• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamizha Tamizha kangal kalankathey - short story

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
இனிய தோழிகளே..,

சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஓரிரு சிறுகதைகள்.. எழுதிய நான் மட்டுமே என் சிறுகதைகளுக்கு வாசகியாக இருந்த காலம். பின் என் நெருங்கிய தோழமைகளும், குடும்பத்தினர் மட்டுமே வாசித்த ஓரிரு சிறுகதைகள்.

அவற்றுள் ஒன்றைச் சற்று பயத்தோடும், ஆவலோடும் நேற்று பதிவேற்றம் செய்தேன்.

என் முதல் நாவல் தாகத்தை ஊக்கப்படுத்தி, என்னைக் கட்டங்கள் எழுதவைத்துத் தட்டி கொடுத்து வரவேற்பு கொடுத்தது போலவே.., நீங்கள் சிறுகதைக்கும் கொடுத்த likes மற்றும் comments என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி.., அடுத்த சிறுகதையை பதிவிடும் தைரியத்தை கொடுத்துள்ளது.

உங்கள் விமர்சனங்களை எதிர்பார்த்து நான். சில வருடங்களுக்கு முன் எழுதிய சிறுகதை.

தமிழா!!! தமிழா !!! கண்கள் கலங்காதே....


கவிதா கோலம் இட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு நாள் கிழமை எல்லாம் கிடையாது. எல்லா நாட்களிலும் கலர் ரங்கோலி தான்.

நரேன் ஆறு அடி உயரம். அவன் உடற்கட்டு தினமும் ஜிம் செல்வதை உறுதி செய்தது.

" கவி, ஏன் ரோட்ல கிறுக்கிட்டு இருக்க?" , கோலமிட்டுக் கொண்டிருந்த கவிதாவை பார்த்துக் கேட்டான் நரேன்.

"அண்ணா மரியாதையாய் நன்றாகக் கண்களை திறந்து பார். இல்லைனா கண்ணை குத்திடுவேன்.", என்று தன் அண்ணனைச் செல்லமாக மிரட்டினாள் கவிதா.

"ஏன்மா காலையிலே இத்தனை வன்முறை...?? மெரினால இருக்கிற பசங்கள பார்த்து கத்துக்கோ.. எப்படி வன்முறையே இல்லாம அறப்போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க.", என்று தன் தங்கைக்கு அறிவுரை கூறினான் நரேன் கவிதாவின் அழகிய வண்ண கோலத்தை ரசித்தபடியே..

"அண்ணா பேச்சை திசை திருப்பாதே ... கோலம் எப்படி இருக்கு ?", என்று நரேனின் முகம் பார்த்து கேட்டாள் கவிதா.

கோலத்தை நோட்டமிட்டான் நரேன்.

ஓர் காளை, அலங்கரிக்கப்பட்டு யாருக்காகவோ காத்திருப்பது போல் நின்றது. அதைச் சுற்றி ரங்கோலி டிசைன் , இன்றைய மாடர்ன் ஆர்ட் போல் காட்சி அளித்தது. அதற்குக் கொடுத்துள்ள நிறங்கள் மனதிற்கு ரம்மியமாக இருந்தது.

"கவி இந்த டிசைன எங்கிருந்து எடுத்தாய்? ", என்று ஆர்வமாக நரேன் கேட்க, " கூகிள்.... அங்க அங்க பார்த்து.., அப்படி கொஞ்சம் நம்ம கற்பனையைத் தூவி விட்டு.., அப்புறம்..", என்று கவிதா ஆரம்பிக்க.." சரி !சரி! போதும் தாயே ", என்று கையை உயர்த்திக் கும்பிடு போட்டான்.

"எனக்கு நேரம் ஆகுது நான் கிளம்பனும்..", என்று கூறிவிட்டு கிளம்ப ஆயுதமானான் நரேன்.

"அண்ணா!! நாங்களோ அறப்போராட்டம் பண்றோம். உங்களுக்கு அங்க என்ன வேலை?", என்று கவிதா கேள்வியாக நிறுத்த, " நாங்க தான் உங்களுக்குப் பாதுகாப்பு கவி..."., என்றான் அன்பு அண்ணன்.

" சாப்பாடு வேண்டாம்னு அம்மா கிட்ட சொல்லிவிடு...", என்று கூறி விட்டு வேகமாகப் பறந்து விட்டான்.

" ஓகே அண்ணா", என்று கவி கூறியது.., காற்றுக்குத்தான் கேட்டது.

கவிதாவுக்குள் தன் அண்ணன் போலீஸ் என்ற கர்வம் வழக்கம் போல் தலை தூக்கியது. புன்னகைத்துக்கொண்டாள்.

நரேன் மெரீனாவுக்கு சென்றடைந்தான். இரவிலும் கூட்டம் கூட்டமாய் மாணவர்களும் இளைஞர்களும் படுத்திருந்த அடையாளம் தெளிவாக தெரிந்தது.விடியற்காலையிலும் அத்தனை கூட்டம்..

நரேனுக்கு பெரிதாக அங்கு வேலை இல்லை. அவனுக்கும் உணவு கொடுத்தது இளைஞர் அணி. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் நரேன். நரேனின் மனதில் பல கேள்விகள்.

"எப்படி உருவாகியது இந்தக் கூட்டம்?", இதுவே அவன் முதல் கேள்வி.

கபாலி முதல் பைரவா வரை டிக்கெட்டுக்காக அலைந்த கூட்டம்!!
கிரிக்கெட் என்றால் சேப்பாக்கத்தில் அலை மோதும் கூட்டம்!!
சூப்பர் சிங்கர் ஷோ என்றவுடன் கூடும் கூட்டம்!!!
இவர்களுக்குள் இத்தனை உணர்ச்சியா??

எத்தனை முறை இது போல் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறேன்??
ஆனால் இந்த உணர்ச்சி புதிது...

இந்த எண்ணங்களுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் நரேன். அப்பொழுது ஒரு பெண் கர்ஜித்து கொண்டிருந்தாள்.


" பெண் என்று நினைத்தாயோ
பெண் சிங்கம் நாங்கள்!!!
புலியை முறத்தால் விரட்டிய
வீரப்பெண்ணின் பால் குடித்தவர்கள்
நாங்கள்!!!"


" உயிர் காக்க மட்டும் அல்ல
உணர்வு காக்கவும்
வீறு கொண்டெழுவோம் "


" அன்று சுதந்திரத்திற்காக போராடிய
வீர மங்கை வேலு நாச்சியார்
வழி வந்த நாங்கள்
இன்று போராடுவது
பொருளாதார சுதந்திரத்திற்காக!!!!!!"

“ இளைஞர் என்றால்
இடைஞ்சல் என்ற சொல்
இனி
இல்லை ....

எழுந்தோம் face book ஆல்
இணைத்தோம் whatsapp ஆல்
இனி இணைவோம் நாட்டின்
வளர்ச்சிக்காக….!!!!

புல்லரித்து விட்டது நரேனுக்கு..
அப்துல் கலாம் கனவு கண்ட இளைஞர்கள் இதோ!!!!
ஆனால் அவர் இங்கு இல்லை...
இளைஞர்களை ஒன்று கூட சொன்ன விவேகானந்தர்,
கண்முன் சிலையாய் நிற்கிறார்...
அறப்போராட்டத்தை விரும்பிய காந்தி,
ரூபாய் நோட்டில் சிரிக்கிறார்....
பெண்களைப் போராட சொன்ன பெரியார் ,

தமிழ்ப் புத்தகத்தில் பாடமாக மாறி விட்டார்...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
அன்று இவர்கள் தூவிய விதை, மரமாக மாற இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது போலும்.

காலம் தாழ்த்தி வளர்ந்தாலும்
பசுமை குறையவில்லை...
இனி வறட்சி இல்லை...
வளர்ச்சி தான்!!!!

என்றெண்ணிக்கொண்டான் நரேன்.

"போலீஸ் அண்ணா !!! ", என்று அழைத்தான் அங்கு ஒரு இளைஞன். "ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அண்ணா...", என்று கூற, "நேரம் ஆகி விட்டது.. காலையில் வருகிறேன்..", என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்தான் நரேன்.

அதிகாலை 3 மணி.. அவன் ரிங் டோன் ஒலித்தது…….

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே……


யாராக இருக்கும் என எண்ணிக்கொண்டே மொபைலை எடுத்தான் நரேன்.

" நரேன், Be in duty at Marina within half an hour.." என்று கம்பீரமாய் ஒலித்தது ஒரு குரல். அவசரமாகக் கிளம்பினான் நரேன்.

"என்ன சீக்கிரமாய் கிளம்பிட்ட.. ?", என்று நரேனின் தங்கை கவிதா, தூக்கக் கலக்கத்தோடு வினவ, "தெரியல கவி.. அவசரமாக வரச் சொல்லி phone வந்தது.. அம்மா கிட்ட சொல்லிவிடு..", என்று கூறிக்கொண்டே கிளம்பினான் நரேன்.

அவனுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.. நரேன் நொறுங்கிப் போனான். மனதிற்குள் குமுறத்தான் முடிந்தது. எகிற முடியவில்லை..

கட்டளைகளுக்கு அடி பணிந்தான். வீர முழக்கங்கள்.. ஓவென கதறின...

மனதால் நொறுங்கி , அன்று வீடு திரும்பினான் நரேன். போலீஸ் என்று மரியாதையாகப் பார்க்கும் எதிர் வீட்டுக்காரர் கோபமாக முறைத்தார். கதவைத் திறந்த கவிதா, முகம் கொடுத்து பேசாமல் திரும்பி சென்று விட்டாள்.

நரேனுக்கு உணவிட்ட அவள் தாய் , "என்னடா இப்படி பண்ணீட்டீங்க என்று வினவினாள்?"

பதில் சொல்ல வில்லை நரேன். “அம்மா அவன் எப்படிப் பேசுவான்?” என்றாள் கவிதா.

"கவி ...", என்று அழுத்தத்துடன் தாய் அழைக்க..." சரி", நான் பேசவில்லை என்றாள் கவிதா. எதுவும் பேசவில்லை நரேன். தன அறைக்குள் சென்று விட்டான்.

ஒரு வாரம் கழித்து..,

தன் வண்டியில் கல்லூரி பக்கம் சென்றான். அவன் மனம் உறுத்தியது.

மாணவர்களை பார்க்கச் சென்றான். அவன் மனதுள் தோன்றிய கேள்வி, " அன்று போல் இன்றும் நட்பாய் பேசுவார்களா?".... என்பது தான்.

"ஹல்லோ சார், எங்களைப் பார்க்க வந்தீங்களா?", என்று மாணவர்கள் வினவ, சிரித்துக்கொண்டான் நரேன்.

"எப்படி இருக்கீங்க? ", என்றுமெதுவாக கேட்டான் நரேன்.

"நிறைய பாடங்கள் சேர்ந்திருச்சு சார்.. படிப்புக்கு நேரம் சரியா இருக்கு.. college இல் packed drinks வேண்டாம்னு சொல்லிட்டோம். நாங்களே எங்க ஏரியாவ சுத்தம் பண்றோம்.. குடியரசத் தினத்தன்று மரக்கன்றுகள் நட்டோம்.. கால் வாய்களைத் தூர் வாரினோம் சார்...", என்று மாணவர்கள் ஆர்வமாகக் கூறினர்.

" நீங்களும் நேரம் கிடைத்தால் வாங்க சார்.", என்று நரேனை அழைத்தனர்.
"கண்டிப்பாக!!!", என்று கை குலுக்கி விடை பெற்றான் நரேன்.

அவன் மனம் குற்ற உணர்ச்சியால் குறுகுறுத்தது. கண்ணில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வடிந்தது...

இவர்கள் இந்தச் சமுதாயத்தை மாற்றுவார்கள் என அவன் மனம் ஆனந்தம் கொண்டது.

கண்ணீரை யாரும் அறியாவண்ணம் துடைத்துக் கொண்டான்.

"தமிழா தமிழா கண்கள் கலங்காதே", என்று நரேனின் மொபைல் ஒலித்தது.

--------- அகிலா கண்ணன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top