• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பரிதி வனம்

மெலிதான தன் சிறகுகள் விரித்து வண்ணங்கள் புடைசூழ மலர் விட்டு மலர் தாவி தேனை பருகிக் கொண்டிருந்தது அந்த வண்ணத்துப்பூச்சி..

“இது போல் தானே அவள்.. எப்பொழுதும் துறுதுறுவென சுற்றிக் கொண்டிருப்பாள்..”, இன்ஸ்டன்டாய் அவளது நியாபகம் வந்து தொலைத்தது அபித்திற்கு..

பொழிலில் வந்திறங்கிய அன்று மயங்கிய நிலையில் கடைசியாய் கண்டது அவளை..

“அந்த கண்னழகியை எப்படி மறந்து போனாய்..??”, மனது கேள்வி எழுப்ப தானாய் தலை கவிந்தது குற்றவுணர்வில்..

“இந்த வண்ணத்துப் பூச்சியை இன்னும் எவ்வளவு நேரம் இரசித்துக் கொண்டிருப்பதாய் உத்தேசம் அபித்..??”, தனது கோரப் பற்கள் தெரிய சிரித்தபடியே கேட்டான் மிகி..

“ப்ச்.. ஒன்னும் இல்லை மிக்கி..”, சலிப்பாய் வெளிவந்தன வார்த்தைகள்..

“என்னாச்சு அபி..?? ஏன் இந்த சலிப்பு..??”, இரண்டு நாட்களில் பூத்திருந்த நட்பிற்கு அடையாளமாய் அதட்டளுடனும் உரிமையுடனும் கேட்டான் மிகி..

தலையை அழுத்தமாய் கோதி தன்னை சரிசெய்து கொண்ட அபி, “வசிஷ்டராவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்..”, உண்மையை மறைக்காமல்..

“வசிஷ்டரா..??”, சில நொடிகள் யோசித்த மிகி, “பூமியில் இருந்து பொழிலுக்கு உங்களுடன் வந்தவள்..”

“ம்.. ம்..”

அபியை கூர்ந்து பார்த்த மிகி, “இப்பொழுது அவள் எங்கே என்று மனம் அலைப்பாய்கிறதோ..??”, பாயிட்டை சரியாக பிடித்த மிகி கேலியாக கேள்வி கேட்டான்..

எதுவும் பேசாமல் கண்களை அலையவிட்ட மிகி, “யப்.. ஐ மிஸ் ஹர் மச்.. (yup.. i miss her much..)”, என்றான் பெருமூச்சுடன்..

அவன் கூறியது புரியவில்லை என்றாலும் தலையை அசைத்து வைத்த மிகி, “மற்றவர்கள் எல்லாம் எங்கே..??”, பேச்சை மாற்றினான்..

“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கம் இந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்..”

“மிகி.. உங்களை எங்கெல்லாம் தேடுவது..??”, லேசாக முறைத்தபடியே அங்கு வந்த ஆத்யா தொப்பென்று அபித்தின் அருகில் அமர்ந்தாள்..

“தேடினியா..?? எதற்கு..??”, புரியாமல் கேட்டான் மிகி..

“உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கனும்..”

“என்ன..??”

“இந்த பிராக்ஸிமா சாரி பொழில் கிரக வாசிகளுக்கு மனதை படிக்கத் தெரியுமா..??”

“தெரியுமாவா..?? அது அவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கும் ஒன்று.. நாமெல்லாம் பயிற்சிகள் மேற்கொண்டு பல குட்டிக்கரணங்கள் போட்டாலும் சிலரின் மனதை மட்டுமே நம்மால் படிக்க இயலும்.. ஆனால் அவர்களுக்கு அது அப்படி அல்ல.. ஒருவரின் கண்களை அரை நொடிகள் கண்டாலே அவர்கள் மனதை அந்த நொடி தன் எதிரில் இருப்பவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதனை அச்சு பிசகாமல் சொல்வர்..”

“எண்ணங்கள் மூலம் மற்றவர்களைத் தொடர்பு கொள்வார்களா..??”

“ஹ்ம்.. இரத்த சொந்தங்கள் அனைவரிடத்தும் அவர்களால் எண்ணங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும்..”

“அவர்கள் பல இலட்சம் ஒளி ஆண்டு தூரமிருந்தாலுமா..??”

“இலட்சம் என்ன கோடி ஒளி ஆண்டு தூரம் இருந்தாலும் பொழில் மக்களால் தங்களது இரத்த சொந்தத்தை தங்களது எண்ண அலைகள் மூலமாக தொடர்பு கொள்ள இயலும்..”, பொறுமையாக பதிலளித்தது மிகி..

“ஹுரே.. யுரேகா..”, துள்ளினாள் ஆத்யா..

“என்னாச்சு ஆத்யா..?? எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்..??”, புரியாமலும் கொஞ்சமே கொஞ்சம் எரிச்சலுடனும் கேட்டான் அபி..

“நம்ம இங்கிருந்து பூமிக்கு செல்ல ஒரு வழி கிடைத்து விட்டது..”, என்று மேலும் துள்ளியவளை இழுத்துப் பிடித்த அபி அவள் கூற்றில் மகிழ்ச்சி இழையோட பொறுமை முழுதும் பறந்த நிலையில், “என்ன உளறுகிறாய் நீ..?? எதுவாக இருந்தாலும் தெளிவாக சொல்..”, கட்டளையாகவும் எதிர்பார்ப்புடனும்..

“வசிஷ்டரா பொழில் வாசி.. அவள் நினைத்தால் நம்மை இங்கிருந்து பூமிக்கு அழைத்துச் செல்ல இயலும்..”

“வாட்..?? வசிஷ்ட்ரா பொழில் வாசியா..??”, அதிர்வாய் ஒலித்தது அபியின் குரல்..

ஆத்யாவிற்கு வசிஷ்டரா பொழில் வாசி என்று எப்படித் தெரிந்தது..??

********************************************************************************************

இடம் : புலரி வனம்..

ன்று காலையில் முதலே படபடப்புடன் காணப்பட்டாள் வசிஷ்டரா..

“அம்மா.. என் நண்பர்களைப் பார்க்க அனுமதி தருவார்கள் அல்லவா..??”, கேள்வியின் எண்ணிக்கை நூறைத் தொட்டுவிட்டது..

“கண்டிப்பா.. நீ பார்க்க வேண்டும் என்றால் முடியாது என்றா சொல்லிவிடப் போகிறார்கள்..??”, பதிலும் நூறைத் தொட்டது..

வாசலுக்கும் முற்றத்திற்கும் நடந்து கொண்டிருந்தவளைக் கண்டு மனதிற்குள் சம்மதம் கிடைத்து விடும் தனது எண்ணம் பலவீனமாய் இருந்தாலும் தனது வசிஷ்டராவிறகாய் தனது எண்ணத்தை பதிவு செய்தார் திருஷ்டி..

சில மணித்துளிகள் கூட கடந்திருக்காது..

“அம்மா.. மிளிருடன் நான் அனுமதி கேட்கும் இடத்திற்கு சென்று வரட்டுமா..??”, தயக்கமாக ஒலித்தது வசிஷ்ட்ராவின் குரல்..

அவள் கண்களில் தெரிந்த அலைபுருதளைக் கண்டு சரி என்று அனுமதி வழங்கினார் திருஷ்டி..

********************************************************************************************

இடம் : பரிதி வனத்தின் தலைமை செயலகம்..

னை ஓலைகளால் வேயப்பட்ட குடிசை அது..

“விசாரணை முடியும் முன்பு வேற்று கிரக வாசிகளை பார்க்க அனுமதி இல்லை அவ்யுக்த்..”, அழுத்தமாக கூறினார் விலாசி..

“ஒரு முறை வசிஷ்டராவின் கோரிக்கையை பரிசீலிக்கக் கூடாதா விலாசி..”, இது அவ்யுக்த்..

“நம்ம கிரகத்தைப் பற்றி நல்லா தெரிந்த நீங்கள் இப்படி கோரிக்கை வைத்ததே முதலில் தப்பு அவ்யுக்த்..”

“தெரியும் விலாசி.. பல வருடங்களுக்கு முன் காணாமல் போனவள் திரும்பி வந்து என்னிடம் கேட்ட முதல் விஷயம் இது.. அவளுக்கு என்னால் எப்படி ஏமாற்றத்தை அளிக்க முடியும்..??”, சுருதி இறங்கி கேட்டார் அவ்யுக்த்..

“ஒரு சக மனிஷயாய் என்னால் உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது..”, என்றார் தீர்மானமாக..

“அவர்களைப் பார்க்க வேறெந்த வழியும் இல்லையா..??”, நம்பிக்கையற்ற தன்மையில்..

“மற்ற கிரகங்கள் போல் நமது கிரகத்தின் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் உடைக்க குறுக்கு வழி எதுவும் இல்லை அவ்யுக்த்..”,

இதற்கு மேல் எதுவும் இல்லை என்பது போல் இருந்தது அவரது கூற்று..
விபுவைப் பார்த்த அவ்யுக்த் அவனிடம் போலாம் என்பதாய் தலையசைத்தார்..

விலாசியுடன் விடைப்பெற்றுக் கொண்டு வெளியே வந்த இருவரும் வெளிவாசலில் மிளிருடன் வசிஷ்டரா நிற்பது கண்டு அதிர்ந்தனர்..

“பர்பி.. உன்னை யாரு இங்கு வர சொன்னது..??”, கோபமாக கேட்ட தமையனைக் கண்ட வசிஷ்டரா, “என்னால் இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீட்டில் இருக்க முடியவில்லை..”, என்றாள் முணுமுணுப்பாக..

“விபு.. எதுவா இருந்தாலும் வீட்டிற்கு போய் பேசிக்கொள்ளலாம்.. அமைதியா இரு..”, என்று விபுவை அடக்கிய அவ்யுக்த் வசியிடம்,

“வீட்டிற்கு போலாம் கண்ணா..”, என்றார்..

அவர் பேச்சை காதில் வாங்காதவள் போல் வசிஷ்டரா, “அப்பா.. என்னாச்சு..?? அனுமதி கிடைத்துவிட்டதா..??”, ஆர்வமாக..

இல்லை என்பது போல் தலையசைத்தவரைக் கண்டு இன்ஸ்டன்ட்டாக கண்ணில் நீர் கோர்த்தது வசிஷ்டராவிற்கு..

“விசாரணை முடிந்தால் தான் அவர்களை பார்க்க முடியுமாம்..”, என்ற விபு, “இன்னும் ஒரே ஒரு வாரம் பொறுத்துக்கொள் பர்பி..”, என்றான் அவள் கண்களைத் துடைத்து விட்டபடி..

தமையனிடம் சரி என்பது போல் தலையசைதவள் மிளிரிடம் திரும்பி, “உங்க அம்மாவைப் பற்றி அப்படி புகழ்ந்த.. என்னமோ இந்த நிமிஷமே என் நண்பர்களைப் பார்க்க அவங்க அனுமதி கொடுத்திருவாங்க அது இதுன்னு.. இப்போ என்னடான்னா.. ”, மூச்சு வாங்க முறைப்பாக..

“என்னைப் பற்றி என் மகன் உன்னிடம் ரொம்ப புகழ்ந்து வெச்சிருப்பான் போல..”, தன் பின் ஒலித்த விலாசினியின் குரல் வசிஷ்ட்ராவைத் திரும்ப வைத்து அவருக்கு ஒரு முறைப்பை பரிசளிக்க வைத்தது..

அந்நொடி விலாசியின் கண்களுக்கு வசிஷ்டரா சின்ன வயது திருஷ்டியைப் போலவே தோன்றமளித்து புன்னகையை வரவழைத்தாள்..

-தேடல்கள் தொடரும்..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis.
வசிஷ்டரா பொழில் வாசி.. அவள் நினைத்தால் நம்மை இங்கிருந்து பூமிக்கு அழைத்துச் செல்ல இயலும்..
abhi& co eathku selvathu vasistra kaiyil than ullatha:unsure::unsure::unsure::unsure: nice narration sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top