• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Thedum nyaanam vignyaanam aayinum 22

Messages
154
Likes
441
Points
52
Location
coimbatore
#1
இடம் : இஸ்ரோவின் தலைமைச் செயலகம், பெங்களூர், பூமி..

ன்டோர் ஸ்டேடியமே வெறிச்சோடிப்போய்க் கிடந்தது..

ட்ராக்ஸ் ஷூட்டுடன் அதனுள்ளே பிரவேசித்த வசிஷ்டரா அங்கு யாரும் இல்லாததால் அங்கிருந்த நீச்சல் குளத்திற்கு கால்களை நனைத்தவண்ணம் முதல்நாள் தனக்கும் நந்தனுக்குமான உரையாடலை அசைப்போடத் துவங்கினாள்..

இரவு உறங்கும் முன் எப்பொழுதும் நந்தனுடனும் ஸ்ரீயுடனும் அன்று நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வாள் வசிஷ்டரா..

நேற்றும் அப்படித்தான் தான் காலை இத்தனை மணிக்கு எழுந்தேன்.. பயிற்சிக்கு செல்லப் பிடிக்காததால் போகவில்லை.. இதை செய்தேன்.. அதை செய்தேன் என்று அன்று நடந்தவைகளை ஒப்பித்தவளுக்கு நந்தனிடமிருந்து ஒரு வகை ம்ம் கொட்டல்லே பதிலாகக்கிட்டயது..

மூச்சு முட்ட அன்றைய நிகழ்வுகளை சொல்லி முடித்தவளுக்கு அப்பொழுது தான் நந்தன் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்று உறைத்தது..

“ப்பா.. என்னப்பா ஆச்சு..?? நான் இவ்ளோ சொல்றேன்.. பட் யூ ஆர் நாட் ரெஸ்ப்பான்டிங் டூ மீ பிராப்பர்லி..?? (but you are not responding to me properly..??)”, என்றாள் கேள்வியாக..

“என்னன்னு ரெஸ்பான்ட் பன்னனும்னு நினைக்கற வசீ..??”, குரலில் மொடுலேஷனைப் புரிந்துகொள்ள முடியவில்லை அவளால்..

“ப்பா..??”

“நீ இங்க கிளம்பி வந்துவிடு..”, தீர்க்கமாக வெளிவந்தது நந்தனது குரல்..

“ப்பா..??”, வேறெந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை..

“அப்பா தான் சொல்றேன் வசீ.. இங்கு வந்துவிடு..”

“உங்களுக்கு என் இலட்சியத்தைப் பற்றி நன்றாகத் தெரியும்.. உங்களால் எப்படி இப்படி சொல்லமுடிந்தது..??”, ஆத்திரத்துடனும் அழுகையுடனும் வெடித்தது வசியின் குரல்..

“இலட்சியமா..?? அதுவும் உனக்கா..??”, ஒரு இகழ்ச்சியான சிரிப்புடன்..

“.................................”, பதில் வரவில்லை அவளிடம்..

“நீ உன் இலட்சியத்தை அடைய அங்கு சென்றிருக்கிறாய் என்றால் அதற்காக நீ போராடவேண்டும் வசிஷ்டரா.. சும்மா வெட்டியாக பொழுதைப் போக்கக்கூடாது.. ஜாலியாக இருக்க வேண்டும் என்றால் அதை நீ அந்த இடத்தில் செய்யக்கூடாது.. நமது நாட்டுக்காக நீ ஏதாவது மனதார செய்ய நீ ஆசைப்பட்டால் அங்கு இரு.. இல்லை என்றால் சர்வேஷ் ஸ்வரூபனிடம் நான் பேசுகிறேன்.. நீ இங்கு ஒழுங்காக வந்து சேர்..”, என்றார் கடுமையாக..

இதுவரை நந்தன் அவளிடம் கடுமையாக ஒரு வார்த்தை கூட உதிர்த்ததில்லை.. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ்..

அழுகைப் பொத்துக்கொண்டு வந்தது வசிஷ்ட்ராவிற்கு.. கஷ்டப்பட்டு அதை அடக்கியவள், “என் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையா ப்பா..??”, நம்பிக்கையில் அழுத்தம் கொடுத்து..

“நம்பிக்கை..??”, அவளைவிட சற்று அழுத்தம் கொடுத்து அவ்வார்தையைச் சொன்ன நந்தன், “இருந்தது வசிஷ்டரா.. நேற்று வரை.. நாளையில் இருந்து என் பிள்ளை தனது இலட்சியத்திற்காக முதல் அடி வைத்துவிடுவாள் என்று கடந்து போன ஓராண்டு தினமும் நம்பினேன்.. ஆனால் அதை நீ பொய்யாக்கி விடுவாயோ என்று எனக்கு இப்பொழுது கொஞ்சம்.. கொஞ்சம் என்ன ரொம்பவே பயமாக இருக்கிறது..”, என்றார்..

“ப்பா..??”, இப்பொழுது லேசான அழுகைடன்..

“எனக்கு உன் நிலமை புரியவில்லை என்றா நினைக்கிறாய்.. நீ எங்களை விட்டு பிரிந்திருப்பது தான் நீ செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு காரியத்திற்கு பின் இருக்கிறது என்று தெரியாமல் இல்லை..”, என்று நிறுத்தியவர், “சில விஷயங்களை சில வெற்றிகளை நாம் அடையவேண்டும் என்றால் நாம் சிலவற்றை இழந்துதான் ஆக வேண்டும்.. உன்னை நாங்கள் பார்க்காமல் இருப்பது எங்களுக்கும் மிகுந்த வலிதான்.. ஆனால் அந்த வலியையே நாம் நினைத்துக்கொண்டிருந்தால் காலங்கள் ஓடிப்போகும்.. ஆனால் நீ மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே நின்றுகொண்டிருப்பாய்.. உன்னைத் தாண்டி அனைவரும் சென்ருப்பர்.. இங்க பாரு வசீ எதுவாக இருந்தாலும் நீ தான் தீர்மானிக்க வேண்டும்.. நின்ற இடத்திலேயே நிற்கப்போகிறாயா..?? அல்லது வலிகளை உடைத்து முன்னேறப் போகிறாயா என்று.. எல்லாம் உன் கையில் தான்..”, என்று நீண்ட அறிவுரை வழங்கியவர் அவள் பதில் பேசும் முன்னே போனை வைத்துவிட்டார்..

இரவு முழுதும் யோசித்தவள் முன்னேறத் தயாராகிவிட்டாள்..

ட்டென நீர்த்துளிகள் முகத்தில் பட்டுத் தெறிக்க முன்தினம் நந்தனுடன் நடந்த உரையாடலில் இருந்து வெளிவந்தவள் சாய்யை அங்கு கண்டதும் சிறுப் புன்னகையுடன், “குட் மார்னிங் அண்ணா..”, என்றாள்..

“ஐயோ.. லேசாக நெஞ்சுவலிப்பது போல் இருக்குதே..”, கூவியது சாயின் மனது..

அண்ணா என்று தன்னை அவள் அழைத்துவிட்டாலே என்பதற்கு அல்ல வசிஷ்டரா புன்னகைத்ததற்கு..

இதுவரை அவள் புன்னகைப் புரிந்து யாரும் அங்கு பார்த்ததில்லை..

அவனது ரியாக்ஷன்ஸைப் பார்த்துக்கொண்டிருந்தவள், “என்னண்ணா..?? லேசா நெஞ்சு வலிக்குது போல..??”, கண்சிமிட்டியபடியே..

பேயென்று முழித்தவன் சத்தமா பேசிவிட்டோமோ என்று மனதில் நினைத்தாலும் சமாளித்துக்கொண்டு, “இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட போல..??”, என்று கேட்டான்..

அவன் மனதில் நினைத்ததை வசீ படித்த போதிலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “எப்பொழுதுமே சீக்கிரம் எழுந்துவிடுவேன் அண்ணா..”, என்றாள்..

“அப்புறம் ஏன் நீ ட்ரைனிங்குக்கு சரியா வருவதில்லை..??”, கேட்டுவிட்டு லேசாக தன் உள்க்கன்னதைக் கடித்துக்கொண்டான் தான் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டோமோ என்ற சந்தேகத்தில்..

வசிஷ்டராவிற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை போல, “இன்று முதல் வருவேன் அண்ணா..”, என்றவள் ஆத்யா அபித் அத்வைத் மூவரும் வருவது கண்டு எழுந்தவள், “எல்லாரும் வந்துட்டாங்க.. நானும் போவோம்..”, என்றாள் சாயிடம்..

சிஷ்டரா உடற்பயிற்சி செய்யவந்ததைக் கண்டு ஆத்யாவும் அபித்தும் சிறு ஆச்சர்யத்துடன் பார்க்க அத்வைத்தோ இது எத்தனை நாளைக்கோ என்பது போல் ரியாக்ஷன் கொடுத்தான்..

த்ரெட் மில்லில் அனைவரும் ஓட ஆரம்பிக்க பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்த பரத் வசியைக் கண்டதும் அத்வைத்தைப் போலவே இது எத்தனை நாளைக்கு என்பது போல் பார்த்துவைத்தான்..

இருபது நிமிடத்திற்கு பிறகு அனைவரும் த்ரெட் மில்லில் இருந்த இறங்க பரத் அனைவரையும் நோக்கி, “இன்று நாம் மவுண்ட்டெயின் க்ளைம்பிங் (mountain climbing) செய்யப்போகிறோம்..”, என்றவன் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த சிறு மலை போன்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான்..

சேப்ட்டிக்காக பெல்ட்டுகளை அணியச் சொன்னவன் எப்படி ஏறுவது என்று அனைவருக்கும் டெமோ கொடுத்தான்..

தனித்தனியாக ஒருவரின் பின் ஒருவர் ஏறத்துவங்கினர்..

முதலில் மேலே ஏறிய அப்த் பிடிக்கிட்டாமல் இரண்டு தடவை அங்கும் இங்கும் இடித்துக்கொண்டு இரண்டு மூன்று சிராய்ப்புகளுடன் தப்பித் தப்பி மேலே ஏறுவதற்குள் திணறிப்போனான்..

அவன் பின்னால் சென்ற மூவருக்குமே அதே நிலை தான்.. குறைந்தபட்சம் ஒரு இடத்திலாவது இடித்துத் தடுமாறித்தான் போனார்கள்..

வசிஷ்ட்ராவின் முறை அது..

அதிகபட்ச சிராய்ப்புகள் ஏறப்போவது வசிஷ்டரா என்று அனைவரும் நினைத்திருக்க அவள் ஏதோ வாக்கிங் செல்வது போல் பரத் எடுத்த நேரத்தைவிட குறைவான நேரத்திற்குள் மேலே ஏறிவிட்டாள்..

கைகளில் ஒட்டியிருந்த தூசியைத் தட்டியவள் அனைவரும் தன்னையே நோக்கிக்கொண்டிருப்பது கண்டு, “என்னாச்சு..??”, என்று கேட்டாள்..

“உனக்கு முன்னாடியே இந்த மவுண்ட்டெயின் க்ளைம்பிங் செய்து பழக்கம் இருக்கா..??”, முதல்முறையாக வசியிடம் பொறுமையாகவும் ஆச்சர்யமாகவும் கேள்வி கேட்டான் அத்வைத்..

“இல்லை அத்வைத்.. இதுதான் முதல்முறை..”

“முதல்முறையா..??”, என்று ஆச்சர்யப்பட்ட பரத், “நீ ஏறுவதைப் பார்க்கும்பொழுது அப்படித் தெரியவே இல்லை..”, வெளிப்படையாகவே..

“நீங்கள் கிளைம்ப் செய்த போது செய்த மிஸ்டேக்ஸ்ஸை நோட் பண்ணேன் பரத்.. நான் ஏறும் பொழுது அவற்றை செய்யமால் ஏறினேன்..”, தட்ஸ் ஆல் என்பது போல் தோளைக் குலுக்கியவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது போல் பரத்தைப் பார்த்து வைத்தாள்..

அன்றைய நாள் முழுவதும் அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துக்கொண்டிருந்தாள் வசிஷ்டரா..

அவளை கம்பேர் செய்யும் பொழுது தாங்கள் நால்வரும் கடந்த ஒரு வருடமாக கற்றுக்கொண்டது ஒன்றும் இல்லையென்றே தோன்றியது அனைவருக்கும்..

நித்தமும் அதுவே தொடர வருடம் இரண்டாயிரத்தி அறுநூற்றி எழுபத்தி ஐந்தைத் (2675) தொட்டது..

லக நாடுகள் அனைத்தையும் முந்திக்கொண்டு விண்ணில் INSVAP – XII (INSVAP – I ன் upgraded version) ஐந்து மனிதர்களுடன் ஆல்பா ப்ராக்ஸிமாவிற்கு பயனிக்கப்போகிறது..

உலகின் எல்லா மூளையிலும் அது தான் ஹாட் நியூஸ்..

சில நாட்டு அரசாங்கத்திற்கு இந்த நியூஸ் வயிற்றில் புகைமூட்டத்தை கிளப்பினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உதட்டில் சிரிப்பை ஓட்டவைதுக்கொண்டனர்..

எங்கு பார்த்தாலும் சர்வேஷ் ஸ்வரூபனின் புகைப்படத்துடன் ஆல்பா ப்ராக்ஸிமா செல்லும் ஐவரின் புகைப்படங்களே நிரம்பிவழிந்தன..
 
Messages
154
Likes
441
Points
52
Location
coimbatore
#2
ஆல்பா ப்ராக்ஸிமாவிற்கு புறப்படுவதற்கு பதினைந்து நாட்கள் முன்பு..

ஸ்ரீயும் நந்தனும் வசியைப் பார்க்க வந்திருந்தனர்.. இருவரும் தளர்ந்து போய் காணப்பட்டிருந்தனர்..

வசியைக் கண்டதும் இருவரும் அணைத்துக்கொள்ள லேசாக கண்ணீர் துளிர்த்தது அவளுக்கு..

மூவரும் அணைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் வசியுடன் வந்த சாய்க்கும் கண்களில் நீர்த்துளி..

அதனைக் கண்டுகொண்ட நந்தன் வசியை விட்டுவிட்டு சாய்யை அணைத்துக்கொண்டான்..

எப்பொழுதும் போல் தந்தையின் செயலில் ஒரு விதப்பெருமை அடைந்த வசிக்கு சாய்யைப் பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது..

ஆம், சாய்யின் தாயும் தந்தையும் இரண்டு மாதத்திற்கு முன் ஒரு வார இடைவெளியில் இறந்திருக்க தளர்ந்து போய் இருந்தவனுக்கு ஒரு மாற்றம் தருவதற்காக தனது பெற்றவர்களிடம் அழைத்து வந்திருந்தாள் வசீ..

நலவிசாரிப்பிற்கு பிறகு வசியிடம், “கிருஷ்.. உன்னிடம் பேசினானா வசீ..??”, என்று கேட்டார் ஸ்ரீ..

“போன மாசம் பேசினான் அம்மா.. பிடித்த வேலை நன்றாக இருக்கிறது என்றான்..”, என்றாள் பெறும்மூச்சிட்டபடியே..

“எங்களிடம் பேசி இரண்டு மாதமாகிறகு கண்ணா..”, என்றார் ஸ்ரீ தழுதழுத்தபடியே..

அவரை எப்படி சமாதானப் படுத்துவது என்றே தெரியவில்லை வசிஷ்ட்ராவிற்கு.. எல்லாம் இந்த கிருஷ்ஷினால் வந்தது என்று பல்லைக்கடிக்க மட்டுமே முடிந்தது அவளால்..

கிருஷ்.. கிருஷ் தாய் மண்ணை விட்டு சென்று வருடம் மூன்றை கடந்து விட்டது.. மேற்படிப்புக்கென அங்கு சென்றவன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டான்..

அங்கு சென்றபிறகு ஒருமுறைக்கூட இங்கு வராதது மூவருக்குள்ளும் ஒரு வகை இறுக்கத்தைக் கொடுத்திருந்தது அவன் மேல்..

மேலும் மேலும் அவனைப் பற்றி மனதைக் கீறவேண்டாம் என்று நினைத்த வசீ, “ம்மா.. நான் இன்னும் பதினைந்து நாளில் கிளம்புகிறேன்.. உங்களை எப்போ பார்ப்பேன் என்று தெரியவில்லை..”, என்றாள் கொஞ்சம் சோர்வாக..

“நாங்கள் உயிருடன் இருந்தால் பார்க்கலாம் வசீ..”, சன்ன சிரிப்புடன் சொன்னார் நந்தன்..

“ப்பா..”, கலக்கத்துடன் வெளிவந்தது வசியின் குரல்..

“பூமியின் நிதர்சனம் அதுதான் வசீ.. இங்கு எவரும் ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்களைக் கடந்து உயிருடன் வாழ்வதில்லை..”, என்றார் ஸ்ரீ..

“அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் ம்மா.. நீங்கள் இன்னும் நூறு வருஷம் நன்றாக இருப்பீர்கள்..”, கரகரப்பாக வெளிவந்தது வசியின் குரல்..

“அப்படி வாழ்ந்தால் கின்னஸ் புக்கில் எங்கள் பெயரைப் பார்க்கலாம் வசீ..”, என்று அவளது தலையைப் பிடித்து அசைத்த நந்தன், “இங்கு பாரு வசீ.. ஒரு மனிதனின் பெற்றோர் என்பவர்கள் டெம்ப்ரவரி தான்.. நன்றாக மனதில் நிறுத்திக்கொள்.. நீ திரும்பி வரும்வரை நாங்கள் இருப்போம்மா என்று தெரியாது.. ஏன் நாளையே கூட எங்களுக்கு எது வேண்டும் என்றாலும் நிகழலாம்..”

“ப்பா..”

“ப்ச் வசீ.. முழுதாக கேள்..”, மனது கலங்கினாலும் நிதர்சனத்தை அவள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, “நான் சொல்வது எதார்த்தம் வசீ.. எங்களுக்கும் வயது ஐம்பதைக் கடந்து விட்டது.. எது வேண்டும் என்றாலும் எப்பொழுது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.. ஆனால் அதை நீ மனம் தளராது ஏற்றுக்கொள்ள வேண்டும்.. கிருஷ்ஷைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.. அவன் அவன் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வான்.. நாங்கள் இறந்தால் அவனிடமிருந்து ஒரு இரங்கல் செய்தி மட்டுமே வரும்.. அதுவே இந்தக்காலத்தில் பெரிது தான்.. ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டோம்.. எங்களுக்கு உன்னை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது..”, என்றார்..

அவரது ஒவ்வொரு சொல்லும் மனதை அறுக்க அவரைக்கட்டிக்கொண்டு அழத்துவங்கினாள் வசீ..

ஸ்ரீயும் நந்தனும் அவளது தலையைத் தடவி அவளை எப்படி எப்படியோ பேசி சமாளித்து சாய்யிடம் ஒப்படைத்தனர்.. அவன் அவளைப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில்..

ஒரு வாரம் நத்தையாக கடந்திருக்க எட்டு நாட்களே இருந்த நிலையில் ஸ்ரீயும் நந்தனும் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தடைந்தது வசிக்கு..

உடைந்து தான் போனாள் அவள்.. சாய்யும் மற்றவர்களும் அவளை சமாதானப் படுத்த முயற்சிக்க அனைத்துமே தோல்வியில்..

சர்வேஷ் தான் அவளை பெற்றவர்கள் இருவரின் உடல் தகனத்திற்கு அழைத்துச் சென்றார்..

எல்லாம் முடிந்த பிறகு கிருஷ்ஷிடமிருந்து நந்தன் எதிர்பார்த்தது போல் வந்து சேர்ந்தது இரங்கல் அட்டை ஒன்று.. அதை வெறித்துப்பார்த்தவளுக்கு எல்லாம் வெறுத்துப் போயிற்று..

அந்த அட்டை கிருஷ்ஷிற்கும் வசிக்கும் நடுவில் இருந்த இரு பாலங்கள் உடைந்து போனதற்கு சாட்சியாய்..

நாட்கள் அதன் பாட்டில் கடக்க INSVAP – XII (INSVAP – I ன் upgraded version) விண்ணில் பறந்திருந்தது..

பூமியைத் தாண்டி அந்த இராட்சச விண்கப்பல் சில மைல் கடந்த போது அதை இயக்கிக்கொண்டிருந்த வசிஷ்டராவிற்கு தனக்கும் இந்த பூமிக்குமே பந்தம் இல்லாமல் போன உணர்வு..

-தேடலாம்..
 
Messages
4,877
Likes
7,963
Points
253
Location
madurai
#3
intha ulagathil vasikaga iruntha rendu sonthamum marainthu vittathu...............ippove foreignla settle aayirka familys skype& whatsup il mattum than pasathai valarkaranga......... appo 2675il krish mathiri than irukum. superb epi sis
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top