• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் - 3

திடீரென பிரபாகரன் ஊருக்கு வருவதாகச் சொல்லவும் அவனை அதிர்வுடன் பார்த்தான் மதன்.. ஏனென்றால் பிரபா அவ்வளவு சீக்கிரம் எங்கேயும் வரவே மாட்டான்.. அவன் ஒரு முடிவெடுத்தால் அதில் மாற்றமே இருக்காது.. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக நடந்தது..

“என்ன பிரபா சொல்ற..? நான் உன்னைக் கூப்பிட்ட பொழுதெல்லாம் வரமாட்டேன் என்று சொல்லிட்டு இப்போ மட்டும் வரேன் என்று சொல்ல என்ன காரணம்டா..?” என்றவனிடம் விளக்கம் கேட்டான்..

“இந்தா நீ கேட்டதற்கு பதில் இதில் இருக்கு படி.. நான் சீக்கிரம் கிளம்பி வரேன்..” என்ற பிரபாகரன் மதனின் கையில் நியூஸ் பேப்பரைக் கொடுத்துவிட்டு வேகமாக சென்றான்..

அவனை வினோதமாக பார்த்த மதன், ‘இதில் என்ன இருக்கு..?’ என்று நியூஸ்பேப்பரைப் பிரித்து பார்த்தவனின் விழிகள் வியப்பில் ஆழ்ந்தான்..

“இந்த ஒரு மாதமாக, ‘பனிமலர்’ என்ற தலைப்பில் தமிழரசி என்ற மாணவி எழுதிய கவிதைகள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது..” என்று இருக்கவே, ‘இதுவென உண்மைதான்..’ என்றவன் தொடர்ந்து படித்தான்..

“அதனால் அந்த கவிதைகளை அதே தலைப்பில் புத்தமாக வெளியிட்டு இருக்கிறோம்..” என்ற நியூஸ் படித்தவனின் உதட்டில் புன்னகை அரும்பியது..

அதோடு நிறுத்தாமல் அவன் மேலும் வாசிக்க, “துறையூரில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைப்பதாக..’ என்ற நியூஸை வாசித்த மதனின் முகம் பிரகாசமாக மாறிவிட, ‘நண்பா உனக்கு எங்கோ லக் இருக்குடா..’ என்று நினைத்தவன்,

‘மாணவி என்று போட்டிருக்காங்க.. இந்த பொண்ணு காலேஜ் படிக்கும் மாணவியா..? இல்ல ஸ்கூல் படிக்கும் மாணவியா..?’ என்றவன் தீவிரமான சிந்தனையில் நின்றிருந்தான்..

அடுத்த சிலநொடியில் கிளம்பி வந்த பிரபா மதனின் முகத்தைப் பார்த்தான்.. அவனின் முகபாவனை நொடிக்கு நொடி மாறுவதை வைத்தே அவனின் மனதைப் படித்தவனின் உதட்டில் புன்னகையின் சாயல் வந்து சென்றது..

“அதைப்பற்றி உனக்கு என்னடா கவலை..?” என்றவன் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் மதன்..

அவன் திடுக்கிடுவதைக் கவனித்த பிரபாவிற்கு சிரிப்பு வந்துவிட, “என்னடா இதுக்கு எல்லாம் ஷாக் ஆகிற..” என்றவன் வாய்விட்டு சிரித்தான்..

“நீ இன்னைக்கு என்று பார்த்து எனக்கு அடிக்கடி ஷாக் கொடுத்த நானும் என்னடா பண்ணுவேன்..” என்றவன் அங்கேயே நின்றிருந்தான்..

“இன்னும் என்னடா நின்னுட்டே இருக்கிற.. வா வா.. உங்களோட ஊருக்கு போய் முதலில் அந்த புக் வாங்கியே ஆகவேண்டும்..” என்றவன் பேசியபடியே அறையைவிட்டு வேகமாக வெளியே சென்றான்..

“டேய் பிரபா காலால் நட.. தலைகீழாக நடக்காதே..” என்றவன் பிரபாவைக் கிண்டல் செய்ய, “நான் எல்லாம் காலில்தான் நடக்கிறேன் ஏன் உனக்கு கண்ணு தெரியல..?” என்றவன் கடுப்புடன் கேட்டான்..

“மதன் சீக்கிரம் கிளம்புடா.. புக் எல்லாம் முடிந்துவிட போகிறது..” என்றவன் எரிச்சலோடு அவனை அவசரபடுத்தினான்..

“ஆனாலும் இந்த வேகம் தாங்காதுடா..” என்று சலித்துக்கொண்டே சார்ட் எடுத்து போட்டவன், “என்னோட பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லன்னு சொல்ற.. அதுவரை நிம்மதிடா..” என்றவன் கிளம்பினான்..

அவன் கிளம்பியும் கூட, “என்னடா நீ இவ்வளவு லெட் பண்ற..” என்றவன் வாட்சில் மணியைப் பார்த்துக்கொண்டே கேட்டான்..

“இது உனக்கே கொஞ்சம் ஓவராக தெரியல..” என்றவன் கடுப்புடன் கேட்டதும், “தெரியல..” என்றவன் அழுத்தத்துடன் சொல்லிவிட்டுப் படியிறங்கிச் சென்றான் பிரபா..

அவன் மின்னல் வேகத்தில் மாடிப்படிகளில் இறங்கிச் செல்ல, “பிரபா உனக்கு பொண்ணு பார்க்க போகும் பொழுதுகூட நீ இவ்வளவு வேகமாக இருப்பாயா என்று தெரியலடா..” என்றவன் அவனைக் கிண்டலடித்தான் மதன்..

அவனுக்கு இணையான வேகத்தில் படியிறங்கிச் சென்றவன், “இன்னைக்கே பொண்ணு பார்க்க வேண்டிய சூழல் அமைந்தால் நான் என்ன வேண்டாம் என்ற சொல்ல போறேன்..” என்றவன் குறும்புடன் சொல்ல வியப்பில் ஆழ்ந்தான் மதன்..

அவன் பேச்சில் இருந்தே அவனின் மனநிலையை உணர்ந்துகொண்டவன், “மச்சான் நீ புயல் வேகத்தில் இருக்கிற..” என்றவன் சொல்ல, “அப்படியா..?” என்ற இருவரும் ரோட்டில் நடக்க ஆரம்பித்தனர்..

“இந்த புயலின் வேகத்தை தன்னோட பார்வையில் கட்டிவைக்க எந்த பாவை நேரில் வராளோ எனக்கு தெரியலடா..” என்றவன் பிரபாவை வாரினான்..

“அது வேற யாரும் இல்லடா என்னோட பனிமலர்தான்.. அந்த மலரின் பார்வை என்மேல் பட்டால் நான் பனிபோல உருகிவிடுவேன்..” என்றவன் ரசனையோடு கூறினான்..

“இவன் ஒரு மாதம் கவிதை படிச்சதும் போதும்.. இவனோட தொல்லை தாங்கலடா ஆண்டவா..” என்றவன் சலித்துக்கொண்டு பிரபாவை வாரினான்..

இருவரும் பேசியபடியே பஸ்டாண்டிற்கு வந்து துறையூருக்கு பஸ் ஏறினர்.. அவன் பஸில் ஏறியதில் இருந்தே இயற்கைகாட்சியை ரசித்தவண்ணம் வர மதனோ நன்றாக தூங்கிக்கொண்டே வந்தான்..

பிரபாவின் மனமோ, ‘இன்னைக்கு என்னவோ நடக்க போகிறது..’ என்று தோன்றியதும், ‘என்னவாக இருக்கும்..??’ என்ற யோசனையில் இருந்தான்..

சிலநேரங்களில் பஸ்ஸில் செல்வது கூட நம் மனதிற்கு இதமாக இருப்பதை அந்த பயணத்தில் மனதார உணர்ந்தான் பிரபாகரன்.. தன்னருகே அமர்ந்துகொண்டே தூங்கும் நண்பனைப் பார்த்தவனுக்கு சிரிப்பு மட்டுமே வந்தது..

துறையூர் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ் நுழைந்ததுமே, “டேய் மதன் எழுந்திருடா.. துறையூர் வந்துவிட்டது..” என்று மதனை எழுப்பினான் பிரபாகரன்..

மெல்ல கண்விழித்த மதன், “ம்ம் நம்ம ஊருக்குள் வந்தாச்சா..?” என்றவன் பஸ்ஸைவிட்டு இறங்கியதும், “பிரபா வாடா எங்க வீட்டுக்கு போயிட்டு அப்புறம் புத்தககண்காட்சி நடக்கும் இடத்திற்கு போகலாம்..” என்று அழைத்தான்..

“இல்லடா நான் புத்தககண்காட்சிக்கு போறேன்.. நீ போய் உங்க அம்மாவைப் பார்த்துவிட்டு வரும் பொழுது எனக்கு ஒரு போன் மட்டும் பண்ணுடா..” என்றவன் முடிவைச் சொல்லிவிட்டான்..

அவனை, ‘இனிமேல் மாற்றமுடியாது..’ என்றவனை நன்றாக அறிந்த மதனோ, “சரிடா நான் அம்மாவைப் பார்க்க போறேன்.. நீ போய் அந்த புக் வாங்கிட்டு வா..” என்றவன் தொடர்ந்து,

“அங்கிருந்து வெளியே வந்ததும் எனக்கு ஒரு போன் பண்ணுடா..” என்று சொல்லிவிட்டு மதன் ஒரு திசையில் செல்ல, “சரிடா நீயும் சீக்கிரம் வா.. நான் அம்மாவைக் கேட்டேன்னு சொல்லுடா..” என்ற பிரபாவோ மற்றொரு திசையில் சென்றான்..

இதற்கிடையில்..

திருச்சியில் இருக்கும் பெரிய ஆசரமம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அந்த ஆசரமத்தில் தங்கி இருந்தனர்.. சிறு வயதில் இருந்து அங்கே வளரும் பிள்ளைகள் பட்டபடிப்பு முடித்து வெளியே செல்லும் வரை அவர்களை நன்றாக பார்த்து கொள்ளும் பொறுப்பை திறம்பட செய்து வருகிறது அந்த ஆசரமம்..

அங்கிருந்து வெளியேறும் எல்லோருமே தங்களால் முடிந்த உதவியை அந்த ஆசரமத்திற்கு செய்வதால் இல்லை என்ற நிலை இல்லாமல் ஆசரமம் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது...

காலையில் விடிந்ததும் கண்விழித்த மின்மினி தன் முன்னே இருக்கும் கண்ணாடி பார்த்து, “இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய என்னோட மனமார்ந்த வாழ்த்துகள்..” என்றவள் குறும்பு புன்னகையுடன் எழுந்தாள்..

அழகான வில் போன்ற புருவம், கெண்டை மீன் போல கண்கள், மொட்டு போல மூக்கு, சிவந்த இதழ்கள்.. சிவந்த உருவமும் ஐந்தரை அடி உயரமும், சற்று பூசினார் போல உடலமைப்பு உடைய பதினாறு வயது பாவை அவள்..

மின்மினி பெயருக்கு ஏற்றது போலவே சிலநொடியில் மனதை கவர்ந்திழுக்கும் சக்தி அவளிடம் இயல்பாகவே இருந்தது.. எதற்கும் கவலைபடாமல் எது வந்தாலும் வாழ்ந்து பார்க்கலாம் என்ற எண்ணம் உடையவள்..!

அவள் குளித்துவிட்டு கிளம்பி நின்றிருக்க, “மினி உன்னை சிங்காரம் ஐயா கூப்பிட்டாங்க..” என்று ஆசரமத்தின் வேலை செய்யும் பெண் போற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்..

“இதோ வரேன் என்று சொல்லுங்க..” என்றவள் கண்ணாடி முன்னே நின்று நெற்றியில் போட்டு வைத்தாள்..

“நேற்றே டொனேஷன் வாங்க காலையில் கிளம்பி இருக்க சொன்னாரு.. நானும் ரெடி..” என்றவள் வேகமாக தன்னுடைய ஹென்பேக் எடுத்துகொண்டு அறையைப் பூட்டிவிட்டாள்..

அதற்குள் அவளைத்தேடி சிங்காரம் வந்துவிட, “அப்பா நான் ரெடி..” என்றவள் பரபரப்புடன் சொல்ல, “என்னால இன்னைக்கு வர முடியாது மினி.. அதனால் நீ அங்கே தனியாகப் போக வேண்டாம்..” என்றவர் சொல்ல மினியின் முகம் வாடிவிட்டது..

அதைக் கவனித்த சிங்கரமோ, “நம்ம ஆசரமத்திற்கு டொனேஷன் முக்கியம் தான்.. ஆனால் உன்னை அங்கே தனியாக அனுப்ப எனக்கு விருப்பம் இல்லடா.. அப்பா உன்னோட நன்மைக்குதான் சொல்வேன் புரிஞ்சிகோடா..” என்றார்

மின்மினி ஆசரமத்தில் வளர்ந்ததாலோ என்னவோ அவளின் மீது சிங்காரத்திற்கு தனிபாசம்.. அவளின் மீது அவருக்கு அக்கறையும் அதிகமாகவே இருந்தது.. அதனால்தான் அவளை தனியாக அனுப்ப அந்த அளவு யோசிக்கிறார்..

அவளை நம்பி ஒரு பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தால் அதை சரிவர செய்து கொடுப்பாள்.. அவள் கையில் எடுக்கும் காரியத்தில் அவள் தோல்வி பெற்றாள் என்ற சரித்திரம் இதுவரை இல்லை..

“ஏன் அப்பா போக வேண்டாம் என்று சொல்றீங்க..??” என்றவள் புரியாமல் கேட்டதும், “நீ போக வேண்டாம்.. அது எல்லாம் நல்லது இல்ல..” என்றவர் அவளிடம் எப்படி சொல்வது என்று தயங்கி சிலநொடி பேசாமல் இருந்தார்..

“என்னப்பா ஏதோ சொல்ல வந்துட்டு அப்படியே அமைதியாக இருக்கீங்க” என்றவள் கேட்டதும் நிமிர்ந்தவர், “நீ என்னோட பொண்ணு மாதிரிமா.. அதனால் அந்த இடத்திற்கு நீ போகவேண்டாம்..” என்றவர் அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டார்..

அவள் மெளனமாக நின்றிருக்க, “இன்னைக்கு வேண்டாம் மினி.. டொனேஷன் அவங்களே கொண்டு வந்து கட்டுகிறேன் என்று சொல்லிடாங்க.. அதனால் நீ துறையூர் போய் நம்ம லைப்ரரிக்கு சில புக் மட்டும் வாங்கிட்டு வா..” என்றார் வாய்க்கு வந்த பொய்யை சொல்லி அவளை சமாதானம் செய்தார்..

“வாவ்.. அப்பா எந்த புக் எல்லாம் வேண்டும் என்று சொல்லுங்க நான் வாங்கிட்டு வந்துவிடுகிறேன்..” என்றவள் குஷியாக சொல்ல அவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.. அவர் லிஸ்ட் கொடுத்து பணமும் கொடுத்தார்..

அதை வாங்கிக்கொண்ட மினி, “அப்பா எனக்காக ஒரு நல்ல கவிதை புத்தகம் மட்டும் வாங்கிக்கிறேன்..” என்றவள் சொல்ல அவரும் சரியென தலையசைத்தார்.. அவரிடம் இருந்து விடைபெற்று ஆசரமத்தில் இருந்து கிளம்பினாள் மின்மினி..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அன்று சனிகிழமை பள்ளிக்கூடம் விடுமுறை.. வீட்டில் அடைந்து வைத்தது போல ஒரு உணர்வு ருக்மணியின் மனதில் எழுந்தது.. அவளோ ‘என்ன செய்யலாம்..?’ என்றவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, “ருக்மணி..” என்ற அழைப்போடு அவளைத்தேடி வீட்டிற்கே வந்தாள் ஜெயக்கொடி..

அவளின் குரல்கேட்ட ருக்மணி, “வா ஜெயா..” என்று அழைத்தவண்ணம் வேகமாக எழுந்தவள் வாசலை நோக்கி சென்றாள்..

வீட்டின் வாசலில் நின்றிருந்த தோழியின் முகம் பார்த்த ருக்மணி, “வா ஜெயா என்ன என்னைத் தேடி வீடு வரைக்கும் வந்திருக்கிற..?” என்று கேட்டதும்,

“இல்ல ருக்மணி வீட்டில் இருக்க ஏதோ மாதிரி இருக்கு.. அதனால் பக்கத்தில் நடக்கும் புத்தககண்காட்சி வரையில் போறேன்.. நீ வருகிறாயா..?” என்று கேட்டதும் அவளின் முகம் மலர்ந்தது..

“எனக்கும் உன்னோட புக் வாங்க ரொம்ப ஆசையாக இருக்குடி.. இரு நான் அம்மாவிடம் கேட்கிறேன்..” என்றவள் அம்மாவின் அருகில் சென்றாள்..

“அம்மா நானும், ஜெயாவும் சேர்ந்து பக்கத்தில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வரோமே..” என்றவள் தாயிடம் அனுமதி கேட்டாள்..

தமிழரசியின் கவிதை புத்தகமாக வெளியே வந்துவிட்ட விஷயம் ரேகாவிற்கு தெரிந்த காரணத்தால், “சரிடா.. நீயும் ஜெயாவும் போயிட்டு வாங்க.. ரொம்ப ஜாக்கரதையாக இருக்கணும்.. சீக்கிரம் வீட்டுக்கு வந்திருங்க..” என்றவர் இருவரும் செல்வதற்கு அனுமதி கொடுத்தார்..

“வாவ் தேங்க்ஸ்ம்மா..” என்றவள் வேகமாக கிளம்பி ருக்மணி தன்னிடம் இருந்த பணத்தைக் கையில் எடுத்துகொண்டு வெளியே வந்தாள்..

ஜெயக்கொடி அவளுக்காக காத்திருக்க இருவரும் வீட்டில் இருந்து மெல்ல நடந்து புத்தககண்காட்சி நடக்கும் இடத்திற்கு சென்றனர்.. அவர்கள் இருவரும் புத்தககண்காட்சி நடக்கும் இடத்திற்குள் சென்றனர்..

கிட்டதட்ட ஒரு மணிநேரம் மெல்ல நடந்தவர்கள் புத்தககண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.. இருவரும் புத்தககண்காட்சி நடக்கும் ஹாலிற்குள் நுழைய அவர்களின் பின்னோடு பிரபாகரனும் உள்ளே நுழைந்தான்..

ஜெயகொடியும், ருக்மணியும் பேசிக்கொண்டே ஒவ்வொரு கடையாக சுற்றிவந்தனர்.. அதேபோல பிரபாகரனும் தமிழரசியின் கவிதை புத்தகத்தை ஒவ்வொரு ஸ்டாலிலும் தேட ஆரம்பித்தான்..

அவனுக்கு இரட்டடி முன்னே நடந்து சென்ற ஜெயகொடிதான் அந்த தமிழரசி என்று அறியாமல் அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு கடைக்கு உள்ளே சென்று அவளின் புத்தகத்தைத் தேடினான்..

அவள்தான் தமிழரசி என்று அவனுக்கு தெரிந்தால் பிரபாவின் மனநிலை என்னவாக இருக்கும்..?? ஆனால் அதெல்லாம் இயல்பாக நடக்க வாய்ப்பு இருக்குமா என்ற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை..

தங்களைச் சுற்றிலும் அனைத்தும் புத்தகம்.. நமது அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் புத்தகங்கள்.. நெஞ்சக் கசக்கும் நிஜ கட்டுரைகள்.. மனதை மயக்கும் கவிதைகள்.. நெஞ்சை அள்ளும் கதை புத்தகங்கள் என்று உலகமே அவர்களைச் சுற்றி இருப்பது போல இருவருமே உணர்ந்தனர்..

அங்கிருந்த புத்தகத்தையெல்லாம் பார்த்த ருக்மணியோ, “ஜெயா கொஞ்சம் சுற்றி பாரேன்.. நம்மை சுற்றிலும் எத்தனை புத்தகம்..” என்றவள் அந்த சூழலை ரசித்தவண்ணம் கூறினாள்..

“ஆமா ருக்கு.. நம்மை சுற்றிலும் ஏராளமான புத்தகம் இருக்கிறது.. ஆனால் என்ன ஆசைப்பட்ட புத்தகத்தை எல்லாம் வாங்க நம்மோட கையில் பணம் இல்லையே..” என்றவள் வருத்ததுடன் கூறினாள்..

“நம்ம கையில் பணம் இருக்கும் நேரத்தில் புத்தகம் வாங்கவோ இல்லை அதைப் படிக்கும் மனநிலையோ நம்மிடம் இருக்காது..” என்றவள் சொல்ல, “நிஜம்தான் ஜெயா..” என்றாள் ருக்மணி..

“நம்மிடம் பணம் இருக்கும் நேரத்தில் மனசில் நிம்மதி துளியும் இருக்காது ருக்கு.. அப்புறம் எப்படி நம்ம வாழ்க்கையை ரசிக்க முடியும் சொல்லு..” என்றவள் தத்துவம் சொல்ல அவளை இடைமறித்தாள் ருக்மணி..

“வாழ்க்கை எப்பொழுதும் சில ஏற்றயிறங்கங்களுடன் இருக்கும் ஜெயா.. அதற்கு தகுந்தாற்போல் வாழ கற்றுகொண்டால் வாழ்க்கை எப்பவும் நிம்மதியாக இருக்கும்..” என்றவள் புன்னகையுடன் வாக்கியத்தை முடிக்க ஜெயாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது..

என்னதான் சிறுவயது என்றாலும் கூட இருவரின் மனநிலையும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான சிந்தனையுடன் இருந்தது.. வாழ்க்கை எப்படி அமைத்திருந்தாலும் அதை வாழ்ந்து பார்க்கும் மனப்பக்குவம் இருவரிடமும் இருந்தது..

அவர்கள் இருவரும் அங்கிருக்கும் 36 நம்பர் புக் ஸ்டால் உள்ளே நுழைந்தனர்.. அவளை முதலில் பார்த்த அந்த கடைகாரர், “வாம்மா ஜெயா..” என்று அழைத்தார்..

அவளும் புன்னகையோடு உள்ளே நுழைய, “உன்னோட கவிதை எல்லாம் புத்தகமாக வந்திருக்கிறது அங்கே பாரும்மா அந்த ரேக்கில் அடிக்கி இருக்கிறேன்..” என்றவர் கைகாட்டிய திசையைப் பார்த்தாள் ஜெயக்கொடி..

அவளின் பின்னோடு வேகமாக சென்ற ருக்மணியோ, “வாவ் என்னோட உயிர்தோழி எழுதிய கவிதைகள் இன்று புத்தக வடிவத்தில் நினைக்கும் நினைவே எவ்வளவு தித்திப்பாக இருக்கு தெரியுமா ஜெயா..” என்று கேட்டாள் ருக்மணி..

அவளோ தான் எழுதிய கவிதைகள் அனைத்தும் சேர்த்து பனிமலர் என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக வந்திருப்பதைப் பார்த்தவளின் உள்ளத்தில் ஒருவிதமான பரவசம் வந்து சென்றது....

அந்த மாதிரி உணர்வை வார்த்தைகளால் வடிக்க முடியாது.. சில நேரங்களில் நாம் எழுதிய புததகத்தை நம் கையால் வருடும் பொழுது மனதில் எழும் ஒருவகை உணர்விற்கு விளக்கம் கொடுக்க யாராலும் முடியாது..

அந்த உணர்வில் நின்றிருந்த ஜெயாவைப் பார்த்த ருக்மணி, “என்னடி சிலை மாதிரி நிற்கிற.. உன்னோட கவிதை புத்தகம் கையில் எடுத்து பாருடி..” என்றவள் சொல்ல தன்னுடைய கவிதை புத்தகத்தை கையில் எடுத்து பார்த்தாள்.. அவளின் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் போல பொங்குவதை மனதார உணர்ந்தாள்..

அதற்குள் அவளின் கையில் இருக்கும் புத்தகம் மட்டும் இல்லாமல் தனக்கும் ஒரு கவிதை புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்ட ருக்மணி, “இந்தாங்க அண்ணா இரண்டு புத்தகத்திற்கு பணம்..” என்று பணத்தைக் கட்டிவிட்டு ஜெயாவின் அருகில் வந்தாள்..

அதற்குள் கையில் இருந்த கவிதை புத்தகத்தின் கடைசி பக்கத்தில்,

“பனியில் நனைந்த மலரொன்று

கதிரவனின் வரவைக் கண்டு

உள்ளமெங்கும் ஒரு மின்னல்

நொடிபொழுதில் வந்து செல்ல

பனிமலர் பெண்ணவள் தண்ணீரில்

ஒற்றைக்காலில் நின்று பலநாளாக

உனக்கென தவமிருப்பதை நீ

அறியாயோ என் காதலனே..

பனியில் நனைந்த மலரை

மாலையென தொடுத்து

உன் கழுத்தில் நான் மாலையிட

இந்த மலரின் இதயத்தில்

உன்னை காதல் சிறைகைதியாக்கி

காவல் வைக்க காத்திருக்கிறேன்..

என் இதயக்கூட்டில் சிறையிருக்க

என்னைத்தேடி நீ வருவாயா..??”

என்றவள் கவிதை எழுதிவிட்டு அந்த கவிதையின் கீழே, “தமிழரசி” என்று கையெழுத்து போட்டாள்..

அந்த கவிதையைப் படித்த ருக்மணியோ, “ஏய் என்னடி பண்ணிட்டு இருக்கிற..” என்று கேட்டதும், “கவிதை எழுதினேன் ருக்கு..” என்றவள் சொல்லிவிட்டு அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்தாள்..

அவளின் அந்த செயலில் குழம்பிய ருக்மணி, “இப்போ எதற்காக அந்த புத்தகத்தில் கவிதை எழுதினாய்..? அப்புறம் எதற்கு அந்த புத்தகத்தை அங்கேயே வைக்கிற..” என்று புரியாமல் கேட்டாள்..

அவளின் கேள்வியில் வாய்விட்டுச் சிரித்த ஜெயக்கொடி, “என்னோட லக் எப்படி இருக்குன்னு தெரிந்துகொள்ள எழுதினேன் ருக்மணி..” என்றவள் தொடர்ந்து,

“இந்த புத்தகத்தில் என்னோட மனதை எழுதி இருக்கிறேன்.. இந்த புத்தகம் எனக்கு வரபோகும் கணவரின் கையில் இருந்து கிடைத்தால் என்னைவிட லக்கி யாருமே இல்லை என்று நினைத்துகொள்கிறேன்..” என்றவள் சிரித்துக்கொண்டே கூறினாள்..

அவளை முறைத்த ருக்மணி, “ஏய் ஜெயா இது என்ன விளையாட்டு..? அந்த புத்தகத்தை எடுத்துட்டு வா..” என்றவள் சொல்ல தோழியை முறைத்தாள் ஜெயக்கொடி..

“ஒரு வேளை இந்த புத்தகம் உன்னோட கையில் இருந்து தொலைந்து போனபிறகு மீண்டும் அதே புத்தகம் உன்னோட கைக்கு கிடைத்தால் அப்போ நான் ஒத்துகொள்கிறேன்..” என்றவள் சொல்ல, சிறிதுநேரம் யோசித்தாள் ஜெயக்கொடி..

ருக்மணி சொல்வது சரியெனபடவே அந்த புத்தகத்தை எடுத்துகொண்டு சென்றாள்.. அந்த புத்தகம் அவளின் கையில் இருந்து தொலைந்து போகுமா..???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ada enna kaa ipadi panneeteenga.. book kaa anga vachiruntha oru vela praba kaiku poga vaaipirukku la.. ipo epadi tholayum.. eppadi kidaikum.. dei praba inga oodivaa.. ava kaila irukura book kaa aataiya pottutu pooda.. ??..

Oru vela maathiruvaangalo rendu perum.. ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top