• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin kathiralaki Teaser

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
வித்தியாசமான கதைக்களம் சகி... ஆரம்பமே அசத்தல் ?
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
“நான் என்னடி பண்ணட்டும் விளையாட்டாக ஆரம்பித்த ஒரு விஷயம் இவ்வளவு சீரியஸாக முடியும் என்று நான் என்ன கனவா கண்டேன்..” என்றவள் மெல்ல நடக்க ஆரம்பித்தாள் ஜெயக்கொடி..

“நீ கனவு காணவில்லை என்றாலும் பரவல்ல கொடி.. கவிதை, கட்டுரை எழுதுகிறாய் என்று நினைத்தால் இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்கிற..” என்றவள் கேட்டவளுக்கு கோபம் தலைகேறியது..

‘அவள் எதைபற்றி கேட்கிறாள்..?’ என்று உணர்ந்த ஜெயக்கொடி மெளனமாக வந்தாள்.. அவள் மௌனம் ருக்குமணிக்கு எரிச்சலைக் கிளப்பிவிட்டது..

தன்னுடைய போனை எடுத்து முகநூல் பக்கத்தை எடுத்த ருக்மணி, “இது என்னது கொடி.?” என்றவளிடம் கேள்வி கேட்டாள்..

அவளின் கையில் இருந்த போனை வாங்கிய ஜெயக்கொடி, “என்னது..?” என்றவள் விளையாட்டாக கேட்டவள் அந்த பக்கத்தை பார்வையிட்டாள்..

“தமிழரசியின் கவிதை அரும்புகள்..” என்ற பக்கத்தைப் பார்த்தவளின் விழிகள் விரிய, “உனக்கு இது தெரியலையா..??” என்று என்னோட முகநூல் பேஜ்..” என்றவள் குறும்புடன் சிரித்துக்கொண்டே..

“அதில் நீ நேற்று என்ன போஸ்ட் போட்டு விட்டு இருக்கிறாய்..” என்றவளின் கோபம் எல்லையைக் கடந்து செல்ல ஆரம்பித்தது..

“அது எல்லாமே பொழுதுபோக்காக எழுத ஆரம்பித்தது.. இப்போ எழுதியே ஆகவேண்டும் என்ற நிலையில் கொண்டு வந்து நிறுத்துவிட்டது ருக்கு..” என்றவள் மெல்லிய குரலில் சொல்ல ருக்மணியின் முகத்தில் புன்னகை அரும்பியது..

அவள் சிரிப்பதை உணர்ந்த ஜெயக்கொடி, “என்னடி சிரிக்கிற..?? உனக்கு என்மேல் கோபம் வரவே இல்லையா..??” என்றவள் ஆச்சரியத்துடன் கேட்டவளின் கைகளை கோர்த்துக்கொண்டாள் ருக்மணி..
*****************
அந்த போஸ்ட் பார்த்தவன் வேகமாக எழுந்து அமர்ந்து, “வாவ்.. இவங்க நாவல் எழுத போறாங்களா..?” என்றவனின் முகத்தில் புன்னகை அலையாத விருந்தாளியாக வந்துவிட கமெண்ட் டைப் செய்தான் பிரபாகரன்..

திடீரென ஏதோ டைப் செய்து அனுப்பிய ருக்மணி அவளின் பக்கம் திரும்பி, “கமெண்ட் போட்டுவிட்டேன் போய் பாரு..” என்றவள் அதே குறுஞ்சிரிப்புடன்..

அவள் குறும்பு முகம் பார்த்த ஜெயக்கொடி, “அதுக்குள்ளவா..” என்று கேட்டபடி தன்னுடைய முகநூல் பக்கத்தைப் பார்த்தாள்..

“உங்களின் இந்த புது முயற்சிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மேடம்.. கதையின் தலைப்பே சொல்லாமல் கருத்து கேட்கிறீங்களே இது உங்களுக்கே நியாயமா..” என்ற கமெண்ட் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள்..

“அடியேய் இது எல்லாம் அநியாயம்.. நானே நேற்றுதான் போஸ்ட் போட்டிருக்கிறேன்.. அதுக்குள்ள கதையோட தலைப்பு கேட்டால் நான் என்னடி பதில் சொல்லட்டும்..? இது எல்லாம் என்ன அநியாயம் ருக்கு..” என்றவள் சிணுங்கலுடன் கூறினாள்.. ‘கீன்..’ என்ற ஓசையில் முகநூலின் பக்கத்தைப் பார்த்தாள் ஜெயக்கொடி..

அதை பார்த்த ஜெயக்கொடியின் முகம் மலர, “என்னடி..” என்று ஆர்வமாகக் கேட்ட ருக்மணி தோழியிடம் இருந்து செல்லை வாங்கிப் பார்த்தாள்..

“ஹாய் மேம், உங்களின் இந்த புது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகள்.. எப்போ ஸ்டோரி இன்றோ தருவீங்க..” என்ற கமெண்ட் பார்த்து, “யாரடி அது..??” என்றவள் ஆர்வத்துடன் கேட்டாள்..

“ப்ரோபைல் நேம் அன்பரசு என்று இருக்கு ருக்கு.. என்னோட கவிதை எல்லாமே படிப்பார்.. நிறைய பாராட்டுவார்..” என்றவள் சொல்ல, “என்னடி மரியாதை எல்லாம் தூள் பறக்குது..” என்றவள் வாய்விட்டு சிரித்தாள் ருக்மணி..

“அடியேய் அடிக்கடி என்னோட கவிதை படித்து கமெண்ட் பண்ணுவார்.. அதுக்காக தேவை இல்லாமல் பேசமாட்டார்.. அதுதான் வேற ஒன்னும் இல்ல..” என்றவள் சொல்ல அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட பஸில் இருந்து இறங்கி அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர்..
Enna சதுமா ippadi சாசுட்ட ?? ஐயோ எனக்கு ரோஸ் ?குடுக்கலாம் ஆனா இப்படி ?குடிக்கலாமா???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top