• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 9

ஏற்காடு விடிந்தும் விடியாத அந்தக் காலைபொழுதில் தேயிலைத் தோட்டங்கள் முழுவதிலும் பனித்துளி படர்ந்திருக்க வானில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக மலைமேல் தவழ்ந்து சென்றது.. இரைதேடி பறவைகள் எல்லாம் கிழக்கு நோக்கி பறந்து செல்ல அந்த ரம்மியமான காலைப்பொழுதை ரசிக்கும் எண்ணம் இல்லாமல் பம்பரமாகச் சுழன்றுக் கொண்டிருந்தனர் சீதாவும், சுமதியும்..!

“பாட்டி என்னோட ஜாமன்ரி பாக்ஸ் எங்கே..??” என்று சமையலறையை நோக்கி குரல் சஞ்சனா குரல்கொடுக்க, “அங்கேதான் இருக்கும் பாரு சஞ்சனா..” என்றவர் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்..

அவள் தேடுவதைக் கவனித்த மதுபாலா, ‘இன்னைக்கு ஜாமன்ரி பாக்ஸ் இல்லாமல், இன்னைக்கு மிஸ் கிட்ட நல்ல திட்டு வாங்கபோற பாரு..’ என்று மனதிற்குள் நினைத்தவண்ணம் ஸ்கூலிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.. நேற்று சஞ்சனா ஜாமன்ரி பாக்ஸ் கொடுக்காததால் வந்த வினை இது..

அப்பொழுது தன்னுடைய அறையில் வெளியே வந்த மித்ரா சஞ்சனா தேடுவதைப் பார்த்து, “சாக்லேட் என்ன தேடிட்டு இருக்கிற..” என்றவள் சந்தேகமாகக் கேட்க, “அவளோட ஸ்கேல் காணாமல் போயிருச்சாம் அக்கா..” முகத்தைப் பாவமாக வைத்துகொண்டே கூறினாள் மது..

“ம்ம் ஜாமன்ரி பாக்ஸ் இல்லாட்டி அவ்வளவுதான்..” என்றவள் பயத்துடன் கைகளை உதற, “சாக்லேட் அது மதுக்கிட்ட இருக்கு..” என்றவள் மதுவைச் சஞ்சனாவிடம் மாட்டிவிட்டாள் பிரியா....

அவள் சொன்னதுமே, “நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா..?” என்று சிணுங்கிய மதுவை முறைத்த சஞ்சனாவிடம் அவளிடம் ஜாமன்ரி பாக்ஸை எடுத்து கொடுத்தவள், ‘இவளை அடிவாங்கி வைக்க வழி இல்லாமல் போச்சே..’ என்று தன்னுடைய வேலையைக் கவனித்தாள்..

நால்வரும் பரபரப்புடன் ஸ்கூல் கிளம்பிகொண்டிருக்க, “பாட்டி சாப்பாடு ரெடியா..?” என்ற கேள்வியுடன் சந்தோஷ் அங்கே வர அவனின் பின்னோடு ஸ்கூல் பேக்குடன் டைனிங் ஹாலிற்கு வந்தான் சஞ்சீவ்..

பிரியா, மித்ரா, மது மூவரும் டிப்பனில் பேக் பண்ணிக் கொண்டிருக்க, சஞ்சனா மட்டும் பேக்கில் நோட்டுகளை எல்லாம் எடுத்து வைத்தாள்..

“எல்லோரும் வந்து உக்காருங்கச் சாப்பிடலாம்..” என்றழைத்த சீதாவின் குரல்கேட்டு எல்லோரும் டைனிங் ஹாலில் வந்து அமர, “பாட்டி எனக்கு தோசை..” என்றவள் முதல் ஆளாக தோசையை எடுத்த மித்ராவைப் பார்த்து சந்தோஷ் சிரித்தான்..

எல்லோருக்கும் பரிமாறியச் சுமதியும், சீதாவும், “டேய் நீங்க எல்லோரும் எங்களோட உயிரை எடுக்காமல் ஸ்கூலிற்கு கிளம்பியதற்கு உங்க ஆறுபேருக்கும் ரொம்ப நன்றிடா..” என்றவர் அவர்களின் குறும்புத்தனத்தை சுட்டிக்காட்ட வாய்விட்டுச் சிரித்தனர்..

“ஐயோ பாட்டி! இப்போ நாங்க பண்ற சேட்டைக்கு எல்லாம் சேர்த்து நைட் வந்து சிக்கன் பிரியாணி செஞ்சு தருகிறோம்..” என்ற சந்தோஷ் பாட்டியைத் தாஜா செய்ய, “சாக்லேட் அத்து இன்னைக்கு சாப்பாடு செய்ய போகிறார்..” என்று குஷியாக சொன்னவளைப் பார்த்து குறும்புடன் சிரித்தாள் சங்கமித்ரா..!

அதற்குள் மணியாகிவிட, “பாட்டி நாங்க எல்லோரும் கிளம்புகிறோம்..” என்றவர்கள் ஆறுபேரும் வீட்டில் இருந்து கிளம்ப, “ஹப்பாடா..” என்று பெருமூச்சு விட்டனர் பெரியவர்கள்..!

அவர்கள் எல்லோரும் வாசலை நோக்கிச் செல்ல தோட்டத்தைப் பார்த்த சந்தோஷ், “எல்லோரும் ஒரு நிமிஷம் நில்லுங்க.. நான் இதோ வரேன்..” என்றவன் தோட்டத்தை நோக்கி செல்ல, “அண்ணா செடியில் இருக்கும் பூவைப் பறிக்காதே..” என்று எச்சரிக்கையாகக் குரல்கொடுத்தான் சஞ்சீவ்..

மற்ற நால்வரும் அவனைக் கேள்வியாக பார்க்க, சிலநொடியில் திரும்பி வந்த சந்தோஷைப் பார்த்த சஞ்சனா, “அண்ணா எதுக்கு இப்போ தோட்டத்திற்கு போனீங்க..” என்றவள் கேட்க, “இங்கே பாரு..” என்று கையில் பிங்க் கலர் ரோஜாவுடன் நின்றான் சந்தோஷ்..

அந்த பூவைப் பார்த்ததுமே, “அத்து நீ வெச்ச ரோஜாசெடியில் ரோஜாப்பூ பூத்துவிட்டதா..?” என்றவள் ஆர்வத்துடன் கேட்டதும், “ஏய் டார்லிங் அந்த பூ எனக்குதான்..” என்றாள் மித்ரா வேகமாக..

“இல்ல நான்தான் கடைசி குட்டி எனக்குதான்..” என்றாள் சஞ்சனாவை முறைத்தவள், “அண்ணா அவளுக்கு மட்டும் இந்த பூவைக் கொடுத்த..” என்று சந்தோஷை மிரட்டினாள் மதுபாலா..

“இதுக்குத்தான் அண்ணா சொன்னேன்.. ஒரு ரோஜாவை பறிக்காதே அது செடியில் இருக்கட்டும் என்று.. இப்போ பாரு ஒத்த ரோஜாப்பூவிற்கு மூவரும் போட்டி போறாங்க..” என்றவன் கோபத்துடன்...!

பெண்கள் மூவரும் சண்டையிட்டு கொள்ள பிரியா மட்டும் அமைதியாக நிற்க அவளைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான் சந்தோஷ்..

“என்ன தேனு நீ மட்டும் எதுமே பேசாமல் இருக்கிற என்ன விஷயம்..” என்றவன் சந்தேகமாகக் கேட்டதும், “அத்து அந்தப்பூ அந்த பூவைக் கேட்கும் உரிமை எனக்கில்ல..” என்றவள் சொல்ல, “புரியல..” என்றான் சந்தோஷ்..

“இந்த செடிக்கு சொந்தகாரன் நீ.. உன்னோட விருப்பம் என்னவோ அதைதான் பண்ணுவ.. உரிமை இல்லாத பொருளுக்கு என்னைக்குமே சண்டை போடக்கூடாது அத்து..” என்றவள் மற்றவரின் பார்த்து, “நேரமாச்சு..” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்..

“அவங்க சொன்னதுதான் சரி.. நீ யாருக்கு கொடுத்த எங்களுக்கென்ன..” என்ற சஞ்சீவ் பிரியாவின் பின்னோடு செல்ல, மித்ரா, மது, சஞ்சனா மூவரும் சந்தோஷ் முகத்தைக் கேள்வியாக பார்த்தனர்..

மூவரையும் மாறி மாறி மாறி பார்த்தவன், ‘மூவரில் யாருக்கு கொடுத்தாலும் தர்மடி நிச்சயம் சந்தோஷ்..’ என்று நினைத்தவன், “தேனு..” என்று அழைக்க நின்று திருப்பிப் பார்த்தவளின் முன்னே சென்று நின்றான் சந்தோஷ்..

“தேனு.. இந்த இந்த பூவை நீயே வெச்சுக்கோ..” என்றவன் பிரியாவின் கையில் ரோஜா பூவைக் கொடுக்க தங்கைகள் மூவரும் அவனை கொலைவெறியுடன் பார்த்தனர்..

“நீங்க மூவரும் என்னோட தங்கைகள்.. உங்க மூவரில் யாருக்கு இந்த பூவை கொடுத்தாலும் மற்ற இருவரிடமும் நான் அடிவாங்கனும்.. இந்த சந்தோஷ் என்ன லூசா..” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டவன், “வாங்க சீக்கிரம் ஸ்கூலிற்கு டைம் ஆச்சு..” என்று அழைத்துச் சென்றான்..

‘சின்ன விஷயத்தில் கூட தங்களுடைய தங்கைகளுக்கு இடையே பிரச்சனை வரக்கூடாது..’ என்றவன் இந்த முடிவை எடுக்க, பிரியாவின் அருகில் சென்ற மித்ரா, “நீ சரியான ஆளுடி..” என்று கிண்டல் செய்ய வாய்விட்டு சிரித்தாள் பிரியா..

அவர்கள் முன்னே செல்ல பிரியா நின்று தலையில் பூவை வைக்க அவளின் அருகில் வந்த சந்தோஷ், “நீ சரியான ஆளுடி..” என்றவன் சொல்ல அவனைப் புரியாத பார்வை பார்த்தாள் பிரியா..

அவங்க முன்னாடி சண்டை போடாமல் இருந்து நினைத்ததை சாதித்துவிட்டாய் இல்ல..” என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்க குறும்புடன் கண்சிமிட்டுவிட்டு நகர்ந்தான் சந்தோஷ்..

அபிநந்தன் – பிருந்தா, அர்ஜூன் – மேகா, விக்ரம் – மீரா, சந்துரு – மலர்விழி நால்வரும் தொழிலில் தங்களின் கவனத்தைச் செலுத்த பெரியவர்கள் பிள்ளைகளின் படிப்பை கருத்தில் கொண்டு ஏற்காட்டில் வந்து தங்கிட்டனர்..

சந்தோஷ், சங்கமித்ரா, பிரியதர்ஷினி மூவரும் பன்னிரண்டாம் வகுப்பும், மதுபாலா பதினொன்றாம் வகுப்பும், சஞ்சனா பத்தாம் வகுப்பும், சஞ்சீவ் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர்..

மழலை பருவத்தில் மறக்க முடியாத என்றாலே அது பள்ளிக்கூடம் சென்ற காலமாகத்தான் இருக்கும்.. அந்த நாட்கள் எல்லோரின் மனதிலும் இனிமையான மணம் வீசும் வசந்த காலம்தான்.. அங்கே சிலருக்கு பெரிய பெரிய மாற்றங்கள் நிகழும்..! இவர்களின் வாழ்க்கையின் பிரச்சனைக்கான முதல் விதை விழுந்த இடம் இங்கேதான்..!

வீட்டில் இருந்து ஐவரும் தேயிலைத் தோட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே கிண்டலடித்து கொண்டே செல்ல அவர்கள் ஸ்கூலின் உள்ளே நுழைய, “அக்கா.. அக்கா..” என்றவள் ஓடிவது பிரியாவின் முன்னாடி கைநீட்டி நின்று மூச்சிரைத்தாள் மது வயதை உடைய பெண்ணொருத்தி..

அவளைப் பார்த்த சந்தோஷ், “யாரு நீ.. எதுக்கு எங்க முன்னாடி வந்து நிற்கிற..” என்றவன் கேட்க பிரியா அவளை புரியாத பார்வை பார்க்க, “இந்த பொண்ணை உனக்கு தெரியுமா டார்லிங்..” என்று பிரியாவிடம் கேட்டாள் சங்கமித்ரா..

அதற்குள் மூச்சிரைத்து நிமிர்ந்த அந்தப்பெண் பிரியாவின் முகத்தைப் பார்த்து, “அக்கா நீங்க தலையில் வைத்திருக்கும் பூ ரொம்ப அழகாக இருக்கு..” என்றவள் புன்னகையுடன் சொல்ல நொடியில் அவளை எல்லோருக்கும் பிடித்துபோனது..

“தேங்க்ஸ்..” என்றவள் சொல்ல, “இதை சொல்லத்தான் இந்த வேகத்தில் ஓடி வந்தியா..?” என்று அந்த பெண்ணைப் அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான் சந்தோஷ்..

“வேற எதுக்கு நான் இவ்வளவு வேகமாக வரப்போறேன்..” என்றவள் தன்னுடைய கிளாஸ் ரூமை நோக்கி செல்ல மற்ற நால்வரும் அவளைத் திகைப்புடன் பார்க்க, “இவ என்ன லூசா..” என்று சஞ்சீவ் தீவிரமாக யோசிக்க வாய்விட்டு சிரித்தனர் மதுவும், சஞ்சனாவும்..!

அவள் சென்ற திசையைப் பார்த்த பிரியாவோ, “சின்ன பூ.. அது அழகாக இருக்கு என்று சொல்லிட்டு போறா.. மனதில் நினைப்பதையும் சொல்வதற்கு கூட ஒரு சுதந்திரம் வேண்டும்..” என்று பிரியா இருபொருள்பட சொல்ல மித்ரா அவளுக்கு ஹை – பை கொடுத்தாள்..

சந்தோஷ் மட்டும் அவள் சென்ற திசையை யோசனையோடு பார்க்க எல்லோரும் அவரவர்கள் வகுப்பறையை நோக்கி சென்றனர்.. அந்த நாளுக்கு பிறகு ஆறுபேரும் அந்த பெண்ணை பார்க்கவே இல்லை.. அவளும் இவர்களைப் பார்க்கவே இல்லை..

நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல எல்லோருக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இறுதிதேர்வு நெருங்கிக் கொண்டிருக்க அதே பரப்புடன் நாட்கள் நகர அன்று ஸ்கூலில் ஆண்டுவிழா..

எல்லோரும் வகுப்பில் இருந்து ஆடிடோரியம் செல்ல சந்தோஷும் தன்னுடைய வகுப்பு தோழர்களுடன் செல்ல எதர்ச்சியாகத் திரும்பியவன் ஹெச்.எம். ரூம் முன்னாடி நின்றிருந்த பெண்ணைப் பார்த்தான் சந்தோஷ்..
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
‘இந்த பொண்ணை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே..’ என்று யோசித்ததுமே, ‘ரோஜா பூ அழகாக இருக்குன்னு சொன்ன புள்ள இல்ல.. இவ எதுக்கு இங்கே நிற்கிற..’ என்ற கேள்வியுடன் ஹெச்.எம். ரூமை நோக்கி நடந்தான் சந்தோஷ்..

அப்பொழுது ஸ்டாப் ரூமில் இருந்து வெளியே வந்த வீரலட்சுமி, “இந்த முறையும் நீ பீஸ் கட்டவே இல்ல..” என்றவர் அவளைத் திட்ட குனிந்த தலைநிமிராமல் கைகட்டி நின்றவளைப் பார்த்தவன், “மேம்..” என்றழைக்க திரும்பி சந்தோஷை பார்த்தார் வீரலட்சுமி..

“என்ன சந்தோஷ்.. ஆண்டு விழா எல்லோரும் ஆடிடோரியம் போறாங்க.. நீ இங்கே வந்திருக்கிற..” என்றவர் விசாரிக்க அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தவனின் பார்வையைக் கண்டுகொண்ட வீரலட்சுமி, “இந்த பொண்ணு எக்ஸாம் பீஸ் கட்டல சந்தோஷ்..” என்றார்

அவளோ நிமிர்ந்து சந்தோஷை பார்த்துவிட்டு குனிந்து கொள்ள அவனைக் கடந்து சென்ற பெண்ணொருத்தியைப் பார்த்த அந்தப்பெண், “தீபி..” என்று அழைத்துவிட நின்று திரும்பிப் பார்த்தாள்..

“மிஸ் என்னோட ப்ரிண்ட கிட்ட கேட்டு பார்க்கிறேன்..” என்றவளைப் பார்த்தவர், “ம்ம் கேட்டு பாரு..” என்றவர் சொல்ல, “சரிங்க மிஸ்.. ஒன் ஹௌர் முடிந்ததும் உங்களோட கிளாஸ் மிஸ் அதை சொல்லத்தான் வந்தேன்..” என்ற சந்தோஷ் இருவரையும் யோசனையுடன் பார்த்தான்..

“தேங்க்ஸ் சந்தோஷ்.. நானே மறந்துட்டேன்..” என்றவர் மீண்டும் ஸ்டாப் ரூம் உள்ளே சென்றார்.. சந்தோஷ் இருவரையும் பார்க்க, “தீபி உன்னிடம் பணம் இருந்தால் கொடுடி..” என்றவள் கேட்டதும், “எதுக்குடி..” என்றவள் யோசனையுடன் கேட்டாள் அந்தப்பெண்..

“இன்னும் எக்ஸாம் பீஸ் கட்டலடி.. அது கட்டிட்டுத்தான் போட்டிக்கு போகணும் என்று மிஸ் இங்க நிற்க வெச்சிட்டாங்கடி..” என்றவள் நிலையைச் சொல்ல தங்களை ஒருவன் கவனிப்பதை அறியாதவள்,

“நீ போட்டியில் கலந்துகாட்டி எனக்கு என்ன வந்துச்சு.. என்னிடம் பணம் இருக்கு.. ஆனால் உனக்கு கொடுக்க முடியாதுடி..” என்றவள் அந்தப்பெண் அழைத்தும் நிற்காமல் சென்றுவிட்டாள்..

அங்கே நடந்ததையும், அந்த பெண்ணின் தவிப்பையும் கவனித்த சந்தோஷ் ஸ்டாப் ரூம் சென்று, “மிஸ் வெளியே நிற்கும் அந்த பெண்ணின் பீஸ் எவ்வளவு..?” என்று கேட்டான்..

அவனை நிமிர்ந்து பார்த்த வீரலட்சுமி, “என்னடா லவ் ஆ..?” என்று சந்தேகமாகக் கேட்க, “ஐயோ மிஸ்.. லவ் எல்லாம் இல்ல.. அவளைப் பார்க்க என்னோட தங்கை மது மாதிரியே இருக்கு.. அதன் பீஸ் கட்ட வந்தேன்..” என்றவன் கையெடுத்து கும்பிட சிரித்தார் வீரலட்சுமி..

“என்னோட தங்கை மாதிரிதான் மிஸ் நான் நினைக்கிறேன்.. நீங்க தப்பாக நினைக்காதீங்க.. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல..” என்றவன் வேகமாகச் சொல்ல, “ம்ம் உன்னைப்பற்றி தெரியாத சந்தோஷ்..” என்றவர் பில் போட்டு அவனின் கையில் கொடுத்தார்..

“தேங்க்ஸ் மிஸ்..” என்றவன் வெளியே சென்றான்.. அங்கே மீண்டும் அதே நிலையில் நின்றவளிடம், “இந்த பில்..” என்றவன் கொடுக்க அவனைப் புரியாத பார்வைப் பார்த்தவள், “நீங்க எதுக்கு பீஸ் கட்டினீங்க..” என்றவள் கேள்வியெழுப்பினர்..

“என்னோட தங்கை மாதிரியே இருக்க அதுதான்..” என்றவனின் குணம் அவளுக்கு பிடித்து போக, “தேங்க்ஸ் அண்ணா..” என்றவள் வேகமாக ஆடிடோரியம் நோக்கி செல்ல, தீடிரென்று அவளின் பெயரைக் கூட கேட்காத நினைவு வர, “ஏய்..” என்று அழைத்தான் சந்தோஷ்..

அவனின் அழைப்பில் நின்றவள், “அண்ணா..” என்றழைக்க, “உன்னோட பெயர் என்ன..” என்றவன் கேட்க, “மான்விழி அண்ணா..” என்றாள் மான்விழி..

“என்னோட பெயர் சந்தோஷ்..” என்றவன் தன்னை அவளிடம் அறிமுகம் செய்ய அந்த வழியாக வந்த மித்ராவும், பிரியாவும், “இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்கிற..” என்று கேட்டனர்..

உடனே அவர்களின் பக்கம் திரும்பிய சந்தோஷ், “மிது இது மான்விழி.. உன்னை மாதிரியே இவளும் எனக்கொரு தங்கை..” என்றவன் சொல்ல, “உன்னோட பெயரு..” என்று திரும்பியவள், “ஏய் நீ அந்த ரோஜா பார்ட்டி இல்ல..” என்று சந்தேகம் கேட்டாள் பிரியா..

அவளும் வேகமாக தலையசைக்க, “சோ நைஸ்..” என்றவளைப் பார்த்தவள், “அக்கா நான் பாட்டு போட்டியில் கலந்திருக்கிறேன் போகணும் அக்கா..” என்றவள் மித்ராவிடம் சொல்ல, “ஆல் தி பேஸ்ட் டா..” என்றனர் பிரியாவும், மித்ராவும்..!

அவர்கள் ஆடிடோரியம் சென்று அமர இந்த விஷயம் அப்படியே மது, சஞ்சனா, சஞ்சீவிற்கும் சொல்லபட, “அண்ணா சூப்பர் அண்ணா..” என்றவர்கள் அங்கே நடப்பதை கவனித்தனர்..

இவர்கள் ஆறு பேருக்கும் ஒரு பக்கம் தங்களுக்கு ஒரு புதிய நபர் அறிமுகம் ஆனால் அவர்களை பற்றிய அனைத்து தகவலும் மற்றவருக்கும் சொல்லப்படும்.. அதனாலோ என்னவோ ஸ்கூலில் இருக்கும் எல்லோருமே இவர்களை, “பூவனம் குரூப்..” என்று செல்லமாக அழைப்பார்..

தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி முன்னுரை, விரிவுரை, முடிவுரை முடிந்ததுமே, “அடுத்தது பாட்டு போட்டி..” என்றவர்கள் சொல்ல, “இதில் மான்விழி கலந்திருக்கிறாள்..” என்று மற்றவர்களுடம் சொன்னாள் மித்ரா.. எல்லோருமே மேடையை பார்க்க மைக்கின் அருகில் வந்து நின்றாள் மான்விழி..

திரளான மாணவ, மாணவிகள் கூட்டத்தைப் பார்த்தவள் பயத்துடன் எச்சிலை விழுங்க, “பாடு..” என்று மித்ராவும், பிரியாவும் காத்திட, மது, சஞ்சனா, சஞ்சீவ் மூவரும் கைத்தட அவளின் பார்வை அவர்களின் மீதே இருந்தது..

நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்..

நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும்..

நிலவைப் பிடித்து தரையில் சிறை வைத்தாலும்

வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்..” என்றவள் பாட, “செம சாங்..” என்றவள் ரசித்து சொல்ல சந்தோஷ் சிரித்தான்..

காண்பதென்ன இது மாயமா..” என்றவள் பாடலில் கேட்டதும், “நோ..” என்றான் சஞ்சீவ் வேகமாக..

என் ரசிகரில் பலவை இது ஒரு புதுவகை உங்கள் நேசம் வாழ்க..” என்றவள் பாட, “ஏய் மானு ஆடுடி..” என்று இங்கிருந்து குரல்கொடுத்தாள் பிரியா..

ஆட சொன்னால் அது ஞாயமா..?” என்றவள் பாடல் வரிகளின் வழியாக கேள்வியெழுப்ப, “பிளீஸ்..” என்று குறும்புடன் உதடுகளை அசைத்தனர் மதுவும் சஞ்சனாவும்..!

அட யமுனையை சிறைகொண்டு

குவளைக்குள் அடைக்கிற உங்கள் வீரம் வாழ்க..” என்றவள் தன்னை மறந்து பாடிட கைதட்டல் ஓசை காதை கிழிக்க,

காசுகள் போட்டதும் பூக்கிற பூச்செடி நான்..

இன்று கைதட்டல் ஓசையில் பூக்கிற பூச்செடி தான்..” என்றவள் ரசித்து பாட சொல்ல, “சூப்பர்..” என்றவன் சொல்ல, “ரசனை வாழ்க..” என்றாள் மான்விழி..

தங் யு.. ரசனை வாழ்க..” என்றவள் பாடிட அவளின் பாடலின் ஒலியில் அரங்கமே கைதட்டல் ஓசையில் அதிர அவள் பாடி முடித்ததும் கீழிறங்கி தீபி மான்விழியிடன் பேசவர அவளோ சந்தோஷை நோக்கி செல்ல தீபியின் பார்வை சந்தோஷ் மீது படிந்தது..

அவனைப் பார்த்ததுமே ஏனென்றே அறியாமல் தீபியின் மனதில் சந்தோஷ் மீது வன்மம் வளர்ந்தது.. அவன் யாரென்று அறியலாமலே..! தீபியின் அடுத்த செயல் என்னவாக இருக்கும்..????
 
Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai

Nice update
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top