Latest Episode Suvitha Akka Briyani

Premalatha

General
SM Team
#2
இரவு 7 மணி...
வாழ்க்கையில் முதன்முறையாக ஃபாக்டரியிலிருந்து இந்நேரத்திற்கு வீடு திரும்பி இருந்தான் மித்ரன்..முகம் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது..

தனது ருமிற்கு சென்று உடம்பு கழுவி மாற்றுடை அணிந்து கீழே இறங்கி வந்தவன் வாயோ, பாட்டி..பாட்டி என்று கூப்பிட ,கண்களோ தனது மனையாளைத் தேடியது..

பாட்டி, தாமரையை எங்கே என்று மித்ரன் கேட்க, அதே நேரம் பாட்டியும் தாமரையை எங்கே என்று மித்ரனிடம் கேட்டார்..

இங்க இல்லையா?பாட்டி,நான் இங்க இருப்பானுல்ல வந்தேன், என்று யோசனையோடே சொன்னான் மித்ரன்..
இல்லப்பா,ஃபாக்டரியிலிருந்து வரும்போதே கொஞ்சம் சோர்வாகத்தான் தெரிந்தா,அதான் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு சாப்பிட வாம்மா என்று நான் தான் ரூமிற்கு அனுப்பி வைத்தேன்,அப்புறம் சாப்பிடவும் வரலை,இப்போ டீ குடிக்கவும் வரலப்பா என்று பாட்டி சிறிது கவலையோடே சொன்னார்.

ஆமாம்...காலையில் தாமரையை தங்களது தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்ற மித்ரன் தன்னுடைய வேலை நீண்டு கொண்டே சென்றதால் பெண்ணவளை தனது காரில் டிரைவரோடு வீட்டுக்கு அனுப்பி இருந்தான்..
தனது உடன்பிறந்தவனை காண்பதற்கான காலையில் தன்னோடு ஆசை ஆசையாக சிறு பெண்போல் உற்சாகமாக ஃபாக்டரிக்கு வந்த தாமரையை நினைத்து அவனது இதழ்களில் சிறுநகை பூத்தது..

ஆனால் அங்கு கதிரோடு நடந்த சந்திப்போ கொஞ்சமும் புன்னகைக்கும் படியாக இல்லை...
காரிலிருந்து இறங்கி தன் மனையாளோடு இணைந்து நடந்த மித்ரனின் கண்கள் கதிரைத்தேட ,கூடவே தாமரையின் ஒருஜோடி தாமரைக்கண்களும் தேடின.ஆனால் அவன் வந்திருந்தால் தானே இவர்களின் கண்களுக்கு அகப்பட!!..

தமையனை காணவில்லை என்றவுடன் தாமரை தவிப்புடன்,என்னங்க "எங்க அண்ணன் வரலையா?" எனக் கேட்டாள்..
கொஞ்சம் பொறு தாமரை கண்டிப்பாக வருவான்,எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனக்கூறிய மித்ரனின் வார்த்தையில் இருந்த நம்பிக்கை நெஞ்சமதில் இல்லையோ??

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என நிமிர்ந்து நிற்கும் கதிர் வராமலேயே போய்விடுவானோ?கொஞ்சம் பதறத்தான் செய்தது மித்ரனுக்கு..
ஆனால் அதை வெளிக்காட்டினால் அவன் மித்ரனில்லையே!!

மனைவியோடு தனது கேபினுக்குள்வந்தவன் தனது சுழல் நாற்காலியில் தனது தாமரைப்பெண்ணை அமரவைக்க, அவளோ,ஐயையோ!! என்னங்க பண்ணுறீங்க என்று அமராமல் பதறினாள். இல்லை தாமரை இன்னைல இருந்து இருந்து இந்த மித்ரனுக்கே முதலாளி நீதான் அதனால நீ தாராளமாக இதுல உக்காரலாம்" என்று மித்ரன் கூறிய பதிலில் பெண்ணவளின் கண்கள் நாணத்தால் கவிழ்ந்தன..

அந்நேரம் உள்ளே வர அனுமதி கேட்டு மித்ரனின் கேபின் கதவில் மெதுவான ஒரு தட்டலை வைத்து கொண்டு கதவைத் திறந்துவந்தான் கதிர்
முதலா..ளி என்று அழைத்துக்கொண்டே நிமிர்ந்தவன் தாமரையைக் கண்டு சின்ன முகச் சுழிப்போடு பின்னோக்கி நகர்ந்தான்..

தெய்வத்தை கண்ட பக்தையைப்போல அண்ணனைக்கண்ட பெண்ணவளோ,அண்ணா...என்று கூவ,பதில் சொல்லாமல் திரும்பி நடந்தான் கதிர்..

அண்ணா..அண்ணா..நில்லுண்ணா..
உங்கிட்ட சொல்லாமல் நான் இவரைக் கல்யாணம் பண்ணுனது தப்பு தான்,என்னை மன்னிச்சுடுன்ணா,அதற்காக என்னோட பேசாமல்லாம் இருக்காதன்ணா என்று கதறினாள் தாமரை.

யாருக்கு யார் மா அண்ணன்,"இப்போ என்னோட பேசிக்கிட்டு இருக்கிறது என்னோட முதலாளியின் மனைவி மட்டும் தான்"..பதறாமல் வார்த்தைகளை கத்தியாய் சொருகினான் கதிர்..

அண்ணா..இவ்வளவுபெரிய மனுஷன் நம்ம அம்மா கதையைச் சொல்லி,எங்கிட்ட கையிரண்டையும் ஏந்தி என் பாவக்கணக்கை குறைக்க வழி செய்யம்மா என்று கேட்கையில் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலன்ணா..

ஓ..அதனால் தான் இந்த ஏழை அண்ணன் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாமல் கல்யாணம் பண்ண துணிஞ்சயோ, தாமரையின் பேச்சை இடைவெட்டினான் கதிர்..

கதிர்...நான் சொல்லுறதைக் கேளுடா..

வேணாம் முதலாளி,"ஒரு ஏழை அண்ணனின் உணர்ச்சிகளுக்கிடையே நீங்க வராதீங்க".. இப்பவும் நான் எனக்காகவோ,உங்களுக்காகவோ வேலைக்கு வரலை,என்னை இங்கே வேலைக்கு சேத்துவிட்டாரே ஒரு பெரிய மனுஷர் அந்த மனுஷனின் நல்ல மனசு இந்த வயசான காலத்தில் வருத்தப்பட்டுறக் கூடாதேங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் வர்றேன்.வேற போக்கத்து போய் ஒன்னும் வரலை,கொஞ்சமேக் கொஞ்சம் தன் ஆதங்கத்தை வார்த்தையில் காட்டினான் கதிர்.

அண்..ணா,கண்களில் நீர்வழிய அழைத்த தாமரையை பார்த்து,"
இன்னைல இருந்து அந்த உறவுக்கு அர்த்தமில்லாம போச்சு..
நீங்க முதலாளி வர்க்கம், நான் உங்க தொழிலாளி இதுதான் நமக்குள்ள உறவுமுறை,இதுக்கு சம்மதிச்சா நான் இங்க வேலைக்கு வரேன், இல்லைன்னா நான் மதுராந்தகன் ஐயா கிட்ட சொல்லிட்டு போய்டே இருக்கிறேன்..
எனக்கு இந்த மடம் இல்லைன்னா சந்தமடம் அவ்வளவுதான் " என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட தாமதியாமல் ரூமை விட்டு வெளியேறினான் கதிர்.
 

Premalatha

General
SM Team
#3
கதிரின் பதிலால் உறைந்து நின்ற தாமரையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து கொண்டு கிளம்பிய மித்ரனுக்கு திடீரென்று தொல்லைபேசிவழியே வந்த செய்தியால் வேறு வழியில்லாமல் மனைவியை தனியே வீட்டுக்கு அனுப்பியிருந்தான் மித்ரன்..

இவையனைத்தும் நினைவுக்கு வர பாட்டியிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,தாமரைக்கு கொஞ்சம் டயர்ட்டாக இருக்கலாம், இரண்டு நாளா கொஞ்சம் அலைச்சல் பாருங்க,என்று பாட்டியிடம் சாதாரணமாக சொல்லிவிட்டு, தன் மனைவிக்காக ஃபிளாஸ்க்கில் டீ வாங்கிக் கொண்டே சென்றான் "தி கிரேட் மித்ரன் "..

தாமரையின் அறைவாசலில் வந்து நின்று கதவை தட்டுவதற்காக கை வைக்க அது தானே திறந்தது தாழிடப்படாததால்,கூடவே இருட்டும் வந்து முகத்தில் மோதியது லைட் போடாத காரணத்தால்..

லைட்போடாமல் என்ன தான் பண்ணுறா, என்று நினைத்துக் கொண்டே சுவிட்ச்சை போட்டவன், சற்றே அதிர்ந்து தான் போனான் பெண்ணவளின் தோற்றம் கண்டு..

மெத்தையின் நடுவே கால்கள் இரண்டையும் தன் இரு கைகளால் கட்டி தன் முழங்காலில் தலை சாய்த்து சோக சித்திரமாக காட்சி தந்தாள் மித்ரனின் மங்கை..

பதறிப்போன மித்ரன் ஃபிளாஸ்க்கை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு,தாமரை என பெயருக்கும் வலிக்குமோ என மெதுவே அழைத்தான்..
தாமரையிடமிருந்து பதிலேதும் வராது போகவே,தாமரை என்று தோள் தொட்டு மெதுவே அழைத்தான்.
தட்டி எழுப்பியதில் அலங்கமலங்க முழித்தபடி,என்ன? என்று பதறினாள் தாமரை..

மித்ரனை கண்டவுடன் ஃபாக்டரியில் நடந்தவை அனைத்தும் அவள் மனக் கண்ணில் திரும்பவும் ஊர்வலம் போக, அண்ணா வேலையை விட்டுவிட்டு போகலையே? அங்க தானே இருக்காங்க என்று தவிப்புடன் கேட்டாள் கதிரின் தங்கை..

ஆமாம்.. என்று தலையாட்டிய மித்ரன்,நீ ஏன் சாப்டலை தாமரை,இப்போ டீ குடிக்க கூட கீழே ஏன் வரல என்று கேட்க..
வெடித்து சிதறினாள் பெண்..

"உங்களுக்காக பாத்து நான் இப்போ எனது அண்ணனை இழந்து நிக்குறேன்,இது தேவையா?எனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானே!!அவனுக்கு நான் செய்கிற கைமாறா இது"தாமரையின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது..

பெண்ணவளின் கண்ணீர் மித்ரனின் ஆழ்மனது வரை சென்று சுட்டது.
ஏதாவது செய்து அவளை புன்னகைக்கச் செய் என்று அவன் மனமே அவனிடம் மல்லுக்கு நின்றது..

சட்டென்று மெத்தையில் அவள் அருகே அமர்ந்து அவள் முட்டிலிருந்த அவளின் முகத்தை தனது மார்புக்கு இடம்மாற்றிக்கொண்டான் மித்ரன்..
இது எதுவும் தெரியாத பெண்ணவளோ பிதற்றினாள்...பிதற்றினாள்..பிதற்றிக்கொண்டே இருந்தாள்..
மித்ரனின் இடது கை தாமரையை அணைத்திருக்க வலது கை தலையை தடவிக்கொடுக்க,வாயோ எல்லாம் சரியாகிடும் கண்ணம்மா என்ற வார்த்தை யை விடாமல் உச்சரித்தது மந்திரம் போல..

அழுது ஓய்ந்து தானே தெளிந்த தாமரை அவன் நெஞ்சத்தில் நாடியை ஊன்றி "எல்லாம் சரியாகிடுமா?"என்று சிறு பிள்ளையாய் உதடு பிதுக்கி எல்லாம் அவனுக்குத் தான் தெரியும் என்கின்ற பாவனையில் கேட்டாள்..

அவளின் உதடுகள் பிதுங்கிய பாவனையில் மொத்தமும் தொலைந்த மித்ரன் தாமரையின் கண்ணோடு கண் பார்த்து இரு கன்னங்களையும் தன் கையில் ஏந்தி,சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கண்டிப்பாக கண்ணம்மா ,இல்லைன்னா மச்சானை தூக்கிடலாம் என்று கேலிக்குரலில் கூறினான்..

மச்சானா!!..என்று தனது புருவத்தை உச்சிக்கு தூக்கிய மனைவியிடம் ,"நீ என் பொண்டாட்டி என்றால்,அந்த தடியன் எனக்கு மச்சான் தானே என்று சத்தமாக சிரித்தான் மித்ரனவன்..

இதில் சற்றே புன்னகை முகமான பெண்ணவள்,என்னங்க, என்றழைக்க..
எ..ன்..ன..ங்..க என்று கேலியாக நீட்டி முழங்கி பதிலுக்கு ராகமிழுந்தான் மித்ரன்.
அவன் கேலியில் மெல்லச்சிணுங்கிய பெண்ணிடம்,
ஏங்க,காலையிலே யாரோ ஒரு அழகான பொண்ணு என்னைப் பார்த்து அத்தான் னு கூப்டுச்சே அந்த பொண்ணை நீங்க பாத்தீங்ளாங்க" என்று வம்பிழுத்தான் மித்ரன் கணவனாக..

இவனின் கேலியில் மலர்ந்து சிரித்த மங்கையவள் தன் வெட்கத்தை மறைக்க மன்னவன் மார்பிலேயே முகம் மறைந்தாள்..
பெண்ணவளின் இந்த செயலில் தன்னை மறந்த மித்ரனோ,வாகாய் தோளணைத்து குழைந்து நிற்கும் தாமரையின் கன்னங்களில் பக்கத்திற்கொன்றாய் தன் அச்சாரத்தை மெல்லவே பதித்தான் ஆசையோடு...

பெண்ணவளோ மனம் மயங்கி மன்னவன் தோள் சேர,தன் சொர்கத்தை சேர்த்தணைத்த மித்ரனின் காதுகளில் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த

"வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...

வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே

பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாக்ஷியோ மீனாக்ஷியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து...

நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன் சபாஷ்

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தால்
என்னையும் சீராக மாறி வைத்தால்

தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்கலம் பொன்கிடும் மந்திர புன்னகை
இதழில் வழிய இனிமை விளைய
---
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே"

என்ற பாடல் ஆணவனின் உதடுகளில் புன்னகையை விரியச் செய்தது..

தாமரை-மித்ரன் வாழ்வு இனி துலங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம் நட்பூக்களே...
 

Suvitha

Brigadier
SM Team
#9
@Suvitha Akka super 😤😤🥳🥳
எப்படி இப்படி எல்லாம்...
சூப்பர் டூப்பர்....

இந்த மித்ரன் என் மனதை கவர்ந்து விட்டான் ...
அக்கா morning show எல்லாம் இல்லையா🤣🤣🤣
ஹாஹா...இல்லடா...
 

Advertisements

Top