Thaalikkayiru -20

#1
உள்ளே இருந்த இரண்டாவது அறைக்குள் பத்ரகாளியாக நின்றிருந்தாள் வசந்தி. அவள் கண்கள் கோபத்தில் சிவப்பு நிறமேறி கொதித்துக்கொண்டிருந்தது.

ஏமாற்றம் அவளை அணைத்திருந்ததால் ஒரு முடிவுக்கு வந்தவளாய் விரக்தியோடு நின்றாள். யாரை உயிருக்குயிராய் நேசித்தாளோ, யாரை மனதில் நினைத்து உயிர் வாழ்ந்தாளோ அவனே தன்னை அகால பள்ளத்தில் வீழ்த்திய போது காதல் மீதிருந்த போதை விலகி நிஜ மனுஷியானாள்.அவன் விழிகள் மிரண்டன. வாய் பிளந்தது. எதிரே கேடி ஜோசப் நின்றான். அவன் மார்பை அழுத்தி தள்ளியதில் பொத்தென்று கீழே விழுந்தான் சூர்யா.

வசந்தியின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் முழக்கமிட்டன. ஓடிச்சென்று அவன் பின்னால் நின்று கொண்டாள்.

“ கேடி ஜோசப் தாலி கட்டுன பொண்ணு மேல கையா வைக்க எப்போ நீ ஆசைப்பட்டியோ அப்பவே உன்னோட சாவுக்கு நாள் குறிச்சிட்டடா..!” கீழே விழுந்து கிடந்த சூர்யாவால் எழுந்து நிற்க தைரியமின்றி இருந்த இருப்பிலேயே கேடி ஜோசப்பை அண்ணார்ந்து பார்த்தான்.

“ஒண்ணும் தெரியாத அப்பாவி பிரபாகரன போதை மருந்து குடுத்து திசை திருப்பி அவன் மூலமா வசந்திய கடத்திகிட்டு வந்து உன் ஆசைக்கு இணங்கச் சொல்ற.. உன் ஆயுசு கெட்டியின்னு நினைச்சேன்..இப்பிடி பொசுக்குன்னு என் கையால சாவேன்னு யாருக்குத் தெரியும்!” கேடி ஜோசப் அவன் முதுகுக்கு பின்னால் சொருகி வைத்திருந்த அரிவாளை தூக்கினான்.

“என்ன ஒண்ணும் பண்ணியிடாத, நான் செஞ்சது தப்பு தான் என்ன விட்டிடு..என்ன விட்டிடு..!’’ சூர்யா தரையில் இருந்தபடியே பின்னால் நகர்ந்தான்.

வசந்தி அவனை நேருக்கு நேராய் பார்த்தாள். சற்று நேரத்துக்கு முன்னால் சூர்யா தன்னை நெருங்கி வந்த போது நின்ற நிலையில் பின்னுக்கு நகர்ந்தாள்.

இப்போது நிலமை மாறி அவன் இருந்த நிலையில் பின்னுக்கு நகர்கிறான். காலச் சக்கரம் இவ்வளவு வேகமாய் சுத்தும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

“நான் சொல்லிகிட்டு எதையும் செய்யவும் மாட்டேன், செஞ்சுகிட்டு எதையும் சொல்லவும் மாட்டேன், நான் முடிவு பண்ணினா பண்ணினது தான், அத மாத்த அந்த ஆண்டவனால கூட முடியாது!” கேடி ஜோசப் அவனை நெருங்கி தரையில் அவனுக்குப் பயந்து நகர்ந்து கொண்டிருந்த சூர்யாவின் கழுத்தை குறி வைத்து நகர்த்தினான்.

சட்டென்று அவனது கை வேகமாய் வீச கழுத்து அறுபட்டு சத்தம் இல்லாமல் தலை வேறு முண்டம் வேறு என்று பிரிந்து கிடந்தது. அறை முழுக்க ரத்தம் பீறிட்டு வழிந்து கொண்டிருந்தது.

கேடி ஜோசப் அரிவாளை கீழே போட்டு விட்டு திரும்பினான். வசந்தி ஓடி வந்து அவன் காலில் விழுந்தாள்.

“என்ன மன்னிச்சிடுங்க…உங்கள புரிஞ்சிக்காம, உங்க கூட குடும்பம் நடத்தாம பிரபாகரன் கூப்பிட்டதும் ஓடி வந்திட்டேன், அவன் அவ்வளவு பெரிய அயோக்கியனா இருப்பான்னு கொஞ்சம் கூட நினைக்கல…உங்க வீட்ட விட்டு வர்ற வரைக்கும் உங்கள ஒரு புருசனா நினைச்சுக்கூட பார்த்ததில்ல..எனக்கு எல்லாமே என் பிரபாகரன் தான்னு நினைச்சுகிட்டு இருந்தேன், உங்கள திட்டாத வார்த்தை இல்ல, அவமதிக்காத நாட்களில்ல, இந்த ஊரே உங்களக் கண்டு பயப்பட்டாலும் நான் உங்களுக்குப் பயப்படாம எதேதோ பேசி இருக்கேன், அதையெல்லாம் பொறுத்துகிட்டு பிரபாகரன் கூட போய் சந்தோசமா குடும்பம் நடத்துன்னு வழி அனுப்பி வெச்சீங்க, அவன் என்ன சூர்யாகிட்ட கொண்டு வந்து நிறுத்தினப்போ தான் உங்க அருமை எனக்கு புரிஞ்சுது, இப்போ என்ன ஆபத்துல இருந்தும் காப்பாத்தியிட்டீங்க, இந்த பாவிய மன்னிச்சு என்ன உங்க மனைவியா ஏத்துக்குவீங்களா..?” அழுகையோடு அவன் கால்களை விடாமல் மடிப்பிச்சை கேட்பது போல் கேட்டாள்.

கேடி ஜோசப் அவள் தோள்களைத் தொட்டு தூக்கி நிறுத்தினான். அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான்.

“ வசந்தி..நான் எண்ணைக்குமே உனக்கு பொருத்தமில்லாதவன், நான் ஒரு கொலகாரன், உன் கண்ணு முன்னாலேயே சூர்யாவக் கொன்ன பாவி, இந்த கொலய பண்ணிகிட்டு இனியும் இந்த சமுதாயத்துல ஒரு கொலகாரனா வாழ விரும்பல..நான் நடந்த விஷயத்த போலீஸ் ஸ்டேசன்லச் சொல்லி சரண்டர் ஆயிடுறேன், எனக்கும் வாழ்க்கைக்கும் ரொம்ப தூரம் வசந்தி.. இது நாள் வரைக்கும் இந்த ஊருக்கு ரவுடியா வாழ்ந்து கிட்டு இருந்தேன், இப்போ நான் மனுஷனா மாறி ஜெயிலுக்குப் போறேன், எந்த சூழ்நிலையிலயும் நான் உன்ன மனைவியா ஏத்துக்க முடியாது, பிரபாகரன் நல்லவன் தான், இந்த சூர்யா தான் அவனக் கெடுத்தான், நீ பிரபாகரன கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்க்கையில சந்தோசமா இரு..!”

அப்போது அங்கு வந்து சேர்ந்தான் பிரபாகரன். அவன் கண்ட காட்சியில் ஒரு கணம் அதிர்ந்து பின்பு சுதாகரித்துக் கொண்டான்.

கேடி ஜோசப்பிடமிருந்து கன்னத்தில் அறை வாங்கியதும் சூர்யாவுக்கு ஆபத்து வரப்போகிறது என்று முன்கூட்டியே உணர்ந்தான்.

“ பிரபாகர்..இனியாவது நல்லவனா இருந்து நீ ஆசைப்பட்ட வசந்தியோட கோயம்பத்தூருக்குப் போய் சந்தோஷமா இரு.. உங்க ரெண்டு பேரோட காதல்ல நான் அவ கழுத்துல ஒரு தாலியக் கட்டினதால உங்களுக்குள்ள ஒரு இடைவெளிகள் வந்திடிச்சி, இனி அப்பிடி இடைவெளிகள் வரக்கூடாது, நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழணும்!” கேடி ஜோசப் சொல்லிவிட்டு வசந்தியைப் பார்த்தான். அவள் முகம் அஷ்டகோணலாகி இருந்தது. அவள் பிரபாகரனைப் பார்க்கப் பிடிக்காமல் சுவரைப் பார்த்தபடி நின்றாள்.

‘’என்ன மன்னிச்சிடுங்க கேடி ஜோசப், வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சி ஏமார்ந்துட்டேன், சூர்யா பேச்சக் கேட்டு வசந்திக்கு துரோகம் செய்ய நினைச்சேன், அந்த துரோகத்துக்கு நான் ஒரு பரிகாரம் தேடப் போறேன், உங்களால எங்க காதலுக்கு இடைவெளிகள் வரல, எண்ணைக்கு நீங்க அவ கழுத்துல தாலி கட்டினீங்களோ அண்ணையிலருந்து என்னால தான் உங்க மண வாழ்க்கையில ஒரு இடைவெளிகள் வந்திச்சு, இத்தன நாளும் ஊருக்குத்தான் புருஷன் பொண்டாட்டியா வாழ்கை நடத்துனீங்க, இனிமே அப்பிடி இல்லாம நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா குடும்பம் நடத்தணும்,

“பிரபாகர்..புரியாமப் பேசாத…இப்போ நான் சூர்யாவக் கொன்ன கொலகாரன், இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வரும், என்ன அரெஸ்ட் பண்ணுவாங்க, அப்பறம் நான் எப்பிடி வசந்தி கூட குடும்பம் நடத்த முடியும்..?’

“இந்தக் கொலய நீங்க பண்ணல…நான் பண்ணினேன், நான் தான் இந்தக் கொலய செஞ்சேன்னு போலீஸ் ஸ்டேசன்ல சொல்லப் போறேன், வசந்திய கெடுக்கப் பார்த்தான், அத என்னால பொறுத்துக்க முடியல, அதனால அரிவாளால அவன் தலய சீவினேன்னு சொல்லப் போறேன், என்ன ஒண்ணும் தூக்கில போடமாட்டாங்க, ஆயுள் தண்டன கிடைச்சாக் கூட அப்பா பணத்தால எதையாவது செஞ்சு வருஷங்கள குறைச்சிடுவாரு, நீங்க சந்தோஷமா வாழணும்..!” பிரபாகரன் உணர்ச்சி வசப்பட்டவனாய் கேடி ஜோசப்பின் வலது கையைப் பிடித்து வசந்தியின் வலது கையோடு சேர்த்து வைத்தான்.

வசந்திக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருந்தது. கேடி ஜோசப்பின் கைகளிலிருந்து கையை உருவி அவனை கை எடுத்து கும்பிட்டாள்.

” நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போயிடுங்க…நானும் புதுக்கடை போலீஸ் ஸ்டேசன் போயிடுறேன்,,ம் கிளம்புங்க…!” பிரபாகரன் அவசரப் படுத்தினான்.

அவனது இந்த முடிவைக் கேட்டு ஆடிப்போனாலும் அவன் ஜெயிலுக்குப் போவதை நினைத்து தயங்கியபடியே நின்றான் கேடி ஜோசப்.

”என்ன யோசிக்கிறீங்க..விடியறதுக்குள்ள இந்த இடத்த விட்டு போயிடுங்க!” பிரபாகரன் அவசரப் படுத்தினான்.

கேடி ஜோசப் வசந்தியின் கையைப் பிடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான். காம்பவுண்ட் கேட்டுக்கு வெளியே வந்து நிறுத்தியிருந்த புல்லட்டில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான்.

அவன் பின்னால் அமர்ந்துகொண்டாள் வசந்தி. புல்லட் வேகமெடுக்கவும் அவன் பின்னால் சரிந்து அவன் இடையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். காற்று வேகமாய் வீசியது. பொழுது விடிந்து கொண்டிருந்தது. இருவருக்கும் புதிய வாழ்க்கையும் விடிந்ததைப்போல.முற்றும்
 

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top