Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 22

#1
தாமதத்திற்கு மன்னிக்கவும்....தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளைப் பார்த்து என்னால் எதனையும் யோசிக்க முடியவில்லை பிரண்ட்ஸ்.....இறந்தவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் நினைத்து வேதனையாகவும்....மதி கெட்ட தமிழக அரசாங்கத்தை நினைத்து கோபமாகவும்...இதை இப்படியே விடக்கூடாது நீதி கிடைக்க வேண்டும் என்ன பண்ணுவது என்ற யோசனையாகவும் உள்ளது.......

நெஞ்சு பொறுக்கவில்லை நம் மக்கள் அங்கே உயிருக்கு பயந்து ஓடுவதை பார்த்து.........என்ன மாதிரியான ஒரு தேசத்தில் வாழ்கிறோம் நாம்.......

முடிந்த அளவு முயற்சி செய்து, அடுத்த அத்தியாயம் பதிவு செய்து உள்ளேன்......அனைவர்க்கும் நன்றி....

அன்புடன்,
சுகி...


அத்தியாயம் 22

1527285448529.png

ஆரன் பட்டு வேஷ்டி, சட்டை பொருத்தமான சாண்டல் அணிந்து, அம்சமாக வைட் கலர் ஜாக்குவார் காரில் வந்திறங்கினான்......அவனது சிரித்த முகமும், அவனது உடல்வாகுக்கு ஏற்ற உயரமும்....வைட் அண்ட் வைட் காஸ்டியூமும் அவனை பளிச்சென காட்டியது......தூரத்தில் இருந்து அவனை பார்த்த பாலா, வைத்த கண் வாங்காமல் அவனை ரசித்தவள்..........பளபளக்கும் சரிகை சேலையுடன் ஓடி வந்து வரவேற்றாள்.................

ஏற்கனவே பாலாவை சேலையில் பார்த்திருந்தாலும், இன்று அகலக்கரை பட்டுப்புடவையில் பொருத்தமான நகை அணிந்து....தலையில் மொட்டான மல்லிகைப்பூ வைத்து.....மருதாணி பூசிய கால்களுடன் தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பவளை ரசித்துக் கொண்டிருந்தவன்.....அவள் அருகில் வந்ததும், ஒரு பபுருவத்தை உயர்த்தி" என்ன ஓகேயா" என தனது உடைகளை காண்பித்தான்.....

"ஐ லவ் யூ மாமா, உங்க அழகுல நான் மயங்கிட்டேன்" என வடிவேல் குரலில் சிரிக்காமல் கலாய்த்தாள்......

"என்னடி நக்கலா, ஓவர் குசும்பு உடம்புக்கு நல்லதிலடி" என பதிலடி கொடுத்தவனின் கண் அவளது உதட்டையே சுற்றி வந்தது....பாலா செய்து வைத்த பலகாரத்தை டேஸ்ட் பார்த்ததால், ஜீராவின் புண்ணியத்தில் உதடு மினுமினுத்தது........

பக்கத்துல வந்தாலே கொல்லறடி என முணுமுணுத்தவன் "ஹேய் சுந்தரி, நாம வேணா இன்னொருவாட்டி ட்ரை பண்ணலாமா?....அன்னைக்கு சுமாரா தான் இருக்குனு சொன்னியே...."

தன் உதட்டையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனை கண்ட பாலா, "டேய், எங்க வைத்து என்ன பேசுறே......அடக்க ஒடுக்கமா வாடி செல்லம்.....எல்லாரும் நம்மளைத்தான் பார்க்கறாங்க" என்றவள் அனைவருக்கும் ஆரனை தங்கள் பாஸ் என அறிமுகப்படுத்தினாள்...........பின்னர்,தனது தாத்தாவிடம் சென்றவள் ஆரனை அறிமுகப்படுத்தினாள்...."வணக்கம் தம்பி" என ஆரனை எடை போட டைம் கொடுக்காமல் ....." வணக்கம் தாத்தா" என கைகூப்பி வணங்கியவன்..."ஆசிர்வாதம் பண்ணுங்க" என பட்டென்று காலில் விழுந்தான்..........

அவனது மரியாதையான தோற்றத்திலும், வணங்கிய முறையிலும் ...."இந்த காலத்தில் இப்படி ஒரு மரியாதை தெரிஞ்ச பையனா?" என வியந்தவர்....சட்டென காலில் விழுந்து வணங்கவும்.....தாத்தா ஹாப்பி மச்சி....(பின்ன நாங்கல்லாம் யாரு, காதலா, கௌரவமானு வந்தா யோசிக்காம காதலேனு குப்புற விழுந்திடனும்....பாக்ட் மச்சி பாக்ட்)..

"நல்லாயிரு தம்பி" என வாழ்த்தியவர் தன் அருகிலேயே அமர வைத்து கொண்டார்......இருவரும் நடந்து வரும்போது ஜோடி பொருத்தத்தை பார்த்தவர்....ஒத்து வந்தால், இந்த தம்பியையே பார்க்கலாம் என எண்ணி.....கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் மொத்த ஜாதகத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.....ஜென்னி - விக்டரின் பையன் என்றவுடன், தனது எண்ணத்தை குழிதோண்டி புதைத்தார்...பின்னர் தொழில் ரீதியான பேச்சாக மட்டுமே இருந்தது...அதனை ஆரனும் உணர்ந்துதான் இருந்தான்.....

உறுதி வார்த்தை முடிந்து, 10 நாளில் நிச்சயமும், ஒரு மாதத்தில் கல்யாண நாளும் குறிக்கப்பட்ட பின்னர் அனைவர்க்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டது.....உண்ட பின்னர் கூட தாத்தா ஆரனை விட்ட பாடில்லை.....பாலா சிவாவை விட்டு, ஆரனை தன் ரூமிற்கு அழைத்து வந்தாள்.........

இங்கிதம் கருதி, சிவா சற்று நேரத்தில் வருவதாக கூறி சென்றுவிட, "ரொம்ப நல்லவன்டா சிவா" என்றபடி பாலாவின் அருகில் வந்தவன்....அவளது ரூமை சுற்றி பார்த்தான்......பெண்களுக்கே உரிய ரசனையுடன், கலைநயத்துடன் காணப்பட்டது.............

"ஏண்டி, நான் இப்ப என்ன தப்பு பண்ணுனேனு உங்க டெர்ரர் தாத்தாகிட்ட மாட்டிவிட்ட....டிடெக்டிவ் ஏஜென்ஸி வச்சிருக்கிறவன் எல்லாம் கூட இப்படி விசாரிக்க மாட்டங்க.....எப்ப பொறந்தேன்ல இருந்து போன நிமிஷம் வரை டீடைல்ஸ் கேட்டு....நான் மயக்கம் போட்டு தப்பிக்கலாம்னு கூட நினைத்திருந்தேன்.....நல்லவேளை சிவா வந்து என்னை காப்பாத்திட்டான்..........

"என்னது, சிவா காப்பாத்தினானா...இதுக்குத்தான் நல்லதுக்கு காலமில்லைங்கறது....நீ படற அவஸ்தையை பார்த்து, பாவமேனு சிவாவை அனுப்பினேன்" என அங்கலாய்த்தாள்...

"செல்லம்ல, உன்னோட மாமாதானே கோவிச்சுக்காதே" என்றபடி பின்னிருந்து இடையோடு அணைத்தவன்,
அவளை முன்புறம் திருப்பி உச்சி முடியை ஒதுக்கியவாறே அவளை ரசித்தவன், நெற்றியில் ஆரம்பித்து தனது முத்தக்கவிதையை நீண்ட நேரம் தொடர்ந்தான் அவளது இதழில்.....

அரவிந்த் குடும்பம் கிளம்ப ஆயத்தமாக, பியாவிடம் சொல்லிவிட்டு போகலாம் என வந்தவன், தவறுதலாக பாலாவின் ரூம் கதவினை தட்டியவன்....எந்த பதிலும் வராததால், கதவை திறந்தவன் பார்த்த காட்சியில்.....ஷாக்காகி "பாஸ், என்ன பண்ணறீங்க" என கூவினான்....ஆரன், பாலா காதல் விஷயம் தெரியாததால் வந்த ஷாக் இது.........

AV கூலாக, "பார்த்தா தெரியல, இலவசமா ஒரு லிப்லாக் சீன் கிடைச்சா ரசிக்கணும்.....கரடி வேலை பார்க்கக்கூடாது" என கடுப்படித்தவன்....அய்யோ வடை போச்சே என ஏக்கமாக அவளது இதழை பார்வையிட்டான்.....

"சாரி பாஸ், பிரீ ரூம்னு வந்துட்டேன்" என்றான் திரும்பி நின்றபடி....

அரவிந்தை பார்த்ததும், அவனது அணைப்பில் இருந்து விலக முயற்சி செய்ய....மேலும் இறுக்கமாக அனைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்தான் AV.....

"அடுத்த ரூம் தான் பியா ரூம்" என அர்விந்திற்க்கு பதிலளித்தவள்......"டேய், மானத்தை வாங்காதடா....விடுடா" என பல்லைக் கடித்தவள் அவனிடமிருந்து விடுபட்டாள்...........

அரவிந்த் குடும்பத்திற்கு விடை கொடுக்க வேண்டி, பாலா ஆரனுடன் மாடியில் இருந்து இறங்கினாள்........

பாலா சங்கடப்பட்டு கொண்டு முன்னால் நடந்து வர....AV அவளை ரசித்தபடி மந்தகாசப் புன்னகையுடன் பின்னால் வர....அதனை பார்த்துக்கொண்டிருந்த அனுபவசாலியான தாத்தாவிற்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது.....அவரால் அதனை ஓத்துக்கொள்ளவே முடியவில்லை.....கோபத்தை அடக்கி...இறுக்கத்துடன் முகத்தை வைத்துக்கொண்டார்.......

அனைவரும் விடைபெற்று சென்றவுடன், AV யின் கையை பிடித்தபடி தாத்தாவின் அருகே வந்தவள்...."தாத்தா, எனக்கு இவரை உங்க பேரனா ஏத்துக்குவீங்களா?....உங்களிடம் சொல்லி அனுமதி கேட்டபின்னர் தான் அம்மா அப்பாவிடம் சொல்லவேண்டும் என முதலில் உங்களிடம் கூறுகிறேன் தாத்தா" என ரெண்டு பிட்டை சேர்த்து போட....

உனக்கே தாத்தா நான் என்று அசராமல் பார்த்தபடி" என் பதில் என்னவாக இருக்கும் என உனக்கு தெரியாதா பாலா?" என்றவர் எனக்கு பேரனாக இருக்க முதல் தகுதி நம் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றார் அழுத்தமாக....

தொடர்ந்து வருவாள்......
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top