THAVAM 38(5)

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
மறுநாள் காலை

"அய்யயோ ..............இந்த அசிங்கத்தை கேள்வி கேட்க எவனுமே இல்லையா ....ஐயோ ஐயோ உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டாளே .....தங்கச்சி என்று நம்பி வீட்டில் விட்டா என் வீட்டுக்கே பாதகம் செய்துட்டாளே .....கட்டின பொண்டாட்டி குத்துகள் போலே இருக்கேன் ....கட்டிக்க போறவன் பாறை மாதிரி இருக்கான் .....ஐயோ ஐயோ ...."என்ற சோனாவின் சுப்ரபாதம் கண் விழித்த விஜய் காதுகளில் விழுந்தது .

1553408621148.png

'அடச்சே ...காலங்காத்தால இந்த சனியன் ஏன் இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்கு ...இதுவே எல்லோருக்கும் துரோகம் செய்யும் ஜென்மம் ...இதுக்கு போய் எவன் என்ன ."என்று புரண்டு படுத்தவன் அவள் வைக்கும் ஒப்பாரி 'தனக்கு தான்' என்று அருகில் நின்று அவனை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் எரிமலையாக கண்கள் சிவந்து நின்று கொண்டு இருந்த சூர்யாவை கண்டதும் புரிந்து விட்டது .

'இவன் எதுக்கு எப்படி பொங்கிட்டு கிடக்கான் ........என்னங்கடா நடக்குது இங்கே ......"என்று கண்களை சுழற்றியவன் ,அந்த அறையில் பவானி புடவை தலைப்பில் வாய் மூடி அழுவதும் ,அருகே சிவகாமி ,சங்கரன் ,சேது ,மரகதம் ,கனகா ,ஹர்ஷா ,மேக்னா ,நரசிம்ம ரெட்டி ,ராமராஜு ,அவன் பெற்றோர்கள் ,ரூபிணி ,சந்திரா ,ஆல்வின் ,பாலாஜி ,சுபா, சென்னையின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி -சூர்யாவின் உறவினர் என்று ஒட்டுமொத்த குடும்பமும் சோனா ,சொர்ணா ,கஜாவும் இருப்பதை பார்த்து பேந்த பேந்த விழித்தான் .

"சும்மா இரு விஜய் ............என்னை தூங்க விடு ............."என்ற குரல் வெகு அருகில் இருந்து கேட்க ,விக்கித்தவனாய் தன் அருகே குனிந்து பார்க்க அங்கு அவன் மேல் கை ,கால் போட்டு படுத்து இருந்தது சாட்சாத் மதுராக்ஷியே தான் .
1553408711895.png
((என்னது .............)

அவள் அந்த டயலொக் எந்தவிதத்தில் சொன்னாளோ, அது அங்கு இருந்த சூழ்நிலைக்கு வேறு ஒரு அர்த்தத்தை கொடுப்பதையும் ,இவன் மேல் பாய சென்ற சூர்யாவை உத்தம் ,ஆல்வின் பிடித்து நிறுத்துவதையும் கண்டான் .

"ஏய் ...மது எழுந்துக்கோ.....இங்கே எப்படி வந்தே ....கண்ணை திரடி ..."என்றான் விஜய் பதட்டத்துடன் .

"ச்சு .....சும்மா இரு விஜய் .....தூங்க விடு ...."என்று அங்கு இருந்த நிலைமை புரியாமல் ,தூக்கத்தில் புலம்பிய தூங்கு மூஞ்சி பெண்ணை என்ன செய்வது என்று அவனுக்கு புரியவேயில்லை .

எது நடக்க கூடாது என்று பதறி அடித்து ஓடி வந்தானோ ,அதை நடத்தி காட்டி இருந்தாள் சோனா .....மதுராவின் மானத்தை அந்த திருமண மண்டபத்தில் வாங்கி கொண்டு இருந்தாள் .அதுவும் தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை .சோனா முகத்தில் இருந்த வெற்றி களிப்பு விஜய் கோபத்தை கிளறி விட்டு கொண்டு இருந்தது .அங்கு இருந்த cctv கேமரா அந்த அறையை படம் எடுத்து கொண்டு இருக்க ,அந்த அறையில் நடப்பது அந்த அறை டிவியில் ஓடி கொண்டு இருந்தது. மதுராவின் மானத்தை ஊர் உலகத்தின் முன் வாங்கி விட்டு இருந்தாள் சோனா விஜய்யை வைத்தே

படுக்கை அருகே வந்த பவானி ,மதுராவின் முதுகில் ஒரு போடு போட்டு ,"சனியனே ....முதலில் எழுந்து தொலை ..."என்றார் கண்ணில் கண்ணீரோடு .

அவர் விஜய் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொள்ள ,மனதால் ரொம்ப அடி பட்டு போனான் விஜய் .சேதுவும் ,கனகா,மரகதம் கூட அவன் முகத்தை பார்க்க விரும்பாதவர்களாய்அவன் பார்க்கும் போது வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டார்கள் .இருவர் ஒரே இடத்தில் இருந்தால் வரம்பு மீறி இருப்பார்கள் என்று அவர்கள் அனைவரும் முடிவுக்கு வந்து விட்டதை அவர்கள் முகமே காட்டி கொடுத்து கொண்டு இருந்தது .என்ன ஏத்து என்று விசாரிக்காமல் இவர்களாகவே நீதிபதி ஸ்தானத்தில் இருந்து "வரம்பு மீற பட்டு இருக்கும் "என்ற முடிவில் நின்றார்கள் .

"மம்மி ...ஒரு பெட் காபி ....தலை ரொம்ப வலிக்குது மம்மி ....."என்றவள் சோம்பல் முறித்து எழுந்து உட்கார ,அங்கு இருந்தவர்களை கண்டவள் ,தன் கண்ணை அந்த அறை முழுவதும் சுத்தி ஓட விட்டாள் .

"என்னங்க ப்பா எல்லோரும் இங்கேயே வந்து இருக்கீங்க .....அட சோனா உன்னை யார் உள்ளே விட்டது ?"என்றாள் மதுரா கோபத்துடன் .

"ஏன் உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விடும் என்ற பயமா ......என்னவோ உத்தம பத்தினி மாதிரி அங்கே என் பீச் ஹவுஸ்சில் சில நாட்களுக்கு முன் ,"என் புருஷனை கூட affair என்று சொன்னதற்கு அந்த குதி குதிச்சே ....இப்போ இது என்ன ....இதை பார்க்க கூடாது என்று தான் என்னை உள்ளே விட கூடாது என்று சொன்னியா ....."என்றாள் சோனா .

இவள் எதை சொல்கிறாள் என்று மதுரா விழித்து பார்க்க கட்டிலில் அவள் அருகில் இருந்த விஜய் கண்டு அவள் கண்கள் சாசேர் மாதிரி விரிந்து கொண்டே போனது .

"நீங்க எப்படி என் பெட் ரூமிற்குள் வந்தீங்க ....."என்றாள் மதுரா திகைப்புடன் .

பதில் சொல்ல முடியாமல் ,பதில் தெரியாமல் கையை பிசைந்து கொண்டு அமர்ந்து இருந்தான் விஜய் .அவனுக்குமே மூன்றாவது மாடியில்இருந்த தான் எப்படி ,மதுராவின் அறைக்கு எப்படி வந்தோம் ,எப்படி அவள் அருகே ஒரே கட்டிலில் படுத்து இருக்கிறோம் என்று எவ்வளவூ யோசித்தும் புரியவில்லை .

கடைசியாய் உத்தம் அவனை மேல்தளத்திற்கு கொண்டு சென்றதும் ,அங்கு அவன் கொடுத்த ஜூஸ் குடித்ததும் மட்டுமே விஜய்க்கு நினைவில் நின்றது .

"எதுக்கு டா எனக்கு மயக்கமருந்து கொடுத்தீங்க ..............."என்றான் விஜய் .இவர்கள் இப்படி செய்வார்கள் என்பதை நம்ப முடியாதவனாய்

"முதலில் அவ அருகே இருந்து எந்திரிடா ....கேள்வி எல்லாம் பிறகு கேளு ...கெட் அப் "என்றான் சூர்யா கோபத்தோடு .

"சூர்யா ....நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்கேடா ......சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது ..... உத்தம் கொடுத்த ஜூஸ் குடிச்சு நான் மயங்கிட்டேன் டா ...மதுரா ரூமிற்கு எப்படி வந்தேன் என்று சத்தியமாய் தெரியாது .........."என்றான் சூர்யா கையை பிடித்து கொண்டு .

"அவன் கைகளில் இருந்து கையை உருவி கொண்டு ,"ச்சே ....பேசாதே .....நேத்து சோனா உன் வீடியோ காட்டிய போது கூட நம்பலை ..ஏதோ வீடியோ மார்பிங் செய்து விளையாடறா என்று தான் அவளை இங்கே தங்க வைத்தேன் அவள் கண் முன் மதுரா கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று .....ஆனா ச்சே ....அசிங்கம் ............"என்றவன் மதுராவை நோக்கி சென்று ,"உன் கிட்டே என்ன சொன்னேன் .....அவன் பக்கம் போகவே கூடாதுன்னு சொல்லி இருந்தேன் தானே ......என்ன கன்றாவி இது ............அவன் தான் வேண்டும் என்று சொல்லி இருந்தால் நான் விலகி போய் இருப்பேன் இல்லை .......இத்தனை பெரிய மண்டபம் ஏற்பாடு செய்துட்டு ,ஊரே அங்கே கூடி இருக்குடீ நம்ம கல்யாணத்திற்கு .....இங்கே உனக்கு இவனோடு ..........சாந்தி ..........."என்றவனை ,"சூர்யா !"விஜய் , அதிர்ந்த குரல் சூர்யாவை தடை செய்தது .

"சூர்யா !...வேண்டாம் சூர்யா ....சோனா பேச்சை நம்பி மதுராவை சந்தேக படாதே ...நான் மூன்றாவது மாடியில் தான் டா இருந்தேன் ....சத்தியமா இங்கே மதுரா ரூமிற்கு எப்படி வந்தேன் என்று தெரியாது டா ...நீங்க நினைப்பது போல் இங்கே எந்த தவறும் நடக்கவில்லை ......மதுரா பாவம் டா ...இப்படி எல்லாம் தப்பாய் பேசாதே ........அவ தாங்க மாட்ட ....உடைஞ்சுடுவா ...........அவ அப்பாவி டா ...அவள் பேரை கெடுக்க இந்த பிசாசு தான் ஏதோ செய்து இருக்கு ...ப்ளீஸ் டா .......மதுராவை பத்தி உனக்கு தெரியாதா என்ன ?"என்றான் விஜய் .
 

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
1553408971007.png

"என்னடா பாவம் .......உன்னை தனியா காரில் கூட்டி கொண்டு போன இவள் பாவமா ....அங்கேவைத்து கிஸ் செய்தியே அப்போ தடுக்காத இவள் பாவமா .....எவளோ ஒருத்தி வீட்டில் மழையில் இவளை ஓட்ட அணைத்து கொண்டு நின்றாயே அதை தடுக்காத இவள் ...பாவமா ...நேத்து காரில் உன்னோடு என் கண் முன்னே ஒட்டி உறவாடி வந்தாளே ,என்னுடன் தானே நிச்சயம் ஆச்சு .........அப்புறம் எந்த இதுக்கு உன் அணைப்பை தடுக்கவில்லையாம் இந்த அப்பாவி .நேத்து ஹாஸ்பிடல் அறையில் .............நடந்ததே அது ,இன்று இரவூ முழுவதும் இது இது எல்லாம் தப்பில்லை .....ஆனால் உண்மையை சொன்னால் அது தப்பா ......அன்னைக்கே சோனாவை டைவோர்ஸ் செய்யும் பேப்பர் கொடுத்தோமா இல்லையா ...சைன் போட்டுட்டு இவளை அப்பொழுதே திருமணம் செய்து, இந்த கன்றாவியை எல்லாம் செய்து தொலைத்து இருக்க வேண்டியது தானே .....அப்போ ஏன் வாயை மூடிட்டு போனே ...."என்றான் சூர்யா

சூர்யா கேள்வி கேட்க கேட்க விஜய் தன் கண்களை அழுந்த மூடி நின்றான் .கை முஷ்டி இறுகி ,நரம்புகள் புடைக்க ,தன்னை கண்ட்ரோல் செய்ய ப்ரமப்ரயத்தனம் செய்து கொண்டு இருந்தான் ...ஏனென்றால் அவன் செய்த வேலைகளுக்கு சிலுவை அங்கு சுமப்பது அவன் உயிர் ஆயிற்றே .....யாரின் மானத்தை காக்க ஓடி வந்தானோ ,அவள் மானத்தை அவனை வைத்தே அல்லவா வாங்கி கொண்டு இருக்கின்றனர் .அவன் சொல்லும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சுய கட்டுப்பாடு இழந்தது அவன் தானே .....

கண்ணீர் வழிய நின்ற மதுராவை கண் கொண்டு அவனால் பார்க்க முடியவில்லை ....கம்ப இராமாயணத்தில் ஒரு வரி வரும்."துக்க பட கூடாதவள் துக்க படுகிறாள் "என்று சீதையின் துயரை கம்பர் விவரித்து இருப்பார் .அந்த நிலைக்கு தன் சீதையை கொண்டு வந்து நிறுத்தி விட்ட தன் விதியை நொந்து கொண்டான் .அவன் அவளை 'இதற்கு நான் பொறுப்பு அல்ல 'என்ற பாவனையுடன் பார்க்க ,முகத்தை வெறுப்போடு மதுரா திருப்பி கொள்ள ,மனதில் யாரோ சம்மட்டியால் அடி வாங்கினான் விஜய் .கடைசியில் பிளான் போட்டு இவளிடம் தான் தவறாக நடக்க முடிவூ எடுத்ததாக மதுராவே முடிவூ செய்து விட்டதை அவனால் தாங்க முடியவில்லை .

"எப்படி சைன் போடுவார் ......இந்த அன்னாடம் காய்ச்சி கிட்டே என்ன இருக்கு ?....மனைவி கோடீஸ்வரியா இருந்தா தானே இவளை சின்ன வீடாய் ............"என்றவள் காதில் கேட்கவே முடியாத மேலும் பல உயர்ந்த வார்த்தைகளை விட ,விஜய் அடித்த அடியில் வாயில் இருந்த பல் ஒன்று கழன்று விழ கன்னத்தை பிடித்து கொண்டு கீழே விழுந்தாள் சோனா .

கீழே விழுந்து கிடந்தவளின் கழுத்தில் கை வைத்து தூக்கி நிறுத்தியவன் ,அவள் குரல் வலையை பிடித்து உயரே தூக்க ஆரம்பித்தான் .மூச்சு விட முடியாமல் சோனா போராட ,கிட்டே நெருங்க முயன்றவர்களை அவன் ஒற்றை கோப பார்வை ஆணி அடித்தார் போலே அவர்களை அந்ததந்த இடத்தில அப்படியே நிற்க வைத்தது .

"இன்னொரு வார்தை உன் வாயில் இருந்து வந்துச்சு ....நீ செத்தேடி .........உன் குடலை உருவி மாலையாக போட்டு கொள்வேன்........ யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்றே ...என் மதுராவை பத்தி என்னடீ தெரியும் உனக்கு ..............ஆமா நான் காதலிச்ச,காதலிக்கும் ,இனி காதலிக்க போகும் பெண் மதுரா மட்டும் தான் ......அவ தான் என் இதய தேவதை ...என் ராணி ......என்ன சொன்ன அவ சின்ன வீடா ......அவ யாருன்னு தெரியுமா .....என் மனைவிடீ ....நான் தொட்டு தாலி கட்டின என் முதல் மனைவி ......என் சரி பாதி .................எனக்கும் அவளுக்கும் திருமணம் முடிந்து 6 வருஷம் ஆகுதுடீ ......அவ மிஸஸ் மதுராக்ஷி விஜய். உன் வாழ்க்கையை அவ பங்கு போடலை ...எங்க வாழ்க்கையில் தான் நீ நுழைஞ்சி இருக்கே ..............என்னடீ என்னவோ மேடை இல்லாமல் அப்படி முழங்கின ...இப்போ வாயை காணோம் ...என்ன இன்னும் உனக்கு டவுட்டா ....இந்தா இந்த விடீயோவை பாரு ............"என்றவன் கதிரி கோயில் உற்சவத்தை தன் மொபைல்லில் இருந்து காட்டினான் . அங்கு மாலையும் கழுத்துமாய் ,கழுத்தில் தாலியுடன் நின்றது சாட்சாத் விஜயும் ,மதுராவும் தான் .

1.jpg
 

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
அதை கண்டு சோனா ஒரு நொடி குழம்பி ,திகைத்து அதிர்ந்து போனால் என்றால் மிகையல்ல .தோல்வி ....தோல்வி ...மஹாப்பெறும் இமாலய தோல்வி .......காதலி என்று நினைத்தால் இந்த சனியன் அவன் மனைவி ....ஆனால் இதற்கு எல்லாம் கலங்கினால் எப்படி .
"இதை எல்லாம் நம்ப வேறு கேணைச்சி கிடைப்பா போய் தேடு கருணா .....இவர் வீடியோ ,போட்டோ காட்டியதும் அப்படியே நாங்க நம்பிடுவோமாக்கும் ...இது அவதார் காலம் ...இல்லாததை இருப்பதாய் காட்ட காசு இருந்தால் போதும் ....இப்படி காட்டினா அவ உத்தமி ஆகிட மாட்ட விஜய் .....கொஞ்சம் அடங்கு ..."என்றாள் சோனா .

"இந்த திருமணம் நடந்ததற்கு நான் சாட்சி ...என் ஒட்டுமொத்த ஊரும் சாட்சி ...அவங்க சாட்சி சொல்ல வந்தால் போதுமா சோனா உனக்கு ?"என்றார் மத்திய அமைச்சர் ராமராஜு .... ."இன்னொரு விஷயம் தெரியுமா மதுரா கழுத்தில் அந்த போட்டோவில் இருக்கும் திருமாங்கல்யம் என் பரம்பரை சொத்து .எங்க குல வழக்கப்படி ஒரு கன்னி பெண்ணின் திருமணத்தை நாங்க எடுத்து நடத்த வேண்டும் என்பது எங்கள் முன்னோர்கள் வாக்கு .....எங்க பரம்பரை பொற்காசுகளை உருக்கி, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அதே சமயம் இன்னொரு கன்னி பெண்ணிற்காக இதை செய்து வைத்து விடுவோம் .... 18-20 வருஷம் நித்தமும் இந்த திருமாங்கல்யத்திற்கு எங்கள் பூஜை அறையில் பூஜை நடக்கும் ....இந்த நகை ,திருமாங்கல்யத்திற்கு உயிர் இருப்பதாக கூட சொல்வார்கள் .என் மகளுக்கு திருமணம் பேச ஆரம்பித்ததும் அதை கதிரி கோயிலில் எங்கள் முன்னோர்கள் பிரதிஷ்டை செய்த அம்மன் கழுத்தில் போட்டு விடுவோம் .....எந்த பெண்ணிற்கு என்று அந்த தாய் முடிவூ செய்து இருக்கிறாளோ அந்த உற்சவம் முடிவதற்குள் எப்படியாவது அந்த பெண்ணை சென்று அடைந்து விடும் .இதை பல தடவை எங்கள் முன்னோர்கள் கண் கூடாக கண்டு இருக்கிறார்கள் .....நானும் இவர்கள் மூலம் அதை கண்டேன் ."என்றார் ராமராஜு .

(நினைச்சேன் ......மது விஜய்க்கு தான் ...மது விஜய்க்கு தான் என்று உருக்கட்டை ,துப்பாக்கி எடுத்தது எல்லாம் வீண் ....கதை ஆரம்பிக்கும் போதே விஜய் சார்வால் மதுராவின் புருஷனாம் பா ....ஹனி எஸ்கேப் ஆகிடுச்சு ...திரும்ப மாட்டும் ....அப்போ வச்சி செய்யலாம் ....)

"சொல்லு விஜய் ...இவங்க சொல்வது எல்லாம் உண்மையா ...சொல்லு ...என் மகளின் கணவன் நீயா .....என் மகள் தான் உன் மூத்த தாரமா .........சொல்லு விஜய் ......இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதை மறைக்க போகிறாய் நீ ....நான் அவளை பெத்தவ .பெத்தவங்களிடம் இதை எல்லாம் சொல்லாமல் மூடி மறைச்சி ச்சே ......பெண்ணா இது ."என்று மதுராவை அறைய போக ,அவர் கையை பிடித்து தடுத்த விஜய் ,"

(கல்லுளி மங்கா ...வாயை இப்போவது திறந்து என்ன நடந்தது .....சொல்லி தொலை .......)

"ஆண்ட்டி மதுவை எதுவும் சொல்லாதீங்க ஆண்ட்டி ....அவளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...என் விளையாட்டு தனம் காரணம் .....அவ உங்க கிட்டே சொல்லாம ஏமாத்தணும் என்று நினைக்கலை ........ட்ரெயின் அச்சிடேன்ட் ஆனதில் மதுராவிற்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா இருக்கு ஆண்ட்டி ......அதை பயன்படுத்தி .நான் தான் அவளோடு சேர்த்து உங்களையும் ஏமாத்திட்டு இருந்தேன் .....இருக்கேன் ....நானும் மதுராவும் லவ் செய்தோம் ஆண்ட்டி .........அவ தான் என் உலகம் ,நான் தான் அவளுக்கு எல்லாம் என்று சொர்க்கத்தில் இருந்தோம் ஆண்ட்டி காலேஜ் நாட்களில் ..........அப்போ தான் ஆந்திரா டூர் போனோம் .....ட்ரெயின் அச்சிடேன்ட் ...அதை எனக்கு சாதகமாய் பயன்படுத்தி கொண்டேன் ...அவ உயிரோடு இருப்பதே ஒரு வருஷம் எனக்கு தெரியாது ...அவ செத்துட்டா என்று நினைத்து இருந்த போது , சோனா என் தங்கை வாழ்வை பணயம் வைத்த போது ,இதுக்கு மேல் என்ன என்று அவளை மணந்தேன் ...இல்லை இல்ல என்னை சோனா விலைக்கு வாங்கினா ...விலை என் தங்கையின் வாழ்க்கை ....நானும் மதுரா இறந்துட்டா என்ற கவலையில் இருந்தேன் ....ஏற்க்கனவே செத்து போன பிணமா தான் இருந்தேன் .....சோ இது எனக்கு பெருசா தெரியலை ...."என்றவன் கால் மடங்கி கீழ் அமர்ந்து ,நடந்ததை சொல்ல ஆரம்பித்தான் .
1553409385464.png

மதுரா தன்னை 10 வருடத்திற்கு முன் ரோடு அச்சிடேன்டில் காப்பாற்றியது ,அவளை நினைத்து அவளாகவே வாழ்ந்தது ,அவளாகவே மாறி போனது ,ஸ்டுடென்ட் exchange ப்ரோக்ராம் மூலம் குன்னூர் வந்தது ,அங்கு இவன் காதலை சொல்வதற்கு முன்னே மதுரா அவனிடம் தன் காதலை சொன்னது ,ஆந்திரா டூர் விஜய் போகமுடியாமல் ,கலக்கத்தோடு மதுரா மட்டும் கிளம்பியது வரை சொல்லி முடித்தான் .
 
Last edited:

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
மாசிலாமணி சார் ஆர்மியில் இருந்து ஓய்வூ பெற்று இருந்ததற்கான பார்ட்டி ...விஜய் கட்டாயம் வர வேண்டும் என்று அன்பு மிரட்டல் அவரிடம் இருந்து .அதற்கு போக வேண்டிய கட்டாயம் இருந்ததால் விஜய் மதுராவோடு செல்லவில்லை .பார்ட்டியில் அவர் விஜய்யை தன் மகன் ,வாரிசு என்று என்று தான் அறிமுகமே செய்து வைத்தார் .

பார்ட்டி நல்ல படியாக முடிய களைத்து அமர்ந்தவனின் போன் ஒலித்தது .

"என்னடா ....ஆந்திரா மிர்ச்சி எல்லாம் எப்படி இருக்கு ...இது வரை எத்தனை தர்ம அடி வங்கினே ஆல் பையா .."என்றான் விஜய் .

"சச்சூ நிலைமை தெரியாம உளறிட்டு இருக்காதே கருண் .....நாளைக்கு மது பிறந்த நாள் ...ஞாபகம் இருக்கா இல்லையா ...இந்த சின்ன தம்பி பிரபு வேறு வைர மோதிரம் வாங்கி வந்து ,உத்தம் கிட்டே காட்டி ,நாளைக்கு மதுரா பிறந்த நாளின் போது ப்ரொபோஸ் செய்ய போவதாக உளறிட்டு கிடக்கான் ...நீ காதலியை போய் வாமான்னு இன்னொருத்தன் கூட அனுப்பிட்டே ....அவன் கிடைச்ச சான்ஸ் மிஸ் செய்வானா என்ன ......நீ தான் லூசு மாதிரி அவன் மதுரா நண்பன் ...மதுரா நண்பன் என்று உளறிட்டு இருக்கே ...கிளம்பி வா டா வெண்ணை ...."என்றவன் பேச்சை கேட்டு அவன் கிளம்ப ,அவன் அருகே வந்த மாசிலாமணி ,அவனை அணைத்து கொண்டார் .

"என்ன மேன் லவ்வா ...போ போ ...கிளம்பு ...இந்தா கார் சாவி பிடி ...ஓடு ...என் மருமகளை சீக்கிரம் கூட்டி வா ...போ பாய் ...."என்றார் .
02-1420196494-vijayspongaltreat.jpg

அதற்கு மேல் அங்கு இருக்க விஜய்க்கு பைத்தியமா என்ன .கார் அவன் கையில் பறக்க ,மறுநாள் காலை மதுராவின் முன் நின்றான் .இவன் வருவதற்குள் சூர்யா அவளிடம் ப்ரொபோஸ் செய்து இருந்தாள் .மதுரா வேதனையுடன் அவன் காதலை நிராகரித்து ,தானும் விஜய் லவ் செய்வதை சொல்லி இருந்தாள் .மனம் உடைந்த அவன் சொல்லாமல் கொள்ளாமல் உத்தமோடு கிளம்பி விட்டான் .....கிளம்பிய அவன் பின் தோழிக்கு திருமணம் என்று சொல்லி மேக்னாவும் கிளம்பி விட்டாள் .

((ஹை அப்போ மேக்னா காதலித்தவன் ,அவள் கணவன் சூர்யா பிரதாப் தானா .............சுபத்ரா ,க்ரிஷ் இவன் பிள்ளைகளா ....ஜாலி ஜாலி )

ram-charan-kajal.jpg

நண்பனை இழந்த சோகத்தில் ரொம்பவும் அமைதியாய் வந்து கொண்டு இருந்த மதுராவை நோர்மல் ஆக்க என்று விஜய் விளையாட ஆரம்பிக்க அதுவே வினையாகி போனது .கதிரி கோயில் உற்சவம் .மத்திய அமைச்சர் ராமராஜு தலைமையில் ஆதரவூ அற்ற 101 கன்னி பெண்களுக்கு தன் செலவில் திருமணம் நடத்தி கொண்டு இருந்தார் .

அதன் முதல் படியாக அவர்கள் குல தெய்வத்திற்கு அபிஷேகம் ,அர்ச்சனை ,ஆராதனை எல்லாம் முடித்து ,வரிசை பொருட்களுடன் அம்மனுக்கு அவர்கள் பரம்பரை திருமாங்கல்யம் சாற்ற பட்டது .அந்த அம்மன் யார் வேண்டும் என்றாலும் உள்ளே சென்று பூஜை செய்யலாம் என்ற முறை அங்கு இருந்தது .அங்கு 101 பெண்களுக்கு திருமணம் நடந்து கொண்டு இருக்க ,நண்பன் மனதை உடைத்து விட்ட கவலையில்,மனபாரம் தாங்க முடியாதவளாய் ,அம்மன் முன் கண் மூடி ,கண்ணீர் வழிய அமர்ந்து இருந்தாள் மதுரா .
 
#6
ஹா... ஹா... ஹா........
சொன்னோமில்லே
நாங்கோதான் அப்பவே
சொன்னோமில்லே?
விஜய்தான் மதுராவோட
லவ்வர்
சூர்யாதான் மேக்னாவின்
பிள்ளைகளுக்கு அப்பா-ன்னு
சொன்னோமில்லே
 
Last edited:

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#8
அவள் பிரபு உடன் பழகியது தோழியாக தான் ...ஆனால் அவன் இவளை இத்தனை நாள் காதலியாக அல்லவா பார்த்து இருக்கிறான் .....நண்பனின் மனதை எந்த விதத்தில் தான் கலைத்தோம் என்று எவ்வளவூ யோசித்தும் மதுராவிற்கு விளங்கவே இல்லை .தான் காதலியாக இன்ட்ரோ ஆகி இருக்கிறோம் என்பதை பாவம் அவள் ஏனோ அறியவில்லை .காலம் கடந்த காதல் சூரியாவினுடையது .....குமரியான மதுராவின் வாழ்வில் முதலில் வந்தவன் என்றாலும் அவள் மனதில் நண்பனாய் இருந்தானே ஒழிய ,காதலனாய் தவறு கணவனாய் இருந்தது விஜய் மட்டுமே .
1553409819543.png

விஜய்க்கு வெறுத்து போனது .அவனும் ஐந்து மணி நேரமாய் அவளை சமாதானம் செய்ய முயன்று கொண்டு இருக்கிறான் ...இவளோ கிளம்பி சென்று விட்ட பிரபுவை நினைத்து இப்படி சாப்பிடாமல் ,கொள்ளாமல் ,அழுது வடிந்து கொண்டு இருந்தால் அதுவும் பிறந்த நாள் அன்று .....அவனால் பொறுக்க முடியவில்லை ....அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் இவன் மனதில் அது ரத்தத்தை கொண்டு வரும் என்று இவளுக்கு புரியவில்லை என்ற ஆதங்கம் ....தன் காதலை விட,அந்த பிரபுவின் நட்பு உயர்ந்ததா என்ற பொறாமை ......

"ஏய் ....இங்கே பாரு ஏஞ்செல் இப்படியே படுத்திட்டு இருந்தே ...பிறந்த நாள் என்று கூட பாராமல் உன்னை இழுத்து சென்று, அதோ அங்கே திருமணம் நடக்குதே அங்கே உன் கழுத்தில் தாலி கட்டிடுவேன் ...அப்புறம் அழுது புரண்டு பிரோயோஜனம் இல்லை கண்ணு ...மாமா சாப்ட் ஹீரோ ...என்னை வில்லன் ரேஞ்சுக்கு ஆக்கிடாதே .....அப்புறம் உன்னை சுவாகா தான் "என்றவனின் வார்த்தை எந்த தேவதையின் காதில் விழுந்ததோ ,"அப்படியே ஆகுக "என்று வரம் கொடுத்து விட்டதை அறியவில்லை அவன் .

அப்படி சொன்னவனை வெகு நக்கலாய் ஒரு லுக் விட்டு மதுரா திரும்பி கொள்ள அவன் தன்மானம் சீண்ட பட்டது ."அடியேய் எதுக்குடீ இப்போ இப்படி ஒரு லுக் விட்டே ...என்னை பார்த்து ..."என்றான் கோபத்தோடு .

"மாமு ....இப்போ சொன்னியே இதை எல்லாம் செய்ய தனி தில் வேண்டும் மாமு .....நம்ம அந்த தில் என்ற சரக்கு எங்கே கிடைக்குதுன்னு கேட்கும் ரகம் ...ஓவர் built அப்பு உடம்புக்கு ஆகாது நைனா ....பேசாம உட்காருடா .... "என்றவளின் நக்கல் ,ஏற்கனவே பிரபு ப்ரொபோஸ் செய்ததால் பற்றி எரிந்து கொண்டு இருந்த பொறாமை, அட்லீஸ்ட் மதுராவை பயமுறுத்த வேண்டும் என்று யோசித்தவன் கண்களில் பட்டது எதிரில் இருந்த அம்மன் கழுத்து மாலை .
amman_3.jpg

'என்னையே நக்கல் அடிக்கறியா உன்னை ......"என்று நினைத்தவன் மதுரா மீண்டும் கண் மூடி தெய்வத்தை தொழுது கொண்டு இருக்க ,சற்றும் யோசிக்காமல் அம்மன் கழுத்தில் இருந்த மலர்மாலையை அவள் கழுத்தில் போட திடுக்கிட்டுகண் விழித்தாள் மதுரா .

"என்ன பேபி ...என்னவோ ..சொன்னே .எதையும் செய்ய முடியாது .....ஒரு நிமிஷம் கூட ஆகலை அதற்குள் உன் கழுத்தில் மாலை போட்டுட்டேன் .....உன் கழுத்தில் தாலி கட்ட எனக்கு எவ்வளவூ நேரம் ஆகும் ....உன் இடம் இந்த மாமன் வில்லன் தான் ...."என்றான் .

அதே சமயம் ராமராஜு ,நரசிம்ம ரெட்டி குடும்பம் அங்கே வர ,இவர்கள் வெளியேற முயன்றார்கள் .

"மா பங்காரு தள்ளி ......நூறு வருஷம் தீர்க்கசுமங்கலியாய் பதினாறும் பெற்று பெருவாழ்வூ வாழணும் ...இந்தா மா பிடி இது உனக்கு சேர வேண்டிய சீர் ..."என்று ராமராஜுவின் மனைவி ஒரு தாம்பாள தட்டில் பழம் ,பூ ,வெற்றிலை பாக்கு ,பட்டு புடவை ,ஒரு பெட்டி நிறைய நகை ,மஞ்சள் ,குங்குமம் வைத்து மதுரா கையில் கொடுக்க ,எதற்கு இது என்று புரியாமல் குழம்பி நின்றார்கள் விஜய்யும் மதுராவும் .

Jewelry-box.jpg
விஜய் ,மதுராவை அம்மன் முன்னே அமர வைத்தவர்கள் ,அவர்கள் இருவருக்கும் நலங்கு வைக்க ,'நாம் பேசியதை கேட்டு விட்டு இப்படி செய்கிறார்களோ ...ஐயோ ஆத்தி ...இந்த பத்திரகாளி என்னை போலி போட்டுடுவாளே ....."என்று உள்ளுக்குள் டர் ஆகி கிடந்தான் விஜய் .

"மா மாணவடா (பேரனே ) நீ பாரியா நுடிடி மீதா பசப்பு குங்கும் உனக்காண்டி .(உன் மனைவியின் நெற்றியில் மஞ்சள் குங்குமத்தை வைத்து விடு பேரனே )என்றார் நரசிம்ம ரெட்டி மனைவி ஸ்ரீ பாட்டி .

"வாட் ....நாங்க சும்மா ஏதோ விளையாடிட்டு இருந்தோம் பாட்டி ....திருமணம் இனிமேல் தான் செய்யணும் ....எங்க படிப்பு முடிஞ்ச பிறகு ...."என்றான் விஜய் மதுரா முறைப்பை கண்டு டென்ஷன் ஆகி .

இவன் விளையாட்டுக்கு மாலையை இவள் கழுத்தில் போட இவர்கள் அதை உண்மை என்று நினைத்து இவர்களுக்கு திருமணமே ஆகி விட்டது போலே பேசுவதை அவனால் ஏற்க முடியவில்லை .

டூருக்கு என்று ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்த இடத்தில் கோயிலில் இது போன்ற குரங்குத்தனம் எல்லாம் செய்தால்,அவங்க குலதெய்வ கோயில் இது ....சாஸ்திரம் ,சம்பிரதாயம் எல்லாம் தெரியாமல் கோயிலுக்குள் விளையாடினா ...லூசா நீயி ....அவங்க நமக்கு திருமணம் முடிஞ்சுடுச்சு என்று இப்படி பேசறாங்க ...லூசு ....லூசு ...."என்று அவன் காதில் இருந்து ரத்தம் வரும் வரை அவனை தாளித்து எடுத்தாள் .

அவனுக்கும் அப்போ தான் தான் செய்து இருந்த காரியத்தின் விபரீதம் புரிய ஆரம்பித்தது .அவர்கள் கோயில் உற்சவத்தின் போது ,101 கன்னி பெண்களுக்கு திருமணம் நடக்கும் போது இப்படி மாலையும் கழுத்துமாய் நின்றால் வேறு என்ன நினைப்பார்கள் என்று உள்ளுக்குள் தலையில் அடித்து கொண்டவன் ,நடந்ததை விளக்கும் விதமாக ,"பாட்டி .....நான் இவளை தான் மணக்க போகிறேன் .....ஆனா இப்போ இல்லை பாட்டி ...சும்மா விளையாட்டுக்கு தான் இவ கழுத்தில் மாலை போட்டேன் ....."என்றான் விஜய் .

PENANCE WILL CONTINUE....
 
#10
ஹா... ஹா... ஹா.........
இவளா பாவம், இவளா பாவம்-ன்னு
கேட்டுக் கேட்டே மதுரா and விஜய்
இவங்க ரொமான்ஸ்-லாம் சூர்யா
எடுத்து வுட்டுட்டானே?
பத்த வைச்சுட்டியே, பரட்டை?
 
Last edited:

Advertisements

Top