• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 29 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பொழில் கிரகம்..

ரிதி வனத்தைவிட்டு நீங்கள் எங்கும் செல்லக்ககூடாது.. இங்கிருந்து செல்ல உங்களை நான் அனுமதிக்கமாட்டேன் என்று பலதும் மிகிரன் சொல்வான் என்று பூமிவாசிகள் நினைத்திருக்க அவனோ, “பத்திரமாக செல்லுங்கள்..”, என்று தனது கோரப்பற்கள் தெரிய ஒரு பெரிய புன்னகையுடன்..

“மிகிரா..”, திகைப்பில் வெளிவந்தது அத்வைத்தின் குரல்..

“மிகிரன் தான் சொல்கிறேன் அத்வைத்.. பத்திரமாக செல்லுங்கள்..”, என்றான் மீண்டும் ஒரு புன்னகையுடன்..

“நாங்கள் பூமிக்கு செல்கிறோம் என்று உனக்கு முன்னாடியேத் தெரியுமா மிகிரா..??”, இது சாய்..

“தெரியும் சாய்..”

“இந்தச் செய்தியை உனக்கு யார் சொன்னது மிகிரா உனக்கு..??”

“வேறு யார்..?? உன் தங்கை வசிஷ்டரா தான்..”, இன்ஸ்டன்ட்டாக பதில் வந்தது மிகிரிடமிருந்து..

“வசியா..??”, இப்பொழுது திகைப்பாக..

“வசிஷ்டராவேதான் சாய்.. உங்களுக்குத் துணையாய் உங்களுடன் அவள் என்னை இருக்கச் சொன்னாள்..”

“இது எப்பொழுது நடந்தது..??”

“அன்று உங்களை எல்லாம் பார்க்க வந்தாள் இல்லையா..?? அன்று மாலையே என்னையும் வந்து சந்தித்தாள்..”, என்ற மிகிரனின் பார்வை இவ்வளவு தான் என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது போல் பதிந்தது..

“எங்களை மன்னித்துவிடு மிகிரா.. உன்னிடம் செல்லக்கூடாது என்றெல்லாம் இல்லை.. எங்கே நீ எங்களை தடுத்துவிடுவாயோ என்ற பயத்தில் தான் நாங்கள் உன்னிடம் இவ்விஷயத்தை சொல்லவில்லை..”, என்றான் சாய்..

“நான் உங்களைத் தடுப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள்..??”

“இல்லை மிகிரா.. உனக்கு இந்த கிரகம் பற்றி நன்றாகத் தெரியும்.. இருந்தும் நீ பொழிலை விட்டு கிளம்பாமல் இருக்கிறாய் என்றால் என்ன அர்த்தம்.. நீ பொழில் கிரத்தின் சட்டதிட்டங்களை மதிக்கிறாய் என்று தெரிகிறது.. அப்படி இருக்கும்பொழுது எப்படி உன்னிடம் நாங்கள் பொழிலைவிட்டு செல்லப்போகிறோம் என்று சொல்ல முடியும்..??”, என்று கேட்டாள் ஆத்யா..

“நீ சொல்வது சரிதான்.. நான் பொழிலை மிகவும் மதிக்கிறேன் தான்.. அதன் சட்டதிட்டங்களையும் சேர்த்துத்தான்.. அதை இல்லை என்று நான் கண்டிப்பாக சொல்லமாட்டேன்..”, என்ற மிகிரன், “ஆனால் நான் அதைவிட நட்புகளை மதிக்கின்றவன்..”, என்றான்..

அவன் பேச்சில் நெகிழ்ந்துபோய் அவனைக்கட்டிக்கொண்ட சாய் ரொம்ப, “நன்றி மிகிரா.. எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பார்த்துப் பழகிய நண்பர்களில் சிறந்தவன் நீ..”, என்றான் உணர்ச்சிவசப்பட்டபடியே..

அவனைத் தட்டிக்கொடுத்த மிகிரன், “நேரமாகுது பூமிவாசிகளே.. கிளம்புங்கள்..”, என்றான் மீண்டும் புன்னகைத்தபடியே..

எப்பொழுதும் அவன் புன்னகையில் பயம்கொள்ளும் ஆத்யாவிற்கு இன்று ஏனோ அது தோன்றவில்லை.. அதற்கு பகரமாக இதயத்தின் ஓரத்தில் ஒரு வலி.. ஒரு சிறிந்த மனிதனை இனி காணமுடியாதோ என்ற வலி..

லேசாகத் தன் தொண்டையை சரி செய்துகொண்டவள், ”நீயும் எங்களுடன் வந்துவிடு மிகிரா..”, என்றாள்..

அவள் அன்பில் நெகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “அது சாத்தியப்படாத ஒன்று ஆத்யா.. நீங்கள் பத்திரமாகக் கிளம்புங்கள்..”, என்றான் ஆம்பல் கிரகத்தவன் மிகிரன்..

ஒருமுறை அவனை அனைவரும் அணைத்து விடுவித்தவர்கள் அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றனர்..

*****************************************************************

இடம் : மாலி கிரகம்..

பொழில் கிரகத்தின் பாதுகாப்புக் கூட்டம் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது.. அனைவரும் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்..

ஆனால் வசியின் மனம் மட்டும் அங்கு நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் லயிக்க மறுத்தது..

பூமிவாசிகள் சுற்றியே அவள் நியாபகம்..

இரண்டு மூன்று முறை அருகில் அமர்ந்திருந்த விபு அவளது கையை சுரண்டினான் கவனி என்பதுபோல்..

அதையெல்லாம் அவனிக்கும் நிலையில் வசிஷ்டரா இல்லை இப்பொழுது..

சற்று நேரம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் தாங்கமுடியாமல் சட்டென்று எழுந்து வெளியே போயிருந்தாள்..

அவள் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்ததால் அவள் செல்வதை பெரிதாக யாருக்கும் தெரியவில்லை..

வெளிக்காற்று முகத்தில் பட்டவுடன் தான் வசிக்கு மூச்சுமுட்டும் உணர்வு நின்றது..

ஆழமாக ஒரு மூச்சை எடுத்துவிட்டவள் மெதுவாக இலக்கில்லாமல் நடக்கத்துவங்கியவளது மனது அன்று விபுவின் காப்பு கழண்டு ஓடையில் உருண்டு விழுந்தது போல் உருண்டோடியது அன்றைய தினத்தை நோக்கி..

கையில் இருந்து நழுவி விழுந்த காப்பு ஒவ்வொருப்படியாய் வேகமாகக் கடந்து நீருக்குள் விழுந்து சில நீர்த்துளிகளை வெளியேத் தெறிக்கவிட்டது..

“அண்ணா.. உன் காப்பு..”, விபுவை முந்திக்கொண்டு நீருக்குள் கைவிட்டுத் தேடத்துவங்கினான்..

“பொறுமையாத் தேடலாம் வசீ..”, என்று சாவகாசமாக சொன்னவன் தன் முதுகில் மறைத்துவைத்திருந்த ஒரு சுருளை எடுத்து வசியிடம் கொடுத்தான்..

“காப்பு விழுந்திருச்சுன்னு.. நீ சாவதானமா எதையோ எடுக்கற.. என்னது அது..??”, என்ற கேள்வியுடன் தனது தேடலை நிறுத்திவிட்டு அவன் கையில் இருப்பதை வாங்கினாள்..

அந்தச் சுருளைப் பிரித்தவளுக்கு ஏதோ கோடு இழுத்துவிட்டதுபோல் இருந்தது.. ஆனால் அது என்ன என்று தான் புரியவில்லை..

“என்னன்னா இது..??”, அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே கேட்டாள்..

“இது பூமிவாசிகள் இப்பொழுது இருக்கும் குடிலில் இருந்து பீது வனம் செல்வதற்கான வழிக்காட்டி..”

“என்னண்ணா சொல்ற..?? வழிக்காட்டியா..??”

“ஆமாம் வசீ.. அவர்கள் பூமிக்குச் செல்வதற்கான வழிக்காட்டி இது..”, என்றவன், “நாளை நீ பூமிவாசிகளைப் பார்க்கச் செல்லும்பொழுது அவர்களிடம் கொடுப்பதற்கு..”, என்றான்..

“என்ன சொல்கிறாய் அண்ணா.. அவர்களைப் பார்க்க அனுமதி கிடைத்துவிட்டதா..??”, சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு..

“கிடைத்துவிட்டது வசீ.. சிறிது நேரத்திற்கு முன்பு தான் விலாசி எல்லோன் செய்தி அனுப்பினார்கள்.. பூமிவாசிகளை நீ வந்து பார்த்துசெல்லலாம் என்று..”

ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தவள் சடனாக தனது ஆட்டத்தை நிறுத்தி, “அண்ணா.. இதனால் உனக்கு..??”, திக்கத்துவங்கியது வசியின் இதழ்கள் இப்பொழுது..

“எனக்கும் மட்டும் இல்லை உனக்கும் எதுவும் ஆகாது வசிஷ்டரா..”, என்றான் விபு அழுத்தமாக..

வசிக்கு ஏனோ அப்பொழுது மனதில் இருந்த பாரம் முழுவதும் இறங்கிய உணர்வு..

“ஆனால் நீ ஒன்றை மட்டும் நியாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் வசீ.. நீ பூமிவாசிகளுடன் கதைக்கும் பொழுது உன்னை உளவு பார்க்க ஆட்கள் இருக்கலாம் ஜாக்கிறதை..”, என்று எச்சரிக்கை செய்துவிட்டு, ”நான் காப்பு அணிந்த பிறகு இதைப்பற்றி நாம் பேசவேண்டாம்..”, என்று விட்டு நீருக்குள் கைவிட்டு தனது காப்பைத் தேடத்துவங்கினான்..
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
அடுத்தநாள் பரிதி வனத்தில்..

சாய்யைப் பார்த்த அடுத்தநொடி அவனை அணைத்து அழுதவள் கூடவே அவனது பான்ட் பாக்கெட்டில் முதல் நாள் விபு கொடுத்த அந்தச் சுருள் வழிக்காட்டியை (மேப்) தினித்தவள் அவன் திகைப்பதைப் பொருட்படுத்தாது, “அண்ணா.. என் மேல் நீங்கள் அனைவரும் கோபமாக இருப்பது தெரியும்.. ஆனால் நான் சொல்வதைக் கோபப்படாமல் ஒரு நிமிடம் பொறுமையாகக் கேள்..”, என்றவள் அவன் பதிலுக்காக சற்றே இடைவெளி விட்டான்..

சாய்யிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லாதது போனாலும் அதை வெளிகாட்டிக்கொள்லாமல், “நான் உன் பாக்கெட்டில் திணித்திருக்கும் இந்தச் சுருள் ஒரு மேப் சாய் அண்ணா.. இது நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து பீது வனம் என்னும் விண்வெளி ஆராய்ச்சிமையம் வரையான மேப்.. இன்றிலிருந்து இரண்டாம் அமாவாசை அன்று பாதுகாப்பு ஏதோ பெரிய கூட்டம் நடுக்குமாம்.. அன்று இதை யூஸ் செய்து எப்படியாவது அங்கு சென்றுவிடுங்கள்.. அங்கு நாம் பொழிலுக்கு வந்த விண்வெளிக்கப்பலை நிறுத்திவைத்திருப்பார்கள்.. அதில் ஏறி எப்படியாது தப்பித்து இங்கிருந்து சென்றுவிடுங்கள்..”, என்று அவசரவசரமாக அனைத்தையும் சொல்லி முடித்தவள் சாய் அவளை புரிந்துகொண்டது போல் அவளது தோளைத் தொட கையை உயர்த்தத் துவங்குவதைக் கண்டு சட்டென, “அண்ணா.. நீங்கள் என்மேல் கோபமாக இருப்பது போலவே நடந்துகொள்ளுங்கள்.. நம்மை உளவு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.. அதனால்..”, என்றவள் அவனிடமிருந்து விலகி கண்களைக் காட்டினாள்..

அதன் பிறகு நடந்ததையெல்லாம் வசிக்கு நினைத்துப்பார்க்கவே கூடாது என்ற நிகழ்வு..

சாய் அவள் கூறியதை நம்பி அவளைத் தூற்றுவதுபோல் நன்றாகவே நடித்தான்..

ஆனால் அந்த நடிப்பையே அவளது மனது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..

அதை எல்லாம் அவள் நினைத்தும் பார்க்க தயாராக இல்லை என்றே சொல்லலாம்..

நிஜத்தில் தலையை உலுக்கி அந்த நினைவுகைளை எல்லாம் பின் தள்ளியவள் அன்று மிகிரைச் சந்தித்ததைப் பற்றி நினைவு கூர்ந்தாள்..

அன்று பூமிவாசிகளைப் பார்த்துவிட்டுத் திரும்பியவளுக்கு ஏனோ மிகிரைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது..

பரிதி வனத்தின் தலைமைச் செயலகத்திற்கு வந்தவள் விலாசியிடம் குடிலில் அனைவரும் தன் மேல் கோபப்பட்டதாக புலம்பியவள் மிகிரைப் பற்றி விசாரித்தாள்..

மிகிரைப் பற்றி அவர் சொல்லச் சொல்ல அவளுக்கு மிகிரை அப்பொழுதே சென்று பார்க்கவேண்டும் போல் இருந்தது..

“எல்லோன்.. எனக்கு அந்த மிகிரைப் பார்க்கவேண்டும்..”, என்றாள் இன்ஸ்டன்ட்டாக..

அவள் அப்படிக் கேட்டவுடன் சற்றே திகைத்தாற்போல் ஆனது விலாசியின் முகம்..

வசீ அதை பார்க்கும் முன்னே அந்த பாவத்தை மாற்றியவர் முகத்தை நிர்மலமாக வைத்துக்கொண்டு, “எதுக்கு வசீ..??”, என்று கேட்டார்..

“அவரைப் பற்றி நீங்கள் சொல்லச் சொல்ல ஏனோ அவரைப் பற்றியும் அவரின் கிரகத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்போல் இருக்கிறது.. பத்தாதற்கு அவர் ஒரு விண்வெளிக்கப்பலை உருவாக்கும் திறமை கொண்டவர் என்று சொன்னீர்கள் அல்லவா..?? அவரிடம் பேசினால் எனக்கு மாலி கிரகத்திற்கு வேலைக்குச் செல்லும்பொழுது உதவியாக இருக்கும் இல்லையா..??”

அவளது பேச்சு அவரை முழுதாக சமாதனப்படுத்தவில்லை என்றாலும் அரைகுறையாக, “போயிட்டு வா வசீ.. ஆனால் பத்திரம்..”, என்றவர் ஒருவரை அழைத்து வசியை மிகிரிடம் அழைத்துச் சொல்லக் கட்டளையிட்டார்..

மிகிரின் குடிலும் பூமிவாசிகள் இருக்கும் குடிலைப்போலவே டிட்டோவாக இருந்தது..

குடிலுக்குள் நுழைந்ததுமே தன்னை எதிர்ப்பார்த்தது போலவே வாங்க வசிஷ்டரா என்றான் மிகிரன்..

“நான் வருவேன் என்று உங்களுக்கு முன்பே தெரியுமா..??”, கண்களை விரித்து ஆச்சர்யமாகவேக் கேட்டாள் வசிஷ்டரா..

“யூகித்தேன் வசிஷ்டரா..”, என்ற மிகிரன், “நீங்கள் என்னைப் பார்க்க வந்திருப்பது பூமிவாசிகளுக்காகத்தான் என்பதும் புரிகிறது..”, என்றான்..

“சரிதான் மிகிர்.. நாம் கொஞ்சம் நடந்துகொண்டே பேசலாமா.. நாம் பேசுவதை யாராவது கவனித்தாலும் கவனிக்கலாம்..”, என்றாள் கொஞ்சம் கிசுகிசுப்பாக..

சரியென்பதாய் தலையசைத்த மிகிர், “கொஞ்ச தூரத்தில் ஒரு ஆறு ஓடுகிறது.. அதன் ஓரத்தில் நடக்கலாம்..”, என்று விட்டு முன்னே சென்றான்..

போகும் வழியெலாம் மிகிரைப் பற்றி கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தவள் ஆற்று நீர் சலசலக்கும் ஓசையில், “நான் சாய் அண்ணாவிடம் பேசியது உங்களுக்கு கேட்டுவிட்டது இல்லையா..??”, என்று கேள்வி எழுப்பினாள்..

“ஆமாம் வசிஷ்டரா.. நீங்கள் பேசியது கேட்டது எனக்கு.. அதனை நீங்கள் கவனித்துவிட்டீர்கள் என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன்..”

மெல்லிய சிரிப்பொன்று எட்டிப்பார்த்தது வசியின் இதழுக்கடியில்..

“சொல்லுங்கள் வசிஷ்டரா.. நான் உங்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும்..??”, நேரடியாகவே கேள்வி வந்து விழுந்தது மிகிரிடமிருந்து..

“ஆமாம் மிகிர்.. ஒரு உதவிக்காகத்தான் உங்களைத் தேடி வந்தேன்..”, என்றவள், “பூமிவாசிகள் இங்கயிருந்து கிளம்பும் வரை நீங்கள் அவர்களுக்குத் துணையாய் இருக்க வேண்டும்..”, என்றாள்..

“இதை நீங்கள் சொல்லவே தேவையில்லை வசிஷ்டரா.. அவர்கள் என் நண்பர்கள்.. என் துணை எப்பொழுதும் உண்டு அவர்களுக்கு..”, உறுதியாக..

அவனது உறுதியில் அவனை பிரமிப்புடன் பார்த்தவள், “அவங்கெல்லாம் ரொம்பவே லக்கி.. உங்களைப் போல் ஒரு நட்பு கிடைப்பதற்கு..”, கண்கள் பணிக்க..

அன்று போலவே இன்றும் மிகிரை நினைத்து தானாகவே ஒரு புன்னகையும் சிறு பொறாமையும்..

அவனைப் போல் தனக்கு ஒரு நண்பன் இல்லையே என்று..

“வசீ.. எங்கிருக்க..??”

அன்றைய நினைவில் ஊர்ந்துகொண்டிருந்தவள் தன் பின்னால் விபுவின் குரல் கேட்டதும் சட்டென்று திரும்பினாள்..

“என்ன வசீ இது..?? இப்படி இடையில் எழுந்து வரலாமா..??”, சிறிது கோபமாகவே..

அவன் கோபத்தை எல்லாம் கவனிக்கும் நிலையில் தான் இப்பொழுது வசீ இல்லையே, “அண்ணா.. அவர்கள் இப்பொழுது பீது வனத்திற்கு சென்றிருப்பார்களா..??”, ஒரு எதிர்பார்ப்பு கேள்வி எழுந்தது பெண்ணிடமிருந்து..

இடம் : பரிதி வனத்தின் தலைமைச் செயலகம்.. பொழில்..

அவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று மிளிர் சொன்னவுடனே ஒரு மென்னகை பிறந்தது விலாசியிடமிருந்து..

“அவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்கிறேன்.. நீங்கள் என்னவென்றால் சிரிக்கிறீர்கள்..”, கோபமாக வினவினான் மிளிர்..

“சிரிப்பது ஒரு குற்றமா..??”, இப்பொழுது கேலியாக..

“ம்மா..”, என்று அவரை முறைத்துப்பார்தவன், “இதெல்லாம் உங்களது திட்டமா..??”, இப்பொழுது ஒருவிதத் தீவிரத்துடன்..

“எனது திட்டமல்ல.. அரசின் திட்டம்..”

“என்னம்மா சொல்றீங்க..??”

“ஆமாம் மிளிர்.. பூமிவாசிகளின் விசாரணைக்கு பிறகு எடுக்கப்பட்ட தீர்மானம் இது.. பூமிவாசிகளை பூமிக்குத் திருப்பி அனுப்புவது என்று..”

“ஆனால் ஏன்..??”

“இவர்கள் இங்கிருப்பதில் ஒரு பிரயோஜனம் இல்லை மிளிர்.. விசாரித்ததில் இவர்களுக்கு எந்த விபரமும் தெரியாது என்று புரிந்தது.. அதனால் இவர்களை பூமிக்கு அனுப்பிடலாம் என்று தீர்மானித்துவிட்டது நமது அரசு..”

“இதற்கு வசீ பகடையா..??”, கூர்மையாக..

“வசீ இதில் வருவாள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. அதுபோல் அவளுக்கு விபு உதவுவான் என்றும் நாங்கள் நினைக்கவில்லை.. இதை நாங்கள் திட்டமிடவில்லை மிளிர்.. ஆனால் வசீ மூலம் அது நடக்கும் பொழுது அதை நாங்கள் தடுக்கவில்லை.. அவ்வளவுதான்..”, என்றார்..

“அம்மா.. ஆனால் வசியும் விபுவும் செய்தது குற்றம் அல்லவா.. தண்டனைக்கு உரியதுதானே..??”

“குற்றத்துக்குறிய தண்டனைதான் அது.. இல்லையென்று நான் சொல்லவில்லை.. ஆனால் அவர்கள் செய்தது நாங்கள் செய்ய நினைத்து தான்.. அதனால் அதற்கு தண்டனை வேண்டாம் என்று நினைக்கிறது அரசு..”

“ஆனால் அம்மா..”

“இன்று வசியும் விபுவும் செய்ததை மன்னித்துவிட்டால் நாளை அதை வேறு யாராவது செய்வார்கள்.. அதைத்தானே சொல்ல வருகிறாய்..??”

ஆம் என்ற தலையசைப்பு..

“இந்த விஷயம் பொழில் முழுவதும் தெரியாதே.. வசீ விபு மிகிரன் என உன்னுடன் சேர்த்து இப்பொழுது மொத்தம் பத்து பேருக்கு மட்டுமே தெரியும்.. யாரும் இதைப்பற்றி வெளியே சொல்லப்போவது இல்லை.. அதனால் கவலையை விடு மிளிர்..”, என்றார்..

“அம்மா.. என்ன தான் வசியும் விபுவும் எனக்கு நெருங்கியவர்கள் என்றாலும் அவர்கள் செய்தது தவறே..”

“மிளிர்.. இது நான் எடுத்த முடிவு அல்ல.. அரசின் முடிவு..”

“ம்மா.. இன்று இல்லையென்றாலும் நாளை பூமிவாசிகள் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்று பொழில் வாசிகளுக்குத் தெரியும் அல்லவா..?? அப்பொழுது வசியின் மீது சந்தேகம் வராதா..??”, என்று கேள்வி எழுப்பினான்..

“கண்டிப்பாக சிலருக்கு சந்தேகம் வரும் மிளிர்.. ஆனால் அது நிலைக்காது.. பொழிலைப் பொறுத்தவரை காப்பு கட்டியபிறகு அவர்கள் செய்யும் தவறுகளுக்குத்தான் தண்டனை.. வசியின் தவறு அவள் காப்பு அணிவதற்கு முன்பே நடந்த தவறு.. காப்பு அணிவதற்கு முன் அவர்கள் செய்யும் செயல்களை நம்மால் கண்காணிக்க முடியுமே ஒழிய அவர்களின் மனதை சரியாகப் படிக்க முடியாது அவர்களின் இரத்தபந்தங்களைத் தவிர.. அதனால் அவள் செய்த தவறை யாராலும் கண்டுபிடிக்க முடியாது..”, என்றார்..

“அப்பொழுது விபுவின் தவறு..??”

“அவனது தவறும் வெளியே வராது.. அவனது நல்ல காலம் அவன் திட்டமிட்ட சமயம் அவன் கையில் காப்பு இல்லை..”, என்றவர் மிளிரின் தெளியாத முகத்தைக்கண்டு, “இங்கு பாரு மிளிர்.. அப்படியே பிரச்சனை வந்தாலும் அதனை எப்படி சமாளிக்க என்று அரசுக்குத் தெரியும்.. அதனால் கவலைப்படாமல் வசியின் அடுத்தத் தேடல்களுக்கு உறுதுணையாக இரு..”, என்றார் புன்னகையுடன்..

இடம் : மாலி கிரகம்..

“அண்ணா.. அவர்கள் இப்பொழுது பீது வனத்திற்கு சென்றிருப்பார்களா..??”, தனது கோபத்தை ஒரு பொருட்படுத்தாமல் கேள்வி எழுப்பியவளைப் பார்த்து முறைத்துவைத்தான் விபு..

அதைக் கண்டுகொள்ளதவளாய் விபுவின் கையில் இருந்த காப்பை உருவினாள் வசிஷ்டரா..

“வசீ என்ன பண்ற..??”, பதற்றத்துடனே கேள்வி எழுப்பினான் விபு..

“நம்ம இரண்டு பேரோட காப்பும் பெரிய வளையல் போல் அடிக்கடி அவிழ்ந்து விடுகிறதே.. விசாரித்தால் அதையே சொல்லுவோம்..”, என்றாள் தன் பாக்கெட்டில் இருந்து தனது காப்பை எடுத்து விபுவின் முகத்திற்கு நேரே ஆட்டியபடி..

ஆம் முன்பைவிட லூசாகி இருந்தது விபுவின் காப்பு.. கூடவே சேர்ந்துகொண்டது வசியின் காப்பும்..

அவளது தலையில் வலிக்காமல் கொட்டுவைத்தவன், “எதுல விளையாடுவது என்றில்லை..”, என்று எச்சரித்தவன், “இந்நேரம் அவர்கள் அவர்களின் வின்வேளிகப்பலில் பூமியை நோக்கி செல்லவேத் துவங்கியிருப்பார்கள் வசீ..”, என்றான் அவள் கையில் அவளது காப்பை அணிவித்தபடி..

அதே நேரம் பொழில் கிரகத்தில் இருந்து உயர உயர பறக்கத் துவங்கியது பூமியின் விண்வெளிக்கப்பல் தேடலை நோக்கி..

-தேடல்கள் முற்றுப்பெற்றது..
 




Monishaa

புதிய முகம்
Joined
Mar 13, 2018
Messages
14
Reaction score
41
Location
Chennai
nice ud sis....பொழில் மாதிரி ஒரு கிரகம் இருக்குமா....இருக்கும்...இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது....அவர்களுடைய அரசு சட்ட திட்டங்கள் அதை விட இயற்கையை பாதுகாப்பது அனைத்தும் செம...சூப்பர்..மனதை படிக்கும் திறமையெல்லாம் வேற லெவல்....நமக்கும் அந்த திறமையெல்லாம் இருந்து இருக்கலாம்ல.....வித்தியாசமான கதைகளம்....கலக்கிடிங்க சிஸ்.....செலவே இல்லாம பொழில் கூட்டீட்டு போயிட்டு வந்துட்டீங்க....
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
வித்தியாசமான கதை களம் பொழில் கிரகம் அவற்றில் நிறைய வனங்கள் காப்பு வேற்று கிரக சட்ட திட்டங்கள் பூமி பயணம் பின் பொழில் கிரக பயணம் பூமிவாசிகள் சிறை படல் பூமிவாசிகள் திரும்ப செல்லல் மிகிரன் ஆத்யா நட்பு வசிஸ்டரா பூமி வாழ்வு விண்வெளி கப்பல் அதில் பயணம் என கதை சூப்பர் வசுமதி வெற்றி கரமாக முடித்தும் விட்டிர்கள் வாழ்த்துக்கள்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb story sis with adiff concept. வசி அவளுடைய பூமி நண்பர்களுக்கு திரும்பி பூமிக்கு செல்ல உதவுவது சிறப்பு. அரசாங்கமே விபு & வசிக்கு மறைமுகமாக உதவு கிறார்கள் அருமை.nice ending sis i enjoyed each& every epi . thankyou sis for this beautiful fiction story
View attachment 2838
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top