• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikkayiru -4 (2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
தோட்டத்தில் சூர்யா நின்றிருந்தான். வசந்தியைப் பார்த்ததும் முகமெல்லாம் பல்லாக சிரித்துவிட்டு அவள் அருகில் வந்தான். ‘’என்னம்மா வசந்தி,.விறகு பொறுக்க வந்தியா? உன் அப்பா எங்கே?” நக்கலாகக் கேட்டான் சூர்யா.

” புதுக்கடை சந்தைக்கு போயிருக்கார்!”.

”வசந்தி இந்த ஆண்டவனப்பாத்தியா, அழக மட்டும் எங்க யாருக்கு எப்பிடி வைக்கணுமோ அங்க அப்பிடியே வெச்சிட்டான். என் வீட்டு பக்கத்துலதான் என் அத்தைப்பொண்ணு இருக்கிறா, கறுப்புன்னா கறுப்பு அப்பிடியொரு கறுப்பு கறுப்பாயியின்னே பேரு வெச்சிருக்கலாம் ஆனா என் மாமா அவளுக்கு அழகுன்னு பேரு வெச்சிட்டாரு, சொல்லப்போனா
உனக்குத்தான் அழகுன்னு பேரு வெச்சிருக்கணும், உண்மையிலேயே நீ ரொம்ப அழகா இருக்கே…”

”சின்ன முதலாளி.. அழகா பிறந்து என்ன புரோஜனம், உங்கள மாதிரி ஆடம்பரமா வாழுறவங்ககிட்ட கூலி வேல செஞ்சுதானே பொழைக்கவேண்டியிருக்கு,”

”பொழைக்கிறதுக்கு கூலிவேல மட்டுமில்ல வசந்தி, இன்னும் நிறைய வேல இருக்கு, நம்ம நாட்டுல வருமானம் குறைவா கிடைக்கிற வேலை உண்டுன்னா அது கூலிவேலதான், நீ எதுக்கு கூலி வேல செய்யணும், உங்கிட்ட அழகு இருக்கு, திறமை இருக்கு, நீ மனசு வெச்சா பல ஆயிரங்கள ஒரே நாள்ல சம்பாதிச்சிடலாம்.”

’பல ஆயிரங்கள ஒரே நாள்ல சம்பாதிச்சிடலாம் ஆனா மானத்த ஒரேயடியா இழக்கணும் அதத்தானே சொல்ல வர்றீங்க..? சின்ன முதலாளி மானத்த இழந்து ஆடம்பரமா வாழுறத விட மானமா கூலி வேல செஞ்சு அதுல கிடைக்கிற வருமானத்துல வயித்த கழுவுற சுகமே தனி. நீங்க பெரிய கோடீஸ்வரர், உங்கள நம்பித்தான் நானும் எங்கப்பாவும் வாழ்ந்துகிட்டு இருக்கோம், தெய்வமா மதிக்கப்படவேண்டிய நீங்க, கேவலம் உங்க தோட்டத்துல கூலி வேல செய்யற பொண்ணுகிட்ட இப்பிடியெல்லாம் தப்பா பேசலாமா..?’

’வசந்தி..இந்த ஆண்டவனப்பாத்தியா அழகான பொண்ணப்பாத்தாலே மனச அலைபாய விட்டுடுறான், நீ என் தோட்டத்துல வேல செய்யற கருப்பசாமியோட பொண்ணுதான், என்ன பண்றது நீ அழகா பொறந்திட்டியே, உன்ன அடையாம விட்டா அவமானம் எனக்குத்தான் வந்துசேரும், நீ மனசு வெச்சா இந்த சேரிய விட்டே உன் குடும்பத்த தூக்கி நான் புதுசா கட்டிகிட்டு வர்ற வசந்த மாளிகையில தங்க வெச்சிடுவேன், என்ன சொன்ற..?”

”நீங்க வசந்த மாளிகை இல்ல தங்க மாளிகையே கட்டினாலும் உங்க ஆசைக்கு இணங்கிடுவேன்னு கனவிலயும் நினைக்காதீங்க”

”வசந்தி, இந்த சூர்யா எதுமேலயும் வீணா ஆசப்படமாட்டான், ஆசப்பட்டா அத அடையாம விடமாட்டான், இன்னும் ரெண்டு நாள் டைம் தர்றேன், அதுக்குள்ள உன் மனச மாத்திகிட்டு என் என் ஆசைக்கு இணங்கிடு, அப்படி இணங்கலையிண்ணா உன் வீட்டுக்கு நான் வந்திடுவேன் அப்பிடி வந்திட்டா உன் கற்புக்கு நோ கேரண்டி…”

வசந்தி பற்களை நறநறவென்று கடித்தாள். அவளுக்கு வந்த ஆத்திரத்துக்கு வேறு யாராவது இப்படி பேசியிருந்தால் காலில் கிடக்கும் செருப்பைக் கழட்டி காட்டியிருப்பாள் ஆனால் அவர் தங்கமணி முதலாளியின் மகன் ஆச்சே, ஏதாவது ஏடாகூடமா நடந்து குடிசைய காலி பண்ணச் சொன்னா அப்பாவும் நானும் எங்கே போறது என்ற கவலை அவள் கையை கட்டிப் போட்டது.

”என்ன வசந்தி அப்பிடியே நின்னுட்டே, என் ஆசைக்கு இணங்கியிடு, இந்த குடிசையும் பத்து செண்ட் நிலத்தையும் உன் பேருக்கே எழுதி வெச்சிடுறேன்!”

”ச்சே நீங்க எல்லாம் ஒரு முதலாளியா?” சொல்லிவிட்டு கோபத்தில் ரப்பர் தோடுகளை பொறுக்காமல் குடிசைக்கு விறு விறுவென்று நடந்தாள், அவள் போவதையே அசந்து பார்த்தபடி நின்றான் சூர்யா..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
பால்ராசய்யா சார்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பால்ராசய்யா சார்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top