• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikayiru novel

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம் -1-

மார்கழி மாத பனித்துளிகள் சூரியனின் வரவு தெரியாமல் புற்களிலும் மரங்களின் இலைகளிலும் குடியிருந்தன..

காற்று இறங்கி வீசியதில் இலைகள் அசைந்து பனித்துளிகள் தரையில் விழுந்து உடைந்து சிதறியது. இருள் திட்டு திட்டாய் விலக ஆரபித்தது
விடியற்காலை மூன்று மணிக்கு அலைபேசியில் செட் செய்து வைத்திருந்த அலாரம் அடிக்கத் துவங்கியது. கண் விழித்த கருப்பசாமி தளர்ந்திருந்த லுங்கியை இறுகக் கட்டிக்கொண்டு கண்களை கசக்கியபடி பாயை விட்டு எழுந்தார்.

சமையலறையில் வைத்திருந்த பிளாஸ்டிக் குடத்திலிருந்து சொம்பில் தண்ணீர் மோந்து வைத்து விட்டு பல் விளக்கி வாய் கொப்பளித்தார்..
கருப்பசாமிக்கு அப்போது வயது நாப்பத்தி ஒன்பது நெருங்கிக்கொண்டிருந்தது.. விரிந்த மார்பில் அடர்ந்த முடிகள் கறுப்பும் வெள்ளையுமாக கலந்து நின்றன.
அவர் உடம்பில் ரோமங்கள் வளராத இடமே இல்லை. பின் பக்க முதுகிலும் தோள்களிலும் கூட தாராளமாய் வளர்ந்திருந்தன.

ஒடுங்கிய வயிறில் கூட முடிகள் முளைத்திருந்தன. சீப்பு கொண்டு மார்பிலிருந்து வயிறுவரை வாரி அழகு பார்ப்பார்.
வெத்திலை போட்டு சிவக்க வைத்த உதடுகளில் பீடி சிகரெட் எதுவும் சொருகாததால் உதடுகள் சிவப்பு நிறமேறியிருந்தன. அவரது குடிசை வீட்டுக்கு ஒரு உள் அறையும் ஒரு நடு அறையும் பின்பக்கம் சமையலறையும் இருந்தது.

சுவர்கள் ஹாலோபிளாக் கற்களால் மறைக்கப் பட்டிருந்தது, சுவருக்கு மேலே உத்தரத்தில் நீள சவுக்கு மர கம்பு வைத்து முன்பக்கமும் பின்பக்கமும் கம்புகள் கட்டி முடைந்த தென்னை மர ஓலைகளால் கட்டி இருந்தார்.

வருடம் ஒன்று ஆனபோது குடிசையின் கூரை நசிந்து மழைத்தண்ணீர் குடிசைக்குள் ஒழுகிக் கொண்டிருக்கும். வசந்தி பழைய பாத்திரங்கள் எடுத்து வைத்து குடிசைக்குள் ஒழுகும் தண்ணீரைப் பிடிப்பாள். சென்ற வருடம் வீடு ஓலை கட்டியது நினைவுக்கு வந்தது..
கருப்பசாமி தன்னந்தனி ஆளாய் வீட்டின் கூரையில் ஏறி பழைய ஓலைகளை மரத்தோடு சேர்த்து கட்டி வைத்திருக்கும் தென்னை மர ஈக்குகளை அறுத்து கீழே இறக்கிப்போட்டார்..

பழைய ஓலைகள் குடிசையின் தரையில் குவிந்து கிடந்தது.. வசந்தி ஒவ்வொரு பழைய ஓலைகளை இழுத்து வந்து அதில் நல்லது எது கெட்டது எது என்று பார்த்து நல்ல ஓலைகளை ஒரு ஓரமாய் அடுக்கி வைத்தாள்.

நசிந்த ஓலைகளை இழந்து குடிசை மொட்டையானதும் கீழே இறங்கி தென்னை மர ஓலை ஒன்றை வெட்டிப்போட்டார்.
பழைய ஓலைகளை எரித்து அதில் பச்சை தென்னை ஓலையை வாட்டி எடுத்து அதை கத்தியால் அறுத்து சிறு சிறு கட்டுகளாக கட்டி வைத்தார்.

வசந்தி புதிய ஓலைக்கீற்றுகளின் மீது பழைய நல்ல ஓலைகளை வைத்து எடுத்துக் கொடுத்தாள். கருப்பசாமி தனது இடையில் கட்டி வைத்திருக்கும் வாட்டி வைத்திருந்த தென்னை ஈக்குகள் கொண்டு ஓலைகளை சவுக்கு மர கம்புகளோடு சேர்த்து கட்டி முடித்தார். இன்று அந்த ஓலைகள் நசிந்து அதன் ஈக்குகளை கீழிருந்து எண்ணிவிடலாம் போலிருந்தது/

குடிசைக்கு வெளியே வடக்கு, தெற்கு பகுதிகளில் தென்னை மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. மேற்குப் பகுதியில் ரப்பர் மரங்கள் இளமையோடு நின்றிருந்தன. இன்னும் பால் வடித்தெடுக்கப்படவில்லை.

மேலங்கலம் தங்கமணியின் பத்து ஏக்கர் நிலத்தை பராமரித்து அந்த நிலத்தில் நிற்கும் தேங்காய்களை வெட்டிப் போடுவது., அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்று தனது கூலியை எடுத்துக் கொண்டு மீதிப்பணத்தை மேலங்கலத்தில் இருக்கும் முதலாளி தங்கமணியின் வீட்டில் கொண்டு சேர்ப்பது அவர் செய்து வரும் அன்றாட தொழிலாக இருந்தது.

நேற்று வெட்டிய தேங்காய்களை மட்டை நீக்கி சாக்கு மூட்டைகளில் கட்டி மெயின் ரோட்டிலிருக்கும் ஆட்டோ டிரைவர் சந்திரனின் வீட்டில் கொண்டு போய் வைத்தாகி விட்டது.
இன்று கருங்கல் சந்தைக்கு கொண்டு சென்று விற்று விட்டு வரவேண்டும். கருப்பசாமி உடை மாற்றிவிட்டு வருவதற்குள் வசந்தி சமையலறைக்குச் சென்று வறக்காப்பி போட்டு எடுத்து வந்தாள்.

” நான் சந்தைக்குப் போயிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் திரும்ப வந்திடுவேன், தாயில்லா பொண்ணு நீ, வீட்டில பத்திரமா இருக்கணும் சரியா?” கருப்பசாமி காப்பியை குடித்தபடியே சொன்னார்.

”அப்பா...நான் தாயில்லாப் பொண்ணுன்னு எத்தன வருஷமா சொல்லீட்டு வர்றீங்க, நீங்க சந்தைக்கு இண்ணைக்கா முத தடவையா போறீங்க? கடந்த பத்து வருஷமா என்ன தனியா விட்டுட்டு தானே சந்தைக்குப் போறீங்க, இண்ணைக்கு மட்டும் என்ன புதுசா... முதல்ல சந்தைக்குப் போற வழியப் பாருங்க!” வசந்தி அப்பாவியான தனது அப்பாவைப் பார்த்து புன்னகைத்தபடியே சொன்னாள்.

கருப்பசாமி டார்ச் லைட்டை அடித்து வெளிச்சம் வீசியபடியே ஒற்றையடிப் பாதை வழியாக மெயின் ரோட்டுக்கு நடந்தார். சிமெண்ட் ஜாளியிட்ட ஜன்னல் வழியே அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. பின்பக்க சமையலறைக் கதவு லேசாய் தட்டும் சத்தம் கேட்டது.

வசந்தி கதவைத் திறந்து வைக்க பிரபாகரன் உள்ளே நுழைந்தான். வசந்தி கதவைத் தாளிட்டுவிட்டு நடு அறைக்கு வந்தாள்.

”நீ ஒரு மொஃபைல் வாங்கியிருந்தா உன் கூட பேசுறதுக்கு நான் எதுக்கு விடியக்காலையில உன் அப்பா சந்தைக்குப் போற நேரம் பார்த்து வரணும், கேட்டான் பிரபாகரன்.

”அப்பா என்ன யாருக்காவது கட்டி வைக்க ராப்பகலா உழைக்கிறாரு, குருவி சேர்க்கிற மாதிரி சேர்க்கிறாரு, இப்பிடி இருக்கிறப்போ நான் எப்படி அப்பாகிட்ட ஒரு ஃபோன் வாங்கித்தாங்கன்னு கேட்க முடியும்!”

” நான் ஒரு போன் வாங்கித்தர்றேன்னு சொன்னாலும் வேண்டாங்கறே, அப்பறம் நான் என்ன தான் பண்றது!”

” நாம ரெண்டு பேரும் காதலிக்கிற விஷயம் இது வரைக்கும் என் அப்பாவுக்கு தெரியாது, ஒருவேள நீங்க எனக்கு போன் வாங்கிக் குடுத்தா அப்பாவுக்கு சந்தேகம் வரும் அதனால தான் வேண்டாம்ன்னு மறுத்தேன்.!”

”சரி இப்போ மணி நாலேகால் ஆகுது இன்னும் ஒரு மணி நேரம் டைம் இருக்கு, அதுவரைக்கும் நாம பேசிகிட்டே இருப்போம்!” அவளது கைகளை வருடியபடியே சொன்னான் பிரபாகரன். இருவரும் மெய்மறந்து சத்தமில்லாமல் குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார்கள்.

குடிசைக்கு வெளியே கேடி ஜோசப் நின்றிருந்தான். கருப்பசாமி இந்த நேரத்தில் சந்தைக்குப் போவார் என்ற தகவல் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததால் அந்த நேரத்தில் வசந்தி தனியாக இருப்பாள்.

ஓலைக்குடிசை வேறு நசிந்து இருந்தது முன்பக்கமும் பின் பக்கமும் இருக்கும் கதவுகளுக்கு தாள்போட்டு விட்டு குடிசைக்கு தீ வைத்து விட்டால் வசந்தி குடிசையோடு சேர்ந்து எரிந்து போவாள். தனது வேலை எளிதில் முடிந்து விடும் என்ற அவனது திட்டம் இறுதி வடிவத்துக்கு வந்தது.

முதலில் பின் பக்கமாய் வந்து வெளிப்பக்கமாய் தாள்பாள் போட்டு அது திறந்து வராமல் இருக்க தரையில் கிடந்த சிறு குச்சியை எடுத்து அதில் சொருகினான்.

முன் பக்கக் கதவுன் தாள்பாளையும் போட்டுவிட்டு குச்சியால் சொருகி தரையில் கிடந்த தென்னை மர காய்ந்த ஓலைகளை இணிந்து அதன் தும்பில் லைட்டரை பத்த வைத்து கொழுத்தி தீ சற்றே வளர்ந்ததும் மேற்கூரையில் எறிந்தான்.

பகல் உச்சி வெயிலில் நன்கு உலர்ந்து இருந்த தென்னங்கீற்றுகள் இரவில் சற்றே குளிர்ந்து இருந்தாலும் தீயைக் கண்டதும் மளமளவென பற்றிக்கொண்டது. கேடி ஜோசப் அங்கிருந்து மின்னலென மறைந்தான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பால்ராசய்யா சார்
 




Last edited:

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஆரம்பமே திகிலா இருக்குப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top