• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews Tamizharasiyin Kathirazhaki-Overview

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
தமிழரசியின் கதிரழகி" ரிவியூவோட வந்துருக்கேன்??

முதலில் இப்படி ஒரு முயற்சிக்கு வாழ்த்துக்கள் டா.. ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை அளவில்லாமல் ஏற்படுத்தி எங்களை பயணிக்க வச்சுருக்கே?? ஆத்மார்த்தமான காதலுக்கு அறிமுகமே தேவை இல்லை, மனமார்ந்த உணர்வுகள் போதும்னு பிரபா-ஜெயா, ருக்கு-ஸ்ரீனி, மதன்- மின்மினி எல்லாரும் ஒவ்வொரு வகையில அழகா எடுத்து காட்டி இருக்காங்க??

?தொடர் உறவுகளின் இழப்பு, பரிதாப பார்வைனு அது குடுத்த வலியினாலே கூட்டுக்குள் குறுகி போய் இருந்த பிரபா, கல்லூரி பருவத்திலும் ஒரு வளர்ந்த குழந்தையா தான் தெரியுறான்.. ஒரு சிலர் பண்ற விஷயங்கள் எல்லார்கிட்டயும் இருந்து விலகி நிக்க வச்சுடும். அப்படி ஒரு நிலைல தான் பிரபா இருக்கான்?? ஆனா உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது. அது மாதிரி, பிரபா வாழ்க்கைல முதல் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பிச்சது அவனுக்கு கிடைச்ச அழகான நட்பு ?? அடுத்து அவனோட மாற்றத்துக்கு துணையா இருந்தது, இனம் தெரியாத காதல்❤❤ முதல் கவிதைல ஆரம்பம் ஆன பிரபாவோட ஃபீலிங்ஸ் ல இருந்து, அவன் ஜெயாவ புக் ஃபேர் ல பார்த்தது, ஹோட்டல் ல பார்த்தது அப்பறம் கோவில் ல சந்திச்சது முதற்கொண்டு, ஒவ்வொரு முறை அவளோட சந்திப்பு நடக்கும்போது, மனசுல தோன்ற உணர்ச்சிகள் எல்லாமே சொல்ல முடியாத காதல கூட அவ்வளவு அழகா சொல்லும் ?? ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்காம பேசிக்காம இருந்த போதும் கூட, நம்ம மனசுல இருக்கற ஆளு இவ தானானு யோசிக்கிற நேரம் அவனோட புரிதல் அழகா வெளிப்பட்டு இருக்கு ??

?அதுக்கு அப்பறமா வேலை சமயங்கள் ல அவள நேருக்கு நேரா பார்த்து உண்டான உணர்ச்சிகள், அதோட தாக்கம் அதை தொடர்ந்து அவகிட்ட முதல் முதலாக தன்னோட மனச வெளிப்படுத்தின விதம், ஒவ்வொரு முறையும் அதை தவறாம செஞ்சு அவளோட கோபத்தை தூண்டி விட்டு ரசிச்ச தருணங்கள் எல்லாமே அவனோட கடந்த கால கசப்புகள் மறந்த ஒரு விளையாட்டு பிள்ளையா நமக்கு தெரியறான்?? கவிதை கதை எல்லாம் படிச்சு, தன்னோட பனிமலர் இந்த ஜெயாவானு அவன் ஒவ்வொரு பக்கமும் யோசிச்சு அதை கண்டறியற விதம் கொள்ளை அழகு ?? எல்லாத்துக்கும் மேல கோபிநாத் மாமா, அவரோட கடமைக்கு மேல பிரபாவோட பொறுப்ப எடுத்து சிறப்பவே செஞ்சு முடிச்சு இருக்காரு?? பெத்தவங்களே இந்த காலத்துல ஒரு கட்டத்துக்கு அப்பறமா பிள்ளைகள ஒதுக்கி வச்சுட்டு போறப்போ, ஒரு மாமாவா பிரபாக்கு இவர் செஞ்சது எல்லாமே ரொம்ப அதிகம்.. அதோட அவனை நல்லபடியா செதுக்கி வச்ச பெருமைக்கு உரியவர்.. தட்டி குடுக்க வேண்டிய நேரத்துல தட்டி குடுத்து, கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பாவும் அவனை ஒரு நல்ல மனுஷனா உருவாக்கி விட்டுருக்காரு??

? வாழ்க்கைய அனுபவிச்சு வாழ்றதை விடவும் முக்கியம் அந்த அனுபவங்களையும் ஏதார்த்தத்தையும் புரிஞ்சு வாழனும்.. ஜெயா அத சிறப்பாவே செஞ்சுருக்கா. படிப்புல வேலையில ஆகட்டும், நிதர்சனமா யோசிச்சு தனக்கான தேவைய தேர்ந்தெடுத்து இருக்கா. அவளுக்கே துணையான ஒரு நட்பு அவளை இன்னுமும் மெருகேற்றி இருக்கு. சிறந்த நட்புக்கு எப்போதும் நாம நம்மளை புரிஞ்சு வச்சு இருக்கறத விட அவங்க நம்மளை பத்தி நிறைய விஷயங்கள் புரிஞ்சு வச்சிருப்பாங்க. அதுவே அவளுக்கு ஒரு பெரிய வெற்றிய நோக்கி அடி எடுத்து வைக்க உதவி இருக்கு. கவிதைல ஆரம்பிச்ச பயணம் கதை வரை அவள கொண்டு போனதுக்கு முதலில் பாராட்ட வேண்டியது, நம்ம ருக்குவ தான் ?? ஒவ்வொரு முறையும் அவளை ஊக்கப் படுத்தி, துணையா கூட இருந்து வழிகாட்டியா இருந்திருக்கா..

?கவிதை புத்தகம் மூலமா தன்னோட எதிர்கால வாழ்க்கையையே ஒரு நிமிஷத்துல முடிவு பண்ணி, கவிதையா வடிவிச்சு அதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும் ?? ஆனா அவளையும் அறியாம தன்னவனொட பொக்கிஷம் அவகிட்ட வந்து சேர்ந்த நேரம், விவரிக்க முடியாத அழகான மாற்றம்.. அந்த வரிகள் மூலமா மட்டுமே அவனை நேசிச்சு வாழ்க்கைய செலுத்தி, அவன்மேல அவ்வளவு காதல் இருந்தும் அதை உணராமல், தனக்குள்ளேயே வச்சு அனுபவிச்ச நொடி கூட மலர் அழகு தான்?? அவனை பக்கத்துல வச்சு பார்க்கும்போதும் அவனோட தன்னை மீறி வம்பு பண்ணி சண்டை போடும் போது சரி, தமிழா முகப்புத்தகத்தில் அவனோட பேசும்போதும் சரி, தன்னோட உணர்வுகள் மேல எழும்போது சொல்ல முடியாமல் தவிச்ச தவிப்பு அதையும் மீறி, அவன் தன்னவனா இருக்குமான்னு சந்தேகப்பட்ட நேரங்கள் எல்லாமே அவளோட ஆழ்மனசு காதல தெளிவா பறைசாற்றுது..

?கண்முன்னே பெற்றோர்களை பறிகுடுக்கர வலி எப்படி இருக்கும்னு அந்த இடத்திலே இருந்து பார்த்தா தானே தெரியும். அப்படி ஒரு சூழ்நிலை வந்தும் கூட, தன்னை அதுல இருந்து மீட்டு எடுத்து, தன்னோட வளர்ப்பு பெற்றோரா இருந்தாலும் அவங்களை சொந்த பெற்றவர்களா பார்த்து அவங்க மேல அளவு கடந்த அன்பு வைக்கிறது உண்மையாவே பெரிய விஷயம். அந்த இடத்திலேயே ஜெயா வாழ்க்கையை ஜெய்க்க ஆரம்பிச்சுட்டா?? அவங்களும் அன்பு காட்றதுல இவளுக்கு சலச்சவங்க இல்லனு நிரூபிச்சு இருக்காங்க?? படிப்பு வேலை பிடித்தம்னு எல்லாத்துலயும் அவளுக்கான சுதந்திரத்தை தேவைக்கு ஏற்ப குடுத்து துணையா இருந்திருக்கங்க..

?அப்பறம் அந்த கதிரழகி கதை மூலமா ரெண்டு பேரும் சேர்ந்து அடிச்ச அரட்டை, அதுல இருந்து இவங்க ஒருத்தர் ஒருத்தரை கண்டு பிடிச்ச விதம் எல்லாம் பயங்கரம்?? அந்த கதைல வர பாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு அருமை. ஒருத்தரோட மனச காய படுத்தினா எவ்வளவு வலிக்கும்னு அழகி கதிர் ரெண்டு பேரோட செயல்களுமே நமக்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.. அதே போல பார்கவி பார்த்திபன் அவங்களும் தங்களோட இடங்கள அழகா நிறைவு செஞ்சு இருக்காங்க?? சொன்னால் தான் காதல் என்று இல்லயே, அது கதிரழகியோட முடிவில அருமையா புரிஞ்சுது. ஒரு விஷயம் நாம முழு ஈடுபாட்டோடு செஞ்சா அது அப்படியே நம்மளோட மனசை பிரதிபலிக்கும்.. அந்த மாதிரி கதிரழகி கதை ஜெயவோட வாழ்க்கைய பிரதிபலிச்சுது.. அதையும் தாண்டி பிரபா அவ்வளவு அழகா அந்த உண்மையை கண்டு பிடிச்ச விதம் மனசை கொள்ளையடிக்குது❤❤ ஆனாலும் அந்த பிள்ளைய மிரட்டி, கல்யாணம் பண்ண ரெடி ஆகுனு சொல்லி பொண்ணு பார்க்க வேற வீட்ல ஆளுகள அனுப்பிச்சானே அங்க நிக்கறான் நம்ம ஹீரோ??
 




deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
?அடுத்து நம்மளோட சண்ட கோழிகள் ருக்கு-சீனு.. மோதலில் ஆரம்பிச்சா காதலில் முடியும். யாருக்கு பொருந்துதோ இல்லையோ இவங்களுக்கு நல்லாவே பொருந்தி இருக்கு?? பாத்தலே அடிச்சுக்க போற மாதிரி வம்பு பண்ணிகிட்டு, கடுப்பேத்தி விட்டு ரசிச்சுட்டு இதுகளோட அலப்பறைல ஜெயாவோட தலை உருண்டது தான் மிச்சம்.. என்ன தான் இருந்தாலும் ஒருத்தரோட அருமை அவங்க பக்கத்துல இருக்கும்போது தெரியரத விட அவங்கள விட்டு தூரமா இருக்கும்போது தான் முழுசா உணர முடியும்.. ருக்கு சீனு வோட பிரிவு கூட அவங்களோட காதல உணர வைக்கும் சந்தர்ப்பமா அமைந்திருக்கு.. அதுலயும் பெருமாள் பேருல ஆளு வேணும்னு கேட்டு அதுவும் உண்மையாவே ஸ்ரீனி ரூபத்துல அவளுக்கு கிடைச்சு இருக்கு ?? ஸ்பெஷல்லி அந்த தீபம் போடுற மேட்டர் அதிபயங்கரம்.. ஆஞ்சநேயருக்கு தீபம் போட்டு போர் அடிச்சு அப்பறம் பெருமாளுக்கே ஐஸ் வைக்கறாளே அங்க நிக்கறா ருக்கு?? ஆனாலும் ஸ்ரீனி ரொம்ப பாவம் பா, ஒரு மனுஷன புக் வாங்க வச்சே கடுப்பேத்தி பார்க்க நம்ம வாயாடியால மட்டும் தான் முடியும்..

?எல்லாத்தையும் மீறி ருக்குக்கு ஜெயா மேல இருக்கும் அளவுகடந்த அன்பு, நட்புக்காக எதுவும் செய்ய போராடும் அவளோட மனசு, எல்லாத்துக்கும் மேல ஒவ்வொரு முறையும் அவளை ஊக்குவிச்சு தேற்றி மேல ஏற்றி விடும் குணம், உண்மையாவே நமக்கு மலைப்பை தரும்.. இப்பிடி ஒரு நட்பு கிடைச்சா உலகத்தையும் வென்று வரலாம் தானே.. நட்புக்கும் வாழ்க்கைக்கும் நடுவில் குழப்பம் வராம அவங்க ரெண்டு பேருமே பயணிச்சது ரொம்பவும் அருமை.. படிப்பு வேலை சுயவிருப்பம்னு ஒரே இடத்துலே இருந்து தங்களோட விருப்புகளை பகுத்தறிந்து செஞ்சது உண்மையாவே செம்ம??

?அடுத்து நம்ம ஸ்டார் ஜோடி ?? வேற யாரு நம்மளோட மதன்-மின்மினி, ஒருத்தர் மேல அளவுகடந்த அன்பு இருந்தா அவங்களுகாக எதுவும் செய்யலாம்னு இருந்து காட்டியதுக்கு ஒரு எடுத்துக்காட்டு மதன்?? எப்போதும் பிரபாக்கு ஆதரவா இருந்து ஒரு நலம்விரும்பியா, ஒரு நண்பனா அவனோட சந்தோஷத்தை பழையபடி திருப்பி குடுத்த பெருமை நிச்சயம் அவனை தான் சேரும் ?? பிரெண்ட்னா சும்மா டைம் பாஸ் பண்ணிட்டு போறது மட்டும் இல்ல எப்போதும் தோள் குடுத்து துணையா இருக்கறதுனு மதன் கிட்ட இருந்து தெரிஞ்சுக்கலாம்?? கற்பகம் அம்மா, பாரபட்சம் இல்லாத தாயன்ப குடுத்து மதனுக்கு இணையா பிரபாவ பத்துக்கிட்டதோட அவனோட குறுகிய உலகத்துல இருந்து வெளில கொண்டு வந்து அவனோட சந்தோஷமான உலகத்தை திரும்ப குடுத்துருக்காங்க?? எவ்வளவு நல்லவனா இருக்கோமோ அவ்வளவு அடி வாழ்க்கைல விழும் சொல்லுவாங்க.. அம்மாவே உலகம்னு இருந்த ஒரு அப்பாவிதனம் தான் அவனோட வாழ்க்கையவே தலைகீழா மாத்தி விட்ருக்கு.. திருமண பந்தம் சிறப்பா அமைய ஆண் பெண் ரெண்டு பேருமே சரியா இருக்கனும்.. அதுல ஒருத்தர் பின் வாங்கினா கூட அந்த வாழ்க்கை நரகம் தான்.. பேராசை எப்போதும் பெருநஷ்டம் தான் தரும். அதை யாருமே முன்னாடியே உணர்றது இல்லை. அனுபவிச்சா தான் திருந்துவாங்க ஆனா அதுக்குள்ள காலம் அதோட ஆட்டத்தை ஆடி முடிச்சு இருக்கும்.. பணம் சுயநலம் வச்சு மதனொட வாழ்க்கைய அழிச்சுட்டு போன இந்து, அதே மாதிரி எல்லாத்தையும் இழந்து நின்னது தான், தன்வினை தன்னைச் சுடும்..

? மினிம்மா சொல்லவே வேண்டாம்.. சரியான கேடிக்கெல்லம் கேடி.. வாழ்க்கைய அதோட போக்குல விடாம நமக்கு பிடிச்ச மாதிரி ரசிச்சு வாழணும்னு நமக்கு புரிய வச்ச மாஹாபிரபு?? வாழ்க்கையோட பிரச்சனைகள், கவலைகள் எல்லாம் மறந்து சந்தோஷமா சிரிச்சு மத்தவங்களையும் சிரிக்க வச்சு வாழ ஒரு சிலரால தான் முடியும்.. அதுல மினிய அடிச்சுக்க ஆளே இல்லை.. உறவுகள் இல்லாம வளர்றவங்களுக்கு தான் அந்த உறவுகள் உணர்வுகள் எல்லாமே நல்லா தெரியும்.. மதனோட அவ போடுற சின்ன சண்டைகள், மினிம்மா மணிம்மா ரெண்டோட அலப்பறைகள் எல்லாமே செம்ம ?? அதுலயும் பிரபாவ கூட இவ விட்டு வைக்கலயேனு நினைக்கும் பொழுது, சிரிப்பு பொங்கி வருது.. விதி படி வாழ்க்கைய வாழக்கூடாது மதிப்படி தான் வாழணும்னு அவ சொல்ற விதம் எல்லாமே சிறப்பு?? மதனோட காயம்பட்ட பக்கங்களுக்கு மருந்தா மாறி அவனை பழையபடி கொண்டு வந்த மொத்த பெருமையும் மினிம்மாக்கு தான்..

?கண்ணன் விஜி அவங்களோட பாத்திரம் அவ்வளவு பெரிசா இல்லைனாலும், அவங்களோட பங்கு ரொம்பவும் பெருசு தான்.. ஜெயா ருக்குக்கு துணையா இருந்து எல்லாம் செஞ்சதுல அவனோட பாசமும் அக்கறையும் அளவுக்கு அதிகமாகவே தெரியுது.. அதே மாதிரி பிரபா மதன் வாழ்க்கைல பெரும் மாற்றத்தை கொண்டு வந்ததுல விஜியோட பங்கு அளவிட முடியாத ஒன்னு..

?எல்லாம் நல்லாபடியா தென்றல் காற்று மாதிரி போன நேரம், உன்னோட நாரதர் வேலைய மொதல்ல ஹோட்டல் ல புக் எல்லாம் கை மாற வச்சு, அப்பறம் டேப்லெட் வச்சு புயல் அடிக்க வைக்கற வேலைய செஞ்ச பாத்தியா, அந்த இடத்தில எனக்கே பீபி டேப்லெட் போட வேண்டிய நிலமை வந்துடுச்சு, அவ்வளவு டென்ஷன் எனக்கு அந்த விஷயத்த கடந்து வரதுக்கு சில நேரமே தேவை பட்டுச்சு.. ஆனாலும் அங்க எதோ ஒரு விஷயம் இடிக்குதேனு தான் பொறுமையா இருந்தேன்.. நல்ல வேலை அது வீண் போல, ஒன்னுமே நடக்கலைனு கடைசில சொல்லி எங்க வயித்துல பால வார்த்த மா நீ ?? அந்த சூழ்நிலையிலும், தன்னோட வாழ்க்கைய பத்தி கவலை படாம தன்னோட நண்பனுக்கு துரோகம் செஞ்சுட்டோமே, ஒன்னுக்கு ரெண்டு பெண்களோட வாழ்க்கைய சரி பண்ணனும்னு ஒரு விஷயம் மட்டும் மனசுல வச்சுட்டு, தன் மொத்த சந்தோஷத்தையும் தூக்கி போட்டுட்டு மினிக்காக யோசிச்ச பிரபா, விதியோட விளையாட்டுக்காக தன்னோட வாழ்க்கைய பனையம் வைக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கும் மினி, தன்னால மூணு பேரோட வாழ்க்கை கேள்வி குறி ஆகிடுச்சேனு தன்னை குற்ற உணர்வில் வைக்கும் மதன்னு அந்த சூழ்நிலை ரொம்பவும் படபடப்பாவே இருக்க தான் செய்யுது.

?சொந்த மகளா இருந்தாலும் செஞ்சது தப்பு தானு ஒதுக்கி வைக்க கூட யோசிக்காத தர்மனோட பாத்திரம் ரொம்வும் வரவேற்க்கதக்கது.. அதிலும் சங்கவிய காப்பாத்தி கூப்பிட்டு வந்த மினி மேல அன்பு காட்டி அவள மகளா பார்த்ததுல அவரோட மரியாதை இன்னமும் அதிகம் ஆகுது.. சங்கவியும் அவளை சொந்த சகோதரி போலயே பாசம் வச்சு ஏத்துக்கிட்டது பார்க்கவே அருமையா இருக்கு.. சமந்தமே இல்லாத ஒருத்தர் மேல உண்மையான அன்பு காட்றத விட பெரிய விஷயம் உலகத்துல எதுவும் இருக்காது??

?நடந்த விபரீதம் மறைமுகமாக தெரிய வந்தாலும், அது தனக்கான வாழ்க்கைல சமந்தப்பட்டதுனு உணர்ந்து வலிகளை சுமந்து மனசுக்கு பிடிச்சவனை கரம்பிடிக்கற ஜெயா, அவனை தூக்கி போடாம, அவன் மேல தப்பு இருந்தாலும் வாழ்க்கையோட நிதர்சனத்தை புரிஞ்சு அவனை ஏத்துக்கிட்டு காலப்போக்கில் அவன்மேல தப்பு இல்லைனு தெரிஞ்சு, அவனோட அளவில்லாத காதலையும் தெரிஞ்சுக்கிட்ட விதம், தெரிஞ்சே தப்பு செய்யறமோனு மனசுக்கு பிடிச்சவள கூட இஷ்டம் இல்லாம கல்யாணம் பண்ற பிரபா அவன்மேல தப்பு இல்லைனு தெரிஞ்ச அப்பறமும் கூட தன்னோட காதலை சொல்லியே வாழ்க்கை தொடங்க நினைக்கும் செயல், விதியால வாழ்க்கைல ஒரு தப்பு நடந்தாலும், அதுனால கிடைச்ச வாழ்க்கைய விட பிடிச்ச வாழ்க்கை தான் முக்கியம்னு துணிந்து முடிவு எடுக்கற மினி மதனோட அழகான வாழ்க்கை வாழ ஆரம்பிச்சு அவனோட குற்ற உணர்வுக்கு மருந்தா மாறுறது, எல்லாம் தன்னால்தானு பழிய ஏத்துக்கிட்டு ஒதுங்கி இருக்கற மதன் மினிய உலகமா நினைச்சு தொலைஞ்சு போன தன்னோட சந்தோஷத்த எல்லாம் மொத்தமா மீட்டு எடுக்கறது, நடந்த எதுவும் தெரியாம அவங்களுக்கு துணையா இருக்கற ருக்கு, ஸ்ரீனி, கண்ணன், விஜி, மொத்தத்தில் இவங்க எல்லாருக்கும் நடுவில் இருக்கும் ஒரு ஒற்றுமை "எதிர்பார்ப்பு இல்லாத அளவுகடந்த அன்பு" மட்டும் தான் ??

மொத்தத்தில் "தமிழரசியின் கதிரழகி" அன்பிற்கு இலக்கணமான ஒரு கதைக்களம்.. சூப்பர் டா ஸ்ரீ மா?? வாழ்த்துக்கள்❤❤
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Wow intha kathaikku ippadi Oru review semma marakkave mudiyatha Oru tharunam. Intha kathaikku ithu muthal review but ethirpaatha nerathil kidaikkatha Oru visayam ethirpaaratha nerathil nadakirathu athukku thakuntha neramum kalamum varavendum pola. ??❤❤
Nijamave romba happy solla vaarthai illa.. thanks Devi akka.. intha review la anaivaraip parriyum thelivaaga solli irukkeenga athuve santhosama irukku...❤❤❤❤❤❤
 




deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
Wow intha kathaikku ippadi Oru review semma marakkave mudiyatha Oru tharunam. Intha kathaikku ithu muthal review but ethirpaatha nerathil kidaikkatha Oru visayam ethirpaaratha nerathil nadakirathu athukku thakuntha neramum kalamum varavendum pola. ??❤❤
Nijamave romba happy solla vaarthai illa.. thanks Devi akka.. intha review la anaivaraip parriyum thelivaaga solli irukkeenga athuve santhosama irukku...❤❤❤❤❤❤
Awww ? over pugalchi odambuku agadhu sri ma???? ore vekkama coming
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
இதுக்கு பேர் தான் ரிவியு வா! வாவ் செம்ம கலக்குறீங்க தேவி???? வாழ்த்துக்கள் சந்து மா????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top