THAVAM 33(5)

anitha1984

Author
Author
#1
"எனக்கு வேண்டும் .........நீ வேண்டும் ....எனக்கு மட்டுமே என்று கடைசி வரை வேண்டும் ...இனி யாரவது நீ யார் என்று கேட்டால் போய் சொல்ல அவர்களிடம் ....மிஸஸ் மதுராக்ஷி ..............................."நான் என்று ....என்றான் கண்கள் மின்ன .

(அடேய் ....என்ன பேருடா சொன்னே .....யாருடா நீயி .....)எதையோ அவள் சுற்றும் முற்றும் தேட ,"என்ன தேடறே "என்றான் அவன் .இவன் எவ்வளவூ சீரியஸ்சா லவ் ப்ரொபோஸ் செய்யறான் ,இவ பாட்டுக்கு எதையோ தேடிட்டு இருந்தா அவன் கடுப்பு ஆகாம

"சுனாமி வருதான்னு பார்க்கிறேன் boss.......இப்போ தானே ஸிரோ வாட்ஸ் பல்பு 1000 வாட்ஸ் மாதிரி எரியுது .....என்ற புருசனுக்கு இப்போ தான் லவ் சொல்ல தைரியம் வந்து இருக்கு .....அதான் சுனாமி ஏதாவது வருதுன்னா பார்க்கிறேன் ........."என்றவளின் பேச்சில் அதிர்ந்து பின் தான் கேட்டது உண்மை தானா என்று விழித்து நின்றான் அவன் .

301590.jpg


"ம ...ம ...மது ..........நீ நீ இப்போ என்னை என்ன என்று கூப்பிட்ட ?"என்றான் அவன் கேட்டதை நம்ப முடியாமல் .

(இருப்பா நாங்களும் அதே நிலைமையில் தான் இருக்கோம் ...)

"அய்யோ குழந்தை இப்போ தான் அ ,ஆ கத்துக்குது ......ஸிரோ வாட்ஸ் பல்பு என்று பார்த்தா காதும் அம்பேல் போல் இருக்கு .........என்னடீ மது உனக்கு வந்த சோதனை ....."என்று தலையை குலுக்கியவாறு நகர்ந்தவளை மீண்டும் தன் கை அணைப்பிற்குள் கொண்டு வந்தான் அவன் .

"என்ன சொன்னே மது .........."என்றான் அவன் விடாமல் .

"சொரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு சொன்னேன் என்ற பிராணநாதா ....."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"மது .........."என்றான் அவன்

"சரி சரி ......இந்த டூப் லைட் தான் எனக்கு பிடிச்சி இருக்கு ........."என்றவள் அழகான புன்னகையுடன் ,"என் கடைசி மூச்சு உள்ள வரை உன்னை காதலிக்கணும் .....சாகும் போது உன் மனைவியாய் சாகனும் .....ஒவ்வொரு நொடியும் உனக்காகவே சுவாசிக்கணும் ....உனக்காகவே வாழணும் ...... ஒவ்வொரு நொடியும் உன்னை மூச்சு முட்ட முட்ட காதலிக்கணும் .....உன்னை மாதிரியே அன்பா ,அக்கறையா என்னை பார்த்து கொள்ள 10 குட்டிஸ் வேண்டும் .....நீ தான் என் உயிர் ,என் சுவாசம் என்று இந்த ஊர் அறிய ,உலகம் அறிய உன் கை பிடிச்சிட்டு ராணியாய் வலம் வரணும்....இந்த உலகத்தின் முன் நான் உன் மனைவி .....மிஸ்டர் .............மதுராக்ஷி என்று சொல்லணும் .....இந்த வரம் தருவாயா ?"என்றவளை இழுத்து அணைத்தான் அவன் .

மௌன கண்ணீரில் அவன் உடல் குலுங்கியது .வரம் கேட்காமலே அவன் காதல் தவத்திற்கு வரமாய் கிடைத்த வாழ்வூ அவள் .அவனை உயிர்ப்பிக்க வந்த அமிர்த கலசம் .காதல் கை கூடுமா என்று தவித்து ,துடித்து கொண்டு இருந்த அவனை ,அவன் காதலை அவன் சொல்லாமலே நிறைவேற்றி விட்டாள் அவனவள் ....அவன் காதலி ....இல்லை இல்லை அவன் மனைவி .அவன் உயிர் ,அவனின் சகலமும் .

சற்று நேரம் கண்ணீர் வழிய அவன் அணைப்பில் நின்றவள் ,"அய்யய்ய நீ அழு மூஞ்சு பையனா நீயி .....மதுரா அவசர பட்டுட்டியே ....இதுக்கே இந்த புள்ள இப்படி கண்ணீர் விடுது ...இன்னும் குறை காலத்துக்கு உன் கூட குப்பை கொட்டணுமே .....இந்த உடம்பு தாங்குமா .......சோ sad .....சோ sad .......கவலையே படாத மிஸ்டர் புரூஸ் ....கடையில் உறிச்ச வெங்காயமே வாங்கி வந்துடறேன் ...."என்றாள் அவனை நோர்மல் ஆக்கும் நோக்கில் .

"வாய் .....வாய் ........இந்த வாய் இருக்கே ....ரொம்ப ஓவர் ரா பேசுது ......அடக்கிடலாமா ?"என்றவன் அவள் இதழில் கவிதை எழுத ஆரம்பித்தான்
 

anitha1984

Author
Author
#4
x1080-lMM.jpg

அவன் எழுதிய கவிதைக்கு அவள் பதில் சொல்லி கொண்டு இருந்தாள் .
என்றுமே முடியா தேடல் ........முத்தம் தானே என்று ஒதுக்கி விட முடியாத காதலர்களின் முதல் ஸ்பரிசம் .

இதழின் மௌன பாஷை
ஒருவர் உயிரை மற்றொருவக்கு செலுத்தும் மாய சக்தி
இருவர் மேற்கொள்ளும் காதல் என்ற யாத்ரீகத்தின் சங்கமம்
ரெண்டு அழி பேர் அலைகள் காதலால் எழும் அதிசயம்
இயற்கையால் உருவாக்க பட்ட மிக அழகான தந்திரம்
வார்த்தைகள் தோற்கும் போது ஆயிரம் காவியங்களை உருவாக்கி விடும் மகோனதம் .


எவ்வளவூ நேரம் தொடர்ந்ததோ அந்த முத்தம் ,கற்று கூட புக முடியாத அணைப்பு ,முதலில் தன் நிலை அடைந்தது அவன் தான் .

தன் கைகளில் காதல் மயக்கத்தில் உருகி நிற்கும் பெண் பாவையினை பார்த்தவனின் முகம் கனிந்தது .அவளை விட்டு விலகி நின்றான் அவன் .இன்னும் ஏற்பட்ட மயக்கம் நீங்காதவளாய் அவனை கண்ட அவளின் கன்னத்தை தட்டி விட்டு முழுவதுமாய் விலகினான் .

அவளே அவன் கைகளில் குழைந்து கொண்டு இருக்க ,இவனின் விலகல் அவளை வியப்படைய செய்தது .அவள் கண்களில் இருந்த கேள்வி அவனுக்கு புரியாமல் இல்லை .

"இதற்கு மேல் போவது சரி இல்லை மது .உன் அருகே என்னால் என்னை கட்டுப்படுத்த முடியும் என்று தோன்ற வில்லை ............இதற்கு மேல் போச்சுன்னா விளைவு மோசமாக தான் இருக்கும் .......நீ எனக்கானவள் தான் .ஆனால் அதை ஊர் அறிய சொல்லிட்டு விட்டு உன்னை நெருங்குவது தான் உனக்கு நான் செய்யும் மரியாதை .....என்னை நம்பி உன் மனதை என் கிட்டே கொடுத்து என்னை கௌரவ படுத்திய உன் பெண்மைக்கு உண்டான மதிப்பு கொடுக்க வேண்டியது என் கடமை ......உன் கணவன் என்று சொல்லிட்டே ...உன் மரியாதை ,கெளரவம் என் பொறுப்பாகிறது மது .....நானும் ஒரு பெண்ணோடு பிறந்தவன் தான் .....காதல் என்ற பெயரில் வரம்பு மீறுவது சரி இல்லை ......ஒரு நாள் வரும் .....உன் கழுத்தில் நான் கட்டும் திருமாங்கல்யம் உனக்கும் எனக்குமான உறவை உலகத்திற்கு சொல்லும் ....அன்று யாராலும் உன்னிடம் இருந்து என்னை விளக்க முடியாது ."என்றவனின் காதலில் மேலும் உருகி நின்ற மதுரா அவனை பின்னால் இருந்து அணைத்து கொண்டு ,"ஐ லவ் யு டா ..........என்னை விட்டு நீ போனாலும் ..உன்னை என்றுமே நான் விட்டு கொடுக்க மாட்டேன் .....உனக்காக இந்த உலகத்தையே எதிர்க்க வேண்டி வந்தாலும் செய்வேன் .......இன்று நீ கொடுத்த மதிப்பு மரியாதைக்கு பதிலாக நான் என்ன தான் செய்வேன் ........என் கடைசி மூச்சு உள்ள வரை உன்னை விரும்பிட்டே தான் இருப்பேன் .... என் உயிர் போவதாக இருந்தாலும் உன் கை அணைப்ப்பில் தான் போகும் ....."என்றாள் கண்கள் கலங்க .

அதன் பிறகு காலம் ரெக்கை கட்டி பறந்தது அவர்களுக்கு .புதிதாய் பிறந்த காதல்,கையில் சேர்ந்த பெருவாழ்வூ உலகத்தையே வண்ணமயமாக்கி கொண்டு இருந்தது .காரணமில்லாமல் சிரித்து ,சிணுங்கி ,சண்டை இட்டு என்று வாரங்கள் நொடிகளாய் மாறி கொண்டு இருந்தது
14-1355474759-nep-rev-03.jpg

தங்களின் காதல் மற்றவர்களுக்கு தெரியாமல் வெகு கவனமாக இருந்தார்கள் என்றால் மிகையல்ல .ஒரு பிரத்தியேக பார்வை ,சிறு புன்னகை,இரவினில் நேரம் காலம் தெரியாமல் ஸ்வீட் நத்திங்ஸ் பேசி டெலிபோன் கம்பெனி வளர்த்து விடுவது என்று பட்டும் படாமல் ,தொட்டும் தொடாமல் அவர்களின் காதல் வளர்ந்தது .இவர்கள் காதல் வானில் பறந்து கொண்டு இருக்க ,மதுராவின் மேல் காதல் கொண்ட மற்றொவன் இவளிடம் காதலை சொல்ல முடியாமல் ,முதலாமவன் போல் "நட்பை இழக்க விரும்பாமல் " சொல்லவும் முடியாமல் ,சொல்லாமல் இருக்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தான் ....அவனை அவனுக்கே தெரியாமல் காதலித்து கொண்டு ,அவன் மேல் பைத்தியமாய் மேக்னா

full.jpg
 

anitha1984

Author
Author
#5
அவர்கள் நால்வரின் வாழ்க்கை புரட்டி போடும் அந்த வாரமும் வந்தது "ஆந்திரா tour "என்ற பெயரில் .

"டேய் !.....நீ வரலையா ....."என்றாள் மதுரா தனிமையில் அவனை சந்தித்த போது .

1355891132_Nep-jiiva-samantha-6.JPG

"இல்லை .....வேலை இருக்கும்மா ...நீ போய் என்ஜோய் செய்துட்டு வா ....."என்றான் அவன் அவள் மடியில் படுத்த வண்ணம் அவள் கைகளுடன் விளையாடியவாறு .

"நீ இல்லாம போக பிடிக்கலை ....ரெண்டு வாரம் உன்னை பார்க்காம ,உன் கூட பேசாம எப்படிடா இருப்பேன் ....ஹ்ம்ம் ...முடியவே முடியாது ...நீ வந்தா நான் போறேன் ...இல்லைன்னா கான்செல் ....."என்றாள் மதுரா கண்கள் கலங்க .

"ஏய் லூசு ...நடிகர் சூர்யா காதலியை தேடி அமெரிக்காவே போகலாம் என்று ட்ரெண்ட் செட் செய்துட்டார் ...இங்கே இருக்கும் ஆந்திராக்கு போக என்னவூ எவ்வளவூ built up தேவையாடீ குட்டி ?......போர்களத்துக்கா போறே .....உனக்கு துணை வர ?????நல்லா என்ஜோய் செய்துட்டு வாடீ ....."என்றான் அவன் அவள் கன்னத்தை கிள்ளி .

மதுராவின் முகம் அப்பொழுதும் தெளியவில்லை ."என்னடீ குல்பி ...என்ன உன் பிரச்சனை ?"என்றான் அவள் இரு கன்னங்களையும் பிடித்து கொண்டு .

"ஹ்ம்ம் சும்மாவே உனக்கு விசிறி அதுவும் பொண்ணுங்க தான் அதிகம் .....என் முன்னாடியே பல்லை இளிச்சிட்டு வந்து வழிவாளுங்க .....எனக்கு தெரிந்தே இது வரை நாலு ப்ரோபோசல் வந்து இருக்கு .....நான் இல்லை என்றால் ....."என்றாள் மதுரா .

"அடிங்க .....என்னை பார்த்தா என்ன 100 சைட் அடிச்சு ,50 கூட டேட்டிங் போய் ,10 காதலிச்சு சுத்துற பொறுக்கி மாதிரி இருக்கா .....லவ் செய்யும் உன் கிட்டேயே நான் டிஸ்டன்ஸ் மைண்டைன் செய்யறவன் ...உன்னையே சமாளிக்க முடியலை ...இதுல மத்தவங்களை ...சான்சே இல்லை கண்ணு தைரியமா போயிடு வா ...மீ ஒன்லி யுவர் ப்ரொபேர்ட்டி .....வேண்டும் என்றால் கழுத்தில் போர்டு மாட்டிக்கறேன் ....நான் "மதுரா தேவியாரின் ஏக போக உரிமை ...பார்ப்பவர்களின் கண்கள் நோண்ட படும் ,கிட்டே வந்தால் உயிர்க்கு உத்திரவாதம் இல்லை "என்று ????"என்றான் அவன் .

"போடா .....உன்னை பத்தி எனக்கு தெரியாதா ...அந்த அளவூக்கு எல்லாம் உனக்கு தில் பத்தாது....ஸிரோ வாட்ஸ் பல்பு பையா நீயி ....உன்னை நம்பலாம் ...ஆனால் பொண்ணுங்க ஷார்ப் பா ...உன்னை மாதிரி அம்பி கிடைக்க ,அம்மாஞ்சி கிடைக்காதா என்று தேடிட்டே இருப்பாங்க ...."என்றவளை இழுத்து மீண்டும் அழுந்த முத்தமிட்டான் அவன் .
Neethane-En-Ponvasantham-Movie-Photos-7.jpg

"விடு ...விடுடா ...விடு ..."என்ற அவளை எளிதாக அடக்கியவன் தன் தேடுதலை அவள் உதடுகளில் முடித்தே நிமிர்ந்தான் ...."யாருடீ அம்மாஞ்சி ....அம்பியா நானு ????மவளே எனக்கும் டைம் வரும் .....அப்போ தெரியும் இந்த ரெமோ பத்தி ...சரி போனா போகுதே சின்ன பொண்ணு ஆச்சேன்னு விலகி இருந்தா ....ஸிரோ வாட்ஸ் பல்புபாடி நான் .....காதலி கிட்டே எவனுமே யோக்கியன் கிடையாது ...ஏதோ போன போகுது ....நம்மை நல்லவன் என்று நம்பி புருஷன் என்று எல்லாம் நினைச்சுட்டு இருக்கேன்னு விலகி இருந்தா நக்கலா பண்றே .....இப்படியே ஏத்தி விட்டே ...நம்ம பசங்க தான் நம்ம கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க ....என்ன ரெடியா ?"என்று கண்களில் மின்னலொடு நெருங்கியவனை கண்டு அலறி ஓடினாள் மதுரா .


ஓடுபவளை துரத்தி பிடித்தான் அவன் ...."ஐயா சாமி ...நீ காதல் சக்ரவர்த்தி தான் .....ஸ்ரீ ராமனின் xerox copy நீ மட்டும் தான் ....இப்போ ஆளை விடு .....காஞ்ச மாடு கம்பம் கொல்லையில் பாய்ஞ்சா மாதிரி இருக்கு உன் நடவடிக்கை ......நீ உன் ஸ்பீட் கண்ட்ரோல் செய்யும்மா ...மீ பாவமோ பாவம் ..."என்று தன் காதை பிடித்து கொண்டு கேட்க வாய் விட்டு நகைத்தான் அவன் .

அவன் சிரிப்பை கண்களால் நிரப்பி மனதிற்குள் நிறைத்து கொண்டாள் மதுரா ."இப்போ சொல்லு என்ன காரணம் ...நீ போக மாட்டேன் என்று சொல்றதுக்கு ?"என்றான் அவன் அவளை அணைத்த படி .

அவன் தோளில் இருந்து வியப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் மதுரா ...."என்னடி கண்ணு சாசர் மாதிரி விரியுது ....உன் மனசுல இருப்பவன் நான் டீ ....நீ என்னே நினைக்கறே என்று கூடவா தெரியாது ...என்ன பேபி ...என்ன "என்றான் அவன்

"இல்லைடா ...மனசு என்னவோ சரி இல்லை .....ஏதோ பெரிசா கெட்டது நடக்க போகுதுன்னு மனசு சொல்லுது ....உன்னை பிரிந்துடுவேனோ என்று ரொம்பவே பயமா இருக்கு .........என்னை விட்டு போக மாட்டே இல்லை .....என் கூடவே தானேடா இருப்பே ....."என்றாள் மதுரா கண்கள் கலங்க .

PENANCE WILL CONTIUE...
 
Last edited:

New comments

Latest updates

Latest Episodes

Top