• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikkayiru 6 (2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
கருப்பசாமியின் மனதில் ஆயிரம் சிந்தனைகள் வந்து வந்து போயின, தன் மகளை தீர்த்துக்கட்ட அட்வான்ஸ் வாங்கியவன் அப்படிச் செய்யாமல் மகள் கழுத்தில் தாலி கட்டுகிறென் என்கிறான்.

இதை ஏற்பதா அல்லது உயிருக்குயிராய் காதலித்து காலை ஓன்பது மணிக்கு வந்து மகள் கழுத்தில் தாலி கட்டுவதாய் சொல்லிவிட்டுப்போன பிரபாகரனை ஏற்பதா?

பிரபாகரன் பணக்கார வீட்டு மாப்பிள்ளை, அவன் தனது மகளை ரகசிய திருமணம் செய்து கொண்டால் இந்த ஊரில் அவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்.

அவன் ஊரை விட்டு ஓடினாலும் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டு பிடித்து இருவரையும் இழுத்து வந்து பிறகு பிரித்து விடுவார்கள்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல நாளை அவன் அப்பாவின் பேச்சை தட்ட முடியாதவனாகி அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு தன் மகள் தனி வாழ்க்கை வாழ வேண்டும்.

வசந்தி அவனோடு ஓடிப்போய் குடும்பம் நடத்தி அதில் அவள் கருவுற்றால் பிறகு வாழ்நாள் முழுக்க அந்த குழந்தையோடு வாழாவெட்டியாக வாழ வேண்டும்.

கேடி ஜோசப் அப்படியல்ல, இந்த ஊரில் அவனுக்கென்று தனி மரியாதை. எந்த பணக்காரனும் அவன் பலத்தின் முன்னால் கை கட்டித்தான் நிற்கவேண்டும், அவன் கேடி தான் என்ன செய்வது அவனையும் யாராவது ஒரு பெண் கட்டிக்கொள்ளத்தானே செய்வாள்.

அது ஏன் தன் மகள் வசந்தியாக இருக்கக்கூடாது, கேடி ஜோசப்ப பகைச்சுகிட்டு முடியாதுன்னு சொன்னா அடுத்த நிமிஷம் அவன் வசந்தியோட உயிர எடுத்துடுவான், என் மக உயிரோட வாழணுமுன்னா கேடி ஜோசப் சொல்றத கேக்குறது தான் நல்லது. கருப்பசாமி யோசித்த படியே நின்றார்.

”என்ன முடிவு எடுத்திருக்கிற கருப்பா!” பொறுமையிழந்து கேட்டான் கேடி ஜோசப்.

”வசந்தி…வசந்தி” தனது மகளை குரல் உயர்த்தி அழைத்தார் கருப்பசாமி.

”கூப்பிட்டீங்களாப்பா!” வசந்தி மெல்லமாய் கேட்டாள்.

அவள் அவனை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பது போல் பட்டுப்புடவையில் வந்திருப்பதைக் கண்டு அசந்தான் கேடி ஜோசப்.

இன்று காலை ஒன்பது மணிக்கு பிரபாகரன் வந்து அவள் கழுத்தில் தாலி கட்டுவான் என்ற கனவுகளோடு காத்திருந்தவளுக்கு பிரபாகரன் அல்ல தாலி கட்டப்போறது இந்த ஊரே பயந்து நடுங்கும் கேடி ஜோசப் தாலி கட்டப் போகிறான் என்ற உண்மை தெரியாமல் அவள் தந்தையின் பதிலுக்கு காத்திருந்தாள்.

”வசந்தி, நான் எது சொன்னாலும் உன் நன்மைக்குத்தான் சொல்வேன், இதுவரைக்கும் பிரபாகரன் தம்பி உனக்கு மாப்பிள்ளையா வருவான்னு நினைச்சிருந்தேன், இந்த நிமிஷத்துலயிருந்து அவன் உனக்கு மாப்பிள்ளை இல்ல, இந்த கேடி ஜோசப்தான் உனக்கு மாப்பிள்ளை.”

கேட்ட நொடியில் தலை சுத்துவது போல் உணர்ந்தாள் வசந்தி. இந்த நிமிடம் வரை உயிருக்குயிராய் காதலித்து இன்று திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரபாகரனை மறந்து விட்டு இந்த ஊரே கண்டு நடுங்கும் இந்த கேடி ஜோசப் தன் கழுத்தில் தாலி கட்டுவானா?

அவள் குரல்கள் எங்கு போய் ஒளிந்து கொண்டனவோ தெரியவில்லை வார்த்தைகள் அகால பாதாளத்தில் விழுந்து கிடந்தன. அவள் பேச முடியாமல் நாக்கு குளறியது.

”என்னம்மா பிரம்ம பிடிச்சது மாதிரி நின்னுட்ட…எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன், பணக்கார வீட்டு காதல் உனக்கு வேண்டாமுன்னு படிச்சு படிச்சு சொன்னேன், இப்ப பாத்தியா உன் உயிருக்கே உல வெச்சுட்டான் பிரபாகரனோட அப்பா. நீ உயிரோட வாழணும்னா இந்த ஜோசப் மனைவியாத்தான் உயிர் வாழணும். இல்லையின்னா உன்ன புணமாக்கியிடுவாங்க, இண்ணைக்கு உன் உயிர எடுக்க அஞ்சு லட்சம் அட்வான்ஸ் வாங்கீட்டு வந்த கேடி ஜோசப்புக்கு உன்ன கொலை பண்ண மனசு வரலை, உன்ன உயிரோட விட்டுட்டு போயிட்டா வேற கொலகாரன வெச்சு உன்ன தீர்த்துக் கட்டியிடுவாங்க, நீ உயிரோட வாழணுமின்னா இந்த கேடி ஜோச்ப்புக்கு மனைவியாத்தான் வாழ முடியும், ஒத்துக்கம்மா..நீ உயிரோட இருந்தா அதுவே எனக்கு போதும்மா!” வேறு வழியின்றி உடைந்த குரலில் சொன்னார் கருப்பசாமி.

வாய் இருந்தும் பேசத் தெரியாத ஊமையாக சிறகு இருந்தும் பறக்கத் தெரியாத பறவையாக அவள் அப்பாவின் வார்த்தைகளில் நொறுங்கிப் போனாள்.

அவள் நினைவுகளில் வந்து வந்து போய்கொண்டிருந்தான் பிரபாகரன். மூன்று வருடங்களாக பொத்திப் பொத்தி வளர்த்த காதல் மூன்றே நிமிடத்தில் முடிந்து போகப் போகிறது.

இன்று ஒன்பது மணிக்கு வரும் பிரபாகரன் எத்தனை மனக்கோட்டைகளோடு வருவான், அவன் வரும்போது நான் இன்னொருத்தன் மனைவியாகி அவனை எந்த முகம் கொண்டு பார்ப்பது?

அவன் என்னை என்ன நினைப்பான் நிமிடத்தில் நிறம் மாறும் பச்சோந்தியாக அல்லவா என்னை நினைப்பான். அவன் என்னை அவ்வளவு எளிதில் மறந்து விடுவானா?

அவன் நினைவை மனதில் சுமக்கும் என்னால் அவனை மறக்கத்தான் முடியுமா? கேடி ஜோசப் என் கழுத்தில் தாலி கட்டும் முன் என் உயிர் பிரிந்து போகாதா? கடவுளே என்னை ஏன் இப்படி ஆக்கினாய் என்று மனதிற்குள் கடவுளை சபித்தாள்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. கேடி ஜோசப் அவசரப்படுத்தினான். மூவரும் மடத்து கோவிலுக்கு வந்து சேர்ந்த போது மணி ஏழாகியிருந்தது.

கோவிலில் கருப்பசாமி முன்னிலையில் வைத்து வசந்தியின் கழுத்தில் தாலி கட்டினான் கேடி ஜோசப். வசந்தி ஒரு பொம்மை போலவே நின்று கழுத்தை நீட்டினாள்.

தாலி கட்டி முடிந்ததும் அவளை தனது புல்லட்டில் அமர வைத்து மீண்டும் தெக்குக்கரைக்கு வந்தான். கருப்பசாமி அவர்களுக்குப் பின்னால் சைக்கிளில் வேகமாய் வந்தார்.

வழியில் கேடி ஜோசப் எதுவும் பேசவில்லை வசந்தியும் வாய் திறக்க வில்லை. இருவரும் கோவிலில் மாற்றிய மாலைகளை கைகளில் போட்டுக்கொண்டு நடந்தார்கள்.

ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்த்தது. யாரும் வாய் திறக்க வில்லை. வசந்தி குடிசைக்கு வந்து சேர்ந்ததும் அவளது அறைக்குச் சென்று தனியாக இருந்து அழுதாள்.

கேடி ஜோசப் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக சொல்லிவிட்டு அவசரமாக வெளியே கிளம்பிப் போனான்.

திருமண வீடே ஒரு துக்க வீடு போல் இருந்தது. கருப்பசாமி கவலைகளோடு தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.

மணி எட்டாகியிருந்தது. பிரபாகரன் சொன்னதுபோல் தனது துணி மணிகளை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.

”வசந்தி…வசந்தி… மாமா, என்ன சோகமா இருக்கீங்க,,,? இவ்வளவு நாளா ஆசையா செல்லமா வளர்ந்த உங்க பொண்ணு தாலி கட்டினதுக்கு பிறகு புறந்த வீட்ட விட்டு கோயம்புத்தூர் போறாளே அந்த பிரிவ நினச்சி சோகமாயிட்டீங்களா..? மாமா இதோ பாருங்க, வசந்தி கழுத்துல கட்டுறதுக்கு மஞ்சத்தாலி வாங்கீட்டு வந்திருக்கேன், கிளம்பலாமா மாமா!” நடந்த நிகழ்வுகள் எதுவும் தெரியாமல் அப்பாவியாய் கேட்டான்.

”தம்பி..என் மக வசந்தி ஒரு ஏழதான் ஆனா இப்போ அவ ஒரு துரோகி, வஞ்சகி, ராட்சசி, ஏமாற்றுக்காரி இப்பிடி எப்பிடிவேணுமிண்ணாலும் நீ அவள திட்டலாம், ஏண்ணா இப்போ வசந்தி என் மக இல்ல, இனியொருத்தனோட பொண்டாட்டி…, இது நான் விரும்பியோ என் மக விரும்பியோ நடக்கல தம்பி, எல்லாம் ஆண்டவன் போட்ட கணக்கு, அத மாத்த யாரால முடியும்..? வசந்தி கழுத்துல கேடி ஜோசப் தாலி கட்டீட்டான் தம்பி.” அழுகையோடே சொன்னார் கருப்பசாமி.

கேட்ட நொடியில் கையிலிருந்த பேக் தானாய் கீழே விழுந்தது. அவன் முகம் வெளிறி பூமி அவன் தலை மேல் சுற்றுவது போல் உணர அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

கேடி ஜோசப் வந்து சேர்ந்தான். அதிர்ச்சியில் உறைந்து நின்ற பிரபாகரனை மேலும் கீழும் பார்த்தான். அவனது தளர்ந்த நிலையைப் பார்த்தும் அவனை காதல் தோல்வியில் கொண்டு போய் விட்டிருப்பதைக் கண்டும் மனதுக்குள் சிரித்தான்.

”என்ன பிரபாகரன் தாலியோட வந்திட்ட போலயிருக்கு..? தாலிய காதலிச்ச உடனே கட்டியிருக்கணும், நீ ரொம்ப லேட் பண்ணீட்டியேப்பா…நீ கூட அண்ணைக்கு என்ன சொன்ன..? என் வசந்திய உயிரோட வாழவிடுன்னு என் கால்ல விழுந்து கெஞ்சின, அவ உயிரோட வாழணுமுன்னு நினச்சித்தான் அவ கழுத்துல நான் தாலி கட்டியிருக்கேன், மாமா, என்ன வசந்தி மாதிரி இவனும் பிரம்ம பிடிச்சது மாதிரி நிக்கறான், வசந்திய கூப்பிடுங்க என் வீட்டுக்குப்போணும்!’’

கருப்பசாமி வசந்தியைக் கூப்பிட அறைக்குள் இருந்த வசந்தி வடிந்திருந்த கண்ணீரை துடைத்தபடி எழும்பி வெளியே வந்தாள்.

அவள் பார்த்த போது பிரபாகரன் முகம் இறுகியபடி நின்றிருந்தான். ஒரு நிமிடம் நிசப்தம் நிலவியது. அந்த இடைவெளியில் இலைகள் உதிரும் சத்தம் கூட துல்லியமாய் கேட்டது.

அவள் முகத்தில் கட்டுக்கடங்காத சோகம் வந்திறங்கியது. மூன்று வருடம் அவனை மனதில் சுமந்தவள் இன்று அவன் நினைவை சுமந்து விட்டு இன்னொருவனோடு போகப்போகிறாள்.

அவள் அழுகையை அடக்க முயற்சித்தாலும் அவள் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. கைக்குட்டையால் துடைத்து துடைத்து அது மொத்தமும் ஈரமாகவே இருந்தது.

”வசந்தி புறப்படு!” உரத்த குரலெழுப்பினான் கேடி ஜோசப்.

”போய்ட்டு வாம்மா!” அழுகை கலந்த குரலில் சொன்னார் கருப்பசாமி.

கேடி ஜோசப் முன்னால் நடக்க, வசந்தி பிரபாகரனை திரும்பி பார்த்தபடியே நடந்தாள். அவள் கால்கள் தான் நடந்ததே தவிர அவள் நடக்கவில்லை.

அவள் உடல் தான் போனதே தவிர மனசு போகாமல் அங்கேயே சுற்றிக் கிடந்தது. பறவைகளின் குரல்களற்று குடிசைவீடு இறுக்கமாகவே இருந்தது. ஏதோ ஒரு மரக் கிளையில் காகம் ஒன்று கத்திக் கொண்டிருந்தது.

அந்த சத்தம் அவள் அழுவது போல் கேட்டது. நேற்று வரை யார் கூட வாழலாம் என்று மனக்கோட்டை கட்டி வைத்திருந்தாளோ இன்று அவன் கணவன் இல்லை.

அவள் குடிசையின் முற்றத்தில் தென்னை மர நிழல்கள் சிதறிக்கிடந்தன. அவைகளும் நகராமல் துக்கம் கடை பிடித்திருந்தது.

வசந்தி போவதையே பார்த்தபடி நின்றான் பிரபாகரன். அவன் நெஞ்சில் நெருஞ்சி முட்கள் கொண்டு குத்தியது போல் வலித்துக் கொண்டே இருந்தது.

கவலை அவன் உடலை நன்கு போர்த்தி இருந்தது. அவனது குரல் அகால பள்ளத்தில் வீழ்ந்து கிடந்ததால் அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

மெளனம் தொடர்ந்தது. வசந்தி அவள் கண் மறையும் வரை திரும்பிப் பார்த்தபடியே தான் நடந்தாள், அவனும் அவள் போவதை பார்த்தபடியே நின்றான்

காதல் மலர் கசக்கி பிழிந்து எறிந்தது போல் உணர்ந்தான் பிரபாகரன். தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவளை கரம் பிடிக்க வந்த நேரத்தில் எல்லாம் தலை கீழாய் போனது.

மனம் தளர கால்கள் தள்ளாடியபடி அதிகமாக மது அருந்திவிட்டு நடக்க முடியாமல் தள்ளாடி நடக்கும் ஒரு குடிகாரனைப்போல தள்ளாடியபடி நடந்தான்.

வழியிலிருந்த ஒரு வீட்டில் எப் எம் ரேடியோவிலிருந்து போகுதே போகுதே என்ற பாடல் ஒலித்தது. அந்த பாடல் அவனுக்கென்று ஒலிபரப்பப்பட்டது போல் உணர்ந்தான்.

அந்த பாடல் அவன் மனதை மேலும் பிழிந்தது. வாழ்க்கையே சூன்யமாகி விட்டதைப்போல் உணர மூலேதட்டு முக்கு வந்து காப்புக்காட்டுக்கு பஸ் ஏறினான்.

அங்கிருந்த டாஸ்மாக் கடைக்குப் போனான் இதுநாள் வரை தொடாமலிருந்த மதுவை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.

அது அவனுக்கு பழக்கமில்லை என்பதால் அரைமணி நேரத்துக்குள் அங்கேயே வாந்தி எடுத்து சரிந்தான். அவன் வீட்டின் அருகிலிருந்த ஒருவர் அவனை அடையாளம் கண்டு ஆட்டோவில் ஏற்றி வீடு கொண்டு போய் சேர்த்தார். அவன் போதை தெளியாமலேயே கிடந்தான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
பால்ராசய்யா சார்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பால்ராசய்யா சார்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top