• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikkayiru -18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம் 18

மணி ஒன்றரை ஆகியிருந்தது. வசந்தி நல்ல தூக்கத்தில் இருந்தாள், காரை நிறுத்திவிட்டு வசந்தியை உலுக்கினான் பிரபாகரன்.

”அதுக்குள்ள கோயம்பத்தூர் வந்தாச்சா” என்று கண்களை கசக்கியபடியே கார் கதவைத் திறந்தாள்.

”மணி ஓண்ணர தான் ஆச்சு, அதுக்குள்ள கோயம்பத்தூர் வந்துடுமாக்கும், நாளைக்கு காலையில ஏழு மணிக்கு நாகர்கோவில்லயிருந்து டிரெயின்ல போறோம், ராத்திரி தான் கோயம்பத்தூர் போய் சேர்வோம், அதுவரைக்கும் இந்த வீட்டில ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா போலாம்!”

”வசந்தி தூக்கக் கலக்கத்தில் சுற்றும் முற்றும் பார்த்தாள். அது யாருடைய வீடு என்று தெரியாமல் தடுமாறினாள். பிரபாகரன் திறந்திருந்த முன் வாசல் கதவை தள்ளிவிட்டு வசந்தியை உள்ளே போகச் சொன்னான்.

வசந்தி உள்ளே நுழைந்து அரக்கப் பரக்கப் பார்த்தாள், சுவரில் அணிவிக்கப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்த போது தங்கமணி ஒரு போட்டோவில் சிரித்தபடி இருந்தார். அவருக்குப் பக்கத்தில் சூர்யாவின் போட்டோ இருந்தது.

”பிரபாகர்..இது சூர்யாவோட வீடு மாதிரி இருக்கு, எதுக்காக என்ன இங்க கூட்டிகிட்டு வந்த..? அவனது கேள்விக்கு பதில சொல்லாமல் போட்டிருந்த ஷோபாவில் வந்தமர்ந்து கால்களை அகலமாய் பரப்பி ஆட்டிக்கொண்டிருந்தான்.

சட்டென எழுந்தவன் அறையின் ஓரத்தில் இருந்த குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து ஃபீசரில் இருந்த பீர் பாட்டில் ஒன்றை வெளியே எடுத்தான். பாட்டிலிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது.

பிரபாகரன் பாட்டிலைத் திறந்து ஒரு வாய் பீர் குடித்தான். நின்றிருந்த அவளை அணைத்தபடி ஷோபாவில் அமர வைத்தான்.

”வசந்தி...இதுவரைக்கும் உன்கூட பழகின பிரபாகரன் வேற, இப்ப நீ பார்க்கப் போற பிரபாகரன் வேற!” அவன் பீடிகையோடு தன் பேச்சைத் துவங்கினான்.

”உன் மேல நான் தான் ஆச வெச்சேன்னு நினச்சேன், இல்ல..உன் மேல கேடி ஜோசப் ஆசப் பட்டிருக்கான், இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் சூர்யா ஆசப் பட்டிருக்கான் இப்பிடி பலபேரோட மனசில இடம் பிடிச்ச உன்ன மறுபடியும் நான் கல்யாணம் பண்ணிகிட்டா பார்க்கிறவங்க உன்ன தப்பா நினைக்க மாட்டாங்க. என்னத்தான் காறித் துப்புவாங்க.!” அவன் மறுபடியும் பீர் பாட்டிலை இதழ்களில் சரித்தான்.

குளிருக்குப் பயந்து போர்வைக்குள் ஒளிந்து இருப்பது போல் உடல் ஒடுங்கி சுருங்கியிருந்தாள் வசந்தி. அவளது கண்களில் ஏனோ கண்ணீர் வராமல் இருந்தது. அடி வயிற்றிலிருந்து நெருப்பு என்று சுருண்டு கொண்டிருந்தது.

”வசந்தி..நான் ஆசப்பட்டு எதையுமே அடைஞ்சதில்ல, முதன்முதலா உன்னக் காதலிச்சேன், நீ கிடைக்கல, உன்ன மறக்கிறதுக்காக மதுவத் தொட்டேன், போதை மருந்தத் தொட்டேன், அப்பறம் என் நரம்பெல்லாம் தளர்ந்து போச்சு, இந்த போதை மருந்து சூர்யாகிட்ட மட்டும் தான் இருந்திச்சி, அவன் திடீர்ன்னு மருந்து தர்றத நிப்பாட்டிட்டான், அப்பறம் தான் தெரிஞ்சுது அவனுக்கு உன் மேல ஒரு கண் இருக்குன்னு, எனக்கு போதை மருந்து வேணும்ன்னு கேட்டப்போ உன்ன அவன்கிட்ட கொண்டு வந்து ஒப்படைச்சா தர்றேன்னு சொன்னான், உன் பழைய காதலனா உன் வீட்டுக்கு வந்தேன், உன்கிட்ட ஆசை வார்த்தைகள அள்ளி வீசினேன் நீயும் என் கூட வந்திட்ட..எனக்கு போதை மருந்து கிடைக்கணுமுன்னா நீ சூர்யாவுக்கு கிடைக்கணும்!” அவன் சொல்லி முடிக்கவில்லை அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள் வசந்தி.

”சொந்தக் காதலிய அடுத்தவனுக்கு கூட்டிக் கொடுக்கிற பொம்பளப் பொறுக்கி நாயே, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கு வந்து என்ன ஆச காட்டி நாம புது வாழ்வு தொடங்கலாம்ன்னு ஏமாத்தி இங்க கூட்டிகிட்டு வந்திருப்ப, நீயெல்லாம் ஒரு மனுஷனா..? காதல்ங்கிற புனிதமான உறவுக்கு நீ ஒரு களங்கம், காதல்ங்கிற செடிய வேரோட பிடுங்கி எறிஞ்ச ஒரு வெள்ளாடு, காதல்ங்கிற மலர கசக்கிப் பிழிஞ்ச ஒரு காட்டுமிராண்டி. அடுத்தவன் ஆசப்பட்டா கட்டின பொண்டாட்டிய விட்டுக் கொடுப்பியா..? காதல் வேற வாழ்க்கை வேற, காதல்ங்கிறது உனக்கெல்லாம் உல்லாச விளையாட்டா ஆகிப் போச்சா..? உன்ன மாதிரி எச்சக்கல நாய்கள் இருக்குற இந்த சமூகத்தில தொட்டு தாலி கட்டி இத்தன நாளும் என் விரல் நுனியக் கூட தொடாம என் கூட குடும்பம் நடத்தினாரே அந்த கேடி ஜோசப் எவ்வளவோ மேல்.. !” பிரபாகரன் மிரண்டு நின்றான். அவன் தொண்டைக் குழி அடைந்து போனது.

”உன்ன காதலிச்ச குற்றத்துக்காக அந்த மனுஷன எத்தனையோ தடவ வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி இருக்கேன், ஊருக்கு வேணுமுன்னா அவர் ரவுடியாக இருக்கலாம், ஆனா அவருக்கும் ஆண்டவன் இதயத்த படைச்சிருக்கார், எந்த புருஷனும் தொட்டு தாலி கட்டின மனைவி இன்னொருத்தன் கூட ஓடிப் போறத விரும்ப மாட்டான், ஆனா கேடி ஜோசப் அப்படி இல்ல, நான் காதல்ல ஜெயிச்சு நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக அவரே என்ன சந்தோஷமா வழி அனுப்பி வெச்சாரு, இத்தன நாளும் அவர நான் என் புருஷனா மதிக்கல, ஆனா இப்போ சொல்றேன், அவர் தான் என் புருஷன். இந்த வசந்தி கேடி ஜோசப்போட பொண்டாட்டி,, மரியாதையா என்ன அவர் வீட்டுல கொண்டு போய் விட்டுடு, இல்ல என் புருஷனுக்கு போன் பண்ணி அவர வரவழைச்சா அவர் வந்து உன்ன பீஸ் பீஸ்சா ஆக்கியிடுவார்”

அவள் வார்த்தைகளைக் கேட்டு ஆடிப் போயிருந்தான் பிரபாகரன். வசந்தி அப்படிச் சொன்னாலும் அவள் கைபேசியில் அவன் நம்பர் பதிவு செய்யாமல் விட்டது நினைவுக்கு வந்தது.

பிரபாகரன் அவள் கரங்களைப் பிடித்து இழுத்து அடுத்திருந்த அறைகுள் தள்ளி வெளியே தாளிட்டான். அவன் சூர்யாவுக்கு போன் செய்தான். சூர்யா மாடியிலிருந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தவன் அலைபேசி ஒலி கேட்டு தூக்கக் கலக்கத்தில் போனை எடுத்தான்.

”பிரபாகரன் சொன்னத் தகவலைக் கேட்டதும் அவன் முகம் சந்தோஷத்தில் மிதந்தது, படுக்கையை விட்டு எழுந்து பாத்றூம் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு கீழே வந்தான். அவன் மனதில் ஆனந்தம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

வசந்தி..என் தூக்கம் தொலைத்தவள். என் மனதை அலை பாய விட்டவள். என் தோட்டத்து மல்லிகை, அவளை நான் தான் முதல்ல பறிச்சிருக்கணும், திடீர்ன்னு கேடி ஜோசப் பறிச்சிட்டான், பரவாயில்ல, இப்போ அந்த மல்லிகை என் வீட்டு பெட்றூமில…நினைக்க நினைக்க அவன் மனது துள்ளிக் குதித்தது.

இலவு காத்த கிளி மாதிரி காத்துகிட்டு இருந்தவனுக்கு இண்ணைக்குத் தான் வசந்தம் அவன் வீட்டு வாசலை தட்டியிருக்கிறது. சந்தோஷம் கரை புரண்டு ஓடியது அவனுக்குள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top