• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2௦

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.. அந்த விடியலைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த பிரியாவின் விழிகள் இரண்டும் சிவந்திருந்தது..

தன்னுடைய கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தவள், ‘ம்ஹும்.. இதுக்கு மேல் நான் பொறுமையாக இருக்க முடியாது.. இந்த பத்திரிக்கைக்கு ஒரு பதில் வேண்டும்..’ என்ற உறுதியுடன் விழியைத் துடைத்துவிட்டு வேகமாக எழுந்தாள்..

காலையில் விடிந்தும் குளித்துவிட்டு அந்த பட்டுசேலையைக் கட்டிக்கொண்டு கண்ணாடி முன்னாடி நின்றாள்.. அவள் அழுததற்கு அடையாளமாக இரண்டு விழிகள் மட்டுமே சிவந்திருப்பது கண்டு, ‘உனக்கு கேரளா பொண்ணு கேட்குதா..?’ என்று நினைத்தவள் வேகமாக கிளம்பி கீழே சென்றாள்..

அதிகாலை நேரத்தில் முழு அலங்காரத்துடன் வரும் பேத்தியைப் பார்த்த சீதாலட்சுமி வேகமாக சமையலறையில் இருந்து வெளியே வந்தார்.. சோபாவில் அமர்ந்திருந்த மணிகண்டனைப் பார்த்தவர், “என்னங்க பேத்தி இவ்வளுவு சீக்கிரம் ஆபீஸ் கிளம்பிட்டா..” என்று சொல்ல பேப்பர் படித்துகொண்டிருந்த மணிகண்டன் நிமிர்ந்து பிரியாவைப் பார்த்தார்..

“என்ன பிரியா இவ்வளவு சீக்கிரம் ஆபீஸ் கிளம்பிட்டியே.. மணி இப்போதான் ஆறு ஆகுதுடா.. இரு நான் உனக்கு சாப்பிட ஏதாவது செய்து தருகிறேன்..” என்றவர் சொல்ல, “இல்லங்க பாட்டி எனக்கு வேண்டாம்.. நான் ஊருக்கு போகிறேன்..” என்றவள் சொல்ல வினோதமாக பிரியாவைப் பார்த்த மணிகண்டன், “என்ன செல்லம் ஆச்சு.. எதுக்கு இப்போ ஊருக்கு போகிறாய்..?” என்று விசாரித்தார்..

“நேற்று வந்த பார்சலுக்கு விளக்கம் தெரியணும் தாத்தா.. அதுக்குதான் தாத்தா ஊருக்கு போறேன்..” என்றவள் சொல்ல, “அப்போ பார்சல் அனுப்பியது சந்தோஷா..?” என்றவர் கேட்க, “ம்ம் அத்துதான் தாத்தா..” என்றவள் சொல்லிகொண்டிருக்க பூஜை அறைக்கு சென்ற சீதாலட்சுமி விபூதியை எடுத்து வந்து அவளின் நெற்றியில் வைத்துவிட்டவர்,

“உனக்கு ஒரு தடங்களும் வராது.. நீ முதலில் கிளம்பு செல்லம்..” என்றவர், “இங்கிருந்து சேலத்திற்கு பஸில் போடா.. அது உனக்கு பாதுகாப்பு.. அதற்கு மேல் ரயிலில் போன மத்தியானம் ஒரு மணிக்கு உள்ள சென்னை போய்விடலாம்..” என்றவர் பேத்திக்கு அறிவுரை கூறினார்..

“இல்லங்க பாட்டி நான் காரில் ஊருக்கு போகிறேன்..” என்றவளின் விழியிரண்டும் கலங்கிட, “பாட்டி நான் போயிட்டு வருகிறேன்..” என்று சொல்ல, “ம்ம் கிளம்பு பிரியா..” என்ற இருவரும் வாசல்வரை வந்து அவளை வழியனுப்பி வைக்க காரில் ஏறியவள் வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்..

ஏற்காட்டில் இருந்து பிரியா கிளம்பியதும் மாணிக்கம் சந்தோஷிற்கு அழைக்க, “அவனுக்கு போன் செய்ய வேண்டாங்க.. அவன் இன்னும் பிள்ளையை அழுக வைப்பான்..” என்று சீதா சொல்ல, “சரி சீதா..” என்றவர் விக்ரமிற்கு போன் செய்தார்..

அவரின் அழைப்பை எடுத்த விக்ரம், “அப்பா பிரியா சென்னை கிளம்பி வருகிறாளா..?” என்றவர் கேட்க, “அது எப்படிப்பா உனக்கு தெரியும்..?” என்று கேட்டார் மாணிக்கம்..

“அதெல்லாம் அவள் கிளம்பி வருவாள் என்று நேற்றே எனக்கு தெரியும் அப்பா.. இனிமேல் அவங்களே ஒரு முடிவாக எடுக்கட்டும் என்றவர் போனை வைத்துவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க, “யாருங்க போனில்..?” என்று கேட்ட மீராவிடம் அனைத்தையும் கூறினார்..

“இனி என்ன நடக்கிறது என்றுதான் பார்க்கலமே..” என்றவர் சொல்ல மீராவிற்கும் அதுவே சரியெனப்பட்டது.. அதன்பிறகு மீரா சமையல் வேலையைக் கவனிக்க விக்ரம் தன்னுடைய கையில் இருந்த ஆபீஸ் பைலில் மூழ்கிப்போனார்..

காலையில் வீடே பரபரப்புடன் இருக்க தங்கையின் அறைக்கு சென்ற சந்தோஷ், “மித்ரா இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. நான் முன்னாடி போகிறேன்.. நீ சீக்கிரம் கிளம்பி வா..” என்றவன் சொல்ல, “அண்ணா நைட் எல்லாம் பிரியா கால் பண்ணிடே இருந்தா.. நான் போன் எடுக்கல இந்தா உன்னோட போன்..” என்றவள் செல்லை அவனிடம் கொடுத்தாள்..

“தேங்க்ஸ் மித்ரா.. காரணம் தெரியாமலே ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாய்.. அதுவரை ரொம்ப சந்தோஷம்..” என்றவன் பிரகாசமான முகத்தோடு வேகமாக அங்கிருந்து கிளம்பிச் செல்ல மாடியில் இருந்து வேகமாக கீழிறங்கி வந்த மித்ரா சமையலறைக்குள் சென்றாள்..

“அம்மா இன்னைக்கு உன்னோட மகன் ஒரு மார்க்கமாக இருக்கிறான்.. என்னவோ சரியில்ல.. என்ன என்று விசாரிங்க..” என்றவள் சொல்ல, “அது என்னவென்று அப்புறம் கேட்காமல் மித்ரா.. இந்த இந்த காயை நறுக்கி சமையலை முடித்துவிடு..” என்றவர் சொல்ல, “அம்மா..” என்று அதிர்ந்தாள் மகள்..

“மித்ரா உனக்கு செல்லம் கொடுத்த காலம் எல்லாம் மலையேறி போச்சு.. இந்த இன்றிலிருந்து நீதான் சமையல் செய்யணும்.. நீ எவ்வளவு கேவலமாக சமையல் செய்தாலும் சாப்பிட நாங்க எல்லோரும் ரெடி.. பட் நீ சமையல் நல்ல செய்து பழகு.. அது நாளைக்கு உன்னோட புகுந்த வீட்டில் உனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும்..” என்றவர் சொல்ல மித்ரா அழுவதற்கு தயாரானாள்..

மித்ராவை சமையலறையில் பார்த்த அபிநந்தன், “என்ன மித்ரா இங்கே என்ன பண்ற..?” என்றவர் கேட்க, “அப்பா அம்மா என்னை சமையல் பண்ண சொல்லிட்டாங்க அப்பா..” என்றவள் குழந்தை போல சிணுங்க வாய்விட்டு சிரித்தார் அபிநந்தன்..

அவர் சிரிப்பதை மித்ரா கொலைவெறியுடன் பார்க்க, “இந்த விஷயத்தில் உங்க அம்மா செய்ததுதான் சரி.. நீ சமையலை தொடங்கு..” என்றவர் மேகாவின் பக்கம் திரும்பியவர், “நீயும் வா மேகா.. அவளே சமையல் செய்யட்டும்..” என்றவர் சொல்ல, “அப்பா..” என்று சினுங்கினாள் மகள்..

“உன்னோட சிணுங்கள் எல்லாம் இங்கே செல்லுபடி ஆகும்.. புகுந்த வீட்டில் அது எல்லாம் நடக்காது செல்லம்.. உனக்கு உதவிக்கு மதுவை அனுப்பி வைக்கிறேன்..” என்றவர், “இன்னைக்கு அவளும் மதுவும் சமையல் செய்யட்டும்.. நம்ம யாரும் அவர்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்..” என்றவர் சொல்லிவிட்டு முன்னே செல்ல அவரை பின் தொடர்ந்தனர் பிருந்தாவும் மேகாவும்..!

அபிநந்தன் – பிருந்தா இருவரும் திருமண ஏற்பாடுகள் பற்றி பேச சமையல் வேலையைக் கவனித்தாள்.. மதுவும் அவளுக்கு துணைக்கு வர சஞ்சீவ் நன்றாக தூகிக் கொண்டிருக்க சந்தோஷ் ஆபீஸ் கிளம்பிச் சென்றான்..

மோகன் – சுமதி இருவரையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றிருந்தார்.. சந்துரு – மலர்விழி இருவரும் வேறொரு விசயமாக வெளியே சென்றிருந்தனர்.. ஏற்காட்டில் இருந்து கிளம்பிய பிரியா கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சென்னையை அடைந்தாள்.. அவள் முதலில் வீட்டிற்கு சென்றாள்..

சென்னையில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க அந்த மதியான நேரத்தில்பிருந்தாவனம் உள்ளே நுழைந்தவாழ்க காரைவிட்டு கீழிறங்க காரின் சத்தம் கேட்ட விக்ரம் வாசலை எட்டிப்பார்க்க பிரியாதான் காரில் இருந்து இறங்கினாள்..

“பிரியா வாடா..” என்றவர் பாசத்தோடு அழைத்தபடி வேகமாக வாசலுக்கு வர அவரின் அழைப்பைக் கவனிக்காத பிரியா நேராக சந்தோஷ் வீட்டிற்குள் நுழைந்தாள்..

கணவரின் அழைப்பைக் கேட்டு வெளியே வந்த மீரா, “என்னங்க பிரியா எங்கே..?” என்று கேட்க, “பிருந்தா வீட்டிற்குள் போகிறாள் வா..” என்றவர் முன்னே செல்ல மீரா அவளைப் பின் தொடர்ந்தார்..

திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிகொண்டிருந்த அபிநந்தன் யாரோ வரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்க்க பிரியா புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைய அப்பொழுதுதான் அறையைவிட்டு வெளியே வந்த சஞ்சீவ், “அண்ணி..” என்ற அழைப்புடன் வேகமாக மாடியில் இருந்து இறங்கினான்..

அப்பொழுதுதான் பிரியா வருவதைக் கவனித்த பிருந்தா, “வா பிரியா.. என்ன தீடீரென்று வந்து நிற்கிற..” என்றவர் புன்னகையோடு எழுந்து அவளின் அருகில் செல்ல, “அத்தை இங்கே என்ன நடக்கிறது.. அத்துவிற்கு கிரிஜா என்ற பெண்ணை பொண்ணு பார்த்து பத்திரிகை எல்லாம் அடிச்சிருக்கீங்க..” என்றவள் கோபத்தோடு கேட்டாள்..

அவளின் பேச்சில் இருந்தே, ‘இது சந்தோஷ் வேலை..’ என்று உணர்ந்த பிருந்தா, “ஆமா அதுக்கு இப்போ என்ன பிரியா செய்ய சொல்ற.. நாங்களும் எவ்வளவு நாள்தான் பொறுமையாக இருப்பது..?” என்றவர் விக்ரம் கேட்ட அதே கேள்வியைக் கேட்க, “என்னோட வீம்பிற்கு இது எல்லாம் எனக்கு தேவைதான்..” என்றவள் தலையில் அடித்து கொண்டாள்..

“உனக்கு என்ன விளக்கம் என்றாலும் சந்தோஷ் சொல்வான் அவனிடம் போய் கேளு பிரியா..” என்றவர், “என்னங்க நம்ம எப்போ கல்யாணத்திற்கு ஜவுளி எடுக்க போகலாம்..” என்று பேச்சை மாற்றிட பிரியாவின் கோபம் அதிகரிக்க, “அப்போ என்னைபற்றி யாருக்குமே இங்கே அக்கறையே இல்ல..” என்றவள் கோபத்துடன் கேட்டாள்’’

“அண்ணி எனக்கு ஒரு விஷயம் புரியல.. அப்பா இப்போதான் கல்யாண தேதியைத் தேடிட்டு இருக்கிறாரு.. அதுக்குள்ள எப்படி பத்திரிகை..?” என்று மது அவளிடம் கிண்டலோடு கேட்க மித்ராவும், சஞ்சீவ் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்..

அப்பொழுது வீட்டின் உள்ளே நுழைந்த விக்ரம், “அதுதானே..? அவங்க இப்போதான் முகூர்த்தம் எந்த தேதியில் வைக்கலாம் என்று குறிக்கிறாங்க.. உனக்கு மட்டும் எப்படி பிரியா பத்திரிகை கைக்கு கிடைக்கும்..?” என்றவரும் அவளிடம் சந்தேகம் கேட்டார்..

ஒருவர் மாற்றி ஒருவர் சிரிப்பதைக் கண்ட பிரியாவிற்கு கோபம் அதிகரிக்க, “இது எல்லாம் அத்துவோட வேலை.. அது உங்க எல்லோருக்கும் தெரியும் இல்ல.. முதலில் அவனிடம் கேட்டுட்டு வந்து உங்களை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்..” என்றவள் வேகமாக செல்ல, “பிரியா காரில் கவனமாக போ..” என்று குரல் கொடுத்தனர் மீராவும், பிருந்தாவும்..!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவள் கார் கேட்டை விட்டுத் தாண்டியதும் விக்ரமின் புன்னகை விரிய, “பிருந்தா என்னை மாதிரியே பதில் சொல்லிட்ட.. இல்லாட்டி அவளுக்கு இருக்கிற கோபத்தில் நம்மளை ஒரு வழி பண்ணிருப்பா.. நல்ல வேலை நம்ம எல்லோரும் கிரேட் எஸ்கேப்..” என்றவர் சிரித்துக்கொண்டே கூறினார்..

“அண்ணாதான் அண்ணிக்கிட்ட மாட்டிக்கிட்டாங்க..” என்று சஞ்சனா வேகமாக சொல்ல, “யார் அவன் பிரியாக்கிட்ட மாட்டிக்கிட்டானா..? திட்டம் போட்டு அவளை வைச்சிட்டு மீட்டிங் என்ற பெயரில் எஸ்கேப் ஆகிருப்பான்..” என்றபடி சந்துரு வீட்டின் உள்ளே நுழைந்தார்..

“சரியாக சொன்னாய் சந்துரு.. அவனாவது இவளிடம் மாட்டிகொல்வதாவது..?” என்ற அபிநந்தன் வாய்விட்டு சிரிக்க, “ஆமா உங்களோட மகன் இல்ல அப்புறம் உங்களோட புத்திதானே வரும்..” என்று பிருந்தா கணவனை வாரினார்..

“நான் உன்னிடம் தப்பிக்க நினைத்தேனா..? இது எல்லாம் அப்பட்டமான பொய்.. என்னை பற்றி ஊருக்குள் விசாரித்து பாரு பிந்து..” என்றவர் சொல்ல, “ஆமா ரொம்ப நல்லவன் வல்லவன் என்று ஊருக்குள் சொல்லிட்டு இருக்காங்க..” என்றார் சந்துரு..

இப்படி ஒருவரைஒருவர் பேச அந்த இடமே களைகட்ட ஆரம்பிக்க, ‘அண்ணி திரும்பி வந்ததே போதுமடா சாமி..’ என்று பெருமூச்சு விட்டனர் சிறியவர்கள் நால்வரும்..!

வீட்டில் இருந்து கிளம்பிய பிரியா அடுத்து காரை நிறுத்திய இடம் சந்தோஷ் நிறுவனம் தான்.. அவள் வேகமாக உள்ளே நுழைந்த பிரியா ரிசப்ஷனிஸ்டிடம் சென்று, “நான் உங்க எம். டியைப் பார்க்கணும்..” என்றாள்..

“சார் இப்போ மீட்டிங்கில் இருக்கிறார் மேடம்.. நீங்க அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கீங்களா..?” என்று அந்த பெண் கேட்டதும், “ஆமா அவருதான் வர சொல்லி சொன்னாரு..” என்றவள் எக்கச்சக்கமாக கோபத்துடன் சொல்ல அவளை வினோதமாக பார்த்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட் பெண்..

“மேடம் நீங்க அந்த அறையில் வெயிட் பண்ணுங்க.. சார் வந்தும் நானே உங்களைக் கூப்பிடுகிறேன்..” என்று அந்தப்பெண் சொன்னதும் அந்த அறைக்குள் சென்றவள் அவனுக்காக காத்திருந்தாள்..

நேரம் அந்தபோக்கில் செல்ல மாலை நேரம் மீட்டிங் முடிந்து வெளியே வந்த சந்தோஷிற்கு கால் செய்த அந்தப்பெண், “சார் உங்களைப் பார்க்க ஒரு லேடி வந்திருக்காங்க..” என்று சொல்ல வந்திருப்பது யாரென்று அவள் சொல்லாமல் தெரிந்து கொண்டவன் உதட்டில் புன்னகை அரும்பியது..

“நீ போய் அவங்களை வர சொல்லு..” என்றவன் சீட்டில் சாய்ந்து அமரந்தான்.. அந்தப்பெண் வந்து சொன்னதும் வேகமாக சந்தோஷ் அறைக்குள் சென்றவள், “அத்து இந்த பத்திரிக்கைக்கு என்ன அர்த்தம்..” என்று கேட்டாள்..

அவளைப் பார்த்த சந்தோஷ், “ஹே பிரியா.. வா வா உன்னை நான் எதிர்பார்க்கவே இல்ல..” என்றவன் சொல்ல, “டேய் என்னடா நினைச்சிட்டு இருக்கிற உன்னோட மனசில..” என்றவள் கோபத்தில் எகிறினாள்..

அவளின் பேச்சில் நிமிர்ந்த சந்தோஷ், “கிரிஜாவைத்தான்..” என்றவன் புன்னகையோடு சொல்ல, “அதுதான் கேட்கிறேன் யாருடா அந்த கிரிஜா..” என்றவள் கேட்டதுமே, “என்னோட வருங்கால மனைவி..” என்றவன் அவளின் கோபத்தை அதிகரிக்க செய்தான்.. அவளின் முகம் கோபத்தில் சிவப்பதை ரசனையோடு பார்த்தவன் இந்த முறை அமைதியாக இருந்தான்..

“இதுதான் நீங்க எனக்கு கொடுக்கும் உரிமையா..? இல்ல எனக்கு கொடுக்கும் தண்டனையா..?” என்றவள் அவனிடம் கேட்க, “அதெல்லாம் எனக்கு தெரியாது..” என்றவன் அவளுக்கு பிடி கொடுக்காமல் பேச, “எனக்கு இதற்கு விளக்கம் தெரிஞ்சே ஆகணும்..” என்றவள் பிடிவாதமாகக் கூறினாள்..

“உனக்கு உரிமை இருக்கு எனு தாலி கட்டினேன்.. நீ அதை ஏற்றுக்கொள்ளவே இல்ல அதன் இப்போ கிரிஜாவை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்திருக்கேன்..” என்றவள் சொல்ல, “ஏண்டா இப்படி பொய்க்கு மேல போய் சொல்ற.. எல்லாமே நாடகம் என்னை இங்கே வரவழைக்க நீ போட்ட நாடகம்..” என்றவள் கதறியழுதாள்..

அவளை இமைக்காமல் பார்த்த சந்தோஷ் கைகள் இரண்டும் அவளை அணைத்து ஆறுதல் படுத்த துடித்தாலும் கூட அவன் தன்னைக் கட்டுபடுத்திக்கொண்டு அமைதியாக நின்றிருக்க, “இப்போ கூட நான்தான் உன்னை வந்திருக்கிறேன்..” என்றவள் விசும்பலோடு தொடர்ந்தாள்..

“ஆனால் நீங்க என்னைத்தேடி வரவே இல்ல.. உங்களோட காதலும் என்மேல் இல்ல.. கடைசியில் நான் உங்களுக்கு வேண்டாம் என்று முடிவே பண்ணிட்டீங்க இல்ல..” என்றவள் கேட்டதும் அவளைத் இழுத்து அணைத்துகொண்டான் சந்தோஷ்..

அவனின் அணைப்பில் அவளின் கதறல் அதிகரிக்க, “ஏய் எதுக்குடி இப்போ அழுகிற..” என்றவன் அவளின் முகத்தை நிமிர்த்து விழிகளைப் பார்த்து நேராகக் கேட்க, “அத்து உனக்கு என்மேல் காதலே இல்லையா..?” என்றவள் அழுகையோடு கேட்க அவளின் முகத்தை இமைக்காமல் பார்த்தான் சந்தோஷ்..

காலையில் இருந்த அவள் அலைந்த பிரியாவின் முகம் மிகம சோர்வாக இருக்க அவளின் கண்களில் தீட்டப்பட்ட மை எல்லாம் கண்ணீராக மாறி கன்னத்தோடு கரைந்து செல்ல நெற்றி வகிட்டில் அவள் வைத்திருந்த குங்குமம் அவனின் மனதிற்கு நிம்மதி தந்தது என்றால் அவள் கட்டியிருந்த பட்டுபுடவை அவனின் மனதை குளிர வைத்துவிட்டது..

“என்னடி சேலை எல்லாம் சூப்பராக இருக்கு..” என்றவனின் கைவிரல் அவளின் இடையோடு கதைபேச அப்பொழுதும் அவனின் கைகளைக் கோபத்துடன் தட்டிவிட்டவள், “என்னை எதுக்குடா இப்போ தொடுகிறாய்.. நீ என்னை தொடாதே.. நேராக கேரளா போய் அந்த கிரிஜாவிடம் உன்னோட கை வண்ணத்தை எல்லாம் காட்டு..” என்றவள் அவனை விட்டு விலகி இரண்டடி பெண்ணே நகர்ந்தாள்..

அவளின் பேச்சில் அவனுக்கு சிரிப்பு வர, “என்னோட கைவண்ணத்தை காட்ட எனக்கு அவள் எல்லாம் வேண்டாண்டி.. என்னோட பொண்டாட்டி நீ ஒருத்தி போதும்..” என்றவன் கண்ணிமைக்கும் நொடியில் அவளை நெருக்கி அவளை இழுத்து அணைக்க அவனின் மார்பில் கோபம் தீர அடித்தாள் பிரியா..

அதற்கு எல்லாம் அசையாத சந்தோஷ் மெல்ல அவளின் முகம் நிமிர்த்தி, “மையூமா ஒரே ஒரு கிஸ் மட்டும் பண்ணிக்கிறேன்..” என்றவன் கண்ணிமைக்கும் நொடியில் அவளின் அனுமதி இன்றி அவளின் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டான்..

அவளின் இதழில் முத்தமிட்டு நிமிர்ந்தவன், “செம கிஸ்..” என்று அவளைப் பார்த்து கண்ணாடிக்க, “பிராடு.. நேற்று பார்சலை அனுப்பி என்னை கதற வெச்சிட்டு இப்போ கிஸ் சூப்பர் என்று கமெண்ட் கொடுக்கிற..” என்றவள் கையில் பேப்பர் வெயிட்டை கையில் எடுத்தாள்..

“அடியே உன்னோட அத்து பாவம் இல்ல..” என்றவள் அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து அவன் குறும்புடன் கேட்டதும், “என்னடா எழுதி இருந்தே.. அந்த பொண்ணு கேரளா.. ரொம்ப அழகாக இருக்கிற.. வேண்டாம் என்று சொல்ல மனசு வரலையா..” என்றவள் அவனை அடிக்க துரத்தினாள்..

“ஆமா உன்னை வர வைக்க எனக்கு வேற வழி தெரியல.. உன்னோட வீம்பிற்கு ஒரு அளவே இல்லாமல் போயிட்டே இருந்தது..” என்றவன் அவளின் கைக்கு அகப்படாமல் பதில் சொல்ல, “அப்புறம் என்னவோ எழுதி இருந்தீயே..” என்றவள் அவனிடம் கேட்டாள்..

“ஒரே ஒரு சைன் மட்டும் பண்ணி அனுப்பிரும்மா.. உனக்கு புண்ணியமாக போகும்.. உன்னோட அத்துவோட வாழ்க்கையே நீ போடுகிற ஒரு சைனில் தான் இருக்கு..” என்றவன் சிரித்துகொண்டே சொல்ல அவனைத் துரத்தி பிடித்தவள், “நீ என்னவேண்டுமானாலும் சொல்லுவடா..” என்றவள் அவனை போட்டு அடித்தாள்..

அவளின் அடியெல்லாம் தாங்கிக் கொண்டவன், “பிரியா போதும்டி வலிக்குது.. உன்னோட அத்து பாவம்டி..” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “வா நம்ம கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வேகமாக அலுவலகம் விட்டு வெளியேறினான்..

அவளைப் பேசவிடாமல் இழுத்துச் சென்ற சந்தோஷ் அவள் காரில் ஏறியதும் காரி எடுக்க அது மின்னல் வேகத்தில் செல்ல, “நம்ம எங்கே போறோம்..” என்றவள் கேட்டும் அவன் வாய்திறக்கவே இல்லை..

அவனின் கார் நின்ற இடம் கண்டவள் கேள்வியுடன் புருவம் உயர்த்தி சந்தோஷைப் பார்த்தாள்..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Superb epi sri priya ava athu kitta vanthuta .. enge azhaithu vanthu irukaan santhosh
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Happada santhosh priya onnu sernthudanka pa:love::love::love:
Superb ud sis:giggle::giggle::giggle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top