• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : புலரி வனம்..

மாலி கிரகம் சென்று வந்த மூன்று நாட்கள் கடந்திருந்து..

வசிஷ்டரா இந்த மூன்று நாட்களாக எப்பொழுதும் மனதில் பல கேள்விகளுடனும் ஆயிரம் யோசனைகளுடனும் அலைந்துகொண்டிருந்தாள்..

திருஷ்டி முதள் விலாசி வரை அவளிடம் என்ன ஆயிற்று என்று கேட்டுவிட்டனர்..

அனைவருக்கும் அவள் அளித்த பதில் மௌனம்.. மௌனம்.. மௌனம் மட்டுமே..

அன்றும் அப்படித்தான்.. இரவு உணவிற்காய் ரொட்டி சுட்டிக்கொண்டிருந்தார் ஆதி..

மாவு தேய்த்துக்கொண்டிருந்தவள் திடீரென தன்னுள் யோசனையில் மூழ்கி தேய்த்து வைத்திருந்த மாவை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து அதனித் தேய்த்து அமீபா (amoeba) ஷேப்பிற்கு மாற்றிக்கொண்டிருந்தாள்..

அவள் செய்துகொண்டிருப்பதைப் பார்த்த ஆதி, “வசீ..”, என்றார் அதட்டலாக..

திடுக்கிட்டு அவரைப் பார்த்த வசீ, “என்னப்பா என்னாச்சு..??”, புரியாதவளாக அவர் அதட்டலில் சற்றே பயந்து....

“அதைத்தான் நான் நானும் கேக்கறேன் வசீ..?? என்னாச்சு உனக்கு..??”

“என்னாச்சு எனக்கு..??”, இப்பொழுது திறுதிறுவென முழித்தவளாய்..

“உனக்கு ஒன்னும் ஆகல.. ஆனால் நீ தேச்சிட்டு இருக்க ரொட்டி மாவைப் பாரு..”, என்றவர், “நானே தேய்த்து வைக்கிறேன்.. நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடு..”, என்று அவளை இடத்தை காலி செய்யவைத்தார்..

தன்னைத் தானே திட்டிக்கொண்டே வீட்டின் பின்னால் இருக்கும் ஓடைக்கு வந்தவள் அதன் படிகளில் அமர்ந்துகொண்டாள்..

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தன் பின்னால் யாரோ வந்து நிற்பதுபோல் இருக்க மெதுவாகத் திரும்பிப்பார்த்தாள்..

கைகளைக் கட்டிக்கொண்டு தன்னை பார்த்துக்கொண்டிருந்த விபுவை திடீரென்று அங்கு எதிர்பார்க்காதவளாக, “அண்ணா.. நீங்க எங்கே இங்க இந்நேரத்தில்..??”, என்று கேட்டாள்..

அவளுக்கு பதில் அளிக்காமல் அவளைப்போலவே ஓடையில் கால் நனைத்தபடி சற்று தள்ளி அமர்ந்தான் விபு..

வசீ தன் பதிலுக்காகத் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், “இதேக் கேள்வியை நானும் உன்னிடம் கேட்கலாம் வசீ.. எனக்குத் தெரிந்து நீ அதீக குழப்பத்தில் இருந்தால் மட்டுமே இங்கு வருவாய் தனியாக.. இப்பொழுது என்ன ஓடிக்கொண்டிருகிறது..??”, கேள்வியாய்..

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை விபு அண்ணா..”, எங்கோ பார்த்தபடி..

“என்னதான் பிரச்சனை பாப்பா உனக்கு..?? ஏன் ஒரு மாதிரி இருக்க..?? யாராவது ஏதாவது சொன்னாங்களா..??”, பரிவாக..

இல்லையென்பது போல் தலையசைப்பு அவனிடம்..

“பின்ன என்ன கண்ணா ஆச்சு..??”

“....................”

“உன் அண்ணா தானே நான்..?? என்கிட்டக் கூட சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனையா..??”

கண்ணீர் தேங்கியது வசிஷ்டராவின் கண்களில்..

“பாப்பா..??”

தேம்பித் தேம்பி அழத்துவங்கினாள் வசிஷ்டரா விபுவின் மடியில் படுத்தபடியே..

அவள் அழும்வரை அவளது முதுகைத் தெய்துக்கொடுத்தான்..

கண்களைத் துடைத்துக்கொண்டு விபுவைப் பார்த்து, “நான் துரோகியா அண்ணா..??”, கேள்வியாக..

“என்ன உளறுகிறாய் வசீ..?? உன்னை யார் என்ன சொன்னா..??”

“யாரும் ஒன்னும் சொல்லல.. ஆனால் என் மனசு ரொம்ப உறுத்துது..”

“ஏன்..??”

“பூமியில் என்னுடன் வந்தவர்களுக்கு நான் துராகம் செய்துவிட்டது போல் ஒரு உணர்வு..”

“நீ ஒன்னும் பண்ணல பாப்பா..”

“இல்லைண்ணா.. என்னன்னு தெரியல மாலி கிரகம் போயிட்டு வந்ததில் இருந்து மனதில் ஒரு வித உறுத்தல்.. நான் மட்டும் நன்றாக இருக்க என்னுடன் வந்தவர்கள் எல்லாம் கைதிகளாய்..”

“நீ சொல்வது எனக்குப் புரியுது வசீ.. ஆனால் நம் கிரகத்திற்கு நம் அனுமதியில்லாமல் நுழைய முயற்சி செய்த அந்நிய கிரக வாசிகள் அனைவரைம் அல்லவா கைதுசெய்துள்ளார்கள் நம் கிரகவாசிகள்..”

“நானும் அப்பொழுது ஒரு வகையில் குற்றவாளிதானே..?? அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவது குற்றமாயின் அந்நியர்கள் அழைத்துவந்ததும் குற்றம்தானே..”

“நிச்சயமாக அது குற்றம் தான்.. கடும் தண்டனைக்குறிய குற்றம்.. நான் அதற்கு மறுப்பே சொல்ல மாட்டேன்.. ஆனால் போழிளுக்குள் நுழையும்வரை உனக்கே நீ இக்கிரகவாசி என்று தெரியாதே.. அதே மாதிரி நீ ஒன்றும் அவர்களை தெரிந்து அழைத்து வரவில்லையே.. அவர்களுடன் இங்கு வந்து சேர்ந்தாய் அவ்வளவுதான்..”, அவளுக்கு புரியவைக்கும் நோக்குடன்..

“நீ என்ன சொன்னாலும் எனக்கு ஒப்பவில்லை அண்ணா..”, முகம் முழுதும் கசங்கியபடியே..

சற்று நேரம் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் இல்லாது மௌனம் மட்டுமே அரங்கேறியது அங்கு..

“வசீ நீ ஒரு பொழில்வாசி.. சரிதானே..??”, என்றுக் கேட்டு அவளது தலையசைப்பை பதிலாய்ப் பெற்றுக்கொண்டவன், “நான் இப்பொழுது உனக்கு சில கேள்விகளைக் கேட்கப் போகிறேன்.. அதற்கு நீ நிதானமாக யோசித்து பொழில்வாசியாக பதில் சொல்லவேண்டும்..”, நிதானமாகவே பேச்சைத் துவங்கினான் விபு..

“ஹ்ம்.. கேளு அண்ணா..”, அவளும் இப்பொழுது நிதானமாக..

“உன் கிரகத்திற்குள் அதை அழிக்கவோ ஆளவோ ஒரு வேற்றுகிரகவாசி நுழைகிறாய் என்று வைத்துக்கொள்.. நீ பரவாயில்லை அவன் நுழையட்டும் என்று விட்டுவிடுவாயா..??”

“இல்லை அண்ணா.. உள்ளே வர அனுமதிக்கமாட்டேன்..”

“நீ அவர்கள் உள்ளே வராமல் இருக்க நிறைய முயற்சி செய்து அதில் வெற்றியும் அடைந்து உள்ளே வந்துவிடுகிறார்கள்.. அப்பொழுது என்ன செய்வாய்..??”

“அவர்கள் இங்கு வந்ததன் நோக்கம் அறிந்துகொன்று.. அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வேன்..”

“விசாரணைக்கு முன்பு அவர்களை கைது செய்திருப்பாய் அல்லவா..??”

ஆம் என்பதாய் ஒரு தலையசைப்பு..

“அதைத்தான் நம் கிரகவாசிகளும் செய்திருக்கிறார்கள்..”

நூறு என்ன இருநூறு சதவிகிதம் அவன் சொல்வது சரிதான்.. மூளை சொன்னாலும் மனது கேட்கவில்லை வசிக்கு..

அரைகுறையாக ம்ம் என்று ஓசை வந்தது அவளிடமிருந்து..

அந்த ஓசையே போதுமாக இருந்தது விபுவிற்கு..

“சரி வா வசீ.. ரொம்ப நேரம் கால்ல தண்ணி பட்டிசுன்னா சளி பிடிச்சுடும்.. எந்திரி டா..”, என்றபடி எழுந்தவன் அவள் எழுவதற்காக கையை நீட்டினான்..

அதே நேரம் அவன் கையில் இருந்த காப்பு கையைவிட்டு நழுவி படிகளில் இருந்து உருண்டது..

************************************************************************************

இடம் : பரிதி வனம்..

ரிதி வனத்தில் இருக்கும் வேற்றுகிரகவாசிகள் சந்தோஷமாகத் தான் தங்களது நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தனர் பூமிவாசிகளைத் தவிர..

விசாரனை விசாரனை என நாட்கள் கடந்திருக்க நொந்து நூடில்ஸாகிப் போயிருந்தனர் பூமிவாசிகள்..

நாட்கள் அதன் போக்கில் கடக்க பூமிவாசிகளுக்கு விசாரணை நடக்கும் பொழுது நரகமாகவும் மற்றநேரம் சொர்க்கமாகவும் இருந்தது..

ஆனால் அனைவருக்குள்ளும் ஒரே கேள்வி தான்..

ஆம், வசியைப்பற்றியது தான் அது..

இங்கு வந்து நாட்கள் பல கடந்தும் அவள் தங்களை வந்து பாராமல் இருப்பது முதலில் அனைவருக்குள்ளும் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் நாட்கள் கடக்கக் கடக்க அது ஒரு பெரியதொரு உறுத்தலை ஏற்படுத்தியிருந்தது அனைவர் மனதிலும்..

அதுவும் விசாரனைகளின் பொழுது வசிஷ்ட்ராவிற்காகத் தான் இதை செய்தோம் இதை செய்தோம் என்று விசாரிக்கின்றவர்கள் சொல்லும்பொழுது (விலாசியையும் சேர்த்து) வசியின் மேல் இருந்த உறுத்தல் பெரிதாக வளர்ந்து அவளின் மீது பெரியதொரு சந்தேகத்தை விதைத்திருந்தது..

அன்று சாய்யின் விசாரனைக்குப் பிறகு சாய் வசியைப் பற்றி பேக் ஸ்டாபர் என்று சொன்னது உண்மைதானோ என்று அனைவருக்குள்ளும் இப்பொழுது ஒரு எண்ணம் வந்திருந்து..

எறும்பு ஊற ஊற அம்மியும் தேயும் என்பது போல் அனைத்திற்கும் வசிஷ்டரா தான் மைய்யப்புள்ளி என்று ஒருவர் மாற்ற ஒருவர் சொல்லும் பொழுது அனைவருக்குமே அந்த எண்ணம் முளைத்திருந்தது..

மனதில் பூமிவாசிகள் அனைவருக்கும் உறுத்தலும் சந்தேகமும் இருந்தபோதிலும் அதை யாரிடமும் வெளிக்காட்டாமலே நாட்களைப் போக்கிக்கொண்டிருந்தனர்..

காரணம் மிகிரன்..

மிகிரன் பூமியைச் சேர்ந்தவன் இல்லையென்றாலும் அனைவரையும் படிக்கத் தெரிந்தவன்..

முக்கியமாக பொழில்வாசிகளை..

முதல் நாள் சாய்யின் விசாரணைக்குப் பிறகு அவன் வசிஷ்ட்ராவை பற்றி விலாசி கூறியதாய் சொன்ன தகவல்களைக் கேட்டபொழுது முதல் முறையாக பொழில்வாசிகளின் மீது சந்தேகம் ஏற்பட்டது மிகிருக்கு..

தொடர்ந்த விசாரணையின் பொழுது உறுதிப்பட்டது மிகிருக்கு..

பூமிவாசிகளிடமிருந்து வசிஷ்ட்ராவை பிரிப்பதற்காக பொழில்வாசிகள் சூழ்ச்சிகள் செய்கின்றனர் என்ற..

இவர்கள் இருக்கும் மனநிலையில் தான் இப்பொழுது என்ன சொன்னாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்று புரிந்திருந்தது அவனுக்கு..

இதை பொறுமையாகவே கையாள வேண்டும் என்று முடிவெடுத்தான்..

ஒவ்வொரு முறை விசாரணை நடந்த பிறகு வரும் நபர்களை தேற்றும் பொறுப்பைத் தானாகவே எடுத்துக்கொண்டான் மிகிர்..

முடிந்த அளவு வசிஷ்ட்ராவின் மீது நல்ல எண்ணத்தையே அனைவருக்குள்ளும் விதைத்தான்..

அவனது இந்த தேற்றுதல் ஐம்பது சதவிகிதம் தான் வர்க் அவுட் ஆகிறது..

இருந்தபோதிலும் முடிந்த அளவு அவன் முயற்சிகள் இன்னும் எடுத்துக்கொண்டிருந்தான்..

மிகிரின் முயற்சிகள் நூறு சதவிகிதமாக மாறுமா..?? அல்லது ஜீரோ பர்சென்டேஜாகி அவனது நம்பிக்கையை உடைக்குமா..??

-தேடலாம்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top