• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thedi vantha devathiye_04 part 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“சரி அன்பு… நம்ம ஹாஸ்பிடலை நெருங்கிட்டோம். நான் உங்களை ஹாஸ்பிடலை இறக்கி விட்டுவிட்டு அப்படியே உங்கள் பிரண்டை பார்த்துட்டு போகிறேன்”

“சரிங்க மேடம்” என்று அவள் ஆமோதித்த வேளையில் கார் ஹாஸ்பிடல் உள்ளே நின்றது.

“அண்ணா... நீ இங்கேயே வெயிட் பன்னுங்க. நான் வந்து விடுகிறேன்” என்று அவள் இறங்கிக் கொள்ள தன் பேக்கை எடுத்துக் கொண்டு இறங்கினாள் அன்பு செல்வி.

ஆதிரையன் காரிலேயே இருக்க, அவர்கள் இருவரும் உள்ளே நடந்து சென்று ஐ.சி.யூ வார்டை அடைந்தார்கள்.

சௌமியா கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைய விமலா வணக்கம் சொல்ல அதை ஆமோதித்தவள் “விமலா... பேஷண்ட கண் விழிச்சாங்களா?” என்றாள்.

“இல்லை மேடம். ஜெயகாந்தன் சார் இப்பதான் அரை மணி நேரம் முன்னாடிதான் பார்த்துவிட்டு போனார். இந்தாங்க மேடம் ரிப்போர்ட்” என்று நீட்ட வாங்கிப் படித்து பார்த்தாள்.

“வேறு ஏதாவது?” என்று சந்தேகமாய் சௌமியா கேட்டாள்.

“நத்திங் மேடம்” என்றாள் விமலா.

“சரி கவனமாக பாத்துக்கோங்க. எதுன்னாலும் எனக்கு கால் பன்னுங்க” என்றாள் சௌமியா.

“சரிங்க மேடம். அப்புறம் ஹேப்பி பர்த்டே மேம்” என்று அவள் சொன்னவுடன் “நன்றி விமலா” என்றாள் சௌமியா.

“அன்பு… உங்களுக்குன்னு ஒரு ரூம் தரவரைக்கும் மேலே இருக்கிற என் ரூமில் நீங்கள் தங்கிக்கலாம். அந்த ரூமை நான் படுக்குனுமுன்னு நினைக்கறப்பதான் யூஸ் செய்வேன். அங்கே உங்கள் திங்கஸ் எல்லாம் வைச்சிக்கோங்க.” என்றாள் சௌமியா.

“மேடம்… அது வந்து… உங்களின் ரூம் எதுக்கு மேடம்? நர்ஸ்கள் தங்கிக்கிற ரூம் கொடுத்தாலே எனக்கு போதுமே” என்று அன்பு கேட்டாள்.

“இல்லை அன்பு. அது வேண்டாம். இப்போதைக்கு
நீங்கள் என் ரூமிலேயே தங்கிக்கோங்க. அதுதான் சரியாக இருக்கும்.” என்று சௌமியா சொன்னதும் அன்பு எதிர்த்து பேசவில்லை.

அன்பு செல்வியை அழைத்துக் கொண்டு தன் கேபினுக்கு சென்று சாவியை எடுத்துக் கொண்டு மேலே சென்றவள் தன் அறையின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே கூட்டிக்கொண்டு சென்று விட்டாள்.

அன்பு செல்வி லைட்டை ஆன் செய்தாள். சாவியை அவளிடம் தந்து விட்டு “நான் நாளைக்கு வருகிறேன்” என்று சென்றாள் சௌமியா

அன்பு செல்வி தன் பேக்கை ஒரிடத்தில் வைத்து விட்டு கட்டிலில் சிறிது நேரம் அமர்ந்தவள் பின் லைட்டை ஆப் செய்து விட்டு கதவை பூட்டிவிட்டு ஐ.சி.யூ அறைக்குச் சென்றாள்.

“மேடம்… நீங்கள்தான் அன்பா? சௌமியா மேடம் உங்களை சாப்பிட அழைத்துப் போக சொன்னாங்க. வாங்க” என்று ஒரு நர்ஸ் அழைத்தாள்.

“சரி… வாங்க போகலாம்.” என்று அவள் பின்னே செல்லும்போது சௌமியாவின் மீது அவளுக்கு தனி மரியாதை ஏற்பட்டது.

அன்பு செல்வி இரவு சாப்பாட்டிற்குபின் ஐ.சி.யூ வார்டிற்கு வந்து தன் தோழியை பார்த்து தலை வருடி விட்டு வெளியே வந்து அமர்ந்துக் கொண்டாள்.

அன்பு செல்வி எவ்வளவு நேரம் விழித்திருந்தாள் என்று தெரியவில்லை. நள்ளிரவு வேளையில்தான் அவள் கண் அயர்ந்தாள்.

அன்பு செல்வி மணிக்கு ஒருமுறை விழித்து எழுந்து வந்து தன் தோழியை பார்ப்பதும் பின் தூங்குவதும் பின் விழித்து எழுவதுமாக இருந்தாள்.

காலை எட்டு மணி. ஆதிரையன் காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சௌமியாவிடம் “எதுன்னாலும் போன் பன்னும்மா” என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்.

சௌமியா தன் அறைக்கு சென்று ஸ்டெதஸ்கோப், கோட் சகிதமாக வந்தவள் நேராக ஐ.சி.யூ வார்டிற்கு சென்றாள். ஐ.சி.யூ வார்டு வாசலில் அன்புசெல்வி முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்திருந்தாள்.

சௌமியாவை பார்த்ததும் அவள் எழுந்து நிற்க “குட்மார்னிங் அன்பு” என்று சௌமியா சொல்ல “வெரி குட்மார்னிங் மேடம்” என்றாள் அன்புசெல்வி.

சௌமியா உள்ளே செல்ல அவளும் பின்சென்றாள்.

இந்துமதி அருகே சௌமியா வந்ததும் விமலா “குட்மார்னிங் மேடம்” என்றபடி வந்து அருகில் நின்றாள்.

“விமலா… நைட் ஏதாச்சும்?” என்று கேட்க “இல்லை மேடம்” என்றாள்.

“சரி வெயிட் செஞ்சு பார்ப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்துவிட்டு அன்பு செல்வியிடம் திரும்பி “அன்பு… உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. எந்த ஒரு நெகட்டிவ் சிம்ப்டம்ஸ் வரவில்லை. என்ன இன்னும் கண் விழிக்க இல்லை அவ்வளவுதான்” என்றாள் சௌமியா.

“மேடம்… அன்பு நேத்து நைட்ல இருந்து ஐ.சி.யூ வார்டுலதான் இருக்காறாங்க. சரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து பார்த்துட்டு போனாங்க.” என்று நர்ஸ் விமலா சொன்னதும் அன்பு செல்வியை அவள் பார்த்தாள்.

“என்ன அன்பு… அப்ப நான் கொடுத்த என் ரூமுக்கு போகலையா? நீங்க தூங்கினிங்களா? இல்லையா?

“இல்லை மேடம். என் பிரண்டுக்கு இப்படி இருக்கறப்ப நான் எப்படி மேடம் நிம்மதியாக தூங்கறது? அவள் கண் முழிச்சாதான் எனக்கு நிம்மதி” என்றாள் அன்புசெல்வி.

“அன்பு… உங்களை ராத்திரியில இந்த ஐ.சி.யூ வார்டு நர்சாக போடலாமுன்னு இருந்தேன். நீங்க இப்படி சரியாக தூங்கலைன்னா உங்களால் அந்த வேலையை எப்படி கவனமாக பார்க்க முடியும்?”
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“இல்லை மேடம் எனக்கே அந்த வேலையை தாங்க. நான் கவனமாக செய்கிறேன்” என்று அவசரமாகச் சொன்னாள் அன்புசெல்வி.

“சரி அப்பொழுது நீங்கள் என் கூட வந்து டிபன் சாப்பிட்டுட்டு என் ரூமில் போயி நல்லா தூங்குங்கள். ஈவினிங் உங்களை பார்த்து விட்டு சொல்கிறேன்” என்றாள் சௌமியா.

சௌமியாவுடன் சென்று டிபன் சாப்பிட்டபின் அன்பை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“அன்பு… படுங்க. நான் அப்ப அப்ப வந்து செக் பன்னுவேன் என்ன?” என்று கேட்க அவள் அன்பில் பேச முடியாமல் சரி என்று தலையசைத்தாள்.

சௌமியா சென்ற சில நிமிடங்களில் கால் நீட்டி படுத்தவள் அசதியால் நன்றாக தூங்கி விட்டாள். அன்பு செல்வி விழித்த பொழுது மணி இரண்டரை என்று காட்டியது.

இவ்வளவு மணி நேரம் தூங்கிட்டோமே? அங்கே இந்துவுக்கு என்ன ஆச்சோ? என்று நினைத்தவள் உடனே எழுந்து சென்று முகம் கழுவ நினைத்தவள் குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்று குளிக்கச் சென்றாள்.

அன்பு செல்வி குளித்து விட்டு உடை மாற்றிவிட்டு தலை வாரி பின்னலிட்டவள் உடனே ஐ.சி.யூ வார்டிற்கு வந்து தன் தோழியை பார்க்க வந்து விட்டாள்.

சௌமியா எதிர் தோன்ற உற்சாகமாய் வணக்கம் தெரிவித்தாள்.

“அன்பு… உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இப்ப கொஞ்சம் நேரம் முன்னர் உங்க பிரண்டு கை, கால் விரல்களில் அசைவு தெரிஞ்சுது.”

“அப்படியா! மேடம்… ரொம்ப நன்றி மேடம். நான் அவளை போயி பார்க்கிறேன்.” என்று பரபரப்பாகச் சொன்னாள்.

“அன்பு… மணி மூன்று ஆச்சு. நீங்க முதலில் போயி சாப்பிட்டு வாங்க” என்றாள் சௌமியா.

“மேடம்… ஒருதரம் அவளை பார்த்து விட்டு போயிடறேன்” என்று கேட்க “சரி” என்று சௌமியா சென்றாள்.

அன்பு செல்வி சென்று தன் தோழியை பார்த்துவிட்டு சென்று சந்தோசமாக சாப்பிடச் சென்று சில நிமிடங்களில் வந்து வார்டிற்கு வெளியே அமர்ந்துக் கொண்டாள்.

அன்பு செல்வி அடுத்து தன் தோழிக்கு அசைவு வரும்? நான் அதை எப்போது பார்க்க முடியும்? அவள் எப்போது கண் விழித்து எழுவாள் என்று சிந்தித்தவாறே காலத்தை கடத்தினாள்.

“அன்பு… உங்களை மேடம் கூப்பிடறாங்க” என்று நர்ஸ் வந்து சொல்லிச் சென்றாள்.

அன்பு செல்வி உடனே சௌமியாவின் அறைக்கு விரைந்து சென்று “நான் உள்ளே வரலாமா?” என்றாள்.

சௌமியா அவளைப் பார்த்ததும் “உள்ளே வாங்க அன்பு” என்றதும் அவள் உள்ளே நுழைந்தாள்.

“நீங்கள் கூப்பிட்டதாக நர்ஸ் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு நின்றாள்.

“ஆமா அன்பு. உங்க பிரண்டு இந்துவையும். ஐ.சி.யூ வார்டுல உள்ள மத்தவங்களையும் நைட்ல பார்த்துக்கற பொறுப்பை நான் உங்களுக்கு தருகிறேன். உங்கள் கூடவே எங்களின் ஹாஸ்பிடல் ஸ்டாப்பும் கூடவே இருப்பாங்க.”

“அன்பு… அதுமட்டுமில்லை உங்களின் திறமையும் அனுபவத்தையும் நாங்கள் பயன்படுத்திக்க விரும்புகிறோம். சோ நான் உங்களை டெம்பரரி நர்சாகவும் அப்பாயின்ட் செய்யலாமுன்னு நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?” என்றாள் சௌமியா.

“ஒகே மேடம். நான் ஏத்துக்கறேன். எனக்கும் சும்மா இருக்க முடியலை மேடம்.”

“அன்பு… உங்களை மாதிரி ஆட்களால் சும்மா இருக்க முடியாது. நான் உங்களை வாட்ச் பன்னிட்டுட்டுதான் சொல்றேன். எனிவே என் ரிக்வெஸ்ட்டை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி.

“என்னை நீங்கள் புரிஞ்சுகிட்டு என் பிரண்டை பார்த்துக்கிற வேலைய எனக்கே கொடுத்ததுக்கும், இந்த ஹாஸ்பிடலில நாங்கள் வந்ததில் இருந்து எதற்கும் ஒரு பைசா காசு வாங்காமல் என் பிரண்டுக்கு வைத்தியம் பார்க்கிறதுக்கும் நான் உங்களுக்குதான் நன்றி சொல்லனும் மேடம்”

“அன்பு… இந்த ஹாஸ்பிடலில் சம்பாதிக்க எங்க அப்பா உருவாக்கலை. ஏழைகளுக்கும் நல்ல தரமான வைத்தியம் கிடைக்கனும்தான் இதை உருவாக்கினாரு. என் அண்ணாவும் என்னை டாக்டருக்கு அதுக்குதான் படிக்க வைச்சாரு. நீங்க எத்தனையோ அனாதை குழந்தைகளை காப்பாற்ற பாடுபடறிங்க. உங்களுக்கு நான் இதைகூடச் செய்யக் கூடாதா?”

“மேடம்… இந்த மாதிரி யோசிக்க தனி மனசு வேணும். இந்த ஊரை விட்டு போகிற வரைக்கும் உங்களின் ஹாஸ்பிடலில் நான் நர்சாக வேலை பார்க்கிறேன்” என்று தன் சம்மததத்தை தெரிவித்தாள் அன்புசெல்வி.

“ஒகே அன்பு… நீங்க போயி நர்சா உங்க கடமையை இப்பவே ஆரம்பிங்க. “என்று பெல்லை அழுத்தினாள்.

“மேடம்…” என்று ஒருத்தி வந்து நிற்க “இவங்களை நர்ஸ் ரூமுக்கு கூட்டிட்டு போயி புது ஸ்டாப் நர்ஸ் யூனிபார்ம் தாங்க.” என்றாள் சௌமியா.

“சரிங்க மேடம்” என்று சொல்ல அன்புசெல்வி அவளுடன் சென்று ஸ்டாப் நர்ஸ் யூனிபார்மை வாங்கி அணிந்துக் கொண்டு வந்தாள்.

சௌமியா எதிரே வர “ஆல் தி பெஸ்ட் அன்பு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
 




Last edited:

mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
செளமி செல்லம் நீ ஸ்வீட்டுன்னு நினைச்சேன் நீ ரொம்ப ஸ்வீட்டா. உன்ன மாதிரி டாக்டருக்கு என் சல்யூட் அப்புறம் ஆதிரையன் செளமீக்கு தொடர்ந்து சப்போர்ட் பன்னூங்க
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
அன்பு கவலைபடாதீங்க உங்க பிரண்டு முழிச்சிடுவாங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top