• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum Gnyanam vignyaanam aayinum 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பொழில் (ஆல்பா ப்ரோக்ஸிமா – I)

பூமி வாசிகளால் ஆல்பா ப்ரோக்ஸிமா – I (alpha proxima I) என அழைக்கப்படும் கிரகத்தின் பெயர் “பொழில்” (பொழில் என்றால் உலகம், சோலை என்று பொருள்)..

இது துலாதர (பொழிலில் சூரியனை குறிக்கும் சொல் துலாதரன்) குடும்பத்தின் ஆறாவது கோள்..

பூமியை விட இரண்டு மடங்கு பெரியது..

ஐம்பது சதவிகிதம் நீராலும் ஐம்பது சதவிகிதம் மண்ணாலுமான தொன்மையான கிரகம்..

பூமியை விட அங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மேம்பட்டு இருந்தாலும் அது வெளிவாசல் வரையே..

அங்கு தொழில்நுட்பத்தை யாரும் வீட்டிற்குள் அழைத்துச் செல்வதில்லை..

உதாரமாக மின் விளக்குகள்.. பொழிலின் தெருக்களில் மின் விளக்குகள் உண்டு.. ஆனால் அதை வீட்டிற்குள் யாரும் பயன்படுத்துவதும் இல்லை அது அங்கு நிலைபெருவதும் இல்லை..

இது அந்த கிரகத்தின் சட்டம்..

ஹான்.. சட்டம் என்ற உடன் தான் நியாபகத்திற்கு வருகிறது..

அங்கு குடிகொண்டுள்ள கிரக வாசிகள் அனைவருக்கும் ஒரே சட்டம்.. இதில் ஏழை பணக்காரன் ஆண் பெண் என்ற எந்த பாகுபாடும் அக்கிரக மக்கள் உருவாக்கவில்லை..

சட்டங்களில் பொந்துகளும் இல்லை ஓட்டைகளும் இல்லை..
கடுமையான சட்டங்கள்.. ஆதலால் குற்றங்களும் அங்கு பெரியதாக நடப்பதும் இல்லை..

இதற்கு முக்கிய காரணம், அங்குள்ள ஒரு படி மண் முதல் கொட்டிக்கிடக்கும் வைர வைடூரங்கள் வரை எதுவும் எவருக்கும் சொந்தமில்லை..

சொந்தமில்லை என்பதை விட எதற்கும் அங்கு விலை இல்லை என்பதே பொருந்தும்..

பொழிலைப் பற்றி இன்னும் இன்னும் நிறைய நாம் தெரிந்து கொள்ளலாம் இனி வரும் பதிப்புகளில்..
******************************************************************************************
இடம் : பரிதி வனம்

நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய குடில் பகுதி.. தோராயமாக பதினைந்து அடி இடைவேளைகளில் ஐந்தாயிரம் குடில்கள்..

ஒவ்வொரு குடிலை சுற்றிலும் வித்யாசமான மரங்களும் செடிகளும்..
மரங்கள் செடிகள் போலவே ஒவ்வொரு குடில்களிலும் வெவ்வேறு உருவம் கொண்ட மனிதர்கள்..

சிலருக்கு அங்கு காதுகள் இல்லை, சிலருக்கு கை விரல்கள் இல்லை, சிலருக்கு இரண்டிற்கு பதிலாக நான்கு கால்கள்..

ஆனால் அவர்கள் அனைவரும் மனிதர்களே..

ஆம்.. நீங்கள் நினைப்பது சரியே..

பொழிலை சுற்றிலும் உள்ள சூரிய குடும்பங்களில் இருந்து பொழிலை ஆராய்ச்சி செய்யவும் ஆட்சி செய்யவும் நினைத்து வந்த மனிதர்களே அவர்கள்..

பூமி பாஷையில் அவர்கள் அனைவரும் அகதிகளே.. பொழிலைப் பொறுத்தவரை அவர்கள் விருந்தாளிகள்..

தொங்கு மரங்கள் அந்த இடைத்திற்கு நிழலையும் குளுமையையும் வாரி வழங்கிக்கொண்டிருக்க மாசில்லா காற்றானது பூமி வாசிகள் உட்பட அனைவரின் நுரையீரல்களையும் சுகந்தமாய் நிரப்பிக் கொண்டிருந்தது..

நமது ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பொழிலிற்கு வந்து நாட்கள் இரண்டை கடந்து விட்டது..

அபித் ஆத்யா அத்வைத் சாய் நால்வரையும் அகதிகள் என முத்திரையிட்டு ஒரு பெரிய குடிலில் வைக்கப்பட்டிருந்தனர்..

கதிரோன் மறைந்து நிலவு மகள் பிறக்கும் உதிக்கும் நேரமது.. பட்சிகளின் சத்தமும் பூட்சிகளின் ரீங்காரமும் பூமி வாசிகளுக்கு புது வித உலகைக் காட்டிக்கொண்டிருந்தது..

“அத்வைத்.. அது என்ன பேர்ட்..??”, பச்சை நிற இறகுகளும் மஞ்சள் நிற உடலும் கொண்ட ஒரு பறவையை சுட்டிக் காட்டிக் கேட்டாள் ஆத்யா..

“குருவி மாதிரி தெரியுது டாக்..”

“குருவி இப்படி தான் இருக்குமா..??”, கண்கள் பளிச்சிட அந்தப் பறவையை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்..

“தெரியலையே டாக்.. நானும் உங்களைப் போல் தான்.. புத்தகங்களிலும் சில வீடியோக்களிலும் மட்டும் தான் குருவியைப் பார்த்திருக்கிறேன்..”

“நமது பூமியில் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் வளராமல் இருந்திருந்தால் நாமும் இது போன்ற இயற்கை அமைப்பில் தானே வாழ்ந்திருப்போம்..”, என்றாள் ஏக்கமாக..

“தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்ததால் தான் நம்மால் இந்த கிரகத்திற்கு வர முடிந்தது..”, என்றான் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சாய்..

“ஒரு வகையில் நீ சொல்வது சரி தான் சாய்.. ஆனால் நமது பூமி இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் இழந்தது ரொம்பவே அதிகமாயிற்றே..”, இது அத்வைத்..

“அப்படி என்ன நாம் பெரியதாக இழந்து விட்டோம்.. அறிவியல் வளர்ச்சியால் நமது நாடு வல்லரசாகவில்லையா..??”

“நமது நாடு வேண்டும் என்றால் வல்லரசாகி இருக்கலாம்.. ஆனால் அது எத்தனை லட்சம் கோடி மக்களை பலியிட்டு..??”, என்ற கேட்ட ஆத்யா இனி சாயிடமிருந்தும் அத்வைத்திடமிருந்தும் பதில் வராது என அறிந்து ஜன்னலின் கம்பிகளை கெட்டியாக பிடித்தபடி வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள்..

முப்பதாம் நூற்றாண்டில் பூமியில் இறப்பு என்பது சாதாரண நிகழ்வுதான் என்றாலும், “லட்சம் கோடி மக்களை பலியிட்டு”, என்று ஆத்யா மிக மிக சாதாரமாக குறிப்பிட்டது அத்வைதத்தின் மனதை ஏனோ உலுக்கியது என்றே சொல்லவேண்டும்..

நான்கு வருடம் மூன்று மாதம் இரண்டு வாரம் நடந்த முதல் உலக போராகட்டும் ஆறு வருடம் ஒரு நாள் நடந்த இரண்டாம் உலக போராகட்டும்.. இரண்டையும் சேர்த்து சுமார் நூறு கோடி மக்கள் (இராணுவ வீரர்களையும் சேர்த்து) தோராயமாக இறந்து போனார்கள்..

இந்த போரெல்லாம் நாட்டுக்கு நாட்டுக்கு நடந்தது.. நேரிடியாகவோ மறைமுகமாகவோ தோட்டாக்கள் குண்டுகள் எறிந்து நடந்தது..

அதைத் தொடர்ந்து நாடுகள் நேரடியாக மோதாவிட்டாலும் பனிப் போர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் என நடந்தது இருபத்தோராம் நூற்றாண்டில்..

பனி மலைகளும் நேரம் காலம் கனிந்தால் வெடிக்கத்தானே செய்யும்..

சர்வாதிகாரர்கள் கையில் ஆட்சிகள் கொடுக்கப்பட்ட நேரம் (இருபத்தி ஓராம் நூற்றாண்டு முடிவில்) மூன்றாம் உலகப் போர் வெடித்தது முதல் இரு போர்களைப் போலவே..

தன்னைத் தானே வல்லரசு என அறிவித்து உலகையை தன் கைக்குள் வைத்திருந்த நாடுகளெல்லாம் அப்போரில் படு தோல்வியடைந்தது..

இந்தப் போர் மனித சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தாலும் மனிதன் தனது கோட்டைத் தாண்டாமலே இருந்தான்..

தம் நாடு தம் மக்கள் தம் நாட்டு பொருளாதாரம் என சுருங்கிய கட்டமைக்குள் வாழ்ந்து இது தனது பூமி என்பதை மறந்து போனான்..

வீழ்ந்து போன நாடுகள் தங்களது எழுச்சியை நோக்கி போராடியது என்றால் வெற்றி பெற்ற நாடுகள் தங்களது நாட்டின் முன்னேற்றத்தையே முன்னிறுத்தி உழைக்கத் துவங்கினர்..

இது அடுத்தப் போரிர்க்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது..
ஆம், நான்காம் உலகப் போர்..

மூன்றாம் உலக போர் முடிந்து அன்றாட வாழ்விற்கு திரும்ப அணைத்து நாடுகளுகளும் சுமார் ஒரு அரை நூற்றாண்டு கால அவகாசம் தேவைப்பட்டது..

அறிவியலும் தொழில்நுட்பமும் இந்த இடைப்பட்டக் காலத்தில் அசுர வளர்ச்சி அடையத் துவங்கியது..

இருபதாம் நூற்றாண்டுகளில் அனைவரும் பொறியியல் துறையில் முத்தெடுத்தனர் என்றால் இருபத்தி மூன்றாம் நூறாண்டில் ரோபாடிக்ஸிளும் க்ளோனிங்கிலும்..

உருவாக்கப்பட்டது புதிய உலகம் என்றே சொல்ல வேண்டும்..
அதன் எதிரொலியாக கதிர்வீச்சுகள் தாங்காது பல உயிரிங்கள் மடிந்து போயின..

நீர் நிலையங்கள் வற்றியதால் கடல் நீரை சுத்திகரித்து அதை பருகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்..

தங்கம் வைரம் விலையைக் காட்டிலும் நீரின் விலை அதிகமானது.. நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தன..

இந்த சமயத்திலாவது உலக நாடுகள் முழித்திருக்கலாம்..
ஆனால் மனிதனுக்கு இருப்பது பேராசை அல்லவா.. அதுவும் மண்ணாசை சும்மா விடுமா..

மூன்றாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவர்களால் ஆரம்பமானது நான்காம் உலகப் போர்..

ஆனால் போர் துவங்கி ஐந்தாம் நாளே அது உலகையே உலுக்கிப் போட்டது..

ஆம், அணு மழைகளை நாடுகள் பொழிய அதைத் தாங்கா பூமி மாதா ஐந்தாம் நாள் அதுவரை உலகம் எதிர் நோக்கா அதிர்வளைகளைக் கொடுத்தாள்..

மனிதன் கனவில் நினைத்துப் பார்க்கா நிலநடுக்கம் அது..

சில கண்டங்கள் இரண்டாய் பிளந்தது.. சில கண்டகள் சில கண்டங்களோடு ஒன்று சேர்ந்தது..

நீரில் மூழ்கிப்போன சில நிலப்பரப்பு இந்த நிலநடுக்கத்தில் நீரை விட்டு வெளியே மலர்ந்தது..

உலகின் சிறிய கண்டம் (உலகப் போரில் தலையிடாமல் இருந்தது.. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்து என்றும் சொல்லலாம்) கடலில் மூழ்கி அழிந்தே போனது.. அதில் வாழ்ந்த மக்கள் உட்பட..

எங்கும் மக்கள் வெள்ளம்.. இரத்த வெள்ளம்..

போரில் இறந்த மக்கள் தொகையை விட இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்பட்டது..

சுமார் நூறு இலட்சம் கோடிக்கு மேல் மக்கள் இறந்திருந்தனர்..

பல இலட்சம் விலங்கு இனங்களும் பறவை இனங்களும் முற்றிலுமாக அழிந்தே போனது..

“அத்.. ப்.. ப்.. பேய்..”, தனது சட்டைக் காலரை பிடித்துக் கதறிய ஆத்யாவின் குரலில் சுயநினைவடைந்த அத்வைத், “டாக்.. என்னாச்சு..??”, என்று கேட்டான்..

“அ..ங்க..ப் பா..ரு.. அத்..வைத்..”, என்று தனது கைகளால் ஜன்னல் வழியே சுட்டினாள்..

அதைப் பார்த்த அத்வைத்தும் அதிர்ந்து போனான்..

(அடுத்த ud ல என்ன பார்த்தாங்கன்னு சொல்றேன்.. இப்போ வசிஷ்டராவை ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்..)
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : புலரி வனம்

நிசப்தத்தின் எதிரொலி அவ்விடத்தில் நிரம்பி வழிய மயக்கத்தின் பிடியை விட்டு இன்னும் விடுதலை பெறாமல் ஒரு பெரிய பஞ்சுப் பொதியில் குழந்தை போல் கண்மூடிக் கிடந்தாள் வசிஷ்டரா..

அவளது தலையை வருடிக் கொண்டும் அவள் உறங்கும் அழகை இரசித்துக்கொண்டும் அவளருகில் அவளது முகச் சாயலுடன் அமர்ந்திருந்தார் ஒரு பெண்மணி..

“அம்மா..”, காதில் தனது தவப்புதல்வன் அழைப்பது விழுந்தாலும் பார்வையை விலக்காது இதழில் விரல் வைத்து ஷ் பேசாதே என்பது போல் சைகை செய்தார் திருஷ்டி..

அவரது செய்கையில் இதழோரம் மென்னகை பூக்க அவரின் தோளில் கைவைத்து லேசாக அணைத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் வசிஷ்ட்ராவின் உடன்பிறந்தவன்..

“பலவருடம் அனுபவித்த குற்ற உணர்விலிருந்து விடைதலைப் பெற்ற உணர்வு..”, என்றான் கண்களில் நீர் படிய..

அவனது அணைப்பை தனது அணைப்பாக மாற்றி, “தெரியாமல் செய்த ஒன்றுக்கு குற்ற உணர்வு தேவையில்லை கண்ணா..”, என்றார் தேற்றலாக..

“என் பெண்ணை மறந்துட்டு அம்மாக்கும் பையனுக்கும் என்ன கொஞ்சல்ஸ் வேண்டி கெடக்கு..”, மிரட்டலாக கேட்க நினைத்த போதும் இருவரின் புரிதலையும் பாசத்தையும் கண்டு நெகிழ்ந்து ஒலித்தது அவ்யுக்த்தரின் குரல்..

அவ்யுக்த்தரின் குரலைக் கேட்டு அன்னையும் மகனும் அசைந்தார்களோ இல்லையோ வசிஷ்ட்ராவின் விரல்கலானது லேசாக மிக லேசாக அசையத் துவங்கியது..

அவளது அசைவு அவ்யுக்த்தரின் உடலில் சிறிது சிலிர்ப்பைக் கொடுத்து அவளை நெருங்கி அவளது தலையை கோதச் செய்தது..

அவர் தொடுகையை நன்கு உணர்ந்தார் போல் இப்பொழுது கசங்கத் துவங்கியது பெண்ணின் இமை மேடுகள்..

அவளது அசைவுகள் ஒவ்வொன்றையும் படித்துக் கொண்டிருந்த மூவர் நெஞ்சிலும் ஆனந்த கூச்சல்..

மெல்ல மெல்ல தனது கண்களை திறக்க எதிரில் அமர்ந்திருந்த திருஷ்டியையும் அவ்யுத்தரையும்க் கண்டு தான் காணும் காட்சி கனவா நிஜமா எனத் தெரியாமல் கண்களைத் தேய்த்துக் கொண்டாள்..

“பர்பி.. நீ கனவெல்லாம் கானவில்லை..”

பரிச்சயமாய் இருந்த குரலைக் கேட்டு தனது வலப்புறம் திரும்பியவள் விபுவைக் கண்டு கண்கள் விரித்து, “தீக்ஷா..?? நீ.. நீயா..??”, என்று கேட்டாள் கேள்வியாய்..

ஆம் என்பது போல் விபுதீக்ஷன் தலையசைத்த அடுத்த நொடி அனைவரையும் தன் கைகளால் அணைத்திருந்தாள் பெண் அம்மா அப்பா அண்ணா என்ற கதறலுடன்..

******************************************************************************************

வசிஷ்டரா புலரி வனம் வந்து இரண்டாம் நாள் மாலை..

“பர்பி.. ஏந்தலில் (குளத்தில்) பார்த்து கால் வை.. வழுக்க போகுது..”, குளத்தில் கால் வைத்து இறங்கிக் கொண்டிருந்த வசிஷ்டராவை எச்சரித்தான் விபு..

“பார்த்து தான் வைக்கிறேன் தீக்ஷா..”, என்று நீரில் லேசாக குதித்தபடி சொன்னவள், “பூமியில் இதுவரை இம்மாதிரி இடத்தைப் பார்த்ததே இல்லை.. அதான் கொஞ்சம் உற்சாகமாக இருக்கு..”, என்றாள் குதூகலமாக..

அவளைப் பார்த்து சிரித்த விபு, “நீ இன்னும் வளரவே இல்லை பர்பி..”, என்றான் வாஞ்சையாய்..

“அது பிறப்பு அப்படி..”, என்றவன் தெளிந்த நீரில் தனது முகத்தைப் பார்த்து ஓரடி பின் எடுத்து வைத்தாள் அதிர்வாய் குளத்திற்குள் மூழ்க நான் ரெடி என்பது போல்..

“என்னாச்சு பர்பி..”, அவளின் இச்செய்கையை எதிர்பாராதவனாய் குளத்தில் இறங்கி அவளைப் பிடித்து நிறுத்தினான் விபு..

விபுவை சிறு நடுக்கத்துடன் பார்த்தவள் நீரில் தனது பிம்பத்தைக் கண்டு, “எ...ன..து.. கண்...கள்..”, திக்கித் திணறினாள்..

“பூனை நிறத்திலிருந்து நீல நிறமாய் மாறியிருக்கிறது..”, என்றான் விபு சாதரணமாக..

“இது எப்படி சாத்தியம்..??”

“இந்த நிற மாற்றம் நமது கிரகப் பெண்களுக்கு உரியது பர்பி.. இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நமது கிரகப் பெண்களின் கண்கள் மாறும் தன்மையுடையது.. நீரில் இருக்கும் பொழுது நீல நிறமாகவும்.. ஆகாயத்தில் பறக்கும் பொழுது கார் மேக நிறம் என மாறிக் கொண்டே இருக்கும்..”

“ஆனால் பூமியில் இது போல் மாற்றம் ஏற்படவில்லையே..??”
“இந்த நிற மாற்றம் நமது கிரகத்தில் இருக்கும் வரை மட்டுமே நிகழும்.. நம் கிரகத்தை நீங்கினால் அத்தன்மைகள் எதுவும் தென்படாது..”

“ஓ.. நான் இங்கு வந்தடைந்த பொழுது மயங்கி விழுந்ததும் இதனால் தானா..??”

“ஆம் பர்பி.. நீ நமது கிரகத்திற்குள் நுழைந்த நேரம் உனது தன்மைகள் அனைத்தும் வெளிப்பட்டிருக்கும்.. நீ பல வருடங்கள் கழித்து இங்கு வருவதால் அதன் தாக்கம் தாங்காமல் மயங்கி விட்டாய்.. இதற்கெல்லாம் நமது கிரகத்தை சுற்றியுள்ள கவசப் படலமே மூல காரணம்..”

“கவச படலமா..??”

“ஆமாம்.. உயிர்கள் வாழ தகுதியான எல்லா கிரகத்திலும் கவச படலங்கள் இருக்கும்.. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையைத் தாங்கும் கருவறை போல் அந்தப் படலம் அமைந்திருக்கும்..”

“ஓ..”

“நீ வாழ்ந்த பூமியைச் சுற்றிலும் கூட அது போன்ற படலம் இருப்பதாக அப்பா சொன்னாரே.. நீ தெரியாத மாதிரியே கேட்கிறாய்..??”

“பூமியைச் சுற்றிலும் ஒரு காலத்தில் கவசபடலம் இருந்தது..”, என்று சற்றே நிறுத்தியவள், “அந்த படலத்தை பூமிவாசிகள் அழித்ததால் தான் நாங்கள் இங்கே வர நேர்ந்தது..”, என்றாள்..

******************************************************************************************
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
இதற்கு முக்கிய காரணம், அங்குள்ள ஒரு படி மண் முதல் கொட்டிக்கிடக்கும் வைர வைடூரங்கள் வரை எதுவும் எவருக்கும் சொந்தமில்லை..
socialism a sis:):):):)
தொங்கு மரங்கள் அந்த இடைத்திற்கு நிழலையும் குளுமையையும் வாரி வழங்கிக்கொண்டிருக்க மாசில்லா காற்றானது பூமி வாசிகள் உட்பட அனைவரின் நுரையீரல்களையும் சுகந்தமாய் நிரப்பிக் கொண்டிருந்தது..
nice imagination:):):):)parithi vanam agathikal thangum idama sis. pulari vanam people of that planeta i mean pozhila:unsure::unsure::unsure::unsure:ozone layera pathi solrangala......... :unsure::unsure::unsure::unsure:nice epi sis.......... nalla imagination(y)(y)(y)(y)
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
socialism a sis:):):):)

nice imagination:):):):)parithi vanam agathikal thangum idama sis. pulari vanam people of that planeta i mean pozhila:unsure::unsure::unsure::unsure:ozone layera pathi solrangala......... :unsure::unsure::unsure::unsure:nice epi sis.......... nalla imagination(y)(y)(y)(y)
socialism ah omg..:censored::censored::censored: apdi ellam illa sissy..
my imaginary world..
ipdi ellam irukkanum oru kutty aasai.. ;););)
thank u fr ur comment sissy
 




Josejames

நாட்டாமை
Joined
Mar 2, 2018
Messages
50
Reaction score
23
Location
Trichy
ஏன் ரொம்ப தாமதமா update குடுகுறிங்க கொஞ்சம் சீக்கிரமா குடுக்கலாம்ல
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top