Then Sinthum Poovanam! - 19

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் – 19

ஐந்து பேரும் நேரம் செல்வதைக் கூட மறந்து அறையில் அமர்ந்திருந்த எல்லோரின் நினைவிலும் கடந்தகாலம் கனவு போல கரைந்து செல்ல, “எல்லாமே கனவு மாதிரி இருக்கு.. ஆனால் மானுவோட இழப்பும் சரி, தேனுவின் பிரிவும் சரி என்னோட மனசில் பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டது..” என்றான் சந்தோஷ்..

“அண்ணா அண்ணி உன்னோட பீல் பண்றாங்க தெரியுமா..?” என்று கேட்க தம்பியின் தலையைக் களைத்தவன், “அவளோட மனசு எனக்குத் தெரியும் சஞ்சீவ்.. அவள் புரிந்தும் புரியாதது போல வீம்பு பண்ணிட்டு இருக்கிற..” என்றவனைப் பார்க்கவே சஞ்சீவிற்கு பாவமாக இருந்தது..

“அண்ணா.. நான் அண்ணியிடம் பேசட்டுமா..?” என்றவன் தயங்கித் தயங்கிக் கேட்க, “டேய் அதெல்லாம் வேண்டாம் அவளே வருவாள்.. அதனால் கவலைப்படாமல் நீங்க எல்லோரும் போய் தூங்குங்க..” என்றவன் கூலாகக் கூறினான்..

“அது எப்படி தானாக வருவாங்க..” என்று தங்கைகள் மூவரும் கோரஸாகக் கேட்க, “அது எப்படி என்ன என்று அவள் வரும் பொழுது உங்களுக்கே தெரிந்துவிடும்..” என்றவன் புன்னகையோடு புதிர்போட்டான் சந்தோஷ்..

“அண்ணா நீ என்னவோ பண்ணிட்டுதான் வந்திருக்கிற.. எனக்கு நல்ல தெரிஞ்சி போச்சு..” என்றவள் அவனின் மீது தலையணைத் தூக்கி எறிந்துவிட்டு அறையின் கதவை நோக்கி செல்ல சந்தோஷ் செல்லடிக்க, “மித்ரா உனக்கு போன்..” என்றவன் மற்ற மூவரும் புரியாத பார்வை பார்த்தனர்..

“அண்ணா உன்னோட செல் அடிக்குது என்றால் உனக்குத்தான் போன் வருது என்று அர்த்தம்.. ஆனால் இது எங்கையோ இடிக்கிதே..” என்று மதுபாலா யோசனையுடன் சொல்ல அறையின் கதவு வரையில் சென்ற மித்ரா மீண்டும் திரும்பி வந்தாள்..

“ஆமா நீ சொல்வது சரிதான் அது எப்படி..” என்றவள் யோசனையோடு அண்ணனின் கையில் இருந்து செல்லை வாங்கி, “ஹலோ..” என்று சொல்ல மறுபக்கம் மௌனம் நிலவியது..

“அண்ணா எங்களுக்கு ஏதோ சஸ்பென்ஸ் வைக்கிற என்ன என்று சொல்லு..” என்று சஞ்சனா சிணுங்கிட, “ஆமா மித்ரா அக்கா யார் கூட பேச போகிறாள்..” என்று விளக்கம் கேட்டான் சஞ்சீவ்.. அதற்கு எல்லாம் பதில் சொல்லாத சந்தோஷ், “அதுதான் சஸ்பென்ஸ்..” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே சென்றான்..

மூவரும் அங்கேயே நின்றிருக்க, “வாங்க நம்ம எல்லோரும் கீழே போகலாம்.. மேடம் இன்னைக்கு சாப்பிட வரவும் மாட்டாங்க.. தூக்க போகவும் மாட்டாங்க..” என்றவன் குறும்பு புன்னகையோடு கண்சிமிட்டினான்.. அண்ணனின் செய்கையில் இருந்து எதையோ உணர்ந்த மித்ரா உள்ளம் படபடவென்று அடித்தது கொண்டது..

மூவரும் அவனின் பின்னோடு செல்ல, “ஹலோ அசோக்..” என்று அழைக்க அவளின் அழைப்பு அவனின் உயிர்வரைத் தீண்ட, “எப்படி இருக்கிற மித்ரா..” என்று கேட்டான் அசோக்..

“நான் நல்ல இருக்கேன்.. நீ நல்ல இருக்கிறாயா..?” என்றவள் அவனிடம் கேட்க, “நான் நல்ல இருக்கேன்..” என்றவன், “அடுத்தவாரம் உன்னைப் பெண்கேட்டு உங்க வீட்டுக்கு வர போகிறேன்..” என்றவன் சொல்ல ஆனந்த அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள் மித்ரா..

“ஹலோ மேடம் இதுக்கே சிலையென நின்றால் என்ன அர்த்தம்..” என்றவன் அவளிடம் வம்பிழுக்க, “எனக்கு ஷாக் ஆக இருக்கு அசோக்..” என்றவள் சொல்ல, “எல்லாம் உன்னோட அண்ணாவின் ஏற்பாடுதான்..” என்றவன் அவளிடம் சொல்ல, “அண்ணாவோட ஏற்பாடா..?” என்று கேட்டாள் சங்கமித்ரா..

“ஆமா உன்னோட அண்ணாதான் போனவாரம் போன் பண்ணி இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்கிற என்று மிரட்டினான்..” என்றவன் சிரித்துக்கொண்டே சொல்ல, “அவன் எதற்கு உன்னை மிரட்ட போகிறான்..” என்றவள் புரியாமல் கேட்டாள்..

“உன்னைவிட்டு வேற யாராவது பெண்ணை நான்கல்யாணம் பண்ணிட்டேனோ என்ற சந்தேகம் வந்திருக்கும்..” என்றவன், “நம்ம காதலிச்ச விஷயம் அவனுக்கு நல்லாவே தெரியும்.. தீபிகா அவனிடம் போட்டு கொடுத்ததும் ஒருநாள் வந்து என்னிடம் கேட்டான்.. குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து கொஞ்சம் டைம் கேட்டேன்..” என்றவள் சொல்ல, “அண்ணா என்ன சொன்னான்..?” என்றவள் வேகமாகக் கேட்டாள்..

“எனக்கு நான்கு வருடம் டைம் கொடுத்தான்.. இப்போ அந்த டைம் முடிந்துவிட்டது போன் போட்டு நல்ல திட்டினான்.. அப்பாவிடம் உண்மையைச் சொன்னேன்.. அப்பா ஓகே சொல்லிட்டார்..” என்றவன் சொல்லிமுடிக்க, “ஹப்பாடா எல்லாம் நல்லபடியாக முடிந்தது..” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் மித்ரா..

காலையில் வந்ததில் இருந்தே அறையில் இருந்தே மற்ற மூவரும் அறையைவிட்டு வெளியே வந்தும், “அண்ணா நாங்க போய் குளிச்சிட்டு கொஞ்சநேரம் தூங்குகிறோம்..” என்றதும், “சரி நீங்க போய் தூங்குங்க..” என்றவன் ஹாலிற்கு சென்றான்..

அபிநந்தன், அர்ஜூன், சந்துரு, விக்ரம் நால்வரும் அமர்ந்து சந்தோஷ் திருமண விசயமாக திட்டமிட, “மாமா என்ன சொன்னால் உங்க அருமை மகள்..” என்று அவரை வம்பிழுத்த வண்ணம் சோபாவில் வந்து அமர்ந்தான் சந்தோஷ்..

“அவளா உனக்கு யாரைப்பார்த்து கட்டிவைத்தாலும் அவளுக்கு ஓகே என்று சொன்னால் சந்தோஷ்..” என்றவரும் புன்னகையோடு சொல்ல, “யாரு அவளா அப்படி சொன்னது.. நாளைக்கு பதறியடித்து கொண்டு வருவாள் இல்ல.. அப்போ அப்போ கவனிச்சிக்கிறேன்..” என்றவனும் வாய்விட்டுச் சிரித்தான்..

பலநாளுக்கு பிறகு வாய்விட்டு சிரித்த மகனைப் பார்த்த அபிநந்தன், “என்ன சந்தோஷ்.. சேலம் போய் ஏதோ கோல்மால் பண்ணிட்டு வந்துவிட்டாயா..?” என்ரவ குறும்புடன் கண்சிமிட்டி கேட்டார்..

“அப்பா..” என்று சிணுங்கிய சந்தோஷ், “அதெல்லாம் எந்த கோல்மாலும் நான் பண்ணல..” என்றவன் சிரித்துக்கொண்டே சொல்ல, “நந்தா எனக்கு எங்கையோ இடிக்குது..” என்று வேகமாக கூறினார் சந்துரு..

“நீங்களுமா..?” என்றவன் நந்தனின் பக்கம் திரும்பி, “அப்பா அசோக் என்னோட க்ளோஸ் ப்ரிண்ட.. அவனுக்கு நம்ம மித்ராவை ரொம்ப பிடித்திருக்கிறது.. நாளைக்கு பெண் கேட்டு வீட்டிற்கு வருகிறான்..” என்று நந்தனிடம் கூறினான்..

“அந்த பையனுக்கு காசு பணம் இல்லாட்டியும் பரவல்ல சந்தோஷ்.. நம்ம பெண்ணை வைத்து அவன் நல்ல பார்த்து கொள்வானா..?” என்று அர்ஜூன் கேட்க, “நம்ம அவளைப் பார்த்துக் கொள்வதைவிட அவன் நல்ல பார்த்துகொள்வான் சித்தப்பா..” என்று உறுதியுடன் கூறினான்..

அப்பொழுது அபிநந்தனுக்கு போன் வர, “ஹலோ..” என்றவர் சொல்ல, “நந்தன் நான் பிரதாப் பேசுகிறேன்.. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க.. ஆமா நம்ம மதுவிற்கு எதாவது வரன் பார்த்து இருக்கீங்களா..” என்றவர் கேட்டார்..

அர்ஜூனைப் பார்த்தவர், “நாங்க எல்லோரும் நல்ல இருக்கோம் பிரதாப்..” என்றவர் தொடர்ந்து, “இன்னும் அதைபற்றி நாங்க யாரும் யோசிக்கல..” என்றவர சொல்ல சந்தோஷ் விக்ரம் இருவரும் கேள்வியாக பார்த்தனர்..

“அப்படியா..” என்றவர் சிறிதுநேர மௌனத்திற்கு பிறகு, “எங்க பையனுக்கு உங்கபெண் மதுபாலாவைக் கட்டித்தர உங்களுக்கு சம்மதமென்றால் மேலே பேசலாம்..” என்றவர் சொல்ல அர்ஜூனைக் கேள்வியாகப் பார்த்தவர், “நீங்க கொஞ்சநேரம் கழித்து போன் பண்ணுங்க..” என்றவர் போனை வைத்துவிட, “அப்பா என்ன விஷயம்..” என்று பதட்டத்துடன் கேட்டான் சந்தோஷ்..

“நம்ம மதுபாலாவை தாரணியின் மகனுக்கு பெண் கேட்கிறாங்க சந்தோஷ்.. இப்போ உன்னோட சித்தப்பாதான் பதில் சொல்லணும்..” என்றவர் அர்ஜூனைப் பார்க்க, “ஆமா அர்ஜூன் என்னதான் இருந்தாலும் பொண்ணைப் பெற்றவன்.. நீயே ஒரு நல்ல முடிவாக எடு..” என்றார் சந்துரு..

“எனக்கு என்னவோ நீ மேகாவிடம் ஒரு வார்த்தை முதலில் கேளு..” என்ற விக்ரம் சிறிது யோசித்துவிட்டு, “இல்ல நீ முதலில் மதுவிடம் கேளு.. அப்புறம் மேகாவிடம் இந்த விஷயத்தை சொல்லு.. நம்ம எந்த விஷயத்தை அவங்க மேல் திணிக்க கூடாது..” என்றார் விக்ரம்..

“அண்ணா அவ நம்ம பொண்ணு.. அவளுக்கு விருப்பமா என்று கேட்போம்.. ஓகே சொன்னால் நீங்களே முன்னாடி நின்னு கல்யாணத்தை நடத்தி வைங்க..” என்று தன்னுடைய முடிவை நந்தனிடம் கூறினார் அர்ஜுன்..

சங்கமித்ரா செல்லோடு அவளின் அறைக்கு செல்ல ஹாலில் இருந்து மித்ராவைப் பார்த்தவன், “இன்னும் அவனோட பேசிட்டு இருக்கிற..” என்றவன் சொல்ல, “என்ன சந்தோஷ்..” எனு கேட்டார் விக்ரம்..

“ஒண்ணும் இல்ல மாமா..” என்றவன், “மது..” என்றழைக்க, “என்ன அண்ணா..” என்றவள் வேகமாக அவளின் அறையைவிட்டு வெளியே வர, “இங்கே வா..” என்றழைத்தவனின் அருகில் சென்றவள், “என்னண்ணா..” என்று கேட்டாள்..

“உனக்கு தாரணி ஆண்ட்டி தெரியும் இல்ல..” என்றவன் கேட்க, “ஓ நல்ல தெரியுமே..” என்றவள் வேகமாகச் சொல்ல, “அவங்களோட மகன் கிருஷ்ணாவிற்கு உன்னை பெண்கேட்டு இருக்காங்க..” என்றவன் சொல்ல பெரியவர்கள் நால்வரும் அமைதியாக இருந்தனர்..

அப்பொழுது கோவிலுக்கு போய்விட்டு வந்த பிருந்தா, “என்ன நடக்குது இங்கே..?” என்றவர் மதுவைப் பார்த்து, “என்ன வானரம் வாலைச் சுருட்டி வைத்துவிட்டு நிற்கிறது..” என்று கிண்டலுடன் கேட்டார்..

“பெரியம்மா..” என்றவள் சிணுங்க, “எதுக்குடி இப்போ சிணுங்கற..” என்று மகளை அதட்டிய மேகா கணவனின் பக்கம் திரும்பி, “ஆமா இங்கே என்ன விசாரணை எல்லாம் பலமாக போயிட்டு இருக்குது..” என்று கேட்க, “தாரணி வீட்டுக்காரர் போன் பண்ணியிருந்தார்.. அவரோட மகனுக்கு நம்ம மதுவைப் பெண் கேட்கிறாங்க..” என்றார் அர்ஜூன்..
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
“அவளிடம் கேளுங்க இல்லாட்டி நம்மளை ஒரு வழி பண்ணிவிடுவாள்..” என்ற மெகா மகளிடம், “ஏய் மது விளையாட்டு இல்ல..” என்றவர் சொல்ல, “மேகா எதுக்கு அவளை மிரட்ற.. அவங்களைக் கிளம்பி வர சொல்லு.. நம்ம இங்கே வைத்து மற்றதை பேசிக்கலாம்..” என்று பிரச்சனையை முடித்தார் பிருந்தா..

அதன்பிறகு சங்கமித்ராவின் விஷயம் சொல்லபட எல்லோரின் முகமும் புன்னகையில் மலர்ந்தது.. அப்பொழுது வீட்டின் உள்ளே நுழைந்த மீரா, “அதெல்லாம் சரி.. என்னோட மகளைப்பற்றி யாரும் இங்கே யோசிக்கவே இல்ல..” என்றவர் வேண்டுமென்றே சந்தோஷை வம்பிற்கு இழுக்க, “மீரா..” என்று அதட்டினார் விக்ரம்..

“அண்ணா அண்ணியை எதற்கு அதட்றீங்க..” என்ற மலர்விழி சந்தோஷ் பக்கம் திரும்பி, “டேய் தங்கைக்கு கல்யாணம் பண்ண முடிவு எடுத்தால் மட்டும் போதாது.. நீயும் பொண்டாட்டி கூட வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கிற.. அதுக்கு முன்னாடி பிரியாவைப் போய் அழச்சிட்டு வா..” என்றார்..

“நீ சொல்லியதும் அவன் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்க்க போகிறானா..?” என்ற பிருந்தா தொடர்ந்து, “சார் நேற்று வந்துமே கல்யாணத்திற்கு சொல்லிட்டார்.. அபியும், விக்ரம் அண்ணாவும் அதைப்பற்றிதான் பேசிட்டு இருக்காங்க..” என்றவள் சொல்ல, “நிஜமாவா..” என்று கேட்டாள் மலர்விழி..

சந்துரு – மலர்விழி இருவரைத் தவிர எல்லோருக்கும் இந்த விஷயம் தெரியும் என்பதால் சந்தோஷ் மெல்ல அங்கிருந்து நழுவிவிட்டான்.. மோகன் – சுமதி இருவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது..

அங்கிருந்து நேராக தன்னுடைய அறைக்கு நுழைந்தவன் படுக்கையில் விழுந்தான்.. அவனின் மனம் எல்லாம் பிரியாவின் மீதே இருக்க, “இந்நேரம் என்னோட பார்சல் அவளோட கைக்கு கிடைச்சிருக்குமா..?” என்று யோசிக்க ஆரம்பித்தான்..

மாலைநேரம் வீடு திரும்பிய பேத்தியைப் பார்த்த மணிகண்டன், “பிரியா என்னடா இந்நேரம்..” என்றவர் கேட்க, “கொஞ்சம் லெட் ஆகிருச்சு தாத்தா..” என்றவள் வீட்டின் உள்ளே செல்ல, “பிரியா இந்த பார்சல் உன்னோட பெயருக்கு வந்திருக்கு..” என்று பேத்தியிடம் பார்சலைக் கொடுத்தார்..

அப்பொழுது பேத்திக்கு காபியோடு வந்த சீதாலட்சுமி, “காலையில் உன்னோட அப்பா போன் பண்ணினான்..” என்றவர் சொல்ல, “அப்பா எனக்கு போன் போட்டு சொன்னார் பாட்டி..” என்றவள் பார்சலைக் கையில் எடுத்துகொண்டு மாடிப்படியேறிச் சென்றாள்..

“இவங்க இருவரும் சேர்ந்து வாழ்வதைப் பார்ப்பதற்குள் நம்ம ஒருவழி ஆகிருவோம் போல..” என்றவள் சொல்ல, “இன்னும் எத்தனை நாளுக்கு வீம்பி பண்ண போகிறாளோ..” என்று புலம்பிய மணிகண்டன், “அந்த பார்சலில் என்ன வந்திருக்கும்..” என்று யோசிக்க ஆரம்பித்தார்..

“அது என்ன என்று அவளே சொல்லுவா..” என்றவர் அறையை நோக்கிச் செல்ல அவரைப் பின்தொடர்ந்து சென்றார் மணிகண்டன்..

தன்னுடைய அறைக்குள் சென்ற பிரியா யோசனையோடு கையில் இருந்த பார்சலைப் பார்த்துவிட்டு வேகமாக அதைப் பிரித்து பார்த்தாள்.. அந்த பார்சலில் ஒரு பட்டுபுடவை இருக்க, “இது எதுக்கு..?” என்றவள் யோசிக்க அதிலிருந்து ஒரு பத்திரிகை கீழே விழுந்தது..

அந்த பத்திரிக்கையைக் கையில் எடுத்தவள் யோனையோடு பிரித்து படித்தாள்.. அந்த பத்திரிகையில் இருந்த பெயரைப் பார்த்ததும் தன்னுடைய போனை எடுத்து சந்தோஷிற்கு அழைத்தாள்.. ஆனால் அவன் எடுக்கவே இல்லை.. அந்த பத்திரிகையில் மணமகன் என்ற இடத்தில் சந்தோஷ் என்ற பெயரும், மணமகள் என்ற இடத்தில் கிரிஜா என்ற பெயரும் இருந்தது..

தன்னுடைய அத்து யாரோ ஒரு முகம் தெரியாத பெண்ணிற்கு சொந்தமாக போவதை நினைத்து அவளின் கண்களில் கண்ணீர் பெருக, “என்னோட முட்டாள் தனத்தால் என்னோட வாழ்க்கையை நானே கெடுத்துகொண்டேனே..” என்றவளின் மனமோ, ‘ஒரு வேலை இந்த பத்திரிகை பொய்யாக கூட இருக்குமோ..” என்றவள் யோசிக்கும் பொழுது அந்தகடிதம் அவளின் கண்ணில்பட்டது..

“ஹாய் தேனு..

உன்னோட அத்துக்கு இங்கே திருமண ஏற்பாடு பண்றாங்க.. நான்கு வருடம் உனக்காக காத்திருந்தேன்.. நீ வரவே இல்ல.. அதனால் இந்த திருமணத்திற்கு ஓகே சொல்லிட்டேன்.. அந்த பொண்ணு கேரளா.. உன்னைவிட ரொம்ப அழகாக இருக்கா அதனால் வேண்டாம் என்று சொல்ல எனக்கு மனசு வரல..

சரி இப்போ விசயத்திற்கு வருகிறேன்.. தெரிந்தோ தெரியாமலோ உன்னோட கழுத்தில் நான் தாலி கட்டிட்டேன்.. அதுக்கான டைவர்ஸ் பேப்பர் அதில் இருக்கு.. ஒரே ஒரு சைன் மட்டும் பண்ணி அனுப்பிரும்மா.. உனக்கு புண்ணியமாக போகும்.. உன்னோட அத்துவோட வாழ்க்கையே நீ போடுகிற ஒரு சைனில் தான் இருக்கு.. அப்புறம் என்னோட கல்யாணத்திற்கு முதல் பத்திரிகை உனக்குத்தான் வச்சிருக்கேன்.. என்னோட திருமணத்திற்கு நீ கண்டிப்பா வா..

அப்புறம் என்னோவோ மறந்துடேனே.. ம்ம் நீ சொல்வ இல்ல நமக்கு உரிமை இல்லாத பொருள் மீது ஆசைப்பட கூடாதுன்னு.. அது என்னவோ உன்னோட விஷயத்தில் உண்மையாகிருச்சு பிரியா.. உனக்கு உரிமை இல்லாதவன் நான் என்று நீ என்னைவிட்டு விலகி போனாய்.. இப்போ அதுவே உண்மையாகியும் போச்சு.. இனிமேல் இந்த அத்து உனக்கு இல்லடி.. சோ ஸாரி தேனு.. இல்ல இல்ல பிரியதர்ஷினி..

ஸாரி இனிமேல் அப்படி கூப்பிட எனக்கு உரிமையில்ல.. உனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சந்தோஷமாக இருங்க பிரியா மேடம்.. இருவரும் விருப்பதோட பிரிவதாக எழுதியிருக்கேன்.. அந்த சைன் மட்டும் மறந்துவிடாதே.. இந்த சேலை உனக்கு நான் விருப்பத்தோடு எடுத்தது.. அதை நீ கட்டி நான் பார்க்கும் எண்ணம் கூட இப்போ இல்ல.. அது என்னோட மனசை பாரமாக அழுதிட்டே இருந்தது.. அதுதான் உனக்கு அனுப்பிட்டேன்..

இதற்குமேல் பேச நமக்கிடையே என்ன இருக்கு.. என்ன இனிமேல் பேச ஒன்னும் இல்ல.. சரி பிரியா டேகேர்.

இப்படிக்கு

சந்தோஷ்”​

என்று கடிதத்தை முடித்திருக்க அவனின் கையெழுத்தைப் பார்த்த வண்ணம் கதறியழுத பிரியா, “போடா லூசு எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. திடீரென நீ என்னோட கழுத்தில் தாலி கட்டிய அதிர்ச்சிலும் தீபிகா மீது இருந்த கோபத்திலும் அப்படி பேசிட்டேன்..” என்று வாய்விட்டு அழுக ஆரம்பித்தாள்..

“உன்னை வேண்டும் என்று நான் காயப்படுத்த நினைக்கல சந்தோஷ்.. அது எல்லாமே தானாக நடந்துவிட்டது..” என்றவளின் கதறல் அதிகரிக்க கையில் இருந்த விவாகரத்து பத்திரத்தை சுக்குநூறாக கிழித்து வீசினாள்.. அப்பொழுதும் அவளின் ஆத்திரம் அடங்க மறுத்தது.. அப்பொழுது அப்பாவிற்கு போன் செய்தாள் பிரியா..

நடுஇரவில் தீடிரென்று மகளின் அழைப்பு வர, “ஹலோ பிரியா என்னடா..?” என்றவர் பதட்டத்துடன் கேட்டதும், “அப்பா இப்போ கூட நீங்க சந்தோஷ் பக்கம் தான் நிக்கிறீங்க.. என்னைபற்றி யோசிக்கவே மாட்டீங்களா.. அத்தை எப்படி இந்த கல்யாணத்திக்கு சம்மதிச்சாங்க..” என்று கேள்விகளை அடுக்கினாள்..

அவளின் பேச்சில் இருந்தே அவளின் மனநிலையை உணர்ந்தவர், “உன்னோட பிடிவாதத்திற்கு அவங்க எத்தனைநாள் தான் என்னை மாதிரியே பொறுமையாக இருப்பாங்க பிரியா.. அதனால் அவங்க மகனுக்கு திருமண ஏற்பாடு பண்றாங்க.. நீ சந்தோஷ் கூட வாழ நினைத்தால் நீதான் திரும்பி வரணும்.. இதில் நான் செய்ய ஒண்ணுமே இல்ல..” என்றவர் அவள் பேசும் முன்னே போனை வைத்துவிட்டார்..

அவர் போனை வைத்ததும் பிரியா தன்னுடைய வாழ்க்கையை நினைத்து கதறியழுத்தாள் என்றால் விக்ரமோ, ‘சந்தோஷ் உன்னோட விளையாட்டை நிறுத்தவே மாட்டாயா..? எல்லாம் நல்லபடியாக நடந்தாள் சரி..’ என்று நிம்மதியாக உறங்க ஆரம்பித்தார்..
 

Advertisements

Top