THAVAM 34

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
yeto-vellipoyindhi-manasu.jpg

அவன் தோளில் இருந்து வியப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் மதுரா ...."என்னடி கண்ணு சாசர் மாதிரி விரியுது ....உன் மனசுல இருப்பவன் நான் டீ ....நீ என்னே நினைக்கறே என்று கூடவா தெரியாது ...என்ன பேபி ...என்ன "என்றான் அவன்

"இல்லைடா ...மனசு என்னவோ சரி இல்லை .....ஏதோ பெரிசா கெட்டது நடக்க போகுதுன்னு மனசு சொல்லுது ...என் பர்த்டே வேற வருது ....அந்த சமயம் உன் கூட இல்லாமல் இருப்பது ஒரு மாதிரி இருக்குடா ....நான் போகலை .....உன்னை பிரிந்துடுவேனோ என்று ரொம்பவே பயமா இருக்கு .........என்னை விட்டு போக மாட்டே இல்லை .....என் கூடவே தானேடா இருப்பே ....."என்றாள் மதுரா கண்கள் கலங்க .

"டேய் ...என்னடா இது ...உன்னை எவ்வளவூ தைரியசாலி என்று நினைத்து இருக்கேன் .....சின்ன புள்ளை கணக்கா அழுதுட்டு இருக்கே ....உன்னை விட்டு நான் எங்கே டா போக போறேன் .....அப்படியே போனாலும் ராட்சசி என் பின்னால் வந்து என் கண்ணை நொண்டிட மாட்டே நீ ......இந்த ரெண்டு மாதத்தில் படிப்பு முடியட்டும் .....நல்ல நாள் பார்த்து உன் வீட்டுக்கு வந்து சங்கரன் காலில் விழுந்தாவது இந்த இளவரசியை எனக்கு கட்டி கொடுங்க ......சமையல் கூட நானே செஞ்சுடறேன் ....என்று கேட்கிறேன் ஓகேவா .....இந்த பர்த்டே போகட்டும் .....அடுத்த பர்த்டே நீ என் மனைவியா இருப்பேடா ......அப்போ பாரு உன் புருஷ் performance .....இனி வரும் எல்லா பர்த்டே சேர்ந்தே தானடீ கொண்டாட போறோம் ...."உன்னை விட்டு ஓடி போக முடியுமா ...நாம் இருவர் அல்ல ஒருவர் இனி தெரியுமா ?""என்றான் அவன்

000.jpg

வாக்குறுதி கொடுத்த அவன் அறியவில்லை அந்த பிறந்த நாள் அவள் தலைவிதியை மாற்ற போகிறது என்று .இனி வரும் எந்த பிறந்தநாளிலும் தான் அவளுடன் இருக்க போவது இல்லை .....கனவில்,நான்கு சுவற்றுக்குள் மட்டுமே அவன் அவளுக்கான பிறந்த நாளை யாருமே அறியாமல் மட்டுமே கொண்டாடும் அவல நிலையில் இருக்க போகிறான்.ஊருக்கு ,வெளி உலகத்திற்கு அவன் இன்னொருத்தியின் கணவன்.கட்டிய மனைவியோடு பேருக்காவது சந்தோசமாய் வாழ்ந்தானா என்பது அந்த இறைவனுக்கு தான் வெளிச்சம் .


(இரு இரு ...சூர்யா ரித்திகாவோடு வாழ்ந்தானா ...தன்னை நம்பி கரம் பிடித்த பெண்ணை தள்ளி வைத்து அவளை உயிரோடு கொல்லும் வேலையை செய்து இருப்பானா ?

விஜய் உண்மையானவன் ஆக இருந்தும் அவனை மதிக்காத ,திருமணத்தின் பவித்தரத்தை உணராத சோனா யார் யாரோடு வாழ்ந்தது ????).)


சரி என்று அப்போதைக்கு தலை ஆட்டினாலும் ,madhura முகம் தெளியவில்லை ...இவனை விட்டு விட்டு மற்றவர்களுடன் அவர்களின் சுற்றுலா தொடங்கியது .
Samantha-Ruth-Prabhu-Stills-18-290x290.jpg

tour முடிய மூன்று நாள் இருந்த நிலையில் அவர்கள் பயணம் கதிரி அடைந்தது .மேக்னா குடும்பம் அவர்களை வரவேற்றது .அவர்கள் குழு அங்கே தங்கி இருந்த வரை மேக்னா குடும்பம் தான் அவர்களின் உணவூ ,உறைவிடம் பொறுப்பு ஏற்றார்கள் .kadiriமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இவர்கள் குடும்பத்திற்கு மிகுந்த செல்வாக்கு .
Kadiri-temple-image-1.jpg


ஸ்பெஷல் பெரிமிஸ்ஸின் வாங்கி மதுரா அண்ட் கோ --மொத்தம் நால்வர் மட்டும் அவர்களின் பண்ணை வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் மேக்னா தாத்தா .இவர்கள் வந்து தங்கி இருக்கும் சமயம் கடிரி நரசிம்மர் கோயில் ஆண்டு திருமண உற்சவம் கலை கட்டி இருந்தது .அன்றோடு ஒரு சிலரின் மகிழ்ச்சி காணாமல் போனது ....ஒரு சிலரின் வாழ்வூ மாற்றி அமைக்க பட்டது .....

vlcsnap-2018-11-27-22h41m50s975.png

கடந்த காலத்தை நினைத்து பார்த்தவன் ,அவளின் புகைப்படத்தை வைத்து பார்த்து கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது .....அவனின் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு கதறி கொண்டு இருந்தாள் madhura.
 

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
"உனக்காக உலகத்தையும் எதிர்ப்பேன் "என்று மதுரா அவனுக்கு கொடுத்த வாக்கை நிறை வேற்ற ப்ராஹ்மபிரயத்தனம் செய்ய வேண்டி வரும் என்று அவளிடம் சொல்ல யாரும் இல்லை ....காலம் அவர்களை வெவ்வேறு திசையில் பிரித்த போது அவனுக்காக போராடுவதாக கூறிய அவள் போராடும் நிலையில் இல்லை .....அவளுக்காக போராடும் நிலையில் அவனும் இல்லை .....கை விட்டு போன சுவர்க்கம் ...வாழ்க்கை ......வெளியில் சிரிப்பு முகமூடி போட்டு கொண்டு உள்ளக்குள் அழும் நரகம் ....தனக்கு தானே உண்மையாய் இல்லாத அவல நிலை ...காதலில் ஜெயித்தும் தோற்று துடிக்கும் நரகம் .


எவ்வளவூ நேரம் அழுதாளோ நேரம் ஆக ஆக அடுத்து செய்ய வேண்டியவை எவை என்று தெளிவாக யோசிக்க ஆரம்பித்தாள்.கண்கள் கனலை கக்க அவளின் முகம் இறுகி போனது .

images (4).jpg

மறுநாள் காலை ஹர்ஷா உடன் பெரியவர்களிடம் விடை பெற்று கிளம்பினாள் .போவதற்கு முன் அனைவரிடமும் அடுத்து என்ன செய்ய வேண்டும் ,அவள் என்ன செய்ய போகிறாள் என்று தெளிவாக விலகினாள் .

"இது சரி வருமா மதுரா ?தலையை சுத்தி மூக்கை தொடுவது போல் இருக்கே மா ....ரொம்ப ரிஸ்க் இருப்பது போலெ இருக்கேம்மா ...."என்றார் நரசிம்மர் .

"வேறு வழி இல்லை தாத்தா ...அதிரடி தான் சரி வரும் .....காயத்தை கீறி விட்டால் தான் குணமாகும் .....இதை தவிர வேறு வழி இல்லை .....நான் பணயம் வைப்பது என் காதலை .....அது இன்னும் அழியவில்லை என்று 100% எனக்கு தெளிவாக தெரியும் .....அதை நம்பி தான் இந்த முடிவூ எடுத்தேன் ....வந்தால் மலை ...இல்லையென்றால் கயிறு தானே ...போனால் போகட்டும் ."என்றாள் மதுரா .

"மதுரா ....நீயும் என் மக மாதிரி தான் ...மாதிரி என்ன மகளே தான் ...உன்னை நம்பி தான் என் மகளையும் ,அவ பசங்களையும் விடறேன் ......இவங்க வாழ்வுக்கு ஒளி ஏத்துமா .....நீ இந்த வீட்டு குலதெய்வம் ......எங்களை காப்பாத்த வந்த தேவதை .....உன் முயற்சி பலிக்க அந்த கடவுள் துணையாய் இருக்கட்டும் ...."என்றார் மேக்னா அன்னை மதுராவை அணைத்து கதறிய படி .

"சாரி மது ...என்னால் உனக்கு சிரமம் இல்லை ...நீயே உன் வாழ்வை தேடி கொண்டு இருக்கிறே ...இதில் நானும் உனக்கு பாரமாய் ....."என்றவளின் கையை தட்டி கொடுத்த மதுரா ,"உன் காதலுக்கும் ,என் காதலுக்கும் சக்தி இருக்குதான்னு பார்த்து விடுவோம் ....."என்ற மதுரா ஹர்ஷா உடன் ,நரசிம்மர் முன் சொன்ன ராமராஜு என்பவரை சந்திக்க கிளம்பினாள் .

மதுரா கிளம்பியதும் ,மேக்னாவின் புன்னகை என்ற முகமூடி கழன்றது .மதுரா சென்ற திசையையே வெறித்து பார்த்தவாறு நின்றவளை நெருங்கினார் முகேஷ் ரெட்டி.

Kajal-Aggarwal-Awe-Film.jpg

"அப்பா !அவ உயிரோடு இருக்க கூடாது ."என்றாள் மேக்னா ஆங்காரத்துடன் .
 

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#8
அவள் முகத்தில் கொலைவெறி தாண்டவம் ஆடியது .

"மேக்னா !"என்று அதிர்ந்து போன ஸ்ரீலக்ஷ்மியும் ,கஜலட்சுமியும் ஒரே சமயத்தில் அலறி விட்டனர் .

"தடுக்காதீங்க மா ....எப்போ இருந்தாலும் என் எதிர்கால வாழ்க்கைக்கு அவ பிரச்சனை தான் .என் தலைக்கு மேல் தொங்கும் கத்தி ...அவளுக்கு பாவம் பார்த்தா எனக்கு புருசனும் என் பிள்ளகைளுக்கும் அப்பாவும் இருக்க மாட்டாங்க .....நீதி ,நேர்மை ,நியாயம் என்று பேசி ,மத்தவங்களுக்காக யோசித்து நான் இழந்தது எல்லாம் போதும் .....எனக்கு என் புருஷன் வேண்டும் ....அதற்ற்கு நடுவே இருக்கிறவ உயிரோடு இருக்க கூடாது ....அதற்கு தேவையானதை செய்துடுங்க டாடி ...."என்றவளை கண்டு மற்றவர்கள் ஸ்தம்பித்து நின்றனர் .

"அப்பா !...என்ன அப்பா எதையும் பேசாம இருக்கீங்க "என்றார் முகேஷ்

"மேக்னா சொல்வதை செய்துடு முகேஷ் ....நம்ம பொண்ணை விட வேறு யாரும் முக்கியம் இல்லை .....மேக்னா சொல்வது சரி .....ஒரு வீடு நல்லா இருக்க ஒருத்தரை இழக்கலாம் ....ஒரு கிராமம் நல்லா இருக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம் ....மேக்னா பட்ட கஷ்டம் போதும் .....இனி அவ கண்ணில் இருந்து கண்ணீர் வரவே கூடாது .....முடிச்சுடு ..."என்ற நரசிம்மன் தன் ஈசி chair சாய்ந்து ராமாஷ்டகம் சொல்ல ஆரம்பித்தார் .


அங்கு மேக்னா வீட்டில் நடப்பதை அறியாத மதுரா ராமராஜூவின் பண்ணை வீட்டினை அடைந்தாள் . தன் வீட்டின் வாயிலில் வந்து நின்று வரவேற்றார் ராமராஜூ .

maxresdefault (4).jpg

"கடவுளே நன்றி ....என் வேண்டுதல் வீண் போகலை ....திருப்திக்கு நடந்தே வரேன் ....வா மகளே "என்று கண் கலங்க மதுராவை அணைத்து கொண்டவர் சட் என்று பார்க்க பிரகாஷ் ராஜ் போலவே இருந்தார் .

உள்ளே வந்த உடன் ,"ஸ்ரீ .....ஸ்ரீ ...யார் வந்து இருக்காங்க பாரு ...."என்று உரக்கவே கத்தினார் ராமு .

அவர் குரலை கேட்டு உள் இருந்து wheel chair வந்து சேர்ந்தாள் ஸ்ரீநிதி .

"செல்லி (சகோதரி )"என்ற கூவலுடன் வெகு வேகமாக தன் ச்சரினை உருட்டி கொண்டு வந்தாள் அவள் .பார்ப்பதற்கு பெங்களூரு டேஸ் பட பார்வதி மேனன் --அதான் பா RJ சாரா மாதிரி இருந்தாள் .
vlcsnap-2018-11-28-14h00m07s306.png

அவளை அணைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள் மதுரா .

"எப்படிடா இருக்கே ........."என்றாள் மதுரா .

penance will continue...
 
Last edited:

Latest Episodes

Sponsored Links

Top