• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 9

பதினைந்து நாள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்திட கோவில் திருவிழா களைகட்ட ஆரம்பித்தது..

ஜெயாவும், ருக்மணியும் கோவிலில் இருந்து மண்ணெடுத்து வந்து நவதானியங்கள் போட்டு விதை விதைக்க அதுவும் செழித்து வளர்ந்தது..

அதன் வளர்ச்சியைப் பார்த்த ருக்மணி, “அம்மா இந்த முளைப்பாரி எதுக்கு எடுக்கிறோம்..?” என்றவள் விளக்கம் கேட்டாள்..

அடுத்தநொடியே மகளை முறைத்த ரேகா, “ருக்மணி செய் என்று சொன்னால் செய்ய வேண்டிய வேலையை செய்டி.. எதுக்கு என்னிடம் விளக்கம் கேட்கிற..” என்றவர் அவளின் மீது எரிந்து விழுந்தார்..

அவரின் எரிச்சலில் இருந்தே அவளுக்கு தெரிந்துவிட்டது.. முளைப்பாரி எதற்கு எடுக்கிறோம் என்று தெரியாமலே அதை எடுக்கிறார் என்று..!

தன்னுடைய தாயை நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்துவிட, “ஒருவர் ஒரு செயலை செய்கிறார் என்றால் அதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கும்மா..” என்றவள் தொடர்ந்து,

“எந்த விளக்கமும் அந்த சடங்கின் அர்த்தமும் தெரியாமல் நாம் ஒரு செயலை செய்ய கூடாது இல்ல.. நம்மளோட முன்னோர் செய்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னாடியும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்..” என்றவள் தொடர,

“அடியேய் இன்னும் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது.. என்னோட உயிரை வாங்காமல் சொல்ல வந்ததை சொல்லு.. இல்ல என்னையாவது அந்த வேலையை செய்ய விடு..” என்றவர் அலுப்புடன் கூறினார்..

“அப்போ எனக்கு விளக்கம் கொடுங்க..” என்றவள் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்க, “நீ போய் சுகந்தி அக்காவிடம் கேளுடி.. அவங்களுக்கு இந்த அர்த்தம் எல்லாம் தெரியும்.. என்னை இப்பொழுது ஆளைவிடு..” என்றவர் அடுத்த வேலைகளைக் கவனிக்க சென்றார்..

“சரிம்மா நான் போய் சுகந்தி அம்மாவிடம் கேட்கிறேன்..” என்றவள் வேகமாக வெளியே சென்றுவிட்டாள்..

வீட்டில் இருந்து கிளம்பிய ருக்மணி நேராக ஜெயாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.. அவளைப் பார்த்த கண்ணன், “அக்கா வாங்க..” என்று அழைக்க, “வாம்மா ருக்மணி..” என்று அவளை வரவேற்றார் சுகந்தி..

“அம்மா எனக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க அம்மா..” என்றவள் அவரின் அருகில் அமர, “இப்பொழுது உனக்கு எதுக்கு விளக்கம் தெரியணும்..?” என்றவர் புன்னகையுடன் கேட்டார்..

ருக்மணியின் குரல்கேட்டு ஜெயக்கொடி, “வா ருக்மணி.. உன்னோட சந்தேகம் ஆரம்பம் ஆகிவிட்டதா..?” என்றவள் காய்களை நறுக்கினாள்..

“அக்கா சந்தேகம் கேட்டால் அறிவு வளரும் என்று அம்மா சொல்வாங்க இல்ல..” என்ற கண்ணனோ, “அக்கா நீங்க கேளுங்க..” என்று கூறினான்..

அவனின் கன்னத்தைத் தட்டிச்சிரித்த ருக்மணி, “அம்மா எதற்காக முளைப்பாரி எடுக்கறாங்க..?” என்றவள் கேட்டதுமே,

“என்னடி இப்படியெல்லாம் கேட்கிற.. உன்னை இப்படியெல்லாம் யார் யோசிக்க சொன்னாங்க..” என்றவள் கவுண்டமணி டைலாக்கை அவளிடம் கேட்டாள்..

அவளோ ‘எனக்கு ஒண்ணுமே தெரியாது..’ என்ற பாவனையுடன் பாவமாக முகத்தை வைத்துகொண்டு அமர்ந்திருந்தாள்..

இருவரையும் பார்த்த கண்ணன், “ஐயோ அக்கா..” என்று வாய்விட்டுச் சிரிக்க, “டேய் என்னடா நக்கல் பண்றீயா..” என்றவனை அதட்டினாள் ருக்மணி..

“முளைப்பாரி போட சில காரணம் இருக்கிறது.. அதில் பெரிய ஆன்மிகம் மறைந்திருக்கிறது..” என்ற சுகந்தியின் பேச்சை மூவரும் கவனமாக கவனித்தனர்..

“என்னம்மா அது..?” என்று ஜெயா சுவாரசியமாக கவனிக்க, “முளைப்பாரிக்கு என்று நாம் விதைக்கும் தானியங்கள் ஒன்பது.. அது ஒன்பது நவக்கிரகங்களைக் குறிக்கும்..” என்றவர் தொடர்ந்தார்..

“அந்த ஒன்பது கிரகங்களுக்கும் அதிபதி அந்த ஆதிபராசக்தி.. அவளோட அனுமதி இல்லாமல் இங்கே ஒரு கிரகங்களுக்கும் இயங்காது..” என்றவர் சொல்ல,

“அப்போ அம்பாள் நினைத்தால் கிரகங்களின் செய்ய இருக்கும் செயலைத் தடுக்க முடியுமா..?” என்றவள் புரியாமல் கேட்டதும் சுகந்தியின் முகத்தில் புன்னகை அரும்பியது..

“அவர்களுக்கு எல்லாம் அதிபதி மட்டும்தான் அம்பாள்.. ஆனால் அவளால் அவர்களின் வேலையில் தலையிட முடியாது ருக்மணி..” என்றவர் புன்னகையுடன் விளக்கம் கொடுத்தார்..

“நாம் நவதானியங்களை விதையென விதைத்து அதை அம்மனுக்கு படைக்கும் பொழுது நம்முடைய குடும்பத்திற்கு என்று பெரிய ஆபத்து வருகிறது என்றால் அதோட தாக்கத்தை கொஞ்சம் குறைப்பார்..” என்றவர் சொல்ல,

“அதை எப்படி நாம் தெரிந்துகொள்வது..?” என்றவரிடம் விளக்கம் கேட்டான் கண்ணன்..

“ஒன்பது கிரகத்திற்கும் ஒன்பது தானியங்கள் இருக்கிறது இல்ல.. அதோட வளர்ச்சியை வைத்து நன்மை தீமையை நாம் அறியலாம்..” என்றவர் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்..

அது மட்டும் இல்ல பயிரோட வளர்ச்சி சிறப்பாக இல்லையென்றால் நம்ம குடும்பத்திற்கு கஷ்டம் வரும் என்றும், பயிரோட வளர்ச்சி நன்றாக இருந்தால் நம்ம குடும்பம் நல்ல நிலைக்கு போகும் என்றும் தெரிஞ்சிக்கலாம்..” என்றவர் மூவரும் விளக்கம் கொடுத்தார்..

“அதுதான் காரணம் இல்லாமல் பெரியவங்க சடங்கு சம்பிரதாயம் எல்லாவற்றையும் உருவாக்கி வைத்திருக்க மாட்டாங்க..” என்றவள் அர்த்தத்துடன் புன்னகைத்தாள்..

“சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் உருவாக்கி வைத்திருந்தாலும் சிலநேரம் நம்மால் அதை ஏற்றுகொள்ள முடியாது.. அப்பொழுது அதை ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்க்கை பற்றி யோசித்து முடிவெடுக்கவும் கற்றுகொள்ள வேண்டும் ருக்மணி..” என்றவர் ஏதோ நினைவுகளில் மூழ்கிய வண்ணம் கூறினார்..

அவர் சொல்வதன் அர்த்தம் முழுமையாக யாருக்கும் புரியாவிட்டாலும், ‘நல்லது சொல்லும் பொழுது கேட்டுக்கொள்ள வேண்டும்..’ என்று மூவரும் அமைதியாக இருந்தனர்.. அதன்பிறகு நாட்கள் வேகமாக சென்றது..

அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா களைகட்டியது.. முதல்நாள் தீர்த்தம் எடுப்பதில் ஆரம்பித்த திருவிழா, மாவிளக்கு, முளைப்பாரி, அம்பாள் வீதி உலா, மஞ்சள் நீராட்டு எல்லாம் முடிந்தது..

அன்று மதியம் மதன் படுத்து நன்றாக உறங்கிட பிரபாவிற்கு தூக்கம் என்பது வரவே இல்லை.. அவன் சிந்தனையுடன் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் புரண்டு புரண்டு படுத்தான்..

அவனுக்கு தூக்கம் வரவில்லை என்றதும், ‘இது சரிப்பட்டு வராது..’ என்றவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.. அப்பொழுதுதான் வேலையை முடித்த கற்பகம் கொஞ்சம் படுத்து உறங்கினார்..

அவர் சோபாவின் தூங்குவதைப் பார்த்த பிரபாவின் மனம் சொல்ல முடியாத உணர்வில் சிக்கி தவித்தது.. அது ஏன் என்று புரியாமல் குழப்பத்துடன் வீட்டு வாசலில் அமைக்கபட்டிருந்த திண்ணையில் வந்தமர்ந்தான்..

அவனின் நினைவுகள் அனைத்தும் கற்பகம் மீதே இருந்தது.. அவரின் அன்பான கவனிப்பில் பிரபாவின் மனதில் இருந்த காயம் கொஞ்சம் ஆறியிருக்க, ‘என்னோட அம்மாவை உங்களோட ரூபத்தில் மீண்டும் பார்த்தேன் அம்மா..’ என்றவன் மனதிற்குள் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான்..

அப்பொழுதுதான் தூக்கம் கலைந்து எழுந்த மதன் தன்னருகே படுத்திருந்த பிரபாவைக் காணாமல், ‘இவன் எங்கே போனான்..?’ என்ற சிந்தனையுடன் அறையில் இருந்து வெளியே வந்தான்..

கற்பகம் எழுந்து சமையலறைக்குள் செல்வதைப் பார்த்தவன், “அம்மா பிரபா எங்கே..” என்றவன் சமையலறை நோக்கி குரல்கொடுத்தான்..

“வீட்டு வாசலில் இருக்கும் திண்ணையில் உட்காந்திருக்கிறான் பாருடா..” என்றவர் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்..

“ஓ வெளியே இருக்கிறனா..?” என்றவன் வாசலை நோக்கிச் சென்றான்.. அவன் சென்று பார்க்கும் பொழுது பிரபா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்..

‘தான் வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் சிந்தனையில் அமர்ந்திருந்த நண்பனின் முகத்தைப் பார்த்தவன், ‘இவனுக்கு என்ன ஆச்சு..?’ என்றவனின் அருகில் அமர்ந்தான் மதன்..

தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம்கேட்டு பிரபா வேகமாகத் திரும்பிப்பார்க்க, “பிரபா நம்ம நாளைக்கு ஹாஸ்டல் போலமா.?” என்று கேட்டான் மதன்..

“ம்ம் சரிடா போலாம்..” என்றவன் மீண்டும் தன்னுடைய சிந்தனையில் மூழ்கினான்..

அவனின் முகம் பார்த்த மதன், “என்னடா ரொம்ப தீவிரமாக யோசிக்கிற..” என்றவன் கேட்டதும் பிரபா நிமிர்ந்து நண்பனின் முகம் பார்த்தான்..

அவனின் முகம் தெளிவுடன் இருந்தாலும் நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் அவனின் சிந்தனையை வெளிகாட்ட, “என்னடா என்னிடம் சொல்ல கூடாதா..?” என்றவன் மென்மையாக விசாரித்தான்..

“அதெல்லாம் இல்ல மதன்.. இத்தனை வருஷத்தில் யாரோட வீட்டுக்கும் போய் நான் அதிகநாள் தங்கியதில்லை.. ஆனால் இங்கே வந்து தங்கிருந்த ஒரு மாதமும் நான் அவ்வளவு நிம்மதியாக இருந்தேன்..” என்றவன் தொடர்ந்து,

“நான் இதுவரை இவ்வளவு நிம்மதியாக இருந்ததே இல்லை.. நீ சொன்னது போலவே உன்னோட அம்மா இன்றுவரை என்னை எந்த கேள்வியுமே கேட்கல..” என்றவனின் முகத்தில் இருந்த நிறைவு வெளிப்படையாகத் தெரிந்தது..

பிரபாவின் அவ்வளவு சீக்கிரம் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிகட்ட மாட்டான்.. அதனாலோ என்னவோ அவனிடம் யாரும் நெருங்க முடியாமல் போனது..

அவனின் நட்பு வட்டாரம் பெரிதாக இருந்தாலும் பிரபாவிடம் அதிகமாக நெருங்கியது மதன் மட்டுமே..! அவனின் நட்பு மட்டும் விதிவிலக்கு என்று சொல்லலாம்..

‘இவனோ மனதில் இந்த அளவிற்கு காயப்பட்டு இருக்கிறதா..? அப்போ எந்தளவிற்கு இவன் நொந்து போயிருந்தால் அவனோட வாயில் இந்த வார்த்தைகள் வரும்..’ என்றவன் நினைக்க பிரபா தொடர்ந்தான்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மதனின் மனம் சிந்தனையில் இருந்தாலும் பிரபா சொல்வதை உன்னிப்பாக கவனிக்க, “எத்தனை பேர் தெரியுமா என்னை அனாதை என்ற அனுதாபத்துடன் பார்த்திருக்காங்க.. அம்மா மட்டும்தான் என்னை அவளோட மகன் மாதிரி பார்த்துகிட்டாங்க..” என்றவன் சொல்ல அவனின் வார்த்தைகளின் வழியே அவனின் மனமும் வெளிப்பட்டது..

அவனின் மனம் உணர்ந்து புன்னகைத்தவன், “என்னோட அம்மா ரொம்ப நல்லவங்கடா..” என்றவன் பிரபாவின் தோளில் கைபோட்டான்..

“மதன் எனக்கு நீ ஒரு பிராமிஸ் பண்ணுடா..” என்றவானின் முன்னே கைநீட்டினான் பிரபா..

அவன் தீடீரென சத்தியம் கேட்டதும், ‘இப்போ எதுக்கு இவன் என்னிடம் சத்தியம் கேட்கிறான்..?’ என்றவனைப் புரியாத பார்வை பார்த்தான் மதன்..

“நீ எதற்கு இப்போ சத்தியம் கேட்கிற என்று புரியலடா..” என்றான் மதன் குழப்பத்துடன்..

“உனக்கு எந்த சூழ்நிலையிலும் என்ன உதவி வேண்டும் என்றாலும் நீ என்னிடம் தயங்காமல் கேளுடா” என்றவன் சொல்ல மதன் இடையில் ஏதோ பேச வந்தான்..

அவனை கைநீட்டி தடுத்த பிரபா, “உனக்கான நான் இருக்கிறேன்.. அதை மட்டும் நீ மறக்கவே கூடாது..!” என்றவன் புன்னகைத்தான்..

மதன் மெளனமாக பிரபாவின் முகம் பார்த்திட, “என்னோட இரண்டு அம்மாவோட இழப்பே எனக்கு பெரிய இழப்பு மதன்..” என்றவனின் நினைவுகள் எங்கோ சென்றது..

தாய்மீது அவன் வைத்திருக்கும் பாசம் அவனின் பேச்சிலிருந்தே நன்றாகவே தெரிந்தது.. அது மட்டும் இன்றி அவனின் பேச்சில் இருக்கும் உண்மையும் மதனுக்கு தெளிவாக புரிந்தது..

“என்மேல் பாசம் வைக்கிற யாரும் என் பக்கத்தில் இருப்பதில்லை.. அதனால்தான் சொல்றேன் மதன் என்னை தவறாக நினைக்காதேடா..” என்றவன் தன்னுடைய பக்கத்தை அவனிடம் கூறினான்..

அவனின் பேச்சில் இருந்தே, ‘அவனின் இழப்பு எத்தகையது..’ என்று உணர்ந்தான் மதன்.. அதுமட்டும் இன்றி அவனின் மனதில் இப்பொழுது எழுந்திருக்கும் பயத்தை உணர்ந்தவன்,

‘இறைவா இவனோட வாழ்க்கையில் வரும் பெண் இவனோட இழப்பை ஈடு செய்யும் அளவிற்கு கொடுப்பா..’ என்று இறைவனிடம் மனமார வேண்டிக்கொண்டான்..

‘இதையெல்லாம் நான் அவ்வளவு சீக்கிரம் நடக்க விடுவேனா..?’ என்ற மர்ம புன்னகையுடன் நகர்ந்தது விதி..

அவன் பேசி முடிக்கும் வரையில் அமைதியாக இருந்த மதனோ, “எனக்கு என்று யாரும் இல்லடா.. எனக்கு எந்த ஹெல்ப் எப்போ வேண்டும் என்றாலும் நான் உன்னை தேடி வருவேன்..” என்றவன் புன்னகையுடன் கூறினான்

அதில் பிரபாவின் மனம் நிம்மதியடைந்தது..

மறுநாளே இருவரும் ஊருக்கு கிளம்பிட, “பிரபா நீ அடிக்கடி ஊரு வந்துட்டு போப்பா.. நானும் உன்னோட அம்மாதான்..” என்றவர் சொல்ல,

“சரிம்மா..” என்றவன் அவரிடம் இருந்து விடைபெற்று கிளப்பிட வாசல் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தார் கற்பகம்..

அவர்கள் இருவரும் பஸில் திருச்சி செல்ல மதன் எப்பொழுதும் போலவே பஸில் ஏறிய மறுநொடியே உறங்கிவிட்டான்..

அவனைப் புன்னகையோடு பார்த்த பிரபா, ‘இவனுக்கு பஸில் ஏறியதும் தூக்கம் வந்துவிடும்.. சரியான தூங்குமூஞ்சி.’ என்று நினைத்தவன் வெளியே வேடிக்கை பார்த்தான்..

வானம் இருள் சூழ்ந்து இருக்க, ‘மழை வருமா..?’ என்றவன் நினைக்கும் முன்னே சிலுசிலுவென காற்று வந்து அவனின் முகத்தில் மோதியது..

திடீரென்று மழை பொழிந்திட ஜன்னலை சாத்திய பிரபா வெளியே தெரிந்த இயற்கை அழகை ரசித்தவண்ணம் வர பஸ் ஓரிடத்தில் நின்றது..

அப்பொழுது அவனின் கண்ணில் அந்த காட்சிபட சுவாரசியமாக அவர்களை வேடிக்கை பார்த்தான் பிரபா.. தன் வீட்டு தோட்டத்தில் ரோஜா செடியை நட்ட இரண்டு வாண்டுகளும் கையில் செம்மண் இருந்தது..

“என்னோட செல்ல அக்கா..” என்றவன் அக்காவின் கன்னத்தில் செம்மண்ணைப் பூசிவிட்டு அவளின் முகம் பார்த்தவன் சிரிக்க அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபாவின் மனம் அன்றைய நாளிற்கு சென்றது..

‘என்னோட சட்டையில் சேற்றை வாரி எறிந்துவிட்டாளே..’ என்றவன் உச்சகட்ட கோபத்தில் திரும்பினான்.. அவளோ பயத்தில் அவனின் முகம் பார்த்தாள்..

ஆரஞ்சு நிறத்தில் பாவாடையும், அதே நிறத்தில் ஜாக்கெட் அணிந்து பச்சை நிறத்தில் தாவணியும் அணிந்திருந்தாள்.. அவளின் விழிகள் பயத்தில் ஆழ்ந்திருந்தது..

அவளின் உதடுகள் பயத்தில் நடுங்க அதை மறைக்க உதட்டை பற்களால் கடித்த வண்ணம் அவனையே பார்த்தாள்.. அவளின் பால் போன்ற முகம் பார்த்தும் ஏனோ காரணம் இல்லாமல் தமிழரசியின் கவிதை அவனின் மனதில் எழுந்தது..

அவள் மழையில் நனைந்தபடி நின்ற தோற்றம் பனியில் நனைந்த மலரைப் பார்ப்பது போல ஒரு பிரம்மையை உருவாக்கியது.. அவனும் அதையேதான் நினைத்தான்..

‘இவளைப் பார்க்கும் பொழுது பனியில் நனைந்த மலரை பார்ப்பது போல ஒரு பிரம்மையை உருவாக்குகிறதே..’ என்றவனின் உள்ளம் நினைத்தது..

அந்தநேரத்தில் அவன் கண்டகனவு அவனின் நினைவிற்கு வரவில்லை.. அவளின் சிவந்த இதழில் தேங்கி நின்ற மழைத்துளியைப் பார்த்தவனின் மனது அவளின் தேன் இதழை சுவைக்கும் எண்ணம் அவனின் மனதில் எழுந்தது..

“ஸாரிங்க நான் ருக்மணியை நோக்கிதான் வீசினேன்.. அது உங்கள் மேல் படுமென்று நான் நினைக்கல..” என்றவள் நிறுத்து அவனின் முகம் பார்த்தாள்..

ஜெயாவிற்கு பிரபாவின் முகம் பார்த்தும், ‘இவரை நான் எங்கையோ பார்த்திருக்கேன்..’ என்றவள் மனதில் நினைத்தாலே தவிர தை பார்வையில் வெளிபடுத்தவில்லை.. அதனாலோ என்னவோ அவனுக்கு அவளை அடையாளம் தெரியாமல் போனது..

அவளின் வார்த்தைகளால் அவனின் கோபம் குறைந்ததா..? இல்லை அவளின் மழையில் நனைந்த தோற்றம் கண்டு அவனின் கோபம் குறைந்ததா..? என்று கேட்டால் இரண்டாவது என்று தயங்காமல் பதில் தருவான்..

அதுவரை அவனின் மனதில் எழுந்த கோபம் வெயிலைக் கண்டதும் விலகும் பனிபோல சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்தது..

அவனோ அவளை இமைக்காமல் பார்க்க, “நான் வேண்டும் என்று எதுவும் பண்ணல.. எல்லாமே எதிர்பாராமல் நடக்குதுங்க.. ஸாரி..” என்றவள் புன்னகையுடன் மன்னிப்பு கேட்டுவிட்டு சங்கடத்துடன் அவனின் சேறு படிந்த வெள்ளை சட்டையைப் பார்த்தாள்..

அவளின் முகம் அவனின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தியது.. அதை அவன் அப்பொழுது உணரவில்லை..

அவளின் முகம் பார்த்தும் அவனின் கோபம் குறைவதை உணர்ந்தவன், ‘என்ன என்னோட கோபம் எல்லாம் எங்கே போச்சு.. எனக்குள் என்னோவோ நடக்குது..’ என்று ஆச்சரியமாக உணர்ந்தான்..

“இவன் என்னனென்ன சொல்லி திட்ட போறானோ..?” என்றவன் புலம்ப, “என்னடா..” என்றவன் கேட்டான் வருண்.. அவனின் பேச்சில் மதனுக்கு கோபம் வர, “கொஞ்சநேரம் வாயை மூடுடா..” என்றான் கடுப்புடன்..

அவனும் அமைதியாகிவிட மதனோ பிரபாவைப் பயத்துடன் பார்க்க, “இனிமேல் இது மாதிரி செய்யாதீங்க.. எல்லோரும் என்னை மாதிரி பொறுமையாக இருக்க மாட்டாங்க..” என்றவன் சட்டையில் படிந்த சேற்றை தட்டிவிட்டு விலகி நடந்தான்..

அப்பொழுது ஜெயாவின் அருகில் வந்த ருக்மணி, “வாடி வீட்டுக்கு போகலாம்..” என்றழைக்க, “ம்ம் வாடி போலாம்..” என்றவள் கூறினாள்.. அவர்கள் கோவிலில் மண்ணெடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் சென்றனர்..

‘இவனுக்கு எவ்வளவு கோபம் வரும் இன்னைக்கு என்ன இவ்வளவு பொறுமையாக போகிறான்..?’ என்று மனதிற்குள் யோசித்தானே தவிர அதை அவனிடம் கேட்கவில்லை..

அவனின் மனம் அந்த நினைவுகளில் இருந்து வெளிவர, ‘இதே காட்சியை நான் எங்கோ பார்த்திருக்கிறேன்..’ என்றவன் தீவிரமாக சிந்தித்தான்.. அவன் கண்ட கனவு அவனிற்கு நினைவு வர திடுக்கிட்டுப் போனான் பிரபாகரன்..

‘அந்த கனவில் வந்த பெண் பனிமலரா..?’ என்றவன் நினைக்கவும் அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. தன்னுடைய காதலியை நேரில் பார்த்தும் அவளை தெரியாதது போல வந்திருக்கும் தன்னுடைய முட்டாள்தனம் நினைத்து அவனின் மீதே அவனுக்கு கோபம் வந்தது..

‘என்னோட மனதில் அவளால் மட்டுமே சலனத்தை ஏற்படுத்த முடியும்..’ என்று நினைத்தவன், “பனிமலர் உன்னை நேரில் பார்த்தும் பைத்தியக்காரன் மாதிரி வந்திருக்கேனே..” என்றவன் சீட்டில் சாய்ந்து கண்மூடினான்..

அவனின் மூடிய விழிகளில் அவளின் பூமுகம் வரவும், ‘உன்னைத் தேடி வருவேன்.. என்னோட வாழ்க்கை உன்னோடுதான் என்றால் அதை மாற்ற யாராலும் முடியாது..’ என்றவன் நினைத்தான்..

காலமோ அவனை பார்த்து பலமாக சிரித்திட, ‘அது எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடக்குமா..? அதை நடக்கத்தான் நான் விடுவேனா..?’ என்று புதிர்போட்டு சென்றது..

நாட்கள் தெளிந்த நீரோடை போல சென்றிட தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு அவனும், மதனும் பிரியும் நாளும் விரைவில் வந்தது.. விதியும் தன்னுடைய விளையாட தொடங்கியது..

பிரபாவின் வாழ்விலும், மதனின் வாழ்விலும் விதி விளையாடுமா..? அவன் பனிமலரை கரம்பிடிப்பானா..?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top