• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பரிதி வனம்

“வசிஷ்டரா பொழில் வாசி..”, ஒரு நிமிடத்திற்குள் நூறு முறை இவ்வார்த்தைகள் வளம் வந்தது அபியின் மனதில்..

“வாட்..?? வசிஷ்ட்ரா பொழில் வாசியா..??”, அதிர்வாய் கேட்டான் அபி..

“ஆமாம் அபித்.. எனக்கும் செம ஷாக்கிங் தான்..”

“உனக்கு அவள் பொழில் வாசின்னு யார் சொன்னா..??”, இது மிகி..

“யாரும் சொல்லவில்லை மிகி.. சில விஷயங்களைக் கோர்த்துப் பார்த்து புரிந்து கொண்டேன்..”, என்ற ஆத்தாவை புரியாமல் பார்த்தனர் இருவரையும் கண்டு,

“வசிஷ்ட்ராவிற்கு மைன்ட் ரீட் பண்ணவும் மற்றவர்களுக்கு மனதின் மூலம் கட்டளையிடவும் தெரியும்..”

“என்னது..??”, அதிர்வாய் கேட்டான் அபித்..

“நாம் பொழில் கிரகத்திற்கு பூமியில் இருந்து புறப்படும் முன்னால் அனைவரின் ஹெல்த் ரெகார்ட்ஸும் என்னிடம் காட்டப்பட்டது.. அதில் வசிஷ்ட்ராவிற்கு மைன்ட் ரீடிங் தெரியுமெனவும் அவளால் மற்றவர்களின் மனதை கட்டுப்படுத்தவும் எண்ணங்கள் மூலம் தொடர்புகொள்ளவும் முடியுமென இருந்தது..

மேலோட்டமாக மட்டுமே அன்று நான் அந்த ரிபோர்ட்டுகளை படித்து வைத்தேன்.. ஆனால் இன்று தான் அதன் ஆழம் புரிகிறது.. அதுவுமில்லாமல் அவள் நம்மை விட வித்தியாசமானவள்..”

“வித்யாசமானவளா..??”, இது அபித்..

“ஆமாம்பூ.. மியில் உள்ள மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. அதன் வெளிபாடு நமக்கு கால்களில் விரல்கள் இல்லாமல் இருப்பதும் உடலில் இயற்கையாக முடிகள் வளராமல் இருப்பதும் என்று அன்று மிகி சொன்னதை கேட்டாய் அல்லவா அபித்..??”

ஆம் என்ற தலையசைப்பே பதிலாய் அபித்திடம்..

“பூமியின் வேர்ல்ட் ரெகார்டின் படி கடந்த ஐந்து ஜெனரேஷனாக எந்த ஒரு மனிதனும் கால்களில் விரல்கள் கொண்டு பிறக்கவில்லை என்றிருக்கிறது + ஏதோ ஒரு குறை அவன் உடலில் திண்ணம் என்பதே உண்மை.. பட் வசிஷ்டரா இஸ் அ எக்ஸ்செப்ஷன்..“, சிறு இடைவெளி விட்டவள், “ஷி இஸ் அ கம்ப்ளீட் ஹ்யூமன்..”, என்றாள்..

“இதை வைத்து மட்டும் அவள் பொழில் வாசி என முடிவு செய்துவிட முடியாது ஆத்யா..”, என்றான் மிகி..

“இது மட்டும் காரணம் அல்ல மிகி.. இன்று எதற்சையாக இரு பொழில் வாசிகள் பேசுவதை கேட்க நேரிட்டது.. அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் பூமியில் தொலைந்து போன ஒரு பெண் குழந்தை இங்கு வந்திருப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.. நம்மைத் தவிர இங்கு பூமியில் இருந்து எவரும் வரவில்லையே.. சோ இப் மை கெஸ் இஸ் ரைட் வசிஷ்டரா பிலோங்க்ஸ் டூ பொழில்..”, என்றாள்..

“நீ சொல்வது போல் வசிஷ்டிரா பொழில் வாசி என்றே வைத்துக் கொள்ளலாம் ஆத்யா.. ஒரு பொழில் வாசி பூமி வாசிகளை காப்பாற்றுவாளா..??”

“அவள் என்ன தான் பொழில் வாசியாக இருந்தாலும் பூமியில் வளர்ந்தவள்.. கண்டிப்பாக எங்களுக்கு உதவி செய்வாள்..”, என்றாள் ஆத்யா..

வசிஷ்டரா ஆத்யா நினைப்பது போல் பூமி வாசிகளுக்கு உதவி செய்வாளா..??

****************************************************************************************************

இடம் : பரிதி வனத்தின் தலைமை செயலகம்..

பூமி வாசிகள் அனைவரையும் விசாரனைக்காக பரிதி வனத்தின் தலைமை செயலகத்திற்கு அழைத்து வரப் பட்டிருந்தனர்..

தலைமைச் செயலகம் என்றவுடன் ஐம்பாது மாடி கட்டிடம் என்று கற்பனை செய்து கொண்டு வந்திருந்த பூமி வாசிகள் திண்ணையுடன் கூடி இருந்த ஓலைக் குடிலைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போயினர் பூமி வாசிகள்..

தங்களை அழைத்து வந்தவரிடம், “இது தான் தலைமை செயலமா..??”, ஆச்சர்யம் மீளாமல் கேட்டான் சாய்..

ஆம் என்பது போல் தலையசைதவன் திண்ணையைக் காட்டி, “இங்கே அமர்ந்திருங்கள்..”, என்றவன் சிறு பால் போன்ற ஒரு வஸ்துவைக் காட்டி, “இது ஒரு ஒலிபெருக்கி.. யாரின் பெயர் இதில் ஒலிக்கிறதோ அவர் உள்ளே செல்ல வேண்டும்..”, என்றவன் அக்குடைசையை சுற்றி முளைத்திருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சத் துவங்கினான்..

வைவாவிற்கு செல்லும் மாணவர்கள் போல் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை வெகு நேரம் காக்க வைக்காமல் ஒலிப்பெருக்கியில் இருந்து சாய் என்ற பெயர் ஒலித்தது..

தன்னுடன் வந்த பூமி வாசிகளை ஒரு முறை பார்த்தவன் குடிலின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்..

குளுமை குடிலை சூழ்ந்திருக்க மனதில் அவ்வள்ளவு நேரம் இருந்த படபடப்பு குறைந்து ஒரு வகை அமைதி பிறந்தது சாயின் மனதிற்குள்..

பொருட்கள் எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்த குடிலைக் கண்டு குழப்பமடைந்தவனை வெறும் தரையில் அமர்ந்திருந்த ஐம்பத்தி எட்டு வயது வயது பெண்மணி, “வாருங்கள் சாய்.. இப்படி அமருங்குகள்..”, என்றார்..

“அமர்வதா..?? அதுவும் தரையிலா..??”, என்பது போல் மனதில் நினைத்தவனின் எண்ண அலைகளைப் படித்தவர், “தரையில் தான் சாய்.. அமருங்கள்..”, என்றார் அழுத்தமாக..

சம்மன்னம் இட்டு அமரத் தெரியாமல் ததக் பிதக் என்று அமர்ந்தவனைத் தடுத்தவர் அமர்வது எப்படி என சொல்லிக் கொடுத்தார்..

கால்களை இதுவரை மடக்கி கீழே அமர்ந்து பழக்கமில்லாதவன் நெளிந்தபடியே அமர்ந்திருந்தான்..

அவனது செயல்களைக் கண்டு மனதில் சிரித்தவர், “என் பெயர் விலாசி.. நான் இந்த பிரதி வனத்தின் தலைமை அதிகாரி..”, என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்ட விலாசி, “சாய்.. நான் கேட்க போகும் கேள்விகளுக்கு உண்மையை மட்டும் தான் சொல்லனும்..”, என்றார் கட்டளை
போல்..

“ம்.. ம்..”, என்றான் சாய் தயக்கமாக..

அவனது தயக்கத்தை புரிந்து கொண்டார் போல், “இங்க பாருங்க சாய்.. நீங்கள் தயங்காமல் உண்மையை மட்டும் சொன்னால் தான் என்னால் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று சொல்ல முடியும்..”, என்றார் அழுத்தமாக..

அவரது குரலில் இருந்த ஏதோ ஒன்று சாயின் மனதை அசைத்தது என்றே சொல்ல வேண்டும்..

“கேளுங்க மேம்..”, என்றான் கொஞ்சம் திடமாக..

“நல்லது..”, என்ற விலாசி, “சொல்லுங்க சாய்.. எதற்காக நீங்கள் அனைவரும் எங்கள் கிரகத்திற்கு வந்தீர்கள்..??”

“இந்த கிரகத்தை ஆராய்ச்சி செய்ய வந்தோம் மேம்..”

“எங்கள் கிரகத்தை ஆராய்ச்சி செய்யவா..?? எதற்கு..??”

“இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது தெரிந்துகொள்ள..”

“தெரிந்து கொண்டு..??”

“அது வந்து..”

“தயங்காமல் சொல்லுங்கள் சாய்..”, ஊக்குவித்தார் விலாசி..

“எங்கள் கிரகத்திலிருந்து இந்த கிரகத்திற்கு மனிதர்களை இடமாற்றம் செய்ய..”

“இடமாற்றம்மா..?? எதற்கு..??”

“பூமியை ஒரு ஆராய்ச்சி கூடமாய் மாற்றிவிட்டு மனிதர்களை புதியதொரு
கிரகத்திற்கு மாற்ற..”

“என்னது..??”, தான் கேட்ட செய்தி சரியா என்பதறியா அதிர்ந்த விலாசி, “பூமியை ஆராய்ச்சி கூடமாய் மாற்றப் போகிறீர்களா..??”, என்றார் கேட்டார்..

ஆம் என்பது போல் தலையசைத்தவன், “ஏற்கனவே ஐம்பது சதவிகிதம் பூமியின் நிலப்பரப்பானது ஆராய்ச்சி கூடமாய் செயல்பட்டு வருகிறது.. புதிது புதிதாய் இன்னும் நிறைய திட்டங்கள் நிலுவையில் உள்ளது பூமியில் இடப் பற்றாக்குறையால்.. அதை சரி செய்யத் தான் மனிதர்களை வேறு கிரகத்திற்கு மாற்றல் செய்யும் திட்டம்..”

“நீங்கள்.. அதாவது பூமி வாசிகள் இதுவரை எங்கள் கிரகத்திற்குள் இதுவரை பிரவேசித்ததில்லையே.. பிறகு எப்படி உங்களுக்கு எங்கள் கிரகத்தைப் பற்றித் தெரிந்தது..??”, விடைத் தெரிந்த போதும் சாயிடம் கேட்டார் விலாசி..

“நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பூமியைப் போல் வேறு கிரகத்தை தேடத் துவங்கிவிட்டனர் பூமி ஆராய்ச்சியாளர்கள்.. ஆனால் அவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது..

இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முழுதாக உருண்டோடிய நிலையில் பூமியின் மேல் விழுந்தது சிறு விண்கல்.. அது உங்கள் சூரிய குடும்பத்தை சேர்ந்தது என்பதை சேர்ந்தது என்பதைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்..

சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பூமியைப் போலவே இங்கும் ஒரு கிரகம் இருக்கிறதா என்பதறிய ஆளில்லா ஸ்பேஸ் ஷிப்பில் எக்னா என்ற இயந்திர மனிதன் உங்கள் சூரிய குடும்பத்தை ஆராய்ச்சி செய்ய வந்தது..

எக்னா உங்களது குடும்பத்தைச் சேர்ந்த அணைத்து கிரகங்களுக்கும் சென்று சிறு சிறு ஆராய்ச்சிகள் செய்து விட்டு பூமிக்கு வந்தடந்தைது..

எக்னா மேற்கொண்டு அந்த ஆராய்ச்சி மூலமும் அது எடுத்து வந்த புகைப்படங்கள் மூலமும் பொழில் மனிதன் வாழத் தகுதியானது என்பதை அறிந்து கொண்டோம்..

மனிதர்கள் இங்கு வாழ முழு தகுதியுடையது என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப் பட்டிருந்தாலும் அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள எங்களை பூமியில் இருந்து இங்கு அனுப்பியிருக்கின்றனர்..”, என்றான் சாய் விளக்கமாக..

“சரி சாய்.. தேவைப்படும் பொழுது உங்களை அழைக்கிறோம்.. இப்பொழுது இப்போழ்து நீங்கள் போகலாம்..”, என்றார்..

போகச் சொன்ன பிறகும் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தவனைக் கண்டவர், ”என்னிடம் தாங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா..??”

ம்ம்ம் என்று சத்தம் எழுப்பியவன், ”நாங்கள் உங்கள் கிரகத்திற்கு வரும் முன்னே சிறைபிடிக்கப்பட்டோம் உங்கள் கிரகத்தவர்களால்.. ஆனால் இதற்கு முன் எக்னா இங்கு வந்த பொழுது நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை..??”

********************************************************************************************
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis mutationnala kaaal viralkap illaya boomivaasikaluku.......... pozhil is found to be free of pollution nice ............ nalla karpanai sis(y)(y)(y)(y)(y)(y)
ஆனால் இதற்கு முன் எக்னா இங்கு வந்த பொழுது நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை..??”
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: interesting
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top