• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedi vantha devathaiye-(FINAL)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
இன்ஸ்பெக்டர் சண்முகத்துடன் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தார்கள்.

அர்ச்சுனன் அய்யாவும், இளந்திரையனும் அவர்கள் பின்னால் வந்தார்கள்.

போலீசார் வருகையை எதிர்பார்க்காத வந்தனாவும், பிரித்வியும், பீரவீணாவும் அதிர்ந்து நின்றார்கள்

போலீஸ் படை அதிரடியாக நுழைந்து அனைவரையும் கைது செய்து விலங்கிட்டார்கள்

இளந்திரையனும், அர்ச்சுனனும் வந்து செளமியா,ஜெயகாந்தன் மற்றும் ஆதிரையன் கட்டுக்களை அவிழ்த்து விட்டனர்.

"இன்ஸ்பெக்டர்... எங்களை அரஸ்ட் செய்து இருக்கீங்க. ஒகே... எங்கள் கூடவே இருந்து எல்லா திட்டத்துக்கும் துணையாக இருந்த சரிகாவை ஏன் அரஸ்ட் செய்யவில்லை?" என்றாள் பிரவீணா.

"அவள் எங்களோட ஆளு. உங்களின் சதி திட்டத்தை எல்லாம் முறியடித்து உங்களை ஆதாரத்தோடு பிடிக்க டிடெக்டிவ் அன்பு மேடத்தால் டிபார்ட்மெண்ட் சம்மதத்தோடு அனுப்பி வைக்கபட்ட ஆளு." என்றார் இன்ஸ்பெக்டர்.

"உங்க குற்றங்களை எல்லாம் ஆதாரத்தோட நிருபிக்கத்தான் உங்கள் கூடவே இத்தனை நாள் இருந்தேன். நீங்கள் இப்பொழுது பேசினது எல்லாம் இதில் பதிவாகி இருக்கு" என்று பூளூடூத் செல்போன் வீடியோ ரிக்காடரை எடுத்து காண்பித்தாள் சரிகா.

"சரிகா... உன்னை..." என்று கோபத்தில் பிரித்வி முறைத்தான்.

"செளமியா மேடத்துக்கும், அன்பு செல்வி அக்காவுக்கும் துரோகம் செய்ய நான் உங்களை மாதிரி நன்றி கெட்டவள் இல்லை" என்றாள் சரிகா.

"அம்மா... நீங்க திருந்தவே இல்லையம்மா. நான் உங்கள் வயிற்றில் பிறந்தததுக்கு வெட்கப்படுகிறேன்" என்றாள் செளமியா.

"நீங்க இப்படித்தான் செய்வீங்கன்னு தெரிந்த காரணத்தினால்தான் நான் செளமியை உங்களிடம் விட கடைசிவரை சம்மதிக்கவே இல்லை." என்றான் ஆதிரையன்.

"என்னை கொல்ல துணிஞ்ச நீங்கள் என் அம்மா இல்லை. எனக்காக உங்களால் கத்திகுத்து வாங்கி ஹாஸ்பிடல்ல படுத்திருக்காங்களே அவங்கதான் என் அம்மா" என்ற செளமியாவின் வார்த்தைகளை காதில் வாங்கியபடி வந்தனா சென்றாள்.

அவள் பின்னால் பிரித்வி, பிரவீணாவும் சென்றார்கள். அவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் வேன் சென்றது.

"செளமி... உன் அன்பக்கா கண்ணு முழிச்சிட்டாங்க. அவங்கதான் செளமியா ஆபத்தில் இருக்கிறாள். நீங்கள் ரெண்டுபேரும் சீக்கீரமாக போயி அவளை காப்பாத்துங்கன்னு எங்களை அனுப்பினாங்க" என்றான் இளந்திரையன்.

"அப்படியா! சீக்கீரம் வாங்க. நான் அக்காவை பார்க்க வேண்டும்." என்று அவசரமாக சொன்னாள் செளமியா.

கார்களில் அனைவரும் ஏறி மிஷன் ஹாஸ்பிடலை நோக்கி சென்றார்கள்.

செளமியாவுக்கு வரும் வழியில் நடந்தவைகளை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தாள் சரிகா.

கார்கள் மிஷன் ஹாஸ்பிடலை அடைந்தது.

செளமியா காரிலிருந்து இறங்கி வேகமாக சென்று ஐசியூ வார்டை அடைந்தாள்.

ஐசியூ வார்டு கதவை திறந்து உள்ளே நுழைந்த செளமியா நேராக சென்று அன்பு செல்வியின் தலைபகுதிக்கு அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

இந்துமதி அவளை தடுக்காமல் ஒதுங்கி நின்று கொண்டாள்.

சரிகாவும் வந்து செளமியாவுக்கு அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

"அக்கா... அக்கா..." என்று அழுத செளமியாவின் தலையை வருடினாள்.

"செளமி... என்னடா ஏன் அழறே? அக்காவுக்கு ஒண்ணுமில்லையடா" என்றாள் அன்புசெல்வி.

"இந்து... செளமியை எப்படி அடிச்சிருக்காங்க பாரு" என்று கன்னத்தை தடவியபடி சொன்னாள் அன்புசெல்வி.

"அக்கா... நீங்க இல்லாமல் என்னை யார் யாரோ அடிச்சிட்டாங்க. இந்து கூட என்னை உங்களை பார்க்க விடவில்லை." என்றாள் செளமியா.

"சாரிடா... செளமியை ஏன் பார்க்க விடவில்லைன்னு இந்துவை நன்றாக திட்டிவிட்டேன்" என்றாள் அன்புசெல்வி.


Message…
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"ஆமாம் செளமி. அக்கா என்னை நன்றாக திட்டிவிட்டார்கள்" என்றாள் இந்துமதி.

"நான்தான் அப்பவே சொன்னேனில்லையா? என்னை பார்க்க விடாமல் தடுத்தீங்க இல்லையா அப்படிதான் திட்டு வாங்க வேண்டும்" என்று குழந்தையின் தன்மையில் சொன்னாள் செளமியா.

"அப்புறம் செளமி... இந்துவுக்கு சுயநினைவு திரும்பியிருச்சு" என்றாள் அன்புசெல்வி.

"அப்படியாக்கா! ரொம்ப சந்தோஷம் அக்கா" என்று சந்தோஷமாகச் சொன்னாள் செளமியா.

"ஆமாம் செளமி... எனக்கு பழைய் ஞாபகம் திரும்பி வந்து விட்டது. உன்னை பற்றி தெரியாமல் அன்றைக்கு அப்படி செஞ்சுட்டேன். அக்கா இப்பதான் உன்னை பற்றி சொன்னாங்க" என்றாள் இந்துமதி.

"இந்து... அதை விடுங்க. உங்களுக்கு பழைய நினைவு திரும்பினதே எனக்கு போதும்" என்றாள் செளமியா.

"அக்கா... நீ சொன்னதை விட செளமி நல்லவள்தான்" என்றாள் இந்துமதி.

"அக்கா... நீங்க போன் செய்த பொழுது எடுத்து நிலைமை தெரியாமல் விளையாடி விட்டேன் அதற்காக செளமியை மன்னித்து விடுங்கள் அக்கா" என்றாள் செளமியா.

"சரிடா" என்றதும் "அக்கா... இப்பொழுதுதான் எனக்கு நிம்மதி. அண்ணா... அக்கா என்னை மன்னிச்சிட்டாங்க" என்று ஆதிரையனை பார்க்காமலே சொன்னாள் செளமியா.

"அக்கா... என்னையும் மன்னித்து விடுக்கா. நீங்க ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடுன பொழுது கூட இந்த பாவியாலே வரமுடியவில்லை. அந்த பாவிகள் உங்களை கத்தியால் குத்துற பிளானை எங்கிட்ட சொல்லாமல் செஞ்சுட்டாங்க" என்றாள் சரிகா.

"அப்புறமாக எங்கே நான் பார்க்க வந்தால் நம்ம பிளான் தோற்று விடுமோன்னுதான் நான் வரலைக்கா" என்று அழுதாள் சரிகா.

"சரிகா... உனக்கு நாங்கதான் நன்றி சொல்ல வேண்டும். உன் உயிரை பணயம் வைத்து ஆபத்தான இந்த காரியத்தை எங்களுக்காக செய்து முடித்து இருக்கிறாய் நீ." என்றாள் அன்பு.

"அக்கா... தங்கச்சிக்கு நன்றி சொல்லறிங்களா நீங்க?" என்று செல்லக் கோபம் காட்டினாள் சரிகா.

"சரிடா... " என்று கன்னத்தில் தட்ட "இதுதான் என் அன்பு அக்கா" என்றாள் சரிகா.

"அப்புறம் அன்பு நானும் சூழ்ச்சிகாரர்கள் சதியால் உங்களை டிஸ்மிஸ் செய்தது வீட்டைவிட்டு அனுப்பியது என்று என்ன என்னவோ செய்துவிட்டேன். என் தப்புக்கு பிராயசித்தமாக உங்கள் செளமியை உங்களிடமே ஒப்படைக்கிறேன்." என்றான் ஆதிரையன்

"செளமியை என்னை விட உங்களால்தான் நன்றாக பார்த்துக்க முடியுமுன்னு நீங்கள் நிருபிச்சிட்டிங்க. உங்கள் பொண்ணாக அவளை நீங்கள் ஏத்துக்கிட்டு அவள் சம்பந்தமான எல்லா முடிவுகளையும் நீங்கதான் இனி எடுக்கனும்" என்று முடித்தான் ஆதிரையன்.

"என்ன செளமி சந்தோஷமா?" என்று அவளை பார்த்து கேட்டதும் "ரொம்ப சந்தோஷம் அண்ணா" என்றாள் செளமியா.

"அம்மா... நான் அவங்ககிட்ட சொல்லி விட்டு வந்து விட்டேன். நீ என் அம்மா இல்லை. அன்பு செல்வி அக்காதான் என் அம்மான்னு நான் அவங்களிடம் சொல்லி விட்டு வந்து விட்டேன். அண்ணாவும் அவங்ககிட்ட சொல்லி விட்டாங்க. இனி நீங்கதான் என் அம்மா. நான் செஞ்சது சரிதானே?" என்று செளமியா சொல்லிவிட்டு பார்த்தாள்.

"என் செளமி கரெக்டாதான் செய்வாள்" என்றதும் புன்னகை புரிந்தாள் செளமியா.

"அவர்கள் சதி புரியாமல் நானும் உங்களை தப்பாக நினைத்து திட்டி என்ன என்னவோ செய்து விட்டேன். என்னையும் மன்னிச்சிடுங்க அன்பு" என்றான் ஜெயகாந்தன்.

"நீங்களும் சரி செளமி அண்ணாவும் சரி ஒரு ஹாஸ்பிடல் நிர்வாகியாக உங்கள் கடமையைத்தான் செஞ்சிங்க. இதில் மன்னிப்பு கேட்க எதுவுமில்லை." என்றாள் அன்புசெல்வி.

"இது உங்க பெருந்தன்மையை காட்டுது. நீங்க கிரேட் அன்பு சிஸ்டர்" என்று பாராட்டினான் ஜெயகாந்தன்.

Write your reply...
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"நான் அப்பவே சொன்னேன் இல்லையா? நீங்கதான் கேட்கவில்லை. என் அம்மா கிரேட்டுன்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சுதா?" என்றாள் செளமியா.

"செளமியா... அன்றைக்கு அக்காக்கு இப்படி ஆயிடுச்சேங்கற கோபத்தில் இருந்தேன். உன் அண்ணா மேலே டவுட் ஆனதில்தான் நான் அன்றைக்கு உன் அண்ணாவை பழி வாங்குறதாக நினைத்து உன்னை பார்க்க விடாமல் தடுத்து விட்டேன். சாரி அண்ணா... சாரி செளமி..." என்றான் இளந்திரையன்.

"சரிங்க இளா உங்க சூழ்நிலை அன்றைக்கு அப்படி" என்றாள் செளமியா.

"நான் செளமியாவை காப்பாற்றுவதற்காக எடுத்த பல நடவடிக்கைகளால் அவளை பிரிந்து அழ வைச்சிட்டேன். வந்தனா என்னை கத்தியால் குத்தி நான் மயக்கத்தில் இருந்த பொழுது இந்து அவளை நிறைய அழ வைத்து விட்டாள். அவள் கடத்தப்பட்ட நேரத்தில் அந்த பாவிகள் என் செல்லத்தை அடித்தும், கடைசியாக வந்தனா அவளை அடித்து அழ வைத்து விட்டாள். இது எல்லாம் இயல்பாக நடந்தாலும் இது எல்லாம் என் பிளானிலேயும் இருந்தது. செளமியை தெரிந்தே அழ வைக்க இருந்தேன் அதுக்காக கடைசியாக நானும் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்றாள் அன்புசெல்வி.

"அம்மா... நீங்க மன்னிப்பு கேட்டு செளமியை ஹர்ட் பன்னிட்டிங்க." என்று செல்லமாக கோபித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"சரிடா... செளமி செல்லம்... அம்மா மன்னிப்பை வாபஸ் வாங்கிட்டேன்." என்று அன்புசெல்வி சொல்லி கன்னத்தைத் தடவினாள்.

"இப்பதான் நீங்க என் அம்மா" என்று முகத்தை திருப்பி கன்னத்தில் முத்தமிட்டாள் செளமியா.

"நானும் செளமியை அழ வைச்சுட்டேன் ஆனால் நான் சாரி கேட்கமாட்டேன்" என்று செளமியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் இந்துமதி.

"நானும் ஆதிரையன் மேலே இருந்த கோபத்தில்" என்று அர்ச்சுனன் அய்யா ஆரம்பிக்க "அப்பா..." என்று கோராசாக எல்லாம் கத்தினார்கள்.

"செளமி... உங்களுக்கு அன்பு டிடெக்டிவங்கறது இப்பதான் உங்களுக்கு எல்லாம் தெரியும். எனக்கு வந்த கொஞ்ச நாளிலே தெரியும். நான் அவள்கிட்ட செளமியை பற்றி பேசினேன். நான் பார்த்துக் கொள்கிறேன் அப்பா என்றாள். பிரித்வி பிரவீணா வந்தப்பவும் நான் டவுட் ஆகி கேட்ட பொழுது அவள் திட்டத்தை சொன்னாள். இந்த சரிகா விஷயத்தையும், போலி மெடிசின் விஷயத்தையும் மட்டும் எனக்கு அன்பு சொல்லவே இல்லை" என்றார் அர்ச்சுனன்.

"சாரிப்பா... சரிகா விஷயமும் போலி மெடிசின் விவகாரமும் தெரிந்தால் அவர்கள் உஷார் ஆயிடுவாங்கன்னு ரகசியமாக வைக்க வேண்டியதாக போச்சு. சரிகா பத்தி சின்ன சந்தேகம் வந்திருந்தாலும் அவளை கொன்றிருப்பார்கள்" என்றாள் அன்புசெல்வி.

"மேடம் அடிவாங்குனப்ப கூட நெஞ்சை கல்லாக்கிகிட்டு அமைதியாக இருந்ததே என் மேலே டவுட் இல்லாம இருக்கதான் அதனால்தான் என்னால் அக்காவுக்கு மெசேஜ் அனுப்ப முடிந்தது. வீடியோ எடுக்க முடிந்தது" என்றாள் சரிகா.

"அக்கா திட்டத்தை அப்பொழுது இருந்து யாராலும் கணிக்க முடியாது" என்றாள் இந்துமதி.

"அதான் அம்மா" என்று சந்தோஷமாக சொன்னாள் செளமியா.

"அம்மா... நான் எப்பொழுது உன்னை மாதிரி புத்திசாலியாக ஆகிறது?" என்றாள் செளமியா.

"அடுத்த ஜென்மத்தில் செளமி" என்று ஜெயகாந்தன் கிண்டல் செய்ய "பாருங்கம்மா" என்றாள் செளமியா.

"யார் அது என் செளமியை கிண்டல் செய்யறது?" என்று அன்பு அதட்ட "என் அம்மா என் கூட இருக்காங்க" என்றாள் செளமீயா.

"செளமி... நீ புத்திசாலிதான். உனக்கு கள்ளங்கபடமில்லாத வெள்ளை மனம் அவ்வளவுதான். நான் உனக்கு எல்லாவற்றையும் சொல்லி கொடுத்திடறேன்" என்றாள் அன்பு செல்வி.

"சரிம்மா" என்று தலையசைத்தாள் செளமியா.

"இனி கல்யாண விஷயங்களை பற்றி பேசுவோம். முதலில் அன்பு நீ செளமியாவுக்கு அம்மான்னு சொன்னால் மட்டும் போதாது. ஆதிரையனை கல்யாணம் பன்னி அதை முழுசாக முடிக்கனும்" என்றார் அர்ச்சுனன் அய்யா.

Write your reply...
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"நான் எப்படி கல்யாணம் செய்கிறது?" என்றாள் அன்புசெல்வி.

"நான் விதவை. நான் தீபக்கை காதலித்து கல்யாணம் பன்னினேன். அவர் ஒரு டிடெக்டிவ். அவர் ஒரு கேஸ் விஷயமாக விசாரணையில் இருந்த பொழுது அவர் கொல்ல பட்டார். நான் குழந்தை இல்லாத பெற்றோருக்காக வாடகைத் தாயாக ஒரு குழந்தையை பெற்று தந்திருக்கேன் அவ்வளவுதானே" என்றார் அர்ச்சுனன்.

"இதெல்லாம் உங்களுக்கு?" என்று அன்புசெல்வி ஆச்சரியமாய் கேட்டாள்.

"இந்து எல்லாத்தையும் சொல்லி விட்டாள்" என்றார் அர்ச்சுனன்.

அன்புசெல்வி உடனே இந்துவை பாக்க "அக்கா... தீபக் அண்ணா என்ன சொன்னார்? நான் இறந்தால் கூட உன்னை மறுமணம் செய்ய சொன்னாரில்லையா? அப்புறம் என்னக்கா?" என்றாள் இந்துமதி.

அன்புசெல்வி யோசிக்க "செளமி... உனக்கு அம்மா வேண்டாமா?" என்று அவளிடம் கேட்டாள் இந்துமதி.

"அம்மா... ப்ளீஸ் சரின்னு சொல்லுங்கம்மா. செளமிக்கு அப்பதான் ஒரு அம்மா கிடைப்பாங்க." என்று முகத்தை கெஞ்சும் தோரணையில் வைத்து கேட்டபடி பார்த்தாள் செளமியா.

"செளமிக்காக நான் சம்மதிக்கிறேன்" என்று அன்பு சொன்னவுடன் சிரித்த செளமியா உடனே அண்ணன் பக்கம் திரும்பினாள்.

"அண்ணா... என்னை அம்மாவாக இருந்து பார்த்துக் கொள்கிறவங்க இவங்கதான். இவங்களை நீ கல்யாணம் செஞ்சிக்கோ அப்பதான் செளமி கல்யாணம் பன்னுவாள் இல்லை என்றால் நோ கல்யாணம்" என்றாள் செளமியா.

"அண்ணா... நீ காதலித்து கல்யாணம் செஞ்ச சத்யா நல்லவளே இல்லை. அவள் வந்தனா அம்மா மாதிரி உன் சொத்துக்காக உன்னை காதலித்து கல்யாணம் பன்னி சொத்தை எழுதி வாங்கி ஏமாத்தினாள் ஆனால் இந்த அம்மா அப்படி இல்லை. இந்த அம்மாவை நீ கல்யாணம் பன்னிக்கனும். இது செளமி ஆர்டர்" என்றாள் செளமியா.

"சரி செளமி உனக்காக சம்மதிக்கிறேன்" என்றான் அண்ணன்.

"இளா... இந்து ஏற்கனவே பிரகாஷ்ங்கிற பையனை காதலிச்சு ஏமாந்தவள். அவள் ஆக்சிடென்ட்ல மெமரி லாஸ் ஆனவள். இந்துவை பத்தி உனக்கு எல்லாம் தெரியும். இப்பொழுது மறுபடியும் அவளுக்கு மெமரி லாஸ் ஆயிருக்கு. அவளை பற்றிய உண்மைகளை சொல்லி நான் உன் பேரண்ட்ஸ்கிட்ட சம்மதம் வாங்கி விட்டேன். என்ன சந்தோஷம்தானே?" என்றார் அர்ச்சுனன் அய்யா.

"எனக்கு ஒகே" என்று இளந்திரையன் சொல்ல "அதேமாதிரி அன்பும் சம்மதித்து விட்டாள். நீ என்ன சொல்கிறாய் இந்து?" என்றார்.

"எனக்கும் சம்மதம்" என்று அவள் சம்மதித்தாள்.

Write your reply...
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"சரிகா... உனக்கு நமது அட்வகேட் வேல்முருகன் அப்பா அம்மாகிட்ட பேசியிருக்கேன். என்ன சம்மதமா?" என்றார் அர்ச்சுனன்.

"சம்மதம் அப்பா" என்று சரிகாவும் சம்மதித்தாள்.

"கடைசியாக செளமியவை என் மருமகளாக்கி கொள்ள உங்கள் இரண்டு பேருக்கும் சம்மதமா?" என்று அன்பு செல்வியையும், அவள் அண்ணாவையும் பார்த்து கேட்டார்.

"செளமிக்கு சம்மதமென்றால் எங்களுக்கு ஒகேதான்" என்றார்கள் அவர்கள்.

"என்ன செளமி... உனக்கு ஒகேவா?" என்று அன்பு கேட்டதும் "போங்கம்மா... இதையெல்லாம் எங்கிட்ட போயி கேட்கறிங்க" என்று வெட்கபட்டு சிரித்தாள்.

"என்ன ஜெயா... உனக்குப்பா" என்று அர்ச்சுனன் அய்யா கேட்க "எனக்கும் சம்மதம் அப்பா" என்றான் ஜெயகாந்தன்.

"அப்பாடா ஒரு வழியாக எல்லாம் சுபமாக முடிஞ்சுருச்சு" என்றார் அர்ச்சுனன் அய்யா.

"அப்பா... எல்லா கல்யாணத்தையும் மலைக் கோவிலில் இருக்கிற அம்மன் சன்னதியில்தான் நடத்த வேண்டும்" என்றாள் செளமியா.

"சரி செளமி உன் இஷ்டபடியே செய்து விடலாம்" என்று அனைவரும் சொன்னார்கள்.

"நான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து தனியாக அனாதையாக நின்றபொழுது என்னை தேடி வந்து அரவணைத்த தேவதை என் செளமியா. இப்பொழுது நம்மை எல்லாம் ஆபத்திலிருந்து காப்பாற்ற நம்மை "தேடி வந்த தேவதை" அன்புசெல்வி" என்றான் ஆதிரையன்.

"அதுவும் ரோட்டில் குறுக்கே துப்பட்டாவை தூக்கிக் காட்டிட்டு நின்ற தேவதை" என்று செளமியா சொல்லிவிட்டு சிரித்தாள்.

"நீ அம்மாவையே வார்றியா. உன்னை" என்று செளமியாவின் காதை பிடித்தாள் அன்புசெல்வி.

"அம்மா... செளமிக்கு வலிக்கும்" என்று செளமியா காதை திருகும் முன்னால் சொன்னாள்.

"செளமி... இனி நீயாயிற்று உன் அம்மாவாயிற்று. நாங்கள் இனி தலையிட முடியாது" என்று சொல்லி அனைவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

**** சுபம் ****
Write your reply...
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
anbumayamana storypa :):):):):):)
அவங்க எங்களோட ஆளு. உங்க சதி திட்டத்தை எல்லாம் முறியடித்து உங்களை ஆதாரத்தோடு பிடிக்க டிடெக்டிவ் அன்பு மேடத்தால் டிபார்ட்மெண்ட் சம்மதத்தோடு அனுப்பி வைக்கபட்ட ஆளு." என்றார் இன்ஸ்பெக்டர்.
(y)(y)(y)(y)(y) nice sis. sowmi anbu amma kidaichachu so nice ellorukum oru jodi potutinga sooperpa:love::love::love::love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top