• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum Gnyanam Vignyaanam Aayinum 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பரிதி வனம்

இருள் சூழ்ந்த அந்தி மாலை நேரத்தில் ஆத்யா பேய் எனக் கத்தவும் அவள் நடுக்கத்தையும் பயத்தையும் கண்டு, “என்னாச்சு ஆத்யா..??”, என்றபடி ஆத்யா பார்வை சென்ற திக்கைப் பார்த்த அத்வைத்தின் முகத்திலும் வேர்வைத்துளிகள்..

இளமஞ்சள் நிறம்.. அகன்ற நெற்றி.. நெற்றிக்கு நடுவே வட்டவடிவில் புருவமில்லாமல் பெரியதொரு கண்.. புழுவைப் போல் வளைந்து நெளிந்த சிறியதொரு மூக்கு.. காதுவரை நீண்ட இதழ்கள்.. கோரப் பற்கள்..

பார்க்கவே பிரேதம் போல் உருவம் கொண்ட ஒரு மனித ஜந்து..

“சுகமா இருக்கீங்களா..??”, என்று தனது கோரப் பற்கள் தெரிய அவன் புன்னகைத்தபடி கேட்டவுடன் தூக்கிவாரிப் போட்டது இருவருக்கும்..

வேறொன்றும் இல்லை.. குரல் அப்படி.. கரடி பேசினால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது அவனது குரல்.. பயங்கரமாய்.. அதி பயங்கரமாய்..

ஓரடி ஆத்யாவும் அத்வைததும் பின்னேறுவது கண்டு அவன், “பயப்படாதீர்கள்.. நானும் உங்களைப் போல் மனிதன்தான்..”, என்றான் மீண்டும் கோரமாக இளித்தபடியே..

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட இருவரையும் கண்டு, “எனது பெயர் மிகிரன்.. ஆம்பல் கிரகத்தைச் சேர்ந்த என்னை அனைவரும் என்னை மிகி என அழைப்பார்கள்..”, என்று தன்னைத் தானே அறிமுகம் செய்துகொண்டது மிகி..

“ஆம்பல் கிரகமா..?? அது எங்கு இருக்கிறது..”, திக்கித் திணறித் தான் கேட்டாள் ஆத்யா..

“அது இங்கிருந்து சுமார் பத்தாயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது.. பொழிலை விட சிறிய கிரகம் தான்.. ஆனால் வளமை வாய்ந்தது..”, பெருமையாய் கூறினான் மிகி..

கொஞ்சம் இயல்புநிலைக்கு திரும்பிய அத், “நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்..??”, எனக் கேட்டான்..

“நாங்கள் பொழிலின் மேல் போர் தொடுத்து வந்தோம்.. ஆனால் பொழிலை நெருங்கும் முன்னே விண்வெளியில் சிறைபிடிக்கப்பட்டோம்..”, என்றான் மிகிரன்..

“அப்போ நீங்கள் ஒரு போர் வீரரா..??”, ஆவலாகக் கேட்டாள் ஆத்யா..
இல்லை என்பது போல் தலையசைத்த மிகி, “நான் போர் கப்பலை செலுத்துபவன்..”, என்றது..

“எவ்வளவு பேர் சிறைபிடிக்கப்பட்டீர்கள்..”, எதையோ கேட்க வந்த ஆத்யாவைத் தடுத்தவாறு கேட்டான் அத்..

“சுமார் இரண்டு இலட்சம் பேர்..”

“அவர்கள் எல்லாம் எங்கு இருக்கின்றனர்..??”

“ஐந்து பேரைத் தவிர மீதி உள்ளோர் அனைவரையும் விண்வெளியிலேயே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.. அநேகமாக அவர்கள் இந்நேரத்திற்கு ஆம்பல் கிரகத்தை அடைந்திருக்கலாம்..”

“ஏன் உங்களை விடுதலை செய்யவில்லை..??”

“எங்களது கிரக போர் கப்பலை வடிவமைத்தத்து நானும் இங்கிருக்கும் என் சகாக்களுமே.. அந்தக் கப்பலின் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தான் எங்களை இங்கு சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள்..”

“இங்கே அடைக்கப் பட்டிருப்போருக்கு விடுதலை உண்டு தானே..??”, இது அத்..

“உண்டு தான்.. பொழில் கிரக வாசிகளின் தேவை முடிந்த பின் நம் எல்லோருக்கும் விடுதலை நிச்சயம்..”, என்ற மிகி, “உங்களுடன் வந்த மீதி இருவர் எங்கே..??”, எனக் கேட்டது மிகி..

“அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்..”, என்ற ஆத்யா, “சாய்.. அபித்..”, என்று குரல் கொடுத்தாள் சத்தமாக..

தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்த இருவரும் ஆத்யாவின் குரல் கேட்டு சலிப்போடு அங்கு வந்து சேர்ந்தனர்..

“என்ன டாக்டர்.. எதுக்கு கூப்பிட்டீங்க..??”, என்று கேட்டான் அபித்..

“அபித்.. சாய்.. இவர் மிகிரன்.. ஆம்பல் கிரகத்தைச் சேர்ந்தவராம்..”, என மிகியை அறிமுகப் படுத்தினாள் ஆத்யா..

ஆத்யாவிற்கு நேர் எதிரே ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு கோரப்பற்களை காட்டியபடியே நின்றிருந்தவனின் உருவம் கண்டு திகைத்த சாயும் அபித்தும் என்ன ஜந்து இது என்பது போல் மிகியைப் பார்த்து வைத்தனர்..

அதை புரிந்து கொண்ட மிகி, “எங்கள் கிரக வாசிகளுக்கும் உங்களைப் போல் இரண்டு கண்கள்.. கூர் நாசி.. அழகான இதழ்கள் என எல்லாம் இருந்தது தான்.. எங்களை நாங்களே மேம்படுத்திக் கொள்கிறோம்.. பரிணாம வளர்ச்சி.. அறிவியல் வளர்ச்சி என சொல்லிக்கொண்டு இயற்கை வழியை விட்டு செயற்கை வழி சென்றதால் இந்த மாற்றங்கள்..”, என்ற மிகி, “பூமி வாசிகளும் எங்கள் கிரகத்தைப் போல் அந்த வளர்ச்சியை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறீர்கள்..”, என்றது..

அந்தக் குரலில் பரிதாபமா..?? ஏளனமா..?? பிரித்தறிய முடியாமல் இருந்தது..

“நாங்களா..?? நாங்களும் உங்கள் உருவத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றோமா..?? என்ன உளறுகிறாய்..??”, அதிர்ந்தாள் ஆத்யா

“நான் ஒன்றும் உளரவில்லை ஆத்யா.. உண்மையைத் தான் உங்களிடம் உரைக்கிறேன்..”

“உண்மையா..?? என்ன உண்மை..??”, சற்றே கோபமாக வெளிவந்தது அபித்தின் குரல்..

“நான் இங்கு உங்கள் அனைவரையும் காண வரும் பொழுதே கவனித்தேன்.. உங்களில் யாருக்கும் கால்களில் விரல்கள் இல்லை.. கைகளிலும் கால்களிலும் இயற்கையாய் வளரும் சிறு முடிகள் இல்லை.. இதை வைத்துத் தான் சொல்கிறேன்..”, என்றான் மிகி..

“இதற்கெல்லாம் காரணம் எங்களது வளர்ச்சி என்கிறாயா..??”, இது அபித்..

“நிச்சயமாக.. நாட்டின் முன்னேற்றம் விஞ்ஞானம் என சொல்லிக்கொண்டு நாம் செய்யும் நிறைய செயல்கள் தான் இதற்கு காரணம்.. அந்த முன்னேற்றத்தின் விளைவாய் பூமியின் படலமானது நாற்பத்தி ஐந்து சதவிகிதம் அழிந்துவிட்டதென கேள்விப்பட்டேன்.. அதன் அழிவே மனித அழிவிற்கும் வித்திட்டிருக்கிறது..”

“நீங்கள் பூமி அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா..??”, இது சாய்..

“இல்லை.. பூமியில் வாழும் மனித இனம் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என சொல்ல வருகிறேன்..”

******************************************************************************************
இடம் : புலரி வனம்

வானத்து மீன்கள் கண்கள் சிமிட்ட மின்மினிகள் ரீங்காரம் இசைக்க மேளதாளங்கள் கொட்டத் துவங்கியிருந்தது வானம்..

வாசலை ஒட்டிய திண்ணையில் யாரையோ எதிர்பார்த்தவண்ணம் காத்திருந்தாள் வசிஷ்டரா..

அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அங்கு வந்து சேர்ந்தான் அவளது தமையன் விபு..

தின்னையையில் கன்னங்களுக்கு முட்டுக்கொடுத்து அவள் அங்கமர்ந்திருப்பது கண்டு அவள் அருகில் அமர்ந்தவன், “மழை வருவது போல் இருக்கிறது.. நீ என்னடான்னா இங்க உட்கார்ந்து எதையோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்க..”, என்று கேட்டான்..

"விபு.. நான் உனக்காகத் தான் காத்திருக்கிறேன்..”, என்றாள் சலிப்பாக..

“எனக்காகவா..??”, கண்களில் ஆச்சர்யத்தில் மின்ன கேட்டான் அவன் தமையன்..

ஹ்ம் என்பது போல் தலையாட்டியவள், “விபு.. என் கூட நம்ம கிரகத்திற்கு வந்த என் நண்பர்களை நான் பார்க்க வேண்டும்..”, என்றாள்..

“போலாம் பர்பி.. எனக்கு ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் கொடு.. அவர்களிடம் உன்னை அழைத்து செல்கிறேன்..”

“எனக்கு அவர்களை நாளைக்கே பார்க்க வேண்டும்”, என்றாள் சிறு பிள்ளைபோல்..

“நீ நெனச்ச உடனே எல்லாம் அவர்களைச் சென்று பார்த்துவிட முடியாது பர்பி.. நிறைய கட்டுப் பாடுகள் உண்டு வெற்று கிரக வாசிகளை நாம் சென்று பார்க்க..”, என்ற விபு வசிஷ்ட்ராவின் முக மாறுதலைக் கண்டு, “புரிஞ்சுக்கோ பர்பி..”, என்றான் அவனும் சற்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு..

அவன் பாவனைகள் கண்டு லேசாக சிரித்தவள், “ஐ கேன் அண்டர்ஸ்டான்ட் ப்ரோ..”, என்றாள் கண் சிமிட்டியபடி..

அவள் சொல்வது புரியாது ஞே என முழித்தவன், “என்ன பர்பி சொல்ற..?? எனக்கு புரியவில்லை”, என்றான் விபு..

ச்சே என்று தன் தலையில் லேசாக தட்டிக்கொண்டவள் என்னால புரிஞ்சுக்க முடியுதுன்னு ஆங்கிலத்தில் சொன்னேன்..”

“நீ எங்களிடம் அடிக்கடி இந்த மொழியை பயன்படுத்துகிறாய்.. எங்களுக்கு சரியாக புரிவதில்லை..”, கொஞ்சம் சலித்துக்கொண்டான் விபு..

“நான் என்ன பண்ண.. அந்த மொழியில் பேசியே பழகிவிட்டதே..”

“சரி விடு.. இனியாவது ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசக் கற்றுக்கொள்..”, என்று அவள் தலையை கலைத்துவிட்டவன், “எனக்கு பசிக்கிறது.. வா உள்ளே போகலாம்..”, என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான்..

******************************************************************************************

வசிஷ்டராவை விபு பூமி வாசிகளிடம் அழைத்துச் செல்வானா..??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top