• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! -26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 26

இவர்கள் இருவரும் பார்க்கில் இருந்த அதே நேரத்தில் ஆபீசில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாங்க...

மின்மினி விடையாட்டை தொடங்கும் சமையத்தில் அங்கே வந்து சேர்ந்தான் மதன்.. அவனின் பார்வை முழுவதும் அவளின் மீது இருந்தது.. அவளின் குறும்புத்தனம் மிகுந்த முகம் கண்டவனுக்கு பிரபாவின் நினைவுதான் வந்தது..

இவள் அலுவலகத்தில் செய்யும் சேட்டைக்கும் சேர்த்து பிரபாவிடம் மதன்தான் வாங்கிக் கட்டிகொள்வான்..

அன்று ஒருநாள் பிரபா வெளியே சென்ற நேரத்தில் மின்மினி எல்லோரையும் உட்காரவைத்து பாட்டுப்போட்டியை நடத்திக்கொண்டிருந்தாள்..

ஜி.எம். என்று ஒருவன் அங்கிருப்பதை அவள் கருத்தில் கொள்ளவில்லை.. அன்றும் அப்படித்தான் பிரபா வெளியே கிளம்பிச் சென்றபொழுது மினி தன்னுடைய செட்டியைத் தொடங்கினாள்..

இவள் விளையாட்டை கொஞ்சநேரத்தில் பிரபா அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்.. அங்கே யாரும் வேலை செய்யாமல் விளையாடிக்கொண்டு இருக்கவும் அவனின் கோபம் தலைக்கேறியது..

யாரை என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு எல்லோரையும் திட்டிதீர்த்துவிட்டான்.. இதையெல்லாம் மதன் கவனிக்கவில்லை என்று அவனுக்கு சேர்ந்து திட்டு விழுந்தது..

பிரபாவிடம் திட்டுவாங்கிக் கொண்டே மின்மினியை முறைத்த மதன், “ஆமா எல்லாம் நான்தான் செய்ய சொன்னேன்..” என்று ஒருவார்த்தையில் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தான்..

அன்று மின்மினி அவனை நிமிர்ந்து பார்க்க, “நீ என்ன திட்டுவதாக இருந்தாலும் என்னைத் திட்டு.. அவங்க யாரும் இதற்கு காரணம் இல்ல..” என்றவன் ‘அவங்க’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான்..

அவனின் பேச்சில் மாற்றத்தை உணர்ந்த பிரபாவின் பார்வை மினியின் மீது படிந்தது.. தவறு தன்மேல் என்ற குற்ற உணர்ச்சியில் மின்மினி தலையைக்குனிந்து நின்றிருந்தாள்.. மதனின் பார்வையை வைத்தே மினிதான் இதற்கு எல்லாம் காரணம் என்று கணித்தான் பிரபா....

அன்று இரவு வீடு திரும்பும் பொழுது அவனிடம் நேரடியாகவே கேட்டான்..

“டேய் மின்மினி என்னோட பி.ஏ. அவளுக்காக நீ எதற்கு சப்போர்ட் பண்ற..” என்றவன் கோபத்தில் கேட்க மதன் அமைதியாக காரை வீடு நோக்கி செலுத்தினான்..

அவனின் மௌனம் பிரபாவைப் பாதிக்க, “மதன் அவங்க எல்லோரையும் நம்ம கண்ட்ரோல் பண்ணாமல் விட்ட நாளைக்கு கம்பெனி வளர்ச்சி பாதிக்கும்.. எனக்கு மட்டும் கோபத்தைக் காட்ட வேண்டும் என்று ஆசையா..? சிலநேரங்களில் நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும்..” என்றவன் நிறுத்திவிட்டு மதனின் முகம் பார்த்தான்..

அவனுடன் பழகிய இத்தனை நாட்களில் அவனைப்பற்றி தெளிவாக புரிந்து வைத்திருந்தான்.. அவன் எப்பொழுதும் அவனின் வேலையில் கண்ணும், கருத்துமாக இருப்பான்.. அது பிரபாவிற்கு தான் தெரியும்..

மதன் காரை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டே பிரபாவைத் திரும்பிப் பார்த்து, “எனக்கும் புரியுது பிரபா..” என்றான்..

“அனைத்தும் புரிந்தும் ஏண்டா இப்படி பண்ற..” என்று ஆற்றாமையுடன் அவன் கேட்க, “அவளால் நானே சில விஷயத்தில் இருந்து வெளியே வந்திருக்கேன்..” என்றான்..

“இப்போ என்னை பழைய மதனாக உணர வெச்சிருக்கா..” என்று அவனின் மனமாற்றத்தை பிரபாவிற்கு புரியவைக்க முயற்சித்தான்..

“வாட்..” அவன் திகைத்தவண்ணம் மதனைப் பார்த்தான் பிரபா..

“இதுக்கு பெயர் லவ் என்று என்னோட மனசு சொல்லல.. பட் அவளிடம் இருக்கும் குறும்புத்தனம் எனக்குள் இருக்கும் பழைய மதனின் வெளிகொண்டுவரா.. என்னால என்னோட மாற்றத்தை உணர முடியுது பிரபா..” என்றவன் தெளிவாகக் கூறினான்..

மதனின் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அவனுக்கு தெரியும்.. அதிலிருந்து அவனை வெளிகொண்டுவர பிரபா நினைத்தான்.. ஆனால் இன்று அவனே தன்னுடைய மனமாற்றத்தை சொல்ல பிரபாவின் மனதில் நிம்மதி பரவியது...

அவனின் உணர்வுகளுக்கு அவன் என்ன பெயர் வைத்தானோ அது பிரபாவிற்கு தெரியாது.. ஆனால் அதன் மூலமாக தன்னுடைய பழைய நண்பனை பார்க்க விரும்பியவன், மதனின் தோள்களை தட்டிவிட்டு மெளனமாக புன்னகைத்தான்..

அவனின் மௌனம் மதனுக்கு புதிராக அமைய அந்த புதிருக்கான விடையை மறுநாளே மதனிடம் கூறினான்.. அன்று காலையில் ஆ[ஆபீஸ் சென்றதும் மதன் காரைவிட்டு இறங்க சொல்லிவிட்டு,

“மதன் ஆபீசை ஒருமணிநேரம் பார்த்துக்கோ.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடித்துவிட்டு வருகிறேன்..” என்றவன் வெளியே கிளம்பிச் சென்றான்..

அவன் ஆபீஸ் உள்ளே நுழைந்து தன்னுடைய வேலையைக் கவனிக்க பிரபா வராததைக் கவனித்த மின்மினி தன்னுடைய பழைய குறும்புத்தனத்தை காட்ட ஆரம்பித்தாள்..

ஆனால் நேற்று மதன் தனக்காக பிரபாவிடம் திட்டுவாங்கியத்தை உணர்ந்தவள் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு குறும்புடன் தன்னுடைய விளையாட்டைத் தொடர்ந்தாள்.. ‘ஒரு மணிநேரத்தில் வருகிறேன்..’ என்று சொல்லிவிட்டுச் சென்ற பிரபா அன்று மாலைதான் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்..

அவன் உள்ளே நுழையும் நேரத்தில் எல்லோரும் அவர்களின் வேலையை சரியாக முடித்து வைத்திருந்தனர்.. ‘அவனுக்கு வேலை சரியாக நடந்தால் போதுமே..’ தன்னுடைய பேக்டரியில் இருந்தவண்ணம் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தான் பிரபா..

அனைவரும் பம்பரமாக சுழன்று வேலைகளை முடித்துவிட்டு விளையாட்டைத் தொடங்கினர்.. சரியாக ஒருமணிநேரம் விளையாடிவர்கள் மீண்டும் தங்கள் வேலைகளைக் கவனித்தனர்.. இதையெல்லாம் கவனித்த பிரபாவின் உதட்டில் புன்னகை அரும்பியது..

அவனுக்கு அவனின் நிறுவனமும் முக்கியம்.. அதே அளவு அவனின் நண்பனின் நலனும் முக்கியம்.. தன்னுடைய நண்பனின் மாற்றத்தைக் காணவே பிரபா தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்தான்..

அதன்பிறகு வந்த நாட்களில் இதுவே தொடர்கதையானது.. பிரபா அறியாமல் ஆபீசில் ஒரு துரும்பும் அசையாது என்று உணராமல் இருந்தாள் மின்மினி.. மதன் பிரபாவிடம் எதுவும் சொல்லாமல் இருப்பது மின்மினிக்கு நிம்மதியைக் கொடுத்தது..

மதன்தான் அனைத்திற்கும் காரணம் என்று அறியாமல் அவனிடமே என்று சண்டை போடுவாள்.. ருக்மணி இதையெல்லாம் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே இருப்பாள்.. ஹாஸ்டல் சென்றால் அலுவலகத்தில் நடப்பதை ஜெயாவிடம் சொல்லாமல் அவளுக்கு தூக்கமே வராது..

இப்படியே நாட்கள் நகர அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் மதன்.. அவனின் மனநிலை அறியாத மின்மினி தன்னுடைய ரூல்ஸ் கூறினாள்..

அதன்பிறகு, “எனக்கு ரொம்ப பிடித்த சாங் இது.. நான் பாட போறேன்.. அந்த பாடல் வரிகளை சரியாக கண்டுபிடித்து அடுத்த வரியை சரியாக பாடனும்..” என்றாள்..

பிளாக் கலர் சுடிதாரில் பச்சை வண்ணத்தில் டிசைன் இருக்க அந்த கலர் அவளுக்கு மிகவும் பொருத்தமாக அமர்ந்திருப்பதை தூரத்தில் நின்றவண்ணம் ரசித்தான் மதன்..

அவளுக்கு பக்கத்தில் இருந்த பெண்ணொருத்தி செல்லை எடுத்து நோண்ட, “இது கேம்.. உங்க மூளைக்கு சின்ன ரிலாக்ஸ்.. சோ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது..” என்றவள் திட்டவட்டமாக கூறினாள்..

எல்லோரும் செல்லை எடுத்து அவளின் கண் படும்படி வைத்துவிட, “சரி நான் பாடட்டுமா..” என்றவள் பாடலின் இடைப்பட்ட வரிகளைப் பாடி அவர்களைக் குழப்பத்தில் தள்ளிவிட்டாள்..

“வானம் எந்தன் மாளிகை.. வையம் எந்தன் மேடையே.. வண்ணங்கள் நான் என்னும் எண்ணங்கள்..” என்றவள் பாடலின் இரண்டே வரியை மட்டும் பாடினாள்..

அவளின் பாடலில் சுருதி தப்பாமல் ஒலித்திட அதில் தன்னை தொலைத்தான் மதன்.. மினியை கண்டநாள் முதலாக அவனின் மனதில் சின்ன சின்ன சலனங்கள் ஏற்படவே செய்தன..

அம்மாவே உலகம் என்று இருந்தவன் முதல் முறையாக மினியை மனதார விரும்பத் தொடங்கினான்.. அவனின் வாழ்க்கையில் அவன் அம்மா எடுத்த முடிவில் அவனின் வாழ்க்கையில் ஒரு புயல் வீசி ஓய்ந்துவிட்டது..

இப்பொழுது அவனின் மனம் பாலைவனமாக மாறியிருக்க, அதில் சோலையாக வந்தாள் மின்மினி.. மொத்தத்தில் அவளின் செட்டையில் மதன் தன்னை மறந்து அவளின் குறும்பில் பழைய மதனாக கொஞ்சம் கொஞ்சமாக மாறினான்..

அவனின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வருமா..? அவன் இழந்த சந்தோசம் மினியால் அவனுக்கு கிடைக்குமா..?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“ஐயோ என்னக்கா நீ திருவள்ளுவருக்கு தங்கச்சியா..? இரண்டு வரியை மட்டும் பாடினால் இந்த பாடல் எந்த படத்தில் என்று நான் எப்படி கண்டுபிடிப்பேன்..” என்று புலம்பினாள் ருக்மணி..

“ஹா ஹா.. மணிம்மா.. இது கேம்.. சோ நீ கண்டுபிடித்தே ஆகணும்.. ஆமா நான் திருவள்ளுவருக்கு தங்கச்சிதான்..” என்றாள் மினி குறும்புன்னகையுடன்..

அதற்கு இன்னொரு பெண், “ஐயோ நல்ல கேட்ட பாட்டுங்க..” என்று சொல்ல, “அப்படியா அப்போ சீக்கிரம் கண்டுபிடிங்க சுரபி..” என்றாள் மின்மினி..

மதன் அமைதியாக நின்றிருக்க மினியின் பார்வை அவனின் பக்கம் திரும்பிட, அவனின் முகத்தில் குறும்பு கூத்தாடியது..

அவனின் குறும்பைக் கண்டுகொண்டவள், ‘கண்டுபிடிச்சிட்டான் சிடுமூஞ்சி..’ என்று மனதிற்குள் அவனை திட்டிதீர்த்தாள்.. அவள் தன்னைக் கவனிப்பதை உணர்ந்தவன், அவளைப் பார்த்து சிரித்தான்..

மற்றொருவன், “எனக்கும் மனசில் இருக்கு.. பட் திடீரென்று நினைவு வரவே இல்ல..” என்றான்..

ஆளுக்கு ஒரு பதில் சொல்ல, “என்ன ஒரு பாட்டுக்கே டைம் போய்விடும் போல..” என்றவள் அவர்களைத் தூண்டுவிட்டாள் மின்மினி..

“உங்களுக்கு என்ன இரண்டே வரி பாடிட்டு போயிருவீங்க.. நாங்கதானே புலம்புவது..” என்று தலையைப் பிடித்துக்கொண்டு புலம்பினாள் ருக்மணி..

எல்லோரும் அந்த பாடலைப்பற்றிய சிந்தனையில் மூழ்கியிருக்க, “எங்கிருந்தேன் இங்குவந்தேன்.. இசையினிலே எனை மறந்தேன்.. இறைவன் சபையில் கலைஞன் நான்..” என்று மதனின் குரல்கேட்டு எல்லோரும் திரும்பி அவனைப் பார்த்தனர்..

மதன் அங்கே வந்து நின்றதை மின்மினியைத் தவிர மற்ற யாரும் கவனிக்கவே இல்லை.. எந்தநேரமும் வேலை வேலை என்று இருப்பவன் பாடலின் வரிகளை சரியாக பாடியது மின்மினியை வியப்பில் ஆழ்த்தியது..

அவன் சரியாக பாடியதில் மனம் மகிழ்ந்த ருக்மணி, ‘இன்னைக்கு எசப்பாட்டு இங்கிருந்து வருதே..’ என்ற யோசனையுடன் மதனும், மினியையும் மாறி மாறிப் பார்த்தாள்..

மின்மினி திகைத்து நின்றது, ‘உலகத்தில் எட்டாவது அதிசயம்’ என்னும் அளவிற்கு அவளையே இமைக்காமல் பார்த்தாள் ருக்மணி..பிறகு மதனின் பக்கம் பார்வையைத் திருப்பியவள், “மதன் அண்ணா செம வாய்ஸ்..” என்றாள்..

அவளுக்கு மதனை ரொம்பவே பிடிக்கும்.. மினி தினமும் செய்யும் சேட்டைக்கு எல்லாம் சேர்த்து பிரபாவிடம் அவன்தான் வாங்கிக் கட்டிகொள்வான்..

சிலநேரங்களில் அதை ருக்மணி நேரில் பார்த்திருக்கிறாள்.. அவன் அதையெல்லாம் பெரிதாக எடுத்துகொள்ளவே மாட்டான்.. அவன் இயல்பாக பேசுவது பிரபாவிற்கு பிடித்திருக்க, அவனும் மினியை அவளின் போக்கில் விட்டான்..

நிறுவனத்தில் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டால் பிரபா மற்ற வேலைகளை கவனிக்க வெளியே சென்றுவிடுவான்.. அந்த நேரத்தை மினி அவளுக்கு சாதகமாகப் பயன்படுத்த பிரபாவிடம் இருந்து அனுமதி வாங்கி இருந்தான் மதன்.. சின்ன விஷயம் என்று நாம் கண்டுகொள்ளாமல் விடும் பொழுது அந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து கண்முன்னே நிற்கும்..

சிலநேரம் தங்களை அறியாமல் நடக்கும் பிழைக்கு யாரும் பொறுபேற்க முடியாது.. அப்படித்தான் விளையாட்டு ஒருநாள் விபரீதமாக மாறியது.. நால்வரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது..

மின்மினி திகைப்பில் மதனின் முகம் பார்க்க அவன் இடது புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாக பார்த்தான்..

அதில் தன்னை மீட்டெடுத்தவள், “பனியின் துளிசூடியே கொடியில் மலராடுதே.. நதியின் அலை நாளுமே.. கரையில் இடும் தாளமே..” என்று பாட,

“மினிம்மா நீ திருக்குறள் சைஸில் பாடதே.. மீ பாவம்..” என்றாள் ருக்மணி வருத்ததுடன்..

“அதுக்குதான் உன்னோட மதன் அண்ணா இருக்கிறார் இல்ல அவரிடம் கேட்டு பாடு..” அவள் ருக்மணியை வாரினாள்..

மற்றவர்கள் அமைதியாக இருக்க மதனின் பார்வை மினியின் மீது படிந்தது.. அவளும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்..

அவன் அவளின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து, “காலமே நீயும் நீர்போல் வேகமாய் ஓடலாம்.. வருவார் போவார் நிலையாய் இங்கே நீதான் உண்டு அழகே.. ஹோய்..” என்றவன் அவள் விட்ட இடத்தில் இருந்து பாடினான்..

அந்த ‘அழகே’ என்ற வார்த்தை மட்டும் தனக்குரியது..’ என்று உணர்ந்தவள் விழியுயர்த்தி அவனையே பார்த்தாள்.. அவனின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அறியாமல் அவளின் மனதின் மாற்றம் உணராமல் அவளை விரும்ப ஆரம்பித்தாள் மின்மினி..

அவனின் வாழ்க்கை அந்த இரண்டு வரியில் இருக்க அவளுக்கு தன் மனதை புரியவைத்தவனின் ஆழ்ந்த குரலில் அவளின் மனம் அவளையும் மீறி மயங்கவே செய்தது..

அவளின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தாலும் மனதிற்கு இதமாக உணர்ந்தாள்.. நேசம் பார்த்தறியாத பாவை அவளின் மனதில் மெல்லிய தடுமாற்றம் உருவானது..

அதற்குள் எல்லோரும் வீட்டிற்கு செல்லும் நேரமாகிவிட எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினர்.. அவர்கள் நகர்ந்தும் மதன் தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்றுவிட மின்மினி அவனைப்பற்றி சிந்திக்க தொடங்கினாள்..

ருக்மணி கடைசியாக கிளம்பிட, “மணிக்கா இரு நானும் உன்னோடு வருகிறேன்..” என்று சொல்ல, “சரிக்கா வாங்க போலாம்..” என்று இருவரும் ஆபீசில் இருந்து கிளம்பினர்..

அவள் அலுவலகம் விட்டு வெளியே வந்தும் ஜெயாவிற்கு போன் செய்ய அது ஃபுல் ரிங் போய் கட்டாக, “இவள் போனை எடுக்காமல் என்ன பண்ற..” என்று கடுப்பானாள் ருக்மணி..

அவளுடம் இணைந்து நடந்த மின்மினி, “ஏதாவது மெசேஜ் பண்ணிருப்பாங்க.. நீ செக் பண்ணி பாரு..” என்றாள்..

அவள் சொன்னதைக்கேட்டு ருக்மணியும் இன்பாக்ஸ் செக்பண்ணி பார்க்க அதில் ஜெயா அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது..

“நேராக ஹாஸ்டல் வந்துவிடு ருக்கு..” என்று அனுப்பியிருந்தாள் ஜெயா..

“அவள் ஹாஸ்டல் போயிட்ட போல.. அதன் மெசேஜ் பண்ணிருக்கிற..” என்றாள் ருக்மணி புன்னகையுடன்..

மின்மினி சிந்தனையுடனே மெல்ல நடக்க, “மினிக்கா நீங்க எங்கே இருக்கீங்க..” என்று கேட்க நிமிர்ந்து ருக்மணியின் முகம் பார்த்தாள்..

“நான் இங்கே ஹாஸ்டலில் தங்கிருக்கேன் ருக்மணி..” என்று புன்னகையுடன் அவள் பதில் சொல்ல, “ஓஹோ ஹாஸ்டலில் இருக்கீங்களா..? அப்பா, அம்மா எங்கே அக்கா இருக்காங்க..?” என்று கேட்டாள்..

“அப்பா, அம்மா என்று யாரும் இல்ல ருக்மணி.. நான் மட்டும்தான் வருஷம் ஒருமுறை நான் வளர்ந்த ஆசிரமத்திற்கு மட்டும் போயிட்டு வருவேன்..” அவள் இயல்பாக சொன்னாலும் அவளின் நிலையை எண்ணி கவலைப்பட்டாள் ருக்மணி..

“ஸாரிக்கா..” என்றவள் தொடர்ந்து, “இங்கே குறையே இல்லாத மனிதன் இல்லை.. குறை இருக்கணும் இல்ல..” என்று கூறிய ருக்மணியை நிமிர்ந்து கேள்வியாக பார்த்தாள் மின்மினி..

“உனக்கு என்ன கவலை..?” என்று மினி அவளிடம் கேட்க, “எனக்கு என்னக்கா பிரச்சனை..?” என்றவள் சிரித்தவண்ணம் பதில் கொடுத்தாள்..

அதற்குள் ருக்மணியின் ஹாஸ்டல் வந்துவிட, “சரிக்கா நான் கிளம்பறேன்.. நீங்க பார்த்து கவனமாக போங்கக்கா..” என்றவள் சொல்ல சரியென தலையசைத்த மினி முன்னே நடந்தாள்..

அவள் செல்லும் வரை வெளியே நின்றிருந்த ருக்மணி நேராக தங்களின் அறைக்கு செல்ல ஜெயா தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு யூடி போஸ்ட் பண்ணிவிட்டு நிமிர்ந்தாள்..

ருக்மணி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய, “வா ருக்கு..” என்று அழைக்கக், “என்னடி இன்னைக்கு சீக்கிரம் வந்துவிட்டாய்..” என்று அவளிடம் கேட்டுகொண்டே பாத்ரூம் சென்று வந்தாள்..

அதற்குள் ஜெயா போஸ்ட் போட்டுவிட்டு, “இன்னைக்கு பூங்கா போனேன்.. அந்த பாப்பாவைப் பார்த்துவிட்டு நேரமாகிவிட்டது அதன் நேராக இங்கே வந்துவிட்டேன்..” என்று சிரிப்புடன் அவள் சொல்ல, “நேத்ரா நல்ல இருக்கிறாளா..?” என்று கேட்டாள்..

“ம்ம் நல்ல இருக்கிற..” என்றவள் சொல்ல, “ஸ்டோரி போஸ்ட் பண்ணிட்டியா..?” என்று ஜெயாவின் கையில் இருந்த லேப்டாப்பை வாங்கி பேஜ் பார்த்தவள், “ஏய் என்ன மொத்த கதையும் போஸ்ட் பண்ணிட்டியா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ருக்மணி..

“இல்லடி மொத்தம் பதினைந்து எபிசொட்.. நான் பத்து போஸ்ட் பண்ணிட்டேன்..” என்றவள் சொல்லிகொண்டிருக்க, “கீன்..” என்ற சத்தம்கேட்டு இருவரும் லேப்டாப் திரையைப் பார்த்தனர்..

ஜெயாவும், ருக்மணியும் சேர்ந்து திகைத்து விழித்தனர்.. இந்த திகைப்பு எதனால்..?
 




GREENY31

மண்டலாதிபதி
Joined
Apr 12, 2018
Messages
284
Reaction score
545
Location
Sattur
Hai Sis,

Romba Arumaiyannae update sis. ...:):)(y)
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Pattu padi enna ma problem create panna porangal. Prabha mama kithu ethuvum twist vachuduvaro. Jaya vin story kku prabha or viji reply vantirukumo.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Esa pattu session sema??? ippo lap ku ennachu . Nice epi sri????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top