• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then sinthum Poovanam - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 7

சேலம் வரையில் சென்றும் பிரியாவைப் பார்க்காமல் சென்னை திரும்பியவனின் மனமோ, ‘டேய் அவ்வளவு தூரம் போயிட்டு அவளைப் பார்க்காமல் வந்திருக்க உன்னை எல்லாம் என்ன பண்ணலாம்..?’ என்றவனின் மனம் கேள்வியெழுப்பியது..

‘நான் என்னோட மனைவிக்கு விஷ் பண்ணல.. அதுக்கு இப்போ என்ன இன்னும் கொஞ்சநாள் பொறு மனமே.. என் வஞ்சிக்கொடி என்னை தேடி வருவா.. கண்ணிரண்டில் போர் தொடுப்பா.. அந்த வெண்ணிலவைத் தொக்கடிப்பா..’ என்று உதட்டில் விசில் அடித்த வண்ணம் மனதிற்குள் குஷியாக பாடிக்கொண்டிருந்தான் சந்தோஷ்..

கார் சீரான வேகத்தில் செலுத்திய சந்தோஷ், ‘ஏண்டி இத்தனை நாள் உனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச என்னையே நீ என்ன கேட்ட இதை என்னோட கழுத்தில் எதுக்கு கட்டின என்று கேட்ட இல்ல.. இதுக்கு எல்லாம் உனக்கு பதில் சொல்ல நேரமும் காலமும் வந்துருச்சிடி...’ என்றவன் மனதிற்குள் பேசியபடியே வந்தவனின் கார் பிருந்தாவனம் உள்ளே நுழைந்தது..

இரவு பதினோரு மணி ஆனபிறகும், ‘மகன் வீட்டிற்கு வரவில்லை..’ என்றதுமே பிருந்தாவின் மனம், ‘பிரியாவைப் பார்க்காத்தான் போயிருப்பான்..’ என்ற நினைவுடன் தங்களின் அறைக்கு செல்ல நினைக்க வீட்டின் உள்ளே கார் நுழையும் சத்தம்கேட்டுவாசலுக்கு விரைந்தாள்..

‘சந்தோஷ் வந்துவிட்டானா..?’ என்ற சந்தேகத்துடன் வேகமாக சென்று கதவைத் திறக்க காரில் இருந்து இறங்கிய சந்தோஷ் வாசலில் நின்ற பிருந்தாவைப் பார்த்தும், “அம்மா நீங்க இன்னும் தூங்கலையா..?” என்ற கேள்வியுடன் வீட்டின் உள்ளே நுழைந்தவனைப் பார்த்தும் பிருந்தாவின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது..

அவனின் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் கவனித்த பிருந்தா, ‘இன்னைக்கு என்னவோ நடந்திருக்கு.. சரி எதுவாக இருந்தாலும் அவனே சொல்லட்டும்..’ என்றவர் மனதிற்குள் நினைக்க, அவரின் மனதை படித்தவனோ மர்மமாக புன்னகைத்தான்..

அவனின் குரல்கேட்டு அலுவலக அறையில் இருந்து எட்டிப்பார்த்த தந்தையைக் கவனித்த சந்தோஷ் அந்த அறையைநோக்கி வேகமாக சென்றவனை பார்த்த பிருந்தா, ‘ஆபீஸ் வொர்க் போல..’ என்ற நினைவுடன் சமையலறையை நோக்கிச் சென்றார்..

அவரின் அலுவலக அறைக்குள் தலையை நீட்டிய சந்தோஷ், “அப்பா பிசியாக இருக்கீங்களா..?” என்று கேட்டது பைலை மூடி வைத்தவர், “வா சந்தோஷ்.. என்ன பேசணும்..” என்றவர நேரடியாக கேட்க, அறைக்குள் நுழைந்தான் சந்தோஷ்..

அவனின் வேகத்தைக் கண்டவர் அவன் அமர சோபாவை கைகாட்டிட, “தேங்க்ஸ்பா..” என்றவன் சோபாவில் அமர்ந்தான்.. அவன் சிறிதுநேரம் அமைதியாக இருக்க அபிநந்தனின் பார்வை மகனின் மீது கேள்வியாக படிந்திட, “அப்பா எனக்கும் பிரியாவிற்கும் திருமணம் ஏற்பாடு பண்ணுங்க..” என்று அதிரடியாக திருமணம் பற்றி பேசினான் சந்தோஷ்..

அவர் அவனைப் புரியாத பார்வை பார்க்க, “எனக்கு திருமணத்தில் பரிபூரண சம்மதம்..” என்றவன் தான் வந்த வேலை முடிந்தது என்று எழுந்து செல்ல நினைக்க, “சந்தோஷ் ஒரு நிமிஷம்..” என்றார் அபிநந்தன்..

அவரின் அழைப்பில் வேகமாக திரும்பியவன், “சொல்லுங்கப்பா..” என்றவனின் முகத்தைப் பார்த்தவர், “திருமணம் என்பது விளையாட்டு இல்ல சந்தோஷ்..” என்றவர் நிதானமாக பேச மறுபடியும் சோபாவில் அவரின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தான்..

அவன் சொல்ல வேண்டிய விஷயத்தை அவனின் நேர் கொண்ட பார்வையே சொல்லிவிட, “நான் இந்த விஷயத்தில் விளையாடலப்பா.. எனக்கு இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம்..” என்றவன் முகத்தில் இருந்த உறுதியை கண்டவர் அமைதியாக இருந்தார்..

அவரின் அமைதி அவனை பாதிக்க, “நீங்க விக்ரம் மாமாவிடம் பேசி தெளிவாக முடிவெடுங்க அப்பா.. பட் திருமண நாளை ரொம்ப தள்ளிபோடாதீங்க..” என்றவன் அந்த அறையைவிட்டு எழுந்து சென்றான்..

அப்பொழுது சமையலறையில் இருந்து வெளியே வந்த பிருந்தாவோ, “டேய் இந்த வருடமும் என்னை ஏமாற்றிட்ட இல்ல..” என்று ஆதங்கத்துடன் கேட்டவர், “இந்த இந்த பாலை குடித்துவிட்டு போய் தூங்கு..” என்றார்..

அவரிடம் இருந்து பால் டம்ளாரை வாங்கி கடகடவென்று குடித்தவன், “தேங்க்ஸ் அம்மா..” என்று சொல்லிவிட்டு அவரின் கைகளில் டம்ளாரைக் கொடுத்தவன், “அம்மா நான் பிரியாவைப் பார்க்க போகல.. இப்போ எனக்கு தூக்கம் வருது தூங்க போறேன்..” என்றவனின் பேச்சில் இருந்த மாற்றம் அவரை மௌனம் கொள்ள வைத்தது..

அவர் மெளனமாக நிற்பதைப் பார்த்து, “மற்றது எல்லாம் நாளைக்கு காலையில சொல்றேன்..” என்றவன் வேகமாக படியேறி சென்றுவிட அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த அபிநந்தன், “என்ன பிந்து சொல்லிட்டு போறான் உன்னோட செல்ல மகன்..” என்றவர் கேட்டார்..

அவரின் கேள்வியில் திரும்பி கணவனின் முகம் பார்த்த பிருந்தா, “அவன் என்னிடம் என்ன சொன்னான்..? இன்னைக்கு பிரியாவைப் பார்க்க போகலம்மா.. மற்றது எல்லாம் காலையில பேசலன்னு சொல்லிட்டு போய்ட்டான்..” என்றவர் படுக்கை அறையை நோக்கி சென்றார்..

அபிநந்தன் மட்டும் மகன் சென்ற திசையைப் பார்த்து யோசனையுடன் நின்றிருந்தார்.. படுக்கை அறையை நோக்கி சென்ற பிருந்தாவின் மனமோ, அவனோட லைப்ல நம்ம எதுக்கு வீணாக தலையிடனும்.. என்னோட மனதில் இருக்கும் கேள்விக்கு எல்லாம் என்றாவது ஒருநாள் பதில் கிடைத்தே தீரும்..’ என்று நினைத்தவர் அவர்களின் அறைக்குள் சென்று மறந்தார்..

தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் குளித்துவிட்டு வந்து படுக்கையில் படுக்க உறக்கம் அவனின் விழிகளை உறக்கம் சுகமாக தவிழுவிட பலநாளுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் சந்தோஷ்..

கிழக்கே வானில் கதிரவன் அவனின் பயணத்தைத் தொடங்க பொழுது அழகாக விடிந்தது.. காலையில் எப்பொழுதும் போலவே எழுந்த சந்தோஷ் ஜாக்கிங் முடித்துவிட்டு வந்து குளித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்தான்..

சோபாவில் அமர்ந்திருந்த நந்தனும், அர்ஜூனும் கம்பெனி விஷயமாக பேசிக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்தபடியே மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்தான் சந்தோஷ்.. அவன் வருவதைக் கவனித்த நந்தன் எதுவும் பேசாமல் இருந்தார்..

அப்பொழுதுதான் நிமிர்ந்து மகனைப் பார்த்த அர்ஜூன், “டேய் பிரியாவைப் பார்த்தியா சந்தோஷ்..” என்றவர் கேட்டதும் அவரின் அருகில் அமர்ந்தவன், “இல்ல சித்தப்பா..” என்றவன் கூலாகச் சொல்லிகொண்டிருக்க வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது..

‘வானரங்கள் மூனும் வீடு வந்துவிட்டது..’ என்று மனதிற்குள் நினைத்தார்.. நந்தன் வாசலைப் பார்க்க வேகமாக உள்ளே நுழைந்த சஞ்சீவைப் பார்த்தவர், “டேய் நீ எப்படிடா வந்த..?” என்றவர் கேள்வி எழுப்ப சோபாவில் அமர்ந்திருந்த சந்தோஷைப் பார்த்தவனோ அவனின் மீது கொலைவெறியில் இருந்தான்..

“அம்மா உன்னோட தோசை கரண்டியை எடுத்துட்டுவா..” என்று கட்டளையிட சஞ்சீவ் குரல்கேட்டு சமயலறையில் இருந்து வேகமாக வெளியே வந்த பிருந்தா, “சஞ்சீவ் நீ என்னடா திடீரென வந்து நிற்கிற..” என்றவர் கேட்க அவரின் பின்னோடு சமைலறை விட்டு வெளியே வந்தாள் மேகா..

தம்பியின் குரல்கேட்டு நிமிர்ந்த சந்தோஷ், “சஞ்சீவ்..” என்றவன் பாசமாக அழைக்க அண்ணணின் பக்கம் திரும்பியவனோ, “அண்ணா..” என்று அவனைவிட பாசமாக அழைத்தவண்ணம் அவனின் அருகில் சென்றான்..

“அண்ணா என்னோவோ இடிக்குது..” என்றவர வேகமாக எழுந்ததும், “என்ன சித்தப்பா..” என்றவனின் பார்வை அவரின் மீது சந்தேகமாக படிய, “டேய் அண்ணா..” என்றழைத்த சஞ்சீவ் சந்தோஷை சரம்வாரியாக அடிக்க ஆரம்பித்தான்..

அவன் திடீரென அடிக்கவும், “டேய் எதுக்குடா இப்படி அடிக்கிற..” என்றவன் அவனின் கைகளைத் தடுக்க இருவரையும் பார்த்த அர்ஜூனோ, “அண்ணா என்று நீ பாசமாக அழைத்தது இதுக்குத்தானா. நல்ல வேலை நான் தப்பித்தேன்..” என்றவர் பெருமூச்சு விட நந்தனுக்கு சிரிப்பு வந்தது..

இருவரும் அடித்துக்கொள்ள அவர்களைத் தடுக்காமல் சிரித்த கணவனை பார்த்த பிருந்தா, “டேய் அவனை எதுக்குடா அடிக்கிற..” என்றவர் இருவரையும் விலக்கிவிட அவர்களின் அருகில் செல்ல அவளின் கைபிடித்து தடுத்த நந்தனோ, “உள்நாட்டு கலவரம் பிருந்தா.. நம்ம தலையிடக்கூடாது..” என்றவர் புன்னகையுடன் கூறினார்..

அவர் சொன்னதும் பிருந்தாவும் அமைதியாக நின்று இருவரின் சண்டையையும் வேடிக்கை பார்க்க மேகாவோ தன்னுடைய கணவனிடம், “அக்காவும், மாமாவும் நல்ல முடிவு எடுத்திருக்காங்க..” என்று சொல்ல மனைவியை முறைத்தார் அர்ஜூன்..

“இங்கே வீடே இரண்டாகும் நிலையில் அடிதடி தடந்துட்டு இருக்கு இப்போ வந்து என்ன சொல்ற பாரு..” என்றவன் அங்கே நடப்பதைக் கவனிக்க, சஞ்சீவ் அடியில் இருந்து தப்பிக்க எழுந்து ஓடிகொண்டிருந்தான் சந்தோஷ்..

“டேய் உன்னோட சுயரூபம் தெரியாமல் இதுநாள் வரையில் இருந்துட்டேண்டா..” என்றவன் அவனின் கைக்கு சிக்காமல் போக்கு காட்டிட, “அதேதான் நானும் சொல்றேன்.. நீ இவ்வளவு பெரிய சுயநலவாதி என்று சத்தியமாக எனக்கு தெரியாமல் போச்சுடா..” என்ற சங்கமித்ராவின் குரல் வீட்டு வாசலில் இருந்து கேட்டது..

அப்பொழுதுதான் மகளைக் கவனித்த நந்தன், “ஏன் மித்ரா அவனை இப்படியெல்லாம் சொல்ற..” என்றவரை முறைத்தவள், “நல்ல வளர்த்தி வெச்சிருக்கீங்க தடிமாடு.. அண்ணிக்கு போன் ல கூட விஷ் பண்ணாமல் இருக்கான்.. நான் எவ்வளவு தூரம் எடுத்து சொன்னேன்..” என்றவளும் சந்தோஷை துரத்த ஆரம்பித்தாள்..

அவளின் பின்னோடு வேகமாக மதுபாலா, சஞ்சனா இருவரும், “அக்கா அண்ணா அந்தபக்கம் போறான்.. நீ இந்த பக்கம் போ..” என்று அவளுக்கு பின்னால் நின்று குரல் கொடுக்க, “மது சஞ்சுமா அண்ணாமேல நீங்க வெச்ச பாசம் இவ்வளவுதானா..?” என்றவன் இருவரின் கைகளுக்கும் அகபடாமல் அல்வா கொடுத்தான்..

“அண்ணாவா அது யாரு..?” என்றவள் விழிகளால் தேட தன்னுடைய தங்கை சஞ்சனாவைப் பார்த்த சந்தோஷ், “அடியே இது எல்லாம் அநியாயம்..” என்றவன் சொல்ல, “சஞ்சீவ் அண்ணாவை சும்மே விடாதே..” என்று மதுபாலா சொல்ல வீடே சந்தைக்கடை போல மாறியது..

சங்கமித்ரா துரத்துவதைப் பார்த்த சஞ்சீவ், “அக்கா அண்ணாவை பிடிங்க அக்கா.. அவனை இன்னைக்கு அடி வெளுக்காமல் விடுவதில்லை..” என்றவன் சொல்ல, “நீ வெளுக்க நான் என்ன ஆளுக்கு துணியா..?” என்று அந்த நேரத்திலும் நக்கல் செய்தவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்தனர் வீட்டின் பெரியவர்கள்..

கடைசியாக ஓடமுடியாமல் அவர்கள் கையில் சிக்கிய சந்தோஷை அடிக்க ஆரம்பித்தனர் சஞ்சீவும், சங்கமித்ராவும்..! அவன் அடி வாங்குவதைப் பார்த்த பிருந்தாவோ, “டேய் அவன் பாவம்டா.. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துகோங்க..” என்றவர் மகனிடமும், மகளிடமும் சொல்ல வாய்விட்டுச் சிரித்தனர் நந்தனும், அர்ஜூனும்..!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“அண்ணி அவங்கள பார்த்தால் பேசி தீர்த்துகொள்வது மாதிரி இல்லையே தீர்த்துட்டு பேசுவது போல இல்ல இருக்கு..” என்றவர் சந்தேகம் கேட்ட, “அர்ஜூன்..” என்ற பிருந்தா அவர்களைத் தடுக்க செல்ல, “பெரியம்மா நீங்க நின்னு வெடிக்கை மட்டும் பாருங்க..” என்றாள் மதுபாலா..

“ஏய் மது நீ எல்லாம் ஒரு தங்கச்சியா..? அண்ணா மேல கொஞ்சமாவது உனக்கு பாசம் இருக்கா..?” என்றவன் கோபம் போல பேச, “அண்ணா மேல உயிரே வெச்சிருக்கேன்.. ஆனால் நேற்று நீ செய்த காரியத்திற்கு அக்காவிடமும், என்னோட தம்பியிடமும் நல்ல அடிவாங்குங்க..” என்றவள் சொல்ல அர்ஜூன் விழுந்து விழுந்து சிரித்தார்..

அவர் சிரிப்பதைப் பார்த்த சந்தோஷ், “சித்தப்பா நீங்களும் இவளோட கூட்டு சேர்ந்துட்டு சிரிக்கிறீங்க..” என்றவன் பாவமாகக் கேட்டதும், மகளின் பக்கம் பார்வையைத் திருப்பிய அர்ஜூன் அவள் முறைப்பதை கண்டு வேறு வழியில்லாமல், “பொண்ணை பெத்தவன் வாய்திறந்து பேச வழியில்லை கண்ணா..” என்றார் அர்ஜூன் அவனைவிட பாவமாக..!

கடைசியாக தாயின் பக்கம் திரும்பிய சந்தோஷ், “அம்மா நீங்க என்னம்மா எனக்கு சப்போர்ட் பண்ணாமல் நின்னு வேடிக்கை பார்க்கிறீங்க..” என்ற பெரிய மகனைப் பார்த்த பிருந்தாவோ, “உள்கட்சி பூசல் மகனே.. நான் இடையே வர கூடாது நீதான் பேசி தீர்த்துக்கணும்...” என்றவனுக்கு சாமர்த்தியமாக பதிலளித்தவர் அந்த இடத்தைவிட்டு அகன்றார்..

சஞ்சீவ், சங்கமித்ரா இருவரின் கையிலும் அடிவாங்கிய சந்தோஷ், “ஏய் மித்ரா என்ன நீ இந்த அடி அடிக்கிற வலிக்குதுடி..” என்றவனை ஆசைதீர அடித்த அக்காவும் தம்பியும் தரையில் அமர்ந்து மூச்சு வாங்க தரையில் அமர்ந்தான் சந்தோஷ்..

அவர்கள் அடியை நிறுத்தியதும் சோபாவில் அமர்ந்த அபிநந்தன் மகனின் முகம் பார்த்து, “சந்தோஷ் உனக்கு ஒன்னும் ஆகல இல்ல..” என்றவர் வருத்ததுடன் கேட்டார்..

அவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்த சந்தோஷ், “அப்பா நீங்க எல்லாம் நல்ல வருவீங்க.. இரண்டு அடியாள் வைத்து என்னோட கைகாலை முறித்துவிட்டு இப்போ பவ்வியமாக கேள்வியா கேட்கிறீங்க..” என்றவன் கொலைவெறியுடன் கேட்டான்..

அவனின் கேள்வியில் அவருக்கு சிரிப்பு வந்தாலும், “வாழ்க்கையில் இது எல்லாம் சாதாரணம் சந்தோஷ்..” என்ற அர்ஜுனை நிமிர்ந்து பார்த்த சந்தோஷ், “ஆமா சித்தப்பா ரணமாக வலிக்குது..” என்று பாவமாகச் சொல்ல அக்காவும் தம்பியும் சிரிக்க அவர்களை நோக்கி வந்தாள் மது..

அவளின் காதைப் பிடித்து திருகியவன், “அண்ணாவை தப்பிக்க வைக்க ஹெல்ப் பண்ணாமல் அடிவாங்கிய கொடுக்கிற..” என்றவன் மதுவின் காதைப்பிடித்து நன்றாக திருக, “ஐயோ சந்தோஷ் அண்ணா காது வலிக்குது..” என்றவள் வலியுடன் சொல்ல சஞ்சனா அவனின் கைக்கு எட்டாத தூரத்தில் சென்று நின்றுகொண்டாள்..

அவனை அடித்த அடியில் இருவருக்கும் கை வலிக்க, “உன்னை அடித்து எங்களுக்குத்தான் கை வலிக்குது..” என்று மித்ரா இறங்கு கைகளையும் பார்க்க இரண்டு கைகளும் சிவந்திருந்தது.. சஞ்சீவ் மூச்சிரைக்க அமைதியாக அமர்ந்திருந்தான்..

தங்கையின் முக சுளிப்பை கவனித்த சந்தோஷ், “ரொம்ப வலிக்குதா மித்ரா..” என்று பாசத்துடன் கேட்க, “ம்ம் ஆமாண்ணா..” என்றாள் வலியுடன்..!

சஞ்சீவ் அமைதியாக இருப்பதைக் கவனித்த சந்தோஷ், “அண்ணா மேல இவ்வளவு பாசத்தை நான் எதிர்பார்க்கலடா சஞ்சீவ்..” என்றவன் அவனின் கொலைவெறியை உல்டாவாக சொல்ல சிரித்தான் சஞ்சீவ்..

உன்னோட பாசத்தில் என்னை ஒரு வழி பண்ணிட்ட..” என்றான் சந்தோஷ் கை இரண்டையும் வருடியபடியே..!

சந்தோஷ் கையில் ஆகபடாமல் நின்ற சஞ்சனாவைப் பார்த்தவன், “நீயும் இவங்க கட்சி இல்ல..” என்றவன் முறைக்க இல்லையென வேகமாக தலையசைத்தாள் சஞ்சனா.. அவளின் வேகம் கண்டு சந்தோஷ் முகமும் மலர்ந்தது..

“அண்ணா நீ ஏன் நேற்று அண்ணிக்கு போன் பண்ணி விஷ் பண்ணல.. அந்த கோபத்தில் தான் நாங்க உன்னை அடிச்சிட்டோம்.. ரொம்ப வலிக்குதா..?” என்ற சஞ்சீவின் முகத்தை வருடிய சந்தோஷ் இல்லையென தலையசைத்தான்..

“ஏண்டா அண்ணிக்கு சேலையெல்லாம் எடுத்து வைத்த நீயேண்டா அண்ணியைப் பார்க்க வரவே இல்ல..?” என்றவள் கோபமாகக் கேட்டதும் சந்தோஷ் முகம் மாறிவிட்டது.. அதை கவனித்த மித்ரா, “அண்ணா..” என்று அவனின் கரம்பிடித்தாள்..

அவளின் கைகளை ஆறுதலாக பற்றிகொண்ட சந்தோஷ், “நேற்று தீபிகா பேசிய பேச்சில் எனக்கு வெறியே வந்துவிட்டது மித்ரா.. அதன் அவங்க வீட்டில் போய் அவங்க அப்பாவைத் திட்டிட்டு வந்துவிட்டேன்..” என்றவன் சொல்ல மற்றவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்..!

அண்ணன் சொல்வதைக் கேட்ட சஞ்சீவ், “அண்ணா நீ அண்ணியைப் பார்க்க கிளம்பி வந்தியா..?” என்றவன் நிதானமாகக் கேட்டதும் மற்றவர்கள் அவனை சிந்தனையுடன் பார்க்க, “அவளுக்கு விஷ் பண்ண நான் நேரில் கிளம்பி வந்தேன் சஞ்சீவ்.. அதுக்குள்ள இந்த தீபிகாவால் எல்லாமே மாறிபோச்சு..” என்றான் சந்தோஷ்..

“அண்ணா அப்போ அண்ணி பேசியதை எல்லாம் கேட்டு நீ என்ன முடிவெடுத்திருக்கிற..” என்றவள் கேள்வியெழுப்ப சஞ்சனாவின் முகம் பார்த்த சந்தோஷ் மேல என்னோட அறையில் டேபிள் மீது ஒரு பிரவுன் கலர் கவர் இருக்கு அதை எடுத்துவா சஞ்சனா..” என்றவன் சொல்ல வேகமாக படியேறி சென்றாள்..

அவள் சென்றதும் அண்ணனின் முகம் பார்த்த சங்கமித்ரா, “அண்ணா நீ என்ன பண்ணி வெச்சிருக்கிற..” என்றவால் தொடர்ந்து, “நீ ஏதாவது எக்குத்தப்பாக முடிவெடுத்திருந்த இப்போ வாங்கியது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்..” என்றவள் அவனை மிரட்டவும் மறக்கவில்லை..

அவளின் மிரட்டலில் வாய்விட்டுச் சிரித்த சந்தோஷ், “உன்னோட அண்ணியை ஊரறிய கல்யாணம் பண்ணலாம் என்று முடிவெடுத்து இருக்கேன் மிது..” என்றவன் ரகசியம் சொல்ல, “அடப்பாவி..” என்றவர்கள் சந்தோசத்தில் திளைத்தனர்..

சந்தோஷ் அறைக்கு சென்று அவன் சொன்ன கவரை எடுத்துவிட்டு வந்தவள் அதை திருப்பி திருப்பி பார்க்க அதிலிருந்து கீழே விழுந்தது.. அதை கவனித்த அபிநந்தன், ‘இது யாரோட போட்டோ..?’ என்ற கேள்வியுடன் அந்த போட்டோவை எடுத்து பார்த்தார்..

அந்த போட்டோவில் ஒரு பத்தொன்பது வயதை உடைய பெண் இருப்பதைக் கண்டவர், “சந்தோஷ் இந்த பொண்ணு யாருடா..” என்றவர் கேட்ட வேகமாக நிமிர்ந்தான் சந்தோஷ்..அப்பொழுது சமையலறையில் இருந்துட ஸ்நேக்ஸ் எடுத்துகொண்டு வந்த பிருந்தா அவரின் கையில் இருந்த போட்டோவை வாங்கினார்..

சந்தோஷ் அவரிடம் இருந்து போட்டோவை வாங்க நினைக்க பிருந்தாவோ, “இந்த பொண்ணுதான் தீபிகாவா சந்தோஷ்..?” என்று கேட்க இருவருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தான் சந்தோஷ்..

அந்தநேரம் அர்ஜூன் சென்று டிவியை ஆன் செய்ய, “நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்..” என்ற பாடலில் அதிர்ந்து நிமிர்ந்தனர் ஐவரின் நினைவுகளும் எங்கோ செல்ல சிலையென நின்றனர்..

அவனின் முகத்தை கேள்வியாக பார்க்க, “அவளோட பெயர் மான்விழி..” என்றவன் பிருந்தாவின் கையில் இருந்த போட்டோவை வாங்கிக்கொண்டு வேகமாக தனது அறையை நோக்கிச் செல்ல அவனை பின்தொடர்ந்து சென்றனர் மற்ற நால்வரும்..! அவர்கள் ச்நேர திசையை பார்த்து கேள்வியுடன் நின்றிருந்தனர் பெரியவர்கள்..

அந்த பாடலுக்கும் அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணிற்கும் என்ன சம்மந்தம்..? இந்த மான்விழிக்கும் சந்தோஷ் – பிரியாவின் திருமணத்திற்கும் என்ன சம்மதம்..??? யாரிந்த மான்விழி...???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top