• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Teaser Nan aval ilai 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நடுநிசி இரவு!

உலகமே இருளின் பிடியில் மூழ்கி கிடந்தது.

சென்னை நகரத்தின் சாலைகளில் அணிவகுத்து நின்ற போஸ்ட் கம்பங்கள் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்க, மாயஜாலமாய் அவ்வப் போது சில கனரக வாகனங்கள் விர்ரென அந்த சாலையில் பறந்து கொண்டிருந்தன.

இரவு நேரமென்பதால் கேட்பாரின்றி அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்க, அந்த சாலையின் வழியே தன் கட்டுப்பாட்டை இழந்து வந்து கொண்டிருந்த அதிநவீன பெஃரார்ரி கார்!

நிச்சயம் சில கோடிகளை அந்த கார் விழுங்கியிருக்கும்.

அத்தனை பிரம்மிப்பாய் அதன் முன்புறத் தோற்றம் இருக்க, பளபளத்து கொண்டிருந்தது அதன் சிவப்பு வர்ணம்.

அந்த காரின் ஓட்டம் அதிபயங்கரமாய் இருந்தது. தன் கட்டுப்பாட்டை மீறிக் கொண்டு செல்கிறது என்பது நன்றாகவே தெரிந்தது.

போக்கிடம் இல்லாமல் சாலையோரங்களில் படுத்துக்கிடந்தவர்களை எல்லாம் ஒரு நொடி அரண்டு போகச் செய்து அந்த கார் கடந்துச் சென்றது.

'இதெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு சகஜம்தானே!'

அவர்களின் மனோஎண்ணம்!

ஆம்! சகஜம்தான்.

ஆனால் அதன் ஓட்டமும் வேகமும் யாருடைய உயிரையோ காவு வாங்க காத்திருக்கிறது எனும் போது சகஜம்தான் என்று கடந்து சென்றுவிட முடியுமா?

எமனின் தூதுவனாய் வந்து கொண்டிருந்த அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தான் டேவிட் !

டேவிட் அந்தோனி.

*******
இன்னும் சில விநாடிகளில் டேவிடிற்கு புரியும். இந்த உலகிலயே சிரமத்திற்குரிய விஷயம் எதுவென்று?View attachment 902
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top