• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikayiru Novel

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
குடிசையின் நடு அறையில் பேசிக்கொண்டிருந்த இருவரின் அருகில் மேல்கூரை எரிந்து சிறு கங்கிகள் கீழே விழுந்ததும் அண்ணார்ந்து பார்க்க குடிசையின் மேற்பகுதி மளமளவென எரிந்துகொண்டிருந்தது.

வசந்தியின் கைகளை பிடித்து இழுத்து வந்து முன் பக்க கதவின் கொண்டியை நீக்கி திறந்தான். கதவு திறந்து கொள்ளாமல் அப்படியே இருந்தது.

”யாரோ வெளியில பூட்டி இருக்காங்க, வா பின் பக்கம் போலாம்!” பிரபாகரன் வசந்தியை இழுத்தபடி சமையலறைக்கு வந்து கதவின் கொழுத்தை விலக்கித் திறந்தான். அதுவும் திறக்காமல் அப்படியே நின்றது. பின்பக்கக் கதவு கட்டளை வைக்காமல் சுவரில் இரும்பு கொக்கி அறைந்து அதில் கொழுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பிரபாகரன் சுற்றும் முற்றும் பார்த்தான். சமையலறையில் புளியங்கொம்பு விறகு கீறாமல் கிடந்தது. அதை எடுத்து வந்து மேலும் கீழும் இருந்த கொண்டிகளில் பலமாய் அடிக்க நான்காவது அடிக்கு இரண்டு கொண்டிகளும் சாய்ந்து உருவி வந்தது.

இருவரும் பாதி திறந்து இருந்த அந்த இடைவெளியில் வெளியே வர எந்த ஆபத்தும் இல்லாமல் உயிர் பிழைத்தார்கள். அந்த குடிசையைத்தாண்டி ஐந்நூறு அடி தூரத்தில் வேறு நான்கு வீடுகள் இருந்தன.

தீ மளமளவென்று எரிந்து மேலே எழுந்த புகையின் வாசம் அந்த அதிகாலை இருட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலரின் நாசிகளைத் துளைத்தது.

சிலர் கண் விழித்து வெளியே வந்து பார்த்த போது கருப்பசாமியின் குடிசை நன்றாக எரிந்து புகை மேலே எழும்பிக் கொண்டிருந்தது.

சத்தம் போட்டு பலரும் ஓடி வந்தார்கள் தங்கள் கைகளில் கிடைத்த குடங்களையும் பாத்திரங்களையும் கொண்டு வந்து குடிசைக்கு அருகில் நூறடி தூரத்தில் ஓடிய வாய்க்கால் நீரைக் கோரி எரிந்து கொண்டிருந்த தீயின் மீது ஊத்த தீ கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கத் துவங்கியது.

பிரபாகரனின் வேகம் கண்டு பலரும் வியந்தார்கள். அவன் மட்டும் அந்த நேரம் பார்த்து வரவில்லையென்றால் வசந்தி எரிந்து சாம்பலாகி இருப்பாள்.
அவள் உயிரை அவள் காதல் காத்துக் கொண்டது. தீயை அணைத்து விட்ட பிறகு தான் ஒவ்வொருவருடைய பார்வையும் பிரபாகரன் மீது படிந்தது.
சிலருக்கு ஆச்சரியம், இந்த விடிகாலை நேரத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பிரபாகரனால் எப்படி இங்கு வந்து குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முடிந்தது.

அவனுக்கு நன்றி சொல்வதை விட்டு விட்டு அவனையே சந்தேகமாய் பார்த்தார்கள். நன்கு விடிந்த பிறகே தீயை முழுவதுமாக அணைக்க முடிந்தது.
வந்திருந்தவர்களில் யாரோ சந்தைக்குச் சென்றிருந்த கருப்பசாமிக்கு போன் செய்ய கருப்பசாமி அதே ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தார்.
கருப்பசாமி வந்து சேர்ந்த போது மேற்கூரை இல்லாத குடிசையாகவே நின்றிருந்தது. அவர் சத்தமிட்டு அழுதார். வசந்தி அவன் அருகில் வந்து அவன் கரங்களைப் பற்றியதும் மகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற சந்தோஷம் அவர் முகத்தில் நிழலாட அழுகையை அடக்கிக் கொண்டார்.

”அப்பா...இவர் மட்டும் வரலையின்னா என்ன உயிரோடயே பார்த்திருக்க மாட்டீங்க!” சொல்லிவிட்டு தந்தையின் மார்பில் தலை சாய்த்தபடி அழுதாள் வசந்தி. கருப்பசாமி பிரபாகரனை கையெடுத்து கும்பிட்டார். நன்றி என்ற வார்த்தையைச் சொன்னபோது உதடுகள் அசைந்தது வார்த்தைகள் வெளிவரவில்லை.

”நான் கிளம்பறேன்!” பிரபாகரன் சொன்னபோது அவனையே பார்த்தபடி நின்றாள் வசந்தி. கண்களில் கண்ணீர் திரண்டு வழிந்தது. எல்லோரும் துக்கம் விசாரிப்பது போல் வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். தென்னங்கீற்று ஓலைகள் எரிந்து சாம்பல் தரையெங்கும் விரவிக் கிடந்தன.

குடிசையச் சுற்றி கரியும் சேறும் கலந்து கறுப்பு நிறமாகவே காட்சியளித்தது.
தீயை அணைத்த பலரும் அணிந்திருந்த சாரமும் வேட்டியும் முழுதாய் நனைந்திருந்தன.
ஒருவழியாய் அனைவரும் புறப்பட்டு போன பிறகு கருப்பசாமியின் தோளில் ஆதரவாய் கை போட்டான் பக்கத்து வீட்டு பரமசிவன்.

”கருப்பா...உன் குடிசைக்கு தீ தானா ஒண்ணும் பத்திக்கிடல, யாரோ வேணுமுன்னு தான் தீ வெச்சிருக்காங்க, உன் வீட்டு பின் பக்கக் கதவப் போய் பாரு, வெளியே தாள்பாள் போட்டு தாள்பாள் விலகாம இருக்க சின்ன குச்சி எடுத்து சொருகி வெச்சிருக்காங்க, உன் மகள அந்த பிரபாகரன் தான் காப்பாத்தியிட்டதா சொல்றாங்க, இங்க தீ பிடிச்ச விஷயம் ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல இருக்குற அந்த தம்பிக்கு எப்பிடித் தெரிஞ்சு ஓடி வந்து காப்பாத்த முடியும்? கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு,!” பரமசிவன் பத்த வைத்த விஷயம் கருப்பசாமியின் மனதில் கரும் புகையாய் வளர்ந்தது.

அன்று புதுக்கடை சந்தைக்குச் சென்று தென்னங்கீற்று ஓலைகளும் சவுக்கு கம்புகளும் வாங்கி வந்து எரிந்த கம்புகளை கீழே இறக்கி புதுக் கம்புகள் வைத்து கட்டி ஓலையும் கட்டி முடித்தார்.

பின் பக்க கதவைத்தான் வைக்க முடியவில்லை. மறுநாள் காலை மேஸ்திரி வந்து கதவை வைத்து விடுவதாகச் சொன்னதால் அந்த கதவை கதவு இருந்த இடத்தில் சாய்த்து வைத்தார். கருப்பசாமி.

வசந்தி வீட்டின் எல்லா பகுதிகளிலும் படர்ந்து கிடந்த கரிகளை கூட்டி சுத்தம் செய்தாள். வீடு முழுவதும் நனைந்திருந்தது.
மண் தரை இல்லாமல் சிமெண்ட் தரையாக இருந்ததால் கூட்டி எடுக்க முடிந்தது.

மண் தரையாக இருந்தால் சேறும் சகதியுமாக குடிசை உலர பல நாட்கள் ஆகியிருக்கும். வீட்டில் கவலை படிய எதையோ இழந்ததுபோல் இருந்த வசந்தியின் தோளை ஆதரவாய் தொட்டார் கருப்பசாமி. இருக்கையை விட்டு எழுந்து வடிந்த கண்ணீரைத் துடைத்தாள் வசந்தி.

”என்ன மன்னிச்சிடுங்கப்பா..அந்த பிரபாகர நான் விரும்பறேன்பா!” சொல்லிவிட்டு சத்தமிட்டு அழுதாள் வசந்தி. கருப்பசாமி மவுனமாகவே இருந்தார்.

”அப்பா..நீங்க சந்தைக்குப் போனதும் அவர் நம்ம வீட்டுக்கு வந்தாருப்பா, நாங்க கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தோம், அந்த நேரத்துல யாரோ வெளியில தாள்பாள் போட்டு குடிசைக்கு தீ வெச்சுட்டாங்க, பிரபாகரன் தான் பின் பக்க கதவிருந்த கொண்டிய உடைச்சு என்ன காப்பாத்தினாரு!’’

”நம்ம குடிசைக்கு தீ வெச்சதுக்கு காரணமும் உன் காதல் தான் உன்ன காப்பாத்துனதும் உன் காதல் தான். ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்க, நாம எல்லாம் பரம ஏழையிங்க, பணக்காரங்களுக்கு காதல் ஒரு பொழுதுபோக்கா இருக்கலாம், அந்த பொழுதுபோக்குக்கு நீ இரையாகிடக்கூடாது”

”அப்பிடி எதுவும் ஆகாதுப்பா, பிரபாகர முழுசா நம்பலாம்” அவளது நம்பிக்கை வார்த்தையில் கட்டுண்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் மவுனமாகவே இருந்தார்.
கருப்பசாமி திண்ணையில் நின்றிருந்த மண் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து இருந்தார். அவரது சிந்தனைகள் எங்கெல்லாமோ சுற்றி அலைந்தது.
மகள் காதலை அங்கீகரிப்பதா? எதிர்ப்பதா என்ற கேள்வி அவரை குடைந்து கொண்டிருந்தது.

கருப்பசாமியால் மகளுக்கு விரோதமாக நடந்து கொள்ள மனம் வரவில்லை. அவள் விருப்பம் எதுவோ அப்படியே நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
குப்பென்று வீசிய காற்றில் எரிந்த குடிசையின் வாடை தூக்கலாக இருந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top