Then Sinthum Poovanam! -14

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் – 14

அன்று காலேஜ் ரீஓபன்.. புதிய மாணவர்களை ராகிங் செய்ய ஒரு கூட்டமே மரத்தடியே கமிட்டி போட்டு கும்பல் கும்பலாக அமர்ந்திருந்தனர்.. கல்லூரியின் உள்ளே நுழைந்த புதிய மாணவ, மாணவிகளுடன் இணைந்த வண்ணம் கல்லூரிக்குள் நுழைந்த மான்விழியின் மனம் சிறகில்லாமல் பறக்க அவளுடன் சேர்ந்து நடந்த தீபிகாவின் மனமோ ஆயிரம் சிந்தனையுடன் வந்தது..

இவர்களைப் பார்த்த சீனியரில் ஒருவன், “ஏய் எங்கே தப்பிச்சு போக பார்க்கிற..?” என்றவன் கேட்டதும் மான்விழியின் கண்கள் படபடக்க தீபிகாவைப் பார்க்க அவளோ எதை பற்றியும் பயமே இல்லாமல், “நான் உன்னிடம் இருந்து தப்பிக்க நினைத்தேனா..?” என்று திமிருடன் கேட்டாள்..

அவளின் திமிரைக் கண்ட கூட்டத்தின் தலைவன், “என்ன ரொம்ப திமிராக பேசற..” என்றவன் கேள்வி கேட்க, “ஆமா திமிராகத்தான் பேசுவேன்..” என்றவள் பதில் சொல்ல, “அந்த திமிரோட போய் அதோ அந்த கேண்டீன் உள்ளே நுழையும் புளூ கலர் சர்ட்..” என்றவன் திசையைக் காட்டிட அங்கே பார்வையை திருப்பினாள் தீபிகா..

“அவனிடம் லவ் பிரபோஸ் பண்ணிட்டு, ‘என்னோட வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உங்களோட மட்டும்தான்..’ என்று வசனம் பேசிவிட்டுவா..” என்றான்..

“ம்ம் ஓகே..” என்று தீபிகா நகர்ந்துவிட மான்விழியின் பதட்டம் அதிகமாக எச்சிலை விழுங்கிய வண்ணம் அவர்களைப் பயத்துடன் பார்த்த மான்விழியின் பார்வை அவனை என்ன செய்ததோ, “உன்னோட பெயர் என்ன..?” என்று கேட்டான்..

“மான்விழி..” என்றவள் பயத்துடன் சொல்ல, “மான்விழி..” என்றவளின் பெயரைச் சொல்லி பார்த்தவன், “நல்ல இருக்கு” என்றவன் தொடர்ந்து, “நீ உன்னோட கிளாஸ் ரூம் போ மான்விழி..” என்றவன் சொல்ல சரியென தலையசைத்து நகர்ந்துவிட்டாள்..

அவள் சென்றதும் அங்கிருந்தவர்கள் அவனை இமைக்காமல் பார்க்க, “ஏற்கனவே பயந்துட்டு இருக்கும் பெண்ணின் மனதில் நம்ம எதுக்குடா தேவை இல்லாத பயத்தை விதைக்கணும்..?” என்று சொல்ல, “அவன் சொல்வதிலும் தவறில்லை..” என்றவர்கள் அந்த விஷயத்தை அத்தோடு விட்டுவிட்டனர்..

அவர்கள் சொன்னது போலவே கேண்டீன் உள்ளே நுழைந்த தீபியின் பார்வை அங்கே புளூ கலர் சர்ட் அணிந்த நபரை தேட அவளுக்கு முதுகாட்டி அமர்ந்தவனின் அருகில் சென்ற தீபிகா, “ஹலோ..” என்றழைக்க வேகமாக நிமிர்ந்த சந்தோஷ் விழிகள் அவளை அடையாளம் கண்டதும், ‘இவள் எப்படி இங்கே..?’ என்றவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்..

அவன் சந்தோஷ் என்று முதல் பார்வையில் அடையாளம் கண்டு கொண்ட தீபிகா, “சந்தோஷ் ஐ லவ் யூ.. எனக்கு திருமணம் என்ற ஒன்று நடந்தால் அது உன்கூட மட்டும்தான்..” என்றவள் ரோஜா பூவை அவனின் முகத்தின் முன்னாடி புன்னகையுடன் நீட்டியவள் பார்வை பிரியாவின் மீதே இருந்தது.. அவளைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தாள் பிரியா...

‘இது தான் என்னோட முதல் அடி..’ என்று விஷயமத்துடன் சிரித்து வைக்க இகழ்ச்சியாக ஔ புன்னகை சிந்திய ‘உன்னிடம் பேசி போராடி நான் வெல்வேன் என்று நினைக்கிறாயா தீபி.. என்னோட காதல் உண்மை என்றால் என்னோட அத்து எனக்கு கிடைப்பார்..’ என்றவள் அவளின் பார்வையை எதிர்கொண்டாள்..

அவளைப் பார்த்த சங்கமித்ராவிற்கு கோபம் தலைகேற, ‘பிரச்சனை ரயிலேறி சென்னை வந்திருக்கு..’ என்றவள் அண்ணனின் முகத்தைக் கேள்வியாக பார்க்க தீபியை இமைக்காமல் பார்த்த சந்தோஷ், “உங்களோட நேம்..?” என்று மட்டும் கேட்க பிரியா அவனை முறைத்தாள்..

“தீபிகா..” என்றவள் சொன்னதும், “ஐ லவ் யூ தீபிகா..” என்றவளின் கையில் இருந்து பூவை வாங்கிட அவளின் உள்ளம் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க, “லவ் யூ சந்தோஷ்..” என்றவள் பிரியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்துவிட, சங்கமித்ராவின் உள்ளம் தான் தீயாக கொதித்தது..

அவள் சென்ற திசையைப் பார்த்து கொண்டிருந்த அண்ணனை கொலைவெறியுடன் பார்த்தவள், “டேய் நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கிற.. உனக்கு என்ன லூசா..” என்றவள் கோபத்தில் கேட்டதும் அவளின் கரத்தை பிடித்து அழுத்திய பிரியா, “மிது பொறுமையாக இரு..” என்றவளை பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான் சந்தோஷ்..

“சந்தோஷ் அந்த பொண்ணு பற்றி நீ என்ன நினைக்கிற..” என்று சாதாரணமாக கேட்க, அவளின் கேள்வியில் பிரியாவின் கையை உதறிவிட்டு எழுந்த சங்கமித்ரா, “காதலி முன்னாடியே இன்னொருத்திக்கு பிரபோஸ் பண்ற..” என்றவள் கோபத்தில் எகிறினாள்..

“மித்ரா உனக்கு என்ன பைத்தியமா..? நான் பிரியாவை காதலிக்கிறேன் என்று உனக்கு யார் சொன்னது..?” என்று கேட்டவன் பிரியாவின் முகத்தை அழுத்தத்துடன் பார்த்தான்.. அவனின் பார்வையை எதிர்கொண்ட பிரியா, “சந்தோஷ்..” என்றவள் கோபத்தில் பல்லைக்கடித்தாள்..

“ஸாரி பிரியா உன்னோட மனசில் இப்படியொரு எண்ணம் இருக்குது என்பதே எனக்கு தெரியாது.. எனக்கு தீபிகாவை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவளை நான் காதலிக்க போகிறேன்..” என்றவன் தன்னுடைய முடிவை அவளிடம் மறைக்காமல் கூறினான்..

அவனின் பார்வை அவளின் மீது நிலைத்திருக்க, ‘இன்றாவது என்னிடம் உண்மையைச் சொல்லுடி.. தீபிக்கு உன்மேல் உரிமை இல்ல.. எனக்குத்தான் சந்தோஷ் மீது முழுஉரிமையும் இருக்கு என்று சொல்லுடி..’ என்றவன் மனதில் நினைத்தவண்ணம் அவளையே இமைக்காமல் பார்க்க, சங்கமித்ராவோ பிரியாவின் பதிலை எதிர்பார்த்து நின்றாள்..

அவன் சொன்னதைக்கேட்டு அவளின் உள்ளம் வலித்தாலும் தன்னுடைய வலியைத் தனக்குள் மறைத்துக்கொண்டு, “ரொம்ப ஹாப்பி.. நீ யாரையோ லவ் பண்ணு.. எனக்கு என்ன பிரச்சனை.. எப்படியோ நான் உன்னிடம் இருந்து தப்பித்தேன்..” என்றவள் அக்கறையின்றி சொல்லிவிட்டு எழுந்து சென்ற பிரியாவைப் பின்தொடர்ந்து சென்றாள் சங்கமித்ரா..

சந்தோஷிடம் ப்ரபோஸ் செய்துவிட்டு தீபிகா நேராக அந்த ராகிங் கும்பலிடம் வந்து, “ரொம்ப தேங்க்ஸ்பா.. என்னோட வேலையை நீங்க ரொம்பவே சுலபம் ஆகிட்டீங்க..” என்றவள் நிற்காமல் சந்தோஷமாகச் செல்ல, “இவளிடம் ஏதோ தவறாக இருக்கு மச்சி..” என்று வாய்விட்டு கூறினான் கேன்கின் தலைவன்..

நேராக தன்னுடைய வகுப்பிற்கு சென்ற தீபிகா, “மானு.. மானு.. நான் சந்தோஷ் கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டேன்.. பிரியா முகம் எந்தமாதிரி போச்சு தெரியுமா..” என்றவள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறையாக கூறினாள்..

அவளை நிமிர்ந்து பார்த்த மான்விழி, ‘என்ன விஷயமாக இருக்கும்..? எதுக்கு இவள் இந்த குதி குதிக்கிற..?’ என்றவள் தீவிரமாக யோசித்தவள், ‘இவளே குட்டையை குழப்பிவிட்டு மீன் பிடிப்படிப்பவள்..’ என்று நினைத்தவளின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது..

அவளின் பார்வையைக் கவனித்த தீபிகா, “என்னடி ரியாக்ட் பண்ணாமல் இருக்க..??” என்றவள் கேட்டதுமே, “ஏய் எதுவாக இழுத்தாலும் தெளிவாக சொல்லுடி..” என்று மான்விழி அவளிடம் சண்டை போட, “சரி சரி நான் தெளிவாக சொல்றேன்..” என்றவள் கீழே கேண்டீனில் நடத்த நிகழ்ச்சியை மான்விழியிடம் கூறினாள்..

“அதுக்கு இப்போ என்ன பண்ணனும் தீபி..” என்றவள் அக்கரையின்றிக் கேட்டதும், “மானு அவங்க யாருமே சந்தோஷமாக இருக்கக்கூடாது மானு.. என்னோட முதலடியிலேயே எனக்கு வெற்றி..” என்றவள் சொல்ல, ‘அடிப்பாவி உன்னோட கண்ணு முன்னாடி யாரும் சந்தோஷமாக இருக்க கூடாதா..?’ என்றவள் மனதில் நினைத்தாள்..

“ஆமா மானு.. அவங்க யாருமே சந்தோஷமாக இருக்கக்கூடாது..” என்றவள் சொல்ல, ‘இந்த விஷயத்தில் உன்னை சரியாக புரிந்து வைத்திருக்கிறேன்.. ரொம்ப நல்ல குணம்..’ என்று எரிச்சலுடன் நினைத்தாள் மான்விழி..

பிறகு அவளின் பழிவெறியைப் பார்த்தவள், ‘என்னால இவள் சந்தோஷ் அண்ணாவை நெருங்கினால், பிரியாக்கா என்னை என்ன கேள்வி கேட்பாங்க என்றே தெரியாது.. நம்முடைய படிப்பை மட்டும் பார்ப்போம்.. என்னால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது..’ என்று மனதினுள் ஒரு உறுதியை எடுத்துக்கொண்டாள் மான்விழி.

‘அவளே சென்று அவர்களிடம் பேசுவாள்..’ என்றவள் அப்பொழுது உணரவில்லை.. அவள் அதை உணரும் பொழுது காலம் கடந்திருந்தது..
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
அங்கே நடந்தது அனைத்தையும் பார்த்த அசோக்கிற்கு சந்தோஷ் மீது கோபம் வர, “ஏண்டா நீ இப்படியெல்லாம் பண்ற..” என்றவன் அவனிடம் கேள்விக் கேட்டு அவனின் அருகில் அமர, “உனக்கு இந்த விளையாட்டு புரியாது அசோக்.. அதனால் காரணத்தை என்னிடம் இதைபற்றிக் கேட்காதே..” என்று ஒருவரியில் சொல்லிவிட்டு எழுந்து சென்றான் சந்தோஷ்..

அவர்கள் கிளாசிற்கு நுழைய, “ஏய் பிரியா நில்லு.. நீ என்னோட அண்ணாவைக் காதலிக்கவே இல்ல..” என்றவள் கேட்டது நிமிர்ந்த பிரியா, “நான் காதலிக்கிறேன்.. இதை உன்னோட அண்ணனிடம் நான் சொன்னதும் என்ன பண்ணுவான் வீம்பிற்கு வேண்டும் என்றே வேறொரு பெண்ணைக் காதலித்து திருமணம் பண்ணுவான்..” என்றவள் தொடர்ந்து,

“தேவையா இது எனக்கு..” என்று கோபத்துடன் கேட்க, “முட்டாள்..” என்று பிரியாவைத் திட்டிய மித்ரா, “நீ சொல்லாமல் இருப்பதால் மட்டும் அவன் உன்னைக் காதலிப்பான் என்று நினைக்கிறீயா..?” என்றவள் கோபத்துடன் கேட்டதும்,

“எனக்கு எதைபற்றியும் கவலையில்லை.. அவர் யாரையோ காதலிக்கட்டும்.. கல்யாணம் பண்ணட்டும்.. நான் எதற்கும் குறுக்கே நிற்க மாட்டேன்..” என்றவள் அத்துடன் அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டாள்..

அவள் பேசுவதை எல்லாம் அப்பொழுது வகுப்பிற்குள் நுழைந்த சந்தோஷ் கேட்டுவிட, ‘இவளோட மனசில் என்னதான் நினைச்சிட்டு இருக்கிறன்னு தெரியல.. எந்த பிரச்சனையும் வாய்திறந்து பேசாமல் தீர்வு கிடைக்கணும் என்று நினைக்கிறளோ..’ என்று எரிச்சலுடன் நினைத்தான்..

இதுவரை ஒற்றுமையாக இருந்ததும், இப்பொழுது எல்லோரும் சண்டை போடுவதும் அவனுக்கு குழப்பமாக இருக்க வகுப்பு முடிந்ததும் எல்லோரும் கிளம்பிச் செல்ல யோசனையுடன் தனியாக நடந்த மித்ராவின் அருகில் வேகமாகச் சென்ற அசோக், “மித்ரா..” என்று அழைத்தான்..

அவள் நின்று அவனின் முகம் பார்க்க, “பிரியா ஏன் சந்தோஷிடம் சொன்னாங்க.. என்ன காரணம்..?” என்று மித்ராவிடமே கேட்க, அவனையே இமைக்காமல் சிலநொடி பார்த்தவள், “என்னோட அண்ணாவிடம் ஒரு குணம்.. நம்ம எதை செய் என்று சொல்கிறோமோ அதை செய்யவே மாட்டான்... எதை செய்யாதே என்று சொல்றோமோ அதைதான் முதலில் செய்வான்..” என்றவள் நிதானமாகக் கூறினாள்..

அவள் சொல்லும் விஷயம் அசோக்கிற்கு புரிந்தாலும், “அதற்கும் பிரியா சொன்ன விசயத்திற்கும் என்ன சம்மதம்..?” என்றவன் புரியாமல் கேட்டதும் வாய்விட்டுச் சிரித்த சங்கமித்ரா, “பிரியா தீபியை லவ் பண்ண சொல்ற இல்ல.. அப்போ அவன் தீபியை லவ் பண்ண மாட்டான் என்று அர்த்தம்..” என்றவள் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்..

இவர்கள் பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்த தீபிகாவின் மனம் ஆயிரம் கணக்கு போட்டது.. அந்த கல்லூரியை அவளுக்கு ரொம்பவே பிடித்து போனது.. கல்லூரியில் கால்வைத்த முதல் நாளே தன்னுடைய முதல் சூழ்ச்சியில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தாள் தீபிகா..

அதன்பிறகு வந்த நாளில் சந்தோஷ் முற்றிலும் மாறிப்போனான்.. சங்கமித்ரா, பிரியாதர்ஷினியுடன் பேசுவதை நிறுத்திவிட்டான்.. அவன் கல்லூரியில் இருக்கும் நேரத்தில் எல்லாம் தீபிகா ஏதோ ஒரு காரணத்தை வைத்துகொண்டு அவனைப் பார்க்க கிளாசிற்கு வர ஆரம்பித்தாள்..

அவள் வகுப்பிற்கு வந்து பேசும் பொழுது எல்லாம் பிரியாவின் பார்வை இவர்களின் மீதே இருக்கும்.. தீபிகாவோ பிரியாவை வெறுப்பேற்ற நினைத்து வேண்டுமென்றே சந்தோஷை நெருங்கி நின்று பேசுவாள்.. ஆனால் சந்தோஷ் அவள் சொல்வது எதையுமே காதில் வாங்காமல் அவள் சொல்வதற்கு எல்லாம், “ம்ம்..” மட்டும் போடுவான்..

அவனின் கவனம் முழுவதும் பிரியாவின் முகபாவனைகளை துல்லியமாக கவனித்து கொண்டிருக்கும்.. அவளையே இமைக்காமல் பார்க்கும் சந்தோஷ் பார்வையில், ‘என்னோட மனதில் இருப்பவள் நீதான்..’ என்று அவளுக்கு உணர்த்திவிடுவான்..

அவளோ, ‘ராஸ்கல் வேண்டுமென்றே எல்லாம் பண்ணுகிறான்..’ என்று பல்லைக்கடிக்க இதையெல்லாம் அவளின் அருகில் இருந்து கவனிக்கும் சங்கமித்ராவோ, ‘உங்களோட காதலை அறியாத அந்த மக்கு திட்டு போடுகிறதே.. அதை என்ன செய்யறது என்று தெரியல..’ என்று யோசிப்பாள்..

பாவம் அவன் தன்னை மறைமுகமாக கலாய்த்து கொண்டிருப்பதை அறியாமல் கேண்டீன் வரும் பிரியாவிடம், “இப்பொழுதாவது புரிந்ததா..? சந்தோஷ் ரொம்ப நல்லவன் என்று சொல்லிட்டு இருப்ப.. இப்போ என்னோட பழகுவதை தடுக்க உன்னால் முடியவில்லை..” என்றவள் பிரியாவை ஏளனம் செய்வாள்..

அதெல்லாம் காதிலே வாங்காத பிரியாவோ, “மித்து உனக்கு என்ன வேண்டும்..? நான் வாங்கிட்டு வருகிறேன்..” என்று எழுந்து சென்றாலும் அவள் வரும் வரையில் நின்று இருக்கும் தீபியை பார்த்து மித்ராவிற்கு பத்திக்கொண்டு வரும்.. சிலநேரங்களில் பிரியாவின் பொறுமையும், அமைதியும் மித்ராவை பத்திரகாளியாக உருவம் எடுக்கவும் செய்யும்..

“உனக்கு சந்தோஷ் கிடைக்கவே மாட்டான்.. நான்தான் அந்த வீட்டுக்கு மருமகளாக வர போகிறேன்..” என்றவள் திமிருடன் சொல்லிவிட்டு சென்ற பிறகும் அமைதியாக இருக்கும் பிரியாவைப் பார்த்து, “அவளை நாலு வார்த்தை நல்ல கேட்டா அவ எதுக்கு உன்னிடம் வம்பிற்கு வர போகிறாள்..” என்று மித்ரா சில நேரங்களில் கேட்பாள்..

“அவளே சின்ன பொண்ணு.. அவளோட ரேஞ்சிற்கு நம்ம இறங்கவே கூடாது.. எதுவாக இருந்தாலும் அமைதியாக இருந்து சாதிக்கணும்.. பொறுமை ரொம்பவே அவசியம் மித்ரா..” என்றவள் எழுந்து கிளாஸ் ரூமிற்கு சென்றுவிடுவாள்.. அவளின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை மித்ராவிற்கு புரிந்தாலும் கூட அவளின் மனம் தோழியின் வாழ்க்கையை எண்ணி துடித்தது..

இவர்கள் சண்டையில் மண்டை காயும் மித்ராவிற்கு, “விடு மித்ரா எல்லாமே சரியாகிவிடும்..” என்று ஆறுதல் அளிப்பான்.. மீண்டும் மறுநாளில் இருந்தே இது தொடர்கதையாக மாறிவிடும்.. தீபியைப் பார்க்கும் பொழுது எல்லாம் மித்ராவிற்கு வரும் கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காட்டும் மித்ராவிற்கு வர வர சந்தோஷை சுத்தமாக பிடிக்காமல் போனது..

அன்றும் அதுபோல பிரியாவிடம் வம்பிழுக்க வந்த தீபிகாவின் பின்னோடு வந்த தன்னுடைய அண்ணனை முறைத்தவள், “உங்கள் இருவருக்கும் இங்கே என்ன வேலை..” என்றவள் கேட்டதும், “ஆமா நீ பார்க் கட்டி விட்டிருக்க.. ஐவரும் நானும் லவ் பண்ண வந்தோம் பாரு..” என்ற தீபிகா பிரியாவை முறைத்தாள்..

அவளோ சலனமே இல்லாமல் தீபிகாவின் பார்வையை எதிர்கொள்ள, “என்னைவிட நீ இவரை ரொம்ப தெளிவாக புரிந்து வச்சிருக்க என்று சொல்றாரு..” என்றவள் கொலைவெறியுடன் கேட்க மித்ராவிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

‘அட லூசே உண்மையே அதுதான்.. அவங்க இருவரும் தான்களோட காதல் ஜெய்க்கனும் என்று நினைச்சிட்டு இருக்காங்க.. அதுக்கு உன்னை ஒரு கருவியாக பயன்படுத்துவது கூட உனக்கு தெரியல..’ என்று மனதிற்குள் அவர்களை வறுத்தெடுப்பாள்..

மித்ராவின் முகம் பார்த்த சந்தோஷ், ‘எப்படி நம்ம வெடிகுண்டு..’ என்றவள் தங்கையிடம் பார்வையில் வினாவ, ‘ஐயோ என்னோட அண்ணா நீதான்..’ என்று பார்வையால் பதிலைக் கூறிய மித்ரா சந்தோஷத்தில் இருவரையும் கவனிக்க, “அவரு ஆயிரம் பொய் சொல்வாரு.. நான் அதற்கு பொறுப்பாக முடியுமா..” என்றவள் இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்டாள்..

அப்பொழுது லைப்ரரியில் இருந்து வெளியே வந்த மான்விழி, ‘அங்கே தீபிகா நிற்பது போல தெரியுதே..’ என்றவள் நால்வரும் மரத்தடியே நின்று சண்டை போடுவதை தூரத்தில் இஉனது கவனித்தவண்ணம் அவர்களின் அருகில் சென்றாள்..

அவர்களின் அருகில் சென்றதும் அவர்கள் நால்வரும் சண்டை போட வேகமாக அருகில் சென்ற மான்விழி, “தீபிகா இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற..” என்றவள் கேட்டதும் அது மான்விழியின் குரல் என்று வேகமாக திரும்பிப் பார்த்தாள் பிரியா.. மான்விலியோ அவளை எனக்கு யார் என்றே தெரியாது என்ற ரேஞ்சில் நின்றிருந்தாள்...

மான்விழியை அங்கே கண்டதும் பிரியாவின் கண்கள் இரண்டும் ஆச்சர்யத்தில் விரிய, “மானு..” என்று மகிழ்ச்சியுடன் அழைக்க, அப்பொழுதுதான் மானுவைப் பார்த்த சந்தோஷ், “ஹே மானு நீ எப்படி இங்கே..” என்றவனும் அளவில்லா மகிழ்ச்சியில் கேட்டான்..

யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லாத மான்விழி தீபியின் பக்கம் திரும்பி, “நீ ஏண்டி பதில் சொல்லாமல் ஊமை மாதிரி நிற்கிற..” என்றவள் வேறுமாதிரி பேசினாள்.. அவளின் பேச்சு இருந்த வித்தியாசத்தை நொடியில் உணர்ந்த பிரியாவின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது..

அவளின் பேச்சில் மித்ராவிற்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட, “ஏய் மானு உனக்கு எங்களை யாருன்னு தெரியல..” என்றவள் கேட்டதும், “அதெல்லாம் ஒரு காலத்தில் உங்களை எல்லாம் எனக்கு நல்ல தெரியும்.. ஆனால் இப்போ உங்களோட முகம் பார்க்க கூட அருவருப்பாக இருக்கு..” என்று முகத்தை திருப்பிய மான்விழியைப் பார்த்து அதிர்ந்தனர் மித்ராவும், பிரியாவும்..!

அவளின் பேச்சில் அதுவரை அமைதியாக இருந்த சந்தோஷிற்கு கோபம் வந்தது.. மான்விழி ஏன் இப்படி மாறிபோனாள்..??
 

Latest Episodes

Sponsored Links

Top