• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedum nyaanam vignyaanam aayinum 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
இடம் : பரிதி வனத்தின் தலைமை செயலகம்..

ன் கண்களை தயக்கமாகவும் தீர்க்கமாகவும் பார்த்தபடியே, ”நாங்கள் உங்கள் கிரகத்திற்கு வரும் முன்னே சிறைபிடிக்கப்பட்டோம் உங்கள் கிரகத்தவர்களால்.. ஆனால் இதற்கு முன் எக்னா இங்கு வந்த பொழுது நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை..??”, கேட்ட சாயைப் பார்த்து சிரித்தவர், “எக்னா வந்த விண்வெளி கப்பலை நாங்கள் சிறை படுத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும் சாய்..??”, என்று கேள்வி எழுப்பினார்..

“சிம்பிள்.. பூமியில் இருந்து ஆராய்ச்சிக்காக எக்னா அனுப்பப்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. அது மட்டும் இல்லாமல்..”, என்றவன் சற்றே தயங்கி அவரைப் பார்த்தான்..

“சொல்லுங்கள் சாய்.. அதுவும் இல்லாமல்..??”, ஊக்குவித்தார் விலாசி..

“அதுவும் இல்லாமல் பூமி வாசிகளுக்கு பொழிலில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும்..”, என்றான் விட்டதைப் பார்த்தபடி..

“அது தெரிந்து நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..?? ஒன்று எங்கள் கிரகத்திற்கு படை எடுத்திருப்பீர்கள் இல்லையேல் வேறு கிரகத்தைத் தேடத் துவங்கியிருப்பீர்கள்..”

“எங்கள் கிரகத்தை விட உங்கள் கிரகம் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.. பொழிலில் இருந்து பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஒரு விண்வெளி கப்பல் வந்தாலே கண்டுபிடித்துவிடும் உங்களால் எங்களை எதிர்த்திருக்க முடியாதா..??”

“எதிர்க்க என்ன.. எங்களால் இங்கிருந்து கொண்டே உங்கள் கிரகத்தை அழிக்க முடியும்..”, என்றார் கொஞ்சமே கொஞ்சம் பெருமையாக..

“பிறகு ஏன் பொழிலில் மனிதர்கள் இருப்பதைப் பற்றி பூமி வாசிகள் தெரிந்துகொள்ளக் கூடாது என நினைத்தீர்கள்..??”

“வசிஷ்டராவிற்காக..”, ஒற்றை வார்த்தையாக..

“வாட்..?? வசிஷ்டிராவிற்காகவா..??”,அதிர்ந்தவன் நிதானித்து, “வசிஷ்டரா பூமியில் இருப்பது உங்களுக்கு முன்பே தெரியும் அப்படித்தானே..??”

“அதுவும் தெரியும்.. மனிதர்கள் வாழும் சூழல் பொழிலில் இருப்பது தெரிந்தால் பொழிலை ஆராய்ச்சி செய்ய மனிதர்கள் வருவார்கள் அதில் வசிஷ்டரா அடக்கம் என்பதும் தெரியும்..”, தோரணையாக..

“அப்போ இதெல்லாம் வசிஷ்ட்ராவை இங்கு கொண்டு வர நீங்கள் போட்ட திட்டம் அப்படித்தானே..??”, இப்பொழுது ஆத்திரமாக..

“நூறு சதவிகிதம்..”, அலட்டிக்கொள்ளாமல் சொன்னவரை கொலைவெறியுடன் பார்த்தான் சாய்..

அதை சட்டை செய்யாதவர், “இன்றைய விசாரணை முடிந்தது சாய்.. நீங்கள் அனைவரும் வனத்திற்குள் செல்லலாம்..”, என்று கூலாக சொன்னவர் வெளியே நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவனை அழைத்து அவர்களை பிரிதி வனத்திற்குள் அழைத்துச் செல்ல உத்தரவிட்டார்..

விலாசியை ஒன்றும் செய்ய முடியா ஆத்திரத்துடன் சாய் காற்றில் கைகளைக் குத்திவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து நடக்கத் துவங்கினான்..

****************************************************************************************************

இடம் : புலரி வனம்..

மிளிரின் இல்லம்..


வேலை முடிந்து வீடு திரும்பிய விலாசி தனக்காய் மிளிர் காத்திருப்பது கண்டு ஆச்சர்யப்பட்டு, “வானில் ஊர்வலம் போகவில்லையா நீ..??”, என்று கேலியாக கேட்டவரைக் கண்டு புன்னகைத்தான் புதல்வன்..

“என்னாச்சு மிளிர்..?? என்ன யோசனை..??”, இப்பொழுது வாஞ்சையாக..

“நாளைக்கு நான் காணி நிலத்திற்காக பதியலாம்னு இருக்கேன் மா..”

“முடிவு பண்ணிட்டியா மிளிர்..??”

“ஆமாம் மா.. இரண்டு மூன்று மாதமாகவே யோசிச்சுட்டு இருந்த விஷயம் தானே இது.. இது தான் சரியான நேரம்ன்னு நினைக்கிறேன்..”, என்றான் தெளிவாக..

“அப்பாக்கிட்ட சொல்லிட்டியா..??”

இல்லை என்பது போல் தலையசைதவன், “அவர் காணியில் இருந்து வந்து பிறகு சொல்லனும் மா..”

“விபு..??”

“அவன் இன்னும் யோசனையில் இருக்கான்..”

“யோசனையிலா..?? ஏன்..??”

“ஆமாம் மா.. வசிஷ்டரா நமது பொழிலுக்கு திரும்பி விட்டாள் அல்லவா.. அவளுக்கு நமது கிரகத்தை சுற்றிக் காண்பிக்க வேண்டுமாம்.. அதற்கு சில வாரங்கள் தேவைப்படுமாம்.. அதன் பிறகு பதிவு செய்கிறானாம்..”, இன்னும் சில காலம் சுதந்திரப் பறவையாய் இருக்கப் போகும் தன் நண்பனை நினைத்து சிறிது பொறாமையாய்..

அதைக் கண்டு கொண்ட அவனது தாயோ, “உனக்கு பொறாமை கண்ணா அவனைக் கண்டு..”, என்றார் கேலியாக..

அவரைச் செல்லமாக முறைத்தவன் அவர் கண்கள் சிரிப்பதைக் கண்டு தானும் அவருடன் சேர்ந்து சிரிக்கத் துவங்கினான்..

****************************************************************************************************

விபுவின் இல்லம்..

திருஷ்டி ராய் ரொட்டி சுட தங்கையும் தமையனும் வயிற்றை நிரப்பும் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர்..

“தம்பி.. மிளிர் காணி நிலத்திற்காக என்று பதியப் போகிறான்..??”

“நாளைக்கு மா..”

“நீயும் அவனுடனே பதிந்து விடலாம் அல்லவா..??”

“வசீ.. இப்பொழுது தானே இங்கு வந்திருக்கிறாள்.. அதனால் இன்னும் ஒரு மாதம் கழித்து பதியறேன் மா..”

அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த வசிஷ்டரா, “காணி நிலமா..??
அப்படீன்னா..??”

“காணி நிலம்னா விவசாயம் செய்யும் பூமி.. ஓடும் ஆற்றை ஒட்டியிருக்கும் நிலப்பகுதிகளை காணி நிலம் என்பர்..”, என்றான் விபு..

“அதற்கு எதற்கு நாம் பதிய வேண்டும்..??”

“நமது கிரகத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பமும் காணி நிலத்திற்காக பதிவு செய்ய வேண்டும் அரசுப் பனியில் ஈடுபட்டிருக்கும் குடும்பம் உட்பட.. நிலம் பதிவு செய்து இரண்டு வாரத்திற்குள் நிலம் குறிப்பிட்ட நபருக்கு அவரின் வயதைப் பொருத்து சில வருடங்கள் வழங்கப்படும்..
கொடுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து அரசு நிர்ணயிக்கப்பட்ட சந்தையில் நாம் விற்றுக்கொள்ளலாம்..”, என்றான்..

“அப்போ நீயும் நிலத்திற்கு பதிவு செய் விபு.. நான் விவசாயம் செய்வதை இதுவரை நேரில் கண்டதில்லை..”, என்றாள்..

“ஏன் வசீ.. பூமியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு நீ சென்றதில்லையா..??”, என்று கேட்டார் திருஷ்டி..

“பூமியில் நான் வாழ்ந்த பகுதியில் சில நூற்றாண்டுக்கு முன்னே விவசாயம் அழிந்துவிட்டது மா.. அதனால் அதை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை..”, என்றாள்..

“விவசாயம் அழியும் வரை மனிதர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருந்தார்கள்..??”, இப்பொழுது கோபம் போங்க கேட்டார்..

“வேடிக்கை பார்க்கவில்லை மா.. அலட்சியப் படுத்திவிட்டோம்..”, என்ற வசீ,

“சில நூற்றண்டுகளுக்கு முன்னர் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தது.. பல நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சி தான் பெரிது என்று நம்பி விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களே அறியாமல் அழித்துவிட்டனர்.. அதில் எங்களது நாடும் அடக்கம்..”, என்றாள்..

“விவசாயம் அழிந்துவிட்டது என்கிறாய்.. அப்படி என்றால் மனிதன் உண்பதற்கு உணவு..??”, கேள்வியாய்..

“விவசாயம் அழிந்து சில நூற்றாண்டுகள் பக்கத்துக்கு நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தோம்.. அண்டை நாடுகளிலும் உணவு பற்றாக்குறை வந்த பிறகு நிறைய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்து ஆராய்ச்சியாளர்கள் உணவிற்கு மாற்றாய் மாத்திரைகளை கண்டுபிடித்தனர்.. வயதிற்கேற்ப உடல் நிலைக்கேற்ப அனைவருக்கும் ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் வழங்குவார்கள் மருத்துவர்களின் பரிந்துரைப்படி..”

“நீயும் அதை உண்டு தான் பூமியில் வாழ்ந்தாயா..??”, இது விபு..

“எல்லாருக்கும் மாத்திரை தான் என்கின்ற போது நான் மட்டும் என்ன விதிவிளக்கா..??”, என்று கேட்டவள், “பூமியின் கதையை விடுங்கள்.. நாம் எப்பொழுது நிலத்திற்கு பதிவு செய்யப் போகிறோம்..??”, ஆவலாக..

-தேடல்கள் தொடரும்..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
agri ye athisayamana visayama aayitucha bhoomiyil:unsure::unsure::unsure::unsure: so sad aana pora pokka patha namma alatsyama iruntha mathirai saapitum nilai future generationku vanthurum:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: superb epi sis
 




vasumathi karunanidhi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
154
Reaction score
440
Location
coimbatore
agri ye athisayamana visayama aayitucha bhoomiyil:unsure::unsure::unsure::unsure: so sad aana pora pokka patha namma alatsyama iruntha mathirai saapitum nilai future generationku vanthurum:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: superb epi sis
Pora pokka paarthal aaga chance irukku sissy.. Enna thn ippo awareness create aagi irunthaalum muraiyaaka vivasayam seipavarkal sorpam pere..
Thank u sissy fr ur comments..☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top