• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Thedum nyaanam vignyaanam aayinum 24

Messages
154
Likes
441
Points
52
Location
coimbatore
#1
இடம் : புலரி வனம்..

திரவன் குட் மார்னிங் சொல்வதற்கு முன்பே ஸ்டிட்டியுடன் (விபுவின் விண்வெளி வாகனம்) வீட்டிற்கு வந்த விபு வீட்டு வாசலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு, “வசீ.. வசீ..”, என்று கத்தினான்..

அப்பொழுது தான் எழுந்தவள் அன்று விடுமுறை நாள் என்பதால் விலாசி வீட்டில் இருப்பார் என்று கணித்து அவரைக் காண அவரது இல்லைம் செல்லலாம் என்று கிளம்பியிருந்தவள் விபுவின் குரல்க் கேட்டு அங்கு விரைந்தாள்..

வசி கிளம்பி நிற்பதுக் கண்டு, “கிளம்பித்தான் இருக்கியா நீ.. போகலாம் வா..”, என்றான் விபு மொட்டையாக..

திடீரென்று ஸ்டிட்டியுடன் வந்து போகலாம் என்றவனைப் பார்த்த வசீ அவனும் விலாசியின் வீட்டிற்கு தன்னுடன் வருகிறான் என்று நினைத்துக்கொண்டு, “விலாசி எல்லோன் வீட்டுக்கு ஸ்டிட்டி எதற்கு..??”, என்று கேட்டாள்..

“நாம் இப்பொழுது விலாசி எல்லோனின் வீட்டிற்குப் போகவில்லை வசீ..”, என்றான்..

“என்னண்ணா சொல்ற..?? விலாசி எல்லோன் வீட்டிற்கு போகவில்லை என்றால் வேறு எங்கு செல்கிறோம்..??”, என்றபடி அவனைப் புரியாமல் பார்த்தவள் ஸ்டிட்டியின் அருகே வந்து அதைத் தடவிக்கொடுத்தாள்..

“அது உனக்கு ஒரு..”, நெற்றியை சற்று தேய்த்துக்கொண்டவன், “ஹான்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் (surprise)..”, என்றான் அவளைப் பார்த்து ஒரு மர்மப்புன்னகையுடன்..

(மிளிரும் விபுவும் வசியிடமிருந்து ஆங்கிலம் பயின்றுகொண்டிருக்கிறார்கள்.. :p)

“பாருடா.. துறை இங்கிலீஸ் எல்லாம் பேசுது..”, என்று கிண்டலடித்தவளை முறைத்தபடி நின்றான் விபு..

அவனைப் பார்த்து லேசாக சிரித்த வசீ, “அப்பாட்டையும் அம்மாட்டையும் சொல்லனுமே விபுண்ணா..”, என்றாள்..

“சொல்லிட்டு வா..”, என்றவன் ஸ்டிட்டியில் லேசாக சாயப்போனான்..

“ண்ணா.. அப்பாவும் அம்மாவும் நீ வெளிய போனவுடனே கிளம்பிட்டாங்க..”

“ஓ.. அப்படியா..”, என்று கொஞ்சம் யோசித்தவன், “நான் சொல்லிக்கறேன் அவங்கக்கிட்ட.. நீ வீட்டை சாத்திவிட்டு வா.. போகலாம்..”, என்றான்..

ஸ்டிட்டி வானை நோக்கி மேல மெல்ல மெல்ல பறக்க ஆரம்பிக்க வசிக்கு கீழே விழப்போகும் உணர்வு..

விபுவின் தோளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், “விபு மெதுவா.. நான் விழுந்திடப்போறேன்..”, என்றாள் சிறு பயத்துடனே..

“அதெல்லாம் விழமாட்டாய் வசீ..”, என்ற விபு, “முதல் முறையாக இதில் பயனிக்கிறாய் அல்லவா அதுதான் உனக்கு அதுபோல் தோன்றுகிறது..”, என்றவன் பொழில் கிரகத்தின் படலத்தின் அருகில் அடுத்திருந்தான்..

“விபு அண்ணா.. விண்வெளியில் தான் ஆக்ஸிஜன் அதான் பிராணவாய்வு இருக்காதே பிறகு எப்படி விண்வெளியில் பயணிப்பது..??”

“ஸ்டிட்டி ஒரு தானியங்கி வாகனம் வசீ.. எந்த இடத்திற்கு போக வேண்டும் என்று இதில் பதிவு செய்துவிட்டால் இதுவே நம்மை அங்கு அழைத்துச் சென்று விடும்.. ஸ்டிட்டியின் தலைப்பகுதியின் நுனி விண்வெளியைத் தொட்ட அடுத்த நொடி தானாகவே குடை போல் ஒன்று தோன்றும் ஸ்டிட்டியின் பின் பகுதியில் இருந்து வெளிப்படும்.. இதுபோல்..”, என்றவன் விண்வெளியை அப்பொழுது தான் தொட்டிருந்த ஸ்டிட்டியின் பின்பகுதியில் இருந்து தோன்றிய குடை போன்ற ஒன்றைக் காட்டினான்..

அந்தக் குடை மெதுமெதுவாக ஸ்டிட்டியை மூடியது..

“வாவ்.. சூப்பர் அண்ணா.. பூமியிலும் இது போல் வாகனங்கள் உள்ளது.. ஆனால் அதுவெல்லாம் நிலத்தில் பயணிக்க உபயோகப்படுவது..”, என்றாள்..

“சொல்லிருயிருக்கிராய் வசீ..”, என்றவன், “இந்தக் குடை ஸ்டிட்டியை மூடியவதும் பின்னால் பந்து போல் இருக்கிறதல்லவா ஒரு இயந்திரம்.. அது தானாக செயற்கையாக பிராணவாய்வை உருவாக்கும்..”, என்றவன் வசீ ஏதோ யோசனைக்குப் போய்விட்டது கண்டு என்னவென்று கேட்டான்..

“அது ஒன்னும் இல்லை அண்ணா.. இங்கே விண்வெளிக்கு வரும்பொழுது தான் நாம் செயற்கை சுவாசத்தைப் பயன்படுத்துகிறோம்.. ஆனால் பூமியில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே செயற்கை சுவாசத்துடன் தான் வரமுடியும்.. பாவம் அவர்கள்..”, பரிதாபம் தான் அதில் மேலோங்கி இருந்தது..

“வசீ.. அது பூமியில் வாழ்ந்த முன்னோர்களின் தவறு என்றே நான் சொல்லுவேன்..”

“அதென்னவோ சரி தான் அண்ணா.. இங்கு ஒரு சென்ட் நிலத்தின் வளத்தை அழித்தால் அவர்களை ஆயிரம் மரம் வளர்க்கச் சொல்லி ஆணையிடுகிறது அரசு.. ஆனால் அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசே மக்களிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளது..”, என்றாள் சலிப்பாக..

“அதை விடு வசீ..”, என்ற விபு ஸ்டிட்டியின் ஸ்பீடை (speed) சற்றே குறைத்து வலது புறத்தில் இருந்த ஓரிடத்தை நோக்கி கைநீட்டி, “அங்கு ஏதாவது உனக்குத் தெரியுதான்னு பாரு வசீ..??”, என்றான்..

அவன் காட்டிய திசையில் பொழிலைப் போன்று வேறொரு கோள் இருக்க கண்களை அகல விரித்தவள், “இது தான் அந்த கிரகமா..??”, ஆச்சர்யமாக..

“எந்த கிரகம்..??”

“நமது பொழிலைப் போல் மற்றொரு கிரகம்.. அன்று சொன்னாயே பீது வனத்தை மூடிவிட்டு அருகே இருக்கும் கிரகத்தில் ஆராய்ச்சிக் கூடத்தை புதிதாகத் துவங்கியிருக்கிரார்கள் என்று.. அதுவும் இல்லாமல் அம்மா இங்கு தான் வேலை செய்கிறார்கள்..”

“அதே கிரகம் தான்.. இதன் பெயர் மாலி..”

“தெரியும் ண்ணா.. அம்மா சொன்னாங்க.. அங்கு தான் நாம் செல்லப்போகிறோமா..?? இது தான் நீ எனக்கு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்ஸா..??”, சற்று உற்சாகமாகவே கேட்டாள் வசீ..

லேசாக சிரித்த விபு, “அங்கு செல்லப்போகிறோம் தான் நாம்.. ஆனால் சர்ப்ரைஸ் அதுவல்ல..”, என்றான் அவளை குழப்பியடி ஒரு நமட்டுச் சிரிப்புடன்..

விபுவின் தோளில் லேசாக அடித்த வசீ அண்ணா சொல்லுண்ணா என்றாள் சிணுங்கலாக..

“ஒரு பத்து நிமிஷம் காத்திரு தங்கச்சி.. தானா என்னனு தெரியப்போகுது..”

முகத்தை லேசாகத் தூக்கிவைத்துக்கொண்டவள் விபுவை முறைத்தபடியே வந்தாள்..
 
Messages
154
Likes
441
Points
52
Location
coimbatore
#2
இடம் : மாலி கிரகம்..

ஸ்டிட்டி தரையிறங்கத் துவங்க மாலி கிரகத்தைக் கண்டு அசந்து தான் போனாள் வசிஷ்டரா..

பெரியதொரு அடர்ந்த காட்டின் நடுவே ஹை டெக் கட்டிடங்கள் கட்டியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது மாலி வனம்..

தன்னைச் சுற்றியிருந்த இடங்களை பேவெனப் பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னை நோக்கி திருஷ்டி வருவது கண்டு ம்மா என்று அவரை நோக்கி விரைந்தாள்..

வசியின் கண்களில் தெரிந்த பளபளப்பைக் கண்ட திருஷ்டி, “என்ன பாப்பா.. இந்த இடம் பிடிச்சிருக்கா உனக்கு..??”, என்று கேட்டார்..

“ரொம்ப..”, அழுத்தமாக அவளிடமிருந்து பதில் வந்தது..

அவளது தலையை லேசாக கலைத்துவிட்டவர், “வா உள்ளே போகலாம்..”, என்றார்..

சரியென்பது போல் தலையசைதவள், “அண்ணா..”, என்று சற்று தூரத்தில் ஸ்டிட்டியை நின்றுகொண்டிருந்த விபுவை அழைத்தாள்..

“வந்துட்டேன் வசீ..”, என்றவன் இருவரிடமும் பொதுவாக, “ஒரு சின்ன வேலை.. இப்போ வந்திடறேன்..”, என்றுவிட்டு அவசரமாக எங்கோ சென்றான்..

“இவன் எங்கே போறான்..??”, என்றபடி அவனைப் பார்த்த திருஷ்டி லேசாக தன் தோள்களைக் குலுக்கிவிட்டு, “நீ வா வசீ.. நான் வேலை செய்யும் இடத்தை நீ பார்க்கவேண்டாமா..”, என்றபடி அவளை அழைத்துக்கொண்டு ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்தார்..

பீது வனத்தில் இருந்தது போலவே இங்கும் விதவிதமான விண்வெளிக்கப்பல்கள் ஒரு பெரிய டவுன் பஸ் ஸ்டாண்டில் உள்ளது போல் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது..

கண்கள் தெறித்துவிடும் போல் இருந்தது வசிக்கு.. இது தான் முதல் முறை வசிக்கு.. இவ்வளவு கப்பல்களை ஒரே இடத்தில் பார்ப்பது..

பூமியிலும் விண்வெளிக்கப்பல்கள் தயாரிக்கிறார்கள் தான்.. ஆனால் இது போல் வண்டிவண்டியாக அல்ல.. வருடத்திற்கு நான்கோ ஐந்து.. அவ்வளவு தான்..

திருஷ்டியிடம், “ம்மா.. பீது வனத்தில் நிறுத்தப்பட்டிருந்த விண்வெளிக்கப்பல்களைக் காட்டிலும் இங்கு நூறு மடங்கு இருக்கும் போலவே..??”, கிசுகிசுப்பாக..

“ஆமாம் வசீ.. பூமியில் இருந்து நீங்கள் வந்த விண்வெளிக்கப்பல் கூட இங்கு தான் இருக்கிறது..”

“அப்படியா..??”, என்று சிறிது ஆச்சர்யப்பட்டவள், “எங்கேமா அது..??”, என்று கேட்டாள்..

“அது வேறு ஒரு தளத்தில் வைத்திருக்கிறார்கள்..”, என்ற திருஷ்டி, “நீ அரண் நிருமலியைப் பார்க்கவேண்டாமா..??”, என்று கேட்டார்..

“அவங்க இரண்டு பேரும் இங்கேயா இருக்கிறார்கள்..??”

“ஆமாம் வசீ.. மூன்று மாதம் தொடர்ந்து இடைவேளை இல்லாமல் அவர்களுக்கு வேலை இங்கே.. நீ பொழிலுக்கு வருவதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு தான் இங்கே வந்தார்கள்..”, என்றவர், “நீ பொழில் வந்தது அறிந்ததிலிருந்து இருவரும் உன்னைப் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.. அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குப் போகலாம் வா..”, என்றவர் அவளை அழைத்துக்கோடு வீடுகள் இருக்கும் பகுதி நோக்கி அழைத்துச் சென்றார்..

ரண் மற்றும் நிருமலியுடன் மயூரனும் இருக்க மூவரையும் ஒரே நேரத்தில் பார்த்த வசிக்கு ஒரே கொண்டாட்டம்..

பழைய கதைகள் புதிய கதைகள் என எல்லாக் கதைகளையும் அவர்கள் பேசி முடித்திருக்க அங்கு வந்து சேர்ந்தான் விபு..

“அண்ணா.. எங்கண்ணா போனே இவ்வளவு நேரம்..??”, அவன் வந்ததுமே கேள்விகள் கேட்கத் துவங்கியிருந்தாள் அவன் தங்கை..

“உனக்கு சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்யத்தான்..”, என்றவனை கொலைவெறியுடன் பார்த்து வைத்தாள் வசிஷ்டரா..

அதில் லேசாக மனதில் உதறல் எடுத்தது விபுவிற்கு.. எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு அவளிடமிருந்து வாங்கிய இடியின் (அடி) நியாபகம்..

“என்ன அண்ணாவும் தங்கச்சியும் ஒரே பாசமழை பொழியறீங்க..??”, வசியின் முறைப்பைப் பார்த்து ஒரு நமட்டு சிரிப்புடன் இருவரையும் பார்த்துக் கேட்டான் மயூரன்..

“எல்லாம் அவள் என் மீது வைத்திருக்கும் அதீத பாசம்..”, என்று பல்லைக் கடித்துக்கொண்டு மயூரனிடம் முனுமுனுத்தான் விபு..

மேலும் சிரிப்பு பொங்க, “என்னாச்சு வசீ..??”, என்று கேட்டான் மயூரன்..

“இவன் எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று இங்கு அழைத்து வந்தான்.. ஆனால் இங்கு வந்ததற்கு பிறகு அதுப்பற்றி ஒன்றுமே சொல்லமாட்டேங்கறான்..”, கம்ப்ளைன்டாக..

“இப்போ உன்னை ஆச்சர்யப்படுத்த (surprise) வேண்டும்.. அவ்வளவு தானே..??”, என்று கேட்டான் மயூரன்..

ஆம் என்று தலையசைப்பு வசியிடமிருந்து..

“உனக்குப் பிடித்த வேலையை உனக்காக உன் அண்ணன் ஏற்பாடு செய்திருக்கிறான்..”

“எனக்கு பிடித்த வேலையா..??”, கண்களில் நிறம் மாறியது வசிக்கு..

“ஹ்ம்.. உனக்குப் பிடித்த வேலை தான்.. விண்வெளியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் வேலை.. அதுவும் இங்கே இந்த மாலி கிரகத்தில்..”

உண்மையிலேயே ஆச்சர்யமாகத் தான் இருந்தது வசிக்கு.. இது எப்படி சாத்தியம் என்று.. அதையே விபுவிடம் கேட்கவும் செய்தாள்..

“ஒன்னும் அதிசயம் எல்லாம் இல்லை வசீ.. உனது திறமையைப் பற்றி நீ வந்த அன்றே அனைவருக்கும் தெரியும்.. உன்னுடன் வந்த பூமிவாசிகளிடமிருந்து உன்னைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொண்டோம்.. நீ பூமியில் என்ன செய்துகொண்டிருந்தாய் என்ன படித்திருக்கிறாய் என்பது போல்.. அரசிடம் பேசி உனக்கு தகுதியான ஒரு வேலையும் ஏற்பாடு செய்துவிட்டாச்சு இப்பொழுது.. எல்லாம் விலாசி எல்லோனின் ஏற்பாடு தான்..”, என்றான் விபு..

உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருந்தது வசிக்கு.. விபுவை அணைத்துக்கொண்டு அதை வெளிப்படுதியவள், “தேங்க்ஸ் அண்ணா..”, என்றவள், “எப்பொழுது வேலையில் சேரவேண்டும்..??”, என்று கேட்டாள்..

“நீ காப்புவளையம் அணிந்த பிறகு..”, நிருமலியிடமிருந்து பதில் வந்தது..

“அது சிறு வயதில் தானே அணிவிப்பார்கள்..??”, புரியாது வந்து விழுந்தது கேள்வி..

“உனக்கு அது இன்னும் அணிவிக்கப்படவில்லை அல்லவா.. அதை நீ அணிந்தபிறகே உன்னை இங்கு அனுமதிப்பார்கள் நீ வேலை செய்ய..”

“நான் காப்பு அணிவதற்கும் இங்கு வேலை செய்வதற்கும் என்ன சம்மந்தம் எல்லோன்..??”, வழக்கம் போலவே கேள்வி பிறந்தது வசியிடமிருந்து..

“வசீ.. உன்னுடைய எண்ண அலைகளுடன் இப்பொழுது உன் இரதபந்தங்களுடன் மட்டுமே உன்னால் தொடர்புகொள்ள முடியும்.. ஆனால் காப்பு அணிந்த பிறகு உன்னால் யாரை வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.. அதே போல் மற்றவர்களாலும் உன்னை தொடர்புகொள்ள முடியும்.. அது மட்டும் இல்லாமல் அந்தக் காப்பு உனக்கு ஒரு பாதுகாப்பு போல்.. நீ ஆபத்தில் மாட்டிக்கொண்டால் அதைவைத்து உன்னை எங்களால் காக்க இயலும்.. அரசால் நீ செல்லும் இடம் நீ நினைப்பது என்று சிலவற்றை தெரிந்துகொள்ள முடியும்..”, என்றார் விளக்காமாக..

-தேடலாம்..
 
Messages
4,877
Likes
7,963
Points
253
Location
madurai
#3
studi nalla karpanai. nice epi sis.
வசீ.. உன்னுடைய எண்ண அலைகளுடன் இப்பொழுது உன் இரதபந்தங்களுடன் மட்டுமே உன்னால் தொடர்புகொள்ள முடியும்.. ஆனால் காப்பு அணிந்த பிறகு உன்னால் யாரை வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.. அதே போல் மற்றவர்களாலும் உன்னை தொடர்புகொள்ள முடியும்.. அது மட்டும் இல்லாமல் அந்தக் காப்பு உனக்கு ஒரு பாதுகாப்பு போல்.. நீ ஆபத்தில் மாட்டிக்கொண்டால் அதைவைத்து உன்னை எங்களால் காக்க இயலும்.. அரசால் நீ செல்லும் இடம் நீ நினைப்பது என்று சிலவற்றை தெரிந்துகொள்ள முடியும்..”, என்றார் விளக்காமாக..
(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)wow sis total epi nalla narration:love::love::love::love:(y)(y)(y)
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top