• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
என் இனிய நட்புக்களே,

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்........

உங்கள் கருத்துக்களை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள் மக்களே.....

அன்புடன்,
சுகி.

அத்தியாயம் 9

லஞ்ச் முடித்தவுடன் அர்விந்த், பிரஜினுடன் இணைந்து பேஷன் ஷோ பற்றிய டிஸ்கஷனுக்கு சென்றுவிட, AV பிரைம் மார்க் கிளையென்டுடன்சேர்ந்து லஞ்ச் உண்ண லீ மெரிடியன் ஹொட்டேலுக்கு சென்றவன் இன்னும் வரவில்லை........ பாலாவுக்கு 3 மணி வரை வேறு வேலை எதுவும் இல்லாததால், பியாவைப் பார்க்க டிசைன் ரூம் சென்றாள்.

டிசைன் ரூம், மிகவும் கலகலப்பாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டது. பியா அவளது கேபினில் உள்ள சிஸ்டமில் வேலை செய்து கொண்டு இருந்தாள். அப்பொழுது, ஹாய் சுவீட்டி, ஐயம் விக்கி அலைஸ் விக்னேஷ் நியூயார்க் டிசைன் டீம்ல சீனியர் டிசைனர் என்றபடி சிரித்த முகத்துடன் பாலாவின் முன் கையை நீட்டினான்.

சுவீட்டியா? அப்படி யாரும் இங்கே இல்லையே, ஏய் பியா சுவீட்டினு யாராவது உனக்கு தெரியுமாடி என்றாள் பாலா.

ஹான், நானே ரெண்டு நாலா தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்...ரெண்டு அழகான பொண்ணுங்க JDSக்கு வந்திருக்காங்களேனு அது உங்களுக்கு பொறுக்கலையா சுவீட்டி என்றான் பாலாவைப் பார்த்து சிரிப்புடன்....அவனது பார்வை கண்ணியத்துடன், நட்பை கண்ணில் தேக்கி வம்பிழுத்தது பாலாவை.....

ஹ்ம்ம்ம், என்ன பண்ணறது அங்கிள், நாங்களும் சந்தோசமா இருக்கலாம்னா எதுவும் தேறலியே.... பாலா இஸ் வெரி அப்செட் மச்சி என்றாள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கண்ணில் குறும்புடன்...

ஹா ஹா ஹா, உன்னை எவ்வளவு அழகா சுவீட்டினு கூப்பிட்டேன், என்னை பாட்டி காலத்துல பிறந்த மாதிரி அங்கிள் ஆக்கிகிட்டயே பாலா, இது உனக்கே நியாயமா என்றான் பாவமாக....

சரி சரி அழாதீங்க விக்கி, என் பெயரைக்கூட எனக்கு பிடிக்காம யாரும் கூப்பிடக்கூடாது எனும்போதே மின்னலாக AVயின் பிம்பம் வந்து போனது.

"கங்கிராட்ஸ் பாலா, இன்னைக்கு கிளைன்ட் மீட்டிங்ல கலக்கிட்டியாமே மைக் உன்னோட புகழைத்தான் பாடிட்டிருந்தான் என்றான். அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க விக்கி, எனக்கு தெரிந்தத சொன்னேன் அது கிளைண்ட்க்கு பிடித்தது. மைக் எல்லாம் எவ்வளவு பெரிய ஆளு, நானெல்லாம் இன்னும் காலேஜ் கூட முடிக்கல என்றாள் தன்னடக்கமாக.... இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு தனது கேபினுக்கு சென்றாள். AV அறையை கடந்து தான், அவள் கேபினுக்கு செல்ல முடியும்.

AV வந்துட்டாரா என பார்த்தபடி நகர, சரியாக அதே நேரம் கதவினை ஓபன் செய்து அவசரமாக மீட்டிங் ரூம் நோக்கி சென்றான். பாலா அவன் வருவதை கவனித்து, மோதாமல் இருக்க முயற்சி செய்தாலும், முடியாமல் அவனை இடித்து தள்ளினாள்....லஞ்ச்க்கு சென்று லேட்டாகி விட்டதால், தான் குறித்து வைத்த நோட்ஸை பார்த்தபடியே வந்த AV யும், பாலாவை கவனிக்கவில்லை.

View attachment 732

அவள் இடித்த வேகத்தில், AV சென்று தரையில் மல்லாக்க விழ, பாலன்ஸ் பண்ண முடியாமல் அவன் கால் தடுக்கிவிட்டு அவளும் அவன்மேலேயே விழுந்தாள். என்ன நடந்தது என புரியாமல் AV திகைக்க, அவள் அதிர்ச்சியில் முழிக்க.. ஒருவர்மேல் ஒருவர் படுத்தபடி, AV யின் அணைப்பிற்குள் இருந்தாள்.

சற்று சுதாரித்த AV, " ஏய் சுந்தரி, நான் என்ன உன் மெத்தையா, சுகமா மேல படுத்திட்டு இருக்கே.....அரிசிமூட்டை எந்திரிடி மீட்டிங்க்கு நேரம் ஆச்சு" என்றான் பெரிதாக சிரித்தபடி....

"ஆமா, இவரு அப்படியே குஷன் மெத்தை, நான் அப்படியே ஆசையா படுத்து தூங்கலாம்னு வந்தேன்... பேசற பேச்சை பாரு, யாரு வர்றதுன்னு கூட தெரியாம மோதி கீழே விழுந்து, என்னையும் விழவைச்சுட்டு இதுல அரிசிமூட்டைனு நக்கல் வேற.....யாருடா அரிசிமூட்டை?? என்றாள் கோபத்துடன் அவன் கையை விலக்கிவிட்டு எழுந்தபடி...டி போட்டதற்கு பதிலடியாக டா போட்டு......

நீதாண்டி, அரிசிமூட்டை அதுல என்ன உனக்கு சந்தேகம், ஒரு இடி இடிச்சதுகே நான் பத்தடி தள்ளி விழுந்திருக்கேன் பாரு என்றான் கண்சிமிட்டி சிரித்தபடி.....

யூ...யூ என பல்லை கடித்தபடி, ச்சீ, போடா என்று கூறியபடி தனது கேபின் நோக்கி சென்றாள்....அதை பார்த்த AV, எங்க மேடம் போறீங்க, மீட்டிங்க்கு வானு உன்னை வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா... இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன் பண்ணுன மாதிரி கட்டிப்பிடி வைத்தியம் பண்ணனுமா....என்றான் அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி....

அவன் பார்வையை பார்த்தவள் பல்லை வெறி வெறியென கடித்தபடி, நீ முதல்ல இங்கிருந்து போடா, நான் வரேன் என்றாள் திரும்பி நின்றபடி.....

இதுக்கு பேர் தான் அழகுல மயங்குறதோ, ஒருவாட்டி, கட்டிப்புடி வைத்தியம் பண்ணுனதுக்கே, என்னை நேரா பார்க்க முடியாம திரும்பி நின்னு வெக்கபடுறேயேடி, என் சுந்தரி.... என மேலும் மேலும் வம்பிழுத்தவன்...டைமை பார்த்து, சீக்கிரமா வா சுந்தரி என்றபடி மீட்டிங் ரூம் நோக்கி நடந்தான்......

ஒருவாறு, தன்னை நிலைப்படுத்தி கொண்டு, மீட்டிங்க்கு போகையில் டிஸ்கஷன் தொடங்கி இருந்தது. பிரஜினும் அர்விந்தும் வந்திருந்தனர். AV யின் பக்கத்தில் சாஷாவும் அமர்த்திருந்தாள். AV டிஸ்கஷனை தொடங்கி வைத்ததும், கிளைன்ட்டும், சாஷாவும் மாறி மாறி ப்ரசென்ட்டேஷன் கொடுத்தனர். இடையே AV, ஒருமுறை திரும்பி பாலா நார்மலுக்கு வந்துட்டாளா என பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான். AV மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான் அது அவனுக்கு தனி சோபையை தந்தது.

4.30 மணிக்கு, 15 மினிட்ஸ் பிரேக் விடப்பட்டது....இதுவரை பாலாவிடம், யாரும் இப்படி நடந்து கொண்டதில்லை.... பாலாவுக்கு நடந்ததையே எண்ணி எண்ணி கோபப்பட்டு, தலைவலி வந்திருந்தது.....எதையும் கவனிக்கவும் முடியவில்லை, எப்படா மீட்டிங் முடியும் என்ற நிலையில் இருந்தாள்......டீ எடுத்துக்கொண்டு, பிரஜினிடம் சென்று நின்று கொண்டிருந்தாள்......பாலா அருகில் வந்த AV, அவளுக்கு மட்டுமே கேக்கும் வாய்ஸில் " சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருகோணம்.....கையில் கையும் வெச்சு, கண்ணில் கண்ணும் வெச்சு, நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் அந் நேரம்" என பாடி அவளை வெறுப்பேற்றினான். ( வெறியேற்றினான்)

"மகனே, நீ மட்டும் என்கிட்டே சிக்குன சட்னி தாண்டி", என கூறியபடி டீயை உறிஞ்சினாள். மகனே இல்லமா, மாமனே என திருத்தினான் AV ...

AV யைப் பார்த்த பிரஜின், "என்னடா மச்சி, பேஸ் பளபளக்குது என்ன விஷயம்"?...என்றான் அவன் முகத்தை ஆராய்ந்தபடி.... அது, மீட்டிங்க்கு வர்ற வழியில ஒருத்தங்க கட்டிப்பிடி வைத்தியம் பண்ணிவிட்டாங்கடா அதுவும் எனக்கு மட்டும் ஸ்பெஷலா....என்றான் பாலாவைப் பார்த்தபடி......

ஹ்ம்ம்ம், AV கும், பாலாவுக்கும் ஏதோ நடந்திருக்குது போல என நினைத்துக்கொண்டான் பிரஜின்.

பாலா அதீத கோபத்துடன், அவ்விடத்தை விட்டு அகன்றாள்.... நீ நடத்துடா நடத்து, எவ்வளவு தூரம் வரைக்கும் போறேன்னு பார்க்கறேன் என நினைத்தபடி தனது சீட்டில் சென்று அமர்ந்தாள்.

ஒருவழியாக, மீட்டிங் முடிந்து, பெரிய ஆர்டர்க்கு சாம்பிள்ளாக ஒரு சிறிய ஆர்டரை முதலில் தருவதாக ஒப்புக்கொண்டனர்.

பாலா, முதல் ஆளாக மீட்டிங் ரூமை விட்டு வேளியேறியவள், பியாவுக்கு அழைத்து பார்க்கிங் ஏரியா வரச்சொல்லிவிட்டு.... AVயின் மஜரெட்டி குவாட்ரோபோர்ட் காரை நோக்கிச்சென்றாள். நான்கு வீல்லிலும் இருந்த ஏர்ரை பிடுங்கிவிட்டு, தனது கருப்பு குதிரையில் ஏறி சிட்டாக பறந்தாள்.....

தன்னை வரச்சொல்லிட்டு, இந்த பாலா லூசு எங்கே போனாள் என தேடி பார்த்த பியா, அவளது வண்டியைக் காணாததால் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.....

ஒருநாளும், தன்னை விட்டுட்டு போனதில்லையே என நினைத்துக்கொண்டே வீட்டில் நுழைந்த பியா, நேராக பாலாவை பார்க்க சென்றாள். இவள் நுழைந்ததை அறியாமல், AV யாம் AV அவன் ஒரு படுபாவி என மனம் போன போக்கில் திட்டிக்கொண்டு இருந்தாள்.

"என்னடி பாலா, என்னாச்சு நான் வந்ததுகூட தெரியாம புலம்பிட்டு இருக்கே" என கேட்க பாலா நடந்ததை சொல்லவும் பியா மெத்தையின் மேல் படுத்து உருண்டு பிரண்டு சிரித்தாள்...எத்தனுக்கு எத்தன் இருக்கான்னு இப்ப நம்பறேன் பாலா என்றாள் சிரிப்பை முழுங்கியபடி..........என் பொழப்பு இப்படி சிரிப்பா சிரிச்சு போச்சு நீ என்ன பண்ணுவ என தலையணையை எடுத்து பியாவை மொத்து மொத்தென மொத்தினாள் பாலா.

வேலை முடிந்து, காரை எடுக்க வந்த AV, " அட குரங்கே, உன் வேலையை காட்டிட்டாயே.....வாயை கொடுத்து எனக்கு நானே சூனியம் வெச்சுட்டேன் போலயே என புலம்பியபடி......போனை எடுத்து மெக்கானிக்கை வரச்சொன்னான்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top