடை பெற்றனர்.....

கோவா செல்லும் பெண்கள், கட்டாயம் வாங்க வேண்டியது, இன்றும் கோதண்டி என்னும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் ரஜாய் (Quilt) மற்றும் இயற்கை சாயமேற்றி கைத்தறியால் பழங்கால பாரம்பரிய முறைப்படி நெய்யப்படும் குன்பி சேலைகள்....குன்பி,கோவாவின் மிக பழமையான பழங்குடியினர் ஆவர்...அவர்களால் உருவாக்கப்பட்ட சேலைகள் குன்பி சேலைகள் என பெயர் பெற்றது....முற்றிலும் அழிந்துபோன இந்த கலையை புதுப்பித்த பெருமை வென்டெல் ரோட்ரிக் என்ற டிசைனரையே சாரும்.........டிரெண்டியான முறையில் குன்பி சேலைகளை அறிமுகப்படுத்தி, இக்கலையை நாடறியச் செய்தார்....

அத்தகைய புகழ் வாய்ந்த குன்பி சேலைகளை தான் AV, பாலாவுக்கு பரிசளித்தான்......இந்த முறை, மறக்காமல் அனைவருக்கும் வாங்கியவன்....பாலாவுக்கு மட்டும் வைட் ஸாரியில் மைல்டு கலரால் ஆன டிரெண்டி செக்டு புடவையை தேர்ந்தெடுத்தான்........

பாலா, AVக்கு தான் மிகவும் ரசித்து அவனுக்கு பொருத்தமாக இருக்கும் என வாங்கிய பிளாக் லினன் ஓபன் காலர் ஷர்ட்டை பரிசளித்தாள்....

11 மணிக்கு பிளைட் என்பதால், அனைத்தையும் பேக் பண்ணி, ரெடியானவர்கள்.....டின்னர் முடித்து பீச்சில் சிறிது நேரம் காலாற நடந்து மணலில் அமர்ந்தனர்....தங்களுக்கான தனிமையை அமைதியாக களித்தனர்.......அத்தனிமையிலும் ஒரு இனிமை இருந்ததை இருவராலும் உணர முடிந்தது........

இந்த ஒரு வாரமாக, படுக்கும் நேரம் தவிர...பெரும்பாலும் AVயுடனே நேரத்தை கழித்த பாலாவுக்கு ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றானவுடன் மனதை பிசைந்தது.......ஏன் தான் அவ்வாறு உணருகிறோம் என யோசித்தவளுக்கு விடையாக கிடைத்தது ஆரன் மேல் அவள் கொண்ட காதல்............... சிறு பிரிவு அன்பை மேலும் வலுக்கச் செய்யும் என்பது எவ்வளவு பெரிய உண்மை....அதனை பாலாவும் புரிந்து கொண்டாள்.......அப்பொழுதும், அவள் தன் காதலை, விருப்பத்தை வெளிக்காட்டி கொள்ளவில்லை.........அதற்கு பின்னணியில் வலுவான காரணமும் உண்டு.......

பிரியாவிடை கொடுப்பதைப்போல, அவள் இரு கன்னங்களையும் பற்றி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன்....."கோன்னா மிஸ் யு சுந்தரி" என்றான் கரகரப்பான குரலில்....

ஒரு வழியாக பயணத்தை முடித்து, கோவை ஏர்போர்ட்டை வந்தடைந்து...தத்தம் வண்டியில் தங்களது வீட்டை நோக்கி பயணித்தனர்......

சுந்தரி வருவாள்.......
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top